

மணமகள் சினேகா கழுத்தில் பிரசன்னா இரண்டு முறை தாலி கட்டி தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார். இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடந்தன. முன்னதாக நேற்று(10ம் தேதி) மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சினேகாவை ஒரு இளவரசி போல அலங்கரித்து, மலர் அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் அமர வைத்து அழைத்து வந்தனர். பிரசன்னாவை தேரில் அழைத்து வந்தனர். இருவரும் மாலை மாற்றிக் கொண்டு மேடையில் நின்றனர். அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.












No comments:
Post a Comment