Friday, January 6, 2012

சசி வாங்கிய சத்திய வாக்குமூலம்! ஜெ. பாய்ச்சல் மர்மம்!

""தவறு செய்து, துரோகம் புரிந்து, கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்புகொண்டு "நாங்கள் மீண்டும் உள்ளே சென்றுவிடுவோம், நாங்கள் மீண்டும் செல்வாக்குடன் இருப்போம், இப்போது எங்களைப் பகைத்துக்கொண்டால் நாளை நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு உங்களைப் பழிவாங்கிவிடுவோம்.

ஆகவே, எங்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்' என்று சொல்பவர் களும் உண்டு. அப்படி தலைமை மீது சந்தேகம் வருகின்ற அளவுக்குப் பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அது மட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக் கேட்டு நம்பி, அதன்படி செயல் படுகின்ற கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்பு கிடையாது.''

-சென்னை வானகரத்தில் டிசம்பர் 30-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக் குழுவில் ஜெ. இப்படிப் பேசியதை, கட்சியின் முக்கிய நிர்வாகி களோ, சாதாரண பொதுக்குழு உறுப் பினர்களோ கொஞ்ச மும் எதிர்பார்க்க வில்லை. யார் பெய ரையும் குறிப்பிடாமல் ஜெ. இப்படிப் பேசி னாலும், அவர் பேசியது சசிகலாவை யும் அவரது குடும்பத்தினரையும்தான் என்பது அடிமட்டத் தொண்டர் களுக்கும் புரியும். செயற்குழு- பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா விவகாரத்தைத் தொடாமல் ஜெ. விட்டுவிடுவார் என்றுதான் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நினைத்திருந் தார்கள். ஆனால், ஜெ. அதிரடியாகப் பேசியதைத் தொடர்ந்து, என்ன காரணத்துக்காக அவர் இத்தனை வேகமாகப் பேசினார் என்று கட்சி நிர்வாகிகள் ஆராய்ந்துகொண்டிருக் கிறார்கள்.

போயஸ் கார்டன் வட்டாரத்தில் இது பற்றி நாம் மெல்ல விசாரித்தோம். பூதாகரமான தகவல்கள் வெளிப் பட்டன.
சீக்ரெட் லீக்!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ. வாய்தா வாங்கிக்கொண்டிருந்த காலத்தில் சசிகலா, சுதாகரன் ஆகியோர் அவ்வப்போது பெங்களூரில் ஆஜராகி வந்தார்கள். ஜெ. 313 ஸ்டேண்ட்மெண்ட் கொடுத்தபிறகும், ஒன்றிரண்டு முறை இவர்கள் ஆஜரானார்கள். அந்த சமயங்களில் மன்னார்குடி உறவுகளும் பெங்களூருக்கு வந்து முகாமிடும். இந்த சமயங்களில், எம்.நடராஜன் தலை மையில் மூன்று முறை மன்னார்குடி உறவுகள் கூடிப் பேசியதும், இதில் ஒரு கூட்டத்தில் மட்டும் சசிகலா இல்லை என்றும் கட்டம் கட்டும் நடவடிக்கைக்கு முன்பாக ஜெ.வின் கவனத்துக்குத் தகவல்கள் வந்திருக்கின்றன. சசிகலா கலந்துகொள்ளாத அந்த ஒரு கூட்டத்தில் எம்.நடராஜன், ராவணன், டாக்டர் வெங்கடேசன், திவாகரன், பாஸ்கரன் ஆகியோருடன் இன்னும் ஆறேழு பேர் கலந்துகொண்டதால் அங்கு பேசிய விஷயங்கள் லீக்காகி ஜெ.வின் கவனத்திற்குச் சென்றிருக்கிறது.

அதாவது, சொத்துக் குவிப்பு வழக்கில் சம் பந்தப்பட்டவர்களுக்கு எதிராகத்தான் ஜட்ஜ்மெண்ட் இருக்கும். அதனால், ஜெயலலிதா தன்னோட முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டியதுவரும். அவர் ராஜினாமா செய்தால் அந்த இடம், நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் கிடைக்கவேண்டும். இத்தனை நாள் நாம் அவருக்குத் துணையாக இருந்திருக்கிறோம். அதற்குக் கிடைக்கக்கூடிய மரியாதையாகவும் வெகு மதியாகவும் இந்த முதல்வர் பதவி அமையவேண்டும் என்று ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்ட விவரம், கொஞ்சம் தாமதமாகத்தான் ஜெ.வுக்குத் தெரியவந்துள்ளது.

எதிர்காலம் பற்றிய பயம்

சசிகலாவைப் பொறுத்தவரை அவர் உணர்வுப் பூர்வமாக ஜெ. பக்கமேதான் இருந்திருக்கிறார். குடும்பத்தினர்தான் அவரை ப்ரெய்ன்வாஷ் பண்ணி, "இத்தனை காலம் உழைத்ததற்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் ஏமாந்துபோய்விடுவோம்' என்று மெல்ல மெல்லச் சொல்லியிருக்கிறார்கள். சசிகலாவும் மெதுவாக அவர்கள் பக்கம் போய்விட்டார் என்பது ஜெ.வுக்குத் தெரியவர, கார்டனில் ஜெ.வின் உணவு உள்பட எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும் இடத்தில் சசிகலா இருக்கும் நிலையில், அவரே மன்னார்குடி குடும்பத்தினரின் சதி வலையில் விழுந்தபிறகு, தன்னுடைய எதிர்காலத்திற்கு என்ன பாதுகாப்பு என்று ஜெ. யோசித்ததன் விளைவுதான் சசிகலாவையும் சேர்த்து கட்டம் கட்டி வெளியேற்றிய அதிரடி நடவடிக்கையாம். டெண்டர், காண்ட்ராக்ட், கமிஷன் உள்பட எல்லாவற்றையும் சசிகலா பார்த்துக்கொள்வார் என்று மந்திரிகளிடமே நேரில் சொல்லி, மன்னார்குடி குடும்பத்தின ரைத் திருப்தியாக வைத்துள்ள நிலையிலும் தன்னுடைய முதல்வர் பதவிக்கே இவர்கள் வேட்டு வைக்கப் பார்க்கிறார்கள் என்றால் எந்தப் பின்னணியில் தனக்கு எதிராக இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற விவரத்தையும் தோண்டி எடுக்கச்சொல்லி யிருக்கிறார் ஜெ.

தோண்டி எடுக்கப்பட்ட விவரங்கள் ஜெ.வுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத் திருக்கிறது என்கிறார்கள் கார்டன் வட் டாரத்தினர்.

தேர்தலுக்கு முன்பே வாங்கிய சத்திய வாக்குமூலம்


அ.தி.மு.க.வின் 147 எம்.எல்.ஏக்களில் சுமார் 20 பேர் போக மீதமுள்ளவர்கள் எல்லாம் மன்னார்குடி குடும்பத்துக்குச் சொந்தக்காரர்களாகவும், சொந்தக்காரர் களுக்குச் சொந்தக்காரர்களாகவும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவும் அவர்களுக்கு வேண்டிய மற்ற சமுதாயத் தினராகவும் இருக்கிறார்கள் என்பதை ஷாக்கோடு கவனித்திருக்கிறார் ஜெ.

தேர்தல் நேரத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதியானதும், தங்களுடைய சொந்தங்களும் சாதிக்காரர்களுமான இவர்களையும் மற்றவர்களையும் சசிகலா, நடராஜன், ராவணன் மூவரும் தனித்தனியாக அழைத்து ஒரு சத்தியவாக்குமூலமே வாங்கியிருக்கும் விவரமும் கார்டனை எட்டியிருக்கிறது.

அதாவது அந்த சத்திய வாக்குமூலம் வாங்கு வதற்கு முன்னால், "உங்களையெல்லாம் யாருன்னே கட்சித் தலைமைக்குத் தெரியாது. லோக்கலிலும் உங்களுக்கு எதிரா பல பேர் இருக்காங்க. அவங்களோட எதிர்ப்பையெல்லாம் மீறி இன்னைக்கு உங்களை வேட்பாளர்களாக்கியிருக்கிறோம். ஏன் என்றால் நாளைக்கு நீங்கள் எல்லோரும் எங்களுக்கு விசு வாசமா இருக்கணும். இருப்பீங்களா?' என்று கேட்கப்பட, அழைத்துப் பேசப்பட்ட அத்தனை வேட்பாளர்களுமே "விசுவாசமா இருப்போம்' என்று சொல்லியிருக்கிறார்கள். உங்கள் வார்த்தைகளை எப்படி நம்புறது ? என்ற கேள்வியுடன், "நாளைக்கு உங்களுக்கு ஆசை வந்தால் எங்களை விட்டுட்டுப்போக மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்'னு கேட்கப்பட, வேட்பாளர்கள் பலரும் "எங்க விசுவாசத்துக்கு அடையாளமா வெற்றுப் பேப்பரில்கூட கையெழுத் துப்போட்டுத் தரத் தயார்' என்று சொல்லியிருக் கிறார்கள்.

