Saturday, June 30, 2012

நித்தியானந்தாவால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன். அதிரவைக்கும் ஆர்த்திராவின் வாக்குமூலம்.




காக்களோடு கொடைக்கானலில் இருக்கிறார் நித்தியானந்தா. கடுமையான குளிரிலும் வியர்த்துக் கொட்டுகிறதாம் நித்திக்கு. காரணம் கர்நாடக சி.ஐ.டி. போலீஸார் கையில் இருக்கும் ஆர்த்தி ராவின் வாக்குமூலம். 
'நித்தியால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன்’ என்று ஓப்பன் பேட்டி தந்த ஆர்த்தி ராவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை 43. அவர் சொல்லி இருக்கும் காம சமாச்சாரங்கள்,  ஒரு 'பலான’ புத்தகத்தைப் போன்று அங்குலம் அங்குலமாக விரிகிறது. அந்த வாக்குமூலம் முழுவதும் நிர்வாண வார்த்தைகள் மிக அதிகம். அதை அப்படியே வெளியிட முடியாது என்பதால் நாகரிகத் தமிழில் தருகிறோம்.
அமலா (எ) ஆர்த்தி ராவ் (எ) மா நித்ய பிரமேஸ்வரி மாயி!
43 பக்கங்கள் கொண்ட ஆர்த்தி ராவின் வாக்குமூலத்தில் தன்னைப் பற்றியும், சென்னையில் இருக்கும் தன் குடும்பத்தைப் பற்றியும், அமெரிக்காவில் இருக்கும் தன் கணவர், வேலை பற்றி எல்லாம் சொல்லி இருப்பது மூன்றே பத்திகள்தான்.அதன் பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பிடிக்கும், விவேகானந்தரைப் பிடிக்கும், அதனால் நித்தியானந்தரைத் தேடி 2004-ல் வந்ததாக அறிமுகம் வாசிக்கிறார். அதன் பிறகு அரங்கேறியவை எல்லாம் 'ஏ’ சர்டிஃபிகேட் காட்சிகள்.
முதல் சந்திப்பு!
''2004 தொடக்கத்தில் ஆசிரமத்தில் சேர்ந்தாலும் டிசம்பரில்தான் நித்தியுடன் நேரடி சந்திப்பு ஏற்பட்டது. முதல் சந்திப்பிலேயே என்னிடம் தன்னை மறந்து நிறைய நேரம் பேசினார். என்னுடைய குடும்பம், கணவர், மனப்பிரச்னைகளை எல்லாம் அவரை குருவாக நினைத்துக் கொட்ட ஆரம்பித்தேன். தனிப்பட்ட வாழ்க்கையும், ஆன்மிக வாழ்க்கையையும் எப்படிப் பிரித்தாள வேண்டும், அதற்கு எந்தெந்த வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று சொன்னார். 'என்னுடைய பிரச்னைகளுக்கு எல்லாம் அருமருந்து ஜீவன் முக்திதான்’ என்று என் கைகளைப் பிடித்து அழுத்திச் சொன்னார். 'ஜீவன் முக்திக்குத் தயாராக இருக்கிறாயா?’ என்று கேட்டதும்,  என்னை மறந்து 'தயார்’ என்றேன். அதில் இருந்துதான் அத்தனையும் ஆரம்பம்'' என்று தொடங்குகிறார் ஆர்த்தி ராவ்.
நித்தியின் வியாக்கியானம்
''குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலால்தான் நான் ஆசிரமத்துக்கு வந்தேன். இங்கே வந்து சன்னியாசி வாழ்க்கை வாழ்ந்த பிறகு, எனக்குக் குடும்ப வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்பட்டது. அதுநாள் வரை சண்டை போட்டு பிள்ளை பெறுவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போன நான், தாய்மை அடைய விரும்பினேன். அதன் பிறகு சென்னையில் கொஞ்ச நாட்கள் கணவருடன் வாழ்ந்து தாய்மை அடைந்தேன். அதனை வீட்டில் உள்ள அனைவரும் பெறும் பேறாகக் கொண்டாடினோம். இதனை என்னுடைய குருவிடம் சொல்லி ஆசி பெற வேண்டும் என்று பிடதிக்குப் போனேன். 2005-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பிடதி போனேன். அப்போது, 'குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு ஜீவன் முக்தி அடைய முடியாது. அதனால் கர்ப்பத்தைக் கலைத்து விடு’ என்றார்.
'எனக்குத் தாய்மையும் அடைய வேண்டும், ஜீவன் முக்தியும் அடைய வேண்டும். அபார்ஷன் செய்வது குற்றம் இல்லையா? இதற்காக என்னுடைய கணவரி டம் அனுமதி கேட்க வேண்டும். உங்கள் பேச்சைக் கேட்டு அபார்ஷன் செய்து விட்டால், அவருக்கு எப்படி பதில் சொல்வேன்?’ என்று கேட்டேன்.
'அபார்ஷன் குற்றம் இல்லை. குழந்தை பிறப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர்தான் உடலோடு 'ஆன்மா’ இணைகிறது. அதனால் உடலைக் கொல்தல் பாவம் அன்று. ஆன்மாவைக் கொல்வதுதான் பாவம். நீ உடலைத்தானே கொல்லப் போகிறாய்’ என்றார். குருவின் பேச்சைக் கேட்டு, பிப்ரவரி முதல் வாரத்தில் கருவை கலைத்தேன். ஆனால் என் கணவரிடம், 'கர்ப்பம் தானாகவே கலைந்து விட்டது’ என்று பொய் சொன்னேன். எனக்குப் பிடித்த தாய்மையை நித்திக்காக இழந்தேன்'' என்று கதறுகிறார்.
நீதான் எந்தன் தேவி!
2005 ஜனவரி மாத இறுதியில் நித்தி ஒருநாள், 'என்னோடு சேலத்துக்கு வருகிறாயா?’ என்று கேட்டார். 'யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் உனக்குக் கிடைத்து இருக்கிறது. குருவே உன்னை அழைக்கிறார்’ என்று அவரது சீடர் சதானந்தா சொல்லவே கிளம்பினேன். சேலத்தில் ஜெய்ராம் என்ற பக்தரின் வீட்டில் முதல் தளத்தில் நித்தி தங்கி இருந்தார். அப்போது நித்தியின் பர்சனல் செகரட்டரியாக இருந்த ராகினி, 'நீ சுவாமிக்கு பெர்சனல் சேவை செய்யப் போ’ என்று என்னை மேல் தளத்துக்கு அனுப்பினார். 'இது உனக்குக் கிடைத்த பாக்கியம்’ என்றும் சொன்னார். நித்திக்கு இரவு உணவு பரிமாறிவிட்டு நின்று கொண்டிருந்தேன். அவர் சாப்பிட்டு முடித்த உடன் கால்களை அமுக்கச் சொன்னார். அழுத்தினேன். பிறகு கதவைத் தாழிடச் சொன்னார். குருவிடம் ஏன் என்று கேள்வியே கேட்கக் கூடாது என்பதால் அதையும் செய்தேன். கதவைத் தாழிட்டு திரும்பும் போது நித்தி என்னை இறுக்கமாக அணைத்து உதட்டில் முத்தமிட்டார். அதிர்ச்சியுடன் என்னுடைய எதிர்ப்பை தெரிவித்த போது, 'நீ என்னை முக்தி பெற்ற குருவாக நினைக்கிறாயா?’ என்று கேட்டார். 'ஆமாம்’ என்றேன். 'இப்போது உன்னையும் ஜீவன் முக்தி அடையச் செய்யப் போகிறேன். அதற்காக நான் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வேன். நீ அதனை முழு சம்மதத்தோடு அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் ஜீவன் முக்தி அடைய இதுதான் ஒரே வழி. இது வேத காலம் தொட்டு கடைப்பிடிக்கும் வழக்கம்’ என்று என்னை முழுமையாக மூளைச் சலவை செய்தார்.
'இப்போதுதான் நீ முழுமையான தேவியாக மாறி இருக்கிறாய். என்னிடம் இருக்கும் சிவன் சக்தி உன்னிடம் வந்திருக்கிறது. இனி நீ ஜீவன் முக்தி அடைவாய். நீ குருவுக்குச் செய்திருக்கும் இந்த மஹா சேவைக்கு நன்றி. இனி நீ தான் எந்தன் தேவி’ என்று சொல்லி என்னை முத்தமிட்டார். அதன் பிறகு ஏற்பட்ட மனக் குழப்பத்தில் நான் அனுபவித்த வேதனையைச் சொல்லில் அடக்க இயலாது'' என்கிறார்.
ஆனந்தேஷ்வரா... ஆனந்தேஷ்வரி!
''2005 ஜனவரி 20-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 23-ம் தேதி வரை நித்தி ஏற்காட்டில் கிராண்ட் பேலஸ் ஹோட்டலில் தங்கி, வகுப்புகளை நடத்தினார். எனக்குச் சரியான தேதி தெரியவில்லை. வேண்டும் என்றே என்னை அறைக்கு வரவழைத்து இன்பத்தில் ஈடுபடுவார். நான் மறுக்கும் போதெல்லாம், 'நான் ஆனந்தேஷ்வரன்... நீ ஆனந்தேஷ்வரி என்பதை உணர்ந்து நடந்து கொள். இது காமம் அல்ல. கடவுளை அடையும் வழி. என் அன்பைப் பெற்ற நீ பேறு பெற்றவள்’ என்பார். என் உடலால் மட்டுமின்றி மனதாலும் மீறி சிந்திக்கவே இயலாத வண்ணம் நித்தி என்னை ஆக்கிரமித்து இருந்தார். இதற்கு சாட்சி என்னுடைய தந்தை மற்றும் யோகா டீச்சர் வீணா ஜெயராம்''
நீ என் தாய் (எ) மாயி
''என்னைத் தேவியாகச் சித்திரித்து பல முறை இயற்கைக்கு முரணான வகையிலும் உறவு கொண்ட நித்தி, செயின்ட் லூயிஸ் நகரத்தில் இருக்கும் போது என்னை, 'மாயி’ (தாய்) என்று அழைத்தார். 'என்ன சுவாமி என்னோடு இருந்து விட்டு இப்படி அழைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு, 'ஒரு பெண் தாயாகவும் தாரமாகவும் மாறக் கூடியவள். கட்டிலில் மட்டும் நீ தாரமாக இரு. மற்ற இடங்களில் நீ என் தாய். அப்போதுதான் அன்பு அதிகம்’ என சொல்லிக் கொண்டே முத்தமிட்டு என்னை வெறுமனே விழுங்கினார்.''
போதை ஏற்றிய நித்தி
''2006-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்தேன். ஒரு நாள் அவர் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, பீரோவில் இருக்கும் ஆல்கஹாலை எடுத்து வரச் சொன்னார். பீரோவில் காவி உடைகளுக்கு அடியில் இருந்த மதுவை எடுத்து வந்தேன். ஆசிரமச் சட்டப்படி மதுவைப் பயன்படுத்துவது தவறு. ஆனால் குருவே சொல்லும் போது தட்ட முடியாது. அதில் தண்ணீரே சேர்க்காமல் அப்படியே குடித்தார். ஆச்சர்யமாகப் பார்த்த என்னுடைய வாயிலும் ஊற்றினார். துப்பினேன். ஆனால் மீண்டும் ஊற்றி என்னைக் குடிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறி வாந்தி எடுத்தேன். சுய நினைவில்லாமல் அவரது அறையிலேயே படுத்து விட்டேன். காலையில் தெளிந்து எழுந்தபோது உடையின்றிக் கிடந்தேன்.''
