Wednesday, January 2, 2013

ஜெயலலிதாவிடம் வேகம் இல்லை. புதிய பொன்.ராதாகிருஷ்ணன் பகீர்


ரண்டாவது முறையாக, தமிழக பி.ஜே.பி. தலைவர் பதவி பொன்.ராதாகிருஷ்ணன் கையில் கிடைத்​துள்ளது. மனிதர் உற்சாகமாக இருக்கிறார்.
 ''மீண்டும் தலைவர் பொறுப்பு ஏற்றுள்ளீர்கள். கடந்த ஓர் ஆண்டில்  உங்களது சாதனையாக எதைச் சொல்வீர்கள்?''
''எந்த நேரத்திலும் நாடாளுமன்றத் தேர்தல் வரலாம் என்ற சூழ்நிலையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளேன். கடந்த மூன்று ஆண்டுகளில் 55 பெரிய போராட்டங்களை மக்களுக்காக நடத்தியுள்ளோம். இதற்கிடையே, கட்சியின் அடிமட்டக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி இருக்கிறோம். அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக வெற்றிபெற முடிந்தது. 2009-ம் ஆண்டு தலைவராகப் பதவி ஏற்றபோது, குமரி மாவட்டத்தில் பி.ஜே.பி-யை முதல் கட்சியாக மாற்றுவேன் என்று சூளுரைத்தேன். அதேபோல், உள்ளாட்சித் தேர்தலில் நாகர்கோவில் நகராட்சியைக் கைப்பற்றிக் காட் டினோம்.''
ஜெயலலிதாவிடம் வேகம் இல்லை!  'புதிய' பொன்.ராதாகிருஷ்ணன் பகீர்
''அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்?''
''மாநிலம் முழுவதும் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்தி இருக்கிறோம். மாநில, மாவட்டத் தலை வர்களைவிட, கிளைத் தலைவர்களைக் கௌரவிப்பதன் மூலமே கட்சி வளரும் என்பதை நிர்வாகிகளுக்கு வலியுறுத்தி உள்ளேன். தொண்டர்களைத் தேடி, கட்சி நிர்வாகிகளும், மக்களைத் தேடி கட்சியினரும் செல்ல வேண்டும். கட் சியின் வேர்களைத் தேடிச் செல் லும் பயணத்தைத் தீவிரப்படுத்தி வரு கிறோம். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கும் 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கும் கட்சியைத் தயார்செய்வதுதான் இப்போதைய முக்கியப் பணி. 2016-ல் தமிழகத்தில் பி.ஜே.பி. ஆட்சி என்பதுதான் எங்களது லட்சியம். இதை சாதித்துக் காட்டு​வோம்.''
''ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சக்தி இருக்கிறதா? உங்களுக்கே இது ஓவராக தெரியவில்லையா?''
''கர்நாடகத்தில் பி.ஜே.பி. ஆட்சி அமையும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆட்சி அமைத்​தோம். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்​வார்கள். அவர்கள் மனதில் இடம் பிடித்தால், ஆட்சிக் கட் டிலில் அமர்ந்து விடலாம். அதற்கான வேலையைத்தான் செய்து​வருகிறோம். சாதி, மதத்தை திராவிடக் கட்சிகள் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்​கின்றன. சாதிப் பிரச்னைகளால் மதமாற்ற வேலைகள் நடக்கின்றன. இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்​டும்.
தேசபக்தி உள்ள கட்சியால் மட்டுமே நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முடியும். தர்மபுரி போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, வரும் பிப்ரவரியில் பாதயாத்திரை நடத்துகிறோம். தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி மிகப் பெரிய போராட்டத்துக்குத் திட்டமிட்டுள்ளோம். நெசவாளர்கள், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரத்துக்காகவும் உழைப்போம். 2007-ம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசு, சிறு பான்மை மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்குகிறது. அதை, அனைத்து ஏழை இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டிப் போராடுவோம்.''
''தமிழகத்துக்கான தண்ணீரை கர்நாடக பி.ஜே.பி. அரசு தர மறுக்கிறதே? இது சரியா?''
''காவிரி நதிநீர்ப் பிரச்னையில் 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி அறிக்கை​யைச் சமர்ப்பித்தது. மொத்தம் 740 டி.எம்.சி. நீரில் தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனாலும் இதுவரை அந்தத் தண்ணீர் கிடைக்கவில்லை. இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய காங்கிரஸ் அரசின் ஓட்டு வங்கி அர சியலே தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்காததற்குக் காரணம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காவிரிப் பிரச் னையில் சுமூகத் தீர்வு ஏற்​பட்டது. தமிழ கத்துக்கு உரிய தண்ணீரை வழங்கும்​படி கர்நாடக பி.ஜே.பி. அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.''
'நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன்தான் கூட்ட ணியா?''
''கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும். அமைக்கப்படும் கூட்டணி, கௌரவம் நிறைந்ததாகவும் ஒருவரை ஒருவர் மதிக்கும் கூட்டணியாகவும் இருக்கும். இருக்கவும் வேண்டும்''
''அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகள் பற்றி?''
''முந்தைய ஆட்சியோடு ஒப்பிடும்போது பரவா​யில்லை. ஆனால், ஜெயலலிதாவின் வேகம் போதுமானதாக இல்லை. முதல்வர் ஜெயலலி​தா விடம் இருந்து தமிழக மக்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறார்கள்!''

No comments:

Post a Comment