Tuesday, June 28, 2011

காங்கிரஸுக்கு இப்போது ஆதரவு கிடையாது…ஜெயலலிதா


டெல்லி: காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பதாக நான் 2010ம் ஆண்டு கூறிய நிலை இப்போது இல்லை. அந்த வாய்ப்பு அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட ஒன்று. இப்போது நிலைமை வெகுவாக மாறி விட்டது. அந்த ஆதரவு வாய்ப்பு இப்போது இல்லை என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

சென்னையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு முதல்வர் ஜெயலலிதா சிறப்பு பேட்டி அளித்துள்ளார். முதல்வரான பிறகு தனியார் சேனல் ஒன்றுக்கு அவர் அளிக்கும் முதல் சிறப்புப் பேட்டி இதுவே.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

காங்கிரஸுக்கு இப்போதும் உங்களது ஆதரவு உள்ளதா?

காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக நான் கூறியது 2010ம் ஆண்டு இருந்த சூழ்நிலையின் அடிப்படையில்தான். அது ஒருமுறை கூறப்பட்ட வாய்ப்புதான். இப்போது அது இல்லை. 2010க்குப் பிறகு நிலைமை வெகுவாக மாறி விட்டது. அது அப்போது தரப்பட்ட ஒரு உறுதிமொழி, அவ்வளவுதான்.

நான் தருவதாக கூறிய ஆதரவை காங்கிரஸ் கட்சி ஏன் பரிசீலனை செய்யவில்லை என்பதை காங்கிரஸிடம்தான் கேட்க வேண்டும்.

மேலும், திமுகவுடன் தனது கூட்டணி உறுதியுடன் இருப்பதாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கூறி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

லோக்சபா தேர்தலில் கூட்டணிகள் மாறுமா?

அரசியலில் எதுவும் நடக்கலாம். லோக்சபா தேர்தலுக்கு முன்பு கூட்டணிகள் மாற வாய்ப்பில்லை என்று கூற முடியாது. அரசியல் கணக்குகள் மாறிக் கொண்டேதான் இருக்கும். அந்தந்த சூழ்நிலையில் உள்ளவற்றைப் பொறுத்துதான் அரசியல் கூட்டணிகள் ஏற்படும்.

அரசியலில் இறுக்கமாக இருப்பது சரிவராது. எங்களைப் பொறுத்தவரை எந்த சூழல் ஏற்பட்டாலும் அதை நாங்கள் சமாளிக்கக் கூடிய வகையில் தயாராகவே இருக்கிறோம்.

இந்திய அரசியலில் எதுவும் எப்போதும் மாறும். இன்றைக்கு மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மத்தியில் மிகவும் உறுதியான அரசு இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அனைத்து அதிகாரங்களும் ஒருங்கிணைந்த சர்வ பலமிக்க (Authoritative Govt) இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள்.

3வது அணி ஏற்படுமா?

எதிர்கால அரசியல் சூழ்நிலை குறித்து இப்போதே கூற முடியாது. அரசியல் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படுவது சகஜம். பொறுத்திருந்து பார்ப்போம்.

பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா?

எனக்கு அனைத்துக் கட்சிகளிலும் நல்ல நண்பர்கள் உள்ளனர்.

லோக்பாலில் பிரதமரைச் சேர்க்கலாமா?

நிச்சயம் சேர்க்கக் கூடாது. ஏற்கனவே பிரதமர் பதவி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்தான் வருகிறது. லோக்பாலில் பிரதமர் பதவியைச் சேர்த்தால் பிரதமர் அலுவலகம் மீதான நம்பகத்தன்மை போய் விடும். அரசியல் ரீதியாக லோக்பாலை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

அந்நிய சக்திகள் இதைத் தவறாகப் பிரயோகிக்காலாம். உதாரணத்துக்கு, பிரதமருக்கு எதிராக ஏதாவது ஒரு லஞ்சப் புகாரை லோக்பால் முன் கொண்டுவந்தால், பிரதமர் அதற்கு பதிலளிப்பதில்தான் நேரத்தைச் செலவிட வேண்டி வரும். அந்தப் புகாருக்கு ஆதாரமே இருக்காது. ஆனாலும் அவர் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இது எந்த அளவுக்கு நாட்டின் நிர்வாகத்தை, அரசு இயக்கத்தை பாதிக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். எனவே லோக்பாலில் பிரதமரையும் உள்ளடக்குவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

மத்தியில் மீண்டும் தனிக்கட்சி ஆட்சி வரும் என கருதுகிறீர்களா?

அதற்கான வாய்ப்பே இல்லை. ஒரு கட்சி ஆட்சி முறை முடிந்து போய் விட்டது. எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறும் என நான் கருதவில்லை. எதிர்காலத்திலும் கூட்டணி ஆட்சிகள்தான் வரும்.

மத்திய அரசியலுக்கு வருவீர்களா?

அப்படி எந்த எண்ணமும், லட்சியமும் எனக்கு இல்லை. எனக்கென்று நான் லட்சியங்களை வகுப்பதில்லை. நாட்டுக்காகத்தான் லட்சியங்களை வகுத்து செயல்படுகிறேன்.

தயாநிதி மாறன் நீக்கப்பட வேண்டுமா?

அதை பிரதமர்தான் சொல்ல வேண்டும். ஊழல் செய்தவர்களை நீக்க வேண்டியது, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது பிரதமரின் கடமையும், பொறுப்புமாகும். அதை அவர் செய்ய வேண்டும்.

ப.சிதம்பரத்தின் வெற்றி குறித்து நீங்கள் கூறியது?

ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் ஜெயிக்கவே இல்லை. அவர் மோசடியான முறையில் வென்றதாக அறிவிக்கப்பட்டார். இது நாட்டுக்கே தெரியும். நாட்டை அவர் மோசடி செய்து விட்டு பதவியில் அமர்ந்துள்ளார். அவர் பதவியில் நீடிப்பது சரியல்ல, பொருத்தமானதல்ல, நியாயமானதுமல்ல,” என்றார் ஜெயலலிதா.

Monday, June 27, 2011

மெரினாவில் இன்னுயிர் துறந்த ஈழத்தமிழர்களுக்காக


seeman-nedumaran-27-06-11

இலங்கை அரசின் சித்திரவதைகளூக்கு ஆளாக்கப்பட்டு இன்னுயிர் துறந்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று ( 26.6.2011) மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை உலகெங்கிலும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐநா கடைபிடித்து வருகிறது. இந்நிகழ்வில் பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா உட்பட பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பழ.நெடுமாறன் எழுச்சி உரை ஆற்றினார். சீமான் எழுச்சி கோஷங்கள் எழுப்பினார். இந்த நிகழ்வு கட்சி சார்பற்ற நிகழ்வாகவே இருந்தது.

முதலில் அவங்களை சமாதனம் பண்ணுங்க


கழுகார் உள்ளே நுழையும்போது, அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்-கள் அடுத்​தடுத்து வந்துகொண்டே இருந்தன. ''எல்லாம் டெல்லியில் இருந்து!'' என்றார் சுருக்கமாக!

''காங்கிரஸ் மேலிடம் தி.மு.க-வை நெட்டி வெளியே தள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டது. அதற்கான காரியங்களை மறைமுகமாகத் தொடங்கி​விட்டார்கள். இதைத் தி.மு.க-வும் தெளிவாகவே தெரிந்துகொண்டுவிட்டது!'' என்று ஆரம்பித்த கழுகாரிடம்,

''அதனால்தான் டெல்லி சென்ற கருணாநிதியை காங்கிரஸ் ஆட்கள் யாருமே சந்திக்கவில்லை​யா?'' என்​றோம்.

''கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமை காலை​யில் சென்னையில் இருந்து டெல்லிக்குச்சென்றார். அன்று மாலை திகார் சிறைக்குப் போய் கனிமொழியைச் சந்தித்தார். இரவு டெல்லியில் தங்கிவிட்டு, புதன்கிழமை மாலைதான் சென்னை திரும்பினார். இந்த ஒன்றரை நாள் பயணத்தில் அவரை டெல்லியில் சந்தித்த ஒரே காங்கிரஸ் வி.ஐ.பி., மத்திய அமைச்சர் வயலார் ரவி மட்டும்தான். அவரும் ரொம்ப கேஷூவலாக வந்து கருணாநிதியைச் சந்தித்தாராம். மற்றபடி, காங்கிரஸ்​காரர்கள் யாரும் கருணாநிதியை சந்திக்க வரவும் இல்லை... இவர் முயற்சிக்கவும் இல்லை.''

''சொல்லும்!''

''ஆனால், தன்னுடைய கோபம் அனைத்தையும் தெரிவிக்க வேண்டிய இடத்தில் தி.மு.க. காட்டிவிட்டது என்பதுதான் உண்மை. கருணாநிதி டெல்லியில் இருந்தபோது, மத்தியக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். அவர் பேசப் பேச, அங்கே இருந்த தலைவர்களுக்கு குப்பென்று வேர்த்துவிட்டது. 'லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும்’ என்று அண்ணா ஹஜாரே போன்றவர்கள் சொல்ல... அதை ஏற்காமல் மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், 'பிரதமரையும் உறுதியாகச் சேர்க்கவேண்டும்’ என்று டி.ஆர்.பாலு சொன்னால் எப்படி இருக்கும்? 'காங்கிரஸ் தன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதற்கு முன்னதாக, தானே போய்விட ஒரு காரணத்தை தி.மு.க. தேடியது. அதுதான் லோக்பால்!’ என்கிறார்கள். மன்மோகன் சிங்கையும் சோனியா​வையும் சுரீர் எனத் தைக்கிறது, தி.மு.க-வின் கோரிக்கை. யார் முந்திக் கொள்கிறார்கள் என்று பார்ப்​போம்!''

''அடுத்து திகார் காட்சிகளுக்கு வாரும்!''

''துன்பமும் துயரமும் வேதனையும் கலந்த காட்சி அது! 'இந்த வயதான மனிதர் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார், பார்த்தீர்களா?’ என்று கருணாநிதியை டெல்லி விமான நிலையத்தில் பார்த்த இந்திப் பத்திரிக்கையாளர் ஒருவர் வருத்தப்​பட்டாராம். அந்த அளவுக்கு கருணாநிதி டெல்லியில் கஷ்டப்பட்டார். அவரது வழக்கமான வீல் சேரை டெல்லிக்குக் கொண்டுசெல்ல முடியவில்லை. அதை எடுத்துச் சென்றாலும், ஸ்லோப் உள்ள இடங்களில்தான் அதைப் பயன்படுத்த முடியும் என்பதால், அங்கேயே இருக்கும் வீல் சேரைப் பயன்படுத்திக்கொள்கிறார். திகாருக்கு அவர் சென்றபோது, ராஜாத்தி அம்மாளும் உடன் இருந்தார். கனிமொழியைப் பார்த்ததும் கதறிக் கதறி அழுதிருக்கிறார். கனிமொழியும் கண்ணீர் மல்க அப்பாவைத் தொட்டுச் சமாதானப்படுத்தினார். ஆற்றாமை மிகுதியால் தான் உட்கார்ந்து இருந்த வீல் சேரை இறுக்கமாக கருணாநிதி பிடிக்க... 'அவ்வளவு அழுத்திப் பிடிக்காதீங்கப்பா. கை வலிக்கப்போகுது’ என்று கனிமொழி சொல்லி இருக்கிறார். 'உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியலை... இங்கயே ரெண்டு வாரத்துக்குத் தங்கிடலாம்னு இருக்கேன்’ என்று கருணாநிதி சொல்ல... 'வேண்டாம்பா. நீங்க சென்னையிலயே இருங்க’ என்று கனிமொழி மறுத்தாராம். 'தயாளுவும் உன்னைப் பார்க்கணும்னு சொல்றா! அடுத்த தடவை வரும்போது அழைச்சுட்டு வர்றேன்’ என்ற கருணாநிதி, 'பேரன் ஆதியைப் பார்க்கறப்பதான் எனக்கு வருத்தம் அதிகமாயிடுது. அதனால, காலையில ஒரு தடவையும் ராத்திரி ஒரு தடவையும் அவன்ட்ட பேசுறேன்’ என்று சொன்னாராம். இவை அனைத்தையும் கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டு இருந்தாராம் ராஜாத்தி!''

''ம்!''

''அப்போது, கனிமொழி சில கோரிக்கைகளை வைத்துள்ளார். 'சரத் ரொம்ப வருத்தமா இருக்கார். அவரை நீங்க பார்த்து ஆறுதல் சொல்லணும். அதே மாதிரி, ராசாவோட மனைவி பரமேஸ்வரியிடமும் நீங்க பேசணும்’ என்று சொன்னாராம். 'நான் பேசுறேன்மா’ என்று கருணாநிதி சொல்லிவிட்டு வந்தார். கனிமொழியைச் சந்தித்துவிட்டு ஹோட்​டலுக்கு வந்த கருணாநிதி, யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தாராம். அழகிரி வந்த பிறகுதான் கொஞ்சம் சமாதானம் ஆகி, சில வார்த்தைகள் பேசினாராம். தன்னுடைய உடல் நிலை, மனநிலை பற்றி அதிகம் பேசிய கருணாநிதி, 'மக்கள் என்னை சரியாப் புரிஞ்சுக்கலை. அதனால, இப்போ என் மக்களைக் காப்பாத்த முடியலை’ என்று அந்தச் சூழ்நிலையிலும் நயத்துடன் பேசி இருக்கிறார்.''

''சரத், பரமேஸ்வரியைப் பற்றி ஏன் கனிமொழி பேசினார்?''

''மிக மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கலைஞர் டி.வி. சரத்குமாரால் திகாருக்குள் பொழுதைக் கழிக்கவே முடியவில்லை. ஆ.ராசா மூன்று வேளையும் சிறை உணவு சாப்பிடப் பழகிவிட்டார். கனிமொழி ஒருவேளை மட்டும் சிறை உணவு சாப்பிடுகிறார். ஆனால், சரத்குமாருக்கு சிறை உணவு ஒப்புக்கொள்ளவே இல்லை. டெல்லியில் 42 டிகிரிக்கு மேல் அடிக்கும் அனலும் திகாருக்குள் வெம்மையை உண்டாக்கி இருக்கிறதாம். வேனல் கட்டிகள் உருவாக, அதன் எரிச்சல் தாங்க முடியாமல் தவிக்கிறாராம் சரத்.

டெல்லியின் மத்தியப் பகுதியில் வசிக்கும் சரத்குமாரின் சகோதரிதான் தினமும் தன் வீட்டுச் சாப்பாட்டை திகாருக்குக் கொண்டுவருகிறார். சமீபத்தில் அவர் சாப்பாடு கொண்டுவந்தபோது, தி.மு.க-வின் எம்.பி ஒருவர் திகாருக்கு வந்தாராம். 'சரத்துக்கும் கலைஞர் டி.வி-க்குக் கைமாறிய 200 கோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பணம் கைமாறிய தேதியில் சரத் அதிகாரப்பூர்வமாக கலைஞர் டி.வி-யில் அங்கம் வகிக்கவே இல்லை. இதை எல்லாம் சொன்னால், கலைஞர் குடும்பத்துக்கு சிக்கலாகிவிடும் என்பதால்தான் சரத் அமைதியாக இருக்கிறார். ஆனால், உணவு, உடல் உபாதைகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. செலவுக்குக்கூடப் பணம் இல்லாத அளவுக்குத் தவிக்கும் எங்களை, உங்கள் கட்சியும் கைவிட்டுவிட்டது. இனியும் சரத் அமைதியாக இருக்க மாட்டார்!’ என ஆவேசமாக வெடித்தாராம்.''

''அப்புறம்..?''

''சரத்தை எப்படியாவது அப்ரூவர் ஆக்கிவிட வேண்டும் என்பதில் சி.பி.ஐ. உறுதியாக இருக்கிறது. '200 கோடி கைமாறியதில் உங்களின் பங்களிப்பு இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். அதே நேரம் உங்களை நிர்ப்பந்தித்த ஆட்களைப்பற்றி நீங்கள் ஸ்டேட்மென்ட் கொடுக்க வேண்டும்!’ என வற்புறுத்தும் சி.பி.ஐ., அதற்கு கைம்மாறாக சரத்தின் ஜாமீன் கோரிக்கைக்கு உதவுவதாகச் சொல்கிறதாம். சிறையின் சூழ்நிலை பிடிக்காமல் தவிக்கும் சரத், எந்த நேரத்திலும் அப்ரூவர் ஆக வாய்ப்பு இருக்கிறது. அவர் வாய் திறந்தால், தி.மு.க-வின் மிக முக்கியத் தலையே திகாரை நோக்கி வரக்கூடிய இக்கட்டு உருவாகுமாம்!''

''சரத்தை சமாதானப்படுத்தும் படலம் தொடங்கி இருக்குமே?''

''யாருடைய சமாதானத்தையும் ஏற்கிற நிலையில் சரத் இல்லை. தயாநிதி மாறனையே 'பார்க்க மாட்டேன்’ எனச் சொல்லி திருப்பி அனுப்பிய சரத், கருணாநிதியின் சந்திப்பின்போதும் பெரிதாக ஏதும் பேசவில்லையாம். 'எனக்கும் 200 கோடிக்கும் என்ன சம்பந்தம்?’ என சரத் கேட்க, 'இதே கேள்வியைத்தான் என் மகளும் கேட்கிறார். உங்களுக்கே தெரியும்... சினியுக் கம்பெனியில் கடன் வாங்கிய விஷயமே கனிக்கு தெரியாது. அதனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து நாம் ஆலோசனை நடத்தியபோதுதான், கனிமொழிக்கு விஷயம் தெரியும். உங்க இரண்டு பேருடைய சூழ்நிலையும் ஒன்றுதான்!’ என உருகினாராம் கருணாநிதி. சிறையில் கனிமொழியுடன் மட்டுமே சரத் பேசுகிறாராம். ஆ.ராசாவின் முகத்தை அவர் திரும்பிக்கூட பார்ப்பது இல்லை. கனிமொழிக்குத் தேவையான உடைகள்கூட சரத்குமாரின் சகோதரி வீட்டில் இருந்துதான் வருகிறது. கனிமொழியின் சமாதானத்துக்கு மட்டுமே சரத் கட்டுப்படுகிறாராம். சரத் உடல்நிலை சரியில்லாமல் தவிக்கும் நிலையை கருணாநிதியிடம் சொன்ன கனிமொழி, 'அவரை சமாதானப்படுத்துவது சிரமம்’ எனச் சொன்னாராம்.''

''பரமேஸ்வரி விஷயம்?''

''ஆ.ராசாவின் மனைவியான பரமேஸ்வரி அதிகப் பயத்தில் இருக்கிறார். 'தன்னுடைய கணவர் சிக்க​வைக்கப்​பட்டுள்ளார்’ என்ற சந்தேகம் பலமாக இருக்கிறது. அதைத்தான் பேசி சமாதானப்படுத்தச் சொல்லி இருக்கிறாராம் கனிமொழி!'' என்ற கழுகார், அருகில் இருந்த ஐஸ் வாட்டரில் ஒரு 'சிப்’ பருகிவிட்டுத் தொடர்ந்தார்.

''கேபிள் டி.வி-க்களை மொத்தமாக அரசாங்கமே கையில் எடுக்கப்போகிறது என்று நான் உமக்குச் சொல்லி இருந்தேன். 'குறைந்தபட்சம் 30 ரூபாய்வரைக்கும் கொடுத்தால்கூட எனக்கு சந்தோஷம்தான்’ என்று ஜெயலலிதா சொன்னதையும் நான் உமக்கு சொன்னேன். அதன் தொடர்ச்சியாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை கோட்டைக்கு அழைத்துப் பேசினார் முதல்வர். இதில் கோவை யுவராஜ் தலைமையிலான சங்கத்தினரும் கரூர் ஆறுமுகம் தலைமையிலான சங்கத்தினரும் கலந்துகொண்டனர். ஆபரேட்டர்கள் தரப்பில், 'சென்னையில் இருப்பதுபோலவே எல்லா ஊர்களிலும் தமிழ் சேனல்கள் அனைத்தும் இலவசமாகத் தர ஏற்பாடு செய்யவேண்டும். கடந்த ஆட்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கேபிள் தொழிலைவிட்டே போகும் அளவுக்குத் தொல்லைகள் தரப்பட்டன. ஆளும் கட்சியால் தொழில் பாதுகாப்பு இல்லாமல் போனது. எங்களுக்குத் தொழில் பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கிவைக்கப்பட்டுள்ள அரசு கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு மையங்களை உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்று கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள்.


எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட ஜெ., 'அரசின் தொழில்நுட்பப் பிரிவினருடன் கலந்து பேசி, கேபிள் தொழிலுக்கு நல்லது செய்கிறேன்’ என்று உறுதி சொன்னாராம். அதற்கு முந்தைய நாள், தலைமைச் செயலாளர், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர், சட்டத் துறை செயலாளர் மூவரும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் இரண்டு மணி நேரம் பேசினர். விரைவில் இதற்கான தனிச் சட்டம் வரப் போகிறது. ஆனால், இதில் ஒரு கூத்து நடந்துள்ளதாக இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள்.''

''என்னவாம்?''

''தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநிலத் தலைவரான சகிலன்தான் இதுவரை இந்தப் பிரச்னையை வைத்துப் புயல் கிளப்பி வந்தவராம். எஸ்.சி.வி-க்கு எதிரானவர்களை ஒன்று திரட்டுவார் இவர். ஜெயலலிதா புதிய குரூப் ஒன்றை சந்தித்து இருப்பதைப் பார்த்து, சகிலன் தரப்புக்கு அதிர்ச்சி. 'முதல்வரை சந்திக்கும் தகவல் எங்களுக்குச் சொல்லப்படவே இல்லை. அவர் சந்தித்தது எல்லாமே, புதிதாக உருவான சங்கங்கள். 'அரசு கேபிளைக் கொண்டு வரக் கூடாது’ என்பதற்காக செயல்படும் சிலர் இது போன்ற சங்கங்களைத் திடீரெனத் தொடங்கி, பின்னால் இருந்து இயக்குகிறார்கள். நாங்கள் முதல்வரை சந்தித்தால் இந்த உண்மை வெளிவந்துவிடும் என்பதால்தான் எங்களைத் தவிர்த்துவிட்டனர். கூடிய சீக்கிரமே முதல்வரை சந்தித்து எல்லா உண்மைகளையும் சொல்வோம்’ என்று சொல்லி வருகிறாராம்.''

''கேபிள் ஒயர்களைப் போலவே இவர்களும் செம சிக்கலில் இருப்பார்கள்போல!'' என்றோம். சிரிப்புச் சத்தம் வானத்தில் கேட்டது!

நன்றி : ஜூனியர்விகடன்-ஜூன்-29, 2011



கனிமொழி கேஸில், திருப்பம்! சரத்குமார் வாய் திறக்கலாம்!!


கனிமொழி கேஸில் சி.பி.ஐ. ஒரு மர்மச் சிரிப்பு சிரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தக் கேஸில் சி.பி.ஐ.க்கு முன்பு லேசாக ஒரு பயம் இருந்தது. இப்போது அந்தப் பயம் விலகத் தொடங்கிவிட்டது. எப்படி? அவர்களே எதிர்பாராத ஒரு சாட்சி, அவர்களுக்கு கிடைக்கும் சாத்தியம் உள்ளது.

அந்த எதிர்பாராத சாட்சி, சரத் குமார்.

கனிமொழியுடன் கைதாகி தற்போது திகார் ஜெயிலில் இருக்கும் அதே ‘கலைஞர் டீ.வி.’ சரத் குமார்தான்!

சரத் குமாரை அப்ரூவராக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர் சில சி.பி.ஐ. அதிகாரிகள். கடந்த சில நாட்களாக, சரத்தும் அதைப்பற்றி சிறிது யோசிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த முயற்சி வெற்றி பெற்றால், கனிமொழி கேஸ், தலைகீழாக மாறும் என்கிறார்கள். அதற்குப்பின் யார் வந்தாலும், குற்றவாளிகளைக் காப்பாற்ற முடியாது என்றும் கூறுகிறார்கள்.

இங்கு நாம் கனிமொழி கேஸ் என்று குறிப்பிடுவது, கலைஞர் டீ.வி.க்கு பணம் வந்த விவகாரம் மாத்திரமே. முழுமையான ஸ்பெக்ட்ரம் கேஸ், பெரியது. அதில் இனிமேல்தான் முக்கிய நபரே சிக்கப் போகிறார் என்கிறார்கள்.

அந்தப் பெரிய கேஸில் ஒரு பகுதியான கலைஞர் டீ.வி. விவகாரத்தில் சி.பி.ஐ.க்கு ஒரு பயம் இருந்தது. என்னதான் எவிடென்ஸ்கள் சாதகமாக இருந்தாலும், கேஸின் முடிவு சாட்சிகளின் பலத்தில்தான் தங்கியிருந்தது. அதுதான் சி.பி.ஐ.க்கு இருந்த பயம்.

இதனால்தான், குற்றச்சாட்டுப் பற்றிய முக்கிய ஆவணங்களைக்கூட கோர்ட்டில் அவர்கள் இன்னமும் தாக்கல் செய்யாமல் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். சி.பி.ஐ. எந்த ஆவணங்களை, எப்படி உபயோகித்துக் கொள்ளப்போகிறது என்பது எதிர்த் தரப்புக்குத் தெரிந்துவிடக் கூடாது.

தெரிந்து விட்டால், சாட்சிகளை பல்டியடிக்க வைத்து அவற்றை ஒன்றுமில்லாமல் செய்துவிட முயற்சி செய்யலாம்.

மொத்தத்தில், சாட்சிகள் கொஞ்சம் வீக். தவிர, கலைஞரின் மனைவி தயாளு அம்மாளும் ஒரு சாட்சி!

இந்த விவகாரத்தில், பண வரவுக்கு முன்னேற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு முடிந்தபின், பணத்தை எங்கே கொண்டுபோய் டம் பண்ணுவது என்ற கட்டம் வந்தபோதுதான், கலைஞர் டீ.வி. காட்சிக்குள் வந்தது என்கிறார்கள்.

அதாவது, பரிசு தீர்மானிக்கப்பட்டு, பரிசுத் தொகையும் தீர்மானிக்கப்பட்டு, பரிசை யாருக்கு வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்ட பின், பரிசு வழங்கப்பட்ட மேடைதான் கலைஞர் டீ.வி.! அந்த மேடையின் தலைமை நிர்வாகி, சரத் குமார்.

இப்படியான ஒரு டீலிங்கில், பரிசில் ஒரு சிறிய பகுதிகூட தலைமை நிர்வாகியின் பாக்கெட்டுக்குள் போயிருப்பது சந்தேகமே! ஆனால், அவரையும் சிறையில் வைத்திருக்கிறது சி.பி.ஐ.

அதற்கு ஒரு காரணமும் உண்டு என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

சரத்துக்கு இதில் நேரடிப் பலனோ, சம்பந்தமோ கிடையாது என்பது சி.பி.ஐ.க்கு நன்றாகவே தெரியும். அதேநேரத்தில், யாருக்கு சம்பந்தம் இருக்கிறது என்பது சரத்துக்குத் தெரியும். அந்த விஷயத்தை வெளியே கொண்டுவர வேண்டுமென்றால், இவருக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும்.

அந்த அதிர்ச்சி வைத்தியம்தான் திகார் ஜெயில்!

திகார் ஜெயிலில் நீண்டகாலம் இருக்க வேண்டியதில்லை. உடனே ஜாமீனில் வெளியே கொண்டுவந்து விடுவோம் என்றுதான் சரத்துக்கு ஆரம்பத்தில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது என்கிறார்கள். ஆனால், அப்படிச் சொன்னவர்களால் கனிமொழியைக்கூட ஜாமீனில் வெளியே கொண்டுவர முடியவில்லை.

அதைப் பார்த்தபின்தான், சரத் தடுமாறத் தொடங்கினார் என்கிறார்கள்.

தனது விடுதலை மற்றயவர்களின் கையில் இல்லை, தனது வாயிலிருந்து வரப்போகும் சில வார்த்தைகளிலேயே தங்கியுள்ளது என்பதை அவர் ‘கடினமான பாதையில்’ புரிந்து கொண்டார். சி.பி.ஐ. விரும்புவதும் அதைத்தான்!

சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சரத், கிட்டத்தட்ட சம்மதம் தெரிவிக்கும் நிலையில் பேசியிருக்கிறார் என்கிறார்கள். கனிமொழிக்கு இந்த விஷயம் தெரியவந்திருக்கிறது. உடனே அவர், கலைஞரை சரத்துடன் நேரே பேசிப் பார்க்குமாறு கூறியிருக்கிறார். டில்லி சென்ற கலைஞரும் சரத்தை சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது.

அப்படியும் சரத் சமாதானமாகவில்லை என்கிறார்கள்.

மொத்தத்தில், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, சரத்துக்கு இதில் நேரடி சம்பந்தம் கிடையாது. அதேநேரத்தில், யாருக்கு சம்பந்தம் இருக்கிறது என்பது சரத்துக்குத் தெரியும்.

சரத் தானாக முன்வந்து அதை நீதிமன்றத்தில் சொன்னால், சரத் வெளியே வரலாம். ஆனால், முக்கிய நபர் ஒருவர் உள்ளே போகவேண்டிய நிலை ஏற்படலாம்!

அந்த முக்கிய நபர், ‘முன்னாள் முதல் குடும்பத்தின்’ முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்துவிட்டால்?

மத்திய அரசின் மோசடி! தினமணி தலையங்கம்

ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும், இந்த ஆட்சியைத் தூக்கி எறியலாம் என்கிற நம்பிக்கையை மக்களாட்சி முறை அளிப்பதால், மக்கள் மனதிற்குள் கொதித்தபடி விலைவாசி ஏற்றத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சும் விதமாக இப்போது சமையல் எரிவாயுவின் விலையையும், டீசல் மற்றும் மண்ணெண்ணெயின் விலையையும் உயர்த்தி ஒட்டுமொத்த நடுத்தர வர்க்க, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

மே மாதம் இரண்டாவது வாரத்தில் பெட்ரோல் விலையை அதிகரித்த போதே, யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்கிற கதையாய் விரைவிலேயே பெட்ரோலியப் பொருள்களின் அடுத்த கட்ட உயர்வை எதிர்பார்த்தோம். அப்போதே நமது தலையங்கத்தில் இந்த விலைவாசி உயர்வு என்பது தனியார் பெட்ரோலிய நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்கும், அவர்கள் லாபம் சம்பாதித்துக் கொழிப்பதற்கும் மத்திய அரசால் நடத்தப்படும் நாடகம் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.

மே மாதம் பெட்ரோல் விலை உயர்வால் விற்பனை சற்றும் பாதிக்கப்படவில்லை என்கிற புள்ளிவிவரம் தந்த தைரியத்தில் இப்போது சமையல் எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் விலையை உயர்த்தி இருக்கிறார்கள். இதனாலும் விற்பனை நிச்சயமாகக் குறையாது என்று நம்பலாம். ஆனால், இந்த உயர்வுகளால் ஏற்படும் அதிகப்படி செலவை ஈடுகட்ட மாதச் சம்பளம் பெறும் சராசரி நடுத்தரவர்க்கத்தினர் அனுபவிக்க இருக்கும் கஷ்டங்களைப் பற்றி ஏ.சி. அறைகளில் இருந்தபடி திட்டமிடும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் என்ன தெரியும்?

குறைந்த கட்டணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்தை உறுதி செய்துவிட்டு, இவர்கள் பெட்ரோல் கட்டணத்தை பத்து மடங்கு அதிகரித்தாலும் யாரும் கவலைப்படப் போவதில்லை. ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டுமானாலும் பஸ் வசதியோ, மெட்ரோ ரயில் வசதியோ இருந்தால் சொந்த வாகனம் ஏன் தேவைப்படப் போகிறது? இன்றைய நிலைமை அப்படியா இருக்கிறது?

சொந்த வாகனம் இருப்பது என்பது ஒரு சமுதாய அந்தஸ்தாகி விட்டிருக்கிறது. பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றதும் குழந்தைகளுக்குக் கைக்கடிகாரம் என்றிருந்தது போய் இப்போது இரு சக்கர வாகனம் என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இன்றைய நடுத்தர வருவாய்ப் பிரிவினர் குறைந்தபட்சம் ஒரு 50சிசி வாகனமாவது வைத்திருந்தால்தான் அலுவலகம் சென்று வரவோ, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று கூட்டி வரவோ முடிகிறது.

இந்த வாகனங்களை வாங்கி அதற்கு மாதா மாதம் தவணை அடைப்பது போதாதென்று, இப்போது அதிகப்படியான பெட்ரோல் செலவும் என்று மனதிற்குள் அழுது கொண்டிருந்த நிலையில் சமையல் எரிவாயு எண்ணெய் விலையையும் கூட்டி, டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய உபயோகப் பொருள்களின் விலையையும் அதிகரித்து மத்திய அரசு தனது மக்கள் விரோதப் போக்கை வெளிப்படுத்தி இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால் பல விடை கிடைக்காத கேள்விகள் எழுகின்றன.

கச்சா எண்ணெய் விலை என்பது உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் ஒன்றாகத்தானே இருக்கும்? அப்படி இருக்கும்போது, அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.45க்கு விற்கப்படும்போது இந்தியாவில் மட்டும் ரூ.70க்கு விற்கப்படுவானேன்? அரபு நாடுகள் அமெரிக்காவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெயை விற்பனை செய்கின்றனவா? நமது நட்பு நாடுகள் என்று அரபு நாடுகளைக் கூறுகிறோமே, ஆனால், இந்த விஷயத்தில் நாம் வஞ்சிக்கப்படுகிறோமா?

அது போகட்டும், தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் உலகச் சந்தை நிலவரத்தில் அவர்களே கச்சா எண்ணெயை வாங்கி சுத்திகரித்து அவர்களுக்குக் கட்டுப்படும் விலைக்கு விற்றுக் கொள்ளட்டுமே, எதற்காக நமது அரசு அவர்களுக்காகக் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொடுக்க வேண்டும்? நமது எண்ணெய்க் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய்க்கு உலக மார்க்கெட் விலையைத்தானே நாம் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும்? ஏன், குறைந்த விலைக்குக் கொடுக்கிறோம்?

நாம் பெட்ரோலுக்கும், டீசலுக்கும், சமையல் எரிவாயுவுக்கும், மண்ணெண்ணெய்க்கும் தரும் விலையில் கணிசமான அளவு, ஏறத்தாழ 40%, சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி, "செஸ்' எனப்படும் சிறப்புக் கட்டணம் என்று பெறப்படுகிறது. இப்போது மத்திய அரசு தாங்கள் எங்களுக்குக் கிடைக்கும் சுங்க வரி மற்றும் கலால் வரியிலிருந்து சற்று குறைத்துக் கொள்கிறோம், மாநில அரசுகள் தங்களது விற்பனை வரியைக் குறைத்துக் கொள்ளட்டும் என்கிறது. நன்றாக இருக்கிறது இந்த நியாயம்!

பெட்ரோலிய நிறுவனங்கள் தாங்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்கிற மத்திய அரசின் முடிவே ஒரு மிகப்பெரிய மோசடி. கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயரும், குறைந்தால் விழும் என்கிற ஆசை காட்டி மக்களை ஏமாற்றி விட்டு, தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் லாபம் அடைய மத்திய அரசு செய்யும் சதிதான் இந்த விலை நிர்ணய முறை. முதலில், இப்போதைய விலை நிர்ணய முறைக்கு முற்றப்புள்ளி வைக்க வேண்டும்.

நமது பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், திட்டக் கமிஷன் உறுப்பினர்களுக்கும் இப்போதெல்லாம் ஒரே ஒரு கவலைதான். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் இரண்டு இலக்கத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் அது. விலைவாசி உயர்வு 9.13% இருப்பதைப் பற்றியோ, அது மேலும் அதிகரிக்குமே என்றோ அவர்கள் கவலைப்படவில்லை. இவர்கள் என்ன பொருளாதாரம் படித்துத் தேர்ந்திருக்கிறார்களோ தெரியவில்லை.

பொருளாதார வளர்ச்சி உயர்வது கிடக்கட்டும். விலைவாசி குறைவதற்கு வழிகாணுங்கள். மக்கள் தெருவில் இறங்கிப் போராடத் தலைப்பட்டால், சட்டம் ஒழுங்குப் பிரச்னையை அரசு விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்!

நன்றி தினமணி

தனி ஈழம் பெற்றுத் தர ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்! – உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்


கொழும்பு: முதல்வர் ஜெயலலிதா தவிர வேறு யாரையும் ஈழத் தமிழர்களுக்காக குரல் எழுப்ப தகுதி உடையவர்களாக நாங்கள் கருதவில்லை. இன்றைய சூழலில் தனி ஈழம் பெற்றுத் தர ஜெயலலிதாவால் மட்டுமே முடியும், என உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கூறியுள்ளது.

42 நாடுகளில் அலுவலகங்களுடன் 1974ம் ஆண்டு முதல் இயங்கும் தமிழ் அமைப்பு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம். ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பின் அங்கீகாரம் பெற்றது.

தமிழக சட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை மற்றும் இலங்கை மீதான பொருளாதாரத் தடை ஆகியவற்றை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானங்களுக்கு இந்த இயக்கத்தின் தலைவர் கலைமணி, பொதுச் செயலர் துரை கணேசலிங்கம் ஆகியோர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜெயலலிதா முயற்சி எடுத்தால் தனிஈழம் விரைவில் மலரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

காரிருளில் மூழ்கி வழியறியாது தவித்துக் கொண்டிருந்த உலகத் தமிழினத்திற்கு நம்பிக்கை ஊட்டும் விடிவெள்ளியாய், எம் தமிழினத்தின் மீட்பராய் இன்று நாங்கள் காணும் அன்னையே! தங்களுக்கு உலகத் தமிழினத்தின் சார்பாக யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரித்து 42 நாடுகளில் கிளைகளைக் கொண்டு பணியாற்றும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் வணக்கங்கள்.

பேரழிவை சந்தித்து இன்று எஞ்சியுள்ள ஈழத் தமிழர்கள் தங்களின் வாழ்விடங்களுக்குக் கூடச் செல்ல முடியாத அளவில் ஏதிலிகளாய், வானமே கூரையாய், புற்தரையே பஞ்சணையாய், உண்ண உணவின்றி, அருந்த நீருமின்றி, பெருமளவு அப்பாவி மக்கள் உடல் உறுப்புகள் இழந்து, உற்றார் உறவுகள் சிதறி அவர்கள் நிலையறியாது நம்பிக்கையற்ற நடைப் பிணங்களாக வாழ்ந்து கொண்டுள்ளனர்.

நம்பிக்கை நட்சத்திரம்…

அவர்களின் உரிமைக்கு குரலெழுப்ப நம்பிக்கையான ஒரு தலைமையை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கையில் தங்களின் மாபெரும் வெற்றியும், அதைத்தொடர்ந்த தங்களின் உரிமைக் குரலையும் கேட்டு எம்மக்கள் தங்களை காக்கும் தெய்வம் வந்துவிட்டதாகவே கருதத் தொடங்கி உள்ளனர்.

எங்களின் பாரிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அவசர வேண்டுகோளை சமர்ப்பிக்கிறோம்.

இந்திய உதவி தமிழருக்கு சரியாக சேர்கிறதா…

இந்திய அரசு தமிழர்களின் மறுவாழ்வுக்காக ஆயிரம் கோடிக்கும் மேலாக தந்துள்ள நிதி உதவி இன்னும் எம்மக்களுக்குப் போய்ச் சேரவேயில்லை. சேர்ந்துள்ள நிதியும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உண்மையாக பயன்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் அங்கு யாருமில்லை. அதற்கு இந்திய அரசுக்கு ஒரு அழுத்தத்தைத் தரவும் இதுவரை எங்களுக்கென்று ஒரு ஆதரவு இருந்ததில்லை.

இன்று தாங்கள் ஈழ மக்களுக்காக காட்டும் அக்கறையை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இவர்களின் நம்பிக்கை நிலை பெற்று ஈழ மக்களின் உரிமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய தாங்கள் தொடர்ந்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

உறுதியான முதல்வர்

தங்களின் அரசியல் வாழ்வில் இதுவரைத் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியானவர் என்பதாலேயே எம்மக்களின் வேதனைகளுக்கு தங்கள் ஆட்சித் திறன் மாமருந்தாகும் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் தங்களை நாடுகிறோம்.

சென்ற சில தினங்களுக்கு முன்னர் கூட யாழ்ப்பணத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடத்திய கலந்துரையாடல் அமர்வுக்கு அனுமதிக்காது இலங்கை இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து பலர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையும், வாழ்வுரிமைகளும் எந்த விதத்திலும் கிடைக்காது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இருவேறுபட்ட மொழிகளைப் பேசும் இரு தேசிய இனங்களில் பெரும்பான்மை தேசிய இனம் சிறுபான்மை இனமக்களை வதை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ள நாட்டிற்கு, அவ்வினத்தைச் சேர்ந்த உலகத் தமிழர்கள் எதிர்ப்பைக் காட்டி அங்கு மக்களாட்சியைக் கொண்டு வரவேண்டுவது அந்நாட்டின் இறையாண்மையில் குறுக்கிடுவதாகாது. இந்திய ஒன்றியத்தின் உறுப்பான தமிழகத்திற்கு அதில் மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. அதனை நன்றாக அறிந்து வைத்துள்ள தங்களால்தான் எங்கள் மக்களுக்கு விடிவைத் தரமுடியும்.

வேறு வழியில்லாமல் தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டம்

ஒரு பாரிய இன அழிப்பினை தொடர்ந்து பலவாறாகவும் செய்து கொண்டிருந்த இலங்கை அரசை எதிர்த்து வேறு வழியில்லாமல் தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டம் அதன் நோக்கத்தை எட்டாவிடினும் ஈழமக்கள் தங்களின் பாதுகாப்பிற்கு இனி தனி நாட்டினைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.

அண்மையில் உள்ள தேசங்கள் தங்களின் துயரங்களை கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணத்தால் அவ்வாறு எண்ணியிருக்கலாம். தங்களைப் போன்ற பாதுகாவலர் ஒருவர்தான் அவர்களின் வாழ்வுக்கு உறுதி கூறமுடியும்.

சூடான் தேசம் அம் மக்களின் விருப்புங்கிணங்க இரு தேசங்களாக பிரிய உலக நாடுகள் அங்கீகாரம் கொடுக்கும்போது ஈழ மக்களின் விருப்புக்கிணங்க ஒரு மக்களாட்சி முறையினை அவர்களுக்குப் பெற்றுத் தருவதற்கு தங்களை விட்டால் வேறு தகுதியுடைய தமிழ்த் தலைவர்கள் யாரும் இங்கு இல்லை. ஒரு மாநில அரசின் முதல்வர் தன்மாநில உறவு இன மக்களின் நலன்களில் ஈடுபாடு கொள்வது சட்டத்திற்கு புறம்பானதில்லை.

ஆப்பிரிக்க தேசங்களில் எழும் சண்டைகளில் அவற்றைச் சூழ்ந்துள்ள நாடுகள் தலையிடுகின்றன. தாங்கள் 7 கோடி தமிழகத் தமிழர்களுக்கு மட்டும் தலைவியில்லை. தமிழக முதல்வராய் உலகளாவிய 14 கோடி மக்களின் பிரதிநிதியாக அவர் நலன் காக்கும் பொறுப்புடைய தலைவியாவீர்கள். அப்படித்தான் இன்றைய உலகத் தமிழர்கள் கருதுகிறார்கள்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வழியில்…

மறைந்த மாமனிதர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அதனாலேயே ஈழத் தமிழர்களின் வாழ்வில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். 1977 ல் எங்கள் முதல் மாநாடு சென்னையில் நடந்த போது மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து உரையாற்றினார். அன்றைய அண்ணா செய்தித்தாளில் அவரின் உரை வெளிவந்தது.

விடுதலைப் பெற்ற நாளிலிருந்து நடத்தப்பட்ட அகிம்சைப் போராட்டங்கள் பலன் தந்திருந்தால் விடுதலைப் புலிகளோ மற்றவர்களோ ஆயுதம் ஏந்தி இருக்கமாட்டார்கள். இவையெல்லாம் கடந்த செய்தியாகிவிட்டாலும் அப்போராட்டங்களின் காரணிகள் இன்னும் அப்படியே உள்ளன.

அண்டைப் பிரதேசம் என்ற நிலையிலும் அங்கு நடக்கும் மனிதப் பேரவலங்களைக் கண்டு கொள்ளாமல் தமிழ்நாடும் இந்தியாவும் மெளனமாக இருக்கமுடியாது. தங்களின் வெற்றியைப் பாராட்டும் இந்தியத் தலைவர்கள் இந்தியாவின் அரசியலில் பெருமளவுத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். அதுதான் உண்மையும் கூட.

உலகத் தமிழரின் எதிர்ப்பார்ப்பு

அகில இந்தியத் தலைவியாகப் போகும் நீங்கள், தங்களின் தலைமையிலான அரசு கொடுக்கும் அழுத்தம், இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தும். அதனையே உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களிடமிருந்து முற்றாக எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை அளப்பரியது. தங்களைத் தவிரவும் வேறு யாரும் தமிழர்களுக்காக குரல் எழுப்ப தகுதி உடையவர்களாக நாங்கள் கருதவில்லை.

காலத்தே வந்துள்ள காவல் தெய்வமாய் தங்களை உலகளாவிய தமிழர்கள் நம்புகின்றார்கள். தாங்கள் பதவி ஏற்ற உடன் ஈழ ஏதிலிகளுக்கு தந்துள்ள வசதிகளும், சட்டப்பேரவையில் இலங்கையை கண்டிக்கும் தீர்மானங்களும் அதை நிரூபிக்கின்றன. வரலாற்றில் தாங்கள் என்றென்றும் நிலைத்திருப்பீர்கள்.

தனியான ஒரு குடும்பம், சுயநலம் இன்றி அனைத்துத் தமிழர்களின் ‘அம்மா’ வாகவே வாழும் தங்களுக்கு அதைவிட வேறு என்ன வேண்டும். ஆட்சி தொடங்கிய நிலையிலேயே எதிர்க்கட்சிகள் கூட ஆதரவு அளிக்கும் வண்ணம் செயல்படும் தங்களாட்சி சிறப்பாக நீடு நிலைத்திருக்க உலகத் தமிழர்களின் சார்பாகவும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் சார்பாகவும் எங்கள் வாழ்த்தினையும் வேண்டுகோளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, June 25, 2011

சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா?

ழல் அரசியல்வாதிகள், சர்வாதிகாரிகள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவோரின் சொர்க்கம்... சுவிட்சர்லாந்து. காரணம், வங்கி ரகசியத்தைப் பாதுகாக்கும் அந்த நாட்டின் சட்டம்!

யார் யார் எல்லாம் சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம்?

எந்த நாட்டைச் சேர்ந்தவரும், சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம். ஆனால், 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். தற்போது 101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கி இருக்கிறார்கள்.நம் ஊரில் அடையாளம், இருப்பிடச் சான்று மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன் விண்ணப்பத் தைப் பூர்த்திசெய்து கொடுத்து வங்கிக் கணக்கு தொடங்குவதுபோல, சுவிஸ் நாட்டில் தொடங்குவது அவ்வளவு எளிதல்ல. புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பில் வங்கிகள் மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையாகவும் இருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் பெயருக்குத்தான். பல கோடிகளைக் கொட்டும் நபருக்கு இந்தக் கெடுபிடிகள் எதுவும் இல்லை. புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கிக் கொடுப்பதற்காகவே, நிறைய நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன என்று கூறுகிறார்கள் 'அனுபவஸ்தர்கள்’.


''வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு முன்னர் வங்கி சேவையில் உங்களுக்கு உள்ள தேவைகள், உங்கள் பணம்பற்றிய தகவல், அடுத்த 12 மாதங்களில் எவ்வளவு பணம் முதலீடு செய்வீர்கள் என்பதுபோன்ற விவரங்களை அளிக்க வேண்டும். கணக்கு தொடங்க உங்களது பாஸ்போர்ட் போதுமானது. தபால் மூலம் அனுப்பி கணக்கு தொடங்க வேண்டி இருந்தால், உங்களுக்கு வங்கிக் கணக்கை ஆரம்பித்துக் கொடுக்கும் நிறுவனத்துக்கு பாஸ்போர்ட் நகலை அனுப்பினால் போதும். மேலும், உங்கள் இருப்பிடத்தை
உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, சமீபத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி ரசீது போன்றவற்றில் ஒன்றைக் கொடுக்கலாம். உங்கள் பொருளாதாரப் பின்னணி மற்றும் பணம் வரும் பின்னணிபற்றிய ஆவணங்களை அளிக்க வேண்டும். நீங்கள் அளிக்கும் தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். நேரில் சென்று கணக்கு தொடங்குவதாக இருந்தால், மூன்று மணி நேரத்தில் முடித்துவிடலாம்'' என்கிறார்கள் அவர்கள்.

