Wednesday, November 9, 2011

முதல் உலகப்போருக்கு அணுகுண்டை உருவாக்கிய நோபெல் பரிசு விஞ்ஞானி காலமானார்.

இயற்பியல் துறையில் நோபல் பரிசுப் பெற்ற நார்மன் ராம்சே (96) தூக்கத்தில் காலமானார்.

அணு மற்றும் அணுவின் மூலக்கூறுகள் குறித்த ஆய்வுக்காக அவருக்கு 1989ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவருடன் மேலும் இருவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது. ராம்சேவின் கண்டுபிடிப்பின் உதவியால் அணுக் கடிகாரம் உருவாக்கப்பட்டது. இது மிகவும் துல்லியமாக செயல்படும் திறன் கொண்டது.

ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் இயற்பியல் துறை போராசிரியராக 40 ஆண்டுகளுக்கு மேல் அவர் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பிறகு மனைவியுடன் அவர் மாஸôசூசெட்ஸ் மாகாணத்தில் வசித்து வந்தார். இரண்டாவது உலகப் போரின் போது முதல் அணுகுண்டை உருவாக்கும் மன்ஹாட்டன் திட்டத்தில் அவர் பணியாற்றியவர். வெள்ளிக்கிழமை இரவு தூக்கத்தில் ராம்சேவின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment