Monday, October 31, 2011

சி மொழி தந்த டென்னிஸ் ரிட்சி மறைந்தார்!!!

சி மொழி தந்த டென்னிஸ் ரிட்சி மறைந்தார்!!!

கணினி உலகில் சி என்னும் மொழியை உருவாக்கி நவீனகால கணினி பயன்பாட்டிற்கு அடித்தளம் அமைத்த DENNIS MAC ALISTAIR RITCHIE அக்டோபர் 8 காலமானார் ஆனால் அவர் இறந்தது அவர் நண்பர்களால் சென்ற வாரம் தான் அறிவிக்கப்பட்டது.ஸ்டீவ் ஜாவ்ஸ் மறைந்த சில நாட்களில் இவரும் மறைந்தார் இவர் நிண்ட நாட்களாய் ஆண்மை சுரப்பி புற்றுநோய் மற்றும் இதய நோயால் பாதிக்கபட்டு இருந்தார்.
நவீன கணினிக்கு பல கட்டமைப்பை தந்த பெல்லேப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அலிஸ்டர் ரிட்சி மகன் டென்னிஸ் ரிட்சி அதே நிறுவனத்தில் இணைத்து சி மொழியை உருவாக்கினார்.இதை தொடர்ந்து சி++ மற்றும் சி ஷார்ப் போன்றவற்றை உருவாக்கினார். OPERATING SYSTEM மற்றும் PROGRAMகள் APPLICATION சி மொழியை அடிப்படையாக கொண்டு தயாரிக்கபடுகிறது.JAVA,JAVA SCRIPT,PYTHON,PERL AND PHP போன்றவை இதற்கு உதாரணம் ஆகும்.விண்டோஸ் ஒபெரடிங் சிஸ்டம்க்கு முன் பயன்படுத்தப்பட்டு வந்த UNIX உருவாக்கியவர் இவரும் இவருடைய நண்பர் கென் தாம்ப்சன், பிறையன் கேர்னிகன், டக்லசு மெக்கில்ராய், ஜோ ஒசானா ஆவார்கள்.இன்றும் UNIX பெரிய NETWORK பயன்படுத்தபடுகிறது.இன்றைய பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் OPERATING SYSTEM அனைத்தும் ( GOOGLE ANDROID, APPLE MAC OS, IOS, JAVASCRIPT) C மற்றும் UNIX சிஸ்டம் அடிபடையில உருவானது.இவரின் சி மொழி கண்டுபிடிபுக்கு அமெரிக்க அரசு 1999ல் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருதினை வழங்கியது. 1983ல் டுரிங் விருதும்.1990ல் IEEE வழங்கும் HAMMING MEDAL வாங்கினர்.2007ம் ஆண்டு தன்னுடைய பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.அவரின் கண்டு பிடிப்புகள் இன்னும் பல புதிய கண்டுபிடிர்புக்கு உதவி செய்யும்.

ஆப்பிள் நிறுவன LOGOவில் ஸ்டீவ் :-

ஸ்டீவ் ஜாப்ஸ் இன் மறைவுக்கு பின்னர் ஆப்பிள் நிறுவனம் தன் நிறுவனத்தின் முத்திரையில் ஸ்டீவ்ன் முகத்தினை பொறித்து உள்ளார்கள்.

பெங்களூரில் பயலலிதா!

66கோடி - காலாவதியான சென்னை கார்ப்பரேஷனின் சில கவுன்சிலர்களைக் கேட்டால் 'பிஸ் கோத்து’ காசு. இது இன்றைக்கு. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்னால் அது மலை அளவுப் பணம். அதுவும், 'எனக்கு ஒரே ஒரு ரூபாய் சம்பளம் போதும்’ என்று பகிரங்கமாக அறிவித்திருந்த ஜெயலலிதாவிடம் இருந்தது என்று அன்றைய அரசு வழக்குப் பதிவு செய்தது.

1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி காலையில் போயஸ் கார்டன் வீட்டுக்குள் போலீஸை அனுப்பினார் கருணாநிதி. 'சாமி கும்பிட்டுட்டு வர்றேன்’ என்று பவ்யமாகக் கேட்ட ஜெயலலிதா வுக்கு 'மனித உரிமைகள்’ அடிப்படையில் அனுமதி கொடுத்தார். சென்னை மத்திய சிறைச்சாலையில் 21 நாட்கள் அடைக்கப்பட்ட ஜெயலலிதா ஜாமீன் வாங்கி வெளியில் வந்தார். அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் (இதில் கணிசமானவர்கள் இப்போது கருணாநிதிக்குப் பக்கத்தில் இருக்கிறார் கள்!) செய்த ஊழல் குறித்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா, தினமும் அந்த நீதிமன்றப் படியை மிதித்தார். (அவருக்காக அப்போது பல கதைகள் சொல்லி வாதாடிய வக்கீல் ஜோதியும் இப்போது கருணாநிதியுடன்!) வழக்குகள், தீர்ப்பு கள், தண்டனைகள், மேல்முறையீடுகள், இரண்டு ஆண்டு சிறை, டான்சி வழக்கில் மூன்று ஆண்டு சிறை, பிறகு விடுவிப்பு என... இந்தச் சமாசாரங்களைத் தொகுத்தாலே, 'அலகாபாத் லா ஜர்னலை’விடப் பெரிதாகிவிடும். ஜோசியம் பார்த்துப் பார்த்து முழு ஜோசியர் ஆனதைப்போல, வக்கீல்களிடம் பேசிப் பேசியே முழு வக்கீலாக முதல்வர் ஆகிவிட்டார்!
இதுவரை 13 வழக்குகளில் விடுபட்டு விட்ட ஜெயலலிதாவுக்குச் சிக்கல் 14-வது வழக்கான சொத்துக் குவிப்பில் வந்தது. 14-வது ஆண்டில் வந்தும் இருக்கிறது. எண் கணித ஜோசியர்கள் இதற்கு என்ன சொல்வார்களோ?
10 ஆயிரம் சேலைகள், பல நூறு வாட்ச்சுகள், செருப்புகள், வெள்ளிப் பாத்திரங்கள், நகைக் கூடங்கள்... அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மதிப்பை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி நல்லம நாயுடு 66 கோடி என்று மதிப்பிட்டார். சிறை வைக்கப்பட்ட ஜெயலலிதாவிடம் விசாரணை செய்தவரும் அவர்தான்.
'தங்க நகைகள், வெள்ளிச் சாமான்கள் எப்படிக் கிடைத்தன?’ என்று நல்லம நாயுடு கேட்க... 'கொஞ்ச நகைகள் மைசூர் மகா ராஜா என் தாத்தாவுக்குக் கொடுத் தது. பிறகு, எம்.ஜி.ஆர். எனக்குக் கொடுத்தார். எனக்குப் பிறந்தநாள் அன்பளிப்பாகக் கட்சித் தொண்டர் கள் கொடுத்தார்கள்’ என்று ஜெய லலிதா சொன்னதாகச் சொல்வார் கள்.
சென்னை மத்திய சிறைக்குள் வைத்து 14 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த அதே கேள்வி - பதில் வைபோகம் கடந்த வாரம் கர்நாடக மாநிலம் பரப்பனஹள்ளி அக்ர ஹாரா சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அந்த இடத்துக்குப் போகக் கூடாது என்பதற்காக ஜெயலலிதா தரப்பு செய்த இழுத்தடிப்புகள் முழு நீள மெகா சீரியலுக்கு உரியவை.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம், டெல்லி உச்ச நீதிமன்றம் என வாய்தா மேல் வாய்தா கேட்டு வழக்கை உருளைக்கிழங்காக மாற்றி உருட்டி விளையாடியதைக் கூட்டிப் பார்த்தால், 109 தடவைகள். ஜாமீன் கொடுப்பதும் வாய்தா வாங்குவதும் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்டம் வழங்கும் சலுகைகள்தானே தவிர, தப்பிப்பதற்கான சந்துபொந்துகள் அல்ல. 75 ஆயிரம் பக்கக் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 42 சாட்சிகள் விசாரித்து முடிந்த நிலையில்... ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வர் மட்டும் எல்லாச் சட்டங்களையும் மீறிய மனிதர்களாக இத்தனை ஆண்டுகள் வலம் வர முடிந்ததே சட்ட நடைமுறைகளின் துரதிஷ்டம்தான்!
வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதா, ஆறு மாதங்கள் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. முதல் கூட்டமாக சேலத்தில் கலந்துகொண்டபோது, ''பொய் வழக்குகள் போட்டுவிட்டதால் மட்டுமே என்னைக் குற்றவாளி என்று கூறும் கருணாநிதியே, ஒரு நிரூபிக்கப்பட்ட குற்றவாளி. 'விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் கருணாநிதி’ என்று சர்க்காரியா கமிஷனே வரிவரியாக எழுதிவிட்டது. இப்படிப்பட்ட இந்த யோக்கியவாதிதான் பொய்யாய்ப் பல கதைகளைப் புனைந்து வீட்டுக்குள் இருந்து என் நகைகளை எடுத்துச் சென்று கோர்ட்டில் கொடுத்துள்ளார். இத்தனை லட்சோபலட்சமான மக்களே எனக்கு அணிகலன்களாக இருக் கும்போது தங்க நகை எதற்கு? இனி அதை வாழ்நாளில் அணியவே மாட்டேன். கோர்ட் மூலம் என் நகைகளை மீட்டு, நான் நிரபராதி என்பதை நிரூபித்துவிட்டு அவற்றை ஏழைக் குழந்தைகளின் நலனுக்குச் செலவு செய்வேன்’ என்று பகிரங்கமாக அறிவித்தார். இதன்படி பார்த்தால், தன்னை நிரபராதியாக அறிவிக்க ஜெயலலிதா அவசரப்பட்டு இருக்கத்தான் வேண்டும். ஆனால், எதிர்மறையாக தாமதப்படுத்தினார்!
அது பொதுக்கூட்ட மேடை. சவால்விட்டார். ஆனால், இது சட்ட மேடை. அதற்குப் பணிந்தும், பயந்தும் போனவர்களில் - குற்றவாளிகள்கூடத் தப்பி இருக்கலாம். சட்டாம்பிள்ளைகள் மாட்டிக்கொண்டு முழித்தார்கள். ஜெயலலிதாவே டான்சி வழக்கில் அப்படி மாட்டியவர்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் ஒரு ஷரத்து, அவரைச் சறுக்கி ராஜினாமா செய்யவைத்தது. அந்தச் சட்டத்தின்படி 'மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர் தேர்தலில் நிற்க முடியாது’!
பதவி விலகியவர் உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார். ''அரசுப் பணியில் இருப்பவர் அரசு நிலத்தை வாங்கியது தவறு தான். அதை அவர் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். செய்த தவறுக்கு அவரே மனசாட்சிப்படி பிராயச்சித்தம் தேடிக் கொள்ள வேண்டும்'' என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தார்கள்.
மூன்று ஆண்டு சிறைத் தண்டனையில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்த தீர்ப்பே தவிர, அது நிரபராதி என்று விடுதலை செய்த தீர்ப்பு அல்ல. பெங்களூரூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனையா என்ன தீர்ப்பு சொல்லக் காத்திருக்கிறார் எனத் தெரிய வில்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலம் என்பது, வழக்கின் இறுதிக் கட்டம்தான். தீர்ப்பு சொல்லக் குறுகிய காலமே இருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் வெற்றிச் செய்தி 21-ம் தேதி குவிந்தது. அதற்கு முந்தைய நாள் திருச்சி இடைத் தேர்தலின் வெற்றிச் செய்தி. ஆனால், எந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியாமல் கர்நாடகாவுக்குள் அவரது கார் சுற்றியது. மனசு இன்னும் வேகமாகச் சுற்றி இருக்கும்.
'கோர்ட் மூலம் என் நகைகளை மீட்டு நான் நிரபராதி என்பதை நிரூபித்துவிட்டு...’ என்ற வாசகங்கள் அவரது ஞாபகங்களுக்குள் வந்து போயிருக்குமா?

ஆனந்த விகடன்

மிஸ்டர் கழுகு: மேடம் பேர் சொல்லும் போன்!

சிலுசிலுவென மழைக் காற்றில் வந்து இறங்கி, சிலுப்பிக்கொண்டு சிரித்த முகமாக அமர்ந்தார் கழுகார்! ''தீபாவளி எப்படி?'' என்றோம்.''நாளும் கிழமையும் நமக்கு வேலைதானே!'' என்று ஆரம்பித்தார் கழுகார்.
''தீபாவளிக்கு முந்தைய நாள் செவ்வாய்க்கிழமை அன்று
மாநகராட்சியின் புதிய மேயர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. சென்னை மேயராக சைதை துரைசாமி பதவி ஏற்கும் விழாவுக்கு முதல்வரே நேரில் வந்ததுதான் அனைவரும் எதிர்பாராத ஆச்சர்யம்! முந்தைய நாள் திங்கள் கிழமை கார்டனில் இருந்து துரைசாமிக்கு போன். அவசர அவசரமாகக் கிளம்பினார். அப்போதுதான் முதல்வரும் பதவி ஏற்பு நிகழ்வுக்கு வருகிறார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது!''
''ஏன் இந்த திடீர் ஆர்வம்?’
''சென்னை மாநகராட்சியை முதன் முதலாகத் தன் தலைமையிலான அ.தி.மு.க. கைப்பற்றியதை, தனது நெடுநாள் லட்சியங்களில் ஒன்று நிறைவேறியதாக நினைக்கிறாராம் ஜெயலலிதா. 40-வது ஆண்டு விழாவைக் கொண்டாடி வரும் அ.தி.மு.க. இது வரை ஆறு முறை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளது. ஆனால், ஒரு முறைகூட சென்னை மேயர் பதவியை அடைந்தது இல்லை. முதன் முதலாக ரிப்பன் பில்டிங்கைக் கைப்பற்றியது சந்தோஷத்துக்கு உரிய விஷயம்தானே அவர்களுக்கு! முதலில் சிம்பிள் விழாவாகத்தான் திட்டம் இட்டனர். விழாவில் ஜெயலலிதாவும் பங்கேற்பதாக முடிவானதும்தான்... புதிய தார் ரோடு, வண்ணப் பூச்சு, பேனர்கள், விருந்து, பத்திரிகையில் முழுப் பக்க விளம்பரம், அலங்காரம், டிஜிட்டல் ஸ்கிரீன்கள் என்று ஜெட் வேகத்தில் விழா ஏற்பாடுகள் தடபுடல் ஆகின.''
''முதல்வர் பதவி ஏற்பு போல இருந்தது என்று சொல் லும்!''
''காலையில் இருந்து மழை கொட்டித் தீர்த்ததால், ரிப்பன் மாளிகை வளாகத்தைச் சுற்றிலும் கணுக்காலுக்கு மேல் வெள்ளம். ஜெயலலிதா வந்த பாதையில் மட்டும் தண்ணீரை உடனே வெளியேற்றினார்கள். நான்கு புறமும் வெள்ளநீர் சூழ தீவுக்குள் நடந்தது பதவியேற்பு. கம்பீரமான மேயர் நாற்காலிக்கு பக்கத்தில் ஜெயலலிதா எளிமையான குஷன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தது கவனிக்கத்தக்கதாக இருந்தது. இன்னொரு சுவாரஸ்யம்...''
''அதையும் சொல்லும்!''
''அன்றைய தினம் முதல்வரின் முகத்தில் சந்தோஷ ரேகைகள் அதிகமாகப் படர்ந்திருந்தன. செல்வம் என்ற கவுன்சிலர் 'அம்மாவின் ஆசியுடன் உறுதி மொழிகிறேன்’ என்றபோது, ஜெயலலிதா குறுக்கிட்டு, 'கடவுள் அறிய’ என்று சொல்லச் சொன்னார். நாகம்மாள் என்ற கவுன்சிலர் 'சட்ட முறைப்படி’ என்பதற்கு பதிலாக 'சட்டைமுறைப்படி’ என்று சொல்ல ஜெயலலிதா வாய்கொள்ளாமல் சிரித்தார்!''
''சில கவுன்சிலர்களுக்கு இந்த உறுதிமொழிப் பத்திரத்தைக் கூடப் படிக்கத் தெரியவில்லை என்பதை நினைத்தால், சென்னை மக்கள் பாவம்தான்!''
''பார்ப்போம்!''
''நெல்லை மாநகர அ.தி.மு.க-வின் உள்கட்சி விவகாரம், மேயர் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது அப்பட்டமாக அம்பலத்துக்கு வந்துவிட்டது. மாநகராட்சி மேயராக விஜிலா சத்யானந்த் பதவி ஏற்கும் நிகழ்ச்சி 25-ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. பி.ஹெச்.பாண்டியன் உள்ளிட்ட கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் மாநகராட்சிக் கூட்ட அரங்கத்துக்குள் நுழைந்தனர். ஆனால், மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான செந்தூர் பாண் டியன் மற்றும் மாநகரச் செயலாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வந்து சேரவில்லை. பி.ஹெச்.பாண்டியன் கூட்ட அரங்கத்தில் இருந்ததால், அவரை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்க்க இருவரும் காலதாமதம் செய்தனர். இதனால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய பின்னர் அரை மணி நேரமாகப் பதவி ஏற்காமல் காத்திருந்தார் விஜிலா.''
''மந்திரியும் மாஜியும் எப்போதுதான் வந்தார்கள்?''
''தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டபடியே இருந்த விஜிலாவின் உதவியாளரை அழைத்த பாண்டியன், 'இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்கணும்?’ எனக் காட்டம் காட்டியதும் பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்கியது. மேயர் பொறுப்பு ஏற்றதும் விறுவிறுவென வெளியேறினார் பாண்டியன். அதற் காகவே காத்திருந்தது போல செந்தூர் பாண்டியனும் நயினார் நாகேந்திரனும் உள்ளே நுழைந்தனர்.
நிகழ்ச்சிகள் முடிந்ததைக் கண்டதும் ஆத்திரம் அடைந்த நாகேந்திரன், 'அமைச்சர் வருவதற்குள் என்ன அவசரம்? கொஞ்ச நேரம் காத்திருக்க முடியாதா?’ என்றார் எரிச்சலுடன். அமைச்சர் செந்தூர் பாண்டியன், '11 மணியில் இருந்து 2 மணி வரைக்கும் பதவி ஏற்கலாம்னு முதல்வரே சொல்லி இருக்காங்க. அப்படி இருக்கையில் ஏன் இந்த அவசரம்?’ எனக் கேட்க, தவித்துப்போன விஜிலா அவர்களை சமாதானப்படுத்தினார்.
கவுன்சிலர்களும் கட்சியினரும், 'இவங்களோட கோஷ்டி சண்டையை இப்படிப் பொது இடத்திலா காட்டுவது?’ என ஆதங்கப்பட்டனர்!'' என்று சொல்லிவிட்டு அடுத்த சப்ஜெக்ட்டுக்கு மாறினார் கழுகார்!
''கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க இருப்பது ஜெயலலிதாவை அப்செட் ஆக்கி உள்ளதாகச் சொல்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். 'கருணாநிதி டெல்லி சென்று சோனியாவைப் பார்க்கிறார். மறுநாளே கனிமொழியின் ஜாமீன் மனுவை பெரிய எதிர்ப்பு இல்லாமல் ஓகே செய்கிறது சி.பி.ஐ. இப்படியே போனால் ஸ்பெக்ட்ரம் வழக்கே நீர்த்துப்போனாலும் போய்விடும். முதலில் கனிமொழியை விட்டுவிட்டு அடுத்த ஒரு மாதம் கழித்து ஆ.ராசாவை வெளியேவிட்டால், வழக்கே கோவிந்தாதான்!’ என்ற ரீதியில் முதல்வர் சிந்திக்கி றாராம்!''
''அதற்காக...?''
''அதற்காக போலீஸ் வட்டாரத்தில் ரகசியமாக சில செய்திப் பரிவர்த்தனைகள் நடக்கின்றன. ஜாமீன் பெற்று சென்னை வந்து இறங்கும் கனிமொழியைத் தமிழக போலீஸ் வளையத்தில் சிக்கவைப்பதற்கான முயற்சிகள்தான் அது!''
''அவர் மீதுதான் இங்கு எந்த வழக்கும் இல்லையே?''
''இதுவரை இல்லை! ஆனால், எடுக்க எவ்வளவு நேரம் ஆகும்? சென்னை சங்கமத்தை மையம்கொண்டதாக அது இருக்கலாம் என்று இப்போதே சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். அந்தக் கலைவிழாவை நடத்துவதற்கு தமிழக அரசின் சுற்றுலாத் துறை பெரும் அளவில் உதவிகள் செய்துள்ளது. இவை வெளிப்படையாக நடந்தவைதான். அந்தக் கணக்கு வழக்குகளை மையமாக வைத்ததாகப் புது வழக்கு அமையலாம் என்கிறார்கள்.''
''கனிமொழி மீது ஜெயலலிதாவுக்கு என்ன கோபம்?''
''அவர் மீதான கோபம் என்பதைவிட மத்திய அரசு மீதான கோபமாகத்தான் பார்க்க வேண்டும். அப்படி ஒரு கைது நடவடிக்கையைச் செய்தால், அது கனிமொழிக்கு அரசியல்ரீதியான பாப்புலாரிட்டியைக் கொடுக் கலாமோ என்ற ரீதியிலும் யோசனை நடக்கிறதாம்!'' என்ற கழுகார்...
''சினிமாப் புள்ளிகள் வட்டாரத்தில் ரகசியமாகப் பேசப்படும் ஒரு செய்தி யில் நான் கேள்விப்பட்டதை மட்டும் சொல்கிறேன்!'' என்று பீடிகை போட்டார்!
''திரைப்பட இயக்குநர் ஒருவருக்குக் கடந்த வாரத்தில் ஒருவர் போன் செய்திருக்கிறார். 'நாங்கள் ஒரே நேரத்தில் 15 படங்களைத் தயாரிக்க இருக்கிறோம். அதில் நீங்கள் ஒரு படம் டைரக்ட் செய்ய வேண்டும்’ என்று கேட்டார். இந்த இயக்குநரும் ஒப்புக்கொண்டார். 'ஒரே நேரத்தில் 15 படம் பண்ணப்போறதா சொல்றீங்களே? உங்க தயாரிப்பாளர் யாரு?’ என்று கேட்கிறார் இயக்குநர். தயங்கித் தயங்கி அந்த மனிதர், 'அவங்கதான்... மேடத்தோட மகள்!’ என்று சொல்லி இருக்கிறார்.''
''மேடம்னா யாரு?''
'' 'எல்லாம் நம்ம மேடம் டாட்டர்தான். அவங்க அமெரிக்காவுல இருக்காங்க. அவங்கதான் இனிமேல் படத் தயாரிப்புல இறங்கப் போறாங்க’ என்று அந்த மனிதர் சொல்லி இருக்கிறார். இதற்கு மேல் அந்த விஷயத்தைத் தோண்டிக் கேட்க, அந்த இயக்குநருக்கும் பயமாக இருக்கவே... போனை வைத்துவிட்டார். இதே மாதிரியான போன் இன்னொரு ஹீரோ- டைரக்டருக்கும் போயிருக்கிறது. 'மேடம் மகள் படம் பண்ணப்போகிறார்’ என்று அப்போதும் சொல்லப்பட்டுள்ளது...''
''கொஞ்சமும் நம்பும்படியாக இல்லையே?''
''மீதியும் சொல்லி முடிக்கிறேன்! குடும்பச் சர்ச்சையில் சிக்கி இருக்கும் டான்ஸ் டைரக்ட ருக்கும் இதேபோல் போன் போனது. அவரிடம் அந்தப் பெண்ணே நேரில் பேசினாராம். மிக மிகச் சுத்தமான தமிழில் ஓர் ஆங்கில வார்த்தைகூடக் கலக்காமல் அந்தப் பெண் பேசி இருக்கிறார். 'நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். விரைவில் தமிழகம் வரும்போது உங்களைச் சந்திக்கிறேன்’ என்று சொன்னாராம். இதை சம்பந்தப்பட்டவர்களால் வெளியில் சொல்லவும் முடியவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை!''
''ஜெயலலிதா குரலில் பேசிக் கலக்கிய வெள்ளியங்கிரி என்பவரின் கைவரிசையாக இது இருக்கலாம் அல்லவா?''
''அதையும் நான் விசாரித்தேன். மிக மிக வறுமையில் வாடும் வெள்ளியங்கிரியிடம் இப்போது செல்போனும் இல்லை. சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் அவர் கஷ்டப்படுகிறார். எதுவாக இருந்தாலும் அவரே நேரடியாகத்தான் பேசுவார். இந்த மாதிரி பி.ஏ. வைத்துப் பேசும் அளவுக்கு பில்டப் இல்லை அவர். இது வரை வெள்ளியங்கிரி, யாருக்கு போன் செய்தாலும் பாராட்டி சில வார்த்தைகள் சொல்வாரே தவிர... வேறு எந்த கப்சாக்களையும் விட்டதும் இல்லை என்பதால்... இது சந்தேகமாக இருக்கிறது. பட முதலீட்டில் யார் வேண்டுமானாலும் இறங்கலாம். அதற்கு முதல்வரின் பெயரை அதுவும் ரத்த சொந்தம் என்று பூடகமாகச் சொல்லிக்கொண்டு ஏன் செய்ய வேண்டும் என்பதுதான் மர்மமாக இருக்கிறது. அம்மாவின் கோபம் புரியாமல் யாரோ விளையாடுகிறார்கள்!!'' என்று கிளம்பினார் கழுகார்!

ஜுவி

கனிமொழியை கட்சியிலிருந்து நீக்குங்கள்: கோபாலபுரத்தில் ரூத்ரதாண்டவம் ஆடிய செல்வி !

”தி.மு.க. என்ற இயக்கத்தை கட்டிக் காப்பாற்ற தம்பி கருணாநிதி இருக்கிறார்” பல ஆண்டுகளுக்கு முன்னால் அண்ணா சொன்னார்.

அண்ணா சொன்னது போல, தி.மு.க.வை அண்ணாவுக்குப் பிறகு 50 ஆண்டுகளாக தி.மு.க. என்ற இயக்கத்தை எத்தனையோ சரிவுகளில் இருந்து தூக்கி நிறுத்தியவர் கலைஞர். பொதுவாழ்வில் அவர் கையாண்ட வித்தைகளில், பல எதிரிகள் வீழ்ந்தனர். சில எதிரிகள் வாழ்ந்தனர். ஆனாலும், கலைஞர் என்ற அரசியல்வாதியை யாருமே வீழ்த்த முடியவில்லை. பொதுவாழ்விலிருந்து அவரை நீக்கவும் முடியவில்லை.

Selvi-karuna-22தமிழ்நாட்டில் ஐம்பது ஆண்டுகளாக பொதுவாழ்வில் நிலைத்து நிற்கும் அரசியல்வாதியான கலைஞர், குடும்ப வாழ்க்கையில் நிலை குலைந்து போயிருக்கிறார். பொதுவாழ்வில் அவரது கண்ணசைவில் எல்லோரும் கட்டுண்டு கிடந்தார்கள். குடும்ப வாழ்வில் அவரது எந்த அசைவுக்கும் குடும்பத்தினர் கட்டுப்படவில்லை.

1993ல் வைகோ வெளியேற்றப்பட்ட பிறகு, கட்சிக்குள் நடக்கும் அத்தனை களேபரங்களுக்கும் காரணம் குடும்பம்தான் என்று அறியாதவர் அல்ல கலைஞர். குடும்பம் அதிகார மையங்களாக மாறுவதை தடுக்காமால் விட்டதன் விளைவு, இன்று டெல்லி திகார் சிறைவரை சென்றுவிட்டார் கனிமொழி. அந்த மகள் மீது அவர் வைத்திருக்கும் பாசம் நாளுக்கு நாள் அதிகரிக்க, குடும்பத்தின் இன்னொரு பூகம்பத்தை உருவாக்கி இருக்கிறது.

”சிறையில் 135 நாட்களுக்கு மேல் இருந்துவிட்டு, வரும் நவம்பர் 3ம் தேதியில் கனிமொழி வெளியே வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் அவரது மனைவி ராசாத்தியும் இருக்கின்றனர். இந்த வேளையில், கோபாலபுரத்தில் தனது மூத்த மகள் செல்வி ஆடி ரூத்ரதாண்டவத்தால், அதிர்ச்சியில் சிலையாக நின்றார் கலைஞர்” என்று கட்சியின் உயர் பொறுப்பில் இருப்பவர் சொல்லக்கேட்டு, அதை விசாரித்தால், அது வெறும் ரூத்ரதாண்டவம் மட்டுமல்ல, தி.மு.க.வின் எதிர்காலமே அதில் அடங்கி இருக்கிறது என்பதுதான் உண்மை.

அக்டோபர் 20ம் தேதி மாலை டெல்லிக்கு கிளம்பினார் கருணாநிதி. அதற்கு முன்பாகத்தான், கோபாலபுரத்தில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. சி.ஐ.டி. காலனியிலிருந்து மாலை கோபாலபுரத்துக்கு வந்திருக்கிறார் கலைஞர். குடும்பத்தினரைத்தவிர வேறு யாரும் இல்லை அங்கே. தயாளும்மாள், ஸ்டாலின், செல்வி ஆகிய மூவரும் இருக்க, மெளனமாக இருந்த கலைஞரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தாராம் செல்வி.

kani_630994d“என்னப்பா… நாங்க கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா. ஜெயில்ல இருந்து கனி சென்னைக்கு வந்தா ஏர்போர்ட்டுக்கு போய் கட்சி சீனியருங்க எல்லாம் வரவேற்கனும்னு சொன்னீங்களா” என்று செல்வி கேட்க, வழக்கம் போல் மெளன சாமியார் போல் காட்சி தந்திருக்கிறார் கலைஞர்.

“அவளை எப்ப கட்சிக்குள் கொண்டு வந்தீங்களோ, அன்னிக்கியே கட்சி நாசமா போச்சு. இன்னிக்கி கட்சி இந்த கதிக்கு ஆளானது யாராலன்னு நெனைச்சிப் பாத்தீங்களாப்பா. அதை நெனைச்சிப் பாத்தீங்கன்னா இப்படி இருக்கமாட்டீங்கப்பா நீங்க. அவளை ஏர்போர்ட்டுக்கு போய் வரவேற்கணும்ன்னு சொல்றீங்களே. அவ என்ன கட்சிக்கு தியாகம் செஞ்சிட்டு போய் ஜெயில்ல இருக்காளா. அவளுக்கு கட்சியில அந்தஸ்து கொடுக்கணும்னு ஏம்பா இப்படி துடிக்கறீங்க…

“ஏர்போர்ட்டுக்கு வரணுமாம். மறுநாளே மகளிர் அணியோட பொதுக்கூட்டம் நடத்துவீங்களாம். அதுக்கு அவளையே தலைமை தாங்கச் சொல்வீங்களாம். அடுத்த நாளே, மாவட்டச் செயலாளர் எல்லாம் அவ வீட்டுக்கு போய் பார்க்கணுமாம். உடனே, அவளை கட்சி ஆபிசுக்கு கூட்டிட்டு போய், ஏதாவது பொறுப்பு கொடுக்கணும்னு பேசி இருக்கறீங்களே. இதெல்லாம் செஞ்சா, கட்சிக்காரனுங்க என்ன நினைப்பானுங்க. சொல்லுங்கப்பா..

“ஒன்னே ஒன்னுப்பா. நீங்க என்ன செய்வீங்களோ… எது செய்வீங்களோ. அவ வரட்டும். அவ கேசுக்காக எத்தனை கோடி வேணாலும் செலவு செய்யுங்க. அதுக்காக, எங்க பங்குக்கும் நாங்க ஏதாவது செஞ்சி தொலைக்கறோம். ஜெயில்ல இருந்தப்போ அவளை கட்சியை விட்டு நீக்க முடியாதுன்னு சொன்னீங்க. சரி. இப்ப வெளியில வந்ததுமே, கட்சியில இருந்து தூக்கிடுங்க. அதுதான் இந்த குடும்பத்துக்கும், கட்சிக்கும் நல்லது. ஆனா, அவளுக்கு கட்சியில அந்தஸ்து கொடுக்கனும் முக்கியத்துவம் கொடுக்கணும்ன்னு நினைச்சி, ஏதாவது செஞ்சீங்க, நாங்க சும்மா இருக்க மாட்டோம்” என்று வெடி வெடியென வெடித்து கிளம்பிய செல்வி, இருபத்தைந்து நிமிடங்களுக்கு மேல் கொதித்துவிட்டு நின்றார்.

இத்தனை நடக்கும் போது, மெளனமாக இருந்த கலைஞர், அடுத்து சீறிப் பாய்ந்தாரா என்றால், அதுதான் இல்லை. சிலை போலவே, சக்கர நாற்காலியிலேயே அமர்ந்துக் கொண்டிருந்தாராம். மோட்டு வளையை பார்ப்பதும் மோவாயை தேய்த்துக் கொள்வதுமாகவே இருந்திருக்கிறார்.

DMK_Leaders_Ten7811கோபாலபுரத்தில் இருந்துக் கொண்டு, தனது கருத்துக்களை அவர் எதைச் சொன்னாலும் அதுவும் அந்த நேரத்தில் எடுபடாது என்று உணர்ந்த கலைஞர், மெல்ல அறிவாலயம் சென்று, அன்று இரவு சி.ஐ.டி. காலனிக்கு சென்றிவிட்டாராம். அங்கிருந்தபடியே, கோபாலபுரத்தில் நடந்த ரூத்ரதாண்டவத்தின் பின்னணி என்ன என்று விசாரித்திருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்பாக, போட் கிளப்பில் கோபாலபுரத்து குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து விவாதம் செய்திருப்பது கலைஞருக்கு தெரிந்துவிட்டது. அங்கே எடுக்கப்பட்ட முடிவுகளின் படி செல்வி களத்தில் இறங்கி இருப்பதும் உணர்ந்துக் கொண்டார். இந்த விஷயத்தை இப்படியே ஆறப்போட்டுவிட்டு, டெல்லி கிளம்பி இருக்கிறார்.

கோபாலபுரத்தில் நடந்த விஷயங்களை, கலைஞரின் பாதுகாவலர் மற்றும் உதவியாளர் நித்யா மூலமாக கேள்விப்பட்ட ராசாத்தி கொதித்து எழுந்துவிட்டார். டெல்லி சென்றதுமே, கனிமொழிக்காக கலைஞரிடம் ஒரே ஒரு நிபந்தனையை விதித்திருக்கிறார் ராசாத்தி. ‘இனி அரசியலில் இருந்து கனிமொழியை விலகச்சொன்னால், பல பேர் அரசியலை விட்டு விலக வேண்டியிருக்கும்” என்று ராசாத்தியும் பூடகமாக பேச, தத்தளித்திருக்கிறார் கருணாநிதி.

அதன்பிறகு, டெல்லியில் நடந்த எந்த சந்திப்பிலும் தயாநிதி மாறனை காணவேயில்லை. முற்றிலும், தயாநிதியை அழைக்கவே கூடாது என்பதுதான் ராசாத்தி போட்ட முக்கிய நிபந்தனையாம். மேலும், சோனியாவை சந்திக்கச் சென்ற போது, கலைஞரின் காரில் ஏற முற்பட்ட தயாநிதியை டி.ஆர்.பாலு நைசாக பேசி, இறக்கியிருக்கிறார்.

Kanimozhi-with-father-karunanidhiசோனியாவுடனான சந்திப்பில், கலைஞர் நலம் விசாரிக்கு முன்பே, “எல்லாரும் எங்களை கைவிடறாங்கம்மா. நீங்கத்தான் எப்படியாவது எங்களை காப்பத்தணும்’னு சொல்லி ராசாத்தி வைத்த ஒப்பாரி, சோனியாவை மிரள வைத்திருக்கிறது.

சோனியா சந்திப்பு முடிந்தத அன்றே, கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக கோர்ட் அறிவித்துவிட்டது. 24ம் தேதியிலேயே கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பொய்த்துப்போனத்தில் ராசாத்தி இன்னும் அதிக வேதனையில் மூழ்கிவிட்டார். இந்த நேரத்தில் சென்னைக்கு கிளம்பினால், டெல்லியில் பூகம்பம் வெடிக்கும் என்று நினைத்து, மேலும் ஒரு நாள் தங்கிவிட்டு, சென்னை திரும்பினார் கலைஞர்.

எது எப்படியோ, வரும் நவம்பர் 3ம் தேதி கனிமொழி வெளியே வருவதற்கான அறிகுறிகள், தெளிவாக தெரியும் நிலையில், கலைஞர் சில முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறார்.

அதற்கு முன்பாக, கோபாலபுரத்தில் விதிக்கப்பட்ட ஒரே நிபந்தனையை ஏற்பாரா அதற்கு பதில் ராசாத்தி போட்ட ஒரே நிபந்தனையை ஏற்பாரா என்பது அவர் எடுக்க வேண்டிய முடிவு.

கோபாலபுரத்தில் “இனி அரசியலில் கனி கூடாது” என்பதுதான் ஒரே நிபந்தனை.

”அரசியலில் கனி நீடிக்க வேண்டும். இல்லையென்றால்…. ”என்று ராசாத்தி போட்ட நிபந்தனை.

இதில் ராசாத்திக்கு ‘அது நடக்காது. நீ கேட்டது நடக்கும்’ உறுதி தந்திருகிறாராம்.

ஆக, தி.மு.க. தொண்டன் அடுத்த சரிவுக்கு… மன்னிக்கவும், அடுத்த சரித்திரத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறான்.

நன்றி: இந்திரன், தமிழக அரசியல்.

ஃபைனான்ஷியல் பிளானிங்: பேச்சுலர்களுக்கு...

மனித வாழ்க்கையை நான்கு விதமாகப் பிரிக்கிறார்கள் ஃபைனான்ஷியல் பிளானர்கள். வேலை கிடைத்து திருமணமாகிற வரையிலான பேச்சுலர் வாழ்க்கை முதல் பாகம், திருமணமாகி குழந்தைகள் வளர்ப்பது வரை இரண்டாம் பாகம், அவர்களுக்கான சொத்து பத்து சேர்த்து வைப்பது மூன்றாம் பாகம், ஓய்வு காலத்திற்கு திட்டமிடுவது நான்காம் பாகம்...

தில் மிகவும் முக்கிய மானது 23 - 27 வயது வரை உள்ள இளைஞர் பருவம். இந்த வயதில் சரியாக நிதித் திட்டமிடல் செய்பவர்கள் கடைசி காலத்தில் காலாட்டிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிப்பார்கள். 'லைஃப்-ஐ அனுபவிக்கணும்டா’ என்று டயலாக் விடுபவர்கள், திருமணமான பிறகு இ.எம்.ஐ.சிக்கலில் மாட்டி பரிதவிப் பார்கள்! இந்த சிக்கலைத் தவிர்க்க 23 -27 வயதுள்ள இளைஞர்கள் தங்கள் நிதித் திட்டமிடலை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்?

பேச்சுலர்ஸ்!

23 - 27 வயதுள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் இதுவரை அப்பா தந்த பாக்கெட் மணியையும், அம்மாவிடம் நைஸாகப் பேசி வாங்கிய பணத்தையும் வைத்து செலவு செய்து வந்திருப்பார்கள். ஆனால், கையில் முதல் மாதச் சம்பளம் கிடைத்தவுடன் கண்ணில் பட்ட அனைத்தையும் வாங்க நினைப்பார்கள். முதல் சம்பளத்தில் அப்பா, அம்மா, அக்கா, தம்பிகளுக்குப் பிடித்ததை வாங்கித் தருவதோடு, நண்பர்களுக்கு ட்ரீட்டையும் தந்துவிட்டு, நிதித் திட்டமிடலை தொடங்கி விடலாம்.

இன்ஷூரன்ஸ்!

படித்து முடித்து வேலைக்குப் போனதும் ஆணோ, பெண்ணோ முதலில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும். 'இன்ஷூரன்ஸா, அதுவும் ஓடுற பாம்பை கையில பிடிக்கிற இந்த வயசிலேயேவா?’ என்று கேட்கத் தோன்றும் வயது இது. ஆனால், இன்ஷூரன்ஸ் பாலிசியை எவ்வளவு குறைவான வயதில் எடுக்க முடிகிறதோ, அவ்வளவு குறைவான வயதில் எடுத்தால் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் பெறலாம். தவிர, இளவயதில் பெரிய நோய் ஏதும் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதால் அது தொடர்பான ரைடர் பாலிசிகளையும் தவிர்த்து விடலாம்.
இந்த வயதுடையவர்கள் தங்கள் வருமானத்தைப் போல பத்து மடங்குக்கு பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. இன்ஷூரன்ஸ் என்ற வுடனே எல்லோரும் எண்டோவ்மென்ட் பாலிசிகளையே எடுக்கிறார்கள். இந்த வயதுக்காரர்களுக்கு எண்டோவ்மென்ட் பாலிசிகளைவிட டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளே பொருத்தமானதாக இருக்கும். திருமணமான பிறகு தேவைப்பட்டால் மட்டும் எண்டோவ்மென்ட் பாலிசிகளை எடுக்கலாம்.இந்த வயதில் உள்ளவர்களுக்கு பெரிய நோய் எதுவும் வராது என்றாலும், மெடிக்ளைம் பாலிசி எடுப்பது அவசியம். தன்னோடு தன் பெற்றோர்களுக்கும் சேர்த்து எடுக்கலாம். வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் கூடுதல் கவரேஜில் மெடிக்ளைம் பாலிசி எடுப்பது அவசியம். இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதன் மூலம் நம்மை நம்பி இருப்பவர்களை நட்டாற்றில் விடத் தேவையில்லை என்பதோடு, வரிச் சலுகையும் கிடைக்கும் என்பது முக்கியமான விஷயம்.

ரியல் எஸ்டேட்!

இப்போதைய இளைஞர்கள் அனைவரும் சம்பளம் வாங்க ஆரம்பித்தவுடனே வீடு, நிலம் வாங்க புறப்பட்டு விடுகிறார்கள். 23, 24 வயதில் வேலைக்குச் சேர்ந்து டிரெய்னிங் பீரியட், புரஃபேஷன் பீரியட் என பல கட்டங்களைத் தாண்டி வர வேண்டும். இந்த காலகட்டத்தில் ஏதாவது ஒரு பிரச்னையால் வேலை இழக்க வாய்ப்புண்டு. எனவே, வேலை உறுதியாகும் வரை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யாமலிருப்பது நல்லது. குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது எந்தவிதமான தனிநபர் கடனோ, வீட்டுக் கடனோ வாங்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.இதற்காக ரியல் எஸ்டேட் பற்றி யோசிக்கவே வேண்டா மென்று சொல்லவில்லை. எவ்வளவு தொகைக்கு வீடு அல்லது மனை வாங்கப் போகிறீர்கள் என்று தீர்மானித்துவிட்டு அதற்குத் தேவையான தொகையில் கால் சதவிகிதத்தைச் சேமிப்பது நல்லது. உதாரணத்திற்கு, இருபது லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்க ஆசைப்பட்டால் ஐந்து லட்சம் ரூபாய் வரை சேமித்துவிட்டு, மூன்று வருடங்கள் கழித்து யாரிடமும் கைநீட்டாமல், அதுவரை சேமித்து வந்த சொந்தப் பணம் மற்றும் வங்கிக் கடன் மூலம் வீடு வாங்கலாம்.இந்த வயதில் உள்ளவர்கள் வீட்டுக் கடன் வாங்கும்போது எவ்வளவு ரூபாய்க்கு கடன் வாங்குகிறார்களோ, அந்த தொகைக்கு இணையான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பது அவசியம். ஏனெனில், கடன் வாங்கிய பிறகு ஏதாவது அசம்பாவிதம் நடந்து கடன் கட்ட முடியாமல் போனால், பெற்றோர்கள் கஷ்டப்பட்டு அந்த கடன் பணத்தைக் கட்ட வேண்டியிருக்கும். ஆனால், இந்த பாலிசி எடுத்தால், பெற்றோர்கள் பணம் எதையும் கட்டாமலே அந்த வீட்டின் உரிமையை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

தங்கம்!

இளம்பெண்கள் திருமணத்திற்குப் பிறகு கணவன் இருக்குமிடத்திற்குப் போயாக வேண்டும் என்பதுதான் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் திருமணத்துக்கு முன்பாக வீடு வாங்கியிருந்தால் அதனால் சில சிரமங்கள் ஏற்படலாம். ஒருவேளை திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்ல முடியாதபட்சத்தில் அந்த வீட்டுக்கான கடன் சுமை கணவனின் தலையில்தான் விழும். எனவே, இளம்பெண்கள் வேலைக்குச் சேர்ந்ததும் ஹவுஸிங் லோனில் ஃபிளாட் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதில் தங்கத்தில் தாராளமாக முதலீடு செய்தால், திருமணத்தின்போதும், திருமணத்திற்குப் பிறகும் நிச்சயம் உதவும். ஆபரணமாகத்தான் தங்கம் வாங்க வேண்டும் என்பதில்லை. கோல்டு இ.டி.எஃப்., கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் திட்டங்கள் மூலமும் சேமிக்கலாம்.
மியூச்சுவல் ஃபண்ட்!

ஆண், பெண் என இரு தரப்பினருக்குமே மிகவும் ஏற்றது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு. எஸ்.ஐ.பி. முறையில் நல்ல வருமானம் தரும் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். மன்த்லி இன்கம் குரோத் பிளானில்கூட முதலீடு செய்து வரலாம். சில நிறுவனங்களில் மன்த்லி இன்கம் பிளானில் தங்கத்தில் சில சதவிகிதங்கள் முதலீடு செய்யும் திட்டங்களும் இருக்கின்றன. அதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஃபண்டில் கிடைக்கும் டிவிடெண்ட் தொகைக்கு வரி கட்ட வேண்டியதில்லை.
வங்கி டெபாசிட்!

வங்கி டெபாசிட்டில் முதலீடு செய்தால், போட்ட பணத்திற்கு வேண்டுமானால் பாதுகாப்பு கிடைக்கலாம். ஆனால், பணவீக்கத்தைவிட குறைந்த வருமானமே கிடைக்கும். ஓரளவுக்கு ரிஸ்க் எடுத்தாலும் பிரச்னை இல்லை என்கிற இந்த வயதில் வங்கி டெபாசிட் என்பது வீண்தான்!
பங்குகள்!

ரிஸ்க் எடுக்கும் வாய்ப்புகள் கொண்ட இளைஞர்கள், பங்குச் சந்தையில் துணிந்து முதலீடு செய்யலாம். 50,000 சம்பளம் வாங்குபவர்கள் மாதம் 5,000 ரூபாய் வரை பங்குகளில் முதலீடு செய்யலாம். நல்ல லார்ஜ்கேப் பங்குகள், புளூசிப் கம்பெனி பங்குகளாகப் பார்த்து நீண்ட காலத்திற்கு வாங்கிப் போடலாம். சந்தை கீழே இறங்கும்போது கூடுதலாக பங்குகள் வாங்கிச் சேமித்தால் நீண்ட கால அடிப்படையில் நல்ல பலன் கிடைக்கும்.
மற்ற முதலீடுகள்!

வங்கி டெபாசிட்கள் 8.5 -10% வட்டி தருகிறது என்றால், கம்பெனி டெபாசிட்கள் 10.5 - 12.5% வரை வட்டி தருகின்றன. நல்ல நிவாகம், அதிக ரேட்டிங், மிகவும் வலுவான நிதிநிலை கொண்டுள்ள கம்பெனி டெபாசிட்டுகளாகப் பார்த்து போடலாம். அத்துடன் பங்குகளாக மாற்ற முடியாத டிபஞ்சர்களில்கூட முதலீடு செய்யலாம். பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்டில் வருடத்திற்கு 70,000 ரூபாய் வரையில் சேமிக்கலாம். பங்குகளில் பணத்தை முதலீடு செய்ய விரும்பாத பெண்கள், தேசிய சேமிப்புப் பத்திரம் போன்ற ரிஸ்க் அல்லாத முதலீடுகளில் நீண்ட காலத்திற்குச் சேமிக்கலாம்.காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்கிற மாதிரி வயதிருக்கும் போதே நிறைய சேமித்து, சரியாக முதலீடு செய்வது அவசியம் என்பதை இளைஞர்களும், இளம்பெண்களும் புரிந்து கொண்டால் சரி.

ஹரிணி.

விகடன்

என்ன செய்யணும் விஜயகாந்த்?

உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க. சாதனை படைத்திருப்பதாக மதுரை அ.இ.அ.தி.மு.க.வினர் கிண்டலாகச் சொல்கிறார்கள். ‘தனியாக நின்றதால் தே.மு.தி.க.வின் சாயம் வெளுத்து விட்டது; அடுத்து ஆளப்போவது நாங்கள்தான் என்று சொல்லி வந்த இறு மாப்பில் இடி விழுந்தது; விஜயகாந்த் இனி அவ்வளவுதான். எழுந்திருக்க முடியாது’ என்ற எண்ணப் போக்கு மக்களிடம் இருக்க, ‘இதென்ன புதுக்கதை’ என்று மண்டை குடைகிறதா? ஐயா... விஷயம் இதுதான். மதுரை மேலூர் நகராட்சியின் 15வது வார்டில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டவர் ஜோதிலட்சுமி. இவர் வாங்கிய வோட்டு பூஜ்யம். வேட்பாளர் அவருடைய வோட்டை யாருக்குப் போட்டார் என்று கேள்வி எழுகிறதா? வேட்பாளருக்கே அவர் போட்டியிட்ட வார்டில் வோட்டு இல்லையாம்! மேலூர் நகராட்சி சார்பில் பூஜ்யம் வாங்கியதைத்தான் ‘தே.மு.தி.க. சாதனை’ என்று அ.தி.மு.க.வினர் நக்கலடிக்கிறார்கள்.

அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களையும் வோட்டுகளையும் பிடித்து தே.மு.தி.க. அழுத்தமாகவே அசத்தும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. தி.மு.க. அந்த அளவுக்கு பலவீனமாக இருந்ததால், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் இக்கருத்து நிலவியது. ஆனால், தமிழக அரசியலில் அ.தி.மு.க. வும் தி.மு.க.வும் ஒன்றுக்கொன்று மாற்றாக இருக்கின்றன என்பதையும் தே.மு.தி.க. வுக்கு அதில் ஒன்றைக் கழித்துக் கட்டும் அளவுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதையும் முடிவுகள் பளிச்சென்று சொல்கின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் செல்வாக்கு உயர்ந்து வருவதாக தே.மு.தி.க. சொல்கிறது. 2006 சட்டமன்றத் தேர்தலில் 28 லட்சம் வாக்குகளைப் பெற்ற நாங்கள், 2009 மக்களவைத் தேர்தலில் 31 லட்சம் வாக்குகளைப் பெற்றோம். இப்போது கிட்டத்தட்ட 36 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறோமே! இது வளர்ச்சி இல்லையா?" என்று கேட்கிறார் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன். உள்ளாட்சியில் உள்ள மொத்த இடங்கள் கிட்டத்தட்ட 20,000. இதில் தே.மு.தி.க. பெற்ற இடங்கள் 863தான். கிராமப் பகுதிகளில்தான் பெரும்பாலான இடங்களைப் பிடித்திருக்கிறது தே.மு.தி.க. பத்து மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு மாநகராட்சியையும் பிடிக்காதது மட்டுமல்ல; அதற்குக் கிடைத்த கவுன்ஸிலர்கள் எட்டு பேர்தான். இரண்டே இரண்டு நகர சபைகளைத்தான் பிடித்திருக்கிறது. இத்தனைக்கும் விஜயகாந்தும் அவர் மனைவி பிரேமலதாவும் தமிழகம் முழுவதும் சுழன்றடித்துப் பிரசாரம் செய்தார்கள். சட்டமன்றத்தில் பெற்ற 29 இடங்கள்கூட ‘ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்ததால்தான் தே.மு.தி.க. வுக்குக் கிடைத்தது. தே.மு.தி.க. கூட்டணி இல்லாமலேயேகூட ஜெயலலிதா ஆட்சிக்கு வந்திருப்பார்," என்றெல்லாம் மக்களிடம் பேச்சு எழத் தொடங்கிவிட்டது.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கதையாக, ‘தேர்தல் முடிவுகளில் எந்த வியப்பும் இல்லை’ என்று விஜயகாந்த் அறிக்கை விட்டிருக்கிறார். ஆளும்கட்சி உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவது வாடிக்கை. அரசின் திட்டங்களும் நிதியும் அப்போதுதான் உள்ளாட்சிகளுக்கு வந்து சேரும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த ஆட்சி பொறுப்பேற்று 5 மாதங்கள் முடியவில்லை. இந்தச் சூழலில் மக்கள் தங்கள் நம்பிக்கையை உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளும் கட்சி மீதே வைத்திருப்பது இயற்கைதான்," என்று சொல்கிறார் விஜயகாந்த். தோல்விக்கான காரணங்களை இதுபோல, அடுக்குவது எளிது. ‘எங்களது வோட்டு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது’ என்று சொல்லி ஆறுதல் அடைவதும் இயற்கை. வாக்காளர் எண்ணிக்கை உயர்வதற்கு ஏற்ப வோட்டுகள் அதிகரித்திருக்கிறதா என்று பார்த்துத்தான் செல்வாக்கை கணிக்க வேண்டும்.இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை மக்கள் எதிர்பார்ப்பில் தே.மு.தி.க. சறுக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை நிலை. ஆகவே, தம்மையும் தன் கட்சியையும் நிலை நிறுத்திக் கொள்ள விஜயகாந்த் என்ன செய்ய வேண்டும். இரண்டு நடுநிலை அரசியல் விமர்சகர்களோடு பேசினோம்.விஜயகாந்துக்குப் பின்னடைவு இல்லை என்பதே என் கருத்து," என்கிறார் சோலை. ஆனால், அதிகமாக திருப்திப் பட்டுக் கொள்ளும் நிலையிலும் விஜயகாந்த் இருக்க முடியாது. தமது செயல்பாடு, அரசியல் யுக்தி ஆகியவற்றில் பளிச்சென ஒரு மாறுதலைக் கொண்டு வந்தால் 2014ல் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கழகங்களில் ஒன்றுக்கு மாற்றாக வர முடியும். தமது குரு எம்.ஜி.ஆர். என்று சொல்லும் விஜயகாந்த், எம்.ஜி.ஆரின் அரசியல் செயல்பாடுகளைப் பாடமாக ஏன் எடுத்துக் கொள்ளத் தயங்குகிறார் என்பது புரியவில்லை.

எம்.ஜி.ஆர். முதலில் சந்தித்த திண்டுக்கல் தேர்தலில் அவருடன் கூட்டணி கண்டன இரு கம்யூனிஸ்ட் இயக்கங்கள். உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டைச் சேர்த்துக் கொண்ட விஜய காந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஏன் கை விட்டு விட்டார்? அதையும் சேர்த்துக் கொண்டிருந்தால் அவர் பெற்ற இடங்கள் ஆயிரத்தைத் தாண்டி இருக்கும். இது மட்டுமல்ல; இரு கம்யூனிஸ்ட் இயக்கத்தோழர்களும் தே.மு.தி.க. இளைஞர்களுக்கு, தேர்தலைச் சந்திப்பது குறித்து யுக்திகளைச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். இந்த அனுபவப் பாடம் ஒவ்வொரு கட்சித் தொண்டருக்கும் தேவை. 2014க்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்க்காமல் தி.மு.க.- அ.தி.மு.க.வுக்கு நல்ல மாற்று அணியை அமைக்க உடனடியாகக் களத்தில் இறங்க வேண்டும் விஜயகாந்த். அரசியலில் பொத்தாம் பொதுவாக விமர்சனம் செய்து வோட்டுகளைப் பெறுவது கடினம். அதிகாரத்தில் இருப்பவர்களே கல்லடி பெறுவார்கள். அந்த வகையில் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், ஆளும் கட்சியைப் பாரபட்சமில்லாமல் விமர்சித்து மக்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்து வந்தால் எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் பளிச்சிடுவார். விஜயகாந்துக்குப் பின்னடைவு என்று இப்போது கிளம்பியிருக்கும் பேச்சு, மீடியாவின் உருவாக்கம்," என்கிறார் சோலை.கருணாநிதி...எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர், நல்ல எதிர்க்கட்சித் தலைவர்களாக மக்களிடம் நம்பிக்கை பெற்ற பிறகே முதல்வராக வர முடிந்தது என்பதை விஜயகாந்த் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, அந்த நம்பிக்கையை அவர் மக்களிடம் துளிர்விட வைத்தால் ஐந்து வருடம் கழித்து ஆட்சி இவர் கைவசமாகும்," என்கிறார் தமிழருவி மணியன்.விஜயகாந்த் என்ன செய்ய வேண்டும் என்று சற்று விஸ்தாரமாகவே பேசினார் தமிழருவி மணியன். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுக்கும் மாற்றாகத் தம்மை அடையாளப் படுத்திக் கொண்ட விஜயகாந்த் ஒரு புதிய எழுச்சியையும், நம்பிக்கையையும் மக்களிடம் உண்டாக்கினார் என்பது யதார்த்தம். அவரும் மக்களோடும், தெய்வத்தோடும்தான் கூட்டணி என்று 2006 முதல் 2009 வரை எல்லா தேர்தல்களிலும் தனித்தே களம் கண்டார். அதனால் அவரது வாக்கு வங்கி வளர்ந்தது.

2006 உள்ளாட்சித் தேர்தலைவிட இந்த உள்ளாட்சித் தேர்தலில் குறைவாகவே வாக்கு சதவிகிதம் பெற்றிருக்கிறார் விஜயகாந்த். ஆனால், சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்ததை ஒரு வகையில் நியாயம் என்று சொல்லலாம். ஒட்டுமொத்த தமிழகத்தையும் கபளீகரம் செய்து வந்த கருணாநிதியை, பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட சரியான முடிவு. விஜயகாந்த் தனித்தே நின்றிருந்தால் வோட்டுகள் பிரிந்து தி.மு.க. மூச்சு விடு வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். எனவே, ஜெயலலிதாவுடன் அவர் கூட்டணி அமைத்ததை மக்கள் தவறாகக் கருதவில்லை. ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அவரது அணுகுமுறையை மக்கள் ஆதரிக்கவில்லை. ‘காமராஜர் வழியில் அரசை ஆறு மாதம் விமர்சிக்க மாட்டேன்’ என்றார் விஜயகாந்த். இது அரசியல் பிழை. 1967ல் தி.மு.க. முதன்முறையாக அதிகாரத்துக்கு வந்தது. அனுபவம் இல்லாத தி.மு.க.வினர் பொறுப்புக்கு வந்ததால் ஆறு மாதம் அவகாசம் கொடுத்தார் காமராஜர். ஆனால், மூன்றாவது முறையாக முதல்வரான ஜெயலலிதாவுக்கு காமராஜர் பாணியில் ஆறு மாதம் அவகாசம் கொடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்தின் பங்களிப்பு சரியாக இல்லையென்பதே மக்களின் கருத்து. சமச்சீர் கல்வி, பரமக்குடி துப்பாக்கிச் சூடு இரண்டிலும் அவர் கருத்து அழுத்தமாக இல்லை. கொஞ்சம் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.விடம் கூட்டணி தொடர்ந்து 20 சதவிகித இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என் பதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. எனவே, விஜயகாந்த் அடக்கி வாசித்தார். அவரது எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களுக்குப் போட்டியாக முதல்வரைப் புகழ்ந்தார்கள்! மாற்று அரசியலுக்குத் தகுதியான மனிதர் என்று நம்பிய வாக்காளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எல்லா அரசியல் தலைவர்களைப் போல சந்தர்ப்பவாதம் காட்டும் சாதாரண அரசியல் தலைவர்தானோ விஜயகாந்த் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அதன் வெளிப்பாடுதான் உள்ளாட்சித் தேர்தல் முடிவு," என்கிறார் மணியன்.தமிழக அரசியலில் இனி விஜயகாந்துக்கு இடமே இல்லை என்று நான் சொல்லவில்லை" மணியன் தொடர்கிறார்... இரண்டு திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக ஜாதி, மத உணர்வு கடந்த, மக்கள் நலனையே முக்கிய நோக்கமாகக் கொண்ட ஒரு மாற்று அணியை விஜயகாந்த் உருவாக்க வேண்டும். இடதுசாரி இயக்கங்களோடு கொள்கைவாத இயக்கமாக இயங்கும் ம.தி.மு.க.வையும் சேர்த்துக்கொண்டு ஒரு மாற்று அணியை விஜயகாந்த் கட்டமைத்து நேர்மையான அரசியலை நடத்தினால், இன்று சரிந்திருக்கும் செல்வாக்கை நாளை நிச்சயம் தூக்கி நிறுத்த முடியும். விஜயகாந்த் முக்கியமாகச் செய்ய வேண்டியது சட்ட சபைக்குத் தவறாமல் சென்று, வாதங்களில் கலந்து கொள்ள வேண்டும். எந்தப் பிரச்னையிலும் நழுவல் இல்லாமல் மக்கள் சார்பாகக் கருத்துக்களை எடுத்து வைக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு வோட்டுப் போட்டவர்களைத் தவிர, மற்ற எல்லா கட்சிகளுக்கும் வோட்டுப் போட்ட மக்களின் பிரதிநிதியாக அவர் செயல்பட வேண்டும். இந்த வகையில் தமது பணியை அமைத்துக் கொண்டால் கழகங்களுக்கு மாற்றான ஒரு சக்தியாக அவர் உருவாவது நிச்சயம்," என்கிறார் தமிழருவி மணியன்.

மீடியா எங்கள் செல்வாக்கை மிகவும் குறைத்து மதிப்பிட்டு விமர்சிக்கிறது. தனித்தே களம் கண்டதால் எங்கள் தொண்டர்கள் உற்சாகமாக வேலை செய்தார்கள். ஆளும் கட்சிக்கு இயல்பாகவே அமைந்துவிட்ட அதிகார பண பலத்தையும் மீறி நாங்கள் வாக்குகளை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்," என்கிறார் தே.மு.தி.க. முக்கியஸ்தர் மாஃபா பாண்டியராஜன். ‘தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் சிலர், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கட்சியை விட்டு விலகுகிறார்கள்’ என்ற வதந்தியும் கிளம்புகிறது. இதுவும் மீடியா கிரியேஷன்தான்," என்கிறார் பாண்டியராஜன்!