Sunday, September 28, 2014

பதவி இழந்தார் ஜெயலலிதா; சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை!




சென்னை: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் நீதிமன்றத்தினுள் இருக்கும் வழக்கறிஞர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு தனி நீதிமன்ற சிறப்பு நீதிபதி குன்ஹா இன்னும் சற்று நேரத்தில், நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தீர்ப்பை வழங்க உள்ளார். 
ஜெயலலிதா தவிர்த்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா சுதாகரன், இளவரசி உள்ளிட்டோரும் ஆஜராகி உள்ளனர். அவர்கள் தற்போது தீர்ப்புக்காக நீதிமன்றத்தில் காத்திருக்கின்றனர்
ஓ.பி.  எஸ். உடன் பேசிய ஜெயலலிதா
இதனிடையே நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த ஜெயலலிதா, திடீரென வெளியே வந்து அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசிவிட்டு சென்றார்.

பாதுகாப்பு
ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றம் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள காந்தி பவனுக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு முற்பகல் 11 மணிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிடுகிறார்.
தீர்ப்பு இன்று கூறப்படுவதையடுத்து, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் பணியில் சுமார் 6 ஆயிரம் போலீஸார், ஆயுதப் படை, அதிரடிப் படையைச் சேர்ந்த ஆயிரம் பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
ஜெயலலிதா பெங்களூர் புறப்பட்டார்
இந்த வழக்கில் நேரில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை பெங்களூரு புறப்பட்டு சென்றார்.  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வழக்கு நடைபெறும் நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல உள்ளார்.  சென்னையில் இருந்து பெங்களூருவின் பரப்பன அக்ரஹாரம் நீதிமன்றத்திற்கு செல்லும் ஜெயலலிதாவுக்கு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாகனங்கள் நிறுத்தம்
தமிழ்நாட்டுக்கு வரும் கர்நாடக மாநில பேருந்துகள் எல்லையோடு நிறுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பின் முடிவை அறிந்த பிறகு பேருந்துகளை இயக்க கர்நாடக போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதேபோல், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகளும் தமிழக எல்லையோடு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, ஓசூர் இடையே பேருந்து, கார், லாரி உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், அ.தி.மு.க.வினர் படையெடுப்பு
தமிழக அமைச்சர்கள் அனைவரும் தீர்ப்பை அறிவதற்காக பெங்களூர் வந்து முகாமிட்டுள்ளனர். அ.தி.மு.க. வழக்கறிஞர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் பெங்களூருவில் குவிந்துள்ளனர்.
வழக்கு விவரம்
தமிழக முதல்வராக 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது.

2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரானது இந்த வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனு அளித்தார். அதை ஏற்று கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி விசாரணை தொடங்கியது. இதுவரை 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்தன. அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் 17 நாட்கள் தனது வாதத்தை முன்வைத்தார். ஜெயலலிதா வழக்கறிஞர் பி.குமார் தனது தரப்பு வாதங்களை 25 நாட்கள் பதிவு செய்தார். இருதரப்பு வாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று சனிக்கிழமை (செப்.27) தீர்ப்பு வழங்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment