Tuesday, January 17, 2012

பழம் நழுவி பவர் ஸ்டாரில் விழுந்து...

‘அமராவதி’ தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம் என கிட்டத்தட்ட செஞ்சுரியைத் தொடும் பட எண்ணிக்கையின் நாயகி சங்கவி. அஜித்தின் முதல் பட நாயகியானவர் பின்பு விஜய், பிரஷாந்த், கார்த்திக், பிரபு, சரத்குமார் என்று அநேகமாக அனைத்து தமிழ் ஹீரோக்களுடனும் ஜோடி போட்டவர்.

மீதமிருந்த உச்ச ஸ்டார்களான கமல், ரஜினியுடனும் கூட ‘பஞ்சதந்திரம்’, ‘பாபா’ படங்களில் நடித்து பூரணத்துவம் பெற்ற ஹீரோயினான சங்கவி இப்போது டாக்டர் சீனிவாசனின் ஜோடியாகிறார் ‘தேசிய நெடுஞ்சாலை’ படத்தில்.


‘அல்டிமேட் ஸ்டார்’ தொடங்கி ‘சூப்பர் ஸ்டார்’ வரை நடித்தவர் இப்போது ஏன் ‘பவர் ஸ்டாரி’ன் நாயகி ஆனார்?

‘‘அதில் என்ன தப்பு..?’’ என்ற சங்கவி தொடர்ந்தார்...

‘‘அமராவதியில அஜித் கூட அறிமுகமானேன். அதேபோல விஜய்யோட மூணாவது பட நாயகி நான். அதுக்குப் பிறகுதான் எல்லாருமே வளர்ந்தோம். முதல்ல யாருமே ஸ்டார் இல்லை. அவங்கவங்க திறமையால பெரிய ஸ்டார் ஆனாங்க. இப்பவும் அப்படித்தான். டாக்டர் சீனிவாசன் ‘லத்திகா’ங்கிற படத்துல ஹீரோவானார். அடுத்த படம் ‘ஆனந்த தொல்லை’ ரிலீசாக இருக்குன்னாங்க. இது அவருக்கு மூணாவது படம்.

எப்பவுமே நான் கூட நடிக்கிறது எந்த ஸ்டார்னு கேட்டுப் படங்களை ஒத்துக்கிட்டது கிடையாது. அப்போதும் சரி, இப்போதும் சரி... கதை எனக்குத் திருப்தியா இருக்கணும்னு எதிர்பார்த்திருக்கேன். வளர்ந்த பிறகும் கூட சின்ன நடிகர்களோட நடிச்சிருக்கேன்னா, அதுக்குக் காரணம் ஸ்கிரிப்ட் திருப்தியா இருந்ததுதான். தொடர்ந்து பெரிய ஸ்டார்கள் கூடவும் நடிச்சிருக்கேன். ‘தேசிய நெடுஞ்சாலை’ படத்துக்காக சபரீஸ்வரன் எழுதிய கதை ஒரு ‘மர்டர் மிஸ்டரி’யா என்னைக் கவர்ந்தது. சென்னை டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில ஒரு கொலை நடக்க, அது ஏன் நடந்ததுன்னு சி.பி.ஐ அதிகாரியா வர்ற சீனிவாசன் கண்டுபிடிக்கிறார்.

பதினாலு வயசுல நடிக்க வந்த எனக்கு, என்கூட நடிக்க வந்த எல்லாருமே வயசுல பெரியவங்களா தான் தெரிஞ்சாங்க. இப்படித் தான் நூறு படங்களைக் கடந்து வந்திருக்கேன். சூப்பர்ஸ்டார் கூட நடிக்கிற வாய்ப்பு ‘பாபா’வில கிடைச்சப்ப, அவரோட எளிமையைப் பார்த்து வியந்திருக்கேன். கமல் சார் கூட ‘பஞ்சதந்திர’த்துல நடிச்சது ஒரு டிக்ஷனரி படிச்ச உணர்வு. சமீபத்துல ‘பிதாமகன்’ கன்னட ரீமேக்ல உபேந்திராகூட நடிச்சேன். அதுக்கு அங்கே நல்ல வரவேற்பு. ஒரு நடிகைக்கு நூறு படங்கள்ல கதாநாயகி அந்தஸ்துங்கிறது பெரிய விஷயம். இப்பவும் நல்ல கதையம்சம் உள்ள இந்தப் படத்துல ஹீரோயினா நடிக்கிறது பெருமையான விஷயம்தான்..!’’

எப்படியோ பழம் நழுவி பவர் ஸ்டார் கைகளில் விழுந்திருக்கிறது. ஆல் தி பெஸ்ட்..!

No comments:

Post a Comment