Thursday, January 12, 2012

அருள் மழை - 7


புதுக்கோட்டையில் முகாம். மெயின் ரோடில் இருந்த பெரிய சத்திரத்தில்தங்கியிருந்தார் பெரியவா. இரவுகால பூஜை முடிந்ததும் தனக்கு கைங்கர்யம்பண்ணும் நாகராஜனைக் கூப்பிட்டு " அப்பா நாகு! நாளக்கி விடிகாலம்பரமூணரை மணிக்கெல்லாம் நான் ஏந்திருந்து ஸ்நானம்பண்ணியாகணும்...........நீ ஞாபகம் வெச்சுக்கோ!" என்றார்.


"உத்தரவு பெரியவா. சரியா மூணரை மணிக்கு "ஹர ஹர சங்கர ஜய ஜயசங்கர" ன்னு நாமாவளி கோஷம் பண்ணறேன் பெரியவா" என்றான் பவ்யமாக.


நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே "மூணரை மணிக்கு ஒங்கள எழுப்பிவிட்டுடறேன்...ன்னு சொன்னா, அவ்வளவு நன்னாஇருக்காதுங்கறதால....."ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" சொல்லறேன்னுசொல்லறியாக்கும்? சரி அப்பிடியே பண்ணு"


ராத்திரி பதினோரு மணி. எல்லோரும் படுத்துக் கொண்டாயிற்று.பெரியவாளும் சயனத்துக்கு போய் விட்டார். நாகுவுக்கு ஒரே கவலை! அங்கேஎங்கேயும் கடிகாரமே இல்லை! அவனிடம் இருப்பதோ, அவனுடைய மாமா"பூணூல்" கல்யாணத்துக்கு பிரசன்ட் பண்ணின பழைய வாட்ச்! அதுகூடபழைய டிரங்க் பொட்டிக்குள் இருக்கு. ஏனென்றால் பெரியவாளுடன் இருக்கும்போது கட்டிக் கொள்ளவது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால்தான்.தானும் படுத்து தூங்கிவிட்டால், பெரியவாளை எப்படி எழுப்ப முடியும்? என்னபண்ணுவது?


நேராக போய் தன் பொட்டியில் இருந்த வாட்சை எடுத்துக் கொண்டான்.சத்தமில்லாமல் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பண்ண ஆரம்பித்தான்.பல தடவை பண்ணினான். சரியாக மணி 3.30 ! கைகளை கட்டி கொண்டுபெரியவா சயன அறை வாசலில் நின்று கொண்டு சன்னமாக "ஹர ஹர சங்கரஜய ஜய சங்கர" என்று நாமாவளி போட்டான். சிறிது நேரத்தில் சாக்ஷாத்பரமேஸ்வரனான பெரியவா மந்தஹாசத்தோடு வெளியே வந்து அவனுக்கேஅவனுக்கு மட்டும் "விஸ்வரூப" தரிசனம் குடுத்தார். எப்பேர்ப்பட்ட பாக்யம்!ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணினான் நாகு. அடுத்தடுத்த நாட்கள் இதே மாதிரிஇரவு முழுக்க பாராயணம், சரியாக மூணரை மணிக்கு "ஹர ஹர சங்கர ஜயஜய சங்கர" நாமாவளி, பெரியவாளுடைய காணக் கிடைக்காத விஸ்வரூபதரிசனம் என்று நாகு திக்கு முக்காடித்தான் போனான்! ஆனால், பெரியவாளின்மேல் இருந்த ப்ரேமை அவனுக்கு பலத்தை குடுத்தது.


நான்காவது நாள் இரவு, வேஷ்டியில் வாட்சை சொருகிக் கொண்டுசஹஸ்ரநாம பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தவன், பாவம், தன்னைஅறியாமல் தூங்கி விட்டான்! "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" மதுரமானதெய்வீக த்வனி, அவனை எழுப்பியது! தூக்கிவாரிப் போட்டபடி எழுந்தான்!எதிரே கருணை ததும்ப சிரித்தபடி, அவனை தேடி வந்து விஸ்வரூப தரிசனம்தந்தான் அந்த பரமேஸ்வரன்!!!


மிகுந்த வாத்சல்யத்துடன் "கொழந்தே! மணி சரியா மூணரைஆறதுடா........ப்பா! அசதில பாவம் நீ தூங்கி போயிட்டே போலருக்கு!பாவம்.......ஒனக்கும் நாள் முழுதும் கைங்கர்யம்..சரீர ஸ்ரமம்இருக்குமோன்னோ?" சிரித்தபடியே சொல்லிவிட்டு வாசல்பக்கம் போனார்.வாட்சை பார்த்தால் மூணரை! இவனுக்கோ ஒரே ஆச்சர்யம்! வாட்சைப்பாக்காமலேயே பெரியவா எப்படி கரெக்டா மூணரை..ன்னு சொன்னார்!!


மறுநாள் பக்கத்தில் ஒரு பித்தளை சொம்பில் ஜலத்தோடு அமர்ந்தவன்,கண்ணில் ஜலத்தை விட்டு அலம்பிக் கொண்டு பாராயணம் பண்ணிக்கொண்டிருந்தவன் ரெண்டரை மணி வரை ஒட்டிவிட்டான். பாவம்.தன்னையறியாமல் தூங்கிவிட்டான். முந்தின நாள் போலவே பெரியவாவெளியில் வந்து இவன் தூங்குவதையும், பக்கத்தில் சொம்பில் ஜலம்இருந்ததையும் கண்டு சிரித்துக் கொண்டே நாமாவளி போட்டு அவனைஎழுப்பினார். மணி சரியாக மூணரை!!ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய்விட்டான் நாகு! அன்று மத்தியான்னம் மெதுவாக பெரியவா முன்னால் போய்நின்றான். " என்னடா....நாகு! நமஸ்காரம் பண்ணிட்டு நிக்கறதைப் பார்த்தா,ஏதோ எங்கிட்ட கேக்கணும் போல இருக்கே!! என்ன தெரியணும்? கேளு..."


"அதெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா..........."



"எனக்கு தெரியும். ரெண்டு நாளா நாம தூங்கிப் போயிடறோமே..........பெரியவாஎப்டி அவ்வளவு கரெக்டா மூணரை மணிக்கு எழுந்துண்டு வரார்? அவர்கிட்டகடிகாரம் கூட கெடையாதே!......எப்பிடி முழுசுக்கறார்...ன்னுதானேகொழம்பிண்டு இருக்கே? இல்லியா பின்னே?"


"ஆமா பெரியவா. என்னன்னே தெரியலை...........ரெண்டு நாளா என்னையும்அறியாம தூங்கிடறேன். பெரியவாதான் சரியா மூணரைக்கு ஏந்து வந்துஎன்னையும் எழுப்பி விடறேள்...எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு. மூணரைமணி....ன்னு சரியா எப்டி பெரியவா.........."


அவன் முடிப்பதற்குள் "ஏதாவது கர்ண யக்ஷிணி எங்..காதுல வந்து "மணிமூணரை " ன்னு சொல்லறதோன்னு சந்தேகமோ ஒனக்கு?" கடகடவென்றுசிரித்தார்.


"எங்..காதுல ஒரு யக்ஷிணியும் வந்து சொல்லலே.........மணி மூணரைன்னுஎங்..காதுல வந்து சொன்னது "பஸ்". அதுவும் மதுரை டி.வி.சுந்தரம்ஐயங்காரோட டி.வி.எஸ் பஸ்!! ஆச்சர்யப்படாதே!! மொத நாள் சரியாமூணரைக்கு நீ "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" சொல்லிஎழுப்பினேல்லியோ?.....அப்போ வாசப் பக்கம் வந்தேனா...........அப்போ ஒருபஸ் சத்திர வாசலை தாண்டி, டவுனுக்குள்ள போச்சு! அடுத்த ரெண்டு நாளும்அதே பஸ்ஸை மூணரைக்கு பாத்தேன். அப்புறமா விஜாரிச்சா.......அதுடி.வி.எஸ் கம்பெனியோட பஸ் ! மதுரைலேர்ந்து புதுக்கோட்டைக்குவிடியக்காலம் வர மொதல் பஸ்ஸுன்னும் சொன்னா..சத்திர வாசலை அந்தபஸ் விடியக்காலம் சரியா மூணரைக்கு தாண்டிப் போறது...ஒரு செகண்ட்அப்டி....இப்டி மாறல்லே...டி.வி.எஸ் பஸ் ஒரு எடத்துக்கு வர டயத்தவெச்சுண்டே......நம்ம கடியாரத்த சரி பண்ணிக்கலாம்னு சொல்லுவா...அதுவாஸ்தவம்தான்! மூணு நாள் செரியா பாத்து வெச்சுண்டேன்! நாலாம்நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்ட ஒடனேயே தானா..எழுந்துட்டேன்........வேற பெரிய ரகஸ்யம் ஒண்ணுமே இல்லேடா...ப்பா நாகு!"பெரியவா மிகவும் ரசித்துச் சிரித்தார்.

ஒரு பஸ் போவதைக் கூட கவனிச்சு அதுவும் ஒருநாள் இல்லை, விடாமல்தினமும் கவனிச்சு, அதையும்ஸ்லாகித்துக் கூறும் நுணுக்கமான பேரறிவு,பெரியவாளுக்கு இருப்பதில் ஆச்சர்யம் இல்லை...... ஏனென்றால், பெரியவாஎன்றாலே பேரறிவுதானே!! P for "Perfection " - என்பதைவிட P for Periyava என்றுசொல்லலாம்!

No comments:

Post a Comment