Friday, November 28, 2014

Black Friday - ப்ளாக் ஃப்ரைடே

நன்றி தெரிவிக்கும் நாள் 
நவம்பர் கடைசி வியாழக்கிழமை  
ஒரு நாடே விடுமுறையைக் கொண்டாட கிளம்பினால், எப்படி இருக்கும்?

அமெரிக்காவில் நவம்பர் கடைசி வியாழக் கிழமையை 'நன்றி தெரிவிக்கும் தினம் (Thanks Giving Day, November Last Thursday) ஆக கொண்டாடுவார்கள்அன்று அரசு விடுமுறைஅடுத்த நாள் வெள்ளிக்கிழமை வேலை நாள்.

அதற்கடுத்த மூன்று நாட்கள் அமெரிக்காவில் விடுமுறை தினங்கள்இதனால் யாரும் வெள்ளிக் கிழமை வேலைக்குப் போவது இல்லை.

காரணம்அன்று பெரிய ஷாப்பிங் மால்களில் எலெக்ட்ரானிக் பொருட்கள்உடைகள்பொம்மைகள் எல்லாமே குறைந்த விலையில் கிடைக்கும்கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள்இந்தத் தினத்தை அமெரிக்கர்கள் செல்லமாக 'கறுப்பு வெள்ளிஎன்று அழைக்கிறார்கள்.




எப்படி வந்தது இந்தப் பெயர்..?

கடந்த 1869 ஆம் ஆண்டு அமெரிக்க பங்குச் சந்தையில் (ஸ்டாக் மார்க்கெட்) நிதிநெருக்கடி அதிகமானதுஅப்போது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அந்த நாளை 'கறுப்பு வெள்ளிஎன்று குறிப்பிட்டது4 நாட்கள் தொடர்சியாக விடுமுறை வந்ததால்அந்தச் சமயத்தில் பல அமெரிக்கர்கள் பொருட்களை வாங்க ஆரம்பித்தார்கள்நிறுவனங் களும் தள்ளுபடி செய்து மலிவு விலையில் வழங்கின.

திருடர்கள் சும்மா இருப்பார்களாபொருட்களை வாங்க வருபவர்களை குறி வைத்துக் கொள்ளை அடித்தார்கள்அதனால்ஃபிலடெல்ஃபியா காவல் துறையினர் அந்த நாளைக் கறுப்பு வெள்ளி என்று அழைத்தனர்அந்தப் பெயர் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டதுஇப்போது திருட்டுசாலை விபத்து போன்றவற்றை தடுப்பதற்காகஅமெரிக்க போலீஸ் 'கறுப்பு வெள்ளி'யில் இன்டர்நெட் மூலம் பொருட்களை வாங்க அறிவுறுத்தியது.
 

இப்போது  சுமார் 80 சதவிகிதம் பேர் ஆன்லைன் (இன்டர்நெட்) மூலம் ஷாப்பிங் செய்கிறார்கள்இந்த விற்பனை திங்கட்கிழமை வரை சூடு பிடிக்க ஆரம்பித்திருப்பதால் 'ப்ளாக் ஃப்ரைடே டு சைபர் மண்டேஎன்று புதியப் பெயர்

Wednesday, November 5, 2014

மிஸ்டர் கழுகு: மீண்டும் சைக்கிள் ராஜா

''பருவமழை சீஸனும் பொலிடிக்கல் சீஸனும் களைகட்டத் தொடங்கிவிட்டது. அடாது மழை பொழிய, அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறார் ஜி.கே.வாசன்''- என்று சிறகுகளைச் சிலிர்த்துக்கொண்டு நம் முன் வந்து அமர்ந்தார் கழுகார். துவட்டிக்கொள்ள டர்க்கி டவலும், சூடாக இஞ்சி டீயும் கொடுத்தோம். டீயை உறிஞ்சியபடி செய்திகளை அவிழ்க்க ஆரம்பித்தார் கழுகார்.


''இனியும் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்க முடியாது என்று ஜி.கே.வாசன் முடிவெடுத்து ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. சோனியாவும் ராகுலும் அவரைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை. பொதுவாக மாநிலங்களில் செல்வாக்கு உள்ள தலைவர்களை டெல்லி எப்போதும் மதிப்பதே இல்லை. முந்தைய உதாரணம், ஆந்திராவைச் சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி. இப்போது ஜி.கே.வாசன். வருத்தத்தில் இருந்தார் அவர். இன்னொரு பக்கம் ஈழப் பிரச்னையும் மீனவர் விவகாரமும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தி வந்தது. தமிழகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சோனியாவும் ராகுலும் இந்த விஷயத்தில் முடிவுகள் எடுத்தார்கள் என்பது இன்னொரு வருத்தம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே சோனியா, ராகுலைப் பார்த்து ஈழப் பிரச்னை பற்றி ஜி.கே.வாசன் பேசினார். அதன் பிறகு பிரதமர் மன்மோகனை சந்தித்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் பார்த்தார். அப்போதும் ஈழப் பிரச்னை பற்றியே பேசினார். இது எதையும் ராகுல் விரும்பவில்லை. அன்றே ஜி.கே.வாசனை கழற்றிவிட ராகுல் தயாராகிவிட்டார். இதுபற்றி அப்போதே சொல்லி இருந்தேன்.''
''ஆமாம்!''
''இப்படியே போனால் காங்கிரஸ் தமிழகத்தில் அதலபாதாளத்தில் போய்விடும் என்று ஜி.கே.வாசன் நினைத்தார்.  தனிக் கட்சி முடிவுக்கு வந்தார். ஆனால், நாடு முழுவதும் பி.ஜே.பி அலை வீசிவரும் நிலையில், தனிக் கட்சி தொடங்கினால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. 'அ.தி.மு.க தனித்துப் போட்டி என்று முடிவெடுத்துவிட்டது. தி.மு.க-வுடன் கூட்டுச் சேர முடியாது. இவர்கள் இருவரையும் விட்டால் பி.ஜே.பி கூட்டணிதான் இருக்கிறது. காங்கிரஸை உடைத்து பி.ஜே.பி-யுடன் கூட்டணி சேருவதை பி.ஜே.பி தொண்டர்களே விரும்பமாட்டார்கள். 1999-ம் ஆண்டு தி.மு.க-வுடன் இணைந்திருந்த மூப்பனார், அந்தக் கட்சி பி.ஜே.பி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததும் அதிலிருந்து விலகினார். எனவே, மதச்சார்பற்ற தன்மையை விட்டுவிடக் கூடாது. அதற்காகத் தனித்துப் போட்டியிடும் சூழ்நிலையும் இல்லை’ என்று யோசித்த ஜி.கே.வாசன் தனிக் கட்சி முடிவை அப்போது ஒத்தி வைத்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதைக் கையில் எடுக்க நினைத்தார். ஆனால், முன்கூட்டியே நெருக்கடி ஆரம்பித்துவிட்டது.''
''நெருக்கடியைச் சொல்லும்!''
''கடந்த இதழிலேயே லேசாகக் கோடிட்டுக் காட்டி இருந்தேன். தமிழக காங்கிரஸ் கட்சியில் புது உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. கடந்த பல மாதங்களாக இது நடக்கிறது. இந்த உறுப்பினர் அட்டையில் சோனியா, ராகுல் படங்கள் பெரிதாக உள்ளன. ஸ்டாம்ப் சைஸில் காமராஜர், மூப்பனார், ராஜீவ், இந்திரா ஆகிய நால்வர் படங்களும் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சென்னைக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சின்னா ரெட்டி, 'இந்த உறுப்பினர் அட்டையில் உள்ள காமராஜர், மூப்பனார் படங்களை எடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். புதுச்சேரிக்கு வந்த தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் ஞானதேசிகனைச் சந்தித்து இதனைச் சொன்னார். 'தமிழகத் தலைவர்கள் படங்கள் இல்லாமல் இங்கு உறுப்பினர்களைச் சேர்க்க முடியாது’ என்று ஞானதேசிகன் அவர்களுக்குப் பதில் சொல்லிவிட்டார். நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வந்ததால் அதனை யாரும் பெரிதாக எடுக்கவில்லை. கடந்த மாதத்தில் உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாக டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ராகுல், முகுல் வாஸ்னிக், திரிவேதி போன்றவர்கள் இருந்துள்ளனர். ஞானதேசிகனிடம்  காமராஜர், மூப்பனார் படத்தை எடுங்கள் என்று உத்தரவு போட்டுள்ளார்கள். ஆத்திரம் அடைந்த ஞானதேசிகன், 10 லட்சம் கார்டுகள் அடித்து 6 லட்சம் கார்டுகள் கொடுத்தாகிவிட்டது. அதனை மாற்ற முடியாது’ என்று சொல்லியிருக்கிறார். ''6 லட்சம் கார்டுகளும் செல்லாது என்று அறிவித்துவிடுங்கள்’ என்று முகுல் வாஸ்னிக் சொல்லியிருக்கிறார். முடியாது என்று ராகுல் முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டு வந்துவிட்டார் ஞானதேசிகன். சென்னைக்குத் திரும்பும்போதே ராஜினாமா முடிவுக்கு வந்துவிட்டார் ஞானதேசிகன். இவர் சென்னை திரும்பிய அன்று ஜி.கே.வாசன் வெளியூரில் இருந்தார். ராஜினாமா செய்யப் போவதாக ஞானதேசிகன் சொல்ல... 'உங்கள் உணர்வை வெளிப்படுத்த இதைத் தவிர வேறு வழி இல்லை’ என்று ஜி.கே.வாசனும் தூண்டிவிட்டார். அதனால்தான் ஞானதேசிகன் துணிந்து ராஜினாமா செய்தார். அவரது முடிவை ஜி.கே.வாசனும் வெளிப்படையாக ஆதரித்தார்.''
''டெல்லியில் இருந்து சமாதானப் படலம் நடந்ததா?''
''முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி வந்து ஜி.கே.வாசனைப் பார்த்தார். சமாதானம் சொன்னாராம் நாராயணசாமி. 'என்ன பிரச்னை இருந்தாலும் கட்சியை உடைக்க வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டாராம் அவர். கொந்தளிப்புடன் பேசி இருக்கிறார் ஜி.கே.வாசன். 'தமிழ்நாட்டுக்கு முகுல் வாஸ்னிக்கை பொறுப்பாளராகப் போட்டார்கள். அவர் தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டுக்கே வரவில்லை. யாரோடும் கூட்டணிப் பற்றிய பேச்சுவார்த்தையை டெல்லி தலைமை நடத்தவே இல்லை. 40 தொகுதிகளில் தனித்துப் போட்டி என்றும் அறிவிக்கவில்லை. வேட்பாளர்களை டெல்லியில் நான்கைந்து பேர் முடிவெடுத்து அறிவித்தார்கள். வேட்பாளர்களுக்கு ரூ.2 கோடி, ரூ.1 கோடி, ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம் என்று ஏ, பி, சி, டி என்று பட்டியல் போட்டு கொடுத்தது, யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கே தெரியாது. ஆந்திராவைச் சேர்ந்த கே.பி.கிருஷ்ணமூர்த்தி மூலமாக இந்தப் பணத்தை சப்ளை செய்துள்ளார்கள். ஓரளவுக்கு செல்வாக்கான ஒருவருக்கு ரூ.2 கோடி கொடுத்திருந்தால் டெபாசிட் வாங்கும் அளவுக்காவது ஓட்டு வாங்கியிருக்க முடியும். அதைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அதிக பணம் கொடுத்துள்ளனர். பணமே இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சமும் கோடீஸ்வரர்களுக்கு ரூ.2 கோடியும் கொடுத்துள்ளனர். எங்கேயோ யாரோ உட்கார்ந்துகொண்டு இதை எல்லாம் முடிவு செய்தால் தமிழ்நாட்டில் தலைவர் எதற்கு? நாங்கள் எதற்கு? எங்களை மதிக்காதவர் இடத்தில் நாங்கள் எதற்காக இருக்க வேண்டும்?’ என்று ஜி.கே.வாசன் கேட்டுள்ளார்.''
''நியாயம்தான்?''
''தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பற்றி டெல்லி தலைமைக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதுதான் ஜி.கே.வாசனின் இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்கிறார்கள். காங்கிரஸ் தோல்விக்கான காரணங்களை ஆராய முன்னாள் அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன் ஆஜரான ஜி.கே.வாசன், அப்போதே தனது விரக்தியை வெளிப்படுத்திவிட்டார். எனவே, வாசன் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என்பதை எதிர்பார்த்தே டெல்லியும் இருந்துள்ளது. இந்த நிலையில் உறுப்பினர் அட்டை விவகாரம் வெடித்து தனிக் கட்சியை உருவாக்கிவிட்டது. திங்கட்கிழமை அன்று மதியம் 12.20 மணிக்குப் புதிய பாதையில், தன் பயணம் இருக்கப் போகிறது என்பதை வாசன் அறிவித்தார். கட்சியின் கொடி, பெயர் ஆகியவற்றை திருச்சி பொதுக்கூட்டத்தில் அறிவிப்பதாகச் சொன்னார். அநேகமாக நவம்பர் 16-ம் தேதிக்குள் நடக்கலாம். சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடத்தலாம் என்று நினைத்தார்கள். ஆனால், மாநிலத்தின் மையப் பகுதியாக இருந்தால் நல்லது என்று திருச்சியைத் தேர்வு செய்தார்கள். மேலும், மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அதனைக் கவனித்துக் கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாராம் வாசன். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சீரான பொருளாதார வளர்ச்சி, சமூகநீதி, நேர்மையான அரசு நிர்வாகம் ஆகியவைதான் தனது கொள்கை என்று சொல்லியிருக்கிறார். ஜி.கே.வாசனின் இந்த திடீர் குஷியை அனைத்துக் கட்சிகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.''
''அதைச் சொல்லும்!''
''காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கில் 65 சதவிகிதத்துக்கு மேல் ஜி.கே.வாசன் பக்கமாகத்தான் இருக்கிறது என்பதை அனைத்துத் தலைவர்களும் உணர்ந்துள்ளார்கள். மேலும், அனைவரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவர் வாசன். அதனால்தான் அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்தார்கள். விஜயகாந்த், வைகோ ஆகிய தலைவர்களும் வாசனுக்கு போன் போட்டு வாழ்த்துச் சொல்லியதாகச் சொல்கிறார்கள். 'வாசன் நம் பக்கமாக வந்தால் நம்முடைய கூட்டணி பலப்படும். அவருக்கு உரிய அங்கீகாரத்தைத் தருவோம்’ என்று கருணாநிதி தூது அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. ஸ்டாலினும் வாசனும் அடிக்கடி பேசிக் கொள்ளக்கூடியவர்கள்தான் என்பதால், இந்த உறவு பலப்பட வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸ் தரப்பு செய்திகளை தனக்கு உடனுக்குடன் சொல்லச் சொல்லி கருணாநிதியும் உத்தரவு போட்டுள்ளார்.
இதே நேரத்தில் ஜெயலலிதாவும் ஜி.கே.வாசனின் திடீர் கட்சியைக் கவனித்து வருகிறார். அது சம்பந்தமான ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வாசன் பிரிந்து வந்தால் அவருக்கு மூன்று தொகுதிகள் தரவேண்டும் என்று சிலர் பேசியபோது, 'வாசனை கூட்டணியில் சேர்ப்பது பற்றி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்தத் தேர்தலில் நான் எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேர வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். இதனை வாசனிடம் சொல்லிவிடுங்கள்’ என்று ஜெயலலிதா சொல்லி அனுப்பியதாகச் சொல்கிறார்கள். மீனவர்களைக் காப்பாற்ற கடலோரப் பாதுகாப்புப் படை ரோந்து கப்பல்கள் விடப்பட்டன. ஆனால், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறையவில்லை. இந்த நிலையில் அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஓர் அறிக்கையை வெளியிட்டார். அப்போது தயாரான அறிக்கையில், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ஜி.கே.வாசன் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் திருத்தம் செய்த ஜெயலலிதா, ஜி.கே.வாசன் பெயரை நீக்கிவிட்டு,  மத்திய அரசு மீது மட்டும் புகார் சொல்லி அறிக்கையை வெளியிட்டார்.''
''ஓஹோ!''
''இப்போது நடந்ததைச் சொல்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் சத்தியமூர்த்தி பவன், ஜி.கே.வாசனின் வீடு இருக்கும் ஆழ்வார் பேட்டை பகுதிகளில் போலீஸார் அதிகப்படியான ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அறிவிப்பு வெளியிடப்பட்ட ராதாகிருஷ்ணன் சாலை ஹோட்டல் வரை வழிநெடுகிலும் வாசன் கட் அவுட்கள் வைக்கப்பட்டன. அதனை போலீஸார் தடுக்கவில்லை. சென்னை மாநகராட்சியும் கண்டுகொள்ளவில்லை. இவை அனைத்துமே சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி வாங்கிய பிறகுதான் வைக்க வேண்டும். ஆனால், அந்த அனுமதி இல்லாமல் இந்த கட் அவுட்டுகள் வைக்கப்பட்டன. அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதை எல்லாம் பார்க்கும்போது, வாசனின் புதுக் கட்சிக்கு ஜெயலலிதா வலை வீசுவதற்கான முஸ்தீபுகள் என்றே சொல்கிறார்கள்.''
''இதில் சிக்கிக்கொண்டவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தானா?''
''கடந்த சில ஆண்டுகளாகவே வாசனும் இளங்கோவனும் அதீத அன்புடன் நட்பு பாராட்டி வந்தார்கள். அதனால்தான், தனக்கு தலைவர் பதவி அறிவிக்கப்பட்டதும் வாசனைத்தான் முதலில் போய் பார்த்து ஆசி வாங்கினார் இளங்கோவன். இதனை டெல்லி எதிர்பார்க்கவில்லை. அப்போதே தான் தனிக் கட்சி ஆரம்பிக்கப் போவதாக வாசன் சொல்லிவிட்டார். அறிவிப்பு செய்த அன்றும், இளங்கோவனுக்கு இவர் வாழ்த்து தெரிவித்தார். 'வாசன் தனிக் கட்சி தொடங்கக் கூடாது’ என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார் இளங்கோவன்.''
''இளங்கோவன் பெயர் பட்டியலிலேயே இல்லையே, அவரை எப்படி அறிவித்தார்கள்?''
''டாக்டர் செல்லக்குமார், மாணிக் தாகூர், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், வசந்தகுமார் ஆகியோர் பெயர்கள்தான் பரிசீலனையில் இருந்தன. 'இளங்கோவனை நியமித்தால்தான் வாசன் தனிக் கட்சி தொடங்க மாட்டார்’ என்று டெல்லி நினைத்ததாம். ஆனால், அதனை மீறி வாசன் வெளியில் போனதை டெல்லி எதிர்பார்க்கவில்லை'' என்ற கழுகார், கடந்த இதழில் வந்த பா.ம.க செய்திகளுக்கு ஃபாலோ - அப் தர ஆரம்பித்தார். ''டாக்டர் ராமதாஸ் வீட்டுத் திருமணத்தில் ஸ்டாலினும் வைகோவும் சந்தித்துக்கொண்டதைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளுக்கும் தேர்தல் கூட்டு என்று செய்தி பரவியது. கூட்டணிக்குத் தயார் என்பதைப்போலவே கருணாநிதி, வைகோ, ஸ்டாலின் ஆகிய மூவரும் மாறி மாறி பேட்டிகள் கொடுத்தனர். இந்த நிலையில் திடீரென்று வைகோ, இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் பற்றி காங்கேயம் திருமணத்தில் மனம் திறந்துள்ளார்.''
''அதைப் பற்றி வேறுவேறு செய்திகள் வருகின்றனவே?''
''கடந்த 2-ம் தேதி ஈரோடு ம.தி.மு.க மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.பி-யுமான கணேசமூர்த்தியின் மகன் கபிலனது திருமணம், ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் உள்ள என்.எஸ்.என் மஹாலில் நடந்தது. திருமணத்தை நடத்திவைக்க வைகோ வந்திருந்தார். அங்கே பேசிய வைகோ, 'கடந்த மூன்று நாட்களாகப் பல்வேறு செய்திகள் பத்திரிகைகளிலே உலவிக்கொண்டிருக்கிற காரணத்தால் இது அரசியலிலே பரபரப்பான நேரம், மூன்று நாட்களாக ஒரு பெரிய கேள்வி எழுந்திருக்கிறது அதைப் பற்றிய வாழ்த்துகள்... விமர்சனங்கள்... இணையத்தில் பரவுகிற மின்னல்வேக செய்திகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. நான் ஒன்றைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இத்தனை நாட்களாக இல்லாமல் இனிமேலா நான் ஒரு பெரிய பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்று  ஆசைப்படப் போகிறேன்? நாடாளுமன்றத் தேர்தலிலே பி.ஜே.பி., பா.ம.க., தே.மு.தி.க ஆகியவற்றோடு தோழமைகொண்டு போட்டியிட்டோம். எனது சகோதரர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்பினேன். வெற்றி பெறவில்லை. ராஜ்யசபா எம்.பி-யாகும் வாய்ப்பு வைகோவுக்கு இருக்கிறது, நரேந்திர மோடியின் நேசத்துக்குரியவர், பி.ஜே.பி-யின் வடகுலத்து தலைவர்கள் எல்லாம் அவர் மீது அளவற்ற அன்புகொண்டிருக்கிறார்கள் என்று பத்திரிகைகள் எழுதின. ஆனால், அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. பதவியேற்பு விழாவுக்கு வந்த ராஜபக்ஷேவை எதிர்த்து கறுப்புக் கொடி காட்டி கைதாகி இருந்தேன். எனக்கா சுயநலம்? நானா பதவி பவுசுகளை எதிர்பார்ப்பவன்? ராஜ்யசபா எம்.பி கொடுப்பார்களோ, நம்மை பயன்படுத்திக்கொள்வார்களோ என்ற எண்ணம் வரவில்லையே... எப்படி வரும் எனக்கு? என்னிடம் பிழைகள் இருக்கலாம். என்னிடம் குறைகள் இருக்கலாம். நான் மாமனிதனல்ல. நான் ஒரு சாதாரண மனிதன். முழுமனிதனாக இருப்பதற்கு முயற்சித்துக்கொண்டிருப்பவன். எனக்கா பதவி ஆசை?’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்துக்கொண்டே போனார் வைகோ.''
''கூட்டணி பற்றி என்ன சொன்னார்?''
''ராமதாஸ் இல்லத் திருமணத்துக்குச் சென்றதைப் பற்றி சொன்ன வைகோ, 'அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் பார்ப்பது நலம் விசாரிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லது. அதற்கு அடையாளம்தான் சகோதரர் ஸ்டாலின் அவர்களுடனான சந்திப்பு என்று நான் சொன்னேன். கண், காது, மூக்கு வைத்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள். தி.மு.க கூட்டணியைப்பற்றி எல்லாம் நான் இப்போது சிந்திக்கவே இல்லை. எனக்கு என்னைவிட கட்சியும் கொள்கைகளுமே பெரியது’ என்று முடித்தார் வைகோ. இதேபோல் ராமதாஸும் 'தி.மு.க., அ.தி.மு.க இல்லாத கூட்டணி’ என்று கிளம்பியிருக்கிறார். அரசியலில் எதுவும் நடக்கலாம். இப்போது அதனைச் சொல்ல வேண்டியது இல்லை என்று இந்த தலைவர்கள் முடிவுக்கு வந்திருக்கலாம்'' என்று சொல்லியபடி எழுந்த  கழுகார்,
''வைகோ - ஸ்டாலின் சந்தித்த போட்டோ, சம்பவம் நடந்த மறுநாள் முரசொலியில் வெளியிடப்படவில்லை என்று சொல்லியிருந்தேன். அதற்கு அடுத்த நாள் முரசொலியில் வெளியாகி உள்ளது. முக்கியத்துவம் கிடைத்துவிடாமல் 7-ம் பக்கத்தில், அடியில் அந்த போட்டோ வெளியிடப்பட்டு உள்ளது. 'வைகோவை சந்தித்தார் என்பதற்காகத்தான் அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதனால்தான் அடக்கி வாசித்தார் ஸ்டாலின்’ என்கிறார்கள் கட்சியில்'' என்றபடி பறந்தார்.
அட்டை மற்றும் படங்கள்:
சொ.பாலசுப்ரமணியன்
படம்: சு.குமரேசன்


வருகிறார் விக்னேஷ்வரன்!
நவம்பர் 9-ம் தேதி, சென்னை, தி.நகரில் உள்ள வித்யோதயா பள்ளியில் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு நடைபெற உள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக  இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் சென்னை வருகிறார். முதல்வரானதும் அவரது முதல் முறை சென்னை பயணமாக இது இருக்கும். இந்த நிகழ்ச்சியில், தென் ஆப்பிரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜாக் யாக்கோப்பும் கலந்துகொள்கிறார். அவர் பார்வை இல்லாதவர். ஆனால், தன்னுடைய உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தால், தென் ஆப்பிரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தவர். இவருடைய அபாரத் திறமையைக் கண்டு நெல்சன் மண்டேலா, இவரை தென் ஆப்பிரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார்.


ரிப்பேர்... ரிப்பேர்... ரிப்பேர்!

நவம்பர் 4-ம் தேதியுடன் தமிழக போலீஸின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யான ராமானுஜத்துக்கு பதவி நீட்டிப்பு முடிகிறது. அதற்கு முதல்நாள் 3-ம் தேதி டி.ஜி.பி அலுவலகத்தில் அடுத்தடுத்து மூன்று விழாக்கள் நடந்தன. அதில் ராமானுஜம் கலந்துகொண்டார். தமிழக காவல் துறையின் அனைத்து தரப்பினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பேசுவதற்கு ஏதுவாக சி.யூ.ஜி முறையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்கிய சிம் கார்டுகளைப் பயனாளிகளுக்கு வழங்கித் தொடங்கி வைத்தார். அதில் அவர் பேசும்போது, ''ஒரு விஷயம் நல்லா போயிக்கிட்டிருந்தா... அதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஒரு போன் வேலை செய்யவில்லை என்றால், அதை 10 பேரிடம் பரப்புவார்கள். உதாரணத்துக்கு, நான் வெளிநாட்டு போனை வாங்கினேன். அதில் ரிப்பேர் ஏற்பட்டது. இதை  சம்பந்தப்பட்ட கம்பெனியிடம் சொன்னவுடன், உடனே மாற்றி புதிய போனை தந்தார்கள். அதேபோல, அமெரிக்காவில் இருந்து மியூசிக் சிஸ்டம் ஒன்றை வாங்கினேன். அதிலும் ஒரு ரிப்பேர். அந்தக் கம்பெனிக்கு தெரிவித்தேன். அதை பார்சலில் அனுப்பச் சொல்லி கேட்டார்கள். அதை அனுப்பவே ரூ. 9 ஆயிரம் ஆகுமாம். பேசாமல், இந்தத் தொகைக்குப் புதியதாகவே வாங்கிவிடலாமே என்று முடிவு செய்து அனுப்பவில்லை. இந்த இரண்டு கார்ப்பரேட் கம்பெனியினர் காட்டிய அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது'' என்றாராம்.
டி.ஜி.பி அலுவலகத்தில் அனைவருக்கும் பொதுவான நூலகம் இதுவரை  இல்லை. அந்தக் குறையையும் நீக்கி, புது நூலகம்  ஒன்றை தொடங்கிவைத்தார் ராமானுஜம். மேலும், முதல்மாடியில் உள்ள டி.ஜி.பி அறைக்குப் போகவேண்டும் என்றால், லிஃப்ட் இதுவரை இல்லை.  லிஃப்ட் வசதியை புதியதாகத் தொடங்கிவைத்தார் ராமானுஜம். இந்த மூன்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு, தனது அறைக்குப் போனார். அடுத்த சில மணிநேரங்களில் புதிய டி.ஜி.பி-யாக அசோக்குமாரை நியமித்து உத்தரவு வெளியானது. அதேநேரம், டி.ஜி.பி அந்தஸ்தில் அட்வைஸர் என்கிற புதிய பதவிக்கு ராமானுஜத்தை நியமித்து அறிவிப்பு வெளியானது. ''அசோக்குமாரும் அதிக காலம் இந்தப் பதவியில் இருக்க இயலாது. ஓய்வு பெற இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. ராமானுஜம் மாதிரி இவருக்கும் இரண்டாண்டுகள் நீட்டிப்பு கொடுத்து வைத்துக்கொள்வார்கள்'' என்கிறார்கள்.

படேல் விழா பதைபதைப்பு!
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாள் விழாவை ஒட்டி அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது. பிரதமர் மோடிக்காக அனைவரும் காத்திருந்தார்கள். அப்போது திடீரென சுப்ரமணியன் சுவாமி வந்துவிட்டார். அவரைப் பார்த்ததும் துணை சபாநாயகர் தம்பிதுரை பதறிப் போனாராம். 'இந்த ஆளு எதுக்கு இங்க வர்றார்?’ என்று குறுக்கும் நெடுக்கும் அலைந்தாராம் தம்பிதுரை. அதற்குள் மோடி வர... மாலை அணிவித்து... குரூப் போட்டோ எடுத்தார்கள். 'சுவாமி இருக்கும் படத்தில் தம்பிதுரை இருப்பதை அவரது கட்சி மேலிடம் ஏற்குமா?’ என்று சிலர் கிலி கிளப்ப ஆரம்பித்துள்ளார்கள்.

பன்னீர் டிக்கா… பன்னீர் சோடா… பன்னீர் பட்டர் மசாலா… கடாய் பன்னீர்… விஜயகாந்த் விட்