வங்கிக் கணக்கு தொடங்கக் குறைந்தபட்ச டெபாசிட் இவ்வளவு இருக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. 500 சுவிஸ் பிராங்க் இருந்தாலே வங்கிக் கணக்கைத் தொடங்கிவிடலாம். ஆனால், சில வங்கிகள் மட்டும் தொகையைக் கொஞ்சம் அதிகம் எதிர்பார்க்கின்றன. குறைந்தபட்சம் எவ்வளவு தெரியுமா? 10 லட்சம் சுவிஸ் ப்ராங். நம் ஊர் பணத்துக்குக் கிட்டத்தட்ட ரூ.53 கோடி!

சுவிஸ் வங்கி கணக்கு தொடங்க எவ்வளவு நாள் ஆகும்?

தபால் மூலம் கணக்கு தொடங்குவதாக இருந்தால், குறைந்தது 10 நாட்கள் ஆகும். இதற்கு முதலில் வங்கிக் கணக்கு தொடங்க உதவும் நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு அவர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர், அவர்கள் விண்ணப்பத்தைத் தபாலில் அனுப்பிவைப்பார்கள். அதில் நீங்கள் கையெழுத்திட்டு, தகுந்த ஆவணங்களை இணைத்துக் கொடுக்க வேண்டும். அதை அந்த நிறுவனம் நீங்கள் விரும்பும் வங்கியில் கொடுப்பார்கள். நீங்கள் கணக்கு தொடங்குவதை உறுதிப்படுத்திக்கொள்ள, வங்கி தனியாக ஒரு கடிதம் அனுப்பும். அதை நீங்கள் நேரடியாக வங்கிக்கு அனுப்ப வேண்டும். அதன் பிறகு, வங்கி உங்களுடைய கணக்கை ஆரம்பிக்கும்.

பணத்தை எப்படி டெபாசிட் செய்வது?

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி தேர்ட் பார்ட்டி பேமென்ட் ப்ராசஸர் பணத்தை டெபாசிட் செய்யலாம். இதனால், பணத்தை யார் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியாது. இது தவிர, மணி ஆர்டர், பர்சனல் செக் போன்ற முறைகளையும் கையாளலாம்.

இந்தியாவில் கிளை உள்ளதா?

சுவிஸ் வங்கிக்கு எந்த நாட்டிலும் கிளைகள் இல்லை!

சுவிஸ் வங்கி ஏன் பிரபலமாக உள்ளது?

சுவிட்சர்லாந்து 1505-ம் ஆண்டு முதல் எந்த நாட்டுடனும் போரிடுவது இல்லை என்பதால், அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கிறது. சுவிஸ் தன்னுடைய பணப் பரிமாற்றத்துக்கு தங்கத்தைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. அதனால், உலக அளவில் மிகவும் நிலையான மதிப்பைக்கொண்ட பணமாக சுவிஸ் பணம் கருதப்படுகிறது. இன்டர்நெட் பேங்கிங், சுலபமான முதலீட்டு முறைகள் போன்ற சிறப்பான வங்கி சேவை, கிரிமினலாக இல்லாதவரை உங்களைப்பற்றிய தகவல் வெளியே போக வாய்ப்பே இல்லாத சூழல் ஆகிய காரணங்களால் அனைவராலும் சுவிஸ் வங்கிக் கணக்கு பெரிதும் விரும்பப்படுகிறது.

வாடிக்கையாளர் இறந்துவிட்டால், கணக்கு என்ன ஆகும்?

அவரது வாரிசுதாரருக்குப் பணம் கிடைக்கும். ஆனால், அவர்தான் வாரிசுதாரர் என்று நிரூபிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. பிரபல தலைவரோ, நடிகராகவோ இருந்து இறந்தால், அது அங்கு உள்ள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். சம்பந்தப்பட்ட வங்கிக்கு எளிதில் அது தெரிந்துவிடும். மற்றபடி அவர்களுக்கு வங்கிக் கணக்கு உள்ள நபரின் இறப்பு தெரியப்போவது இல்லை. எனவே, வாரிசுதாரர் 10 ஆண்டுகளுக்குள் வந்து, தான்தான் சட்டபூர்வ வாரிசு என்று நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால், 10-வது ஆண்டின் முடிவில் அந்தக் கணக்கு செயலற்றதாகிவிடும்!ஆனால், இந்தப் பிரச்னைகள் எல்லாம் வராமல் இருக்க, வாரிசுகளிடம் சுவிஸ் வங்கிக் கணக்குபற்றிய விவரத்தைத் தெரிவிக்கும்படியும், அல்லது தன் மரணத்துக்குப் பிறகு வாரிசுதாரர் படிப்பதற்கு என்று ஒட்டப்பட்ட உறையில் எல்லா விவரங்களையும் எழுதி வைக்கும்படியும் தன்னுடைய வாடிக்கையாளர்களை சுவிஸ் வங்கி அறிவுறுத்துகிறது.

வங்கிக் கணக்கை ரத்து செய்ய முடியுமா?

எப்போது வேண்டுமானாலும் வங்கிக் கணக்கை ரத்து செய்துகொள்ள முடியும். அதிக அளவில் பணம் முதலீடு செய்யப்பட்டு இருந்தால், அதை எடுக்க ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அவகாசம் தேவைப்படும். மற்றபடி எந்தச் செலவும் இன்றி சுவிஸ் வங்கிக் கணக்கை ரத்து செய்துகொள்ளலாம்!
விகடன்

தயாநிதிமாறன்.. ப.சிதம்பரம்.. அடுத்து?

சுவாமியின் குற்றப் பத்திரிகை


னதா கட்சியின் தேசியத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, அடுத்த ஏழு வாரங்களுக்கு கௌரவப் பேராசிரியராக அவதாரம் எடுக்கப்போகிறார். ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையில், சம்மர் கோர்ஸ் நடத்துவதற்காக சுவாமி செல்வது வழக்கம்.

இனி அவர் பேட்டி:

''2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகப்போகிறதே? அதில் இடம் பெறப்போகும் வி.ஐ.பி-க்கள் பட்டியல் பற்றி சொல்லுங்​களேன்?''

'இந்தக் கேள்விக்கு என்னுடைய '2ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்காம்' புத்தகத்தில் விரிவாகப் பதில் எழுதி இருக்கிறேன். அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்களின் பினாமிகள், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இந்த ஊழலில் சிக்கி இருக்கிறார்கள். இந்த வி.ஐ.பி-க்கள் எல்லோரையும் சினிமாவில் வருவதுபோல், ஒரே ஃப்ரேமில் கைது செய்துவிட முடியாது. இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே மூன்றாவது குற்றப் பத்திரிகையில் இடம்பெறுவார்கள். எனக்குக் கிடைத்த தகவல்படி, அடுத்தடுத்து 11 குற்றப் பத்திரிகைகள் வரை தாக்கல் ஆகப்போகின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் விரைவில் சிக்குவார் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன். அடுத்து சிக்கப்போகிறவர், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். இவருக்குப் பிறகு, மிகப் பெரிய பெயர் வரும். அது யார் என்று இப்போது நான் வெளியே சொல்ல மாட்டேன்!''

''அவர் தமிழகத்தைச் சேர்ந்தவரா?''


''நிச்சயமாகத் தமிழகத்தில் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க-வில் முக்கியமானவர்கள் எல்லாம் சிக்கிவிட்டார்கள். கருணாநிதிக்கு ரொம்ப வயதாகி​விட்டது. அவரை எந்த முறையில் கொண்டு​வரலாம் என்று ஆலோசித்து வருகிறோம். தயாளு அம்மாள், சாட்சிகள் வரிசையில் வருகிறார். ராஜாத்தி அம்மாளின் பெயரும் இருக்கிறது. இவை எல்லாம் பெரிய சமாசாரம் இல்லை. அதைவிட உயர் பதவியில் இருப்பவர்களை வளைத்துப் பிடிப்பதுதான் விஷயம். ஸ்பெக்ட்ரம் உரிமத்தால் பலன் பெற்றவர்கள் என்கிற பட்டியலும் தயார் ஆகும்போது, அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் சிலர் சிக்கலாம். கடைசியில், சோனியா காந்தி பெயரும் வரும். இவர்களை எப்போது வழக்கில் கொண்டுவருவேன் என்பதை நான்தான் முடிவு செய்வேன்(!). ஏனென்றால், இதை சி.பி.ஐ. செய்யாது. ஆட்சியில் இருப்பவர்களை அது நெருங்காது. காலம் வரும்போது, நான் நீதிமன்றம் மூலம் இதே சி.பி.ஐ-யை வைத்து சோனியாவை விசாரிக்கச் சொல்வேன். சோனியாவுக்கு இரண்டு தங்கைகள். அனுஷ்கா, நாடியா. இருவரும் அவரவர் கணவரைவிட்டுப் பிரிந்தவர்கள். இருவரும் அடிக்கடி துபாய்க்குப் போய் வருகிறார்கள். ஸ்பெக்ட்ரம் டீலிங்கில் வந்த பணத்தை இவர்கள் சீனாவில் 'மக்காவ்' என்கிற இடத்தில் உள்ள வங்கியில் பதுக்கிவைத்து இருக்கிறார்கள். எவ்வளவு தெரியுமா? 35 ஆயிரம் கோடி. சுவிஸ் வங்கியில்கூட பணம் போட்டு இருப்பவர் ஒரு கிரிமினல் என்று தெரிந்தால், அவரது முதலீடு விவரங்களை வெளியே சொல்லிவிடுவார்கள். மக்காவ்வில் இந்த வசதி இல்லை. என்ன குற்றம் செய்து இருந்தாலும், அங்கு இருந்து ஒரு 'பிட்' தகவலைக்கூட பெற முடியாத அளவுக்கு சீக்ரெட் பாங்க் அது. அதன் விவரங்கள் விரைவில் வெளிவரப்போகிறது.

மத்தியில் நிதித் துறை அமைச்சராக இருந்தபோது, ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயித்த கமிட்டியில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம், ஆ.ராசாவுடன் இணைந்துதான் முடிவு எடுத்து இருக்கிறார். இதை ஒரு ஃபைலில் ஆ.ராசாவே குறிப்பிட்டு இருக்கிறார். (அதன் நகல்களை மேலே ) பல பேட்டிகளில் ஆ.ராசாவும், சிதம்பரத்தின் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறார் என்பதற்கு, பத்திரிகை 'கட்டிங்'குகளே சாட்சிகள். இப்படி இருக்கும்போது, ஆ.ராசா மட்டும் திகார் ஜெயிலில் இருக்க... இன்னொரு காரணகர்த்​தாவான அவர் மட்டும் மத்திய மந்திரியாக நீடிப்பது எந்த வகையில் நியாயம்? நிதித் துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது வழக்குப் போட பிரதமரிடம் அனுமதி கேட்டேன். ஆனால், அந்தத் துறையில் இருந்து சிதம்பரம் மாற்றப்பட்டுவிட்டார். ஆகவே, எனக்கு இப்போது பிரதமரின் அனுமதி தேவைப்படாது. இது தொடர்பாக நான் நீதிமன்றத்தில் போட்ட வழக்கு ஆகஸ்ட் 24-ல் வருகிறது. இதோ... நான் உங்களிடம் காட்டும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். அவற்றைப் பரிசீலித்து நல்ல முடிவு சொல்வார்கள் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன். சி.பி.ஐ. விசாரணை நடக்கும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி, கோ-அக்யூஸ்டாக ப.சிதம்பரத்தைச் சேர்க்க வேண்டும் என்கிற விவாதம் வரப்போகிறது.

விகடன்

Thursday, June 23, 2011

கூட்டுக் கொள்ளையடித்த தி.மு.க.வினர்..!


தி.மு.க.வின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில், தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் தங்கள் அதிகாரம் மற்றும் பதவியைப் பயன்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றி ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் அதை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு, தி.மு.க.வினர் அதிகார பலத்துடன் இருந்தனர். ஆனால், ஜெயலலிதா தமிழக முதல்வரானவுடன் தி.மு.க.வினரால் அபகரிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டு அதை உரியவரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதற்கான அதிரடி அறிவிப்பும் தமிழக கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ளது.

இந்த அறிவிப்புக்கு பிறகு தி.மு.க.வினர் ‘கிடுகிடு’வென நடுங்க துவங்கியுள்ளனர். அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் புகார் கொடுக்க முன் வந்துள்ளனர். இப்போதைய நிலவரப்படி தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருச்சியில்தான் அதிகளவில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் அமைச்சர்களாகிப் போன தி.மு.க மாவட்ட தளபதிகளின் ‘ஆட்டம்’ வேறு மாதியானது. கண்களுக்கு தெரிந்து அவர்களின் கட்டுப்பாட்டு ஏரியாவிற்குள் தென்னந்தோப்போ, மாந்தோப்போ இருக்கக் கூடாது. நல்ல வசதியோடு கூடிய விஸ்தாரமான நிலமும் இருக்கக் கூடாது. அது எப்படி என்று போய் உட்கார்ந்துவிடுவார்கள். அந்த நிலத்தை வைத்திருப்பவர்களின் செல்வாக்கை பொறுத்து நடவடிக்கை அமையும். ஒன்றுமே இருக்காது. திடீரென்று பார்த்தால் எல்லா ஆவணங்களும் ‘மாவட்டங்களுக்கு’ வேண்டியவர்கள் பெயரில் மாறியிருக்கும். போலீஸ் அவர்களுக்கு உடந்தை. மேள தாளத்தோடு போய் வேலி அமைப்பார்கள். அவ்வளவுதான் நிலத்திற்கு சொந்தக்காரன் அதிர்ச்சியில் வீழ்ந்து போவான். போலீஸ் புகார், கோர்ட் என்று படியேறி... ‘மாவட்டத்திற்கு’ மனம் இருந்தால் கொஞ்சம் பணம் கொடுத்துவிடுவார்கள்.

சேலம் பகுதியில் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி குடும்பத்திற்கு நடந்த கதை நாட்டிற்கே தெரியும். கண்ணுக்கு அழகாக தென்னந்தோப்பு வைத்திருந்தார்கள். அதுதான் தவறாகிவிட்டது. அப்போதய அமைச்சரின் வாரிசு ஆசைப்பட்டது. அதற்காக படுகொலையும் நடந்தேறியது. தவிர மாம்பழ நகரின் முக்கிய பகுதி எல்லாம் அடாவடியாக ஆக்கரமிக்கப்பட்டதாகவே இருக்கிறதாம். இதில் அரசு நிலமும் அடக்கம் என்று பட்டியல் வாசிக்கிறது ‘விபரம் அறிந்த’ அதிகாரிகள் தரப்பு. இது எல்லாம் சின்ன சின்ன விவகாரங்கள்தான்.

அசைக்கவே முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் போன்று இருந்த மதுரை இளவரசரின் நில ஆக்கிரமிப்பும் கொஞ்ச நஞ்சமல்ல. பட்டியல் தயாராகிக் கொண்டு இருக்கிறது. தான் கல்லூரி கட்டி வாழ வேண்டும் என்பதற்காக எத்தனை குடும்பங்களின் வயிற்றில் அடித்திருக்கிறார்கள் என்ற பட்டியலும் எடுக்கப்பட்டு வருகிறது. இது நீதிக்கான காலம். நீதி கிடைக்க வேண்டிய ஆட்சி. இதுவரை தி.மு.கவின் வசம் உள்ள அரசு நிலங்களையும் மீட்டால் பல ஆயிரம் கோடிகள் அரசிடம் சொத்துக்களாகவே இருக்கும்.

கோயில் நிலம் என்று தனியே இருக்கிறது. சென்னையில் பிரபலமான இடங்கள் எல்லாம் இருக்கிறது. அந்த இடத்திற்கும் அப்படித்தான். சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் எல்லாம் ‘உடன் பிறப்புகளுக்கு’ ஒத்துழைக்க, எல்லாவிதமான ஆவணங்களும் தயார் ஆனது. அதற்கென்று திருவண்ணாமலையில் உள்ள பழைய கால சொத்து விபர ஆவணங்களை எல்லாம் தேடி எடுத்து, என்ன ஏது என்று பிரித்து மேய்வார்கள். அதற்கேற்ப யாரோ ஒருவர் விற்றதாய் ஆவணத்தைத் தயாரிப்பார்கள். அதை வைத்து வங்கியிலும் ‘கடன்!’ பெறுவார்கள். வங்கி கடன் இருக்கும்போதே அந்த நிலத்திற்கு வேறு ஒரு போலி நபரை அவர்களே செட்டப் செய்வார்கள். அந்த ‘செட்டப்’ ஆள் கையிலும் முறைப்படி ஆவணங்களை இருக்கும். திடீரென்று ஒருவர் வந்து என் அனுபவத்தில் இருந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டார் என்று முறைப்படி போலீஸ் கம்ப்ளைண்டும் செட்டப் ஆள் கொடுப்பார். வழக்கு நீதிமன்றத்திற்கும் போகும். கடைசியில் செட்டப் நபர் தோற்றுப் போவார். இது எல்லாமும் திட்டமிட்ட மோசடி நாடகம்தான் ஆட்சி அதிகாரம் என்ற திமிரில் இப்படி செய்து இடத்தை தனதாக்கிக் கொள்வார்கள். ‘அந்த நிலம் முறைப்படி வங்கி கடன் வாங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அவர் பெயரில் பட்டா இருக்கிறது. எனவே, அவர்தான் நிலத்திற்கு சொந்தக்காரர் என்று விஷயம் முடியும். அந்தவிதமாக அடையார், வில்லிவாக்கம், மயிலாப்பூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் நிலம் கொள்ளை போய் இருக்கிறது. அதன் மதிப்பு மட்டுமே பல ஆயிரம் கோடிகளை தாண்டும் என்கிறது விபரம் அறிந்த வட்டாரம்.

திருச்சியை சேர்ந்த முதியவர் பழனிச்சாமியை சந்தித்து பேசினோம்.

‘‘எங்களுக்கு பூர்வீகமான சொத்து ஐந்து ஏக்கர் நிலம்தான். அந்த நிலத்தின் மதிப்பு 30 கோடி ரூபாய் இதை என் தந்தையின் காலத்திலிருந்து அனுபவித்து வருகிறோம். 1923&ல் இருந்து எந்த வில்லங்கமும் இல்லாமல் வைத்திருக்கிறோம். ஆனால், கடந்த 4 வருடத்திற்கு முன்பு நான்கு பேர் இந்த நிலத்தில் தங்களுக்கு உரிமை இருப்பதாக கோர்ட்டில் வழக்கு போட்டார்கள். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. இப்போது ஆர்.டி.ஓ. விசாரணையில் இருக்கிறது. கடந்த இரண்டு வருடமாக நடக்கும் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு நான் தவறாமல் ஆஜர் ஆவேன். ஆனால், வழக்கு தொடர்ந்தவர் தரப்பிலிருந்து யாருமே வருவதில்லை. இதுவரை எந்த கோர்ட்டிலும் அவர்கள் தரப்பில் ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை.

அதிகார பலத்தைப் பயன்படுத்தி இந்த இடத்தை வளைத்து எங்களையும் விரட்டி விடலாம் என்று நினைக்கிறார்கள். புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் சத்தியமூர்த்தி, திருச்சி தி.மு.க. துணை செயலாளரும், துணை மேயருமான அன்பழகன் உதவியுடன் எங்களை இந்த இடத்தை விட்டு காலி செய்வதற்கு பல முயற்சிகள் நடந்தன.

அவர்களின் மிரட்டலுக்கு நான் பணியவில்லை. இதனால் என்னையும் என் மகன்கள் மூன்று பேரையும் கும்பல் அரிவாளால் வெட்டியது, ‘ஒழுங்கா நிலத்தை கொடுத்து விட்டு ஓடி போய்விடு, இல்லையென்றால் உன் உயிர் உனக்கு சொந்தமில்லை’ என்று மிரட்டினார்கள். அதற்கு பிறகும்கூட அவர்கள் மிரட்டல்களுக்கு நாங்கள் கட்டுப்படவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்த முடிவு செய்தனர். உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என் மூத்த மகனை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அடித்து இழுத்து கொண்டு போனார். போலீஸ் ஸ்டேஷனில் என் மகனிடம் பேசிய இன்ஸ்பெக்டர், ‘இரண்டரை கோடி ரூபாய் பணம் வாங்கி தருகிறேன் ஒழுங்கா கொடுக்கற பணத்தை வாங்கிக்கொண்டு ஓடி போ. இல்லையென்றால் உன் மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளுவோம் என மிரட்டினார்.

இது எங்கள் சொத்து இல்லையென்றால் எங்களுக்கு எதற்காக பணம் தர வேண்டும்? 30 கோடி ரூபாய் சொத்துக்கு இவர்கள் தருகிற தொகையை வாங்குவது விட ஜெயிலுக்கு போகலாம் என என் மகன் முடிவு செய்தான். பிறகு பல பிரிவுகளில் போய் வழக்கு போட்டு எங்களை ஜெயிலுக்கு அனுப்பி வைத்தனர். நாங்கள் ஏழு நாள் ஜெயிலில் இருந்தபோது பெரிய தடுப்புச் சுவர் கட்டிவிட்டனர். இப்போது இன்ஸ்பெக்டர், சப்&இன்ஸ்பெக்டர் மேல் மனித உரிமைகள் கமிஷனரிடம் புகார் செய்து இருக்கிறேன். நகரத்துக்கு நடுவில் இப்படி பெரிய சொத்து இருந்தால் அதிர்ஷ்டசாலி என எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், நான் வேதனையில் துடித்துக் கொண்டியிருக்கிறேன். என் உயிர் பிரிவதற்குள் இந்த பிரச்னையில் ஒரு நல்ல முடிவு ஏற்படும் என காத்து இருக்கிறேன்’’ என்கிறார்

இதே திருச்சியில் 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சியின் முக்கிய அமைச்சர் குடும்பத்தினர் ஒரு ஓட்டலை அபகரிக்கத் திட்டமிட்டனர் இதை அறிந்த அந்த ஓட்டல் அதிபர் அமைச்சர் குடும்பத்தின் திட்டத்தை விவரித்து பாதுகாப்பு அளிக்கக் கோரி, திருச்சி போலீஸ் கமிஷனர், தமிழக போலீஸ் டி.ஜி.பி மற்றும் முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். மேலும் அனைத்து முன்னிலை பத்திரிகைகளில் அவர் விளம்பரம் செய்தார்.

அந்த விளம்பரத்தில், ‘இந்த ஓட்டலை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். பொது வாழ்வில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் இந்த ஓட்டலை அபகரிக்க சட்ட விரோத செயல்களில் ஈடுபடக் கூடாது’ என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அதன் பிறகும் திருச்சி துணை மேயராக இருந்த அன்பழகன் ஆயுதம் தாங்கிய ரவுடி கும்பலுடன் அங்கு வந்தார். அவர் வந்த காரில் தி.மு.க. கொடி பறந்தது. ஓட்டல் அதிபருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸார் அந்த தி.மு.க. கும்பலுக்கு பாதுகாப்பு அளித்தனர். தி.மு.க. கொடியை பறக்க விட்டபடி, ரவுடிகள் படைகளுடன் வந்து குற்றத்தில் ஈடுபட்ட அந்த சம்பவத்தை நினைத்து ஒவ்வொரு தி.மு.க.வினரும் வெட்கி தலைகுனிய வேண்டும்.

குற்றத்தை செய்தது மட்டுமின்றி அந்த ஓட்டலை நடத்தி வந்த தொழிலதிபர் மீது போலியான எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை விவரித்து முதல்வர் அலுவலகத்தில் அந்த தொழிலதிபர் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்டதற்கான ரசீது கொடுக்கப்பட்டதே தவிர, எந்த நடவடிக்கையும் குற்றவாளிகள் மீது எடுக்கப்படவில்லை என்பதே மிகப் பெரிய வேதனையான விஷயம்.

