Sunday, January 13, 2013

முல்லைப் பெரியாறு அணையை ரகசியமாக பார்க்க ஜெயலலிதா திட்டம். அதிர்ச்சியில் உம்மன்சண்டி.


www.thedipaar.com

புதுப் பொலிவோடு இருக்கிறது தேனி... குழிகள் இல்லாத சாலைகள்... அரசு கட்டடங்களுக்குத் தூசு தட்டிப் புது பெயின்ட்... பார்க்கவே பரவசமாக இருக்கிறது. பென்னி குக் மணிமண்டபம் திறப்பு விழாவுக்காகத்தான் தடபுடல் ஏற்பாடுகள். விழாவுக்கு ஜெயலலிதா வரு கிறார் என்றால் கேட்கவா வேண்டும்? அதனால்தான் அரசு அலுவலர்கள் தேனீயைப் போல பறந்து பறந்து வேலை பார்க்கிறார்கள். 
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியதன் மூலமாக தென் மாவட்டத்து மக்களுக்கும் அதன் மூலமாக தமிழகத்துக்கும் வாழ்நாள் சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் பொறியாளர் பென்னி குக். அவரது பெயரை தனது பிள்ளைகளுக்கு இன்னும் சூட்டி மகிழ்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள். அவருக்கு ஆங்காங்கே சிலைகளும் உள்ளன. அவரது பிறந்த நாளை பொங்கல், தீபாவளியைப் போலக் கொண்டாடவும் செய்கிறார்கள். அப் படிப்பட்ட மகத்தான மனிதருக்கு 1.30 கோடி ரூபாய் செலவில் ஒரு மணி மண்டபத்தை லோயர் கேம்ப் பகுதியில் கட்டி முடித்து இருக்கிறது தமிழக அரசு. அரசுத் துறை அதி​காரிகள் அத்தனை பேரும் லோயர் கேம்ப்பில் முற்றுகை இட்டு விழா ஏற்பாடுகளைக் கவ னிக்​கின்றனர். முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், அமைச்சர்கள் என மாறிமாறி வந்தபடி இருக்க, பிஸியாக இருக்கிறது லோயர் கேம்ப். உள்ளூர் அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம்தான் அத்தனை ஏற்பாடு​களையும் முன்னின்று கவனிக்கிறார். லோயர் கேம்ப்பில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை, விழாவுக்காகத் தேர்வு செய்து இருக்கிறார்கள். பள்ளி வளாகத்தி​லேயே ஹெலிபேட் அமைக்கும் வேலைகளும் ஜரூர்.
பென்னி குக் மணிமண்டபத்தைத் திறக்க தமிழக முதல்வர் வருகிறார் என்ற தகவல், கேரள அரசை அதிர வைத்திருக்கிறது. லோயர் கேம்ப் பகுதியில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் கேரள உளவுத் துறை உடனுக்குடன் முதல்வர் உம்மன்சாண்டிக்கு அப்டேட் செய்கிறது. 'தமிழக முதல்வர் பென்னி குக் மணிமண்டபத்தைத் திறந்து வைப்பதுடன், தேக்கடிக்கு வந்து முல்லைப் பெரியாறு அணையைப் பார்வை​யிடும் திட்டத்தையும் ரகசியமாக வைத்து இருக்கிறார்’ என்று கேரள உளவுத் துறை கொடுத்த அறிக்கைதான் கேரள அரசின் கலக்கத்துக்கு முக் கியக் காரணம். அப்படி ஜெயலலிதா முல்லைப் பெரியாறு அணையைப் பார்வை இட்டால் விவகாரம் பெரிதாகி விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிற​தாம் கேரள அரசு.
www.thedipaar.com
'பென்னி குக் மணிமண்டபம் அவரது பேரனை வைத்துத் திறக்கப்படும்’ என ஜெயலலிதா ஏற் கெனவே அறிவித்து இருந்தார். இங்கிலாந்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் பென்னி குக் பேரன் ஸ்டூவர்ட் ஜாம்சனுக்கு அரசுத் தரப்பில் இருந்து அழைப்பிதழ் அனுப்பினார்களா என்பது இதுவரை தெரியவில்லை. தேனி மாவட்ட விவசாயி​கள் தரப்பில் இருந்து ஸ்டூவர்ட் ஜாம்சனுக்கு மெயில் அனுப்பி இருக்கிறார்கள். அவர் வருவது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
''கடந்த ஆண்டு முல்லைப் பெரியாறு விவ​காரம் வெடித்தபோது தொடங்கி, இன்று வரை அந்த விவகாரத்துக்காகப் போராடிவரும் விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஏராள​மானோர் இருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் இதுவரை அழைப்பிதழ் போகவில்லை. எந்த நாளில் விழா  என்பதைக்கூட அதிகாரிகள் ரகசிய​மாக வைத்து இருக்கிறார்கள்'' என்கின்றனர் விவசாயிகள்.
விவசாயிகள் சங்கத்தின் தலைவரான அப்பா ஸிடம் பேசினோம். ''மக்களின் உணர்வுகளை மதித்து முதல்வர் மணிமண்டபம் கட்டியது சந்தோஷம். பொங்கல் சமயத்தில் இந்த விழா வருவதால், மிகப்பெரிய திரு​விழாவாகக் கொண்டாடத் திட்டம் போட்டு இருக்கிறோம். முதல்வர் வரும்போது 999 பொங்கல் வைத்து, 999 பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கப்​போகிறோம். மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியிடாமல் இருப் பது வருத்தமாக இருக்கிறது'' என்றார்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகள் உட் பட, கட்சிக்காரர்களும் விழா​வுக்கு வருவார்கள். ஏராளமான கூட்டம் கூடும் என்று உளவுத் துறை அறிக்கை கொடுத்துள்ளது. ஆனால், கூட்டம் நடக்கும் இடத்தில், 20 ஆயிரம் பேர்தான் அமர முடியும். நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என் பதால்தான் விழா பற்றிய விவரங்களை ரகசிய​மாக வைத்து இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் சொல் கிறார்கள்.

No comments:

Post a Comment