Friday, July 1, 2011

சிக்கலில் தயாநிதி மாறன்

ஆ.ராசாவுக்கு ஆச்சாரியா

தயாநிதி மாறனுக்கு கெளதம்..

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, ஆ.ராசாவின் உதவியாளர் ஆசிர்வாதம் ஆசாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அதே போல், தயாநிதிமாறனின் கூடுதல் தனிச் செயலாளராக இருக்கும் கெளதம், சிபிஐ வலையில் சிக்கி உள்ளார். ஏர்செல் சிவசங்கரன் சிபிஐயில் கொடுத்த புகார் தொடர்பாக, கெளதமிடம் வாக்குமூலம் வாங்க சிபிஐ முயற்சியில் உள்ளது. இதனால் தயாநிதிமாறன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

சிபிஐ, கெளதம் மூலமாக தயாநிதிமாறன் கைது படலத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது. இதை முறியடிக்க தயாநிதிமாறன் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது.

கெளதம் சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று, வேறு பெயரில் அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சையின் போது கெளதத்தை பார்க்க, தயாநிதிமாறன் மருத்துவமனைக்கு செல்லவில்லை. ஆனால் கெளதம் முரசொலி மாறன் பேரவையின் முக்கிய பொறுப்பில் இருக்கும் சந்திரசேகரை வரச் சொன்னார், அப்போலா மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் ஆகி, தஞ்சாவூருக்கு சென்றுவிட்டார். தஞ்சாவூரில் சில நாட்கள் இருந்த கெளதம், அங்கிருந்து கேரளா மாநிலம் சென்றுவிட்டதாக தெரிகிறது.

கடந்த 22 நாட்களுக்கு மேலாக, தயாநிதிமாறனுடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறார். ஆனால் சிபிஐ அதிகாரிகள் அவரை சந்தித்து வருகிறார்கள். யார், யார் கெளத்ததை சந்திக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள, கெளதம் இருக்கும் இடங்களில் தயாநிதிமாறன் வேவு பார்க்க சிலரை நியமித்துள்ளார். அவர்கள் சில நாட்களுக்கு முன்பு கெளதம் எங்கு போனார் என்று தெரியவில்லை என்று கூறியதால், தயாநிதிமாறன் அதிர்ச்சி அடைந்தார்.

சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்த கெளதம், அயல்பணியில் முரசொலிமாறனிடம் பிஏவாக பணிபுரிந்தார். முரசொலிமாறனுக்கு மறைவுக்கு பிறகு தயாநிதிமாறனிடம் பிஏவாக தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார், அதனால் நம்பிக்கையாக ஏர்செல், மேக்ஸிஸ் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் கெளதம் மூலமாக காயை நகர்த்தினார் தயாநிதிமாறன்.

ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால் நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் சிவசங்கரன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் லண்டன் சென்ற சிபிஐ குழு, அங்கு இரு நிதித்துறை ஆலோசகர்களிடம் வாக்குமூலத்தை வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளது.

ஏர்செல் நிறுவனத்தை நடத்தி வந்த தொழிலதிபரான சிவசங்கரன் சிபிஐயிடம் தந்த வாக்குமூலத்தில், 2004-2007ம் ஆண்டு காலத்தில் தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தை அவரது நண்பரான மலேசியாவைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு வற்புறுத்தினார் என்று கூறியிருந்தார்.

மேலும் இந்தியாவில் பிற பகுதிகளிலும் தனது செல்போன் சேவையை விரிவாக்க லைசென்ஸ் கோரி தொலைத் தொடர்புத்துறையை அணுகியபோதெல்லாம், அந்த பைல்களையும் கோரிக்கைகளையும் தயாநிதி மாறன் தொடர்ந்து நிராகரித்து வந்ததாகவும்,

ஏர்செல் நிறுவனத்தை அனந்த கிருஷ்ணனுக்கு விற்றே ஆக வேண்டும் என்று மிரட்டியே பணிய வைத்ததாகவும், ஏர்செல்லை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றவுடன் அந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் 14 மண்டலங்களில் செல்போன் சேவை தொடங்க தயாநிதி உடனே லைசென்ஸ் தந்ததாகவும் சிவசங்கரன் கூறியிருந்தார்.

இந்த விவகாரங்கள் குறித்து லண்டன் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த 10 நிதி ஆலோசகர்களுக்கும் முழு விவரமும் தெரியும் என்றும் சிவசங்கரன் சிபிஐயிடம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கடந்த 12ம் தேதி அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகள் குழு லண்டன் சென்று அங்கு சிவசங்கரன் குறிப்பிட்ட நபர்களில் 2 முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும் அவர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றுக் கொண்டு இந்தக் குழு கடந்த 19ம் தேதி இந்தியா திரும்பியது. இந்த வாக்குமூல விவரங்கள் தயாநிதி மாறனை பெரும் சிக்கலில் மாட்டிவிடும் என்று தெரிகிறது.

இதேபோல இன்னொரு அமலாக்கப் பிரிவு-சிபிஐ அதிகாரிகள் குழு விரைவில் சிங்கப்பூருக்கும் செல்கிறது. அங்கு இந்த டீல் குறித்து விவரம் அறிந்தவர்கள் என்று சிவசங்கரனால் சுட்டிக் காட்டப்பட்ட நபர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி அங்கேயே அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யும் முடிவு செய்துள்ளது..

லண்டனில் வாக்குமூலம் பெறப்பட்ட இரு நபர்களும், தயாநிதிமாறனின் பிஏ கெளதம் பற்றி கூறியுள்ளார்கள். இதை தொடர்ந்து கெளதம் சிபிஐ கண்காணிப்புக்கு கீழ் வந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் மிகவும் அப்செட் ஆன மத்தியமைச்சர் தயாநிதிமாறன் 27.6.11 அன்று ஏர் இந்தியா விமானத்தில் டில்லி காலை 6மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். காலை 6.40 மணி ஏர் இந்தியா விமானத்தில் மு.க.ஸ்டாலின் டில்லி செல்வதால், மாஜி அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் 100 பேர் வந்திருந்தனர். இதைப்பார்த்த தயாநிதிமாறன் ஏர் இந்தியா விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, கிங் பிஷ்ஷர் விமானத்தில் டில்லி சென்றார்.

மத்தியமைச்சர் தயாநிதிமாறன் பிடி இறுகுவதால், திமுக தலைமை தயாநிதிமாறனை காப்பாற்றுவதில் அக்கறை செலுத்தாத காரணத்தால், திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் இவர்களை சந்திப்பதை தயாநிதிமாறன் விரும்பவில்லை. அதனால் கெளதம் சிபிஐ பிடியில் சிக்கி வாக்குமூலம் எதுவும் கொடுக்க முடியாதபடி முரசொலிமாறன் பேரவை நிர்வாகிகள் மூலம் அடுத்த கட்ட முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார் தயாநிதிமாறன்..

தயாநிதிமாறன், அமைச்சர் பதவியை காப்பாற்றிக்கொள்ள, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமதுபட்டேல் மூலம் முயற்சி மேற்க்கொண்டார், ஆனால் ராகுல்காந்தி, தயாநிதிமாறன் சந்திப்புக்கு முட்டுகட்டையாக உள்ளார். அவர் ஆ.ராசாவுக்கு பதிலாக அமைச்சர் பதவி, தயாநிதிமாறன் நீக்கப்பட்டவுடன் அவருக்கு பதிலாக அமைச்சர் பதவி திமுகவுக்கு கொடுப்பதை விரும்பவில்லையாம். அதனால் திமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது..

நன்றி புதிய தமிழகம்

No comments:

Post a Comment