பாதுகாப்பு கொடுக்க வேண்டிய இன்ஸ்பெக்டர் பாதிக்கப்பட்ட தொழிலதிபரிடம் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தை சந்தித்து சமாதானமாகப் போய்விடுங்கள் என்று கூறுகின்ற தொலைபேசி உரையாடல் பதிவு உள்பட பல முக்கிய ஆதாரங்களுடன் விரைவில் முதல்வர், உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோரிடம் புகாராக கொடுக்கும்படி அரசு தரப்பில் மேற்கண்ட தொழிலதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘இது மட்டுமா? இன்னும் நிறைய இருக்கு..’ என்பது போல் மற்றொரு சம்பவத்தையும் இங்கே நாம் பார்க்கலாம். ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் பெருந்துறை அருகே பணிக்கம்பாளையத்தில், ‘சூர்ய சக்ரா ஸ்பின்னிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற ஸ்பின்னிங் மில்லை கடந்த 1998&ம் ஆண்டு முதல் நடத்தி வந்தார். 10 ஏக்கரில் இந்த மில் அமைந்துள்ளது.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தைத் தொடர்ந்து, அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த நேருவின் தம்பி மணிவண்ணன், கோவை சஞ்சய் கிருஷ்ணன், அவினாசி ரவி ஆகியோர் மூலம் வாய்மொழியாக பேசியதன் அடிப்படையில், அந்த மில்லை அவர்கள் தற்காலிகமாக நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பின்னர் அவர்கள் லோகநாதன் கையெழுத்தை போலியாக தயாரித்து, அதன் அடிப்படையில் போலியான சில ஆவணப் பத்திரங்களில் அந்த கையெழுத்தைப் போட்டு அவரது சொத்துக்களை மோசடியாக அபகரிக்கத் திட்டமிட்டனர். அந்த மில்லை கொடுக்கும்படி பல வழிகளில் லோகநாதனை மிரட்டினர். மேலும், பெருந்துறை போலீசில் அவர் மீது பொய்யான புகாரைக் கொடுத்து, போலீசாரை வைத்தும் மிரட்டினர். வேறு வழியில்லாமல் அவரும் நீதியை பெறுவதற்கு, நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினார்.

இது தவிர இன்னொரு மோசடி ரகம் இருக்கிறது. ராஜாக்கள் நிலம். அப்போதைய குறுநில மன்னர்கள் வசம் இருந்ததை நல்லெண்ண அடிப்படையில் அரசுக்கு ஒப்படைத்திருந்தார்கள் அல்லது அரசே எடுத்துகொண்டது. அப்படியான இடம் இன்றும் ஆங்காங்கே காலியாக இருக்கிறது. உடன்பிறப்புகளின் ‘பவர்’ அங்கேயும் கண் பதித்தது. திடீரென்று அதற்கு வாரிசு முளைப்பார். இப்போது நான் நிலமற்ற எழையாக இருக்கின்றேன் என்று அரசுக்கு மனு போடுவார். ஆயிரமாயிரம் விண்ணப்பங்களை போட்டுவிட்டு மக்கள் காத்திருக்க, அப்படியான ‘வாரிசுகளின்’ மனுக்கள் மட்டும் றெக்கை கட்டி பறக்கும். எல்லாமும் முடிந்து நிலம் அவர் கைக்களுக்கு போகும். இப்படி பறிபோன நிலத்தின் மதிப்பு சென்னைக்குள் மட்டுமே பல ஆயிரம் கோடிகளை தாண்டும் என்கிறது விபரமறிந்த வட்டாரம்.

எல்லாவற்றையும் விட இந்த ரகம் இன்னும் சூப்பர். பிரபலமான இடத்தில் வீடோ நிலமோ இருக்கிறது. அது அந்த ஏரியா உடன்பிறப்புக்கு பிடித்துப் போகிறது என்றால் அவ்வளவுதான். யார் தடுத்தாலும் முடியாது.

ஒரு சின்ன உதாரணம். சென்னை பனகல் பார்க் அருகில் பெரிய இடம். 50 கோடிக்கு மேல் போகும். பெரியவர் ஒருவர் வைத்திருந்தார். அவருக்கு வாரிசுகள் இல்லை. கட்டிய மனைவியும் நோய்வாய்ப்பட்டிருந்தார். ‘பழம்’ தின்று கொட்டை போட்ட உடன்பிறப்பு டீம் அங்கே சென்றது. முதலில் பேச்சு வார்த்தை. பிறகு மிரட்டல், உருட்டல்... கடைசியாக என்ன நடந்ததோ தெரியவில்லை. அந்த இடம் நினைத்தபடியே கை மாறியது. பணம் கொடுத்தார்களா.. அல்லது அடித்து விரட்டினார்களா.. அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்றெல்லாம் யாரும் குறுக்கு விசாரணை செய்து விடாதீர்கள்.

அதே பகுதியில் வாரிசே இல்லாத இடமும் அப்படித்தான். அதன் மதிப்பும் 50 கோடிகளை தாண்டும். அங்கே காவலாளி ஒருவர் நிரந்தரமாக இருந்தார். எல்லா வீட்டையும் அவரே ஆண்டு அனுபவித்து வந்தார். அந்த ‘பழம்’ மனிதரின் டீம் சுற்று போட்டு கவனித்தது. என்ன ஏது என்று விசாரித்து. சொத்து யார் பெயரில் இருக்கிறது என பார்த்தது. அந்த காவலாளி மிரட்டப்பட்டார். கடைசியில் அவர் மீது ஒரு போலி பத்திரம் ரெடியானது. வாரிசே இல்லா இடத்திற்கு சொந்தக்காரர் அந்த காவலாளிதான்! பிறகு, அவரே இவர்களுக்கு முறைப்படி!!! நிலத்தை விற்பனை செய்கிறார். எல்லாமும் பேப்பர் ஒர்க்தான். முறையாக இருக்கும்படி செய்வார்கள். அந்த காவலாளிக்கு ஏதாவது கிடைத்ததா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. இப்போது அந்த இடத்தில் பெரிய கட்டிடம் கமர்ஷியல் காம்ப்ளக்ஸாக உயர்ந்துவிட்டது. இப்போது மதிப்பு நூறு கோடிகளில்..

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த காலி மனைகளுக்கும் அதேவித பட்டை நாமம்தான். ஒரு வாரிசு உருவாகியிருப்பார். மீண்டும் நிலத்தை கேட்பார். அது அவரது கைக்கே மாறியிருக்கும். இப்போது அங்கே பெரிய பெரிய கட்டிடங்கள் முளைத்திருக்கிறது. இதை மட்டும் கணக்கில் எடுத்து விசாரித்தாலே போதும். அரசக்கு பல ஆயிரம் கோடிகள் வருவாய் இருக்கும்.

மண் ஆசை. எண்ணிக்கையில் பலம் பொருந்திய துரியோதனன் அணியை வீழ்த்தியது. மண் ஆசை மாமன்னனையும் வீழ்த்தும் என்பதை மகாபாரதம் காட்டுகிறது. தி.மு.க-வின் நிலையும் அப்படித்தான். அது வீழ்ந்து போனதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று அந்த கட்சியின் முக்கிய நபர்கள் தலைமை ஆதரவுடன் காட்டிய மண் ஆசைதான்!

தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை

கடந்த ஆட்சியில் தி.மு.க.வினரின் அதிகார துஷ்பிரயோகத்தினால் அபகரிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று நீங்கள் அறிவித்துள்ளது பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மன நிம்மதியையும் மற்றவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வையும் கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் சொத்தை அபகரித்தவர்கள், தாங்கள் தவறு செய்வதற்காக தமிழகத்தின் பல இடங்களில் சட்டத்தைத் தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு சொத்தை அபகரிக்க வேண்டும் என்று திட்டமிட்டால் அந்த சொத்தின் உரிமையாளர் பிற நபர்களிடம் ஒப்பந்தம் ஏற்படுத்தியது போன்று முதலில் ஒரு போலி ஒப்பந்தம் தயாரிக்கிறார்கள். அந்த போலி ஒப்பந்தத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சொத்தின் உரிமையாளர் தங்களின் சுவாதீனத்திற்கு எவ்வகை இடையூறும் தரக்கூடாது என்று எக்ஸ் பார்ட்டி இடைக்காலத் தடை உத்தரவு வாங்குகின்றனர். அந்தத் தடை உத்தரவை வைத்துக்கொண்டு ரவுடிகளின் துணையோடு சொத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். இடத்தின் உரிமையாளர் இந்த அநீதிகளை வெளிக்கொண்டுவர முயற்சி செய்தால் போலீஸ் மூலமாக பொய் வழக்கினை தொடுத்து நிலத்தின் உரிமையாளர்களை சிறையில் அடைத்து விடுகின்றனர்.

ஆகையால், வரவிருக்கின்ற புதிய சட்டமானது கடந்த கால தி.மு.க.வினர் போலித் தகவல்களை கொடுத்து நீதிமன்றத்தினரையும் காவல் துறையினரையும் தங்களுக்கு சாதகமாகவும் பாதுகாப்பானதாகவும் பயன்படுத்திக் கொண்டதற்குத் தீர்வு காணும் வகையில் அமைய வேண்டும். மேலும் அவ்வாறு நீதிமன்றத்திலும், காவல் நிலையத்திலும் தவறான தகவல்களை கொடுத்தவர்கள் மீது அதற்காக கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த சட்டம் வழிவகை செய்ய வேண்டும்.

அவர்கள் சொத்துக்களை அபகரிக்கக் கையாண்ட மற்றொரு வழி, வங்கியில் அடமானத்தில் இருக்கின்ற சொத்துக்களை வங்கி ஏலத்திற்கு கொண்டுவரும்போது யாரையும் ஏலத்தில் கலந்து கொள்ள விடாமல் ஏலம் நடத்துகின்ற வங்கி அதிகாரிகளை தங்களுக்கு சாதகமாக மாற்றி மார்க்கெட் மதிப்பில் பாதி விலைக்கு அந்த சொத்துக்களை ஏலத்தில் எடுத்ததாக சான்றிதழையும் பெற்று பிறகு ரவுடிகளின் துணையுடனும், போலீஸ் துணையுடனும் சொத்துக்களை ஆக்கிரமித்தார்கள்.

வங்கியின் மூலமாக பெற்ற சொத்துக்களை வங்கி சட்டத்தின் மூலமாக விற்கப்படுவதால் அதையும் தங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். வங்கி சட்டம் பாராளுமன்றத்தினரால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் இருப்பதால் யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்கின்ற துணிச்சல் அவர்களுக்கு.

ஆனால், அந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி வங்கி அதிகாரிகளின் உடந்தையுடன் சொத்துக்களை பாதி விலைக்கு பெற்று சட்டத்தை மீறி ரவுடிகளின் துணையுடனும் போலீஸின் துணையுடனும் அபகரித்தவர்களின் மீது கிரிமினல் நடவடிக்கை தொடர்வதற்கும், அந்த சொத்துக்களை மீட்பதற்கு புதிய சட்டம் வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்!

நன்றி :
சூரியக்கதிர்-ஜூன்-01-15, 2011


8 கோடியை வாங்கித் தாங்க. திஹார் சிறையில் கதறிய சரத் குமார்.

கூடா நட்பு கேடாய் முடியும்’ என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சொன்னது யாருக்கு பொருந்துகிறதோ,இல்லையோ திகார் சிறையில் இருக்கும் ஷரத்குமாருக்கு மிகச்சரியாக பொருந்தும்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கனிமொழி, ஆ.ராசா இருவருக்கும் ஊழலில் என்ன பங்கு இருக்கிறது என்பதை சி.பி.ஐ. சொல்லி விட்டது. கனிமொழியோடு கைது செய்யப்பட்ட, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் ஷரத்குமாருக்கு என்ன தொடர்பு? யார் இந்த ஷரத்குமார்?
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷரத். இவரது தந்தை தொழிலதிபர். பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் செட்டிலாகி விட்டார்கள். சன் டி.வி. குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுடன் டான்பாஸ்கோ பள்ளி, லயோலா கல்லூரியில் படித்தவர் ஷரத்குமார். பிறகு, கலாநிதியுடன் அமெரிக்கா சென்று நிர்வாகவியல் படிப்பு படித்தவர். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும், ஸ்டெர்லிங் சிவசங்கரனின் சிவா கம்ப்யூட்டர்ஸ் கம்பெனியில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

தமிழ்நாட்டில் 92-ம் ஆண்டு சன் டி.வி. தொடங்கப்பட்ட போது, ஷரத்குமாரும் முதலீடு செய்தார். பிறகு 1996-ம் ஆண்டு, ஆந்திராவில் இருக்கும் ஜெமினி டி.வி.யில் முதலீடு செய்ய விரும்புகிறார் கலாநிதி.அங்கே ஜெமினி டி.வி.யை மனோகர் பிரசாத், கிரண் ரெட்டி ஆகியோர் நடத்தி வருகின்றனர். அதில் தலா 25 சதவிகித பங்குகள் கலாநிதி பெயரிலும், ஷரத்குமார் பெயரிலும் வாங்கப்பட்டது.