வாரணாசியில் தாசி
''நித்தியுடன் 3.11.2006-ல் வாரணாசிக்கு ஆன்மிகச் சுற்றுலாவுக்குச் சென்று இருந்தேன். நித்தியை விஷ்வம் ஹோட்டலில் தங்க வைத்து விட்டு, நானும் மற்றவர்களும் ஹோட்டல் பிளாசாவில் தங்கி இருந்தோம். இரவு 2 மணி இருக்கும் போது கோபமாக நுழைந்த ராகினி, 'உடனே நித்தியின் அறைக்கு போ’ என்று என்னிடம் சொன்னார். அறையில் நுழைந்ததும், 'என்னை ஏன் தனியாக விட்டுப் போனாய். உன்னை தேவி என்று சொல்கிறேனே?’ என்று கோபமாகத் திட்ட ஆரம்பித்தார். எவ்வளவோ மன்னிப்புக் கேட்டும் அவர் கோபம் அடங்கவில்லை. பிறகு பணி விடைகள் புரிந்த பிறகு சமாதானம் ஆனார். வாரணாசியில் இருக்கும் போது ஒரு நாள் என்னை, 'தாசி’ என்று சொல்லி அணைத்தார். அப்போது, 'தேவி, தாய் என சொல்லிவிட்டு இப்போது தாசி என சொல்கிறீர்களே?’ என்று கோபப்பட்டேன். 'தாசிதான் இறைவனுக்கு உண்மையான தேவையைப் பூர்த்தி செய்வாள். தாயினும் சிறந்தவள். நீ என் தாசி’ என்றார். ஏதாவது காரணம் கேட்டால், தன்னுடைய ஜீவன் முக்தி புத்தகத்தின் பக்கங்களைச் சொல்லியே விளக்குவார். அதே போன்று கொலம்பஸில் தங்கி இருந்த போதும் நித்தி, என்னை தாசி என்றே அழைத்தார். பிறகு வழக்கம் போன்று என் விருப்பம் இல்லாமலே அனுபவித்தார்.''
கிளாமர் உடைகள், ஆணுறை
''2006-ம் ஆண்டு மே மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் போய் இருந்தோம். அப்போது நித்தி வழக்கமாக அணியும் காவி உடைகளைக் களைந்து விட்டு ஜீன்ஸ், டீ-ஷர்ட், ரேபான் கிளாஸ் அணிந்து கொண்டு என்னோடு ஊர் சுற்றுவார். ஒருநாள் விநய் பரத்வாஜிடம் நைட் கிளப்புக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி என்னையும் உடன் அழைத்துச் சென்றார். அங்கே சாமியார் என்பதை மறந்து, ஆட்டம் போட்டார். அதன் பிறகு ஹோட்டல் அறைக்கு வந்தவுடன் எனக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தார். அதற்கு இணங்க மறுத்தால், 'உன் ஈகோவைத் தூக்கி போடு. அப்போதுதான் ஜீவன் முக்தி’ என்பார். அப்படி ஒருநாள், 'நான் சொல்வதைச் செய்வாயா?’ என கேட்டவர், 'போய் கிளாமரான உடைகள் அணிந்து செர்ரி கலர் லிப் ஸ்டிக் போட்டு வா. ஆணுறையும் எடுத்து வா. அதுதான் எனக்குப் பிடிக்கும். வா, செக்ஸ் மெடிட்டேட் செய்ய வேண்டும்’ என்று கூறி என்னை அனுபவித்தார். அதே போன்று அமெரிக்காவில் சிவ யோக தாண்ட‌வம், என்று சொல்லியும் என்னை அனுபவித்தார்.''
கும்ப மேளாவில் சில்மிஷம்!
2007 ஜனவரியில் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெற்றது. அப்போது ராகினிக்கு உடல் சரி இல்லாததால் சித்ரா நரங், லெனின் கருப்பனுடன் நானும் நித்தியோடு போனேன். அங்கு முழுக்கத் தங்கியது டென்ட்டில்தான். ஒரு மதியப் பொழுதில் நித்தி என்னை அவரது டென்ட்டுக்கு வரச் சொன்னதால் போனேன். அங்கும் என்னைக் கட்டியணைத்து, முத்தமிட்டு இயற்கைக்கு முரணாக செக்ஸ் கொண்டார். 'ஸ்வாமி நீங்கதானே இந்த இடத்தை உலகத்திலேயே புனிதமான இடம் என்று சொன்னீர்கள். நாம் இங்கே இப்படிச் செய்வது அதன் புனிதத் தன்மையை கெடுப்பது போல் ஆகிவிடாதா?’ என்று கேட்டேன். 'புனிதமான இடத்தில் உறவு கொண்டால்தான் விரைவில் ஜீவன் முக்தி அடைய முடியும். நீ இப்போது செய்யும் சேவை உன் ஜீவன் முக்தி மட்டுமல்ல, உன் குருவின் சக்தியையும் கூட்டும்’ என்று சொன்னார்.''
சேடிஸ்ட் மாதிரி அடித்தார்!
''2007 ஏப்ரலில் அமெரிக்காவில் உள்ள வேதிக் கோயிலைத் திறக்க நித்தியோடு போயிருந்தேன். இனியும் நித்திக்கு அடிபணியப் போவதில்லை என்ற மன உறுதியோடு நடந்து கொண்டேன். என்னை ஹோட்டல் அறைக்கு அழைத்து, 'உனக்கு அறிவிருக்கா? ஜீவன் முக்தி அடையும் நேரத்தில் இப்படி நடந்து கொள்கிறாயே’ என்று ஆரம்பித்து அதுவரை கேட்டு இராத கெட்ட வார்த்தைகளால் காறி உமிழ்ந்தார். அப்போதும் அடி பணிய மறுத்ததால், என்னை அறைந்தார். அதன் பிறகு வலுக்கட்டாயமாக என்னைப் பலவந்தப்​படுத்தி னார். அவரது ஆசைக்கு ஒப்புக் கொள்​ளாமல் போனால் சேடிஸ்ட் போன்று அடிப்பார். இதனை பல முறை ஆசிரமத்தி லேயே பார்த்​திருக்கிறேன்''
125 ஆண்டு வாழ்வேன்!
''நீண்ட நாட்களுக்குப் பிறகு 2007 டிசம்பர் 31-ம் தேதி பிடதி ஆசிரமத்துக்கு வந்தேன். ஏனென்றால் நித்தியானந்த ஜெயந்தி (பிறந்த நாள்) மற்றும் குரு பூர்ணிமா விழா நடைபெறும். அப்போது அவர் என்னை அழைத்து, 'நீதான் என்னுடைய உண்மை யான தேவி. வா ஜீவன் முக்தி அடையலாம்’ என்று கூறி அனுபவித்தார்.  அதே போன்று 2008 டிசம்பரில் வந்தபோதும் அவ்வாறே செய்தார்.  என்னோடு செக்ஸ் கொண்ட பிறகு, 'இதுதான் தேவி தரிசனம். நான் இப்படியே இருந்தால் 125 ஆண்டு வரை வாழ்வேன். உன்னையும் வாழ வைப்பேன். இப்படியே ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் என்னோடு இரு’ என்றார்''
விநய் பரத்வாஜைக் கற்பழித்தார் நித்தி!
''நித்தியின் செய்கையால் மனசு ரொம்பவே நொந்து போய் கொஞ்ச நாள் இருந்தேன். பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அதன் பிறகு மீண்டும் ஆசிரமத்தில் இருந்து நித்தி அழைத்ததால் 2009-ம் ஆண்டு அமெரிக்க டூருக்குத் தயாரானேன். அப்போது அமெரிக்காவில் இருக்கும் சீடரான விநய் பரத்வாஜ், 'உன்னிடம் தவறாக நடந்து கொள்கிறாரா?’ என்று கேட்டார். விநய் பரத்வாஜை அவ்வளவாக தெரியாது என்பதால், 'இல்லை’ என மறுத்து விட்டேன். அப்போது விநய், 'என்னை பல முறை கெடுத்து விட்டார்’ என்று அழுதார். அதன் பிறகு எனக்கு நேர்ந்ததைச் சொல்லி அழுதேன். பிறகு அவர்தான் லெனினிடம் சொல்லி அழ, வீடியோ செட் பண்ணும் திட்டம் ரெடி ஆனது. அதன் பிறகு நிகழ்ந்ததை உலகமே அறியும்'' என்று ஆர்த்தி ராவ் சி.ஐ.டி. போலீஸில் விலாவாரியாகச் சொல்லி இருக்கிறார்.
ஆர்த்தி ராவின் வாக்குமூலம் படு வலிமையாக இருந்தாலும், நித்திக்கு எதிராக இன்னும் நிறைய புகார்களை எதிர்பார்க்கிறது கர்நாடக போலீஸ். அதனால் இதுவரை நித்தியிடம் பெர்சனல் செகரட்டரியாக இருந்த பெண்களின் பட்டியலும், மாண்புக் குரிய அம்மா பட்டம் பெற்ற பெண்களின் பட்டியலையும் கையில் வைத்துக் கொண்டு தேடி வருகிறது. இதை அறிந்துகொண்ட நித்தி தரப்பும் எதிராளிகளை ஆஃப் பண்ணுவதில் மும்முரமாக இருக்​கிறார்கள். மா நித்ய கோபிகாவின் கேரள வீட்டிலும் சி.ஐ..டி போலீஸ் விசார​ணையைத் துவங்கி இருக்​கிறார்கள்.
'ஆண்மை பரிசோதனை, முழு உடல் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, குரல் சோதனைக்காக ஆஜராக வேண்டும்’ என்று ராம்நகர் கோர்ட் கடந்த வாரம் நித்திக்கு உத்தரவு போட்டது. இதனைத் தொடர்ந்து  பெங்களூரு விக்டோரி​யா மருத்துவமனையில்  நித்தியைப் பரிசோதிக்க டாக்டர் மாதவ் ராஜு தலைமையில் ஐந்து மருத்துவர்கள் தயாராக இருக்கிறார்கள். அநேகமாக நித்திக்கு அடுத்த வாரம் பரிசோதனைப் படலம் ஆரம்பமாகலாம். அதற்குள் மருத்துவர்களை வளைக்கும் வேலையை நித்தி குரூப் ஆட்கள் செய்து வருகிறார்களாம்.
தூசு தட்டப்படும் கென்னடியின் மர்ம மரணம்
இதுவரை மகளிர் வழக்குகளில் மட்டுமே சிக்கிய நித்தி மீது இப்போது ஒரு கொலைப் புகாரும் வர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். பெங்களூருவில் நித்திக்கு எதிராக கன்னட அமைப்புகளை ஒருங்கிணைத்து வரும் ஸ்பந்தனா மகளிர் அமைப்பைச் சேர்ந்த வீணா, ''நித்தி ஆசிரமத்தில் கென்னடி என்பவர் 2004-ம் ஆண்டு மர்மமாக இறந்து போனார். மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்று அதனை விபத்தாக மூடி மறைத்து விட்டார்கள். அது  கொலையாக இருக்கலாம். அதனால் தீவிரமாக விசாரிக்க வேண்டும். சி.ஐ.டி. போலீஸில் அந்த வழக்கையும் இணைத்து விசாரிக்கச் சொல்லி இருக்கிறோம். அது மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்'' என்றார்.
கென்னடியின் மர்ம மரண வழக்கை பிடதி போலீஸ் தூசு தட்ட ஆரம்பித்து இருப்பதால்,
இப்போதே பிடதியில் புகைவாசம்!

மதுரையில இருக்கிற சாமியைவிட, வடக்கே இருக்கிற சாமி சக்தி வாய்ந்ததா? அழகிரியின் ஆதரவாளர்


ற்ற மாவட்டத்து தி.மு.க-வினர் அனைவரும் சிறை நிரப்பும் போராட்டத்துக்குத் தயார் ஆக... மதுரைக்காரர்கள் மட்டும் உள்கட்சி யுத்​தத்துக்கு ரெடி ஆகிறார்கள். சிறை நிரப்பும் போராட்டத்தை எப்படி நடத்துவது என்று அனைத்து மாவட்​டங்களிலும் கலந்துரையாடல் கூட்டங்கள் நடந்துவருகின்றன. அப்படி ஒரு கூட்டத்துக்கு கடந்த 27-ம் தேதி மதுரையிலும் ஏற்பாடு ஆனது. மதுரை மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை தாங்க வேண்டிய மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, 'உள்ளே’ இருப்பதால், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் அந்தக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்னதாகவே, இளைஞர் அணிக்கு என்று தனியாக ஓர் ஆலோசனைக் கூட்டம் போட்டார், தளபதியோடு இருக்கும் ஜெயராம். இந்தக் கூட்டத்தை அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தார்கள். வழக்கம்போல, தலைமை செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சிம்மக்கல் போஸ் போன்ற ஸ்டாலின் ஆதரவாளர்கள் மட்டுமே வந்தார்கள். புதிதாக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், வி.கே.குருசாமி ஆகியோர் வந்து, அழகிரி ஆட்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்கள். 
அடக்கியே வாசிக்கப்பட்ட அந்தக் கூட்டத்தில், ஜெயராம் பேச்சில் மட்டும்​தான் காரம் தூக்கல். 'தளபதி ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர். மத்தவங்க மாதிரி இல்லாமல், ரொம்ப ஈஸியா சந்திக்கக்கூடிய எளிய தலைவராக இருக்கிறார். அவர் முதல்வரான பிறகு, சிறைக்குச் சென்றதற்கான அத்தாட்சியோடு நேரடியா அவரைப் போய்ப் பாருங்க. 'அண்ணே நான் சிறைக்குச் சென்றேன். எனக்கு கட்சிப் பதவி கொடுங்க. நான் படிச்சிருக்கேன், எனக்கு வேலை போட்டுக் குடுங்க. என் புள்ளைக்கு சிபாரிசுக் கடிதம் கொடுங்க’ன்னு கேளுங்க. உடனே செஞ்சு குடுப்பார். அதனால, ஜெயிலுக்குப் போகத் தயாரா இருங்க!' என்றார் ஜெயராம்.
மறுநாள் இதே ஆலோசனைக் கூட்டத்தை அழகிரி ஆட்கள் நடத்தினார்கள். அழகிரிக்குச் சொந்தமான தயா மகாலில் நடந்த மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு அழகிரி வரவில்லை. துணைச் செயலாளர் உதயகுமார் முன்னிலை வகிக்க, கூட்டத்தை நெறிப்​படுத்தினார் மன்னன். முறையாக அழைக்கப்பட்டதால் வேலுச்சாமி, பொன்.முத்துராமலிங்கம், குழந்தைவேலு போன்ற ஸ்டாலின் ஆதரவாளர்களும் ஆஜர். ஆனால், ஏன்டா வந்தோம் என்ற அளவுக்கு அழகிரி ஆட்கள் படுத்தி எடுத்துவிட்டார்கள்.
முதலில் மைக் பிடித்த முதலாம் பகுதிச் செயலாளர் ரவீந்திரன், 'எனக்கு ஒரு பிரச்னை வந்தபோது, அண்ணன் பொன்.முத்துராமலிங்கம் என்னவென்றே கேட்கவில்லை. இதுதான் கட்சிக்காரர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையா?' என்று ஆட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
பகுதிச் செயலாளர் கோபிநாதன் நேரடியாக தளபதியை அட்டாக் செய்தார். 'அஞ்சாநெஞ்சனை நம்பிக் கெட்டவர்கள் யாரும் கிடையாது. நம்பாமக் கெட்டவங்கதான் அதிகம். போன தடவை, உட்கட்சித் தேர்தல் நடந்தப்ப இந்தத் தளபதி, புறநகர் மாவட்டத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆகிட்டார். அதனால, மாநகர் மாவட்டச் செயலாளரா யாரைப் போடப்போறாங்கன்னு ஒரே பரபரப்பு. அந்த நேரத்துல, அதே தளபதியை டவுனுக்குக் கூட்டியாந்து, மாநகர் மாவட்டச் செயலாளர் ஆக்கி அழகு பார்த்தவருதான்
அஞ்சா நெஞ்சன். ஆனா இன்னைக்கு அவருக்கே துரோகம் செஞ்சிட்டார். அண்ணனுக்குத் துரோகம் செய்துவிட்டு யாரும் இங்கே வாழ்ந்ததாக (இந்த வார்த்தைக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்தார்) சரித்திரம் கிடையாது' என்று எச்சரித்தார்.
'மிசா’ பாண்டியன் இன்னும் ஒரு படி மேலே போனார். 'நாங்க எல்லாம் 'பாட்ஷா’ படத்துல வர்ற ரஜினி மாதிரி. அமைதியா இருப்போம். சீண்டிப் பார்த்தா, தாங்க மாட்டீங்க. கேரளாவுல பிரச்னை வந்ததும், நம்ம அய்யப்ப பக்தர்கள் எல்லாம் என்ன பண்ணுனாங்க? அந்தந்த ஊர்ல இருக்கிற அய்யப்பன் கோயிலுக்குத்தானே போனாங்க? அது மாதிரி நமக்கு மதுரைன்னு ஆகிப்போச்சு. மதுரையில கின்னஸ்ல இடம்பெறுகிற அளவுக்கு பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் இருக்கு. அங்க போய் சாமி கும்பிடாம, நான் காசிக்குப் போறேன், ரிஷிகேஷ் போறேன்னா... அசிங்கப்பட்டுப் போய் நிற்கிற. இங்க இருக்கிற சாமிக்கு சக்தி இல்லைன்னாதானடா, நீ அங்கிட்டுப் போகணும்?'' என்று சிலேடையாகப் பேசினார். அழகிரி ஆதரவாளராக இருந்த தளபதி, இப்போது ஸ்டாலின் ஆதரவாளராக மாறியதைத்தான் இப்படி மறைமுகமாகக் குறிப்பிட்டார். ஒப்புக்கு பொன்.முத்து பேசினாலும் யாரும் கண்டு​கொள்ளவில்லை..
மதுரையில் குறைந்தது 2,000 பேராவது சிறைக்குப் போக வேண்டும் என்பது சாமி... ஸாரி, அழகிரியின் உத்தரவாம்!

ராமஜெயம் வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீ சுக்கு மாறப்போகிறது.


ராமஜெயம் வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீ சுக்கு மாறப்போகிறது என்ற தகவல் கிடைத்ததும் சிரித்​தவர்​கள்தான் அதிகம்! 
ராமஜெயம் கொலை வழக்கை மூன்று மாதங்​களாக டீம் டீமாக... டிசைன் டிசைனாக... விசாரித்துப் பார்த்தும் எந்த உருப்படியான துப்பும் கிடைக்காமல், திணறிக்கொண்டே இருந்தார்கள், திருச்சி போலீஸார். மீண்டும் மீண்டும் விசாரிக்கப்பட்டதால் திருச்சி தி.மு.க. பிரமுகர்களும் பேஸ்தடித்துக்கிடந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. கைகளுக்கு மாறவே, 'ராமஜெயம் வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீ சுக்கு மாறப்போகிறது ..?’ என்று அலறுகிறார்கள் ஏற்கெனவே போலீஸிடம் வறுபட்டவர்கள்.
ஜூன் 26-ம் தேதி மாலை திருச்சி சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.​மலைச்சாமிக்கு சென்னை தலை​மை அலுவலகத்தில் இருந்து, 'ராம​ஜெயம் கொலை வழக்குத் தொடர்பான ஆவணங்களை திருச்சி மாநகர போலீஸிடம் போய் வாங்கிக்​​​கொள்ளுங்கள்’ என்று திடீர் உத்தரவு வந்தது. அதன்படி 1,500 பக்கங்கள்கொண்ட ஆவணங்களை வாங்கிக்கொண்டார் டி.எஸ்.பி. மலைச்சாமி.
மறுநாள் காலை, சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மஞ்சுநாதா, டி.ஐ.ஜி. ஸ்ரீதர், எஸ்.பி. ராஜேஸ்வரி ஆகியோர் தனித்தனி கார்களில் புறப்​பட்டு திருச்சிக்கு வந்து சேர்ந்தனர். ராமஜெயம் உடல் கிடந்த இடத்தைக் காட்டும் வரைபடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, காலை 11.30 மணிக்குக் கிளம்பியது படை. திருவளர்ச்சோலை பகுதியில், ராமஜெயம் உடல்கிடந்த இடத்தை வரைபட உதவியுடன் தேடிக்கொண்டே இருந்தனர். அதன் பிறகு பத்திரிகையாளர்கள் உதவி செய்த பிறகுதான், இடத்தை அடையாளம் கண்டார்கள். அங்கிருந்து காரில் கிளம்பி, ராமஜெயம் வாக்கிங் செல்லும் பாதைகளை ஒரு ரவுண்ட் அடித்தனர். அடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நோக்கி பயணித்தனர். அங்கு கமிஷனர் சைலேஷ் குமார் யாதவை சந்தித்துப் பேசினார்கள்.
மன்னார்புரம், காஜாநகர் பகுதி​யில் வாடகை வீட்டில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் கடந்த ஆண்டு முதல் இயங்கிவருகிறது. ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கக் கூடுதல் போலீஸ் தேவை என்பதால், மத்திய மண்டலத்தில் உள்ள ஐந்தாறு மாவட்டங்களைச் சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மாற்றப்பட்டு இருந்​தனர். அவர்கள் உட்காரக்கூட இடம் இல்லாமல் தெருவில் அலைந்து​கொண்டு இருந்ததுதான் பரிதாபம்.
மாலை 4 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு. ''எங்கள் வசம் தமிழகம் முழுக்க 114 வழக்குகள் உள்ளன. எங்களால் கண்டுபிடிக்க முடியாத வழக்கு என எதுவும் கிடையாது. ராமஜெயம் கொலை வழக்கைக் கண்டுபிடிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. நிர்ணயிக்கவும் முடியாது. திருச்சி போலீஸ் எங்களிடம் ஒப்படைத்துள்ள 1,500 பக்க ரிப்போர்ட்டை முழுமையாகப் படித்த பிறகு, இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்குவோம். புதுக்கோட்டை முத்துக்குமார் கொலை வழக்கு, திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கு, மதுரை வாடிப்பட்டி சிறுமி நரபலி வழக்கு ஆகியவற்றில் சிறப்பாக துப்புத் துலக்கியதுபோன்று, ராமஜெயம் கொலைக் குற்றவாளிகளையும் கண்டிப்பாகப் பிடித்துவிடுவோம்'' என்ற ஐ.ஜி. மஞ்சுநாதாவிடம், ''திருச்சியில் வையம்பட்டியில் நடந்த துரைராஜ், அவரது கார் டிரைவர் கொலை வழக்கு மற்றும் மணிகண்டத்தில் நடந்த துரைராஜின் அண்ணன் தங்கவேல் கொலை வழக்கு ஆகியவை ஐந்து ஆண்டுகளாக சி.பி.சி.ஐ.டி-யால் துப்புத் துலக்கப்படாமல் இருக்கிறதே?'' என்று கிடுக்கிப்பிடி போட்டனர் நிருபர்கள்.
''அந்த வழக்குகளையும் தீவிரமாக விசாரித்துவருகிறோம். எப்படியும் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்'' என்று சமாளித்து முடித்தார்.
திருச்சி போலீஸ் கிளப்பில் தங்கியுள்ள சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி, சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிப்பதுபோல் திருச்சி மாநகரப் போலீஸ் கொடுத்துள்ள அறிக்கையைப் படித்துவருகிறாராம். டி.எஸ்.பி. மலைச்சாமியை தலைமைப் புலனாய்வு அதிகாரியாகக்கொண்டு, அவருக்கு கீழ் ஐந்து இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் டீம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் எஸ்.பி-யின் உத்தரவுக்​காகக் காத்திருக்கிறார்கள்.
''போலீஸ் கூப்பிடும்போதெல்லாம் விசாரணைக்​குப் போகவேண்டும் என்பதால், எங்களால் கடந்த மூன்று மாதங்களாக நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்ளக்கூட வெளியூர் போகமுடியவில்லை. இனி, சி.பி.சி.ஐ.டி. டீமும் எங்களது தூக்கத்தைக் கெடுக்கத்தான்போகிறது'' என்ற முணுமுணுப்பு ராம​ஜெயத்துக்கு நெருக்கமானவர்கள் வட்டாரத்தில் ஒலிக்கிறது.
திருச்சி போலீஸ் நிம்மதிப் பெருமூச்சுவிட, சி.பி.சி.ஐ.டி. திருதிருவென விழிக்கிறது. ஏற்கெனவே, 'சி.பி.ஐ. விசாரணை கேட்போம்’ என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். ஒருவேளை சி.பி.ஐ-க்கு இந்த வழக்கு மாறினால்... அவங்களும் இப்படித்தான் வருவாங்க! விசாரிப்பாங்க! பேட்டியும் கொடுப்பாங்க!

Friday, June 29, 2012

அருள் மழை --- 61



லக்ஷ்மிநாராயணனின் பெரியப்பா நடேசய்யரும், பெரியவாளும் திண்டிவனம்
அமெரிக்க மிஷன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பெரியவர் விழுப்புரம்
வரும்போதெல்லாம், நகர எல்லையில் உள்ள பாப்பான்குளத்தில் இருக்கும்
பாபுராவ் சத்திரத்தில்தான் தங்குவார். பெரியவரை லக்ஷ்மி நாராயணனின்
தந்தைதான் பூரணகும்பம் கொடுத்து வரவேற்று, சத்திரத்துக்கு அழைத்துச்
செல்வார்.

மடத்தின் பரிவாரத்தில் யானைகள், குதிரைகள் எல்லாம் இருந்தன. சத்திரத்தில்
அவற்றையெல்லாம் கட்டிப் பராமரிக்க அப்போது வசதி இருந்தது.

அப்படி ஒருமுறை, பெரியவா பாபுராவ் சத்திரத்தில் வந்து தங்கியபோதுதான்,
அவரை முதன்முறையாகத் தரிசித்தார் லக்ஷ்மிநாராயணன்.

”எனக்கு அப்போ ஆறு வயசு இருக்கும். என் பெரியப்பா என்னை பெரியவாகிட்ட
கூட்டிண்டு போய், ‘என் தம்பி பிள்ளை இவன். மூணாங் கிளாஸ் படிக்கிறான்’
என்று அறிமுகப்படுத்தினார்.

‘பையனுக்குப் பூணூல் போட்டாச்சோ?’ன்னு விசாரிச்சார் பெரியவர்.
‘இல்லை’ன்னு சொன்னதும், ‘சரி, சீக்கிரம் பூணூல் போட்டுடு. ஸ்கூல்ல லீவு
சமயத்திலே இங்கே என்னண்டை அனுப்பி வை’ன்னார்.

அதுக்கப்புறம் நாலு வருஷம் கழிச்சு 1946-47-ல அதே பாபுராவ் சத்திரத்துல
மறுபடியும் பெரியவா வந்து தங்கினா. அதுக்குள்ளே எனக்குப் பூணூல்
போட்டாச்சு. பெரியவா சொன்னாப்பல, ஸ்கூல் லீவ் நேரத்துல மடத்துக்குப் போய்
பெரியவாளுக்குச் சேவை செய்ய ஆரம்பிச்சேன். அதுதான் ஆரம்பம். வில்வம்
ஆய்ஞ்சு கொடுக்கறது தான் என் முதல் டியூட்டி. பெரியவா பத்து நாள் அங்கே
இருந்தா.

ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர் ஜெயராமய்யர் பெரியப்பாவுக்கு சீனியர். அவர்
பெரியவாளை வந்து தரிசனம் பண்ணினார். ‘நீங்க ஊருக்குள்ள வரணும்’னு
கேட்டுண்டார். ‘ஊருக்கு வந்தா என்ன தருவே?’ன்னு கேட்டா பெரியவா. ‘உன்னோட
வீட்டைக் கொடுத்துடறியா? நான் பத்து மாசம் இங்கேதான் தங்கப் போறேன்’னார்.
குறும்பா கேக்கறாப்பல இருக்கும்; ஆனா, அதுக்குப் பின்னாடி பெரியவா
மனசுக்குள்ளே பெரிய திட்டம் ஏதாவது இருக்கும்.

‘தினம் என்னால அவ்ளோ தூரம் நடந்து பெண்ணையாத் துக்குப் போக முடியாது.
அதனால எனக்கு இங்கேயே ஒரு குளம் வெட்டிக் குடுக்கறயா?’ன்னு கேட்டா
பெரியவா.

பாணாம்பட்டுன்னு ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல ஒரு ஊர். தோட்டத்துல வேலை
பாக்கறவா 200 பேர் சேர்ந்து மூணு நாள் தோண்டினதுல, அஞ்சு அடியிலேயே ஜலம்
வந்துடுத்து. ராமருக்கு அணில் உதவின மாதிரி நானும் இந்தக் குளத்
திருப்பணியில பங்கெடுத்துக்கிட்டேன். முட்டிக்கால் ஜலம்தான். ஆனா,
ஸ்படிகம் மாதிரி இருந்துது. அதுல இறங்கி ஸ்நானம் பண்ணிட்டு, கங்கா பூஜை
பண்ணினார் பெரியவா.

பத்துப் பதினைஞ்சு நாள் போயிருக்கும். ஒரு நாள்… ‘இங்கே ஒண்ணரை
கிலோமீட்டர் தூரத்துல வடவாம்பலம்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே சுப்பிரமணிய
ரெட்டியார்னு ஒருத்தர் இருக்கார். அவரைக் கூட்டிண்டு வாங்கோ’ன்னார்
பெரியவா. அவரைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொன் னோம். பெரியவா நம்மளை
எதுக்குக் கூப்பிடறானு அவருக்கு ஒண்ணும் புரியலே. அவர் நல்ல வசதியானவர்.
அவர் வந்து பெரியவரைப் பார்த்து, ‘நான் என்ன செய்யணும்?’னு கேட்டார்.
‘தாசில்தாரை அழைச்சுண்டு வாங்கோ’ன்னார் பெரியவா. அந்தக் காலத்துல,
தாசில்தார்னா கலெக்டர் மாதிரி… அவ்வளவு பவர் அவருக்கு.

தாசில்தார் வந்தார். அவர் கும்ப கோணத்து பிராமணர். அவர்கிட்டே பெரியவா,
‘இந்த ஊர்ல என்ன விசேஷம்? ஃபீல்டு மேப் இருக்குமே? அதுல பாத்து
கண்டுபிடிச்சு சொல்லு’ன்னா.

ஃபீல்டு மேப்பை வெச்சு அவரால ஒண்ணும் கண்டுபிடிக்க முடியலே!

அப்புறம் பெரியவாளே, ‘ஒரு இருநூறு வருஷத்துக்கு முன்னால பெண்ணையாறு இங்கே
வடவாம்பலம் கிராமத்துக் குப் பக்கத்துலதான் ஓடிண்டிருந்திருக்கு.
நாளாவட்டத்துல ஒதுங்கி ரொம்ப துரம் தள்ளிப் போயிடுத்து’ன்னார்.

‘வடவாம்பலத்துல முன்னே ஒரு பெரிய சித்தர் இருந்திருக்கார். அங்கேதான்
ஸித்தி அடைஞ்சிருக்கார். ஆத்ம போதேந்திரான்னு ஒரு பீடம் இருந்திருக்கு.
அதை எல்லாம் வெள்ளம் அடிச்சிண்டு போயிடுத்து’ன்னா பெரியவா.

தை மாசம் அஞ்சாம் தேதி வரை கங்கை அங்கே வர்றதா ஐதீகம். ஆத்துத்
திருவிழாவா கொண்டாடுவா. சாப்பாடு எல்லாம் கட்டி எடுத்துண்டு போவா. அந்த
இடத்துல ஆத்ம போதேந்திரா சமாதி ஆகி, லிங்கம் வச்சு அதிஷ்டானம்
கட்டியிருக்காளாம். திடீர்னு ஒரு நாள் ராத்திரி, ‘இந்த க்ஷணமே அங்கே
போகணும்’னா பெரியவா. நாங்க ரெண்டு பேர் டார்ச்லைட் எடுத்துண்டு அவரோடேயே
நடந்து போனோம். ராத்திரி ரெண்டு மணி சுமாருக்கு அங்கே ஒரு குறிப்பிட்ட
இடத்துல உட்கார்ந்து ஜபம் பண்ண ஆரம்பிச்சுட்டார் பெரியவா. விடியற்காலை
நாலு மணி வரைக்கும் ஜபம் பண்ணினார். அப்புறம், இருள் பிரியறதுக்கு முன்னே
ஊருக்குத் திரும்பி வந்துட்டார்.

அப்புறம், மூணு மாசம் கழிச்சு மறுபடியும் கிளம்பி, பெரியவரோடு அதே
இடத்துக்குப் போனோம். ஒரு பெரிய ஸர்ப்பம் எதிரே வந்துது. நடுங்கிப்
போயிட்டோம். ‘ஒண்ணும் பண்ணாது. ஒரு நிமிஷம் நில்லுங்கோ’ன்னார் பெரியவா.
அது ஊர்ந்து போய் மறைஞ்சுடுத்து. முன்பு போலவே பெரியவா அங்கே குறிப்பிட்ட
இடத்துல உட்கார்ந்து ஜபம் பண்ணினார். நாலு மணிக்கு ஜபத்தை முடிச்சுண்டு
எழுந்து வந்துட்டார். அங்கே அப்படி என்ன விசேஷம்னு எங்களுக்கு எதுவும்
புரியலே.

மறுபடி சுப்பிரமணிய ரெட்டியாரை அழைச்சுண்டு வரச்சொல்லி, அவர்கிட்ட,
‘எனக்கு இங்கே ரெண்டு ஏக்கர் நிலம் வேணும். வாங்கித் தர முடியுமா?’ன்னு
கேட்டார் பெரியவா. ‘ஆகட்டும்’னார் ரெட்டியார்.

தஸ்தாவேஜு எல்லாம் ரெடி பண்ணி, ஏக்கர் 200 ரூபா மேனிக்கு ரெண்டு ஏக்கர்
400 ரூபாய்னு பத்திரம் எழுதிக் கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணியாச்சு. பணம்
வாங்கமாட்டேன்னு மறுத்தார் ரெட்டியார். ‘இல்லே! நீங்க வாங்கிக்கத்தான்
வேணும். இல்லேன்னா நாளைக்கு ஒரு பேச்சு வரும்’னு சொல்லி, மடத்துலேருந்து
500 ரூபாயை ரெட்டியாருக்குக் கொடுக்கச் சொல்லிட்டார் பெரியவர்.

அப்புறம், அந்த ரெண்டு ஏக்கர் நிலத்துல தோண்டிப் பார்க்கணும்னா பெரியவா.
அவருக்கு மாமா பிள்ளை ஒருத்தர் இருந்தார். அவரையும் அழைச்சுண்டு அந்த
இடத்துக்குப் போனோம். ஒரு இடத்தை செலக்ட் பண்ணி, அங்கே கடப்பாரையால
தோண்டினார் அவர். வெளியே எடுத்தப்போ கடப்பாரை முனையெல்லாம் ரத்தம்!

அவர் அதைப் பார்த்து மூர்ச்சையாகி, அங்கேயே தடால்னு விழுந்துட்டார். என்ன
பண்றதுன்னு தெரியாம கையைப் பிசைஞ்சுண்டு நின்னோம். அரை மணி கழிச்சு அவரே,
‘எனக்கு ஒண்ணும் இல்லே’ன்னு எழுந்து உட்கார்ந்துட்டார்.

பெரியவாகிட்ட விஷயத்தைச் சொன்னோம். ‘பயப்படாதீங்கோ! அங்கே, அடியிலே ஒரு
கோயில் புதைஞ்சு கிடக்கு. நாளைக்குத் தோண்டிப் பாக்கலாம்’னார்.

அப்படியே மறுநாள் போய்த் தோண்டினப்போ, முன்னே ஒரு காலத்துல அங்கே கோயில்
இருந்ததுக்கான அடையாளங்கள் தெரிஞ்சுது. ஒரு சிவலிங்கம் கிடைச்சுது.
ரெண்டு மாசம் அங்கேயே இருந்து, அந்தக் கோயிலை மறுபடி புதுப்பிச் சுக்
கட்டிட்டு, காஞ்சிபுரம் திரும்பிட்டா பெரியவா.

அந்த நேரத்துல நான் 3, 4 மாசம் பெரியவாளோடு கூடவே இருந்தேன். அந்தச்
சம்பவங்களையெல்லாம் இப்போ நினைச்சுப் பார்க்கிறப்போ சிலிர்ப்பா இருக்கு!”
என்று சொல்லி நிறுத்தினார் லக்ஷ்மிநாராயணன்

1100 கோடி மைல் தொலைவில் உள்ள சூரிய மண்டலத்தின் எல்லையை அடைந்தது வாயேஜர் 1 விண்கலம்.



வியாழன் மற்றும் சனி கிரகங்களில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கடந்த 1977-ம் ஆண்டு வாயேஜர்-1 என்ற விண்கலத்தை உருவாக்கி அனுப்பினர். அதனுடன் வாயேஜர்-2 என்ற விண்கலமும் அனுப்பப்பட்டது.
 
அவை 5 ஆண்டுகளில் வியாழன், சனி ஆகிய 2 கிரகங்களையும் சென்றடையும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவை குறிப்பிட்ட காலத்தில் சென்றடையவில்லை.
 
எனவே அவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் வாயேஜர்-1 என்ற விண்கலம் தற்போது 35 ஆண்டுகளுக்கு பிறகு சூரிய மண்டலத்தின் எல்லையை கடந்துள்ளது.
 
விண்கலம் சூரிய மண்டலத்தை ஊடுருவி கடந்து செல்வது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. சூரிய மண்டலம் பூமியில் இருந்து 1100 கோடி மைல் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
வாயேஜர்-1 விண்கலம் நவீன தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டது. அதில் ஒரே நேரத்தில் 8 ஆயிரம் வார்த்தைகளை சேகரித்த வைக்கவும், வினாடிக்கு 160 தகவல்களை அனுப்பும் வசதியும் உள்ளது. 

Thursday, June 28, 2012

மாணவிகளிடம் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் டிஸ்மிஸ். தமிழக அரசு அதிரடு உத்தரவு.


மாணவர்களிடம் பாலியியல் நடவடிக்கையில் ஈடுபடும் எந்த ஆசிரியரும் தொடர்ந்து பணியில் நீடிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ள புதிய அரசாணையில்,"பள்ளி மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும் வழிகாட்டியாகவும் செயல்படவேண்டிய ஆசிரியர்கள் சிலர் பள்ளிகளில் படிக்கும் சிறு குழந்தைகள் உட்பட மாணவ-மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்வது குறித்தும் அதனால் மாணவர் சமுதாயம் குறிப்பாக பெண்குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
 

இந்த அவலநிலையை உடனடியாக களையவும் மாணவ சமுதாயம் ஆரோக்கியமான சூழ்நிலையில் உருவாகுவதற்கும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ-மாணவிகளிடம் மிகுந்த அக்கறையுடனும் கடமை உணர்ச்சியுடனும் ஆசிரியர் பணி செய்யவும் பள்ளிக்குழந்தைகள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
 

எனவே கீழ்கண்டவாறு அரசாணையிடப்படுகிறது.
 

ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
 

* தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு கடும் தண்டனையாக அதாவது கட்டாய ஓய்வு, பணிநீக்கம், பணியுறவு (டிஸ்மிஸல்) போன்ற தண்டனை வழங்கப்படும். அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதி 19(2) இதற்கு பொருந்தும். இந்த விதியை மீறுபவர்களுக்கு மேலே குறிப்பிட்ட 3 தண்டனைகளுள் ஒன்று வழங்கப்படவேண்டும் என தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல் முறையீடு) விதிகளில் விதி-8ல் கூறப்பட்டுள்ளது.
 

* சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச்சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். அதாவது சம்பந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
 

* பள்ளிக்குழந்தைகளும் மாணவ-மாணவிகளும் பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாதவண்ணம் தகுந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும்.
 

* பள்ளி மாணவர்களின் மனநிலை பாதிக்கும் பிரச்சினைகளை போக்குவதற்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் உளவியல் ஆலோசகர்கள் உதவியாளர் மற்றும் அனைத்துவகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வும் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படவேண்டும்"என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பொருளாதாரக் கொள்கை சரிகிறதா?


சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களிலேயே பிரதமர் மன்மோகன் சிங்தான் அதிகம் செயல்பட்டவர் என்றும் அவருடைய ஆட்சிக் காலம்தான் இந்தியாவின் முழு முகத்தையும் மாற்றி இருக்கிறது என்றும் சொன்னால், நீங்கள் நம்புவீர்களா? உண்மை!

சிங் செயல்பாடற்ற ஒரு பிரதமர் என்பது உண்மையில் அறியாமை. கல்வி, சுகாதாரம், தொழில், கனிம வளங்கள், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், அணுசக்தி, வெளியுறவு என எல்லாத் துறைகளிலும் கால் பதித்து இருக்கிறார் சிங். சுதந்திர இந்தியாவின் வரலாற்றை சிங்குக்கு முன்... சிங்குக்குப் பின் என்றுகூடப் பிரிக்கலாம். ஆனால், அவருடைய எல்லா முயற்சிகளும் இந்த நாட்டின் சாமானிய மக்களின் வாழ்க்கையை அடித்து நொறுக்கி இருப்பதுதான் வரலாற்றுத் துயரம்.சிங் செயல்பாடற்ற ஒரு பிரதமர் என்பது உண்மையில் அறியாமை. கல்வி, சுகாதாரம், தொழில், கனிம வளங்கள், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், அணுசக்தி, வெளியுறவு என எல்லாத் துறைகளிலும் கால் பதித்து இருக்கிறார் சிங். சுதந்திர இந்தியாவின் வரலாற்றை சிங்குக்கு முன்... சிங்குக்குப் பின் என்றுகூடப் பிரிக்கலாம். ஆனால், அவருடைய எல்லா முயற்சிகளும் இந்த நாட்டின் சாமானிய மக்களின் வாழ்க்கையை அடித்து நொறுக்கி இருப்பதுதான் வரலாற்றுத் துயரம்.

அடிவாங்கிய அஸ்திவாரம்!

பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, ''நாட்டின் வளர்ச்சியைக் கல்வியில் இருந்து தொடங்கி இருக்கிறோம். அனைவருக்குமான வளர்ச்சியின் அஸ்திவாரம் அதுதான்'' என்றார் சிங். நாடு முழுவதும் 1964-ல் ஆய்வுசெய்த கோத்தாரி ஆணையம், இந்தியா கல்வித் துறையில் தன்னிறைவு அடைய வேண்டும் என்றால், அதற்கு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் ஆறு சதவிகிதத் தொகையைக் கல்வித் துறைக்கு ஒதுக்க வேண்டும் என்றது. ஆனால், தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசுகள் அதில் பாதி அளவை ஒதுக்கீடு செய்யவே யோசித்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றபோது, கல்வித் துறையின் தேவை 16 சதவிகித ஒதுக்கீட்டைக் கோரியது. நிச்சயம் இனிமேலாவது ஆறு சதவிகித ஒதுக்கீடு செய்வோம் என்றார் சிங். ஆனால், அவரது வார்த்தைகள் அவருடைய காதுகளுக்கே கேட்காமல்போயின. விளைவு, அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி! உலகில் கல்விக்குக் குறைந்த அளவே ஒதுக்கும் நாடுகள் தொடர்பான 'யுனெஸ்கோ’வின் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறது இந்தியா. ஆனால், சிங் பொறுப்«பற்றதற்குப் பிறகான இந்த எட்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 18.84 சதவிகிதத்தில் இருந்து 26.09 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக, மணிப்பூர் போன்ற வட கிழக்கு மாநிலங்களில் மூன்றில் இரு பள்ளிகள் என்ற அளவுக்குத் தனியார் ஆதிக்கம் பள்ளிக் கல்வியில் ஓங்கி இருக்கிறது.

கல்வித் தரத்திலும் இந்தியா ஜொலிக்கவில்லை. சர்வதேச அளவிலான பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்ற அமைப்பு (ஓ.இ.சி.டி.) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு இந்தியக் கல்வித் துறைக்குக் கிடைத்த மிகப் பெரிய அடி. 15 வயதுக்கு உட்பட்ட இந்திய மாணவர்கள் பாடங்களை வாசிப்பதிலும் அறிவியல் பாடங்களி லும் கடைசி வரிசையில் இருப்பதை அந்த அமைப்பு நடத்திய சர்வதேச அளவிலான தேர்வு முடிவுகள் கூறின. அரசு சாரா நிறுவ னமான 'பரதம்’ அமைப்பின் ஆய்வறிக்கையோ (அசெர்) இந்தியாவில் பெரும் பான்மையான ஐந்தாம் வகுப்பு மாணவர் களால் இரண்டாம் வகுப்புப் பாடங்களையே படிக்க முடியவில்லை என்கிறது.

பெண் கல்வியில் ஆப்பிரிக்கா நீங்கலாக ஆஃப்கன், பூடான், பாகிஸ்தான், பபுவா நியு கினியா ஆகிய ஐந்து நாடுகள்தான் இந்தியாவைவிடக் கீழ் நிலையில் இருக்கின்றன. அனைவருக்கும் கல்வி இயக்கம், கல்வி உரிமைச் சட்டம் என அரசின் எந்த நடவடிக்கையாலும் ஆரம்பக் கல்வியை மீட்டெடுக்க முடியவில்லை. உயர் கல்வியோ முழுக்க முழுக்கத் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டது!

சுகாதாரத்தைப் பீடித்த நோய்!

ட்டச்சத்துக் குறைவான குழந்தைகளை எடுத்துக்கொண்டால், இந்தியா உலகிலேயே அடிமட்ட நிலையில் இருக்கிறது. சிசு மரணத்தை எடுத்துக்கொண்டால், உலகில் ஆஃப்கன், கம்போடியா, மியான்மர், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மோசமான நிலையில் இந்தியாதான் இருக்கிறது. தொற்றா நோய்கள் எனப்படும் புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய் போன்றவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் பத்தில் எட்டு மரணங்களுக்குக் காரணம். சுகாதாரத்துக்கு அரசு கிட்டத்தட்ட 600 மடங்கு தன்னுடைய ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டிய சூழல். ஆனால், அரசோ ஏற்கெனவே உள்ள அரசு மருத்துவமனைக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக தனியாரை ஊக்குவிக்கும் மருத்துவக் காப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. சிங் ஆட்சியின் இந்த எட்டு ஆண்டு காலகட்டத்தில் மட்டும் வசதியின்மையால் சிகிச்சை பெற முடியாதவர் களின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் 10 கோடியில் இருந்து 21 கோடியாகவும் கிராமப்புறங்களில் 15 கோடியில் இருந்து 24 கோடியாகவும் அதிகரித்து உள்ளது. 71 சதவிகிதம் பேர் தனியார் மருத்துவமனைகளை நோக்கித் தள்ளப்பட்டனர். உலக சுகாதார நிறுவனம், 70 சதவிகித இந்தியர்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை மருந்துக்காகச் செலவழிக்கும் நிலையை மாற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுகாதாரத்துக்கு என 2.5 சதவிகிதம் தொகையை ஒதுக்கீடு செய்வோம் என்று கூறியது. ஆனால், இப்போது அதையும் 1.4 சதவிகிதமாக்கும் முயற்சியில் இருக்கிறது. பொது சுகாதாரத்துக்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதற்கு 2010-ல் மட்டும் மலேரியாவுக்கு 46,800 இந்தியர்கள் பலியானது ஒரு சின்ன உதாரணம்!

காத்திருக்கும் வெடிகுண்டு!

லகின் மிகப் பெரிய ஆயுத இறக்குமதி யாளராக இந்தியா உருவெடுத்தது சிங் ஆட்சிக் காலத்தில்தான். 2007-2011-க்கு இடையே உலகில் நடந்த ஆயுத ஏற்றுமதி யில் 10 சதவிகிதம் இந்தியாவின் பங்கு. ஆனால், ''ஒரு போர் வெடித்தால் இரண்டு நாளைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க வெடி பொருட்கள் நம்மிடத்தில் இல்லை'' என்று நம் பாதுகாப்பு அமைப்பின் லட்சணத்தை நாட்டின் தரைப் படைத் தளபதியே போட்டு உடைத்ததும் சிங் ஆட்சிக் காலத்தில்தான். இந்தியாவின் மீது கிட்டத்தட்ட ஓர் அறிவிக்கப்படாத போர்த் தாக்குதலாக மும்பைத் தாக்குதல் நடந்தது. கடல் வழியே நடந்த அந்தத் தாக்குதலுக்குப் பிறகும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதை அடுத்த சில மாதங்களிலேயே பாதுகாப்புப் படையினர் யாருக்கும் தெரியாமல் வர்கோவில் தரை தட்டி நின்ற 1,000 டன் கப்பல் 'எம்.வி.பாவிட்’ அம்பலமாக்கியது. பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்தியாவின் அதிபயங்கரக் குற்றவாளிகள் என்று பாகிஸ்தான் அரசுக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அனுப்பிய 50 பேர் பட்டியலில் மும்பை, தானேயில் வசிக்கும் உள்ளூர் வியாபாரியான வஜுல் கமர்கான் பெயர் இருந்ததைப் பார்த்து சர்வதேச உளவுத் துறைகள் நக்கல் அடித்தன. காமன்வெல்த் போட்டிகளின்போது நேரு மைதானத்துக் குள் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்தைக் கடத்திச் சென்று ஆஸ்திரேலியத் தனியார் தொலைக்காட்சி படம் காட்டியபோது, நம்முடைய பாதுகாப்பு அமைப்புகளைப் பார்த்து உலகமே சிரித்தது!

அணு சக்தித் துறையில் சர்வதேசத்தின் போக்கை ஃபுகுஷிமாவுக்கு முன் - ஃபுகுஷி மாவுக்குப் பின் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஆக்கபூர்வ அணு சக்தி என் பதும் அணு சக்திப் பாதுகாப்பு என்பதும் வடிகட்டிய பொய் வாதங்கள் என்பதை நிரூபித்த இடம் ஃபுகுஷிமா. அணு சக்தி மின்சார உற்பத்தியில் உலகுக்கே முன்னோ டியாக இருந்த ஜப்பான், ஃபுகுஷிமாவுக்குப் பின் தன்னுடைய நாட்டில் உள்ள அத்தனை உலைகளையும் மூடியது. அணு சக்தி வேண்டுமா, வேண்டாமா என்று இத்தாலி நடத்திய பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி, அணு சக்திக்கு எதிரான முடிவை இத்தாலி எடுத்தது. ஜெர்மனி தன்னுடைய நாட்டில் உள்ள அனைத்து அணு உலைகளையும் 2022-க்குள் மூடப்போவதாக அறிவித்தது. தன்னுடைய முதலாவது ஆட்சிக் காலத்தில் இந்திய அணு சக்தித் துறையைப் பன்னாட்டுப் பெருநிறுவனங்களுக்குத் திறந்துவிட்ட சிங்கின் அரசோ, ஃபுகுஷிமாவுக்குப் பிறகுதான் அணு சக்தித் துறையை வெறித்தனமாக உசுப்பிவிட ஆரம்பித்தது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அடித்தட்டு மக்களின் பெருந்திரள் அறவழிப் போராட்டத்தின்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோருக்கு எதிராக தேசத் துரோக வழக்குகளைப் பதிவுசெய்தது, இந்த அரசின் குரூர முகத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று. கொடுமை என்ன என்றால், அணு சக்தி நாடுகளில், பாதுகாப்பான கட்டமைப்புக்கான தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 32 நாடுகளில், இந்தியா இருப்பது 28-வது இடத்தில்!

வீங்கும் பொருளாதாரம்!  

சிங் பொருளாதாரத்தில் பெரிய நிபுணராக இருக்கலாம். ஆனால், அவருடைய அரசுக்கு மரண அடி விழுந்திருப்பதே பொருளாதாரத் துறையில்தான். சர்வதேச அளவிலான பொருளாதாரத் தர மதிப்பீட்டு நிறுவனமான 'ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ்’, இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் 'நிலைத்த தன்மை’ என்ற நிலையில் இருந்து 'எதிர்மறைத் தன்மை’ என்ற நிலைக்குப் போகிறது என்று கடந்த ஏப்ரல் மாதம் எச்சரிக்கை விடுத்தது. இந்த வாரம் 'ஃபிட்ச்’ நிறுவனம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இப்படி எச்சரிக்கைக்கு உள்ளாகும்  நாடுகள் எல்லாம் படிப்படியாகப் பொருளாதார மந்தநிலையை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கின்றன என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். இந்த மதிப்பீடுகள் எல்லாம் இந்தியாவில் செல்லாது என்றார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. ஆனால், மத்தியப் புள்ளியியல் நிறுவனம் தந்துள்ள தகவல்களின்படி பார்த்தாலே, இந்த ஆண்டு நாட்டின் மொத்த வளர்ச்சி 6.5 சதவிகிதமாகத்தான் இருக்கும். கடந்த காலாண்டில்  மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வெறும் 5.3 சதவிகிதம்தான். கடந்த ஒன்பது ஆண்டுகளில் மிகக் குறைந்தபட்ச அளவு இது. அதாவது, தாங்கள் பொறுப்பேற்பதற்கு முன் இருந்த காலகட்டத்துக்குப் பொருளாதாரத்தைத் தள்ளி இருக்கின்றனர் சிங்கும் அவருடைய சகாக்களும்.
விலைவாசி, பணப்புழக்கம், பணவீக்கம் என்ற கணக்கை எல்லாம் விடுங்கள். 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்றபோது ஒரு டீயின் விலை  2. இன்றைக்கு  6. மூன்று மடங்கு உயர்ந்து இருக்கிறது. சென்னை நகரில் கடந்த ஆண்டு  4,000 வாடகைக்குக் கிடைத்த 300 சதுர அடி வீட்டின் இன்றைய வாடகை  6,000. நம்முடைய வருமானம் எத்தனை மடங்கு உயர்ந்து இருக்கிறது?

உலகிலேயே பெட்ரோலியப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதில் ஐந்தாவது இடத்தில் உள்ள ஒரு நாடு, அதுவும் தன்னுடைய பெட்ரோலி யத் தேவையில் 70 சதவிகிதத்தை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கும் நாடு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் சூழலில் என்ன செய்ய வேண்டும்? நகைமுரணாக, இப்படி ஒரு காலகட்டத்தில்தான் இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்தது. பெட்ரோல் விற்கும் இரான்கூட ரேஷன் முறையைக் கொண்டுவந்தது. ஆனால், பொருளாதாரச் சூரர் சிங்கின் அரசு ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. அதேபோல, விலைவாசி உயர்வைத் தடுக்க ஊகபேர வணிகத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்ற கோரிக்கைக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செவி சாய்க்கவில்லை.
 

இந்திய விவசாயிகள் கிராமங்களைவிட்டு நகரங்களுக்கு இடம்பெயர்தல் என்பது காலம்காலமாகத் தொடரும் சாபக்கேடு. ஆனால், விவசாயிகளை மாநிலங்களுக்கு இடையே அகதிகளாக இடம்பெயரவைத்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கே உரிய தனித்துவ சாதனை. இன்றைக்கு உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மணிப்பூர், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையையும் பெங்களூரையும் திருவனந்தபுரத்தையும் நோக்கிப் படையெடுக்கிறார்கள் என்றால், என்ன காரணம்?

ஓர் இந்திய விவசாயி கடனாளியாகப் பிறக் கிறான், கடனாளியாகவே வாழ்கிறான், கடனாளி யாகவே சாகிறான். அலங்கார வாக்கியம் அல்ல இது. அரசின் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பு சொல்லும் உண்மை. நாட்டின் இரண்டு விவசாயிகளில் ஒருவர் கடனாளியாக இருக்கிறார். இன்னொருவர் கடன் வாங்கும் நிலையில் இருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு விவசாயியின் உயிர் இந்த மண்ணைவிட்டுப் பிரிகிறது. உலகிலேயே மிகப் பெரிய தற்கொலைப் பிரதேசம்... மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலா வது ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின்  60,000 கோடிக் கடன்களை ரத்துசெய்ததை வரலாற்றுச் சாதனையாகச் சொல்லிக்கொண்டார் சிங். ஆனால், அதே அரசு பெருநிறுவனங்களுக்கு மானியமாகவும் வரிச் சலுகையாகவும் கடந்த ஆண்டு மட்டும் வாரி வழங்கியது  4.87 லட்சம் கோடி. வறுமை ஒழிப்புக்காக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் அளிக்கப்பட்ட மொத்த மானியத்துக்குச் சமமானது இது.

நாட்டுக்கு சிங் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கை நம்மை எவ்வளவு சுருட்டி இருக்கிறது என்பதை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி எளிமையாகச் சொல்லிவிடும்.  1991-ல் ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு  21. இப்போது  57.00.

சர்வம் ஊழல்மயம்!
 
ஞாபகம் இருக்கிறதா? சிங் அரசை நம்பிக்கை வாக்கெடுப்பில் காப்பாற்ற ஆளும் தரப்பு லஞ்சம் கொடுத்ததாக பா.ஜ.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிய காட்சி! இந்தியர்களுக்கு கோடி என்ற வார்த்தையின் போதாமையை உணர்த்திய ஆட்சி  ஐக்கிய  முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான். அலைக்கற்றை ஒதுக்கீட்டில்  1,76,379,00,00,000 முறைகேடுநடந்து இருக்கிறது என்ற செய்தி வெளியானபோது, பெரும்பான்மை இந்தியர் கள் அதை எப்படிப் படிப்பது என்றுதடுமாறிப் போனார்கள். ஏதோ... அரசியல்வாதிகள், நிர்வாக அதிகாரிகள்தான் ஊழல் செய்வார் கள் என்று இருந்த சூழலை உடைத்து எறிந்ததும் இந்த அரசின் சாதனைதான். சிங்கின் ஆட்சியில் ஊழல் நடக்காத, ஊழலில் ஈடுபடாத அரசுத் துறையினரே இல்லை. ''ராணுவக் கொள்முதலில் நடக் கும் ஊழலுக்கு ஒத்துழைக்க எனக்கே லஞ்சம் கொடுக்க முயன்றார்கள்!'' என்றார் நாட்டின் தரைப் படைத் தளபதி யாக இருந்த வி.கே.சிங். முன்னாள்தளபதி ஜெனரல் கபூர் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் பலர், ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேட்டிலும் நில ஒதுக்கீடு முறைகேடு களிலும் சிக்கினர். நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் முறைகேடு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சுதந்திர இந்தியாவின் முதல் பதவி நீக்க விசார ணையை நாடாளு மன்றத்தில் நீதிபதி சௌமித்ர சென் எதிர்கொண்டார். சுரங்கக் கொள்ளையர்கள் ரெட்டி சகோதரர்கள் மீதான வழக்குகளில் ஜனார்த்தன ரெட்டியை விடுவிக்க,  5 கோடி லஞ்சம் வாங்கிய ஆந்திர மாநில சி.பி.ஐ. நீதிபதி பட்டாபி ராமராவ் கைது செய்யப்பட்டார். பிரதமரின் கட்டுப் பாட்டில் இயங்கும் நாட்டின் அறிவியல் தலைமையகமான 'இஸ்ரோ’  4.5 லட்சம் கோடி அலைக்கற்றை முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளானபோது, தேசமே அதிர்ந்தது. சீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதற்குப் போட்டியாக, காமன்வெல்த் போட்டிகளை  40 ஆயிரம் கோடிகளைச் செலவிட்டு நடத்தினார் சிங். ஆனால், அது இந்தியாவுக்குப் புகழ் சேர்க்கவில்லை. சுரேஷ் கல்மாடி மூலம் இந்தியாவின் ஊழல் முகம் சர்வதேச அளவில் வெளிப்படத்தான் வழிவகுத்தது. கட்டிய பூச்சு காய்வதற்குள் நேரு மைதானம் முன் அமைக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததும், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள டிரெட் மில் இயந்திரங்கள் ஒன்பது லட்ச ரூபாய் வாடகைக்கு எடுக்கப்பட்டதும் யாராலும் மறக்க முடியாத சம்பவங்கள். இப்போது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும்  10 லட்சம் கோடி முறைகேடு இந்தியப் பிரதமரின் காலைப் பாம்பாகச் சுற்றிக்கொண்டு நிற்கிறது. இவ்வளவுக்குப் பிறகும், 'திருவாளர் பரிசுத்தம்’ தோற்றத்தோடு சிங் உலவிக்கொண்டு இருப்பதுதான் அவருடைய சாதனைகளின் உச்சம்!

கறுப்புப் பூதம்!

ரேஷன் கடைக்கு  12.37-க்குக் கொடுக்கப் படும் மண்ணெண்ணெய், வெளிச் சந்தையில்  40-க்கு விற்கப்படுவது யாரால்? இந்திய ஆறுகளின் மடி வறளும் அளவுக்கு மணல் கொள்ளை அடிக்கப்படுவது யாரால்? இந்திய ரியல் எஸ்டேட் துறை யாருடைய கண் அசை வில் இயங்குகிறது? கள்ளச் சந்தை, சூதாட்டம், கடத்தல், ஹவாலா... அட, நாட்டின் பொருளாதாரக் கேந்திரமான மும்பை யார் கையில் இருக்கிறது? நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு மாஃபியாக்கள் கையில் போனது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்  முக்கியமான சாதனைகளில் ஒன்று. உலகிலேயே தரமான இரும்புத் தாது கிடைக்கும் பெல்லாரியை உலகமே பார்க்க... ரெட்டி சகோதரர்கள் சுரண்டித் தின்கிறார்கள். ஒரு காலத்தில் ஓட்டு போடச் சென்றாலே, போலீஸார் போட்டுத்தள்ளிவிடுவார்களோ என்று பயந்து பதுங்கிக்கிடந்த அருண் காவ்லி மகாராஷ்டிரத்தின் சட்டப்பேரவை உறுப்பின ராகப் பவனிவந்தார். ஜார்கண்டில் மட்டும் ஆண்டுக்கு 7 லட்சம் டன் நிலக்கரி சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்படுகிறது. சுரங்கக் கொள்ளையில் தரகு பார்த்தே உலகெங்கும் உள்ள வங்கிகளில் 1,800 வங்கிக் கணக்குகளை மதுகோடா தொடங்கினார். அரசின் எதிர் வினை என்ன?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஒரு வரலாற்று வாய்ப்பைக் காலம் கொடுத்தது. இந்தியர்களின் பணம்  22.5 லட்சம் கோடி வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாகப் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதை அமெரிக்கா வைச் சேர்ந்த பொருளாதார அமைப்பு ஒன்று பட்டியலிட்டது. இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட சரி பாதித் தொகை இது. சிங்கும் பிரணாப்பும் சிதம்பர மும் நினைத்திருந்தால், கறுப்புப் புள்ளிகளைக் கட்டம் கட்டி அவர்கள் மூலமாகவே இந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர முடியும். ஆனால், இந்த விவரங்கள் வெளியானதையே அரசு ஒரு சங்கடமாகக் கருதியது.

கடந்த 2008-ல் ஜெர்மனி அரசு 50 இந்தியர் களைப் பற்றிய விவரங்களை இந்திய அரசிடம் கொடுத்தது. எல்லாம் கறுப்புப் புள்ளிகள். அரசு அலட்டிக்கொள்ளவே இல்லை. ''அந்தப் பட்டியலில் இருக்கும் விவரங்களை வெளியிடு வதில் அரசுக்கு என்ன சிரமம்?'' என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அரசோ, சர்வதேச உடன்படிக்கைகளைக் காரணம் காட்டி சப்பைக் கட்டு கட்டியது.

2011-ல் சுவிஸ் வங்கி ஒன்றின் முன்னாள் ஊழியர் ஒருவர் கறுப்புப் புள்ளிகள் 2,000 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை 'விக்கிலீக்ஸ்’ ஜூலியன் அசாஞ்சேவிடம் அளித்தார். இதற்குப் பின், 'சுவிஸ் வங்கிகளில் அதிகம் பணம் போட்டிருப்பவர்கள் இந்தியர்கள்தான்'' என்று அசாஞ்சே சொன்னார். இந்தக் கறுப்புப் பணத்தில் கணிசமான பகுதி சட்ட விரோதமான முறையில் அந்நிய மூலதனமாகப் பங்குச் சந்தைக்குத் திரும்பி வருவதை நம்முடைய உளவு நிறுவனங்கள் அரசுக்குக் கூறின. எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை அரசு.

இந்தியாவின் ஹவாலா மன்னன் ஹசன் அலி கானுக்கு சுவிஸ் வங்கியில் உள்ள ஒரு கணக்கில் மட்டும் 8 பில்லியன் டாலர் இருப்பு இருப்பது தெரியவந்தது. அலி 50 ஆயிரம் கோடி வரி பாக்கி வைத்திருப்பதாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இத்தனைக்குப் பிறகும் அலியை அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை! 

வெளியுறவு பொம்மலாட்டம்!

ரு பெரும் வல்லரசுகளுக்கு இடையே இந்தியா தனித்து இயங்குவதே - எல்லோ ருக்கும் நல்லவராக இயங்குவதே சரி’ என்று ஜவஹர்லால் நேரு முடிவெடுத்தது ராஜதந்திர ரீதியாக ஓர் எடுபடாத முடிவாக இருக்கலாம். ஆனால், அதில் ஒரு தொலைநோக்குப் பார்வை இருந்தது. முக்கியமாக, அந்தப் பார்வையில் அறம் இருந்தது. அணிசேரா நாடுகள் அமைப்பின் பின்னணியில், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு ஒரு மதிப்பை அது தந்தது. ஆனால், இன்றைக்கு இந்தியாவுக்கு உள்ள மதிப்பு என்ன? நம்முடைய நிலைப்பாடுதான் என்ன? முதலில் நமக்கு என்று இன்று தனியாக ஒரு வெளியுறவுக் கொள்கை இருக்கிறதா? நம்முடைய அண்டை நாடு ஏதாவது நமக்கு நண்பனாக இருக்கிறதா?

நேபாளத்தில் மக்கள் மாவோயிஸ்ட்டுகளைத் தேர்ந்தெடுத்தபோது, அங்கு ஆட்சிக் கவிழ்ப்பை சிங் அரசு நடத்தியது. இந்தியாதான் வங்க தேசம் என்ற தேசம் உருவாகக் காரணமாக இருந்தது. ஆனால், இந்தியாவுக்குள் வரும் கள்ளத் துப்பாக்கிகள் தொடங்கி போதைச் சமாசாரங்கள் வரை சகலமும் வங்க தேசம் வழியாகத்தான் வருகின்றன. சீனாவுடனும் அமெரிக்காவுடனும் அளவுக்கு மீறிக் கொஞ்சிக்கொண்டு இருந்த இலங்கையை அடக்கிவைக்க தமிழ்ப் போராளிக் குழுக்களை இந்தியாதான் வளர்த்துவிட்டது. சிங் அரசோ, இறுதியில் எதிரிகளோடு சேர்ந்துகொண்டு அவர்களை அழித்தொழித்தது. ஆஃப்கன் அரசியலில் அடியெடுத்துவைத்த நாடுகள் அனைத்தும் இது வரை அழிவையே சந்தித்து இருக்கின்றன. இந்தியாவுக்கு அங்கு என்ன வேலை? ஆஃப்கனில் இந்தியத் தூதரகங்கள் சும்மாவா தாக்குதலுக்கு ஆளாகின்றன? மியான்மரில் மக்கள் ஆட்சியைக் கொண்டுவந்திருக்க வேண்டியது இந்தியாவின் பணி. ஆனால், சீனாவுக்கு நெருக்கமான ராணுவ ஆட்சியாளர்களுடன் அரசு கை கோத்திருந்தது. பாகிஸ்தானை இந்திய அரசால் அடக்கிவைக்கவே முடியவில்லை. சீனாவுடனோ இன்னொரு பனிப் போரை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. அரபு வசந்தத்தின்போது சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக இந்தியா வின் குரல் ஒலித்தது. நாளைக்கே அமெரிக்கா இரானுக்கு எதிராகப் போர் தொடுத்தால், மன்மோகன் படைகளை அனுப்பிவைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

பெருநிறுவனங்களின் பேயாட்டம்!

நீரா ராடியா உரையாடல் பதிவுகளை நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா? இந்த நாடு யாருடையது, இந்த நாட்டை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதை உலகுக்குச் சொன்ன உரையாடல்கள் அவை. ரத்தன் டாடாவைப் பற்றி, அம்பானி சகோதரர்களைப் பற்றி, சுனில் மிட்டலைப் பற்றி, தருண் தாஸைப் பற்றி, கருணாநிதியைப் பற்றி, ராஜாத்தி அம்மாளைப் பற்றி, தயாநிதி மாறனைப் பற்றி, பிரபு சாவ்லாவைப் பற்றி, பர்கா தத்தைப் பற்றி... சிங் அரசாங்கத்தின் சூத்திரதாரிகளைப் பற்றி என்றென்றைக்குமான பதிவுகள் அவை. அலைக்கற்றை வழக்கு விசாரணையின்போது, வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினரிடம் நீரா அளித்த ஒரு வாக்குமூலம் போதும், சிங்கின் அரசு யாருடைய பிரதிநிதி என்று சொல்ல! நீராவின் அந்த வாக்குமூலம்: ''ஆமாம். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் ஆ.ராசாவுடன் பேசினேன். என்னுடைய வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக அரசின் முடிவை மாற்றினேன். அதற்காக  60 கோடி பெற்றேன். அது என் சேவைக்கான கட்டணம்!''

எல்லாவற்றையும்விட சங்கடம் தரும் செய்தி இது. ஜனநாயகத்தின் மீதான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தாக்குதல். இந்தியப் படைகள் இன்றைக்கு எதிர்கொள்ளும் பெரிய எதிரிகள் யார் தெரியுமா? தன் சொந்த மக்கள். காஷ்மீரில் 10 பேருக்கு ஒருவர் என்னும் விகிதத்தில் கிட்டத்தட்ட 4 லட்சம் வீரர்களைக் குவித்து காஷ்மீரில் அமைதி நிலவுவதாக சிதம்பரம் நம்பச் சொல்கிறார். ஆனால், காஷ்மீரிகள் 'இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்றே எழுதவும் பேசவும் செய்கிறார்கள். வட கிழக்கு மாநிலங்களிலும் இதே நிலைமைதான். சுதந்திர நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இந்திய இயற்கை வளத்தை - பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 30 வகையான கனிமச் சுரங்கங்களைப்  பெருநிறுவன முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்காக சிதம்பரம் நடத்தும் 'பச்சை வேட்டை’ வனங்களின் பூர்வகுடிகளை அரசுக்கு எதிரான போராட்டத்தில் தள்ளி இருக்கிறது. விளைவு... நாட்டின் 16 மாநிலங்கள், 222 மாவட்டங்கள் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கத்தில். அதாவது, மூன்றில் ஒரு பங்கு இந்தியா மாவோயிஸ்ட்டுகள் கையில் இருக்கிறது. தெலங்கானா, ஹரித்பிரதேசம், பந்தல்கண்ட், பூர்வாஞ்சல், மிதிலாஞ்சல், போடோலாந்து, கூர்காலாந்து, கட்ச், விதர்பா என்று ஒன்பது பிராந்தியங்கள் தனி மாநிலக் கோரிக்கையோடு நிற்கின்றன.

இத்தனையும் தாண்டி இந்தியா எப்படித் தாக்குப் பிடிக்கப்போகிறது? இந்தியர்களின் தனி மனித உழைப்பையும் இந்த நாட்டின் ஆன்மாவில் கலந்திருக்கும் ஒருமைப்பாட்டு உணர்வையும்தான் நம்ப வேண்டி இருக்கிறது!


சமஸ்

விகடன்