சிங்கப்பூரில்  மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு… மூன்று மாத இடைவெளியில்  பொதுமேடை ஏறினார் விஜயகாந்த். அவரது வழக்கமான உற்சாகம் அப்படியே வழிந்தது. பால் விலை உயர்வைக் கண்டித்து கடந்த 28-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் ஜெயலலிதாவை காய்ச்சி எடுத்தார்.
காலை 11.30 மணிக்கு மேடை ஏறிய விஜயகாந்த், கூட்டத்தினர் தன்னை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்று மேடையில் நின்று கொண்டிருந்த எல்.கே.சுதீஷ் உட்பட அனைத்து நிர்வாகிகளையும் உட்காரச் சொன்னார். மேடையில் சேர் எதுவும் இல்லாததால் அவர்கள் அனைவரும் அப்படியே கீழே உட்கார்ந்தனர். விஜயகாந்த் கைக்கு மைக் போனது. ஆரம்பித்ததுமே சூடானார் விஜயகாந்த்.
”பால் விலையை உயர்த்தி ஏழை எளிய மக்கள் வயிற்றில் அடித்துள்ளது தமிழக அரசு. தீபாவளிக்கு பஸ் விட்டால், மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதல் என்று அமைச்சர் அறிக்கை விடுகிறார். ஆனால், பால் விலையை உயர்த்தும்போது மட்டும் தமிழக அரசு அறிவிப்பு என்று மௌனமாகிவிடுகிறார்கள். கோடி கோடியாக கொள்ளை அடித்த கூட்டத்துக்கு பால் விலை உயர்வு பெரிதாகத் தெரியாது. ஆனால், விலைவாசி உயர்வால் திணறிக் கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இந்த பால் விலை உயர்வு பெரிய சுமை. இப்போதைய விலை உயர்வால் தனியார் கொள்ளை லாபம் அடிக்க வாசலை திறந்து விட்டுள்ளனர். பால் விலை உயர்வை முழுமையாக வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், மீண்டும் போராட்டத்தில் குதிப்பேன்” என்று எச்சரித்துவிட்டு ஜெயலலிதா பக்கம் திரும்பினார்.
”ஊழல் குற்றச்சாட்டில் ஜெயில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை, ‘மக்களின் முதல்வர்’ என்று சொல்லி, அந்தக் கட்சியினர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். அப்படியானால் ஓ.பன்னீர்செல்வம் யார்? அவர், தமிழக மக்களின் முதல்வர் இல்லையா? ஜெயலலிதா ஊழல் செய்து தண்டனை பெற்ற குற்றவாளி. அவரை மக்களின் முதல்வர் என்று சொல்லக்கூடாது. உண்மையாகவே, மக்களின் முதல்வர் காமராஜர், அண்ணா ஆகியோர்தான். மக்களுக்காக அவர்கள் உழைத்தார்கள். ஆனால், ஏற்கெனவே ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் அண்ணாவின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றன. ஜெயலலிதா, ‘ஊழலின் முதல்வர்’. மக்களின் முதல்வர் அல்ல. இனி, அவரை குற்றவாளி ஜெயலலிதா என்றுதான் அழைக்க வேண்டும். அதை தைரியமாகச் சொல்லுங்கள். விளம்பரம் பண்ணுங்கள். கழுத்துக்குக் கத்தி வந்துவிடாது.  ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிடர் உடைமையடா…’ என்று எம்.ஜி.ஆர் பாடியிருக்கிறார். ஊழல் செய்தவர்கள்தான் மக்களைப் பார்த்து பயப்பட வேண்டும். நமக்கு பயம் ஒன்றும் இல்லை. யாரைப் பார்த்தும் ஓடி ஓளிய வேண்டியதில்லை. ஊழல் வழக்கில் ஜெயிலில் இருந்த ஜெயலலிதாவுக்கு மக்களை பார்க்க மட்டுமல்ல, அவரது கட்சியினரை சந்திக்கவே பயம். அதனால்தான் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார். அம்மா பெயரில் தொடங்கப்பட்ட திட்டத்தில் அந்தப் பெயரை எடுக்க வேண்டும். இன்றைய முதல்வர் பன்னீருக்கு அந்த சிக்கல் இல்லை. வாட்ஸ் அப்ல ஒரு செய்தி வந்திருக்காம். ‘நம்ம முதல்வர் பெயருல பன்னீர் டிக்கா… கடாய் பன்னீர்… பன்னீர் பட்டர் மசாலா… பன்னீர் சோடான்னு இருக்கு’ என்று கிண்டலடித்து முடித்தார்.
கூட்டத்தைப் பார்த்த ஒரு தொண்டர், ‘நம்ம தலைவருக்கு இன்னும் செல்வாக்கு குறையவே இல்லை’ என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டார்!

சாயம் வெளுக்கிறது... சரித்திரம் சிரிக்கிறது!

4 ஆண்டு தண்டனையும் 4 பேரும்!

சாயம் போவது புதுத்துணியில் மட்டுமல்ல; சில பெரிய மனிதர்களின் வாழ்க்கையிலும் அவ்வப்போது நடப்பதுதான். வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்ற ஜெயலலிதாவின் விவகாரத்திலும் பலர் அம்பலப்பட்டுப் போனார்கள். அதில் நான்கு பேரைப் பற்றி மட்டும் இங்கே:

ராம் ஜெத்மலானி!
இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் முதல் 10 பேரில் ஒருவர். அவரது ஒரு மணிநேர வாதத்துக்கான பைசா எவ்வளவு என்பது அவருக்கும் வாதிக்கும் மட்டுமே தெரியும். உச்ச நீதிமன்றத்தில்தான் தினமும் வலம் வருவார். பிரேமானந்தாவுக்காக புதுக்கோட்டை சப் கோர்ட்டுக்கும் இறங்கி வந்தவர். அவர்தான் ஜெயலலிதாவுக்கு தண்டனை தரப்பட்டதுமே, 'இது தவறான தீர்ப்பு’ என்று அறிக்கைவிட்டு, அதன் மூலமாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீது வாதாடும் வாய்ப்பைப் பெற்றார். இதே ராம் ஜெத்மலானிதான், ஜெயலலிதா மற்றும் அவரது சகாக்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்று தனி நீதிமன்றங்களைக் காப்பாற்றுவதற்குப் பெரும் முயற்சி எடுத்தவர் என்பது முந்தைய வரலாறு.
ராம் ஜெத்மலானியின் நெருங்கிய நண்பரின் மகள் நளினி கேரா. இவர் ராம் ஜெத்மலானியின் அதிகாரபூர்வமான வரலாற்றை எழுதி இருக்கிறார். ஏராளமான ரகசியத் தகவல்கள் உள்ளடக்கிய புத்தகம் அது.
1998-ம் ஆண்டு அமைந்த பி.ஜே.பி கூட்டணியில் அ.தி.மு.க-வும் இடம்பெற்றது. அப்போது பி.ஜே.பி-யில் இருந்த ராம் ஜெத்மலானி தனக்காக சட்டத் துறை அமைச்சர் பொறுப்பைக் கேட்டார். ஆனால், அதை தம்பிதுரைக்கு வாங்கிக் கொண்டார் ஜெயலலிதா. ''அப்போது ராம் ஜெத்மலானிக்கு சட்டத் துறை அமைச்சகம் கிடைக்காமல் போனதற்கு ஜெயலலிதாதான் காரணமா என்று தெரியாது. அந்தப் பதவியை தன்னுடைய கட்சி உறுப்பினரான தம்பிதுரைக்கு ஜெ. கேட்டார். அவர் மீது எண்ணற்ற ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலே சிறையில் வைக்கப்பட்டிருந்தார். தன்னுடைய நலன்களைக் காக்கக் கூடிய ஒருவரை அமைச்சரவையில் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவர விரும்பினார்'' என்று நளினி கேரா எழுதுகிறார்.
இதன்பிறகு ஜெயலலிதா - ராம் ஜெத்மலானி மோதல் தொடர்கிறது. கூட்டணியில் அங்கம் வகித்தாலும் மத்திய அமைச்சர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக வைத்தார் ஜெயலலிதா. அதில் ஜெத்மலானியும் அடக்கம். 'ஃபெரா’ விதிகளை மீறி ராம் ஜெத்மலானி இரண்டு லட்சம் டாலர் அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும் அதனை அமலாக்கத் துறை விசாரித்ததாகவும் அவரைப் பதவியைவிட்டு நீக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
அப்போது ராம் ஜெத்மலானி, 'சில பேர் சிறையைவிட்டு வெளியே வரும்போது பணிவு மற்றும் நற்குணம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள். மேலும் சிலர் ஆணவம் மற்றும் பொறுப்பின்மை கொண்டவர்களாக மாறி நல்லவற்றையும் தீயவற்றையும் வேறுபடுத்த முடியாமல் செயல்படுகிறார்கள். என்னைப் பற்றி இப்படி ஓர் அறிக்கை வெளியிட ஜெயலலிதா யார்? என்னுடைய சுய கௌரவத்தைத் தாக்க அவர் யார்?'' என்று பெங்களூரில் நடந்த கூட்டத்தில் பகிரங்கமாகக் கேட்டார்.
மத்திய சட்ட அமைச்சராக இருந்த தம்பிதுரை, தமிழகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களை ரத்து செய்தார். அப்போது மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி என்ன செய்தார் என்பதும் இந்தப் புத்தகத்தில் வருகிறது: ''இதற்கு எதிராக ராம் கடுமையான எதிர்வினை ஆற்றினார். ஒரு கூட்டாளிக்காக நீதித் துறையின் அதிகாரத்தைக் குறைப்பது தவறு என்றார். அட்டர்னி ஜெனரல் சொராப்ஜி அதைத் தடுத்திருக்க முடியும். ஆனால், அவர் தடுக்காமல் போனதற்கு அவருக்கென்று சொந்தக் காரணங்கள் இருந்தன’ என்று ராம் உறுதியாக நம்பினார். தி.மு.க அரசை கலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை பிரதமர் ஏற்கக் கூடாது என்று ராம் தீவிரமாக வாஜ்பாய்க்கு வலியுறுத்தினார். அ.தி.மு.க-வைக் கூட்டணியைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் சொன்னார். மே 14 அன்று மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது ராமின் முந்தைய முடிவு சரி என்பதை நிரூபித்தது'' என்கிறது அந்தப் புத்தகம்.
அதாவது ஜெயலலிதா மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களைக் காப்பாற்றுவதற்காக பி.ஜே.பி அரசாங்கத்தில் பகீரத பிரயத்தனங்கள் செய்த ராம் ஜெத்மலானிதான் 15 ஆண்டுகளில் பெரும் பல்டி அடித்துவிட்டார்.
ஃபாலி நாரிமன்!
முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான 48 வழக்குகளை விசாரிக்க 1997-ம் ஆண்டு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதிகள் வி.ராதாகிருஷ்ணன், எஸ்.சம்பந்தம், பி.அன்பழகன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. விசாரணை தொடங்கியது. 98-ம் ஆண்டு மத்தியில் பி.ஜே.பி ஆட்சி அமைந்தது. அந்த அரசில் அ.தி.மு.க இடம்பெற்றது. தம்பிதுரை சட்ட அமைச்சராக ஆனார். இப்படிப்பட்ட தனி நீதிமன்றங்கள் அமைக்கும் அதிகாரம் மாநில அரசுக்குக் கிடையாது என்று சொல்லி ஓர் உத்தரவை பிறப்பித்தார். தனி நீதிமன்றங்களில் பரபரப்பாக விசாரிக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் வழக்கமான நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டன. அப்படியானால் விசாரணைகள் காலதாமதம் ஆகும் என்பதுதான் இதன் நோக்கம். 98-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் நாள் இந்த உத்தரவு போடப்பட்டது. இந்த உத்தரவை தி.மு.க தலைமையிலான அரசு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதாடியவர்தான் ஃபாலி நாரிமன்.
இதற்கு மத்தியில், தங்களை வழக்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா உள்ளிட்ட 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போனார் ஜெயலலிதா. வழக்கு போட்டது சரிதான் என்று அன்றைய தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடியவர் ஃபாலி நாரிமன். அப்போது தம்பிதுரையின் உத்தரவைக் கடுமையாக விமர்சித்து ஃபாலி நாரிமன் வாதிட்டார்.
''மத்திய அரசு இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்கும் முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலை பெறவில்லை. எனவே, இது சட்டவிரோதமானது. மேலும், தனி நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள ஜெயலலிதாவின் வழக்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது'' என்று நாரிமன் வாதிட்டார். இந்த வழக்கில்தான் நீதிபதிகள் ஜி.டி.நானாவதி, எஸ்.பி.குர்துகர் மிகக் கடுமையான தீர்ப்பினைக் கொடுத்தார்கள்.
ஒரு வழக்கறிஞர் யாருக்கு வேண்டுமானாலும் வாதாடலாம். அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. ஆனால், ஒரே வழக்கில் எதிரும்புதிருமாக வெவ்வேறு காலகட்டத்தில் வாதாடுவது தார்மீக நெறியா? தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பிலும் ஆஜரான நாரிமன், அந்தத் துறை தாக்கல் செய்த வழக்கில் தண்டனை பெற்றவருக்காகவும் வாதாடுவது எத்தகைய முன்னுதாரணம்? தனது மகன் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும்போது அதே நீதிமன்றத்தில் அப்பா வாதாடுவது தார்மீக மரபும் அல்லவே.  ஃபாலி நாரிமன் காட்டியது பழுதான பாதை அல்லவா?
சோ!
குன்ஹாவின் தீர்ப்பைக் கேட்டு அதிகமாகக் கொதித்துப் போனவர் சோ. 'இது இறுதியான முடிவல்ல. அவருடைய அரசியல் வாழ்க்கையே ஒரு பெரும் சோதனைக்கு உள்ளாகிவிட்டதுபோல் நினைக்க அவசியமில்லை. அவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கக்கூடிய வாய்ப்புதான் உள்ளது’ என்று சோ எழுதி உள்ளார். 91-95 காலக்கட்ட அரசு பற்றிய எந்த விமர்சனத்தையும் அவர் வைக்கவில்லை. 'இந்தச் சூழ்நிலையை கருணாநிதி பயன்படுத்திக்கொள்ளக் கூடாது’ என்றும் சோ கவலைப்பட்டுள்ளார்.  1996 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியின் ஊழல் முறைகேடுகளை வெளிச்சப்படுத்தி அதனை கருணாநிதி பயன்படுத்திக்கொள்ள வழிவகுத்தவரே இந்த சோ-தான்.
''கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நாம் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்கிறோம். அதை எல்லாம் மக்களிடம் முறையாக எடுத்துச் சொல்லவில்லை'' என்று ஜெயலலிதா சொல்லியதைக் குறிப்பிட்டு வாசகர் ஒருவர் கேள்வி கேட்டபோது, 'ஜெயலலிதாவுக்கு இந்த மனக்குறை தேவை இல்லை. அந்த சாதனையைத்தான் பல வழக்குகள் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றனவே'' (துக்ளக் 13.8.97 - பக் 14) என்று பதிலளித்தார் சோ.
மத்திய பி.ஜே.பி ஆட்சி இந்த வழக்குகளை முடக்கும் நடவடிக்கையை எடுத்தபோது, ''ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் தாமதப்படுத்துவதற்கு உதவி செய்வது என்று தீர்மானித்து பி.ஜே.பி செயல்படுகிறது. இனி ஊழலைப் பற்றி பி.ஜே.பி பேசுவது நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படும் என்ற நிலைகூட வந்துவிடும் போலிருக்கிறது'' (துக்ளக் 20.1.99 - பக்.8) என்று பாய்ந்தவர் சோ.
ஜெயலலிதாவைக் குறிவைத்து சோ எழுதிவருவதைப் பார்த்து ஒரு வாசகர், ''ஜெயலலிதாவின் ஊழல் மட்டும் உங்கள் கண்களை ஏன் உறுத்துகிறது?'' என்று கேள்வி கேட்டபோது, ''தி.மு.க ஊழலில் இருந்து இந்திரா காந்தி ஊழல் உள்பட ஜெயலலிதா, லாலு பிரசாத் ஊழல் வரை எல்லா ஊழல்களும் உறுத்தத்தான் செய்கின்றன. இந்த உறுத்தல்களை துக்ளக் விவரித்துத்தான் வந்திருக்கிறது. உறுத்தல்கள் வளர்ந்து ஜெயலலிதா ஊழல் நோயாக முற்றிவிட்டது. அதனால்தான் கவலை அதிகம்'' என்று (10.2.99 - துக்ளக் பக்-15) விளக்கம் அளித்தவர் சோ.
''ஊழல் ஒரு குற்றமே அல்ல என்று நினைக்கும் அளவுக்குப் பெருந்தன்மை காட்டியவர் ஜெயலலிதா'' (27.1.99 துக்ளக் - பக்-8) என்று குற்றம் சாட்டியவரும் சோ-தான். இப்படி 1995 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் அவர் எழுதிய தலையங்கம், கேள்வி பதில், நினைத்தேன் எழுதுகிறேன், அட்டைப்பட கார்ட்டூன் என்று எடுத்துப் போட்டாலே பல பக்கங்கள் போகும். ஆனால், சோ இன்று இந்த வழக்கை அரசியல் ரீதியாக மட்டும் பார்ப்பது ஏனோ?
சுப்பிரமணியன் சுவாமி!
முன்னால் சொன்ன மூவரும் எதிர்ப்பக்கமாக இருந்து ஆதரவாய் மாறியவர்கள் என்றால், சுப்பிரமணியன் சுவாமி ஆதரவாய் இருந்து எதிர்ப்பாய் ஆனவர். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போதே அவர் மீது வழக்குப் போடவேண்டும் என்று அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டியிடம் மனு கொடுத்து அனுமதி பெற்றவர் சுப்பிரமணியன் சுவாமிதான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதில் சுவாமி உறுதியோடு இருந்தாரா?
1996-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. 96 செப்டம்பர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க சார்பில் ஜெயக்குமார், ஜனதா கட்சி சார்பில் சந்திரலேகா ஆகியோர் போட்டியிட்டார்கள். திடீரென ஜெயக்குமாரை வாபஸ் வாங்கச் சொல்லிவிட்டு சந்திரலேகாவை ஆதரித்தார் ஜெயலலிதா. ''இது ஜெயலலிதாவின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஜெயலலிதாவை நான் என்றுமே தனிப்பட்ட முறையில் தாக்கியது இல்லை'' என்று சொல்லி ஏற்றுக்கொண்டவர் சுவாமி. சந்திரலேகாவுக்கு ஆசிட் தழும்பு மறையவில்லை. சுவாமிக்கு கோர்ட் காட்சிகள் மறந்திருக்காது. ஆனால், எல்லாம் மறைத்து அந்த ஆதரவை ஏற்றுக்கொண்டார்.
சுவாமி எந்த புகார்களைக் கொடுத்தாரோ அதே புகார்களை வைத்து சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் முயற்சிகள் நடந்துவரும்போது, அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு சுவாமியும் சந்திரலேகாவும் போனார்கள். சந்திரலேகாவின் 50-வது பிறந்தநாளுக்கு (1997 ஜூலை 25) ஜெயலலிதா சார்பில் பொக்கே-யை சத்தியமூர்த்தியும் டி.எம்.செல்வகணபதியும் கொண்டுவந்து கொடுத்தார்கள். சுவாமியின் 58-வது பிறந்தநாளுக்கு (1997 செப்டம்பர்) வாழ்த்துச் சொல்ல அவர் அலுவலகத்துக்கே ஜெயலலிதா வந்தார். 98-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் மதுரை தொகுதியில் நின்று வென்ற சுவாமிக்கு நிதி அமைச்சர் பதவி தரவேண்டும் என்று கேட்டவர் ஜெயலலிதா. வாஜ்பாய்தான் அதற்கு உடன்படவில்லை.
ஜெயலலிதா மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டபோது, ''ஜெயலலிதா மீது தமிழக அரசு தொடுத்திருக்கும் வழக்குகள் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை. தமிழக அரசு கூடுதல் நீதிபதிகளை நியமித்தது தவறு. ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிபதிகளை நியமிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை'' என்று அறிக்கை வெளியிட்டவர் சுவாமி. ஜெயலலிதாவுக்காகத்தான் டெல்லியில் டீ பார்ட்டி நடத்தி இன்று தன்னுடைய பரம்பரை எதிரியாகக் காட்டிக்கொள்ளும் சோனியாவை அதற்கு அழைத்து வந்தவரும் சுவாமி.
''ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கு தண்ணி காட்டிய நீங்கள், இப்போது ஜெயலலிதாவிடம் சரணடைந்திருப்பது எதைக் காட்டுகிறது?'' என்று கேட்டபோது, ''சாணக்கிய நீதியையும் பகவத் கீதையையும் நீங்கள் படிக்க வேண்டும்'' என்று அறிவுரை சொன்னார் சுவாமி.
கிருஷ்ண பரமாத்மாவை இதைவிட வேறுயாரும் கிண்டலடித்திருக்க முடியாது!

Thursday, October 30, 2014

`பெரிய’ பலன் தரும் சின்ன வெங்காயம்

தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர்.  உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக்கொண்டது.
 சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெயில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம்.
  உடல் சூட்டைக்  குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம்.  உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.
  கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்கவைப்பது சின்ன வெங்காயம்.
  வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம். 
  வடகம் கெட்டுவிடாமல் பதப்படுத்திப் பாதுகாக்க, சின்ன வெங்காயம் சேர்த்துத் தயாரித்தால் போதும்.
  அம்மை நோய் வராமல் தடுக்கவும்  வந்தால் சீக்கிரம் குணமாகவும் சின்ன வெங்காயம் உதவுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு அம்மை வந்தால், அதன் பிறகு இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க அம்மை ஏற்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்கள் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துவந்தால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். 

‘18 வருஷ வழக்கை 18 மாசத்துல உடைக்கணும்!’ கார்டன் சேலஞ்ச்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து  விடுதலையான ஜெயலலிதா, அக்டோபர் 18-ம் தேதி மாலை சரியாக 6 மணிக்கு போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைந்தார். 4.55 மணிக்கே, சென்னை விமான நிலையத்தை விட்டுப் புறப்பட்டுவிட்டவருக்கு வழியெங்கிலும் வரவேற்பு. சலனம் இல்லாத புன்னகையின் மூலம், வரவேற்பையும் வாகனத்தின் மீது தூவப்பட்ட மலர்களையும் ஏற்றுக்கொண்ட ஜெயலலிதாவின் மனதில், பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் இருந்த 21 நாட்கள் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தின என யாருக்கும் தெரியாது.
‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் தனக்கு நெருக்கமானவர்களாக, தனக்கு விசுவாசமானவர்களாகக் காட்டிக்கொண்ட அனைவரையும் தூக்கி எறிந்துவிட்டு, 18 வருடப் பழியை 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரபரப்பு தொடங்கும் 18 மாதங்களுக்குள்  உடைக்க ஜெயலலிதா முடிவுசெய்துள்ளார்’ என்கிறார்கள்.
இத்தனை வருடங்களாகத் தன் தூக்கத்தைத் தொலைக்கச் செய்து துரத்திய வழக்கில், சட்டத்தின் அத்தனை நுணுக்கங்களையும் பரிசோதித்துப் பார்த்தும் விடுதலை பெற முடியாமல், குற்றவாளியாகி, முதலமைச்சர் நாற்காலியை இழந்து, எம்.எல்.ஏ பதவியும் பறிக்கப்பட்டு, 66 வயதில் 21 நாட்கள் சிறைக்குள் அடைபட்டுக் கிடந்தபோது சூழ்ந்த தனிமையும் வேதனையும் அவரை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது.
தீர்ப்பு வெளியாவதற்கு முதல் நாள், அதாவது செப்டம்பர் 26-ம் தேதி இரவு வரை, தன்னைச் சுற்றி இருந்தவர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகள், வழக்குரைஞர்கள் என அத்தனை பேரிடமும் பல கட்ட ஆலோசனைகள் நடத்தியிருந்தார் ஜெயலலிதா. தீர்ப்பின் முடிவு நமக்குப் பாதகமாக வரும் என்றால், வேறு வழி யோசிக்கலாம் என்றும் சொல்லியுள்ளார். ஆனால், சுற்றி இருந்த அனைவரும், ஒரே குரலில் கோரஸாக, ‘நாளை வரப்போகும் தீர்ப்பு முழுக்க முழுக்க நமக்குச் சாதகமாகத்தான் இருக்கும். இந்த வழக்கில் நிச்சயம் நீங்கள் விடுதலை ஆவீர்கள். தைரியமாகச் செல்லுங்கள்’ எனச் சொன்னார்களாம்.
ஜெயலலிதாவும் அந்த நம்பிக்கையிலேயே செப்டம்பர் 27-ம் தேதி காலை, போயஸ் கார்டன் வீட்டை விட்டுக் கிளம்பினார். ‘இந்த 18 வருடத் தலைவலி இன்றோடு ஒழியப்போகிறது. இனிமேல்தான் எனக்கு நிம்மதி’ எனத் தெம்பாகவே புறப்பட்டார். வழியில் கோட்டூர்புரத்தில் இருக்கும் விநாயகரை வணங்கிவிட்டு நிம்மதியான மனநிலையோடுதான் விமானம் ஏறினார். ஆனால், ‘நீங்கள் குற்றவாளி’ என நீதிபதி குன்ஹா தீர்ப்பு சொன்னபோதுதான், சுற்றி உள்ளவர்களால் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது புரிந்துள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட நாளில், ‘பெங்களூரில் இருந்து தனக்குக் கொடுக்கப்பட்ட தகவல்கள் எப்படி வந்தன, அதில் உண்மை உள்ளதா?’ என்பதைக் கேட்டு அறிந்துள்ளார் ஜெயலலிதா. அப்போதுதான் தன்னைச் சுற்றி இருந்தவர்கள், தன்னுடைய விவகாரத்திலேயே எவ்வளவு அசட்டையாக இருந்துள்ளனர் என்பது புரிந்துள்ளது. இந்த வழக்கு பற்றி விசாரிக்க தமிழகக் காவல் துறை அதிகாரிகள் செய்த அதிகபட்ச விஷயம், பெங்களூரு உளவுத் துறை அதிகாரிகளிடம் பேசியதுதான். பெங்களூரு உளவுத் துறைக்கு, இந்த வழக்கின் விவரங்களைத் தெரிந்துகொள்ள இருந்த ஒரே சோர்ஸ் பவானி சிங் மட்டும்தான். அதைத் தாண்டி அவர்களால், நீதிபதி குன்ஹாவை நெருங்க முடியவில்லை. பவானி சிங்கிடம் இருந்தும் உருப்படியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த தகவல்களை அவர்கள் தமிழக உளவுத் துறையிடம் பகிர்ந்துள்ளனர். அவர்கள் அதையே விதவிதமாக தோட்டத்தில் ஒப்பித்துள்ளனர். அதன் விளைவு, இப்போது 30 ஐ.பி.எஸ் அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யும் பட்டியல் தயார்.
வழக்குரைஞர்கள் செய்த குளறுபடிகள் தனி அத்தியாயம். செப்டம்பர் 29-ம் தேதி நீதிபதி ரத்னகலா வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் உயர் நீதிமன்றத்தில் வந்து மனுக்களை டிக்டேட் செய்தது ஜெயலலிதா தரப்பு. அதுவும் அரசுத் தரப்பு வழக்குரைஞர் யார் என்றே தெரியாமலும் போய் நின்றார்கள். நீதிபதி ‘அரசுத் தரப்பு வழக்குரைஞர் யார்?’ எனக் கேட்டபோது எல்லோரும் பவானி சிங்கைப் பார்க்க, அவர் தனக்கு அப்படி ஓர் உத்தரவே வரவில்லை எனச் சொன்னது, அதையடுத்து நீதிபதி அன்றைக்கு வழக்கை ஒத்திவைத்தது போன்றவற்றைக் கேட்டு, கொந்தளித்துப்போனார் ஜெயலலிதா. இந்த வழக்கு பற்றி தான் கேட்டபோது எல்லாம், ‘நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ எனச் சொல்லிவிட்டு, உருப்படியாக யாரும் ஒன்றும் செய்யவில்லை என்ற கோபம் ஜெயலலிதாவுக்குக் கடுமையாக உள்ளது. இந்த மனக்கசப்பை உண்டாக்கிய அனுபவங்களால், இனி தகுதியானவர்கள் மட்டுமே கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவார்கள். கட்சிக்காரர்கள், விசுவாசிகள் என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு இனி யாரும் அந்தப் பதவிக்கு வந்துவிட முடியாது.
போயஸ் கார்டன் வீட்டில் முடங்கிக்கொண்டு, கட்சியையும் ஆட்சியையும் பின்னால் இருந்து இயக்குவதைப் பற்றி ஜெயலலிதா யோசிக்கக்கூட இல்லை. காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் சுழன்றடித்த மோடி அலையை எதிர்த்தே, 42 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று வென்றவர். அந்தத் தேர்தலில் தி.மு.க-வின் வாக்கு சதவிகிதம் 22 மட்டும்தான். கைது, தண்டனை போன்ற விவகாரங்கள், அ.தி.மு.க-வின் வாக்கு சதவிகிதத்தை சற்றே குறைத்தாலும், அதனால் பாதிப்பு இருக்காது. முன்கூட்டியே தேர்தல் வைத்தாலும் தனி மெஜாரிட்டியில் மீண்டும் அ.தி.மு.க ஜெயித்துவிடும். ஆனாலும், முதலமைச்சர் பதவி மூலம் அதிகாரம் நேரடியாக தன்னிடம் இருக்க வேண்டும் என்பதை ஜெயலலிதா திட்டவட்டமாக விரும்புகிறார். அதற்காக விரைவில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற வேண்டும். அதற்கான வேலைகள் அனைத்திலும் கடந்த காலத்தில் நடந்ததுபோல் மீண்டும் ஏமாந்துவிடக் கூடாது என உஷாராக இருக்கிறார். உச்ச நீதிமன்ற நிபந்தனைகளைப் பின்பற்றுவதைக் கண்காணிக்க தனியாக ஓர் அணி அமைக்கப்பட உள்ளது. இவ்வளவு உள்ளே நடந்துகொண்டிருந்தாலும், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டைச் சுற்றி,  புயலுக்குப் பின் நிலவும் கனத்த மௌனம்தான் உறைந்து நிற்கிறது.
கட்சிக்காரர்களில் ஓ.பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி என்ற மூன்று பேரைத் தவிர, மற்ற யாரையும் அவர் சந்திக்கவில்லை. அதனால் இந்தக் கனத்த மௌனத்துக்குப் பிறகு நடக்கப்போகும் பூகம்பத்தை யாராலும் கணிக்க முடியவில்லை!

ஜாமீனில் உள்ள சாதகமும் பாதகமும்…
ச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதிகள் மனோஜ் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு ஜெயலலிதாவுக்கு ஜாமீனில் விடுதலை வழங்கி உள்ளது. ஆனால், அதில் ஜெயலலிதாவுக்கு சாதக மற்றும் பாதக அம்சங்கள் சரிசமமாகவே இருக்கின்றன.
சாதகமான அம்சங்கள்:
டிசம்பர் 18-ம் தேதி வரை தண்டனையை நிறுத்திவைத்தது. மேல்முறையீட்டுக்கு ஜெயலலிதா தரப்பு கேட்ட 6 வார கால அவகாசத்தைவிட கூடுதலாக இரண்டு வாரங்கள் கொடுத்து 8 வார கால அவகாசம் வழங்கி இருப்பது. மேல்முறையீட்டு விசாரணைக்கு ஜெயலலிதா நேரில் வரத் தேவை இல்லை. அவருடைய வழக்கறிஞர்கள் வந்தாலே போதும் எனச் சொல்லியிருப்பது.
பாதகமான அம்சங்கள்:
டிசம்பர் 17-ம் தேதிக்குள் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். அந்தத் தேதிக்குள் வழக்கின் 35 ஆயிரம் பக்க ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். இதில் ஒரு நாள் தாமதம் ஏற்பட்டால்கூட ஜாமீனை ரத்து செய்வோம் எனக் கண்டிப்பு காட்டியிருப்பது.
இந்த வழக்கின் மனுதாரர்கள் சுப்ரமணியன் சுவாமி, க.அன்பழகன் உள்ளிட்டோருக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படுத்தக் கூடாது. அப்படி ஏற்பட்டதாக அவர்கள் நீதிமன்றத்தை அணுகினால், அதை நீதிமன்றம் பொறுத்துக்கொள்ளாது.
மேல்முறையீட்டை ஒரு நாள்கூட ஒத்திவைக்க முயற்சிக்கக் கூடாது!
நன்றி-விகடன்

வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வருமான வரிச் சலுகைகள்! இளைஞர்களுக்கான சூப்பர் வழிகாட்டி…

இந்தியாவில் வருமான வரிச் செலுத்துபவர்களில் பாதிக்கு மேலானவர்கள், வருமான வரிச் சலுகையை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என ஆன்லைன் மூலம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய உதவும் டாக்ஸ்ஸ்பானர் டாட் காம் (Taxspanner.com) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுவும், அனைவருக்கும் அதிகம் தெரிந்த 80சி பிரிவில்கூட முழுமையாக வரிச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்.
வருமான வரிச் சலுகையை அதிகமாகப் பயன்படுத்தாதவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர்கள் நம் இளைஞர்கள்தான். ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் 25-லிருந்து 30 வயது வரை உள்ள இளைஞர்கள் கடந்த நிதி ஆண்டில் சராசரியாக 12% வருமான வரி கட்டி இருக்கிறார்கள். இதுவே, 35 வயதானவர்கள் 6% மட்டுமே வரி கட்டி இருக்கிறார்கள்.
இவ்வளவுக்கும் 25-லிருந்து 30 வயது வரை உள்ள இளைஞர்கள், படித்தவர் களாக, கைநிறையச் சம்பளம் வாங்குப வர்களாக இருக்கிறார்கள். பணியில் பிஸியாக இருக்கும் இந்த இளைஞர்கள் வருமான வரியைச் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்க பல காரணங்கள்.
இன்றைய இளைஞர்களில் பலருக்கு  பணத்தின் அருமை புரிவதில்லை. லேட்டஸ்ட் செல்போன், புதுப்புது ஆடைகள், பொழுதுபோக்கு, வாகனங்கள் என ஜாலியாக இருப்பது தான் வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். இதனால் சேமிப்பையும் முதலீட்டைப் பற்றியும் அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை.
தவிர, வருமான வரிச் சலுகை பற்றி அவர்களுக்கு யாரும் தெளிவாகச் சொல்லித் தருவதில்லை. வருமான வரிச் சலுகைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துச் சொன்னால், அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள தவறமாட்டார்கள்.
இன்னும் சில இளைஞர்கள் வருமான வரிச் சலுகை பெறுவதற்காக எந்த முயற்சியும் எடுக்காமல், வரி கட்டுவதைப் பெருமையாக நினைக்கிறார்கள். வரி கட்டுவது நமது கடமைதான். ஆனால், அரசாங்கமே நமக்கு அளித்த வரிச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு, அதுபோக உள்ள வரியைக் கட்டுவதே புத்திசாலித்தனம். இனியாவது இன்றைய இளைஞர்கள் தங்களுக்கான வரிச் சலுகைகளை சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
பி.எஃப்!
வருமான வரிச் சேமிப்புக்கான முதலீடு ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை. அது இரண்டாம் வகுப்பு வாய்ப்பாடு தான். கீழே சொல்லப்போகிற விஷயங்களைத் தெரிந்துவைத்துக் கொண்டால் போதும், உங்களுக்கான வருமான வரிச் சலுகையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஓர் இளைஞன் முதல் மாதத்தில் வாங்கும் சம்பளத்தில் இருந்தே எதிர்கால சேமிப்புக்கான தொகை  பிடிக்கப்படு கிறது. அதாவது, வாங்கும் சம்பளத்தில் (அடிப்படை மற்றும் பஞ்சப்படி) 12% பிராவிடெண்ட் ஃபண்ட் (பிஎஃப்) ஆகப் பிடிக்கப்படுகிறது. இதே அளவு தொகையை  நிறுவனமும் பணியாளரின் பிஎஃப் கணக்கில் செலுத்தும்.
அதிகச் சம்பளம் வாங்கும் சிலர், நிறுவனத்தில் பிஎஃப் பிடிக்க வேண்டாம்; நிறுவனம் தன் பங்களிப்பாகப் போடும் தொகையையும் சேர்த்துச் சம்பளமாகத் தந்துவிடுங்கள் என்று எழுதித் தந்துவிடுகிறார்கள். இது தவறான அணுகுமுறை. பிஎஃப் என்பது ஓய்வுக்காலத்துக்கான சேமிப்பு என்பதால், அந்த முதலீட்டை தவிர்ப்பது நல்லதல்ல.
பிஎஃப். முதலீட்டுக்கு வரிச் சலுகை கிடைப்பதோடு, அதில் சேரும் தொகைக்குக் கூட்டு வட்டியும் வழங்கப் படுகிறது. மேலும், பிஎஃப் பிடிக்கத் தொடங்கி ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திருமணம், கல்வி, வீடு வாங்க எனப் பல தேவைக்கு இதிலிருந்து பணம் எடுத்துக்கொள்ள முடியும். மேலும், பணி நிறைவுக்குப் பிறகு, கோடி ரூபாய்க் கிடைத்தாலும் அதற்கு வரி கட்டத் தேவை இல்லை. ஒரு சின்ன உதாரணம் மூலம் பார்த்தால், பிஎஃப் தொகை எப்படிப் பெருகுகிறது என்பதைப் பார்க்கலாம்.
25 வயதான ஒருவரின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து ரூ.25,000-க்கு 12% பிஎஃப் பிடிக்கப்படுகிறது. நிறுவனம் தன் பங்காக 12% தொகை போடுகிறது. ஆண்டுக்கு 10 சதவிகித சம்பள உயர்வு என்கிற அடிப்டையில் ஒருவருக்கு 58 வயது வரை பிஎஃப் பிடிக்கப்படுகிறது. இதற்கு 8.75% கூட்டு வட்டி வழங்கப்படுகிறது என்றால், பணி ஓய்வுபெறும்போது மொத்தம் ரூ.4.10 கோடி கிடைக்கும். இந்தத் தொகைக்கு நீங்கள் வரி எதுவும் கட்டத் தேவை இல்லை. இளைஞர்களே இனி பிஎஃப் முதலீடு வேண்டாம் என்று சொல்லமாட்டீர்கள்தானே?
அடுத்து, இளைஞர்கள் வருமான வரி முதலீட்டுக்கான சேமிப்பை ஆரம்பிக்கும்முன் வரிச் சலுகை கிடைக்கும் இரு செலவுகளை அவசியம் மேற்கொண்டாக வேண்டும். அவை, லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான செலவாகும்.
அதிக இன்ஷூரன்ஸ் பாலிசிகள் வேண்டாம்..!
இளைஞர்கள் வரிச் சேமிப்புக்காக அதிகமாக முதலீடு செய்யவில்லை என்கிற அதேநேரத்தில், தேவை இல்லாமல் அதிக எண்ணிக்கையில் ஆயுள் காப்பீடு பாலிசியை எடுத்து வைத்திருக்கிறார்கள். இளைஞர்களுக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களின் நண்பர்களில் பலர் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகளாக வேலை பார்க்கிறார்கள் அல்லது பகுதி நேர ஏஜென்ட்டுகளாக இருக்கிறார்கள். அவர்கள், ‘மச்சி டார்கெட் கம்ப்ளீட் பண்ணனும், ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி போடேன்” என்று கேட்டதும், கொஞ்சமும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிடுவார்கள். இதேபோல் பல நண்பர்கள் கேட்க ஓரிரு ஆண்டுகளில் கையில் டஜன் கணக்கில் பாலிசிகள். ஆனால், இந்த அனைத்து பாலிசிகளையும் சேர்த்தால், அவர்களின் ஆயுளுக்குப் போதிய கவரேஜ் இருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
காரணம், நண்பர்களின் வற்புறுத்த லால் எடுக்கப்பட்டிருக்கும் அனைத்து பாலிசிகளும் ஆயுள் காப்பீடு கவரேஜ் மற்றும் முதிர்வு தொகை கொண்ட எண்டோவ்மென்ட் பாலிசிகள் அல்லது பங்குச் சந்தை சார்ந்த யூலிப் பாலிசி களாக இருக்கின்றன. இவற்றுக்குப் பதில் முற்றிலும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் அளிக்கும் (முதிர்வு தொகை எதுவும் இல்லா) டேர்ம் பிளான் எடுத்திருந்தால், பிரீமியம் மிகவும் குறைவாக இருக்கும், அதிக கவரேஜும் கிடைக்கும்.
அடுத்து முக்கியமான விஷயம், எவ்வளவு தொகைக்கு ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்கிற விவரம் பலருக்கு தெரிவதில்லை. எண்டோவ்மென்ட் பாலிசிகள் முதலீட்டுத் திட்டமாகப் பார்க்கப்படுவ தால், அதில் ஒருவரால் பிரீமியம் கட்டக் கூடிய அளவுக்குப் பாலிசிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு வருமான ஆதாரம் எதுவும் கேட்கப்படுவதில்லை.
மேலும், மருத்துவப் பரிசோதனையும் பெரிதாகக் கிடையாது. டேர்ம் பிளான் பாலிசியில் அப்படி இல்லை. பாலிசி எடுப்பவருக்கான வருமான ஆதாரம் மற்றும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
வேலைக்குச் சேர்ந்து 2 ஆண்டுகள் ஆன 25 வயது இளைஞரின் மாத சம்பளம் 40,000 ரூபாய் என்றால், அவரின் ஆண்டுச் சம்பளம் ரூ.4.80 லட்சம். ஆண்டுச் சம்பளத்தைப்போல் குறைந்தபட்சம் சுமார் 10 மடங்குக்கு அதாவது, 48 லட்சம் ரூபாய்க்கு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. அவர் 50 லட்சம் ரூபாய்க்கு எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்தால், ஆண்டு பிரீமியம் ஏறக்குறைய ரூ.2.38 லட்சம் கட்ட வேண்டியிருக்கும். இதுவே, அவர் டேர்ம் பிளான் எடுத்தால், ஆண்டு பிரீமியமாக ரூ.15,000 மட்டும் கட்டினால் போதும். அதுவே, ஆன்லைனில் டேர்ம் பிளான் எடுத்தால் பிரீமியம் ரூ.5,150 மட்டுமே.
ஆயுள் காப்பீடு குறித்து இளைஞர் களிடம் இருக்கும் தவறான கருத்து ஒன்று மாற்றப்பட வேண்டும். நான்தான் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேனே, நான் சாலையில் நன்றாகக் கவனித்துதானே வாகனம் ஓட்டுகிறேன், நான் ஏன் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறார்கள். சாலையில் நீங்கள் சரியாகத்தான் வாகனம் ஓட்டி செல்கிறீர்கள். பின்னால் வரும் வாகனம் அல்லது எதிரில் வரும் வாகனம் நிலைத் தடுமாறி இடித்து, உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால், உங்களை நம்பி இருக்கும் பெற்றோர், மனைவி மற்றும் தம்பி, தங்கைகளின் எதிர்காலம் என்னாவது?
ஆயுள் காப்பீடு பாலிசிக்கு கட்டும் பிரீமியத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின் கீழ் ஓராண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும்.
இதேபோல்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் குறித்த அவர்களின் பார்வையும் தவறானதாக இருக்கிறது. நான்தான் நல்ல திடகாத்திரமாக இருக்கிறேனே, எனக்கு எதுக்கு மருத்துவ பாலிசி என்கிறார்கள்.
இன்றைக்கு உணவுப் பழக்கம் மாற்றம் மற்றும் பாரம்பரிய காரணங் களால் 25 வயது இளைஞனுக்குக்கூட மாரடைப்பு வந்து, ஆளை சாய்த்து விடுகிறது. மேலும், சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி உதவுகிறது. பொதுவாக, ஒருவரின் ஆண்டு வருமானத்தைப்போல் 1.5 மடங்குக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். இருந்தாலும் வசிக்கும் நகரம், அங்குள்ள மருத்துவச் செலவையும், ஒருவருக்குப் பாரம்பரியமாக ஏற்படக்கூடிய பாதிப்பையும் கவனித்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. உதாரணத்துக்கு, திருநெல்வேலியில் வசிப்பவர் சென்னையில் வசிப்பவரைவிடக் குறைவான தொகைக்கு பாலிசி எடுத்துக் கொண்டால் போதும்.
லைஃப் இன்ஷூரன்ஸ் என்பது வருமானம் ஈட்டும் நபர்களுக்கானது என்பதால், அந்த பாலிசியை வேலை பார்க்கும் இளைஞர்கள் மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அவசியம் எடுக்க வேண்டிய பாலிசியாகும். அம்மா, அப்பா, சகோதர சகோதரிகளுக்கு மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் கையிலிருந்து தான் செலவு செய்யவேண்டி இருக்கும். அவர்களுக்கும் சேர்த்து ஹெல்த் பாலிசி எடுக்கப்பட்டிருக்கும்பட்சத்தில் சில ஆயிரம் ரூபாய் பிரீமியத்தில் லட்சம் ரூபாய்க்கான மருத்துவச் சிகிச்சையைப் பெற்றுவிட முடியும்.
குடும்பத்தினருக்கு எடுக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியத் தொகையை வரிதாரர் தனது சம்பளத் திலிருந்து கழித்துக்கொள்ள முடியும். தனிநபர் மற்றும் அவரின் குடும்பத்தி னருக்கு சேர்த்து ஆண்டுக்கு கட்டும் பிரீமியத்தில் 15,000 ரூபாய் வரைக்கும் வரிச் சலுகை கிடைக்கும். வரிதாரர் அவரது பெற்றோருக்கு கட்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத் தொகைக்குத் தனியாக ரூ.15,000 வரைக்கும் (மூத்த குடிமக்களாக இருந்தால் 20,000 வரை) வரிச் சலுகை பெற முடியும். குடும்ப உறுப்பினர்களுக்குச் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு (ஹெல்த் செக்கப்) ஓராண்டில் ரூ. 5000 வரை வரிச் சலுகை பெறலாம். இது 15,000 ரூபாய் வரம்புக்குள்ளே வரும்.
கல்விக் கடன் வட்டி..!
இளைஞர்கள் அவர்களின் மேல் படிப்புக்குக் கல்விக் கடன் வாங்கித் திரும்பக் கட்டிவந்தால், அதற்கான வட்டிக்கு வரிச் சலுகை பெற முடியும். அடுத்து, இரு பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு வரிச் சலுகை இருக்கிறது. இது 80சி பிரிவின் கீழ் வரும். 25 முதல் 35 வயதுக்குக்கு உட்பட்ட இளைஞர் ஒருவரின் ஆண்டு வருமானம் ஓராண்டில் 2.5 லட்சம் ரூபாயைத் தாண்டும் போது, அவர் வருமான வரி கட்ட வேண்டி இருக்கும். பிஎஃப், லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத் தொகைகள், பிள்ளைகளின் கல்விச் செலவு, கல்விக் கடன் வட்டி போன்றவைக் கழிக்கப்பட்ட பிறகும் வருமானம் ரூ.2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்பட்சத்தில், வரிச் சலுகைக்கான முதலீட்டின் மீது பார்வையைச் செலுத்தலாம்.
பங்குச் சந்தையில் பணம்..!
இளைஞர்கள் என்கிறபோது அவர்கள் கணிசமாக ரிஸ்க் எடுக்கலாம். அந்தவகையில் அவர்கள் பங்குச் சந்தை சேமிப்பு திட்டமான இஎல்எஸ்எஸ் என்கிற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இதில் மாதம் 500 ரூபாய்கூட முதலீடு செய்ய லாம். மூன்றாண்டுகளுக்கு முதலீட்டை எடுக்க முடியாது. இதன்மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் மற்றும் மூன்றாண்டு கழித்து யூனிட்களை விற்கும்போது கிடைக்கும் மூலதன ஆதாயம் எதற்கும் வரி கட்டத் தேவை இருக்காது.
இதைவிடக் கூடுதலாக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும், பங்குச் சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்யும் இளைஞர்கள் ராஜீவ் காந்தி பங்குச் சந்தை சேமிப்பு திட்டத்தின் (ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம்) கீழ் வருமான வரிச் சலுகை பெற முடியும். ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய்க்குக் கீழ் உள்ளவர்கள் ரூ. 50,000 முதலீடு செய்தால், அதில் பாதி 25,000 ரூபாய்க்கு வரிச் சலுகை பெற முடியும். பட்டியல் இடப்பட்ட நிறுவனப் பங்குகளில் (குறிப்பாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் இடம் பெற்றிருக்கும்) முதலீடு செய்யும்போது இந்தச் சலுகை கிடைக்கும்.
இவை தவிர, முக்கியப் பங்குகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் பண்டுகள் செய்யும் முதலீட்டுக்கும் இந்தத் திட்டம் மூலம் வரிச் சலுகை பெற முடியும். இந்த முதலீட்டையும் மூன்றாண்டுகளுக்கு எடுக்க முடியாது.
ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்கிற வர்கள், சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் போக விருப்பத்தின் அடிப்படையில் அதிகபட்சம் அதே அளவுக்கு விபிஎஃப் பிடிக்கச் சொல்ல லாம். இந்தத் தொகைக்கும் வரிச் சலுகை உண்டு.
மேலும், ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ஐந்தாண்டு தேசிய சேமிப்புப் பத்திரம் (என்எஸ்சி – வட்டி 8.5%), 15 ஆண்டு பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (பிபிஎஃப்- வட்டி 8.70%) ஆகியவற்றிலும் முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம். இதில் பிபிஎஃப் முதலீட்டில் வட்டிக்கு வரி கிடையாது. எஃப்டி மற்றும் என்எஸ்சி முதலீட்டில் வட்டி வருமானத்துக்கு வரிச் செலுத்த வேண்டும். உங்களின் முதலீடு எப்போது தேவை என்பதைப் பொறுத்து முதலீட்டு வகையைத் தேர்வு செய்யவும்.
இப்படி முதலீடு செய்து வைத்திருக்கும் பட்சத்தில் 3-லிருந்து ஐந்து ஆண்டுகள் லாக்கின் முடிந்தபிறகு உங்களின் எந்தத் தேவைக்கும் இந்தத் தொகையை எடுத்துக்கொள்ள முடியும்.
வீட்டுக் கடன்!
வாடகை வீட்டில் இருந்தால், அந்த வாடகையை நிபந்தனைக்கு உட்பட்டு வரி கட்டும்முன் வருமானத்தில் கழித்துக்கொள்ள முடியும். அதேநேரத்தில், சொந்த வீடு வேண்டும்; கணிசமான தொகை வரியாக மிச்சமாக வேண்டும் என்று நினைக்கிற இளைஞர்கள் வீட்டுக் கடன் மூலம் வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கலாம். ஏற்கெனவே இடம் இருந்தால் அதில் வீடு கட்ட வீட்டுக் கடன் வாங்கலாம்.
 
இப்படி வாங்கும் கடனில் திரும்பச் செலுத்தும் கடனில் அசல் தொகையில் நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின் கீழ் ஓராண்டில் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெறலாம். திரும்பக் கட்டும் வட்டியில் ரூ.2 லட்சம் தனியாக வரிச் சலுகை (பிரிவு 24) கிடைக்கும்.
இளைஞர் ஒருவரால் தற்போது வாங்கும் சம்பளத்தில் நகரத்துக்குள் வீடு வாங்க முடியவில்லை. அவர் புறநகரில் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி, அதனை வாடகைக்குவிட்டால், திரும்பக் கட்டும் அசலில் ரூ. 1.5 லட்சம் மற்றும் முழு வட்டிக்கும் வரிச் சலுகை பெற முடியும்.
அதேநேரத்தில், வீட்டு வாடகையை வருமானமாகக் காட்டி இருப்பது அவசியம். இந்த இளைஞர் நகருக்குள் வாடகை வீட்டில் இருக்கும்பட்சத்தில் வீட்டு வாடகைபடி  சலுகை மூலமும் வரியை மிச்சப்படுத்த முடியும்.
மேல்படிப்புக்கு!
வரிதாரர் மற்றும் அவரது துணை (கணவன்/ மனைவி) மேல்படிப்புக்கு கடன் வாங்கினால், திரும்பக் கட்டும் வட்டிக்கு எட்டு ஆண்டுகள் வரிச் சலுகை பெற முடியும். இளைஞர்கள் இப்படிச் செய்யும்போது வரிச் சலுகை கிடைப்பதோடு, மேல்படிப்பு முடித்து அலுவலகத்தில் அடுத்தகட்டத்துக்கும் போக வழி கிடைக்கும்.
இளைஞர்கள் கொஞ்சம் திட்டமிட்டால் வருமான வரியை கணிசமாக மிச்சப்படுத்த முடியும். இது வரியைச் சேமிப்பதற்கான முதலீடு என்பதோடு, எதிர்காலத் தேவைகளான சொந்த வீடு, கார் போன்றவற்றை வாங்கவும், பிள்ளைகள் கல்வி, திருமணச் செலவு மற்றும் ஓய்வுக்காலத் தேவைக்கு உதவுவதாக இருக்கும்.
எளிமையான முதலீட்டு நடைமுறைகள்..!
வருமான வரி முதலீட்டுக்காக இளைஞர்கள் எங்கும் அலையத் தேவையில்லை. இருந்த இடத்திலேயே ஆன்லைன் மூலம்  முதலீட்டை மேற்கொண்டுவிட முடியும். இன்ஷூரன்ஸ் / மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்டுகளை போனில் அழைத்தால் போதும் அவர்கள், உங்கள் அலுவலகம் அல்லது வீடு தேடி வந்து முதலீட்டுக்கான அனைத்து வேலைகளையும் முடித்துத் தந்துவிடுவார்கள். இசிஎஸ் கொடுத்துவிட் டால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்தே முதலீட்டுக்கான பணம் சென்றுவிடும்.
ஏஜென்ட்டுகளிடம் எந்தத் திட்டம் சிறந்தது என்று கேட்பதைத் தவிர்ப்பது நல்லது. முதலீட்டுக்கான திட்டங்களை தேர்வு செய்வது நீங்களாக இருக்க வேண்டும்.

நன்றி -நாணயம் விகடன்