பென்ஸ் கார் வாங்குவதில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில், ஜெமினி டி.வி.யில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஷரத்குமார். 2002-ம் ஆண்டு அவர் வெளியேறிய போது, அவருக்கு கொடுக்க வேண்டிய தொகை 80 கோடி ரூபாய். அதை ஐந்தாண்டுகளில் தருவதாகவும், அந்த கால கட்டத்தில் வேறு டி.வி.தொழில் செய்யக் கூடாது என்றும் இரு தரப்பிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன் பின்னர், தான் உண்டு, தனது தொழில் உண்டு என்று கட்டடம் கட்டும் பணியில் இருந்த ஷரத்குமாரை, கலைஞர் டி.வி.க்கு அழைத்து வந்தவர் ஆற்காடு வீராசாமி. அதாவது, 2007-ம் ஆண்டு சன் டி.வி. சகோதரர்களுக்கும், அழகிரிக்கும் ஏற்பட்ட மோதலில் கலைஞர் டி.வி. தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு நிர்வாகியாக ஷரத்குமாரை அழைத்தனர். அவர் வர மறுக்கவே, கருணாநிதியே நேரடியாக போனில் அழைத்துப் பேசி, “நீ என் மகன் மாதிரி.உன்னை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டேன்’’ என்றார்.

அதன் பின்னரே, அந்த பதவிக்கு வர ஷரத்குமார் ஒப்புக்கொண்டார். இதுதான் அவர் கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனரான கதை.ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலமாக கலைஞர் டி.வி.க்கு 214கோடி ரூபாய் வந்த விவகாரத்துக்கும், ஷரத்குமாருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து சி.பி.ஐ.க்கும் தெரியும். கருணாநிதியின் குடும்பத்துக்கும் தெரியும்.
இந்த பணம் கைமாறும் போதே,ஷரத்குமார் உஷாராகி வெளியேற முற்பட்டார்.சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே ‘‘ட்ரோபிகல் புரூவரீஸ்’’என்ற பீர் தொழிற்சாலையைத் தொடங்க முடிவு செய்தார். அதற்கான உரிமத்தை அவர் கேட்ட ஒரு வாரத்தில் வழங்கப்பட்டது. மேலும், உரிமம் பெற்றதுமே, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அதை கருணாநிதி ஏற்கவில்லை.

சுமார் 150 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட அந்த பீர் தொழிற்சாலைக்கு, 75 கோடி ரூபாயை வங்கிக் கடனாக வாங்க ஷரத்குமார் விண்ணப்பம் செய்தார். பீர் தொழிற்சாலைக்கான கட்டடமும் வளரத்தொடங்கியது.இந்த நிலையில்தான், அவரை சி.பி.ஐ. கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறையில் இருக்கும் ஷரத்குமாரை சில நாட்களுக்கு முன்பாக,அவரது நண்பர்கள் சந்தித்தனர்.அப்போது அவர் கதறிய காட்சி,நண்பர்களை நிலைகுலையச் செய்து விட்டதாம்.

“நான் என்ன தவறு செய்தேன். இவர்களுடன் கூட்டு சேர்ந்த பாவத்தைத் தவிர... கலைஞர் டி.வி. நிர்வாகியாக அந்த அலுவலகத்தில் நான் செலவழித்த நாட்கள் மொத்தம் பத்து நாட்கள் கூட இல்லை.தினமும் எல்லா வேலைகளையும், உறவினர்கள் இரண்டுபேர் தான் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் யாரென்று கலைஞர் டி.வி.யில் வேலை பார்த்த அத்தனை ஊழியர்களுக்கும் தெரியும்.

சிறையில் பணம் தண்ணீராய் கரைகிறது. இங்கே சிறையில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இது தவிர, இங்கே இருக்கும் என் மனைவிக்கு தினமும் செலவு, கோர்ட் செலவு என்று தினமும் ஒரு லட்சத்துக்கு மேல் செலவாகிக் கொண்டிருக்கிறது. என்னுடைய வங்கிக் கணக்கை சி.பி.ஐ. முடக்கி விட்டது. என் மீது கிரிமினல் வழக்கு போட்டிருப்பதால், பீர் தொழிற்சாலையின் உரிமம் ரத்தாகி விட்டது. மேலும் அதற்காக வர இருந்த வங்கிக் கடனும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். நான் பணத்துக்கு எங்கே போவேன். பீர் தொழிற்சாலை லைசென்ஸ் வாங்கியபோது, கட்சி நிதி என்று என்னிடம் ரூ.8 கோடி வாங்கினார்கள். இப்போது அரசு லைசென்ஸை ரத்து செய்துவிட்டது. நான் கொடுத்த ரூ.8 கோடியையாவது தரச் சொல்லுங்கள்.

இதுவரை என்னைச் சந்தித்த மூன்று மத்திய அமைச்சர்களிடம்,என் நிலையைச் சொல்லிவிட்டேன்.கலைஞரிடம் யாருமே அதை சொல்லவில்லை. ஆனால், ராசாவுக்கு பணம் வருகிறது. கனிமொழிக்கும் தனியாக பணம் செலவு செய்யப்படுகிறது. நான் இங்கே இருப்பதை அவர்கள் சுத்தமாக மறந்து விட்டார்கள். இப்படியே போனால், நான் கோர்ட்டில் நடந்த உண்மைகளைச் சொல்லிவிட்டு, சாட்சியாக வெளியேற வேண்டியதுதான்.
எனக்கு நீங்கள் பத்து லட்சம் ரூபாய் கொடுங்கள். நான் பிறகு தருகிறேன். அதை டெல்லியில் என் மனைவியிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்’’ என்று நண்பர்களின் கைகளை பிடித்துக் கொண்டு, கதறி அழுதிருக்கிறார் ஷரத்குமார் உடனே, நண்பர்களும் கண்ணீரில் கரைய, வெளியே வந்ததும் அவர்களிடம் இருந்த மூன்று லட்சத்தைக் கொடுத்துவிட்டு வந்தார்களாம்.

‘‘கனிமொழிக்கும் கலைஞர் டி.வி. நிர்வாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை, ஷரத்குமார்தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்’’ என கனிமொழியின் வழக்கறிஞர் கோர்ட்டில் வாதாடியதை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ளவும்.கருணாநிதி,குடும்பத்திற்காய் யாரை வேண்டுமானாலும் காவு கொடுப்பார் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Wednesday, June 22, 2011

எப்படி இருக்க வேண்டும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி? அரசு கண்டிப்பு

தமிழக அரசு இலவசமாக வழங்கவிருக்கும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை மார்க்கெட்டில் உள்ள பொருட்களை விட உயர்தரத்திலும், இரண்டு ஆண்டு வாரன்டியுடன், அனைத்து பகுதிகளிலும் சேவை மையங்கள் கொண்டதாக இருக்க வேண்டுமென, தமிழக அரசு கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச மிக்சி, மின்விசிறி மற்றும் கிரைண்டர் ஆகியவை, வரும் செப்டம்பர் முதல் வழங்கப்பட உள்ளன. இதற்காக மிக்சி, கிரைண்டர், மேஜை மின்விசிறி சப்ளை செய்யும் நிறுவனங்களை டெண்டர் மூலம் தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டெண்டர் விண்ணப்பங்கள், ஜூலை 11 வரை பெறப்படுகின்றன. அன்றைக்கே டெண்டர் திறக்கப்பட்டு, நிறுவனங்கள் முடிவாகும். டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு, தரம் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் சிறப்பு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், டெல்லி, மும்பை, சென்னை, புனே, கோவை உட்பட இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து, 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. பிரபலமான மகாராஜா, ப்ரீத்தி, ப்ரெஸ்டீஜ், பட்டர்பிளை, காஞ்சன், கென்ஸ்டார் ஆகிய நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் வீரசண்முகமணி, வணிகப்பிரிவு பொதுமேலாளர் கோதண்டராமன், வணிகப்பிரிவு முதுநிலை மேலாளர் பாலகிருஷ்ணன், தரக்கட்டுப்பாட்டு பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விளக்கமளித்தனர். டெண்டருக்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனத்தினர், தரம் குறித்து பலவித சந்தேகங்களை எழுப்பினர்.


இதற்கு, மேலாண் இயக்குனர் வீரசண்முகமணி பதில் கூறியதாவது: டெண்டர் அறிவிப்பில் அனைத்து தகவல்களும் உள்ளன. தற்போது மார்க்கெட்டில் மக்கள் விரும்பும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை விட அதிக தரமாக இருக்க வேண்டும். அதே தரத்தில் கூட இருக்கலாம்; ஆனால், குறைந்த தரத்தை நிச்சயம் அனுமதிக்க மாட்டோம். குறைந்தது இரண்டு ஆண்டுகள், "வாரன்டி' (உத்தரவாதம்) தர வேண்டும். அனைத்து பிளாக் (பகுதி) வாரியாக, "சர்வீஸ் சென்டர்கள்' இருக்க வேண்டும். ஏற்கனவே இருந்தால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். சேவை மையங்கள் விஷயத்தில் சமரசம் செய்ய முடியாது. முறையான அனுமதி பெற்ற தொழில் நிறுவனங்களாக இருக்க வேண்டும். அதற்கான அனைத்து சான்றிதழ்களையும் தாக்கல் செய்ய வேண்டும். ஐ.எஸ்.எஸ்., தர அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்.ஏ.பி.சி., மற்றும் பி.ஏ.எஸ்., "லேப்'களில் சோதனை செய்யப்பட்டு, தரச்சான்று பெற்றிருத்தல் மிக அவசியம். உற்பத்தியாகும் ஒவ்வொரு பொருளும், லேப்களில் சோதிக்கப்பட்டு, தர முத்திரை சான்றுடன் மட்டுமே பெறப்படும்.


தேர்வாகும் நிறுவனம், ஆண்டுக்கு 30 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்திருக்க வேண்டும். ஆண்டுக்கு குறைந்தது இரண்டு லட்சம் பொருட்களை தயாரித்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வாகும் நிறுவனங்கள் ஒவ்வொன்றும், ஆண்டுக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சம் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி சப்ளை செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குள் 1.83 கோடி பொருட்கள் தேவையுள்ளது. தர உறுதி மற்றும் அனைத்து வித அங்கீகார சான்றுகள் வைத்திருப்போருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். "மிக்சி ஜார்'கள் ஒரு லிட்டரில் ஒன்றும், 400 மில்லி லிட்டரில் ஒன்றும் தர வேண்டும். துருப்பிடிக்காத "ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' பயன்படுத்த வேண்டும். "ஜார்' அடிப்பகுதி அலுமினியமா? பிளாஸ்டிக்கா என்பதை தொழில்நுட்ப வல்லுனர்கள் முடிவு செய்வர். மிக்சி மூடிகளில், உடையும் வகை பாலி புரொப்பலின் பயன்படுத்தாமல், புல்லட் புரூப் பொருட்களில் பயன்படும் உடையாத பாலி கார்பொனைட்டாக இருக்க வேண்டும். மோட்டார்கள் 550 வாட் திறனிலும் இருக்க வேண்டும். பொருட்களை வழங்கும் போது அவை சேதமாகாமல் இருக்க, பெட்டிகளில் தெர்மோகோல் வைத்து பேக்கிங் செய்ய வேண்டும். பொருட்களில் நிறுவன பெயர்கள் போடுவதா அல்லது வேறு எந்த தகவல் இருக்க வேண்டும் என்பதை அரசு முடிவு செய்யும்.


கிரைண்டர்களில் தரமான கல் பயன்படுத்த வேண்டும். அதிலும், மோட்டார்கள் அதிக வெப்பத்தை தாங்கவல்ல காயில் கொண்டதாக இருக்க வேண்டும். இரண்டு லிட்டர் வகை வெட் கிரைண்டர்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேஜை மின்விசிறி இறக்கைகள், தரமான நைலான் பிளாஸ்டிக் கொண்டதாக இருக்க வேண்டும். பட்டன்கள் உடையாத வகையிலும், சரியான சுழற்சி தரும் வகையிலும், காயில் போகாததாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கண்டிப்பான விதிகளை தெரிவித்தார். முதற்கட்டமாக, 600 கோடி ரூபாயில் 25 லட்சம் டேபிள் டாப் வெட்கிரைண்டர்கள், 250 கோடியில் 25 லட்சம் மேஜை மின்விசிறிகள் மற்றும் 500 கோடியில் 25 லட்சம் மிக்சிகள் வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


தரம்... நிரந்தரம்: அரசு தரவிருக்கும் இலவச மிக்சி, மின்விசிறி, கிரைண்டர்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென அரசு விதித்துள்ள நிபந்தனைகள்: