Friday, July 29, 2011

சொல்வதெல்லாம் உண்மை பாகம் 6

முன்னாள் முக்கியஸ்தருக்குப் பின்னால் இருந்த முக்கியஸ்தர் இவர்தான். பல நேரங்களில் முக்கியஸ்தரையே மிஞ்சும் அளவுக்கு உத்தரவுகள் போடுவதில் கில்லாடி இவர். நிர்வாகத் திறமை அதிகம் இருந்தாலும் அதை நேர்மையாக இவர் செயல்படுத்தியதே இல்லை. உச்ச பதவியிலிருந்து இவர் போட்ட ஆட்டம், இவரின் மிச்ச வாழ்க்கையை ஆட்டம் காண வைத்திருக்கிறது. பிரச்னைகளிலிருந்து எஸ்கேப் ஆகிவிட ஓய்வில் போயிருந்தாலும், அப்போது விதைத்த வினைகள் இப்போது முளைக்கத் தொடங்கியுள்ளது. எத்தனையோ பேர் மீது பொய் வழக்குகள் போடக் காரணமாயிருந்த இவரின் குடும்பத்தாரின் மீதே இப்போது வழக்குகள் வந்து விழத் தொடங்கியி ருக்கின்றன. பதட்டமான சூழ்நிலையில் படுத்துக் கொண்டிருந்தவரின் மனசாட்சியை உசுப்பிவிட்டோம். இதோ அந்த வாக்குமூலம்.

‘வம்பு, வழக்கு எதிலேயும் மாட்டிக்கக் கூடாதுன்னுதான் தேர்தலுக்கு முன்னாடியே வி.ஆர்.எஸ்.ல வந்துட்டேன். ஆனா வில்லங்கங்கள் மட்டும் என்னை விட்டுப்போன பாடில்ல. கவர்ன்மெண்ட்ல வேலை செய்யறவங்களுக்கெல்லாம் ஒருமுறைதான் ஓய்வு கிடைக்கும். எனக்கு இது ரெண்டாவது ஓய்வு. எல்லார்க்கும் அதிர்ஷ்டம் வந்தால் தான் பேரும், புகழும் பணமும் கிடைக்கும். எனக்கு சிக்கல் வந்தால்தான் நல்லதே நடக்கும் என் ராசி அப்படி.

அந்தக் காலத்து அரசுத் துறை ஒன்னுல முக்கியமான அதிகாரியா வேலைக்குச் சேர்ந்தேன். அந்த மாவட்டம், இந்த மாவட்டம்ன்னு மாத்தி மாத்திப் போட்டு தமிழ்நாட்டுல இருந்த எல்லா இடத்துலேயும் நான் வேலை செய்துட்டேன். அதுக்கப்புறம் எனது வேலைக்காக ஆட்சிப் பணியில அங்கீகாரம் கொடுத்து மாவட்ட அதிகாரியாக நியமிச்சாங்க.

Rajamanickam
இதற்கிடையில சென்னை ஏர்போர்ட்ல ஒரு இலங்கை அகதி பிடிபட்டாரு. அவரு பாஸ்போர்ட்டை அதிகாரிங்க விசாரணை செய்தாங்க. கடைசியில அவருக்கு பாஸ்போர்ட் தர பரிந்துரை செய்ததே நான்தான்னு தெரிஞ்சுடுச்சு. உடனே என் மீது விசாரணை நடத்துமளவுக்கு பிரச்னை விபரீதமாயிடுச்சு. அப்போ தமிழ்நாட்ல ஐயா தான் ஆட் சியில இருந்தாரு. நான் யாரு என் பின்னணி என்னன்னு உளவுத்துறை மூலமா ஐயாவுக்கு எல்லா விவரங்களும் அனுப்பப்பட்டுச்சு. அதுல நான் என்ன ஜாதின்னும் எ ழுதி அனுப்பியிருந்தாங்க. அதைப் பார்த்ததும் ஐயாவுக்கு என் மேல ஒரு ஈர்ப்பு வந்துடுச்சு. உடனே என்னை கூப்பிட்டனுப்பி பிரச்னையை முடிச்சுட்டு என்கிட்ட வந்து டுன்னு சொல்லி அனுப்பினார். அவ்வளவுதான். அன்னையிலயிருந்து எனக்கு எல்லாமே ஏறுமுகம்தான். அந்த சிக்கல்ல இருந்தும் ஐயாவே காப்பாத்தி என்னை அவருக்கு உதவியாளா வச்சிக்கிட்டாரு. அதுக்கப்புறம் அங்க இங்கன்னு பதவியப் போட்டு 2001-ல் அம்மா ஆட்சிக்கு வந்ததும் வேலையை விட்டுட்டு ஓய்வாக போயிட்டேன். ஆனா, மறுபடியும் ஐயா வந்தாங்க. 2006-ல எனக்கு மறுபடியும் அப்பாயின்ட்மெண்ட்தான். அஞ்சு வருஷத்துக்கு எனக்கு வேலை போட்டுக் கொடுத்தது ஐயாதான்.

சாதாரணமா ஆட்சிப்பணி சம்பந்தமான அதிகாரிங்களுக்கு வேலை தொடர வழிசெய்தால் ஒரு ஆண்டு அல்லது ரெண்டு வருஷம்தான் தருவாங்க. ஆனா எனக்கு அஞ்சு வருஷம் போட்டுக் கொடுத்தாங்க. அதுவும் ஐயாவுக்கு அடுத்த இடத்துல எனக்கு வேலை. கேக்கணுமா?

ஏற்கெனவே தமிழகம் முழுவதும் நான் சர்வீஸ் செய்திருந்ததாலே எல்லா இடத்திலேயும் எல்லா அதிகாரிகளும் எனக்குப் பழக்கமா இருந்தாங்க. ஐயாவும் தன் உதவியாளர் நாதனுக்குச் சமமா என் வார்த்தைகளைக் கேட்க ஆரம்பிச்சாங்க. ஆனாலும் நாதனுக்கு அவ்வப்போது கிடைக்கிற முக்கியத்துவம் எனக்கு குத்திக்கிட்டே இ ருந்துச்சு. அதுக்காக அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல சிலவிஷயங்களை கொளுத்திப்போட்டு ஒருத்தர வீட்டுக்கு அனுப்பினேன். ஆனாலும் ஐயா அவர அழச்சுனு வந்துட்டார்.

போலீஸ், கட்சிக்காரங்க, அமைச்சர்கள் என அனைவருக்குமே நான்தான் நடுநாயகம். நான் நினைத்தால்தான் எதுவுமே நடக்கும் என்பதை புரிந்து கொண்டவர்கள் நான் நினைப்பதை எல்லாம் நடத்திக் கொடுத்தார்கள். போதாக்குறைக்கு உளவு பார்க்க வந்தவரும் எனக்கு வாலாட்டிக் கொண்டிருக்க, அவரைப் பற்றி ஐயாவிடம் எடுத்துக் கூறி அவர்களை நெருக்கமாக்கிட்டேன். இதனால எங்கக் கூட்டணியை வெல்ல யாராலும் முடியாமல் போயிடுச்சு.

‘‘பூ’’ மாதிரி சினிமா பக்கம் சுத்தினு இருந்தவங்கள இந்தக் கூட்டத்துல கூட்டினு வந்து சேர்த்த பெருமையும் எங்க கூட்டணிக்குத்தான் சேரும். அவங்க வந்ததால சில வீ ட்டுங்களுக்குள்ள பிரச்னை வர, கொஞ்சம் கொஞ்சமா அவங்கள ஒதுக்கிட்டாங்க. அதுக்குள்ள மாவட்டம், மந்திரின்னு அவங்க பட்ட கஷ்டத்த எங்களாலயே பார்க்கவே முடியல.

அதே மாதிரி பழைய சுகாதாரம் மாறியது, போலீஸ் காந்தி மறைந்தது என பல்வேறு குடும்பங்களின் விளக்கை அணைக்க அல்லும்பகலும் பாடுபட்டிருக்கிறேன். ஆனா ஐயாவின் ரெண்டு வீட்டையும் நான் கரெக்டா கவனிச்சுக்குவேன். அதில ஏற்றத்தாழ்வெல்லாம் காட்ட மாட்டேன். தென்சென்னை முக்கிய புள்ளிக்கு அவரு சொந்த ஊர்ல வாய்ப்பு தரல... கடைசியில நான்தான் பேசி தலைவரோட இடத்துல வாய்ப்பு வாங்கிக் கொடுத்தேன். அந்த அளவுக்கு ஐயா நான் சொன்னா செய்யுறாருங்கற நிலைமை. என் பசங்க ரெண்டு பேரையும் பேருக்கு என்ஜினீயராக்கிட்டேன். ஆனா அவனுங்க நேத்துவரைக்கும் செய்த தொழில் என்ன தெரியுமா? புரோக்கர் வேலைதான். பெரிய பெரிய டீலிங்குகளை எல்லாம் அவங்க மூலமாதான் முடிப்பேன். அவனுங்களுக்கு கோடிக்கணக்கில கட்டிங் கிடைக்கும். திடீர்னு பால் வளத்த கூப்பிட்டு நெய்யுக்கு விலையை ஏத்துய்யா! கமிஷன் எவ்வளவு வருதுன்னு பாரு என்று ஆர்டர் போடுவேன். என் ரெண்டு பசங்களும் கவர்னருக்கு வளர்ப்பு மகனான அந்த முஸ்லிம் நண் பருக்கு நெருக்கமாயிட்டாங்க. கிண்டியிலுள்ள நட்சத்திர ஓட்டல்தான் அவங்களுக்கு மாலை நேர சொர்க்கம்.

நான் காஞ்சிபுரத்துல வேலைல இருந்தப்ப இலங்கை அகதிகளுக்கு வீடு கட்டும் திட்டம் சுமார் ஒன்றரைக் கோடியில போடப்பட்டுச்சு. எந்த வேலையும் செய்யாம பணத் தை சுருட்டிட்டேன். விவரம் வில்லங்கமாயிடுச்சு. அப்ப எனக்குக் கீழே பணியாற்றிய மணியான ஒரு அதிகாரிமேல பழியப்போட்டுட்டு நான் எஸ்கேப் ஆயிட்டேன். அ துக்குப் பிறகு அவரு ஆட்சிப்பணிக்கு வரவே முடியல. அதேபோல திருச்சி பக்கத்துல குடிநீர் குழாய் அமைக்கிற வேலையை எலெக்ட்ரிக் கம்பனி ஒன்றுக்குக் கொடு த்தேன். அதுல பல்வேறு முறைகேடுகள் நடந்துடுச்சு. அதக் கண்டுபிடிச்சுட்டாரு பந்துவான ஒரு அதிகாரி. அவரு டில்லிக்கு புறப்பட்டுப் போக, அவரை அந்த பதவியிலயிருந்தே தூக்கிட்டேன். இங்க இருந்து அந்தத் துறைக்கு தலைவரா போனவரை அங்க இறங்கும் போதே டம்மியாக்கிட்டேன். அதேபோல குழந்தைகளுக்கு சத் துணவு கொடுக்க தனியார் கம்பெனி ஒன்றுக்கு நான் சம்மதம் தெரிவித்து அம்பது சதவிகிதம் கட்டிங் வாங்கி பல கோடிகளைக் கொண்டு வந்துட்டேன். அதுக்கப்புறம் கு ழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்ட உணவுல எப்படி சத்திருக்கும்?

அதேபோல கீர்த்தியான ஆட்சிப்பணியை சம்பந்தியாக்கியதிலிருந்து எனது குடும்பத்தின் ஆட்டம் இன்னும் அதிகமாயிடுச்சு. எம் பையனும் பாதியாக ஆட்சிப் பணியிலி ருப்பவரின் வாரிசும் பார்ட்னரா சேர்ந்து புவனேஷ்வருக்கும் கட்டாக்குக்கும் நடுவுல பெரிய அளவுல மின்சாரம் தயாரிக்கிற கம்பனிய வச்சிருக்காங்க.

தனி ஆவர்த்தனம் நடத்திக்கிட்டிருக்கும் அந்த குளிர்ச்சியான அரசியல்வாதியின் கல்லூரி விடுதியை இடிக்கும் போது மாணவர்களை தங்க வைக்க முகப்பேருல அவு சிங்போர்டு வீட்டைக் கொடுத்தாங்க. அதை காலி செய்ததும் என் ஊருக்காரங்க. சொந்தக்காரங்க, ஜாதிக்காரங்க என மொத்த பேரையும் கொண்டு வந்து அதில் நிரப்பி ட்டேன். அவங்க பேர்லயே அலாட்மெண்ட்டும் போட்டுக் கொடுத்துட்டேன்.

அதே மாதிரி புதிய தலைமைச் செயலகம், பழைய தலைமைச் செயலகம்னு ஒரு பிரச்னை ஓடிக்கிட்டு இருக்கில்ல. அதுலயும் என் உள்குத்து வேலை நெறைய இருக்கு. திருவண்ணாமலையிலிருந்து பழைய பாராளுமன்ற வாரிசைக் கொண்டாந்து வேலை செய்ய வச்சதில் எனக்கு லாபம். பலருக்கு நஷ்டம்.

அதேமாதிரி கேப்டன் சந்தானம்னு ஒரு 85 வயசு பெரியவரு ஒருமுறை என்கிட்ட வந்தாரு. நேதாஜியின் ஐ.என்.ஏ.வுல தற்கொலைப் படையில இருந்தவராம். அவருடைய தாத்தா ஐ.என்.ஏ.வுக்கு அப்போ கொடுத்த பணத்தின் இன்றைய மதிப்பே ஆயிரத்துநூறு கோடியிருக்கும். அவரு ஒரு உதவிகேட்டு என்கிட்ட வந்தாரு. அப்போ நான் அவருகிட்ட எனக்கு பத்து, ஐயாவுக்கு 25-ன்னு முப்பத்தஞ்சி ‘சி’ கேட்டேன். அவரு ‘சீ’ன்னு திட்டிட்டு காறி என் முகத்துக்கு நேரா துப்பினாரு. ‘வெள்ளைக்காரனுங்க என் கால் நகத்தைப் பிடுங்கினாங்க. நீங்க உயிரையே பிடுங்கிறீங்களே’ன்னு திட்டிட்டுப் போனாரு.

ஆனாலும் அதப்பத்தியெல்லாம் நான் கவலைப்படறதில்ல. அவுசிங்போர்டு, சி.எம்.டி.ஏ.ன்னு எல்லா இடத்துலயும் நான் வச்சது தான் சட்டம்னு இருந்துச்சு. ஆனா இப்ப அவுசிங்போர்டே எனக்கு ஆபத்தா திரும்பியிருக்கு. சட்டம் என்ன துரத்துது. என்ன பண்றது என் பாரத்த நான்தானே தூக்கியாகணும்?’

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

No comments:

Post a Comment