Sunday, January 13, 2013

சி.பி.ஐயின் அதிரடி ரெய்டுகளால் சிக்கி சின்னாபின்னமாகி வரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி குடும்பம்.


மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் குடும்பச் சண்டையால் ஆதிபராசக்தி நிர்​ வாகமே சி.பி.ஐ-யின் தொடர் அதிரடி​களில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. 
சமீபத்திய ரெய்டு மேட்டருக்குள் நுழைவதற்கு முன் ஒரு ஃப்ளாஷ்பேக்.
மேல்மருவத்தூரில் உள்ள ஒரு சிறிய வேப்ப மரத்​தடியில் குறிசொல்லி தனது ஆன்மிகப் பாதையைத் தொடங்கியவர் பங்காரு அடிகளார். அசுர வளர்ச்சி பெற்ற அடிகளார், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவினார். ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களைத் தோற்றுவித்தார். ஆதிப​ராசக்தி அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் மூலம் மெட்ரிகுலேஷன் பள்ளி, பாலிடெக்னிக், அறிவியல் கல்லூரி, இன்ஜினீரியங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, விவசாயக் கல்லூரி என பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார். தமிழ்நாடு, வெளிமாநிலம், வெளிநாடு எனப் பல ஆயிரம் கோடி சொத்துக்களை வாங்கிக்குவிக்க, மேல்மருவத்தூர் இன்றுவரை தனி ராஜாங்கமாகவே செயல்பட்டு வருகிறது. மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் கால் பதிக்காத அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளே இல்லை எனும் அளவுக்கு 'சக்தி’ வாய்ந்தது மேல்மருவத்தூர்.
www.thedipaar.com
இந்த நிலையில், கடந்த ஜூலை 2010-ல் முதன் முதலாக சி.பி.ஐ. ரெய்டைச் சந்தித்தன மேல்​மருவத்தூர் ஆதிபராசக்தி அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள். சுமார் 200-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் மேல்மருவத்தூர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அடிகளாரின் குடும்பத்தில் உள்ள அனைவரின் வீடு களிலும் திடீர் சோதனை நடத்தினர்.  
இந்த ரெய்டுக்குக் காரணம், அதற்கு சில நாட்களுக்கு முன், ஊழல் விவகாரத்தில் சிக்கிய மருத்துவக் கவுன்சில் தலைவர் தேசாயிடம் வருமான வரித் துறையிடம் கைப்பற்றிய முக்கிய ஆவணங்கள். அவர் கடைசியாக அனுமதி கொடுத்த கல்லூரிகளில் இதுவும் ஒன்று என்பதும் அனுமதி முறைகேடாகப் பெற்றது என்பதும் தெரிந்தது. இதனால், சி.பி.ஐ., வருவாய் புலனாய்வுப் பிரிவு, வரு மான வரித் துறை மூன்றும் இணைந்து ரெய்டை நடத்தின. 18 மணி நேரம் நடந்த விசாரணையில் மேல்மருவத்தூர் வட்டாரமே ஆடிப்போனது.  
இரண்டாவது அதிரடி, கடந்த அக்டோபர் 2012-ல் நடந்தது. இந்திய மருத்துவக் கவுன்சில் 27 மருத்துவர்களை இந்திய மருத்துவப் பதிவில் இருந்து நீக்கியது. ஐந்து வருடங்கள் வரை அவர்கள் மருத்துவத் துறை சார்ந்த எந்தப் பணியிலும் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவு பிறப்பித்தது. அதில் 25 பேர் மேல்மருவத்தூர் மருத்துவக் கல் லூரியில் முழு நேரப் பணியாளர்களாக வேலை செய்வதாகக் காட்டிக்கொண்டு பணிபுரிந்து வந் தனர். இவர்களைத்தான் அதிரடியாக நீக்கியது இந்திய மருத்துவக் கவுன்சில். சி.பி.ஐ. கொடுத்த புகா ரின் அடிப்படையில் இவர்கள் நீக்கப்பட்டதாக இந்திய மருத்துவக் கவுன்சில் அப்போது விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், சி.பி.ஐ-யின் மூன்றாவது அதிரடி... கடந்த 7-ம் தேதி கைப்பற்றிய 25 லட்ச ரூபாய் லஞ்சப் பணம்!
கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் முது​நிலைப் பல் மருத்துவப் பாடப் பிரிவைத் தொடங்க டெல்லியில் உள்ள அகில இந்தியப் பல் மருத்துவக் கவுன்சிலிடம் கல்லூரி நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் செய்திருந்தனர். கல்லூரியை ஆய்வுசெய்ய கடந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி அகில இந்தியப் பல் மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றனர். கட்டமைப்பை ஆய்வுசெய்த அதிகாரிகள், 'கட்டமைப்பு சரியாக இல்லை. அவற்றை சரிசெய்த பின்னரே அனுமதி வழங்கப்படும்’ என்று கைவிரித்தனர். 'அதனால், அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் பொறுப்பு, கல்லூரி நிர்வாக அதிகாரி ராமபத்திரனிடம் வழங்கப்பட்டது. இதற்காக, சென்னையைச் சேர்ந்த இந்திய பல் மருத்துவக் கவுன்சிலின் உறுப்பினர் டாக்டர் முரு கேசனை அணுகினர். அதற்கான பேரம் நடந் துள்ளது. தவணைமுறையில் பணம் கொடுக்க ராம பத்திரன் ஒப்புக்கொண்டார். சி.பி.ஐ-க்கும் தகவல் கசிய, அவர்களும் தயாராக இருந்தனர்’ என்று சொல்லப்படுகிறது.
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் முருகேசன் நடத்திவரும் பல் மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி மாலை 6.30 மணிக்கு பணம் கைமாறியதாக சி.பி.ஐ. சொல்கிறது. அப்போது அதிரடியாக உள்ளே நுழைந்த சி.பி.ஐ. அதிகாரிகள் மேல்மருவத்தூர் தரப்பில் கொடுக்கப்பட்ட பணத்தைக் கைப்பற்றினர். அறக்கட்டளை நிர்வாகி கருணாநிதி, ஆற்காடு தொகுதியின் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பழனி, ஆதிபராசக்தி கல்லூரி நிர்வாக அதிகாரி ராமபத்திரன் ஆகியோர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அடிகளாரின் இளைய மகன் செந்திலின் மனைவி ஸ்ரீலேகாதான் இப் போது ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியை நிர்வகித்து வருகிறார். ரெய்டு நடக்கும் தகவல் தெரிந்ததும் ஸ்ரீலேகா தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. அவருடைய வீட்டை சி.பி.ஐ. முற்றுகையிட்டுள்ளது.  
மேல்மருவத்தூர் அடிகளாருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் பெயர் அன்பழகன். இளையவர் பெயர் செந்தில். ஒன்றாக இருந்த இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்தனர்.  முன்பு அவர்கள் கல்லூரியில் ரெய்டு நடந்த நேரத்திலும் நாம் தொடர்ந்து எழுதி வந்துள்ளோம். அடிகளாருக்கு அடுத்த இடத் தில் அன்பழகன் இருப்பதா, செந்தில் இருப்பதா என்பதே இவர்களது போட்டியாக இருந்தது. அந்தப் போட்டிதான் இந்த ரெய்டு வெளியில் தெரியக் காரணம் என்கிறார்கள். 'அன்பழகன்தான் மீடியாவுக்கு செய்தியைக் கசிய விட்டார்’ என்று சந்தேகிக்கிறது அவருடைய தம்பி செந்தில் தரப்பு.
இதுகுறித்து விளக்கம் கேட்க செந்திலுடைய  செல்போனுக்குத் தொடர்பு கொண்டோம். அது சுவிட்ச்டு ஆஃப். அவருடைய வழக்கறிஞர் பாலாஜி நம்மிடம் பேசினார். ''ரெய்டு நடந்து சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். மருத்துவக் கவுன்சிலுக்கு அவர்கள் லஞ்சம் கொடுக்கவில்லை. தவறாக பில்டப் செய்கிறது சி.பி.ஐ. இப்போது, ஸ்ரீலேகா இங்கு இல்லை. எங்கு இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியாது. அவர்களது குடும்பச் சண்டைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது'' என்றார்.
இந்தநிலையில், அன்பழகன் ஒரு வழக்குத் தாக் கல் செய்திருப்பதாகவும் அதில், தான் மட்டுமே உண்மையான வாரிசு என்றும் மற்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி நாம் அன்பழகனிடம் கேட்டபோது, ''இது என்னுடைய குடும்பப் பிரச்னை. அதை சரிசெய்துகொள்ள எனக்குத் தெரியும். நான் கோர்ட்டுக்குப் போகவும் இல்லை. வழக்கும் தொடரவில்லை'' என்றார்.
போகப் போகத்தானே எல்லாம் தெரியும்!

வீட்டுச் சண்டை வீதிக்கு வந்தது!
 அடிகளாரின் குடும்பம் இப்போது சொத்துப் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது. சில வருடங்களாக சொத்துக்காக நடந்த சகோதர யுத்தம் இப்போது உச்ச நிலையை அடைந்​துள்ளது.
வேலூர் மாவட்டம் கலவையில் உள்ள ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, இன்ஜினீயரிங் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றை அடிகளாரின் மூத்த மகன் அன்பழகன் நிர்வகித்து ​வந்தார். மேல்மருவத்தூர் இன்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி போன்றவற்றை இளைய மகன் செந்தில் நிர்வகித்து வந்தார். மேல்மருவத்தூரில் உள்ள பார்மஸி, பல் மருத்துவக் கல்லூரி போன்றவற்றை இளைய மகள் உமாதேவி நிர்வகித்து வந்தார். அடிகளாரின் மூத்த மகளின் கணவரான டாக்டர் ரமேஷ், மேல்மருவத்தூர் மருத்துவமனையை நிர்வகித்து வந்தார். மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தை லட்சுமி பங்காரு அடிகளார் நிர்வகித்தார். இவர்கள் அனைவரும் மாதம் ஒருமுறை கூடி தங்கள் குடும்ப மீட்டிங் நடத்துவார்கள்.
மூத்த மகன் அன்பழகன் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் என்ற அமைப்பை 11 ஆண்டுகளுக்கு முன் நிறுவினார். பல இடங்களில் நிதிஉதவி பெற்று விழாக்கள் நடத்தி வந்தார். தனது ஒவ்வொரு பிறந்த நாளின்​போதும் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் செய்வார். இதனால், அன்பழகன் அந்த வட்டாரத்தில் பிரபலம் ஆனார். ஒரு கட்டத்தில் கொதிப்படைந்த செந்தில், கோயில் நிர்வா​கத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மாநில ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி என்ற அமைப்பை உருவாக்கினார்.
இந்த நிலையில், 2010-ல் சி.பி.ஐ. ரெய்டு நடந்த அந்த இரண்டு நாட்களும் மாவட்டத்தின் எல்லைக்குள் நுழையாமல் தனது காரில் பயணம் செய்தபடியே இருந்தார் செந்தில். அன்பழ​கன் கல்லூரியில் நின்று, சி.பி.ஐ. அதிகாரிகளைச் சமாளித்தார். இது குடும்ப வட்டாரத்தில் அன்பழகனுக்கு மரியாதையை அதிகரித்தது. கூடவே, சகோதர யுத்தமும் உச்சத்துக்கு வந்தது. இரண்டு தரப்பினரும் உளவாளிகளை நியமித்து நோட்டமிடத் தொடங்கினர். இருவரின் ஆதரவாளர்களும் அடித்துக்கொள்ளத் துவங்கினர். அடிகளாரின் மகள்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் குறைக்கப்பட்டன. மேல்மருவத்தூரில் நடக்கும் எந்த விழாவுக்கும் அன்பழகன் அழைக்கப்படுவது இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தனது ஆதரவைத் தெரிவிப்பதாக அடிகளாரின் மூத்த மகன் அன்பழகன் கருணா​நிதியைச் சந்தித்துவிட்டு வந்தார். இளைய மகன் செந்தில், ஜெயலலிதாவைச் சந்திந்துவிட்டு வந்தார்.
கடந்த புத்தாண்டு அன்று பக்தர்கள் எதிரே பேசிய லட்சுமி பங்காரு அடிகளார், 'அம்மாவுக்குப் பிறகு யாரும் வாரிசு கிடை​யாது. சின்ன அம்மா, பெரிய அம்மா என்று யாரையும் நம்ப வேண்டாம்’ என குண்டைத் தூக்கிப் போட்டார்.
இந்த நிலையில், நான்தான் உண்மையான வாரிசு என நீதிமன்றப் படி ஏறி இருக்கிறார் அன்பழகன். பங்காரு அடிகளார், லட்சுமி பங்காரு அடிகளார், செந்தில் குமார், ரமேஷ், ஸ்ரீதேவி, உமாதேவி, வெங்கடசாமி, மாரிமுத்து, கருணாநிதி என ஒருவர் பாக்கி இல்லாமல் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்து உள்ளார்.
எல்லாம் பங்காளிச் சண்டைப் பகை!

முல்லைப் பெரியாறு அணையை ரகசியமாக பார்க்க ஜெயலலிதா திட்டம். அதிர்ச்சியில் உம்மன்சண்டி.


www.thedipaar.com

புதுப் பொலிவோடு இருக்கிறது தேனி... குழிகள் இல்லாத சாலைகள்... அரசு கட்டடங்களுக்குத் தூசு தட்டிப் புது பெயின்ட்... பார்க்கவே பரவசமாக இருக்கிறது. பென்னி குக் மணிமண்டபம் திறப்பு விழாவுக்காகத்தான் தடபுடல் ஏற்பாடுகள். விழாவுக்கு ஜெயலலிதா வரு கிறார் என்றால் கேட்கவா வேண்டும்? அதனால்தான் அரசு அலுவலர்கள் தேனீயைப் போல பறந்து பறந்து வேலை பார்க்கிறார்கள். 
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியதன் மூலமாக தென் மாவட்டத்து மக்களுக்கும் அதன் மூலமாக தமிழகத்துக்கும் வாழ்நாள் சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் பொறியாளர் பென்னி குக். அவரது பெயரை தனது பிள்ளைகளுக்கு இன்னும் சூட்டி மகிழ்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள். அவருக்கு ஆங்காங்கே சிலைகளும் உள்ளன. அவரது பிறந்த நாளை பொங்கல், தீபாவளியைப் போலக் கொண்டாடவும் செய்கிறார்கள். அப் படிப்பட்ட மகத்தான மனிதருக்கு 1.30 கோடி ரூபாய் செலவில் ஒரு மணி மண்டபத்தை லோயர் கேம்ப் பகுதியில் கட்டி முடித்து இருக்கிறது தமிழக அரசு. அரசுத் துறை அதி​காரிகள் அத்தனை பேரும் லோயர் கேம்ப்பில் முற்றுகை இட்டு விழா ஏற்பாடுகளைக் கவ னிக்​கின்றனர். முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், அமைச்சர்கள் என மாறிமாறி வந்தபடி இருக்க, பிஸியாக இருக்கிறது லோயர் கேம்ப். உள்ளூர் அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம்தான் அத்தனை ஏற்பாடு​களையும் முன்னின்று கவனிக்கிறார். லோயர் கேம்ப்பில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை, விழாவுக்காகத் தேர்வு செய்து இருக்கிறார்கள். பள்ளி வளாகத்தி​லேயே ஹெலிபேட் அமைக்கும் வேலைகளும் ஜரூர்.
பென்னி குக் மணிமண்டபத்தைத் திறக்க தமிழக முதல்வர் வருகிறார் என்ற தகவல், கேரள அரசை அதிர வைத்திருக்கிறது. லோயர் கேம்ப் பகுதியில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் கேரள உளவுத் துறை உடனுக்குடன் முதல்வர் உம்மன்சாண்டிக்கு அப்டேட் செய்கிறது. 'தமிழக முதல்வர் பென்னி குக் மணிமண்டபத்தைத் திறந்து வைப்பதுடன், தேக்கடிக்கு வந்து முல்லைப் பெரியாறு அணையைப் பார்வை​யிடும் திட்டத்தையும் ரகசியமாக வைத்து இருக்கிறார்’ என்று கேரள உளவுத் துறை கொடுத்த அறிக்கைதான் கேரள அரசின் கலக்கத்துக்கு முக் கியக் காரணம். அப்படி ஜெயலலிதா முல்லைப் பெரியாறு அணையைப் பார்வை இட்டால் விவகாரம் பெரிதாகி விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிற​தாம் கேரள அரசு.
www.thedipaar.com
'பென்னி குக் மணிமண்டபம் அவரது பேரனை வைத்துத் திறக்கப்படும்’ என ஜெயலலிதா ஏற் கெனவே அறிவித்து இருந்தார். இங்கிலாந்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் பென்னி குக் பேரன் ஸ்டூவர்ட் ஜாம்சனுக்கு அரசுத் தரப்பில் இருந்து அழைப்பிதழ் அனுப்பினார்களா என்பது இதுவரை தெரியவில்லை. தேனி மாவட்ட விவசாயி​கள் தரப்பில் இருந்து ஸ்டூவர்ட் ஜாம்சனுக்கு மெயில் அனுப்பி இருக்கிறார்கள். அவர் வருவது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
''கடந்த ஆண்டு முல்லைப் பெரியாறு விவ​காரம் வெடித்தபோது தொடங்கி, இன்று வரை அந்த விவகாரத்துக்காகப் போராடிவரும் விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஏராள​மானோர் இருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் இதுவரை அழைப்பிதழ் போகவில்லை. எந்த நாளில் விழா  என்பதைக்கூட அதிகாரிகள் ரகசிய​மாக வைத்து இருக்கிறார்கள்'' என்கின்றனர் விவசாயிகள்.
விவசாயிகள் சங்கத்தின் தலைவரான அப்பா ஸிடம் பேசினோம். ''மக்களின் உணர்வுகளை மதித்து முதல்வர் மணிமண்டபம் கட்டியது சந்தோஷம். பொங்கல் சமயத்தில் இந்த விழா வருவதால், மிகப்பெரிய திரு​விழாவாகக் கொண்டாடத் திட்டம் போட்டு இருக்கிறோம். முதல்வர் வரும்போது 999 பொங்கல் வைத்து, 999 பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கப்​போகிறோம். மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியிடாமல் இருப் பது வருத்தமாக இருக்கிறது'' என்றார்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகள் உட் பட, கட்சிக்காரர்களும் விழா​வுக்கு வருவார்கள். ஏராளமான கூட்டம் கூடும் என்று உளவுத் துறை அறிக்கை கொடுத்துள்ளது. ஆனால், கூட்டம் நடக்கும் இடத்தில், 20 ஆயிரம் பேர்தான் அமர முடியும். நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என் பதால்தான் விழா பற்றிய விவரங்களை ரகசிய​மாக வைத்து இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் சொல் கிறார்கள்.

'அவ்வளவு பணம் கொடுக்க முடியாது... கல்லூரியை உங்கள் பெயருக்கு எழுதி வைக்கிறேன். அதிரும் மருத்துவக்கல்லூரி ஊழல்.


ருத்துவமனைகள் அநியாயமாகப் பணம் பிடுங்குகின்றன என்​பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது. மருத்துவக் கல்லூரி தொடங்குவதில் இருந்தே ஊழ லுக்கான அஸ்திவாரங்கள் ஆரம்பம் ஆகின்றன என்பதைத்தான் சமீபத்திய சி.பி.ஐ. ரெய்டுகள் உணர்த்துகின்றன! 
கடந்த சில மாதங்களாகவே சென்னை ஊழல் தடுப்புப் பிரிவு சி.பி.ஐ. போலீஸுக்கு சில ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. முக்கியமாக இரண்டு பேர் மீது. ஒருவர் சென்னையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன். அகில இந்தியப் பல் மருத்துவக் கவுன்சில் உறுப்பினர். எஸ்.ஆர்.எம். பல் மருத்துக் கல்லூரியின் டீன் (பொறுப்பு) ஆகவும் இருந்தவர். இன்னொருவர் அரசியல் ஆத ரவு பெற்ற சீனியர் டாக்டர். முருகேசனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஊதுகுழலாகச் செயல்படுகிறவர்.  
இந்த இரட்டையர் கடந்த ஒரு வருடமாகத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகிகளைப் பணம் கேட்டு மிரட்டி வந்ததாக புகார்கள் கிளம்பின.
'கல்லூரியின் தரம் குறித்து ஏதாவது குறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம். அதில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், எங்களுக்குப் பணம் தர வேண்டும்' என்று வெளிப்படையாகவே செல்போன் மூலம் மிரட்டுவார்களாம். இந்தப் புகார்கள்​தான் மத்திய அரசுக்குப் பறந்தன.
குறிப்பாக, மத்திய அரசு அறிவித்துள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முறையை தமிழகத்தில் அமல் படுத்தாமல் இருக்க, இத்தனை கோடிகள் வேண்டும் என்ற தகவலை கல்லூரி நிர்வாகிகள் மத்தியில் பரப்பி விட்டனர். 'இந்த இருவரின் இலக்கு பல கோடி ரூபாய். அதை மிரட்டிப் பிடுங்க பல்வேறு வகைகளில் செயல்படுகிறார்கள்' என்ற விவரங்களுடன் மத்திய அரசுக்கு ஒரு சில மருத்துவக் கல்லூரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் போனது.
சென்னை புறநகரை ஒட்டிய கல்லூரி அது கடந்த சில வருடங்களாக அதற்கு மத்திய அரசிடம் உரிய அங்கீகாரம் கிடைக்க​வில்லை. சமீபத்தில் சில கோடி கைமாறியதாம். உடனே, அந்தக் கல்லூரி கேட்டது கிடைத்தது. அதேபோல், சென்னை - காஞ்சிபுரம் மாவட்டங்களை ஒட்டிய இன்னொரு கல்லூரி. இங்கும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணங்களைச் சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. இதை சரிசெய்ய எவ்வளவோ தகிடு தத்தங்கள் செய்தும் நடக்கவில்லை. இப்போது அந்தக் கல்லூரிக்கும் பச்சை சிக்னல் கிடைத்து விட்டது.
இந்த இரண்டு கல்லூரிகளும் எப்படி மீண்டும் அனுமதி பெற்றன? என்று சி.பி.ஐ. அதிகாரிகள் துருவினர். அங்குள்ள அடிப்படை வசதி வாய்ப்புகள் விவரத்தை சேகரித்துத் திடுக்கிட்டனர். இதன் பின்னணியிலும் இரட்டையரின் பங்களிப்பு இருக் குமா என்கிற சந்தேகம் சி.பி.ஐ.-க்கு இப்போது எழுந் துள்ளது.  
இது இப்படி இருக்க.. தமிழகத்தை சேர்ந்த டெல்லி மாண்புமிகு  ஒருவருக்கு சமீபத்தில் போன் வந்தது - சென்னையில் உள்ள கோட்டைப் பிரதிநிதியின் அறையில் இருந்து பேசுவதாகச் சொன்ன அந்தக் குரல்...
''சார்... நீங்கள் முப்பது கோடி உடனே கொடுங்கள். இல்லைன்னா, சர்ப்ரைஸ்-ஆக உங்கள் கல்லூரிக்கு விசிட் வர நேரிடும்'’ என்று சொல்ல..
''அந்த அளவுக்குப் பணம் கொடுக்க முடியாது. வேண்டுமானால், என் கல்லூரியை உங்கள் பெயருக்கு எழுதிக் கொடுத்து விடுகிறேன். நேரில் வாங்க'' என்று சொல்லி ரீசீவரை வைத்தாராம் கோபமாக. அடுத்த நிமிடமே, இந்த போன் மிரட்டல் குறித்து பிரதமர் அலுவலகத்துக்குத் தெரியப்படுத்தினாராம்.
மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றின் முக்கியப் பொறுப்பாளர், சென்னை புறநகரில் உள்ள கல்லூரி ஒன்றின் முக்கியஸ்தர்... இருவரையும் திடீரென அவரவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். தங்களுக்கு சரிப்பட்டு வராத காரணத்தால், அந்த இரட்டையர்கள் திருவிளை​யாடல்களால் இவர்கள் தூக்கி அடிக்கப்பட்டதாக சி.பி.ஐக்குத் தகவல் போனது.
இந்த விவகாரங்களைத் தோண்டித் துருவிக்கொண்டு இருந்தபோதுதான், ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி விவகாரம் பற்றி சி.பி.ஐ-க்குத் தகவல் எட்டியது. அதையும் மாறுவேடத்தில் கண்காணித்தனர். அட்வான்ஸ் பணம் ஒரு கோடி ரூபாய் கைமாறும் இடம் பிரபல கல்லூரி வளாகம் என்று முதலில் தகவல் வந்ததால், சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டு நாட்கள் அங்கேயே முற்றுகையிட்டனர். ஆனால், அங்கே சந்திப்பு நடக்கவில்லை. அதையடுத்து, ஆதி பராசக்தி கல்லூரித் தரப்பினர் முதலில் லஞ்சப் பணம் கொடுக்க, முருகேசனின் நண்பரான சீனியர் டாக்டரை தேடினர். அவர் அந்த நேரம் இல்லாததால், டாக்டர் முருகேசனின் க்ளினிக்குக்கு கல்லூரி தரப்பினர் சென்றனர். முதல் கட்டமாக 25 லட்சம் கைமாறியபோது, ரெய்டில் சிக்கினர்.  
இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ''பணத்​துடன் பிடிபட்ட டாக்டர் முருகேசன் தனக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றார். ஆனால், பணத்தைக் கொடுத்தவர்கள் இன்ன காரணத்துக்காகத்தான் பணத்தைக் கொடுத்தோம் என்று தெள்ளத்தெளிவாக வாக்குமூலம் கொடுத்து விட்டனர். கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் ஜோசப் ஐசக் என்பவர் சர்ப்ரைஸ் ஆய்வு என்ற பெயரில் தனது கல்லூரியில் முருகேசனின் நடவடிக்கை குறித்து கடந்த ஆண்டே புகார் கிளப்பி இருந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம்தான் முருகேசன் அகில இந்தியப் பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினராக ஆகியிருக்கிறார். அதுவே சர்ச்சையாகி கோர்ட் வரை போயிருக்கிறது. முருகேசனின் நெருங்​கிய உறவினர் ஒருவர், பல் மருத்துவத் துறையின் முக்கியப் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதைப்​பற்றியும் விசாரிக்கிறோம். மூன்று சொகுசு கார்களை சமீபத்தில் முருகேசன் வாங்கியிருக்கிறார். இந்த மொத்த விவகாரங்களிலுமே முருகேசனின் நண்பரான சீனியர் டாக்டரும் சம்பந்தப்பட்டு இருப்பதாகப் பல்வேறு புகார்கள் வந்திருக்கின்றன. இந்த ரெய்டில் நண்பர் சிக்கா விட்டாலும், வந்துள்ள புகாரின் அடிப்படையில் தேவையானால், அவரை அழைத்து விசாரிப்போம்'' என்கிறார்கள்.
நாட்டுக்கே வைத்தியம் பார்க்க வேண்டி இருக்கிறது!

குவஸார் நட்சத்திர மண்டலம் கண்டுபிடிப்பு!!

அண்டவெளியில் நாம் இதுவரை கண்டிராத அளவுக்கு ஒரு மாபெரும் 'குவஸார்' மண்டலங்கள் அடங்கிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை ஒளியின் வேகத்தில் கடக்க 4 பில்லியன் ஆண்டுகள் ஆகுமாம். அந்த அளவுக்கு மாபெரும் அளவில் பரந்து விரிந்து கிடக்கிறது இந்த மண்டலம்.


'குவஸார்' என்றால்?.. Quasi-stellar radio source ("quasar") என்பது தான் குவஸார். ஒரு நட்சத்திர மண்டலத்தின் (galaxy) மையக் கருவை அடங்கிய நட்சத்திரம் தான் குவஸார். பல்லாயிரம் சூரியன்களை விட அதிக கனமும் ஒளிவீச்சும் கொண்டவை குவஸார்கள். நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் உள்ள மாபெரும் பிளாக்ஹோலை சூழ்ந்துள்ள இந்த குவஸார்கள் பிளாக்ஹோலில் உள்ள ஆற்றலைத் தான் ஒளியாக, மின்காந்த அலைகளாக வானில் பல பில்லியன் கி.மீ. தூரத்துக்கு பீய்ச்சி அடிக்கின்றன. 



 இந் நிலையில் இதுவரையில் காணப்படாத அளவுக்கு மாபெரும் 'குவஸார்கள்' அடங்கிய ஒரு மண்டலத்தை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Large quasar group (LQG) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மண்டலத்தை கடக்கவே 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகிவிடுமாம். ஒளியின் வேகம் என்பது வினாடிக்கு 186,282 மைல்கள் அல்லது 3,00,000 கிலோ மீட்டர்கள். நமது சூரியனிலிருந்து கிளம்பும் ஒளி பூமியை அடைய 8 நிமிடங்கள் ஆகின்றன. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான 1,50,000,000 கி.மீ. தூரத்தைக் கடக்க இவ்வளவு நேரம் ஆகிறது.   



 எவ்வளவு பெரிசு என்பதற்கு ஒரு உதாரணம்: 
நமது பூமி, சூரியன் உள்ளிட்ட நட்சத்திர மண்டலம் இருப்பது மில்கிவே கேலக்சி எனப்படும் பால்வெளி மண்டலம். இதற்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு மண்டலம் ஆண்ட்ரோமெடா கேலக்சி. இந்த இரு மண்டலங்களுக்கும் இடையிலான தூரம் 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள். அதாவது நாம் ஒரு விண்கலத்தில் ஒளியின் வேகத்தில் பறந்தால் மில்கிவே கேலக்சியிலிருந்து ஆண்ட்ரோமெடா கேலக்ஸியை அடைய 2.5 மில்லியன் ஆண்டுகள் ஆகும்!. வழக்கமாக இரு வேறு நட்சத்திர மண்டலங்களுக்கு இடையிலான தூரம் 6 முதல் 10 மில்லியன் ஒளி ஆண்டுகளாக இருக்கும். ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குவஸார் மண்டலத்தின் விட்டம் 4 பில்லியன் ஆண்டுகள், மில்லியன் அல்ல, பில்லியன். இப்போ புரியுதா எவ்ளவு பெரிசு என்பது (எங்க புரியுது?!).   


பிரச்சனைகளும் ஆரம்பம்? 
சரி, புதுசா ஏதோ பெரிய குவஸார் மண்டலத்தை கண்டுபுடிச்சாச்சு.. ''ரொம்ப சந்தோஷம் தம்பி'' என்று 'கரகாட்டக்காரன்' கனகாவின் அப்பா சண்முகசுந்தரம் மாதிரி உணர்ச்சிவசப்பட்டுவிட்டு ஓராமாய் உட்கார முடியாத நிலை. காரணம், இந்த சைஸ் இதுவரை விண்வெளி குறித்து நாம் வைத்துள்ள பல மாடல்களை, கணக்கீடுகளை துவம்சம் செய்துவிட்டது. குறிப்பாக ஆல்பர்ட் எய்ன்ஸ்டீனின் அண்டவியல் கொள்கையை (Cosmological Principle) இது கேள்விக்குறியாக்கும் என்று தெரிகிறது. அண்டத்தை எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் அது ஒரேமாதிரியாகவே இருக்கும் என்பது இந்தக் கொள்கையின் சாரம்சம். ஆனால், இந்த மாபெரும் சைஸ் அந்தக் கொள்கையை பஞ்சர் ஆக்குகிறது.     

 புதிய சிந்தாங்களுக்கு வித்திடும்... இதனால் இந்த புதிய மாபெரும் 'குவஸார்' மண்டலம் அண்டம் குறித்த கொள்கைகளை, சித்தாங்களை உலுக்கும் என்கிறார்கள் இங்கிலாந்தின் ராயல் அஸ்ட்ரனாமிகல் சொசைட்டி விஞ்ஞானிகள்.



நேஷனல் ஜியோக்ரபிக் - National Geographic

மக்களிடையே அறிவியலையும், ஆராய்ச்சிகளையும் எளிய முறையில் கொண்டு சேர்த்து பெரும் தொண்டு செய்து வரும் அமைப்பு நேஷனல் ஜியோக்ரபிக். இதன் இதழ்களும், தொலைக்காட்சிகளும் உலகப் புகழ்பெற்றவை. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 1888ம் ஆண்டு நிறுவப்பட்டது நேஷனல் ஜியோக்ரபிக் சொசைட்டி. பயணம், அறிவியல் ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்ட அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் இணைந்து லாப நோக்கம் இல்லாத அமைப்பாக இதை உருவாக்கினர். இதில் கல்வியாளர்கள், விஞ்ஞானிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பேச்சுத் திறன் இல்லாதவர்களுக்காக முதல் முதலாக பள்ளியை ஆரம்பித்த கிரீன் ஹப்பர்ட் தான் இதன் முதல் தலைவரானார். இதையடுத்து இவரது மருமகனும் தொலைபேசியை கண்டுபிடித்தவருமான கிரஹாம் பெல் இதன் தலைவரானார்.

 நேஷனல் ஜியோக்ரபிக் பத்திரிக்கை: இந்த அமைப்பு தொடங்கப்பட்ட 9 மாதத்திலேயே நேஷனல் ஜியோக்ரபிக் பத்திரிக்கையும் ஒரு இதழாக ஆரம்பிக்கப்பட்டது. 2011ம் ஆண்டு கணக்கின்படி இந்த இதழ் உலகம் முழுவதும் 36 மொழிகளில் மாதந்தோறும் 83 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டு வருகிறது. இதில் இந்திய மொழிகள் ஏதும் இல்லை. நமக்கு அறிவியல் ஆர்வம் அப்படி!. அமெரிக்காவில் தான் மிக அதிகபட்சமாக 50 லட்சம் இதழ்கள் விற்கின்றன. n நேஷனல் ஜியோக்ரபிக் டிவி: இந் நிலையில் கடந்த 1997ம் ஆண்டு நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. முதலில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்பான இந்தத் தொலைக்காட்சி இப்போது உலகின் எல்லா மூலைகளிலும் பரவிவிட்டது. இப்போது உலகம் முழுவதும் 143 நாடுகளில் 25 மொழிகளில் இந்த சேனல் ஒளிபரப்பாகிறது. இதில் தமிழும்  இருப்பது நமக்குப் பெருமை. சீரியல் ஆண்டிகளையும் மீறி, 24 மணி நேர சினிமா பைத்திய டிவிக்களையும் மீறி, 24 மணி நேர நியூஸ் என்ற பெயரில் கத்திக் குவிக்கும் செய்தி சேனல்களையும் மீறி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ள தொலைக்காட்சி நேஷனல் ஜியோகிராபிக்.


ஞாயிற்றுக்கிழமை-13.01.2013 நேஷனல் ஜியோகிராபிக் சொசைட்டி ஆரம்பிக்கப்பட்டு 125 ஆண்டுகளை வெற்றிகரமாக முடிக்கிறது. இதையொட்டி அதன் இதழ்கள், தொலைக்காட்சிகளில் வெளியான முக்கிய செய்திகள் குறித்த படங்களை நேஷனல் ஜியோகிராபிக் வெளியிட்டுள்ளது. அவற்றில் சில இதோ...
 தென் துருவத்தை அடைந்த முதல் நிருபர்:
 அண்டார்டிகா பகுதிக்கு எத்தனையோ ஆராச்சியாளர்கள் போய்விட்டுத் திரும்பியிருந்தாலும் அங்கு சென்று வந்த முதல் நிருபர் நேஷனல் ஜியோகிராபிக்கின் தாமஸ் அபர்குரோம்பி தான். 1957ம் ஆண்டு அங்கு சென்ற அவர் நேஷனல் ஜியோகிராபிக் சொசைட்டியின் கொடியையும் ஏற்றினார். 1957ம் ஆண்டை சர்வதேச புவியியல் ஆண்டாக ஐ.நா. அறிவித்திருந்த நிலையில் அங்கு தனது நிருபரை அனுப்பியது நேஷனல் ஜியோகிராபிக். 

 உலகை அதிர வைத்த படம்..

 1985ம் ஆண்டு வெளியான இந்தப் படம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்த நிலையில், பாகிஸ்தானில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகக் குடியேற, அங்கு சென்ற நேஷனல் ஜியோகிராபிக் போட்டோகிராபர் ஸ்டீவ் மெக்கர்ரி இந்தப் பெண்ணின் படத்தைப் பிடித்தார். எதிர்காலம் குறித்த கேள்வியும், அச்சமுமாக இந்தச் சிறுமியின் அவலம் நிறைந்த முகத்தை நேஷனல் ஜியோகிராபிக் இதழ் தனது அட்டைப் படத்தில் வெளியிட, உலகம் ஆடிப்போனது. இதுவரை வெளியான நேஷனல் ஜியோகிராபிக் அட்டைப் படங்களிலேயே மிகச் சிறந்த படமாக இன்று வரை இதுவே முன் நிற்கிறது. 


 கை குலுக்க வந்த குட்டி சிம்பன்சி: 
1964ல் தான்சானியா காடுகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட நேஷனல் ஜியோகிராபிக் விலங்கியல் நிருபர் ஜேன் குட்டாலை நெடு நேரமாக தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு குட்டி சிம்பன்சி குரங்கு, அவர் கை நீட்டியதும் வந்து கையைத் தந்தது. இந்த கை குலுக்கலை படம் பிடித்தவர் ஹூகோ வேன் லவிக்.


 இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன...
 இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன என்று நமது ஆட்கள் இன்று வரை பாட்டு மட்டுமே பாடிக் கொண்டிருக்க.. எவரெஸ்ட் சிரகத்தை ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு பகுதியினர் உள்ளிட்ட உலகம் முழுவதையும் சேர்ந்த பலரும் எட்டிப் பிடித்து வருகின்றனர். இதில் பல மாற்றுத்திறனாளிகளும் பெண்களும் அடக்கம். 1963ம் ஆண்டு முதல் அமெரிக்கக் குழு எவரெஸ்ட் சிகரம் ஏறச் சென்றபோது உடன் நேஷனல் ஜியோகிராபிக் நிருபர் பேரி பிஷப்பும் அந்தக் குழுவுடன் சிகரத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார். 
 நிலாவுக்குச் சென்ற நேஷனல் ஜியோகிராபிக் கொடி:

 1969ம் ஆண்டு நிலவில் முதன்முதலில் தரையிறங்கிய நீல் ஆர்ம்ஸ்ட்ராங் தலைமையிலான அமெரிக்க விண்வெளி வீரர்கள் தங்கள் நாட்டுக் கொடியை நிலவில் நட்டதை அனைவரும் அறிவோம். இவர்கள் தங்களுடன் நேஷனல் ஜியோகிராபிக் சொசைட்டியின் கொடியையும் கொண்டு சென்றனர். அமெரிக்க நாட்டு கொடியைத் தவிர நிலவுக்குப் போன இன்னொரு கொடி இது தான். 



 500 வயது 'மம்மி':

 தென் அமெரிக்காவின் பெரு மலைப் பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் தொல்பொருள் ஆய்வாளர் ஜோகன் ரெயின்ஹார்ட் படம் பிடித்த 500 வருடமான மம்மி. இறந்து போன ஒரு சிறுமியின் உடலை அந்த கால பெரு நாட்டு பழங்குடியினர் எதற்காகவோ பாடம் செய்து வைத்துள்ளனர்.


 மாயா மாயா.. எல்லாம் மாயா: 
ஒலகம் அழியப் போகுதுறா என்று பீதி கிளம்ப காரணமாக இருந்த மாயன் நாகரிகத்தினர் உருவாக்கி வைத்துள்ள கோவில்கள், குகை வரைபடங்கள் ஆகியவை இன்னும் மக்களிடையே பீதியையும் ஆர்வத்தையும் கிளப்புபவை. 1984ல் தென் அமெரிக்காவின் கெளதமாலா நாட்டின் ரியோ அசுல் பகுதியில் உள்ள மாயா நாகரீகத்தின் குகையை ஆராயும் நேஷனல் ஜியோகிராபிக் ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் ஆடம்ஸ். 

டைட்டானிக்..
 டைட்டானிக் படத்தை எடுத்த ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து, அந்தக் கப்பல் ஏன் மூழ்கியது என்ற முழு ஆராய்ச்சியை நடத்தியது நேஷனல் ஜியோகிராபிக். 1912ம் ஆண்டு ஏப்ரலில் இந்தக் கப்பல் மூழ்கிய இடத்தில் ஏராளமான சிறிய நீர்மூழ்கிகள், தடயவியல் நிபுணர்கள், கடலடி ஆய்வாளர்கள் உதவியோடு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு கப்பல் மூழ்கியதற்கு, அது நேரடியாக பனிக் கட்டியில் மோதாமல், மோதலைத் தவிர்க்க கடைசி நேரத்தில் திருப்பப்பட்டு, பக்கவட்டில் மோதியதே காரணம் என்பது கண்டறியப்பட்டது. 

இது கிராபிக்ஸ் வால் பேப்பர் அல்ல.. அமெரிக்காவின் கிப்போர்ட் பின்சொட் தேசிய வனப் பகுதியில் எடுக்கப்பட்ட சூரியன் அஸ்தமிக்கும் காட்சி இது. இதைப் படம் பிடித்தது நேஷனல் ஜியோகிராபிக்கின் ஸ்காடிபாய்ப்டிக்ஸ் வெபர். இது உண்மையான படம் தான் என்று சொல்ல வேண்டிய அளவுக்கு நேர்த்தியும் அழகும் இணைந்து உலகைக் கலக்கியது.
 மரத்திலிருந்து.. உகாண்டாவின் குயீன் எலிசபெத் பார்க் வனப் பகுதியில் நேஷனல் ஜியோகிராபிக் போட்டோகிராபர் ஜோயல் சர்டோரை மரத்தின் மீது ஏறி நின்று மிரட்டிய சிங்கம்.

Wednesday, January 2, 2013

ஜெயலலிதாவிடம் வேகம் இல்லை. புதிய பொன்.ராதாகிருஷ்ணன் பகீர்


ரண்டாவது முறையாக, தமிழக பி.ஜே.பி. தலைவர் பதவி பொன்.ராதாகிருஷ்ணன் கையில் கிடைத்​துள்ளது. மனிதர் உற்சாகமாக இருக்கிறார்.
 ''மீண்டும் தலைவர் பொறுப்பு ஏற்றுள்ளீர்கள். கடந்த ஓர் ஆண்டில்  உங்களது சாதனையாக எதைச் சொல்வீர்கள்?''
''எந்த நேரத்திலும் நாடாளுமன்றத் தேர்தல் வரலாம் என்ற சூழ்நிலையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளேன். கடந்த மூன்று ஆண்டுகளில் 55 பெரிய போராட்டங்களை மக்களுக்காக நடத்தியுள்ளோம். இதற்கிடையே, கட்சியின் அடிமட்டக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி இருக்கிறோம். அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக வெற்றிபெற முடிந்தது. 2009-ம் ஆண்டு தலைவராகப் பதவி ஏற்றபோது, குமரி மாவட்டத்தில் பி.ஜே.பி-யை முதல் கட்சியாக மாற்றுவேன் என்று சூளுரைத்தேன். அதேபோல், உள்ளாட்சித் தேர்தலில் நாகர்கோவில் நகராட்சியைக் கைப்பற்றிக் காட் டினோம்.''
ஜெயலலிதாவிடம் வேகம் இல்லை!  'புதிய' பொன்.ராதாகிருஷ்ணன் பகீர்
''அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்?''
''மாநிலம் முழுவதும் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்தி இருக்கிறோம். மாநில, மாவட்டத் தலை வர்களைவிட, கிளைத் தலைவர்களைக் கௌரவிப்பதன் மூலமே கட்சி வளரும் என்பதை நிர்வாகிகளுக்கு வலியுறுத்தி உள்ளேன். தொண்டர்களைத் தேடி, கட்சி நிர்வாகிகளும், மக்களைத் தேடி கட்சியினரும் செல்ல வேண்டும். கட் சியின் வேர்களைத் தேடிச் செல் லும் பயணத்தைத் தீவிரப்படுத்தி வரு கிறோம். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கும் 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கும் கட்சியைத் தயார்செய்வதுதான் இப்போதைய முக்கியப் பணி. 2016-ல் தமிழகத்தில் பி.ஜே.பி. ஆட்சி என்பதுதான் எங்களது லட்சியம். இதை சாதித்துக் காட்டு​வோம்.''
''ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சக்தி இருக்கிறதா? உங்களுக்கே இது ஓவராக தெரியவில்லையா?''
''கர்நாடகத்தில் பி.ஜே.பி. ஆட்சி அமையும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆட்சி அமைத்​தோம். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்​வார்கள். அவர்கள் மனதில் இடம் பிடித்தால், ஆட்சிக் கட் டிலில் அமர்ந்து விடலாம். அதற்கான வேலையைத்தான் செய்து​வருகிறோம். சாதி, மதத்தை திராவிடக் கட்சிகள் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்​கின்றன. சாதிப் பிரச்னைகளால் மதமாற்ற வேலைகள் நடக்கின்றன. இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்​டும்.
தேசபக்தி உள்ள கட்சியால் மட்டுமே நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முடியும். தர்மபுரி போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, வரும் பிப்ரவரியில் பாதயாத்திரை நடத்துகிறோம். தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி மிகப் பெரிய போராட்டத்துக்குத் திட்டமிட்டுள்ளோம். நெசவாளர்கள், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரத்துக்காகவும் உழைப்போம். 2007-ம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசு, சிறு பான்மை மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்குகிறது. அதை, அனைத்து ஏழை இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டிப் போராடுவோம்.''
''தமிழகத்துக்கான தண்ணீரை கர்நாடக பி.ஜே.பி. அரசு தர மறுக்கிறதே? இது சரியா?''
''காவிரி நதிநீர்ப் பிரச்னையில் 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி அறிக்கை​யைச் சமர்ப்பித்தது. மொத்தம் 740 டி.எம்.சி. நீரில் தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனாலும் இதுவரை அந்தத் தண்ணீர் கிடைக்கவில்லை. இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய காங்கிரஸ் அரசின் ஓட்டு வங்கி அர சியலே தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்காததற்குக் காரணம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காவிரிப் பிரச் னையில் சுமூகத் தீர்வு ஏற்​பட்டது. தமிழ கத்துக்கு உரிய தண்ணீரை வழங்கும்​படி கர்நாடக பி.ஜே.பி. அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.''
'நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன்தான் கூட்ட ணியா?''
''கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும். அமைக்கப்படும் கூட்டணி, கௌரவம் நிறைந்ததாகவும் ஒருவரை ஒருவர் மதிக்கும் கூட்டணியாகவும் இருக்கும். இருக்கவும் வேண்டும்''
''அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகள் பற்றி?''
''முந்தைய ஆட்சியோடு ஒப்பிடும்போது பரவா​யில்லை. ஆனால், ஜெயலலிதாவின் வேகம் போதுமானதாக இல்லை. முதல்வர் ஜெயலலி​தா விடம் இருந்து தமிழக மக்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறார்கள்!''

வேட்டி கட்டிய தமிழனா அல்லது சேலை கட்டிய தமிழரா? கருணாநிதியின் மறைமுக கொட்டு


ரசியல், இலக்கிய, திரைப்​பட விழாவாக நடந்து முடிந்திருக்கிறது, 'ப.சிதம்பரம் ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா! 
மத்திய அமைச்சர் ப.சிதம்​பரம் குறித்துப்பல்வேறு துறை வல்லுனர்களின் கருத்துக்​களை கடந்த ஓர் ஆண்டாகத் தொகுத்து புத்தகம் ஆக்கி இருக்கிறார் இலக்கியா நடராஜன். கடந்த 29-ம் தேதி, பிரபலங்​கள் புடைசூழ... காமராஜர் அரங்கத்தில் தடபுடலாக அரங்கேறியது புத்தக வெளி​யீட்டு விழா.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட, சிதம்பரத்தின் தாயார் லட்சுமி ஆச்சி முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
நடிகர் கமல் பேசியபோது, ''இங்கு நான் கடமைக்காக வரவில்லை. கடன்பட்டவனாக வந்துள்ளேன். எனது தாய் இறந்தபோது இவரின் மனைவி, 'உனது தாய் உன்னை விட்டுப் போகவில்லை. (சிதம்பரத்தின் தாயாரைப் பார்த்து) பக்கத்து வீட்டுக்கு வந்து விட்டார். இனி, எங்கள் வீட்டுக்கு வந்துவிடு’ என்று கூறினார்கள். தாய் வீட்டுக்கு நான் கடன்பட்டுள்ளேன். வேட்டி கட்டிய தமிழராக டெல்லியில் வலம்வரும் சிதம்பரம் விரைவில் பிரதமராக வேண்டும்'' என்றார் அதிரடியாக.
www.thedipaar.com
பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் மைக் பிடித்தார் ரஜினி. ''சிதம்பரம் அவர்களுடன் எனக்கு 1996-ம் ஆண்டு நட்பு தொடங்கியது. அப்போது, அரசியல் ஞானிகளாகத் திகழ்ந்த மூப்பனார், கருணாநிதி ஆகியோருடன் நெருக்கமான சினேகம் ஏற்பட்டது. 1996-ல் த.மா.கா-வை மூப்பனார் உருவாக்கினார். அந்த சமயத்தில் தமிழகத்தின் நிலைமையை எனக்கு உணர வைத்தவர் துக்ளக் சோ.
சில ஆண்டுகளுக்கு முன், டெல்லியில் ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சி சார்பில் விருது வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிதம்பரத்தை அழைக்கச் சென்றபோது, ரஜினி வந்தால்தான் நான் வருவேன் என்று சொல்லி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். எனக்காக ப.சிதம்பரமும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எனக்காக அவர் வந்ததை நினைத்துப் பெருமைப்பட்டேன். அவருக்கு ஏழைகளைப் பணக்காரர்கள் ஆக்கவும் தெரியும்; பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கக் கூடாது என்றும் தெரியும்; பணக்காரர்களை ஏழைகள் ஆக்கவும் தெரியும். நடுத்தர மக்களை மேலும் உயர்த்தவும் நன்கு தெரியும். அதனால்தான் மத்திய அரசின் பல்வேறு பொறுப்புகள் இவருக்குக் கிடைக்கின்றன.
பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் மூன்று வட்டங்கள் வைத்து இருப்பார்கள். முதல் வட்டம் அவர்களின் தனித்துவமானது. இரண்டாவது வட்டத்​துக்குள் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் என ரத்தம் சம்பந்தபட்ட பந்தங்கள் இருக்கும். மூன்றாவது வட்டத்தில் நண்பர்கள், நெறியாளர்கள் இருப் பார்கள். இரண்டாம் வட்டத்துக்குள் சொல்லக் கூடாத விஷயங்களை எல்லாம் மூன்றாம் வட் டத்தினரிடம் சொல்லி, தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வார்கள். டெல்லியில் யார் பிரதமராக இருந்தாலும் சரி, அவர்களின் மூன்றாம் வட்டத்தில் இருப்பவர் ப.சிதம்பரம். அவருக்குத் தெரியாமல் அங்கு எதுவும் நடந்து விடாது. அரசியல் ரகசியமாக இருந்தாலும் அது சிதம்பர ரகசியத்துக்குள் அடங்கும்.'' என்று சொல்லிக்கொண்டே வந்த ரஜினி,
''என்னுடன் பேசும்போது நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிதம்பரம் கேட்டார். அவருக்குத் தெரியும்... அப்படி நான் வந்தால், என் வழி.. தனி வழியாக இருக்கும்'' என்று மர்மப் புன்னகையுடன் முடித்தார். (மறுபடியும் முதல்ல இருந்தா?)
நிறைவாகப் பேசிய கருணாநிதி, ''சிதம்பரம் 1984-ல் மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறை துணை அமைச்சராகி, பின்னர் உள்துறை இணை அமைச்சர், அதையடுத்து வர்த்தகம், நிதி அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் பொறுப்பைத் தொடர்ந்து நிதித் துறைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அடுத்து அவர் என்ன அமைச்சர் என்பதை உங்கள் மகிழ்ச்சிப் பேரொலி மூலம் எடுத்துக்காட்டினீர்கள். வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வர​வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்​ளீர்கள்!'' என்று பஞ்ச் வைத்தார். 'அம்மாதான் அடுத்த பிரதமர்’ என்று அ.தி.மு.க-வினர் சொல்லி வருவதற்கு மறைமுகமாக ஒரு கொட்டு வைத்தார் கருணாநிதி.
பார்வையாளராக மட்டுமே கடைசி வரை இருந்தார் ப.சிதம்பரம். இப்படி ஒரு புத்தகம் வெளிவரக் காரணமாக இருந்தது கார்த்தி சிதம்பரமாம். மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி!

வேட்டி கட்டிய தமிழனா அல்லது சேலை கட்டிய தமிழரா? கருணாநிதியின் மறைமுக கொட்டு


ரசியல், இலக்கிய, திரைப்​பட விழாவாக நடந்து முடிந்திருக்கிறது, 'ப.சிதம்பரம் ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா! 
மத்திய அமைச்சர் ப.சிதம்​பரம் குறித்துப்பல்வேறு துறை வல்லுனர்களின் கருத்துக்​களை கடந்த ஓர் ஆண்டாகத் தொகுத்து புத்தகம் ஆக்கி இருக்கிறார் இலக்கியா நடராஜன். கடந்த 29-ம் தேதி, பிரபலங்​கள் புடைசூழ... காமராஜர் அரங்கத்தில் தடபுடலாக அரங்கேறியது புத்தக வெளி​யீட்டு விழா.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட, சிதம்பரத்தின் தாயார் லட்சுமி ஆச்சி முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
நடிகர் கமல் பேசியபோது, ''இங்கு நான் கடமைக்காக வரவில்லை. கடன்பட்டவனாக வந்துள்ளேன். எனது தாய் இறந்தபோது இவரின் மனைவி, 'உனது தாய் உன்னை விட்டுப் போகவில்லை. (சிதம்பரத்தின் தாயாரைப் பார்த்து) பக்கத்து வீட்டுக்கு வந்து விட்டார். இனி, எங்கள் வீட்டுக்கு வந்துவிடு’ என்று கூறினார்கள். தாய் வீட்டுக்கு நான் கடன்பட்டுள்ளேன். வேட்டி கட்டிய தமிழராக டெல்லியில் வலம்வரும் சிதம்பரம் விரைவில் பிரதமராக வேண்டும்'' என்றார் அதிரடியாக.
www.thedipaar.com
பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் மைக் பிடித்தார் ரஜினி. ''சிதம்பரம் அவர்களுடன் எனக்கு 1996-ம் ஆண்டு நட்பு தொடங்கியது. அப்போது, அரசியல் ஞானிகளாகத் திகழ்ந்த மூப்பனார், கருணாநிதி ஆகியோருடன் நெருக்கமான சினேகம் ஏற்பட்டது. 1996-ல் த.மா.கா-வை மூப்பனார் உருவாக்கினார். அந்த சமயத்தில் தமிழகத்தின் நிலைமையை எனக்கு உணர வைத்தவர் துக்ளக் சோ.
சில ஆண்டுகளுக்கு முன், டெல்லியில் ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சி சார்பில் விருது வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிதம்பரத்தை அழைக்கச் சென்றபோது, ரஜினி வந்தால்தான் நான் வருவேன் என்று சொல்லி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். எனக்காக ப.சிதம்பரமும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எனக்காக அவர் வந்ததை நினைத்துப் பெருமைப்பட்டேன். அவருக்கு ஏழைகளைப் பணக்காரர்கள் ஆக்கவும் தெரியும்; பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கக் கூடாது என்றும் தெரியும்; பணக்காரர்களை ஏழைகள் ஆக்கவும் தெரியும். நடுத்தர மக்களை மேலும் உயர்த்தவும் நன்கு தெரியும். அதனால்தான் மத்திய அரசின் பல்வேறு பொறுப்புகள் இவருக்குக் கிடைக்கின்றன.
பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் மூன்று வட்டங்கள் வைத்து இருப்பார்கள். முதல் வட்டம் அவர்களின் தனித்துவமானது. இரண்டாவது வட்டத்​துக்குள் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் என ரத்தம் சம்பந்தபட்ட பந்தங்கள் இருக்கும். மூன்றாவது வட்டத்தில் நண்பர்கள், நெறியாளர்கள் இருப் பார்கள். இரண்டாம் வட்டத்துக்குள் சொல்லக் கூடாத விஷயங்களை எல்லாம் மூன்றாம் வட் டத்தினரிடம் சொல்லி, தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வார்கள். டெல்லியில் யார் பிரதமராக இருந்தாலும் சரி, அவர்களின் மூன்றாம் வட்டத்தில் இருப்பவர் ப.சிதம்பரம். அவருக்குத் தெரியாமல் அங்கு எதுவும் நடந்து விடாது. அரசியல் ரகசியமாக இருந்தாலும் அது சிதம்பர ரகசியத்துக்குள் அடங்கும்.'' என்று சொல்லிக்கொண்டே வந்த ரஜினி,
''என்னுடன் பேசும்போது நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிதம்பரம் கேட்டார். அவருக்குத் தெரியும்... அப்படி நான் வந்தால், என் வழி.. தனி வழியாக இருக்கும்'' என்று மர்மப் புன்னகையுடன் முடித்தார். (மறுபடியும் முதல்ல இருந்தா?)
நிறைவாகப் பேசிய கருணாநிதி, ''சிதம்பரம் 1984-ல் மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறை துணை அமைச்சராகி, பின்னர் உள்துறை இணை அமைச்சர், அதையடுத்து வர்த்தகம், நிதி அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் பொறுப்பைத் தொடர்ந்து நிதித் துறைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அடுத்து அவர் என்ன அமைச்சர் என்பதை உங்கள் மகிழ்ச்சிப் பேரொலி மூலம் எடுத்துக்காட்டினீர்கள். வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வர​வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்​ளீர்கள்!'' என்று பஞ்ச் வைத்தார். 'அம்மாதான் அடுத்த பிரதமர்’ என்று அ.தி.மு.க-வினர் சொல்லி வருவதற்கு மறைமுகமாக ஒரு கொட்டு வைத்தார் கருணாநிதி.
பார்வையாளராக மட்டுமே கடைசி வரை இருந்தார் ப.சிதம்பரம். இப்படி ஒரு புத்தகம் வெளிவரக் காரணமாக இருந்தது கார்த்தி சிதம்பரமாம். மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி!

என் கல்யாணத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. சுதாகரன் பகீர் பல்டி


நீதிபதி பாலகிருஷ்ணாவின் கிடுகிடு நடவடிக்​கைகளால், சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கில் திடீர் உக்கிரம். கோர்ட் பக்கமே தலை​காட்டாமல் இருந்த சுதாகரனை நான்கு நாட்களாக பெங்களூ​ருவிலேயே டேரா போட​வைத்து, கிடுக்கிப்​பிடி கேள்விகளை வீசிக்​கொண்டு இருக்கிறார். (இதில் குறிப்​பிடப்படும் சொத்து மதிப்புகள் 16 ஆண்டு​களுக்கு முந்தை​யவை.) 
கங்கை அமரனின் சொத்து
கடந்த புதன், வியாழக் கிழமைகளில் நீதிபதியின் கேள்வி​க ளுக்குப் பதில் சொன்ன சுதாகரன்,வெள்ளிக்​கிழமை காலை 10.45 மணிக்கு வழக்கம்போல தும்பைப் பூ பைஜாமாவில் வந்து இறங்​கினார். நீதிபதி பாலகிருஷ்ணா  கொஞ்சம் தாமதமாகவே கோர்ட்டுக்கு வந்ததால், 11.20-க்குத்தான் கேள்விகள் பாயத் தொடங்கின. அபிராமி பில்டர்ஸ், ரிவர்வே என்டர்பிரைசஸ், அக்ரோ பிரைவேட் லிமிடெட், மெடோ ஃபார்ம் உள்ளிட்ட நிறுவனங்களுக்காக பல்வேறு இடங்களில் நிலங்கள், கட்டடங்கள் வாங்கியது, அவற்றைப் பதிவு செய்தது, பராமரித்தது தொடர்பாக நீண்ட கேள்விகளை நீதிபதி சரமாரியாகக் கேட்க, சுதாகரனும் சளைக்காமல் 'தெரியாது’ என்ற பதிலையே மீண்டும் மீண்டும் சொன்னார். ஆனாலும் நீதிபதி விடாமல், ''சென்னை தி.நகரில் உள்ள 20.41 லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடம், சென்னை ஸ்ரீராம் நகரில் உள்ள 20.57 லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடம், மாமல்லபுரத்தில் உள்ள 53.11 லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடம், சோழிங்கநல்லூரில் உள்ள 80.37 லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடங்கள் வாங்கியது, பராமரித்தது தொடர்பாக என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார் நீதிபதி. தான் ஏற்கெனவே ரெடி மேடாகக் கொண்டுவந்த ஃபைலைப் பார்த்து, ''விசாரணை அதிகாரிகள் கட்டடத்தின் மதிப்பை உண்மையைவிட அதிகமாகக் காட்டி உள்ளனர். அது மட்டும் இல்லாமல் எங்களுக்கு எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் அதிரடியாகப் புகுந்து சோதனையிலும் ஈடுபட்டனர்'' என்றார்.
''சென்னை புறநகர்ப் பகுதியில் கங்கை அமரனின் சொத்தை வாங்குவதற்காக உங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக கங்கை அமரன் வாக்குமூலம் அளித்திருக்கிறாரே?'' என்று நீதிபதி கேட்டபோது, ''அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது'' எனச் சொல்லிவிட்டு, தன்னுடைய வக்கீல் அன்புக்கரசுவைப் பார்த்து மெல் லிய புன்னகை பூத்தார் சுதா​கரன். அதை, தன் மூக்குக் கண்ணாடி வழியே கவனிக்க நீதிபதி பாலகிருஷ்ணாவும் தவற வில்லை.
எதுவுமே தெரியாது சாமியோவ்
சுதாகரன், சசிகலா மற்றும் இளவரசி மூவரும் இணைந்து நடத்திய நிறுவனங்கள், அப்போது வாங்கிய நிலங்கள், அவற்றைப் பதிவுசெய்யச் செலவழித்த பணம் மற்றும் பங்குப் பரிவர்த்தனைகள் தொடர்பான கேள்விகள் அனைத்துக்கும் 'தெரியாது’ என்ற பதிலையே வேடிக்கை பார்த்தபடியே ஹாயாக சொல்லிக்கொண்டு இருந்தார். அடுத்து, ஜெயலலிதா மற்றும் போயஸ் கார்டன் தொடர்பான‌ கேள்விகளைக் கேட்கத் தொடங்கியதும் நிமிர்ந்து உட்கார்ந்தார் சுதாகரன்.
''நம்பர் 36, போயஸ் கார்டனில் உள்ள ஜெயல​லிதாவின் வீட்டை பொதுப்பணித் துறை பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் குழு 1996-ம் ஆண்டு டிசம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் மதிப்பீடு செய்தது. அதன் மதிப்பு ஏழு கோடியே 93 ஆயிரம் ரூபாய் என்பது உங்களுக்குத் தெரி​யுமா?'' என்று நீதிபதி கேட்டதும் சற்று நேரம் யோசித்த சுதாகரன் வழக்கம்போல், ''ஐ டோன்ட் நோ'' என்று சடாரெனப் பதில் அளித்தார். ''28.6.1996 அன்று ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வேலை செய்யும் கருப்பன் என்பவருக்கு ஜெயலலிதா கையெழுத்திட்டுக் கொடுத்த காசோலை பற்றி தெரியுமா?'' என்று நீதிபதி மடக்க, ''எனக்கு அவர் யாரென்றே தெரியாது'' என்றார் சுதாகரன். இதைத் தொடர்ந்து நீதிபதியின் நீண்ட கேள்விகளுக்கு எல்லாம் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிக் களைத்துப்போன சுதாகரன், அடிக்கடி வென்னீரையும் விக்ஸ் மிட்டாயையும் சுவைத்துக் கொண்டார்.  
மூன்றாம் நாள் முழுக்கவே கேள்விகள் மிகவும் நீளமாக இருந்ததால், 125 கேள்விகள்தான் கேட்க முடிந்தது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நீதிபதிக்கு வேறு வழக்குகள் இருந்ததால், வழக்கை அடுத்த நாளைக்கு ஒத்தி வைத்தார்.
பிரமாண்ட கல்யாணம்
சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்த வரை, 'அபாய வளைவாக’க் கருதப்​படுவது, சுதாகரனின் திருமணம் குறித்த கேள்விகள்தான். அதனால், நள்ளிரவு வரை தன்னுடைய வக்கீல்களிடம் ஸ்பெஷல் கோச்சிங் எடுத்த சுதாகரன் மறுநாள் காலை 10.50 மணிக்கு, சாய்​பாபாவை வணங்கிவிட்டு கோர்ட்டுக்குள் நுழைந்தார். நீதிபதியும் தயாராக இருந்​ததால் சரியாகக் காலை 11 மணிக்கு கேள்வி கேட்கும் படலம் ஆரம்​பமானது.
''டெல்லியைச் சேர்ந்த மல்லம் லா என்ற தணிக்கையாளரின் மதிப்பீட்டின்படி, உங்களின் திருமணச் செலவுக்காக ஜெயலலிதா கையெழுத்திட்ட 5.91 கோடி ரூபாய் காசோலை பற்றி தெரியுமா?'' என்று நீதிபதி கேட்டதும் தன்னுடைய கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
''எனது திருமணத்துக்குச் செய்யப்பட்ட செலவுகள் எல்லாம் எனது மனைவி வீட்டார் செய்ததே...'' என்று சுதாகரன் சொன்னார். கூடுதல் பதிலை எதிர்பார்த்திருந்த நீதிபதி, 'அவ்வளவுதானா?’ என்பது​போல் பார்த்துப் பதிலை பதிவு செய்தார். ''உங்களின் திருமணத்துக்காக 65 ஆயிரம் அழைப்பிதழ்கள் அச்சிடுவதற்கு ஜெயலலிதா 1.15 லட்சத்துக்கு
கா​சோலையில் கையெழுத்திட்டது குறித்துத் தெரியுமா?'' என்று கேட்டதும் அதே ஸ்பீடில், ''தெரியாது'' என்றார் சுதாகரன்.
அதைத்தொடர்ந்து, ''உங்கள் திருமணத்துக்காக யூனிட் டூல்ஸ் நிறுவனத்தின் ஆறு ஆடம்பர கார் களைப் பயன்படுத்துவதற்கு ஜெயலலிதா செக் கொடுத்தது, அ.தி.மு.க. அலுவலகத்தில் பணியாற்றும் பாபு என்பவரிடம் 50 ஆயிரம் அழைப்பிதழ்களை அச்சிடுவதற்கு 64 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கொடுத்தது, திருமணத்தின்போது வாங்கப்பட்ட 450 சட்டைகள், 450 பேன்ட்கள், 45 சிக்நோரா ஆடைகள் ஆகியவற்றுக்கான தையல் கட்டணமாக ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 800 ரூபாய் காசோலையில் ஜெயலலிதா கையெழுத்திட்டுக் கொடுத்தது பற்றி வரிசையாக கேள்விகள் கேட்டு நீதிபதி கலங்கடித்தார். ஆனாலும் சுதாகரன் அனைத்துக்கும் கொஞ்சமும் அசராமல், 'தெரியாது’ என்
பதை​யே பதிலாகச் சொன்னார்.
எத்தனை முறை கேட்டாலும் ஒரே பதில்
கல்யாண கேள்விகளைத் தொடர்ந்து, மீண்டும் வங்கிப் பணப்​பரிவர்த்​​தனைகள் தொடர்பான கேள்விகள் தொ​டர்ந்தன. ''சென்​னை யில் உள்ள எஸ்.பி.எம். தலைமை அலுவலகத்தில் நீங்கள் கணக்குத் தொடங்கி இரண்டு கோடி ரூபாய் கடன் வாங்கியது மற்றும் கனரா வங்கியின் மைலாப்பூர் கிளையில் கணக்குத் தொடங்கியது உண்​மையா?' என்று கேட்டார் நீதிபதி.
''உண்மையாக இருக்கலாம்'' என்றார் சுதாகரன்.
அதுபோல் வங்கிக் கணக்கு எண் 1068-ல் இருந்து உங்களுடைய 1110 மற்றும் 1113 ஆகிய வங்கிக் கணக்கு​களுக்கு பல லட்ச ரூபாய் பரிமாற்றம் நடை​பெற்றது தெரியுமா?'' என்றார். இந்தக் கேள்விக்கும், ''உண்மையாக இருக்கலாம்'' என்றே பதில் சொன்னார்.
''சசிகலாவின் வங்கிக் கணக்கில் இருந்து உங்களின் வங்கிக் கணக்குக்கு 1992 முதல் 1996 வரை பலமுறை பணப் பரிவர்த்தனைகள் ந‌டந்திருக்கின்றனவே?'' என்ற கேள்விக்கும் ''உண்மையாக இருக்கலாம். நிறுவனங்களின் நிர்வாகக் காரணங்களுக்காகப் பெறப்பட்டு இருக்கலாம். இதுதொடர்பான விரிவான விளக்கத்தை எழுத்து மூலமாகத் தருகிறேன்'' என்றார் சுதாகரன். இதைத் தொடர்ந்து, சுதாகரனிடம் கோப் புகளில் கையெழுத்து வாங்கும் பணி ஆரம்ப​மானது.
கெஞ்சிய நீதிபதி
சுதாகரன் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லி முடித்ததும் நீதிபதி பாலகிருஷ்ணா, ''சுதாகரனிடம் மீதி இருக்கும் கேள்விகளை திங்கள்கிழமை கேட்டு முடித்து விடுகிறேன். அதனால், டிசம்பர் 31-ம் தேதி, திங்கள்கிழமை வந்து விடுங்கள். அதன்பிறகு இளவரசி...'' என்று சொல்லி முடிக்கும் முன்பே இருக்கையை விட்டு எழுந்த ஜெ. தரப்பு வக்கீல்கள், ''திங்கள் கிழமை வேண்டாம். இன்றைக்கு சனிக்கிழமை. தமிழ்நாட்டுக்குப் பயணித்து விட்டு, ஞாயிறு மதியமே களைப்பாகப் பெங்களூருக்குக் கிளம்ப வேண்டும். அது மட்டுமில்லாமல் புத்தாண்டை முன்னிட்டு குடும்பத்​துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்திக்க வேண்டும். அதனால், ஜனவரி 2-ம் தேதிக்கு தயவு செய்து ஒத்தி வையுங்கள்'' என்று கெஞ்சும்​ தொனியில் கோரஸாகக்‌ கேட்டனர்.
அதற்கு ''இல்லை... இல்லை. தினமும் கோர்ட்டை நடத்தி வழக்கை விரை​வாக முடிக்க வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்​டின் உத்தரவு. நான் சிறப்பு நீதிபதி, சீக்கிரமாக வழக்கை முடிக்க வேண்டும் என்பது உங்களுக்கே தெரி​யும். அதனால், தயவுசெய்து எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்'' என்று பதிலுக்கு நீதிபதியும் கெஞ்சினார். ஆனாலும் ஜெ. தரப்பு வக்கீல்கள் விடாமல், ''புத்தாண்டு அன்று கோயிலுக்குப் போகணும். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்'' என்று கேட்டனர்.
''நீங்கள்தான் கோயிலுக்குப் போக வேண்டும் என்று சொல்கிறீர்கள். அவர் (சுதாகரன்) அமைதியாகத்தான் இருக்கிறார்'' என்று நீதிபதி சொல்ல... அதைக் கண்டுகொள்ளாத சுதாகரன் கையெழுத்துப் போடுவதில் பிஸியாக இருந்தார். மீண்டும் ஜெ. வக்கீல்கள் ''ப்ளீஸ்... ப்ளீஸ்...'' என்று கெஞ்சவே, ''சரி, ஜனவரி 2-ம் தேதி புதன்கிழமை வழக்கை ஒத்திவைக்கிறேன்'' என்றார். நான்கு நாட்கள் முடிவில் 632 கேள்விகளுக்கு சுதாகரன் பதில் சொல்லி இருக்கிறார். கோர்ட்டை விட்டு வேகமாக வெளியேவந்த சுதாகரன், ''என்ன ஜட்ஜ் இவ்ளோ ஸ்ட்ரிக்ட்டா இருக்கிறார்?'' என்று தன் வக்கீல்களிடம் ஆதங்கத்தைத் தெரிவித்து விட்டு சென்னைக்குக் கிளம்பினார். இன்னும் 282 கேள்விகள் மட்டுமே இருக்கின்றன. அடுத்து, இளவரசியை நோக்கி கேள்விக்கணைகள் பாயும்

சேவை வரிக்கு ரஜினி, கமல் ஆதரவா? மீண்டும் போராட்டத்தில் தமிழ் சினிமா


காவிரி, ஈழப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்த சினிமாக்காரர்களை, மீண்டும் போராட்டக் களத்துக்கு இழுத்து வந்துள்ளது சேவை வரி! 
இப்போது தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் தவிர ஏனைய திரைப்படத் தொழிலாளர்கள் அனைவரும், வாங் கும் சம்பளத்தில் 12.3 சதவிகிதம் சேவை வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஃபெப்சி தலைவர் அமீர், தியேட்டர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் ஒன்றுகூடி ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்கள். சரத்குமாரிடம் பேசினோம்.
''சினிமாவை நம்பி இருக்கும் தயாரிப்பாளர், வினி யோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் தவிர ஒட்டுமொத்த சினிமாத் தொழிலாளர்களுக்கும் சேவை வரி விதிப்பது என்ன நியாயம்? சினிமா உலகத்தையே பிரித்துப்பார்த்தால் என்ன அர்த்தம்? அதிலும் சினிமாவில் இருக்கும் கிரியேட்டர்களுக்கு சர்வீஸ் டாக்ஸ் கிடையாதாம்... அது என்ன கணக்கு? கேமரா முன் நடிப்பவர்களும் தங்களுடைய கிரியேட்டிவ் திறமையைக் காட்டித்தானே நடிக்கிறார்கள்.
சேவை வரிக்கு ரஜினி, கமல் ஆதரவா? மீண்டும் போராட்டத்தில் தமிழ் சினிமா - Thedipaar.com
நடிகர்கள் மீது சேவை வரி விதித்தாலும், அதை தயாரிப்பாளர்தான் செலுத்த வேண்டியது வரும். அதாவது, 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடி கருக்கு சர்வீஸ் டாக்ஸ் தொகையான 12 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயையும் தயாரிப்பாளர்தான் செலுத்தும் சூழ்நிலை உண்டாகும். அதுபோல், சின்னத் திரையில 10 லட்சத்துக்குக் குறைவாக சம்பளம் வாங்குபவர்கள் சேவை வரி செலுத்த வேண்டாம் என்கிறார்கள். இது, நிச்சயமாக டி.வி. கலைஞர்கள் மத்தியில் பிரிவி னையை ஏற்படுத்தும்.
ஏற்கெனவே, ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங் கும் நடிகர்கள் 33 ஆயிரம் ரூபாயை வருமான வரியாகச் செலுத்துகின்றனர். இப்போது, 12.3 சதவிகிதம் சேவை வரியையும் சேர்த்தால் 45 ஆயிரம் ரூபாயை அரசாங்கத்துக்குக் செலுத்தி விட்டு, 55 ஆயிரம் ரூபாயை மட்டுமே எடுத்துச்செல்லும் நிலைமை ஏற்படும்.
உடல்நலத்துக்கு தீங்கானது என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட சிகரெட், மது மீது 100 சதவிகிதம் விரி விதிக்கட்டும்... எங்களுக்கு ஏன் விதிக்கிறார்கள்? கடந்த 2.7.2012 தேதியில் இருந்தே சேவை வரி அமலுக்கு வந்துவிட்டது. அன்றைய தினத்தில் இருந்து நடிகர்கள் இதுவரை வாங்கிய சம்பளத்துக்கும் வரி செலுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலை.
டாக்டர், வக்கீல், லாரி உரிமையாளர்களுக்கு முதலில் சேவை வரி விதித்தனர். 'நாங்கள் மக்களுக்கு சேவை செய்கிறோம்... எங்களுக்கு எதற்கு சேவை வரி?’ என்று அரசை எதிர்த்துப் போராடினர். உடனே, அரசாங்கம் அவர்களுக்குச் சேவை வரியை நீக்கியது. அதுபோல, சினிமாத் துறையினர் மீது விதித்திருக்கும் சேவை வரியையும் அரசு நீக்க வேண்டும். எங்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள தியேட்டர்கள் உரிமையாளர்களையும் அழைத்து இருக்கிறோம். சேவை வரியை நீக்கச் சொல்லி ஜனவரி 7-ம் தேதி ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகமும் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம்'' என்று கொதித்தார்.
சினிமா துறையினருக்கு விதிக்கப்பட்ட வரி குறித்து, சேவை வரித்துறை சென்னை மண்டல கமிஷனர் பெரியசாமியிடம் விளக்கம் கேட்டோம்.
''இப்போது புதிதாக எதுவும் விதிக்கவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே சேவை வரி விதிக்கப்பட்டது. இதைஎதிர்த்து டாக்டர்கள், வக் கீல்கள், லாரி உரிமையாளர்கள் போராடியது உண்மை. ஆனால், டாக்டர்களுக்கு மட்டும்தான் சேவை வரி தளர்த்தப்பட்டது. வக்கீல்களுக்கான வரியை அவர்கள் வாதாடும் நிறுவனமே செலுத்தி விடுகிறது. அதுபோல் லாரி உரிமையாளர்களுக்கான வரியை, சரக்கு பெற்றுக் கொள்பவர் செலுத்துகிறார்.
நடிகர்களுக்கு மட்டுமா, ஏர்போர்ட், ரயில்வே டிக்கெட் என எல்லாவற்றுக்கும் சேவை வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஜூலை மாதமே சினிமா சேவை வரி அமலாகி விட்டது. பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப், சல்மான்கான் போன்றவர்கள் சரியாக சேவை வரியைக் செலுத்துகிறார்கள். அது மட்டுமல்ல... தனியார் நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடர்களாக இருக்கும் தமிழ் நடிகர், நடிகைகள் எல்லாம் கடந்த ஐந்து வருடங்களாகவே சேவை வரி செலுத்துகிறார்கள். சினிமாத் துறையினர் மீதான சேவை வரியை ரத்துசெய்வது குறித்துப் பரிசீலிக்க வேண்டியது நாடாளுமன்றம்தான்'' என்றார்.
சினிமாத் துறையினர் மீது சேவை வரி என்ற பிரம்மாஸ்திரத்தை ஏவி இருக்கும் நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்தின் நூல் வெளியீட்டு விழாவில், ரஜினியும் கமலும் கலந்துகொண்டதில், சினிமா உலகத்துக்கு கடும் வருத்தம். இருவரும் விழாவைப் புறக்கணித்து இருந்தால்,  சேவை வரி விதிப்பில் நிச்சயம் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று புலம்புகிறார்கள்.
அவர்கள் இருவரையும் உண்ணாவிரதத்துக்கு அழைத்து வரும் முயற்சிகள் தொடங்கி உள்ளன!

எனது இந்தியா (கிருஷ்ணரின் சாபம்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

ஐதீகப்படி, கிருஷ்ணரின் மகனான சாம்பன், தன்னைவிட அழகாக இருக்கிறான் என்று அவனைத் தொழுநோயாளியாக ஆகும்படி கிருஷ்ணன் சாபம் கொடுத்தார் எனவும், சூரியனை வணங்கி வந்தால் மட்டுமே அந்த சாபம் மீட்சி பெறும் என்பதால் கொனார்க் கோயில் கட்டப்பட்டது எனவும் நம்பப்படுகிறது. ஆனால், பழங்குடி மரபில் சூரியனை வணங்குவது வழக்கம். பழங்குடிகள் அதிகமாக வாழ்வது ஒரிசா மாநிலம். ஆகவே, அங்கே சூரியனை வணங்குவது தொன்றுதொட்டு வந்திருக்கக்கூடும். அந்தப் பழங்குடி கடவுள், செவ்வியல் வடிவம் பெறும் முயற்சியாகவே பிரமாண்டமான சூரியக் கோயில் உருவாகியிருக்கக்கூடும்.

கொனார்க் கோயிலுக்குள் சூரியனின் மிகப்பெரிய சிற்பம் இருக்கிறது. அலங்கரிக்கப்பட்ட குதிரைகளில் சூரியன் வருவது போன்ற சிற்பம் அது. தென் இந்தியக் கோயில்களில் இருந்து கொனார்க் பெரிதும் மாறுபட்டது. வெளியே இருந்து பார்க்கும்போது, அதன் பிரமாண்டம் நமக்குப் புலப்படாது. அருகில் சென்று பார்க்கும்போது, கோயில் விஸ்வரூபம்கொண்டதாகத் தெரிகிறது. தொழு நோயில் இருந்து மீட்சி பெறுவதற்கான இடம் என்று நம்பப்படுவதால், இன்றும் இந்தக் கோயில் பகுதியில் ஏராளமான தொழுநோயாளிகளைப் பார்க்க முடிகிறது. சிற்பத் தொகுப்பு ஒன்றில் ஒரு தொழுநோயாளி பெண்ணுடன் கல வியில் ஈடுபடும் சிற்பமும் இருக்கிறது. சூரியன் ஆணா... பெண்ணா என்பதில் ஒவ்வொரு தேசத்திலும் ஒருவித விளக்கம் கூறுகிறார்கள். கிழக்கு இந்தோனேஷியாவில் சூரியன் ஆண், பெண் என்ற இரு வடிவிலும் காணப்படுகிறது. போன்டா பழங்குடியினரிடம், சூரி​யனும் சந்திரனும் அண்ணன் தங்கை என்ற நம்பிக்கை இருக்கிறது.


ஒரு நாள், தங்கை நிர்வாணமாகக் குளிக்கையில் அண்ணன் பார்த்துவிடவே, இனிமேல் உன் முகத்தைப் பார்க்கவே மாட்டேன் என்று கோபித்துக்கொண்டு தங்கை பிரிந்து போய்விட்டதாகப் பழங்குடி கதை கூறு கிறது. சூரிய வெளிச்சம் தொழுநோயைக் குணப்படுத்தும் என்று போன்டா மக்கள் நம்புகின்றனர். சூரியனுக்குச் சாத்தப்படும் மலர் எருக்கம் பூ. அது, மருத்துவ ரீதியாக தொழுநோயைக் குணமாக்கக் கூடியது. ஆகவே, சூரியனோடு தொழுநோய் குணமாக்கும் சடங்கு சேர்ந்து விட்டது என்றும் இதைத் தமிழ்நாட்டில் உள்ள சூரியனார் கோயிலில் எருக்கம் பூ சாத்தப்படுவதை முன்வைத்து பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தனது கட்டுரையில், 'இது பழங்குடி மரபின் நீட்சி’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். கலவிச் சிற்பங்கள் இந்தக் கோயிலில் இடம்​பெற்றதற்குக் காரணம், சூரியன் ஜீவ உற்பத்தியை உருவாக்கும் கடவுள். அவர் வழியாகவே உயிர்கள் தோன்றுகின்றன. ஆகவே, சூரியனின் முன்பாக பாலுறவு காட்சியாக்கப்பட்டு இருக்கின்றன என்கிறார்கள்.

13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொனார்க்கில் எப்படி ஆப்பிரிக்க ஒட்டகச்சிவிங்கி வந்தது? அந்தச் சிற்பத்தைப் பார்த்தால் முழங்கால் வரை ஆடை அணிந்த சிலர் ஒட்டகச்சிவிங்கியை மன்னருக்குப் பரிசாக அளிப்பதற்குக் கொண்டு வருவது போலத்தான் காணப்படுகிறது. சாதவாகர்கள் எனப்படும் ஒரிசா வணிகர்கள் கடல் கடந்து வணிகம் செய்துள்ளதற்கு நிறையவே சான்றுகள் இருக்கின்றன. இந்தக் கோயிலின் சிற்பத் தொகுதிகளில் உள்ள யானை வரிசையில் ஒன்றாக ஆப்பிரிக்க யானையும் இருக்கிறது.


ஒரிசாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் 13-ம் நூற்றாண்டில் நேரடியான கடல் வணிகம் நடந்து இருக்கிறது என்பதன் வரலாற்றுச் சாட்சிபோலவே இந்த ஒட்டகச்சிவிங்கி இருக்கிறது. ஆப்பிரிக்காவின் சோமாலியா பகுதியில் இருந்து வங்காளத்துக்கு வணிகம் செய்வதற்கு வந்த கடலோடிகள், ஒட்டகச்சிவிங்கியைப் பரிசாக அளித்து இருக்கின்றனர். வங்காளத்தில் இருந்து அது, மைசூர் அரசுக்குப் பரிசாக அளிக்கப்பட்டு இருக்கிறது. அங்கிருந்து தமிழகத்துக்கு வந்திருக்கிறது என்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஒட்டகச்சிவிங்கி, இந்தியாவுக்கு வந்ததை தேடப்போய் அது எப்படி சீனாவுக்குப் போனது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. 14-ம் நூற்றாண்டில் சீனா மிகப் பெரிய கடல் பயணத்தைத் தொடங்கியது. 317 கப்பல்கள். அவற்றில் 27 ஆயிரம் ஆட்கள் என்று பிரமாண்டமான கடல் பயணத்துக்கு மன்னர் அனுமதி அளித்தார். இந்தக் கடல் பயணத்துக்குத் தலைமை வகித்தவர், 'ஷாங் ஹே’(Zheng He) என்ற அரவாணி. அவர், மன்னர் ஜுடேயின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.

அப்பா போரில் இறந்துவிடவே சிறு வயதில் அடிமையாக விற்கப்பட்டார் ஷாங் ஹே. அவரது ஆண் உறுப்பு நீக்கப்பட்டு அரண்மனையில் பணிபுரியும் எண்ணிக்கையற்ற அரவாணிகளில் ஒருவராக மாற்றப்பட்டார். சீன மன்னர்கள், அரவாணி​களின் படை ஒன்றை வைத்திருந்தனர். அவர்கள் அத்தனை பேரும் பாலுறுப்புத் துண்டிக்கப்பட்டு அரவாணி ஆக்கப்பட்டவர்களே. அவர்களது வேலை அந்தப்புரத்தைக் காவல் காப்பது. அரசிக்கு மெய்க்காவல் செய்வது ஆகியவைதான். அரவாணிகளாக மாற்றப்பட்டபோதும் அவர்கள் போர்த் திறனில் வலிமை பெற்றிருந்தனர்.

ஷாங் ஹே அப்படித்தான் வளர்க்கப்பட்டார். குறிப்பாக, ஜு டே இளவரசராக இருந்த நாட்களில் அவருக்குச் சேவகம் புரிந்துவந்த ஷாங் ஹே, கொஞ்சம் கொஞ்சமாகப் பதவி உயர்வு பெற்று தளபதி என்ற அந்தஸ்தை அடைந்தார். அப்போதுதான், மிங் வம்சத்தின் மன்னரான ஜு டே, அண்டை நாடுகளுடன் வணிக உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினார். அதனால்தான், ஷாங் ஹே தலைமையில் கடல் பயணம் செல்லும்படி உத்தரவிட்டார். பெரிய பொருட்செலவில் இந்தப் பயணம் தொடங்கியது.

இதில், முதல் கடல் பயணத்திலேயே ஷாங் ஹே இந்தியாவுக்கு வந்து இருக்கிறார். வங்காளத்துக்கும்வந்து இருக்கிறார். பிறகு, கேரளாவின் கொச்சிக்குச் சென்று, அங்கிருந்த மன்னர்களைச் சந்தித்து இருக்கிறார். அங்கிருந்து இலங்கை, கம்போடியா, வியட்நாம் என்று கிழக்கு ஆசிய நாடுகளில் பயணம் செய்து இருக்கிறார்.

இந்தியாவுக்கு வந்தபோது, வங்காளத்தில் முதன்முறையாக ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்து இருக்கிறார் ஷாங் ஹே. அவரால் நம்பவே முடியவில்லை. சீனப் புராணங்கள் 'க்யூலின்’ என்றொரு கற்பனையான மிருகத்தைப் பற்றி குறிப்பிடுகின்றன. அந்த மிருகம் சொர்க்கத்தில் வாழக்கூடியது. ஒற்றைக் கொம்புடன் யூனிகார்ன் போன்ற தோற்றம் கொண்டது. அந்த மிருகத்தைக் காண்பது புனிதமானது. கன்ஃபூசியஸ்கூட இதைப்பற்றி மிகவும் உயர்வாகக் குறிப்பிட்டு இருக் கிறார். அப்பேர்ப்பட்ட சொர்க்கத்தில் வசிக்கும் விலங் கை நேரில் கண்ட ஷாங் ஹே மிகவும் ஆச்சரியம் அடைந்தார். ஆப்பிரிக்க வணிகக் குழுவினரை அணுகி, தனக்கு இரண்டு தெய்வீக விலங்குகள் வேண்டும் என்று கேட்டு வாங்கி இருக்கிறார். அதற்கு மாற்றாக சீனப் பட்டும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களும் நிறையவே கொடுத்து இருக்கிறார். சொர்க்கத்தில் இருந்து ஒரு விலங்கைக் கொண்டு வருவதாக மன்னருக்குக் கடிதமும் அனுப்பினார். மன்னரால் நம்பவே முடியவில்லை. இப்படி ஒரு விலங்கு எப்படி பூமிக்கு வந்தது. அதை எப்படி நமது கடலோடிகள் கொண்டுவந்தனர் என்று ஆச்சர்யம் அடைந்தார். அதை, 'க்யூலின்’ என்றே அழைத்து இருக் கின்றனர்.

ஒட்டகச்சிவிங்கி சீனாவுக்குத் தன் ஆட்சிக் காலத்தில் வந்திருப்பது, கடவுளின் ஆசி தனக்கு நேரடியாகக் கிடைத்து இருப்பதாகவே மன்னர் நம்பினார். அதைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். மக்கள் நீண்ட வரிசையில் நின்று அதை வேடிக்கை பார்த்து இருக்கின்றனர்.  தேவலோகத்தில் இருந்த மிருகம் சீனா வந்துள்ள செய்தி தேசம் முழுவதும் பரவியது.

ஒட்டகச்சிவிங்கி அதிகமாகத் தூங்குவது இல்லை. அது, ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்கக்கூடிய மிருகம். அதிலும் சில நாட்கள் 10 நிமிடங்கள் மட்டுமே தூங்கும். வான் உலகில் இருந்து வந்த மிருகம் என்பதால் மட்டுமே அதனால் இரவில் விழித்திருக்க முடிகிறது என்று மன்னர் நம்பினார். ஒட்டகச்சிவிங்கியின் குரலும் அது அடிக்கடி தலையை உயர்த்தி வானைக் காண்பதும் அந்த நம்பிக்கையை உறுதி செய்தது. ஒட்டகச்சிவிங்கியை எப்படிப் பராமரிப்பது என்று மன்னருக்குத் தெரியவில்லை. அது எப்படி இனவிருத்தி செய்யும் என்பதும் அவருக்குப் புதிராகவே இருந்தது. அதற்காகவே, ஆப்பிரிக்காவில் இருந்து ஒட்டகத்தின் ரகசியம் அறிந்தவர்கள் அழைத்து வரப்பட வேண்டும் என்று மன்னர் உத்தரவிட்டார்.

ஷாங் ஹே உடனே ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை விலைக்கு வாங்கிவர ஏற்பாடு செய்தார். அவ்வளவு கறுப்பான மனிதர்களை சீனர்கள் அதற்கு முன் பார்த்ததே இல்லை. ஆகவே, சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வந்த காரணத்தால் அவர்கள் கறுப்பாகி விடுகிறார்கள் என்று நம்பினர். கறுப்பு அடிமைகளின் உதவியால் சில ஆண்டுகளில் ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை உயர்ந்தது. தனக்கு நெருக்கமாக உள்ள மன்னர்களுக்கு ஒட்டகச்சிவிங்கியைப் பரிசளிப்பதை சீன மன்னர் பெருமையாக உணர்ந்தார். இப்படித்தான், சீனாவுக்கு ஒட்டகச்சிவிங்கி வந்தது என்று ஷாங் ஹேவின் கடற்பயணக் குறிப்பு கூறுகிறது.

இதே 1486-ம் ஆண்டு இத்தாலிய நிர்வாக அதிகாரியான பிளாரன்சோ மெடிசிக்குப் பரிசாக ஆப்பிரிக்காவில் இருந்து ஒட்டகச்சிவிங்கி  அனுப்பி வைக்கப்பட்டு, இத்தாலி வந்து சேர்ந்திருக்கிறது. இத்தாலிய மக்களும் அதை ஆச்சர்யத்துடன் பார்த்து இருக்கின்றனர். ஆனால், சீனாவில் கிடைத்த தெய்வீக அடையாளம் இங்கே கிடைக்கவில்லை.

இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு பகுதி அதன் இயற்கையியல் வரலாறு. அந்த வரலாற்றை நாம் நுட்பமாக ஆராய்ந்தால், அதனுள் காலனியத்தின் தாக்குதல் எவ்வளவு வலிமையானது என்பதைத் தெளிவாகக் காண முடிகிறது. திபெத்தியக் கலைமான்கள், பனிச் சிறுத்தைகள், காண்டாமிருகங்கள், பறக்கும் அணில்கள், சிங்கமுகக் குரங்கு என்று எத்தனையோ அரிய மிருகங்கள் வேட்டையாடப்பட்டு, உணவுக்காகவும், அலங்காரப் பொருட்களுக்காகவும், மருந்துக்காகவும் அழிக்கப்பட்டு இருக்கின்றன.

ஒவ்வொரு மாநிலமும் தனது மாநிலப் பறவை, விலங்கு, பூ என ஒன்றைத் தேர்வு செய்துள்ளன. தமிழகத்தின் மாநில மலர் காந்தள், பறவை பச் சைப் புறா, விலங்கு வரையாடு. இவற்றை எத் தனை பேர் பார்த்து இருப்பார்கள் என்பது தெரிய வில்லை. விலங்குகளையும் பறவைகளையும் வெறும் அடையாளச் சின்னங்களாக வைப்பதோடு மட்டுமின்றி அவற்றைப் பாதுகாக்கவும் அவற்றின் வாழ்விடங்களை முறையாகப் பராமரிக்க வேண்டியதும் நமது கடமை. மனிதர்கள் தங்களின் சுயலாபத்துக்காக விலங்குகளைப் பரிசளிப்பது மன்னர் காலம் தொட்டு இன்று வரை நடந்துவருகின்றன. அது தடுக்கப்பட வேண்டும் என்பதே வரலாறு சுட்டிக்காட்டும் உண்மை.