Wednesday, November 7, 2012

முஸ்கான், ரித்திக் ஆத்மா சாந்தி அடையட்டும்! கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு


வம்பர் 1-ம் தேதி... தீர்ப்பு நாள்!

அக்கா, தம்பியான முஸ்கானையும் ரித்திக்​கையும் கடத்திச் சென்று இரக்கமின்றிக் கொன்ற மனோகரனுக்கு மூன்று ஆயுள் தண்டனையும், தூக்குத் தண் டனையும் விதித்துத் தீர்ப்பு அளித்தது கோவை மகளிர் நீதிமன்றம்!
''இது மிகக்கொடூரமான குற்றம். அதனால்தான் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கிறேன். இந்தத் தண்டனையை அடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைச் செய்ய இனி யாரும் கனவில்கூட நினைத்துப் பார்க்கக் கூடாது''என்று நீதிபதி சுப்ரமணியம் தீர்ப்பை வாசித்து முடிக்க... கோர்ட்டுக்கு வெளியே கூடி இருந்த போலீஸார், சாக்லேட் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
குழந்தைகள் இருவரும் கடத்திக் கொலை செய்யப்பட்ட சமயத்தில் கோவை மாநகர கமிஷனராக இருந்தவர் சைலேந்திரபாபு. இப்போது, கடலோர பாதுகாப்புப் படை ஏ.டி.ஜி.பி-யாக இருக்கும் அவரிடம் பேசினோம்.
''முஸ்கான், ரித்திக் இருவரும் காணா​மல்போன உடனே அவர்கள் காவல்துறை உதவியை நாடவில்லை. வேறு சோர்ஸ்களின் மூலம் குழந்தைகளை மீட்பதில் தீவிர​மாக இருந்தனர். அதற்​குள் காலம் கடந்துவிட்டது. அவர்கள் எங்களைத் தேடி வந்த​போதே, பி.ஏ.பி. வாய்க்​காலில் குழந்தைகளின் பொ​ருட்கள் மிதக்கும் தகவல் வந்துவிட்டது. குற்றவாளிகளைப் பிடித்து விசாரித்தபோது, முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ந்தே போனோம்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட​போது, குற்றவாளி​களில் ஒருவரான மோகனகிருஷ்ணன் தப்பிச்செல்ல முயன்றதால் எங்கள் ஆட்​களால் சுட்டுக்கொல்லப்பட... இன்னொரு குற்றவாளியான மனோ கரனுக்கு அதிகபட்சத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று முனைப்போடு செயல்​பட்டோம். கொலை நடந்து 45 நாட்​களில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்​தோம். வழக்கை விரைந்து நடத்த, சிறப்பு வழக்கறிஞர் வேண்டும் என்று அரசி​டம் கேட்க... சங்கர​நாராயணன் நியமிக்கப்​​பட்டார்.  
மனோகரனுக்குத் தூக்குத் தண்​டனை என்று தீர்ப்பு வந்த நொடியில் இருந்து கோவை காவல் துறை அதிகாரிகள் பலரும் போன் செய்தபடி இருக்கிறார்கள். கொடூர​மான கொலை செய்த ஒருவ​னுக்கு தக்க தண்டனையைப் பெற்றுத்தந்து​விட்டோம் என்ற நிம்மதி இருக்​கிறது'' என்றார் சைலேந்திரபாபு.
வழக்கு விசாரணையின்போது முஸ்கான், ரித்திக் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் கோர்ட் பக்கமே வந்ததே இல்லை. குழந்தைகளைப் பறிகொடுத்த சோகத்தில் ரொம்பவே உடைந்து போயிருந்தனர். இந்தத் தீர்ப்பை அடுத்து, சற்றே ஆறுதல் அடைந்​தவர்கள், 'இனியாவது குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடையட்டும்’ என்று வேண்டிக் ​கொண்​டார்களாம்.
குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்​கைத் தீர்ப்பு!

No comments:

Post a Comment