Wednesday, January 18, 2012

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

இந்தியில் ஆமிர்கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படம் வந்தபோதே அதைப் பார்த்தேன். ஆனால், அதன் ரீமேக்கில் நடிக்கப் போகிறேன் என்று கனவுகூட கண்டதில்லை. இதில் நடிக்க கேட்டபோது நடிக்கலாமா? வேண்டாமா? என்று இரண்டு மனதுடன் இருந்தேன். ஷங்கர் இயக்குகிறார் என்றதும் ஒப்புக்கொண்டேன்.

இருவரும் இதுபற்றி பேசினோம். அப்போது, ‘கதை விஷயத்தில் தலையிட்டு மாறுதல் செய்யக்கூடாது’ என்று முடிவு செய்துகொண்டோம். தமிழுக்கு ஏற்ற வகையில் வசனம், பாடல், நேட்டிவிட்டியில் மட்டும் சிறு மாற்றங்கள் செய்து கொண்டோம். ஷங்கர் எனக்கு முழுசுதந்திரம் அளித்தார். ‘ஆமிர்கான் நடிப்பை அப்படியே செய்தேனா?’ என்கிறார்கள். எனது பாடிலேங்குவேஜ்படிதான் நடித்தேன். ஆனால் குறிப்பிட்ட சில காட்சிகளில் ஆமிர்கான் செய்ததுபோலவே இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் அப்படியே நடித்தேன்.

‘நண்பன்’ படத்தில் நடித்ததால் எனது பாணியை மாற்றிக்கொண்டேன் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், பிரண்ட்ஸ், காவலன் என மாறுபட்ட கதைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் நடித்துக் கொண்டிருக்கிறேன். மாறுபட்ட இதுபோன்ற படங்களை ஷங்கர், கவுதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பொருத்தமான இயக்குனர்களுடன் செய்கிறேன்.

மாறுபட்ட கதைகளில்தான் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அதுபோன்ற கதைகள் எப்போதோ ஒருமுறைதான் வருகிறது. எனவேதான் 4 சண்டை, 4 பாடல் போன்ற மினிமம் கேரன்ட்டி தரும் பார்முலா படங்களில் நடிக்க வேண்டி உள்ளது. ‘என் மனைவி படத்தை பார்த்து, ‘எனது திரையுலக வாழ்வில் சிறந்த படம்’ என்றார். பட புரோமோஷனுக்காக போய்விட்டு வீட்டுக்கு திரும்பி காரில் வந்து இறங்கியபோது எனது மகன் ஓடிவந்து என் முன் நின்று படத்தில் ஸ்ரீகாந்த், ஜீவா செய்ததுபோல் தனது பேன்ட்டை அவிழ்த்து ‘தலைவா நீங்க ரொம்ப கிரேட்’ என்று செய்தான். அது என்னை நெகிழ வைத்தது. அதை பெரிய பாராட்டாக எடுத்துக்கொண்டேன்

No comments:

Post a Comment