அப்போது, "நாளைக்கு பெரியம்மா ஒண்ணு சொல்றாங்க.. சின்னம்மா ஒண்ணு சொல்றாங்கன்னு வச்சிக்குங்க. நீங்க யார் பேச்சைக் கேட்பீங்க' என்று அடுத்த பிட் போடப்பட்டதாம். வில்லங்கமான கேள்விதான் என்பது வேட்பாளர்களுக்குப் புரிந்திருந் தாலும், கேள்வி கேட்பது எந்தத் தரப்பு என்பதைப் புரிந்துகொண்டு, எங்க ளுக்கு இன்னைக்கு சீட் கிடைச்சதுக்கு காரணம் சின்னம்மாதான். அதனால அவங்களுக்கு உண்மையாகவும் விசுவாச மாகவும் இருக்க வேண் டியது "எங்க கடமை' என்று சொல்லி வெற் றுத் தாள்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக் கிறார்கள்.

ஆட்சியமைப்பதற்காக நடத்திய வசூல் மேளா

அ.தி.மு.க.வின் மொத்த எம்.எல்.ஏ.க்களில் 20 பேர் அப்படி இப்படி இருந்தாலும்கூட, தங்களுடைய விசுவாச எம்.எல்.ஏக்க ளாக மெஜாரிட்டிக்குத் தேவையான 118 எம்.எல்.ஏக்களுக்கு மேல் கைவசம் இருப்பார்கள் என்பது தான் மன்னார்குடி குடும்பத்தின் கணக்காம். பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கு தீவிரமான பிறகு இந்த கணக்கின் அடிப்படை யில்தான் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்கள்.

ஜெ.பதவி விலகக்கூடிய சூழல் ஏற்பட்டு, மன்னார்குடி குடும்பத்தின் சார்பில் ஒருவரை முதல்வராக்க வேண்டுமென்றால் பணத்தைத் தாராளமாக செலவு செய்ய வேண்டியிருக்கும் என்றும் கணக்கிடப் பட்டிருக்கிறது. அதற்காகத்தான் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மூலம் டெண்டர், காண்ட்ராக்ட், போஸ்டிங் உள்பட எந்தவொரு ஃபைல் மூவ் ஆகவேண்டு மென்றாலும் எல்லாத் துறைகளிலுமே எக்குத்தப்பாக வசூல் வேட்டை நடந்துள்ளது. முன்பு 3 ரூபாய் கொடுத்த இடத்தில் தற்போது 30 ரூபாய் கொடுக்கவேண்டிய நிலைமை உருவாகிவிட்டது என பணத்தைக் கொட்டியவர்கள் புலம்பியதும் ஜெ.வுக்கு தாமதமாகவே எட்டியுள்ளது என்கிறது கார்டன் வட்டாரம்.

தாமதமாகத் தெரிந்தது ஏன்?

உளவுத்துறையை தன் கண்ட்ரோலில் வைத்துள்ள ஜெ.வுக்கு இந்தத் தகவல்கள் தெரியவர ஏன் இத்தனை தாமதம் என்று கார்டன் வட்டாரத்திடம் கேட்டால், "மாநில உளவுத்துறை இதையெல்லாம் முன்கூட்டியே ஸ்மெல் செய்தாலும், ஜெ.விடம் இதைத் தெரிவிக்க அவர்களுக்குத் தயக்கமும் பயமும் இருந்துள்ளது. அதற்குக் காரணம், ஜெ.வின் அருகிலேயே எப்போதும் சசிகலா இருந்ததும், சசிகலாதான் இதர விஷயங்களையெல்லாம் கவனித்துக்கொள்வார் என்று மந்திரிகளிடம் ஜெ.வே சொல்லியிருந்ததும்தான்.

இணை முதல்வர் போன்ற அதி காரத்தில் ஜெ.வாலேயே வைக்கப் பட்டிருந்த சசிகலா மீதான சந்தேகத்தைத் தெரிவிப்பதோ, அவரைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதோ தங்கள் பதவிக்கு வேட்டு வைத்துவிடும் என்ற பயம் மாநில உளவுத்துறை வட்டாரத்தில் இருந்துள்ளது.

அதேநேரத்தில், மத்திய உளவுத்துறையில் உள்ள ஜெ.வின் இனரீதியான ஆட்கள் இதனைக் கவனித்தே வந்திருக்கிறார்கள். அவர்கள் இதை பா.ஜ.க.வின் டெல்லித் தலைவர்கள் மூலமாக ஜெ.வின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். எம்.பி. தேர்தலில் பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி உருவாவதற்கான அனைத்துவிதமான முஸ்தீபுகளிலும் இவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், மன்னார்குடி குடும்பத்தின் எக்குத்தப்பான நடவடிக்கைகள் தமிழகத்தில் எம்.பி. தேர்தல் முடிவுகளைக் கவிழ்த்துப்போட்டுவிடும் என்ற அச்சம்தான் அவர்களை இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வைத்திருக்கிறது.

டெல்லி வழியாகத் தனக்கு வந்த தகவல்களையெல்லாம் மாநில உளவுத்துறை மூலமாக உறுதிசெய்துகொண்டபிறகே, பொதுக்குழுவிலும் சசிகலா குடும்பத்தினரைப் பற்றி சூசகமாக சொல்லி, கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் ஜெ. இதுதான் பொதுக்குழுவில் அவரது பாய்ச்சலின் மர்மம்'' என்கிறார்கள் கார்டன் தரப்பினர்.

கண்காணிக்கப் படும் நிழல் மனிதர்


மன்னார்குடி குடும் பத்தினர் இந்த ஆப ரேஷன்கள் அனைத்திற்கும் எம்.நடராஜன் என்ற நிழல் மனிதர்தான் சூப்பர் ப்ரெய்னாக இருந்திருக் கிறார் என்பது ஜெ.வின் உறுதியான கணிப்பாம்.

ஆட்சி மாற்றம் என்ற லெவலுக்கு யோசித்து வசூலிக்கப்பட்டுள்ள பணம் எங்கெல்லாம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற கணக்கையும் ஜெ. எடுக்கச் சொல்லியிருக்கிறார். தமிழகத்திலும், மற்ற மாநி லங்களிலும், வெளிநாடுகளிலும் மன்னார்குடி குடும்பத்தினரால் முதலீடு செய்யப்பட்டுள்ள பணம், வாங்கப்பட்டுள்ள சொத்துகள் இவற்றின் மதிப்பு 5000 கோடி ரூபாய் இருக்கும் எனத் தெரியவந்துள்ளதாம். வெவ்வேறு நபர்களின் பெயர்களிலும், பினாமிகளின் பெயர்களிலும், உறவினர்கள் சிலரின் பெயர்களிலும் இந்த சொத்துகள் வாங்கப்பட்டி ருப்பதோடு, சில சொத்துகளுக்கு பவர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதும் ஜெ.வுக்குத் தெரிய வந்திருப்பதால், இவற்றை எப்படிக் கைப்பற்றுவது என்று ஆலோசித்து வருகிறாராம்.

எம்.நடராஜன், பேங்காக்கிற்கு கடந்த வாரம் சென்றதை நக்கீரன் வெளியிட்டது. அதன்பின் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் எம்.என். பயணித் திருக்கிறார். அவரை ஜெ. தரப்பிலிருந்து கூர்மையாக வாட்ச் பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள். அது போலவே, சசிகலா உறவினர்களான மற்றவர்கள் மீதும் கண் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களில் சிலரை இப்போதைக்கு ஃப்ரீயாக விட்டுவிடுவது என்றும், முழுமையான கண்காணிப்பு மற்றும் முழுமையான சொத்து மதிப்புக் கண்டறிதலுக்குப் பிறகு அதிரடி ஆக்ஷனில் இறங்குவது எனத் திட்டமிட்டிருக் கிறாராம் ஜெ.

No comments:

Post a Comment