Wednesday, August 31, 2011

சொல்வதெல்லாம் உண்மை பாகம் 14

வாங்கருவா போல மீச வச்சு’ என்று பாரதியைப் பாடுவார்கள். இவரும் பாரதியைப்போல மீசை வைத்திருப்பவர்தான். ஆனால், பாரதியாக அல்ல; சாரதியாக தன் வாழ்க்கையைத் துவங்கியவர். லாரி ஓட்டத் தொடங்கி, பின்னர் லாரி புரோக்கராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். இவருடன் லாரி புரோக்கராக இருந்தவர்கள் இப்போது பஸ் புரோக்கராகத்தான் புரமோஜன் பெற்றுள்ளனர்.

ஆனால், இவரோ ஒட்டுமொத்த பஸ்ஸையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். தம்பி உடையான் படைக்கஞ்சான் என்பார்கள். இவருக்கும் அப்படித்தான். இவரின் தம்பிகளால்தான் எல்லா படைகளும் அஞ்சிக் கிடந்தன. அண்ணன், தம்பிகள் நால்வர் என்றாலும் முத்திரை பதித்த மூன்று பேர் மும்மூர்த்திகளாய் மகுடம் சூட் டிக்கொண்டனர். அரசர்கள் போலவே அவர்கள் வலம் வந்ததை அந்த மாவட்ட மக்களே அஞ்சி நடுங்கிப் பார்த்தார்கள். சோழ மன்னர்கள் ஆண்ட பூமியை இந்த மூவரும் சூழ நின்று ஆண்டார்கள்.

ஒற்றை வழக்குக்காக விசாரணைக்கு அழைத்துப்போக, வரிசையாக புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.பொய் வழக்கு என்ற புலம்பலெல்லாம் இவர்கள் விஜயத்தில் பொய்யாகிப் போகும் என்கின்றனர் உடனிருப்பவர்கள். தேர்தல் முடிந்து தலைமையைப் பார்க்கப்போனபோது, ‘மலையில் இருந்த கோட்டையை வளைக்காமல் விட்டுவிட் டாயே’ என, தலைமை கேட்க, மலைத்துப் போனார் இவர். அந்த அளவிற்கு வில்லங்கங்களை விதைத்து வைத்திருந்தார் இவர்.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவரின் மனசாட்சியிடம் பேசினோம். வாக்குமூலம் கிடைத்தது.

தமிழகத்தின் மையப்புள்ளி அருகில் உள்ள ஒரு நல்லூர்தான் எனது சொந்தக் கிராமம். அப்பா கதராடை அபிமானி. பக்கத்து ஊரில் ஒரு வட்டிக்கு பணம் வாங்கி, இர ண்டு வட்டிக்கு பணம் கொடுப்பார். அந்த ஒரு வட்டி விஷயத்தில்தான் ஏழு பேர் கொண்ட எங்கள் குடும்பமே வாழ்ந்து வந்தது. வறுமையின் அழுத்தத்தால் எஸ்.எஸ்.எ ல்.சி.க்கு மேலே என்னால் படிக்க முடியவில்லை. லாரி ஓட்டத் தெரியும். லாரியைப் பற்றியும் கொஞ்சம் தெரியும் என்பதால், லாரி புரோக்கர் தொழிலுக்கு வந்தேன். அங்கி ருந்த நவீன லாட்ஜின் வாசல்தான் என் வாசஸ்தலம். லாரிகளைப் பற்றிப் பேசியே வாழ்க்கையை நகர்த்தினேன்.

அங்கிருக்கும்போதுதான் கட்சிக்காரர்களின் அறிமுகம் கிடைத்தது. எங்கள் ஊரின் கிளைக் கழகச் செயலாளரானேன். பின்னர் எங்கள் மாவட்டத்தில் பவர்ஃபுல் புள்ளியாக இருந்த தர்மராஜாவின் அறிமுகமும் கிடைத்தது. அவர்தான் என்னை கட்சியின் பாதையில் காலூன்றி நடக்க வைத்தவர். பின்னர், ஒரு காலத்தில் நான் அவரை ஓரங்கட் டியதோடு அவரின் லாரிகளைக்கூட வளரவிடாமல் ஒழித்துக்கட்டியதெல்லாம் வேறு கதை. ஆனால், ஆரம்பத்தில் அந்த தர்மராஜரின் எடுபிடியாக ஒட்டிக்கொண்டேன். அப்போதெல்லாம் தலைமையைச் சந்திக்க சென்னைக்குச் செல்லும் தர்மராஜா, எழும்பூரிலிருக்கும் பயணிகள் விடுதியில்தான் தங்குவார். நான் அவரின் அறைக்கு வெளியே துண்டை விரித்துப் படுத்துக்கொள்வேன். அவர் கூப்பிட்டால் போய் டீ வாங்கி வந்து தருவேன்.

இப்படியாக அவருக்கு நான் என் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்க, அவருக்கும் மாவட்டத்தில் செல்லமான ராஜாவுக்கும் அரசியல் போட்டி இருந்து வந்தது. அந்த நேரத்தில் தனது கைத்தடிகளை வளர்த்து, தனது செல்வாக்கை பெருக்கிக்கொள்ள நினைத்த தர்மராஜா, எனக்கு எங்களூரில் போட்டியிட சீட் வாங்கித் தந்தார். அதுதான் எங்கள் மாவட்டத்தில் கட்சியை அழிக்க அவர் போட்ட பிள்ளையார்சுழி என்பது அப்போது அவருக்குத் தெரியாது. வெற்றி பெற்ற வேகத்தில் சுழல் விளக்கும் எனக்குத் தரப்பட்டது.

எனக்கு அங்கீகாரம் கொடுத்ததர்மராஜாவிடமிருந்து எனக்கு முன்னணியிலிருந்த ஒவ்வொருவரையும் கட்சியிலிருந்து ஓரங்கட்ட வைத்தேன். எங்கள் மாவட்டத்தைப் பொறுத்தவரை தர்மராஜா மற்றும் அவரின் வாரிசுகள், பூவானவர், கிருஷ்ணபாலன், தங்கமான ராசா, கீர்த்தி, செல்வமான ராசா, வாசி என ஜாம்பவான்கள் இருந்தனர். நான் தலையெடுத்த பிறகு அனைவரையும் கட்சியில் அடையாளம் காட்டப்படாமல் அழித்தேன். பரணி பாடியவர் மட்டும் முக்கிய வாரிசுடன் கொஞ்சம் ஒட்டிக் கிடந்தார். அந் தரங்கங்களை அவிழ்த்துவிட்டு அவரையும் ஓரங்கட்டினேன். அதன்பிறகு ஒட்டுமொத்த கட்சியையும் என் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தேன்.

எங்கள் கட்சியிலிருந்து புயல் புறப்பட்டபோது முக்கிய புள்ளிகள் அனைவரையும் கட்சித் தலைமைக்கு எதிராக திரட்டி சென்னைக்கு வண்டியேற்றியதே நான்தான். ‘எ ல்லோரும் போய்க்கிட்டிருங்க... நான் மூவிங்கில் ஏறிக்கிறேன்’னு சொல்லித்தான் அவர்களை அனுப்பினேன். நான் சொன்னதை நம்பி அந்த வண்டியில் ஏறியவர்கள் எல் லாம் போன வேகத்திலேயே காணாமல் போனார்கள்.

நானோ இங்கு தனிக்காட்டு ராஜாவாக முடிசூட்டிக் கொண்டேன். என் தம்பிகள் இருவரையும் இளவரசர்களாக மகுடம் சூட்டி வைத்தேன். ஒரு தம்பி ஜெயமான ராமரை கட்சியைக் கட்டுப்படுத்தவும், கட்டப்பஞ்சாயத்து செய்யவும், மற்றொரு தம்பி சூரியனை பொய்யான மதிப்பில் மிரட்டி வாங்கிய இடத்தில் உண்மையான மதிப்பில் வீடுகள் கட்டி வியாபாரத்தைப் பெருக்கவும் ஏற்பாடு செய்தேன்.

இப்போது என் வியாபாரம் பெருகி, இந்தியாவில் பல மாநிலங்களில் மட்டுமன்றி சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா என உலகில் பதினான்கு நாடுகளில் பரந்து விரிந்து கிடக்கிறது. நிலத்திற்கு அடியில் கிடைக்கும் கரியானாலும் சரி, பனைமரத்தில் கிடைக்கும் எண்ணெய்த் தொழிற்சாலையானாலும் சரி முக்கிய நகரங்களில் முக்கிய வியாபாரி நான்தான்.

அதேபோல் தென்ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியான போட்ஸ்லானாவில் வெட்டி எடுக்கப்படும் வைரத்திற்கு ‘பிளட் டைமன்ட்ஸ்’ என்று பெயர். அந்தப் பகுதியில் வைரங்களை வெட்டி எடுக்க பணியாட்கள் ரத்தம் சிந்தியும், உயிர்ச்தேசம் அதிகமாக ஏற்படுவதுமே அந்த வைரங்களுக்கு அந்தப் பெயர் வர காரணமாம். எனவே அங்குள்ள அரசு அந்த வைரங்களை வெட்டி எடுக்க அனுமதியளிக்கவில்லை. எனவே லோக்கல் மாபியா கும்பல்தான் அங்கு கள்ளத்தனமாக வைரங்களை வெட்டி எடு த்து வியாபாரம் செய்து வருகிறது.அந்தக் கூட்டத்துடன் என் உடன்பிறப்புகளுக்கு வியாபாரரீதியான தொடர்புண்டு. மும்பை சினிமாவில் சுமார் ஐநூறு கோடியை முதலீடு செய்யக் கொடுத்தேன். திருப்பிக் கேட்க, என் உடன்பிறப்புடன் என் முன்னாள் மீசைக்கார உதவியாளரும் சென்றபோது, மும்பையின் நிழல் உலக தாதா சோட்டா ராஜனால் மிரட்டப்பட்டு தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிவந்து சேர்ந்தார்கள்.

லோக்கலில் நாங்கள் சொத்து வாங்கும் ஸ்டைலே தனி. எங்கள் பகுதியில் தில்லையாடி நகரில் இஸ்லாமியர் ஒருவருக்குச் சொந்தமான நிலமும், வீடும் இருந்தது. அந்த அப்பா மூன்று மகன்களுக்கு பிரித்துக் கொடுக்கத் திட்டமிட்டார். அதில் கொஞ்சம் இழுபறி இருந்தது. அந்த விவகாரம் எங்கள் காதுக்கு வந்துவிட்டது. அந்த இடத்தைப் பதிவு செய்ய அந்த குடும்பம் ரிஜிஸ்ட்ரார் அலுவலகம் போனது. அங்கே அந்த ரிஜிஸ்ட்ரார் எங்கள் கம்பெனியிலிருந்து எழுதி சீல் போட்டு என்.ஒ.சி. வாங்கி வந்தால்தான் பதிவு செய்யமுடியும் என்று கூறிவிட்டார். எங்களிடம் வந்த அவர்களின் நிலத்தை எனது உடன்பிறப்பு அடிமாட்டு விலைக்குக் கேட்க, கொதித்துப் போன அவர்கள் இஸ்லாமிய இயக்கத்தவர்களை அழைத்துச் சென்று போராட்டம் நடத்தி இடத்தை பங்கிட்டு பதிவு செய்து கொண்டனர்.
அதேபோல் எங்களூரில் பரம்பரைப் பணக்காரரான முருகனின் பெயர் கொண்டவர், ஒரு ரைஸ் மில் வைத்து நடத்தி வந்தார். அவரை அழைத்து மிரட்டி அந்த ரைஸ் மில்லை கால் பங்கு விலைக்கு முடித்துவிட்டோம். அதிநவீன ரைஸ் மில்லை அதில் எழுப்பி, தினமும் முப்பது டன் நெல்லுக்கு மேல் அங்கு அரைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து அங்கு பெருகிவிட எதிரில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் பயந்து நடுங்கிப் போய் வருகின்றனர்.

அதேபோல் எங்கள் பகுதியில் இருக்கும் புனித சிலுவைப் பள்ளியில் ஒரு அட்மிஷனுக்கு என் உடன்பிறப்பு போன் செய்தது.அந்த தலைமையாசிரியை ஒரு கன் னியாஸ்திரி. அவர் சீட் தரமுடியாது என்று கூறியிருக்கிறார். அதற்கு என் உடன்பிறப்பு அந்த சிஸ்டரை ‘நீ பள்ளிக்கு வெளியில் வந்தால் உன் துணியை எல்லாம் கழற்றி, நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓட வைப்பேன்’ என்று மிரட்ட, அந்த விஷயம் கிறிஸ்தவர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் புனித கல்லூரிக்குச் சொந்தமான சுமார் நாற்பது ஏக்கர் நிலம் குடியான கிராமத்தில் இருந்தது. அந்த நிலத்தை எங்களுக்குத் தரும்படி கேட்டோம். அவர்கள் தரவில்லை. அந்த இடத்தை மடக்கிப் போட ஆட்களை ஏற்பாடு செய்தோம். அவர்கள் நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்கிவந்து காம்பவுண்டு சுவர் போட போலீஸ் உதவியுடன் வந்தனர். வந்த பாதிரியார்கள், உதவியாளர்கள் என அனைவரும் எங்கள் ஆட்களால் வெட்டப்பட்டனர்.அதுகுறித்து விசாரிக்கக்கூட எந்த போலீஸாரும் முன்வரவில்லை. காரணம், முன்னாள் உளவு எங்கள் பாக்கெட்டில் கிடந்ததுதான்.

அதேபோல் மரியன்னை தியேட்டரை எங்களுக்கு விற்கும்படி அதன் உரிமையாளர்கள் மிரட்டப்பட்ட விஷயம் லோக்கலில் படுஃபேமஸானது. ஊர்வசி என்ற பட் டப்பெயரால் அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகையின் பெயரில் பெரிய பட்டு ஜவுளி மாளிகை எங்கள் பகுதியில் இருக்கிறது. அதன் உரிமையாளரை சந்தித்த என் உட ன்பிறப்பு அதை தனக்கு விற்கும்படி கேட்டு மிரட்டியிருக்கிறார்.அவர் மதுரைப் புள்ளிக்கு கொஞ்சம் தொடர்புடையவர். இதுகுறித்து மதுரைப்புள்ளியிடம் பேசியிருக்கிறார் கடையின் உரிமையாளர். முந்நூறு கோடி ரூபாய் கேட்கும்படியும், முப்பது கோடி அட்வான்ஸ் என்றும் சொல்லும்படி அறிவுறுத்தியது மதுரை. அப்படியே கூறினார் உரிமையாளர். மறுநாள் காலையில் முப்பது கோடி அட்வான்ஸுடன் எங்கள் மக்கள் போக, அங்கே ஏற்கெனவே மதுரை கும்பல் காத்துக் கொண்டிருந்தது.அந்த முப்பது கோடியை வாங்கிக்கொண்ட மதுரை கும்பல் முக்கியப்புள்ளிக்கு போன் போட்டுக் கொடுத்தது. முப்பது போக மீதம் இருநூற்று எழுபதை மதுரையில் கொண்டுவந்து கொடு த்துட்டு பதிவு செய்துக்க என்று அங்கிருந்து கூறப்பட கப்சிப் என வந்துவிட்டனர் எங்கள் ஆட்கள். முப்பது கோடியை முதலில் கொடுத்துவிட்டு, ஐம்பது கோடியில் கடையை அமுக்கிவிடலாம் என நாங்கள் கணக்குப் போட, முப்பது போனதுதான் மிச்சம்.

தனது துணையின் பெயரில் ஒரு கம்பெனியை வைத்திருக்கிறார் உடன்பிறப்பு. அந்த கம்பெனிக்கு அவர்தான் எம்.டி. ஆனால், அவரோ எங்கள் மாவட்டத்துக்கே எம்.டி.யாகத்தான் நடந்துகொள்வார். கலெக்டரிடம் பேசினாலும் சரி, போலீஸ் கமிஷனரிடம் பேசினாலும் சரி - எம்.டி.ன்னு சொல்லித்தான் பேசுவார். அந்த எம்.டி. போட்ட ஆட்டத்தால்தான் இப்போது எம்ட்டியாகி நிற்கிறது கட்சி.

தில்லையாடி நகரில் உள்ள டென்னிஸ் கோர்ட்டில் அவர் சுற்றிச் சுழன்று பஞ்சாயத்து செய்யும் ஸ்டைலே தனிதான். கட்சியிலிருந்த எத்தனையோ உடன்பிறப்புகளை ஒழி த்துவிட்டு எனது இந்த உடன்பிறப்பை வளர்த்தேன்.இந்த உடன்பிறப்பு இப்போது கட்சியை ஒழித்துக்கொண்டிருக்கிறது.

ஆனாலும்,எனக்கு கீழுள்ள கட்சிக்காரர்களை நான் நன்றாகவே கவனித்துக்கொள்வேன். மணல், பார் போன்றவற்றிலிருந்து வரும் பணத்தை கட்சிக்காரர்களுக்கு பதவி வாரியாக கவரில் போட்டுக் கொடுத்தனுப்புவேன். எனவே யாரும் என்மீது தலைமைக்கு அதிகமாக புகார்கள் அனுப்புவதில்லை.

ஆனால், எனக்கு சுழல் விளக்கு கொடுக்கப்பட்ட புதிதில் ஆங்கிலம் அவ்வளவாக எழுதப்படிக்கத் தெரியாது என்பதால் பட்டம் படித்த என் உறவுக்கார பையனை எனக்கு உதவியாளராக வைத்துக்கொண்டேன். அப்போது அவருக்கு மாதச் சம்பளம் இருநூற்று அறுபது ரூபாய். ஏசக்குமரனான அவரோ, பின்னாளில் என்னைவிட உயரமாக வளர்ந்து, என்னைவிட பெரிய மீசையை வைத்துக்கொண்டு டெல்லியில் சுழல் விளக்கில் வலம் வருகிறார். அவருக்காக ராஜபாரதியிடம் கூறி நடிக்கும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததும் நான்தான். ஆனால் இன்று எனக்கு அரசியல் எதிரியாகிவிட்ட அவர்தான் என்னைப் பற்றி தலைமையிடம் சில குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் கூறி வருகிறாராம்.

அவரைப் பேசச் சொன்னாலும் அவரின் மனசாட்சியும் அதிகமாகப் பேசும். இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் எங்கள் ராஜாங்கம் அசைக்கப்படாமல் இருந்தது என்றால் அதன் முக்கிய காரணம் என் கிஸ்தி விநியோகம்தான்.வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி மீசை வைத்திருந்தாலும், திரை, வரி, கிஸ்தி என நான் வசனமெல் லாம் பேசியது இல்லை. ஆரம்ப காலத்திலிருந்து ஒலிமுரசு உட்பட எட்டுப் பேருக்கு என் காணிக்கையை சமர்ப்பித்தே காலத்தை ஓட்டி வந்தேன்.

எனக்கு முதன்முதலில் சுழல் விளக்கு கொடுக்கப்பட்டபோது திரையின் உச்சத்திலிருந்த பசுதமி எனக்கு பரிச்சயமாகிவிட்டார். கொஞ்ச நாட்கள் என்னோடு குடும்பம் நட த்திய அவருக்கு சில கோடிகளை கொட்டிக் கொடுத்தேன். தோல்வியடைந்து, நான் தொழில் பார்க்கும்போதும் என் எண்ணெய் வியாபார இடத்துக்கே அவர் தேடி வரத் தொடங்க, என் உடன்பிறப்பு ஜெயமானவரால் மிரட்டி அனுப்பப்பட்டார் அவர். அதேபோல் மாவட்ட சங்கீதம், அழகு நிலைய அன்னம் என அடிக்கடி பலர் என் பாதையில் கடந்து செல்வார்கள்.

அதேபோல் என் சூரிய தம்பியின் சேட்டைகளோ சொல்லி மாளாது. உலகப் பாதிரியார், முக்கிய வாரிசு, முக்கியதுணை, தேர்வாணையப்புள்ளி என பலரின் பணத்தை முதலீடு செய்ய வைத்து அப்படியே அமுக்கிப் போட்ட அறிவுஜீவி.

ஒருவரை வழக்குப் போட்டு உள்ளே தள்ளி ஜெயிலுக்குள்ளே போய் மிரட்டி சொத்தை எழுதி வாங்கி வரும் திறமையெல்லாம் ஜெயமான உடன்பிறப்புக்கு உண்டு.

ஆனால்,இப்போதோ எழுதி வாங்கிய சொத்துக்காக நாங்கள் சிக்கியிருக்கிறோம். அது மட்டுமின்றி ஏற்கெனவே குற்றப்பிரிவில் விசாரித்துவரும் இருவர் எரித்துக்கொல் லப்பட்ட இரட்டைக் கொலை வழக்கையும் நேர்மையாக விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

என்ன செய்வது விதைத்தாகிவிட்டது. அறுத்துத் தானே ஆகவேண்டும்.

நன்றி குமுதம் ரிப்போர்டர்

மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய தீர்மானம்

“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (30.8.2011) சட்டமன்றப் பேரவையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானத்தினை முன்மொழிந்து

ஆற்றிய உரை

014

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72-ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மேதகு குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்தப் பிரச்சனையில், தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்தும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் ஓர் அறிக்கையினை இந்த மாமன்றத்தில் நேற்று நான் அளித்தேன்.

அந்த அறிக்கையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை முதலமைச்சராகிய நானோ, தமிழ்நாடு அரசோ, மாநில ஆளுநரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாது என்பதை தெளிவுபட நான் கூறியிருந்தேன்.

மத்திய அரசு இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக்கூறு 257(1)-ன் படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 72-ன்படி, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்சனையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 161-ன் படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் உத்தரவிட்டதை சுட்டிக் காட்டினேன்.

இந்தச் சூழ்நிலையில், மேற்படி மூவருக்கும் தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட்டு விடும் என்று தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன. எனக்கும் இது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன.

எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

தீர்மானம்

""தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது."

முடிவுரை:

தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன்.“

Friday, August 26, 2011

சொல்வதெல்லாம் உண்மை பாகம் 13

தனக்கு சோறு கிடைக்குமா என்று பஞ்சம் பிழைக்க வந்த இவர் இன்று பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவிட்டார். பஞ்சத்துப் பொட்டு இல்லை. பரம்பரைப் பொட்டு என்று கட்சித் தலைமையால் அங்கீகரிக்கப்பட்டவரால் அடையாளங் காட்டப்பட்டவர் இவர். எட்டாவதைக்கூட எட்டிப் பிடிக்காத படிப்பு. ஆனால், டபுள் எம்.ஏ., வாங்கியவர்கள் எல்லாம் தொழிலில் இவருக்குப் பின்னால்தான் நிற்க வேண்டும். அந்தத் தொழிலையும் அழகாக செய்தவர். வெற்றியால் புகழ்பெற்றவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் இவரோ நெற்றியால் புகழ்பெற்றவர்.

ஐம்பத்தாறு வயதிலும் ஒருவரை அஞ்சா நெஞ்சனாக உருவாக்க இவரால்தான் முடியும். தமிழகத்தின் தெற்குப் பகுதிக்கு தலைவனாகக் காட்டிக் கொண்டவர். அமைச்சர்களனாலும் சரி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளானாலும் சரி இவருக்கு வணக்கம் வைத்த பிறகே அடுத்த படிக்கு போகமுடியும்.

ஒருவருக்கு விசுவாசமாகக் காட்டிக் கொண்டே அவரை வில்லங்கத்தில் மாட்டி வைக்கும் வித்தை தெரிந்தவர் இவர். காவல்துறையைக் கலங்கடித்தவர் இன்று காவல்து றையால் கலங்கிப்போய் நிற்கிறார். ஒருவரின் கைதுக்காக சொந்தக் கட்சிக்காரர்களே பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் என்றால் அது இவரின் கைதாகத்தான் இருக்க முடியும்.

ஆறு மணிக்கெல்லாம் கொடுக்கப் பட்ட அளவுச் சாப்பாட்டை வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தவரின் மனசாட்சி யுடன் பேசினோம். அவரின் வாக்குமூலம்...

வியாபாரத்திற்குப் பெயர் பெற்ற விருதுகளுக்குப் பக்கத்திலிருந்த சின்ன கிராமத்தில் நான் பிறந்திருந்தாலும் வியாபாரம் எதுவும் எனக்கு கைகொடுக்கவில்லை. பள்ளிப் படிப்பைத் துண்டித்துக்கொண்டு வெளியேறினேன். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண் என் சங்கமத்தை மறுதலிக்கவில்லை. பதினைந்து வயதுச் சிறுவனாய், கிழிந்த அரைக்கால் சட்டையுடன் லாட்டரி சீட்டுகளைக் கூவி விற்றேன். ‘‘நாளைய குலுக்கலில் கோடீஸ்வரராகணுமா? ஒரு சீட்டை வாங்கிட்டுப் போங்க’’ என நான் சத்தம் போட்டு அழைத்தது யாருக்கு கேட்டதோ இல்லையோ எனக்கு நன்றாகக் கேட்டது. பின்னர் பஸ்களுக்கு டிக்கெட் ஏற்றிவிட்டதில் கிடைத்த கமிஷன் என் வயிற்றுப் பசியைப் போக்கியது. கட்டட வேலைக்கு கூலியாள் அனுப்புவதிலும், தலா பத்து ரூபாய் கட்டிங் கிடைக்க கொஞ்சம் வளர்ச்சியடைந்து, வீடு வாடகைக்குப் பிடித்துக் கொடுக்கும் புரோக்கர் தொழிலையும் சைடில் செய்தேன்.

அப்போதெல்லாம் எங்கள் பகுதியில் பாக்கெட்டில் இரண்டு ரூபாய்க்கு சொர்க்கத்தை வைத்து வியாபாரம் செய்வார்கள். அந்த ஆந்திர தீர்த்தத்திற்கு அவ்வளவு கிராக்கி. நான் மாலையானதும் இரண்டு பாக்கெட்டுகளை வாங்கி என் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொள்வேன். கொஞ்சம் இருட்டியதும், அதைக் குடித்து முடித்து சாலையோரமாக நடப்பேன். எங்காவது யாராவது சீட்டாடினால் அங்கே நின்றுகொள்வேன். சீட்டாட்டம்தான் எனக்குப் பிடித்த விளையாட்டு, பிடித்த தொழில், என்னை வ ளர்த்த தொழில். சீட்டாட்டத்தில் நான் சூரப்புலி. லோக்கலில் ஆடும் மங்காத்தா, நடுத்தரத்தில் ஆடும் ரம்மி, பணக்காரர்கள் ஆடும் திரீகார்ட்ஸ் என எல்லா விளையாட்டும் அத்துபடி. ரம்மியிலும்கூட ராணி ஜோக்கராக வந்தால்தான் எனக்கு ராசி. என் ஜாதகம் அப்படி. பின்னர் லேசாக தொழிலை மாற்றினேன். என் வியர்வை நிறையப் பேரை அப்போது சந்தோஷமாக்கியது. கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை விரிவுபடுத்தினேன். எங்கள் பகுதிக்கு வரும் முக்கியஸ்தர்களுக்காக நானே லாட்ஜில் ரூம் போட்டு வை த்துவிடுவேன். வருபவர்கள் நேராக அறைக்கு வந்து சந்தோஷமாக ஓய்வெடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ரேட்டைப் போட்டு, பில்லை வசூலித்துவி டுவேன். இந்த அணுகுமுறை கொஞ்சம் பெயரையும், பணத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க அடுத்த படிக்கு அடியெடுத்து வைத்தேன்.

ஓடும் ரயிலில் ஒத்திகை பார்க்க ஓரங்க நாடகத்திற்கு வழிவகை செய்தேன். வழியில் ஏறி இடையில் இறங்கினாலும் இரவுப் பயணத்தில் அவர்களால் இளைப்பாற முடிந்தது. ரயில் சிநேகம் தொடராது என்பார்கள். ஆனால், எனக்கோ ரயில் சிநேகம்தான் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. மாற்றுக் கட்சியிலிருந்த செல்லமான அப்பாவிலி ருந்து கதருக்குள் மறைந்திருந்த காதலன் ஹீரோவரை பலரும் எனக்கு பரிச்சயமானார்கள்.

அந்தச் சூழ்நிலைகளில்தான் ஒருநாள் அந்தப் பரம்பரைப் பொட்டுக்காரரைப் பார்க்க முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவரை நெருங்கிச் செல்ல தூர நின்று காத்துக் கிடந்தேன். அவ்வப்போது டீ ஊற்றிக் கொடுக்க, எச்சில் டம்ளரை எடுத்துக் கழுவ, என்று அடிக்கடி அவர் அருகில் போகும் வாய்ப்பும் கிடைத்தது. மாலை நேரங்களில் பொழுதுபோக்காக அவர் சீட்டாடுவார். அப்போதெல்லாம் சீட்டுக்கட்டை எடுத்து கலைத்துக் குலுக்கி கொடுக்கும் என் லாகவம் அவரை லயிக்க வைத்தது. ஒரு கை கு றையும்போதெல்லாம் என்னை உட்காரச் சொல்லுவார். நான் இல்லாத நேரங்களில் அந்த ‘திலகம்’ போட்ட பையனைக் கூப்பிடுங்கப்பா என்று சொல்லி அனுப்புவார். அவர் வைத்த பட்டப் பெயர்தான். இன்று பிரபலமாகிப் போனது. ஆனாலும் அந்தப் பட்டப்பெயரைப் போட்டதற்கு நான் பத்திரிகைகளின் மீது பாயும் அளவிற்கு மமதை என் கண்ணை மறைத்தது. அவரிடம் வந்து போன கட்சிக்காரர்களின் அறிமுகம் என்னையும், என் தொழிலையும் கட்சிக்காரர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. அந்த அறிமுகம்தான் என்னை எதிர்முகாமுக்கு இழுத்துச் சென்றது. பரம்பரைப் பொட்டுக்காரர் கூட்டத்திலிருந்து பிரிந்து, பரம்பரைக் கூட்டத்தில் போய் சேர்ந்துவிட்டேன். ஏற்கெனவே அங்கு ராஜா, போர்ப்படைத் தளபதி, தாக்குதல், நோசார், காலி என பெருங்கூட்டம் அடைந்து கிடந்தது. அவர்களுக்கு ஆரம்பத்தில் டீ வாங்கிக் கொடுத்தது நான்தான். என்னிடமில்லாத குணம் ஒன்று அவர்களிடமிருந்தது. அது தைரியம். அவர்களிடமில்லாத பலம் ஒன்று என்னிடமிருந்தது அது என் தொழில். பலம் என்பதே பலவீனர்களை வீழ்த்துவதுதானே. நானும் வீழ்த்தினேன். நெருக்கமாக இருந்தவர்கள் எல்லாம் நகரத் தொடங்கினார்கள். என் வரவுக்காகவே அனைவரும் காத்திருக்கத் தொடங்கினார்கள். மாடாய் உழைத்து ஓடாய் இளைத்தவர்கள் எல்லாம் ஒதுங்கி நிற்க, கொள்ளைப்புற வழியாக வந்த எனக்கு கொடியசைத்து வரவேற்பு கொடுத்தார்கள்.

அனைவரையும் தள்ளிவிட்டு அவருக்கு அருகில் நெருங்கிவிட்டேன். அதிலிருந்து வசிய மை வைக்கப்பட்டவராய் என்னையே வலம்வரத் தொடங்கினார் அவர். இதைத் தான் நான் எதிர்பார்த்தது. மற்றவர்களுக்கு எந்த வேலையானாலும் என் மூலமாகவே கிடைக்கும்படி பார்த்துக்கொண்டேன். அவருக்கும் எல்லா வேலைகளும் என் மூலமாகவே நடந்தது.

எங்கள் ஊரில் ஜெர்மன் ஓட்டலில் நயன நடிகையை வரவழைத்து டிஸ்கஷனுக்கு ஏற்பாடு செய்தேன். இந்தச் செய்தி அரசல் புரசலாகப் பரவி அவரின் வீடு வரைக்கும் எட்டிவிட்டது. என்னுடனான பழக்கம் வேண்டாமென எத்தனையோ பேர் சொல்லியும் அவர் கேட்கவில்லை. ஒட்டுமொத்த அதிகாரத்தையும் என் கைக்குள் கொண்டு வந்தேன். கட்சிக்காரர்கள் எல்லாம் வாயடைத்துப் போனார்கள். அமைச்சர்கள் எல்லாம் அங்கலாய்த்துப் போனார்கள். சுகாதாரத்தை நூற்றியெட்டு என்றும், அறநிலையத்து றையை கோயில் என்றும்தான் கூப்பிடுவேன். அவரே ‘அண்ணன்’ என்றழைக்கும் முரட்டு பக்தரைக்கூட இனிஷியலைச் சொல்லித்தான் அழைப்பேன்.

எங்கள் பகுதியில் சிங்கிள் கடை பக்கத்திலிருக்கும் யோக நரசிம்மப் பெருமாள் கோயிலுக்கு நான் அடிக்கடி போவேன். அதிலிருந்துதான் எனக்கு யோகம்அடித்தது. எனவே அந்தப் பெயரிலேயே நிறுவனங்கள் தொடங்கினேன். சுமார் இருநூறு டிப்பர் லாரிகளை வங்கி சாலையில் திரியவிட்டேன். இப்போதும்கூட அரசு வேலைகளுக்கு எனது லாரிகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத மறுப்புப் பரம்பரையில் வந்த அவரையும், அவரது குடும்பத்தையும் மேற்படி கோயிலுக்கு அழைத்துச் சென்று கும்பாபிஷேகம் செய்ய வைத்தேன். அந்தக் கோயிலிலிருந்துதான் அவர் தனது பிரசாரத்தைத் தொடங்கினார் என்றால் எனது தொழிலின் மகிமையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நான் அங்கு நெருங்கிய ஆரம்ப காலத்தில் அந்தப் பகுதியில் ஏற்கெனவே தொழில் செய்து வந்த முக்கிய புள்ளி ஒருவரை தூக்கியெறிந்தேன். ‘வா’ என்று அழைத்தாலே ‘சு’ என்று சிக்னல் செய்யும் அந்தப் புள்ளி ஆரம்ப காலத்தில் என்னை போலீஸ் ஸ்டேஷன்களில் போட்டுக் கொடுத்து வந்தார். அதனால், தள்ளாடும் குளத்திலும், திடீ ரென உருவான நகரிலும் என்னை அந்த வழக்குகளுக்காக தூக்கிக்கொண்டு போய் விசாரணை நடத்தினார்கள். அப்போதெல்லாம் கான்ஸ்டபிளைப் பார்த்தாலே கால் வழியே நீர் கசியும் எனக்கு கமிஷனர்களைக்கூட வரச் சொல்லிப் பார்க்கும் காலம் வந்தது. தென்மண்டலத்தின் ஒட்டுமொத்த போலீஸ் டிபார்ட்மெண்ட்டையும் என் கைக்குள் கொண்டு வந்தேன். எவ்வளவு உயர் பதவிகளானாலும் இடமாற்றம், ஆள்மாற்றம், உருமாற்றம் என ஏற்படுத்தித் தந்தேன். இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்ஃபருக்கு மூ ன்று லட்ச ரூபாய் என்றால் டாக்டர்கள் டிரான்ஸ்ஃபருக்கு ஒரு லட்சம். எந்தத் துறையானாலும், எந்த போஸ்டிங்கானாலும் ரேட்டை நிர்ணயித்தேன். கோடிகளில் பணம் குவியத் தொடங்கியது. ஏற்கெனவே அவருக்கு நெருக்கமாயிருந்தவர்கள் எல்லாம் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து என் மூலமே காரியங்களை நடத்திக் கொண்டனர்
போலீஸ் வட்டாரத்தில் எனக்கிருந்த தொடர்புகளால் நான், தலைகால் புரியாமல் ஆடினேன். ஒருமுறை என் வீட்டில் வேலை செய்பவர் காரை எடுத்து வந்தார். அதில் முக்கிய நபர்களும் இல்லை. அப்போது ட்ராஃபிக் ஜாமாக இருந்ததால் சாலையில் நின்று போக்குவரத்தை சரிசெய்து வந்த பெண் எஸ்.ஐ. எனது காரை வேறு பக்கம் போகும்படி கூறினார். ‘இது திலகத்தின் கார்’ என்று டிரைவர் கூற, ‘யாருடையதாக இருந்தாலும் வேற பக்கம் எடுத்துனு போங்க’ என்று அவர் கூறிவிட்டார். அந்தச் செய்தி உடனே எனக்கு வந்தது. உடனே உயரதிகாரிக்கு போன் போட்டு அந்த எஸ்.ஐ.யை ஒரு வாரத்திற்கு தினமும் காலையும், மாலையும் என்னை வந்து சந்தித்து சல்யூட் அடிக்கும்படி தண்டனை கொடுத்தேன். இப்போது அதை அறிந்த விசாரணை அதிகாரிகள் என்மீதான எஃப்.ஐ.ஆரை அந்தப் பெண் எஸ்.ஐ.யை வைத்துதான் எடுத்துள்ளர்கள். அதேபோல் உயர் துணை பதவியிலிருந்த வெற்றி ஸ்ரீ என்ற அதிகாரியை மடக்கிப் போட்டேன். அவர் அடிக்கடி வந்து என்னை சந்தித்துவிட்டுப் போவார். இந்த நெருக்கம் ஒட்டுமொத்த காக்கிகளையும் கலக்கிப் போட்டது. உயரதிகாரிகள்கூட பதவி மாற்றத்திற்கு அந்த வெற்றியைத் தேடி ஓடிய காலமது.

அதேபோல் நில வழக்கில் கைதாகி, கொலை வழக்கில் விசாரணை சென்று கொண்டிருக்க, ஏற்கெனவே தற்கொலையாக முடிக்கப்பட்ட வழக்கு ஒன்றைப் பற்றியும் தகவல் கள் திரட்டுவதாகக் கேள்வி. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் கொஞ்சமும் தொடர்பே இல்லாத ஒரு கட்சிக்காரர் வீட்டில் தூக்கில் தொங்கினார் ஒரு நர்ஸ். கட்சிக்காரர் வீட்டில் ஒரு முதியவரை பார்த்துக்கொள்ளச் சொல்லி அந்த நர்ஸை வேலைக்கு வைத்ததாகவும், காதல் விவகாரம் காரணமாக அந்த நர்ஸ் தற்கொலை செய்துகொண் டதாகவும் அப்போது போலீஸார் கூறிவிட்டனர். ஆனால், இப்போதோ காதல் விவகாரமென்றால் அந்த நர்ஸ், அவரின் வீட்டிற்குப் போய் தற்கொலை செய்து கொண்டி ருக்கலாம். மிகவும் அழகாக இருந்த அவர் கடத்தி வரப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்று பட்பட்டென கேள்விகளை வீசி விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் பூட்டுக்குப் பேர் போன நகரில் நூறு ஏக்கர் நிலத்தை மடக்கிப் போட்டு அதை எங்களூரில் எலெக்ட்ரிக் கடை வைத்திருக்கும் ஒரு கிறிஸ்துவரின் பேரில் பதிவு செய்து வைத்திருப்பதையும் அந்த நிலத்தில் ஃபார்ம் அவுஸ், பால் பண்ணை அமைத்துள்ளது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆட்சியில் நான் வீட்டிலிருந்து புறப்பட்டால் போகும் இடம்வரை போலீஸார் மைக்கில் அறிவித்து, டிராஃபிக்கை கிளியர் செய்து வைப்பார்கள். இப்போது போவதும், தெரியாமல் வருவதும் தெரியாமல் இழுத்துச் செல்கின்றனர்.

நான் செய்த விஷயங்களில் பாதி அவருக்குத் தெரிந்தாலும் பாதி அவருக்குத் தெரியாது. நானே தன்னிச்சையாகப் போட்ட ஆட்டம்தான் அதிகம். ஆனால், அந்த விஷயங்களிலும் இப்போது அவருக்குச் சேர்த்தே சிக்கல் ஏற்படும் என்ற நிலை. தென்மாவட்டங்களில் கட்சி அதிகமாகத் தோற்றதற்கும், அதிலும் எங்கள் மாவட்டத்தில் அதிக வித்தியாசத்தில் தோற்றதற்கும் எனது ஆட்டமும் முக்கியப் பங்குதான்.

ஆரம்பத்தில் பஜ்ஜி, கைலி என்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்ட நான், இப்போது திலகத்தின் பெயரால் அழைக்கப்படுகிறேன். ஆனாலும், என்கவுன்ட்டர் பயம் எ ன்னை ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது.

நன்றி குமுதம் ரிப்போர்டர்

சொல்வதெல்லாம் உண்மை பாகம் 12

சாதாரணமாக வாழ்க்கையைத் துவங்கும் பலரில் சிலர் மட்டுமே உழைத்து சம்பாதித்து உயர்கின்றனர். சிலரோ மற்றவர்களைச் சுரண்டி வளர்ச்சியடைகின்றனர். இவர் உழைத்ததும் இல்லை, சுரண்டியதுமில்லை. மற்றவர்களை சுரண்ட வைத்து வளர்ந்தவர். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த இவரின் இன்றைய சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். சிக்கிம், பூட்டான், மேகாலயா என இவரின் பிடியில் சிக்கித் தவிக்காத குடும்பங்கள் இல்லை.

சில நடுத்தர குடும்பங்களையும் நடுத்தெருவுக்கு இழுத்து வந்த பெருமை இவருக்கு உண்டு.

வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்குக் கேடு என விளம்பரம் செய்யவேண்டிய அளவிற்கு ஆபத்தானதுதான் இவரது தொழிலும். எத்தனையோ ஏழைப் பெண்களின் கண்ணீ ரும், சாபமும் இவருக்கிருக்கிறது. சிலர் செய்யும் தொழிலில் சில ஏமாற்று வேலைகளைச் செய்வார்கள். ஆனால், இவரோ ஏமாற்று வேலையையே தொழிலாய் செய்பவர்.

அதற்கு சில அரசாங்கமும் இவருக்கு அனுமதி கொடுத்திருப்பதுதான் சோகத்தின் உச்சம்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களை எந்த நேரத்திலும் சந்திக்கும் வல்லமை படைத்த இவர், இப்போது குடும்பத்தினரைக்கூட பார்க்கமுடியாத நிலை.

செய்த பாவத்தைத் தொலைக்க இப்போது சட்டத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார். அவரின் மனசாட்சியைப் பேசச் சொன்னோம். இதோ அவரின் வாக்குமூலம்:

நான்கு மாதம் முன்புவரை இளைஞனாக ஓடித் திரிந்த என்னை இப்போது ஒரு முதியவனைப்போல் முடக்கி வைத்திருக்கிறார்கள். என் வரவுக்காக எத்தனையோ கதவுகள் காத்திருந்த காலம் போய், இப்போது நான் கம்பிக் கதவுக்குப் பின்னால் காத்திருக்கிறேன்.

வாழ்க்கையில் வெற்றி பெற தவறான வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தவறான வழியிலே வாழ்க்கையை அமைத்துக்கொண்டவன் நான்.

பர்மாவில் பிழைக்கச் சென்ற தமிழ்க் குடும்பம் எங்களுடையது. நான் பிறந்தபோது எனது தந்தை பர்மாவில் ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கினார். அதில் ஆயிரம் டாலர் பரிசுத் தொகை விழுந்தது. அதுதான் எங்கள் குடும்பம் முதலில் பார்த்த அதிகப் பணம். அதன்பிறகு எங்களின் குடும்பத் தொழில் லாட்டரிப் பக்கம் திரும்பியது. அந்த நாட்களில் பர்மாவில் கள்ள லாட்டரிகள் கிளை விரித்துப் பரவ அந்நாட்டின் பொருளாதாரமே வீழ்ச்சியடையும் நிலை. அப்போது எனக்கு பன்னிரண்டு வயது. நாங்கள் குடும்பத்துடன் பர்மாவை விட்டுப் புறப்பட்டு இந்தியாவிற்குள் நுழைந்தோம். அருணாசலப் பிரதேசத்தில் ஒரு அட்ரஸை உருவாக்கி குடியமர்ந்தோம்.

அங்குதான் எங்களின் வியாபாரப் பார்வை ஆரம்பத்தில் விழுந்தது. லோக்கலிலிருந்த சின்னச் சின்ன அதிகாரிகளை சரிக்கட்டிவிட்டு எங்களின் புதிய சாம்ராஜ்யத்திற்கு ராஜபாட்டை அமைத்தோம். கொஞ்ச நாட்களில் நானே நேரடியாகக் களம் இறங்கினேன். வியாபாரத்தைப் பெருக்க அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தினேன். வியாபாரம் ஓஹோவென உயரத் தொடங்கியது.

இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களான சிக்கிம், பூட்டான், மேகாலயா, இமாசல்பிரதேசம், அருணாசலப் பிரதேசம் என எல்லா மாநிலங்களிலும் பறந்து பறந்து வியாபாரம் செய்தேன். பல இடங்களில் அரசாங்கமே என் வரவுக்காகக் காத்திருந்தது. அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிக்காக அவர்கள் லாட்டரி டிக்கெட் விற்பனையை நடத்தி வந்தார்கள். நான் அவர்களிடம் நேரடியாகப் பேசி முடித்து ஒட்டுமொத்த குலுக்கல் வியாபாரத்தை எனக்கே வரும்படியாக செய்தேன்.

ஒரு மாநிலத்தில் ஒரு குலுக்கலுக்கான பம்பரில் சுமார் ஐம்பது சீரியலில் தலா ஒரு லட்சம் டிக்கெட்டுகளை அடிக்க அனுமதி வாங்கிக்கொண்டு ஒவ்வொரு சீரியலும் தலா பத்து லட்சம் டிக்கெட்டுகளை அடித்து விற்பனை செய்வேன். அதாவது, இந்த வியாபாரத்தில் அரசாங்கத்தைவிட நூறு மடங்கு அதிக லாபம் எனக்கே கிடைக்கும். அதும ட்டுமின்றி முதல் இரண்டு பரிசுகளும் மற்றவர்களுக்கு விழாதபடியும் பார்த்துக்கொள்வேன்.

கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தை தமிழகம், கேரளா, ஆந்திரா என தென்இந்திய மக்களுக்கும் திருப்பினேன். கோவையில் குடோன்கள் அமைத்து, சீட்டுக்களை சீக்ரெட்டாக அடுக்கி வைத்தேன்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு ஆட்களை நியமித்து அந்தந்த மாநிலத்தின் பொறுப்புகளை ஒப்படைத்தேன். அமைச்சர்களை சரிக்கட்டி ஆர்டர் எடுக்கவேண்டியது அவர்களின் வேலை. முதல்வர்களை நான் கவனித்துக்கொள்வேன். அதன்படி சிக்கிமுக்கு சூரியன், நாகாலாந்துக்கு நிலவழகன், அருணாசலத்துக்கு பிரேம் போட்ட கண் ணாடி, பூட்டானுக்கு கிருஷ்ணபிரான், கேரளாவுக்கு மறைந்த பாரதப் பிரதமரின் பெயர் கொண்டோரை போஸ்டிங் போட்டுக் கொடுத்துவிட்டேன். கம்ப்யூட்டரில் இணைந்த மனோபாவம் கொண்டவரை பிரிண்டிங் இன்சார்ஜாக போட்டு வைத்தேன். எந்த மாநிலச் சீட்டாக இருந்தாலும் இரண்டு நிமிடங்களில் போலியைத் தயாரித்து வருவதில் கி ல்லாடிகள். இவர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தவும், அரசியல் வெளிவிவகாரங்களைப் பார்க்கவும் விசுவாச மானவர்களை வேலைக்கு வைத்தேன். இவர்களுக்குக் கீழ் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர்.

அதாவது, தனியாக ஒரு தலைமைச் செயலகம் இயங்கி வருவதைப்போல சீட்டுக்களின் தலைமையிடமாக எங்களின் சீட்டிங் குடும்பமே இயங்கியது.
அஸ்ஸாம் மாநிலத்தின் டெல்லி கதர்ப் புள்ளியான மணியானவருடன் சேர்ந்து அம்மாநிலத்தில் இருபத்தைந்தாயிரம் கோடி கொள்ளையடித்ததைக் கேட்டு ஒட்டுமொத்த அரசாங்கமும் அதிர்ந்துபோனது. அதேபோல் நாகாலாந்தில் நான் மட்டுமே தனியாக ஐயாயிரம் கோடி ரூபாய் சுருட்டிய விவகாரத்தில் பல கட்சித் தலைவர்களுக்கு மூச்சு நின்றுபோனது. அதுமட்டுமின்றி பஞ்சாபில் ஒரு மாதத்தில் மட்டும் நான் பதின்மூன்று கோடி ரூபாயை கள்ள வியாபாரத்தில் கல்லா கட்டியதாக ஒரு அறிக்கை வெளிவந் தது. ஆனாலும் என் வியாபாரம் எந்தத் தடையுமின்றி நடந்துகொண்டிருந்தது.

ஆனாலும், மேற்கு வங்கம் மட்டும் அடிக்கடி என்னிடம் முரண்டு பிடித்தது. அங்கு நிதித்துறையைக் கவனித்த சுழல் விளக்கு, என் கள்ள வியாபாரத்தால் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக, வியாபாரத்திற்குத் தடை செய்து என்னைக் கைது செய்து சிறையில் வைக்கவேண்டும் என்று பலமுறை கூறிவந்தார்.

ஆனாலும் மற்ற மாநிலங்களில் நடந்த வியாபார வேகத்தில் இதையெல்லாம் நான் பெரிதுபடுத்தவில்லை. காரணம், இந்தியா முழுவதிலும் ஒரு நாளைக்கு ஒன்றரைக் கோடி சீட்டுகளை என்னால் விற்க முடிந்தது. அதாவது, ஒரு ஆண்டுக்கு பதின்மூன்றாயிரம் கோடி ரூபாய் எங்கள் கம்பெனியின் டர்ன் ஓவர்.

எனது தொழிலுக்குப் போட்டியாக தமிழகத்திலும் சிலர் முளைக்கத் தொடங்கினார்கள். மதுரையிலிருந்து ஒரு பிரமுகரும், கதராடைப் போட்ட இஸ்லாமியப் பிரமுகர் ஒரு வரும் களத்தில் குதித்தனர். அதில் இஸ்லாமியப் பிரமுகர் ஆயிரம் கோடிகளை அமுக்கிக்கொண்டு தொழிலிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

நானோ, தொழிலை விட்டபாடில்லை. எனக்கும் அரசியலில் நுழையலாம் என்ற ஆசையிருந்தது. ஆனால், இந்தியா முழுக்க எத்தனையோ மாநிலங்களில் என்மீது வழக்குகள் காத்துக் கிடக்க, எனக்கு அரசியல் அங்கீகாரம் தருவதற்கு யாரும் தயாராக இல்லை. ஆனாலும், இருக்கவே இருக்கிறது நம் தமிழ்நாடு என இங்கே அரசியல் பிரவேசம் செய்யக் களம் இறங்கினேன். ராஜாங்க சபையில் என்னை அமர வைப்பதாக ஆரம்பத்தில் கூறினார்கள். அதன்பிறகு அந்தப் பேச்சு முடிந்துவிடவே ஒரு மது பானத் தொழிற்சாலைக்கு அனுமதி வாங்க முயற்சி செய்தேன். அதன் முன்னோட்டமாகத்தான் அரசியல் முக்கியப் புள்ளியை அடிக்கடி சந்தித்தேன். சினிமா பற்றிப் பேசினாலே சிலிர்த்துப் போகும் அவரிடம் சினிமா பற்றியே அடிக்கடி பேசினேன். அவரை இளைஞனாக வடிவமைக்கத் திட்டமிட்டு இறங்கினேன். பல கோடிகளை செலவழித்து பிரமாண்டப்படுத்தினேன். என்னாலேயே இரண்டாவது முறை பார்க்கமுடியாத அதை, அனைவராலும் பாராட்டப்படுவதாகப் பேச வைத்தேன்.

அப்போதுதான் சினிமா உலகம் என்னை கண் சிமிட்டி அழைத்தது. அந்த மல்லிகை நடிகையின் மகத்துவம் அறிந்து மறக்காமல் அவரை அழைத்து வந்தேன். வயது வரம்பின்றி அவர் இயல்பாய் நடித்தார்.

பல வழக்குகளில் தொடர்புடைய என்னுடன் மேடையேற வேண்டாம் என பலர் சொன்னதையும் பொருட்படுத்தாமல் அந்த முக்கியஸ்தர் எனக்கு முக்கியத்துவம் தந்தார். மொழி விழாவிலும் குழு ஒன்றில் உறுப்பினராய் என்னை சேர்த்துவிட்டார்கள். அந்தக் கல்வியாளர்கள் மத்தியில் ஒரு கள்ள வியாபாரியாக நானும் இருந்தேன்.

தேர்தல் நேரத்தில் கொங்கு மண்டலச் செலவை கவனித்துக்கொள்ளச் சொன்னார்கள். இரண்டு மாவட்டத்திற்கும் அள்ளியிறைத்தேன். முடிவுகளோ நாங்கள் நினைத்ததற்கு மாறாக அமைந்தது.

ஏற்கெனவே எங்களின் வியாபாரத்தைத் தடுத்தவர்களே அரியணையில் அமர்ந்தார்கள். அவர்களுக்கும் நான் அரசியல் தூது விட்டுப் பார்த்தேன்.

பாதாளம் வரைக்கும் பாயும் பணம் இந்த விஷயத்தில் தோட்டத்து வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.

எந்தச் சூழ்நிலையிலும் எங்களை மன்னிக்க அவர்கள் தயாராக இல்லை. எத்தனையோ குடும்பங்களின் அழிவிற்குக் காரணமாயிருந்த என் வியாபாரத்தையும், என்னையும் காப்பாற்றக் கூடாது எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார்கள். விதி விஸ்வரூபமெடுத்துவிட்டது. என் மீதான வழக்குகள் ஒவ்வொன்றாக இப்போது சேர்க்கப்படுகிறது. ராஜ உபசாரத்தோடு வலம் வந்த நான் இப்போது சுத்தமான காற்றுக்கும், சுவையான உணவுக்கும் லாட்டரி அடித்துக் கொண்டிருக்கிறேன்.

நன்றி குமுதம் ரிப்போர்டர்

Thursday, August 25, 2011

நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள் :ஆய்வு


மற்றவர்கள் குறித்து ஊர் வம்பு பேசுவது பெண்களின் பிறவிக் குணம். அது எந்த காலத்திலும் மாறாது. சமீபத்தில் இது குறித்த ஆய்வு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டது. அதில், நாள் ஒன்றுக்கு 298 நிமிடங்கள் அதாவது 5 மணி நேரம் பிறரை குறித்து பெண்கள் ஊர்வம்பு பேசுவது தெரிய வந்தது. குழந்தைகள் பற்றியும்

'நானே தூக்கில் ஏறும் கடைசி ஆளாக இருக்கட்டும்!''



ழப் படுகொலைகள் உண்​டாக்கிய துயரமே தமிழக மனங்​களில் ரணமாக வடியும் நிலையில், தூக்குக் கயிறு வடிவில் மீண்டும் துரத்தத் தொடங்கி இருக்கிறது துயரம். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் மரணத்தின் நிழலில் நிற்கிறார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தளர்த்தக்கோரி இவர்கள் அனுப்பிய கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூவரை​யும் காப்பாற்றக் கோரி கட்சி வேறு​​பாடுகளைக் கடந்து தமிழகம் முழுக்க உணர்வும் உருக்கமுமான போராட்​டங்கள் நடக்கின்றன. மரணத்தின் துரத்தலில் வாடும் அந்த மூவரின் மனப் போராட்டங்களையும் அறிய முடிவெடுத்​தோம். வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம். அதன் தொகுப்பு இங்கே...

முதலில் பேரறிவாளன்...

''எந்த நேரத்திலும் தூக்கு அறிவிப்பு வரலாம் என்கிற நிலையை எப்படி எதிர்கொள்​கிறீர்கள்?''

'முதலில் எங்களுக்காகப் போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மரணத்தின் நிழலில்தான் நிற்கிறோம். கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் மரண நிழல் எங்களைப் பெரிதாக சூழ்ந்திருக்கிறது. மக்களின் ஒருமித்த கைகோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது. 19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்!''

''தமிழக மக்களிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்து?''

''அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனை​வரும் எங்களுக்காகப் போராடுவது எங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது. இன உணர்வு மட்டும் அல்லாது, மனிதநேயமும் ஒருசேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது. பொதுமக்களும் அனைத்துத் தலைவர்களும் ஒரே அணியில் நின்று தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் எங்களின் விடிவுக்கு வழி செய்வார். அவருடைய குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத்தெரியும்!''

''தமிழக முதல்வரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?''

''மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அம்மா, மரணம் கோரப்பசியோடு துரத்தும் இந்த நேரத்தில் மட்டும் அல்ல... 20.07.07 அன்றே உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். 'வழக்கில் சிக்குபவர்களுக்கு வசதி இல்லை என்றால், அவர்களின் தரப்பு நியாயம் அம்பலம் ஏறாமல் போய்விடும். அத்தகைய குறைபாடு கொண்ட கட்டமைப்புதான் இன்றைக்கு நிலவுகிறது. என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் இத்தனை நாள் மரணத்தின் மடியில் படுத்துக் கிடப்பவனாகக் கேட்கிறேன்... தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்!’ என அந்தக் கடிதத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன். பிறருக்கு முன்னுதாரணமான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருகிற சக்தி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது.மனசாட்சியின் கண்ணீர்க்குரலாகச் சொல்கிறேன்... எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை. சித்திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும் அம்மா!''

''கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா?''

''99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் என்னைப் பார்க்க வந்தார். 'வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டார். 'தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன்’ எனச் சொன்னேன். காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் ஒவ்வொரு நிமிஷமும் எத்தகையக் கொடூரமானது என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான். வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க இப்போது ஆசையாக இருக்கிறது. சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது. எங்​களுக்காகப் போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்பத் தோன்றுகிறது. ஆனால், ஏற்கெனவே பரப்பிய பழிகள் போதாது என 'சாத்தானின் படைகள்’ என்கிற புத்தகத்தை நான் அச்சடித்ததாக சிலர் இப்போது கிளப்பிவிடுகிறார்கள். அந்தப் புத்தகத்தை யார் உருவாக்கியது என்பது சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் என்னை இட்டுக்கட்டுவது ஏன்? ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒருவேளை மரணம் எங்களை வென்றுவிட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது... தூக்குக்குப் பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்!''


அடுத்து முருகன்...

''தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?''

''மரணத்தைவிட மரணத்தின் நாளுக்காகக் காத்திருப்பது கொடுமையானது. அதை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் இந்த சூழலில், மக்களின் ஆதரவுதான் எங்​களை நம்பிக்கையோடு நிமிர வைக்கிறது! தனித்தனியான போராட்டங்களை முன்னெடுக்​காமல், எங்களுக்காக எல்லோரும் ஒருமித்து நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. இதர மாநிலங்களில் தண்ணீர் பிரச்னைக்குகூட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகத் திரளுகின்றன. எங்களின் கண்ணீர் பிரச்னைக்கும் அதேபோல் அனைத்துக் கட்சிகளும் திரண்டு, முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். மூன்று உயிர்களுக்காக மொத்த தமிழகமும் கைகோத்து நின்றதை காலக் கல்வெட்டு தமிழனின் உயர்ந்த உணர்வாகப் பதிவு செய்ய வேண்டும்!''

''தமிழக மக்களிடம் ஏதாவது சொல்ல விரும்பு​கிறீர்களா?''

''எங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மரணத்துக்குப் பயந்து இந்த வார்த்தை​களைச் சொல்லவில்லை. எங்களின் கவனத்துக்குத் தெரியாமல் நடந்த சம்பவத்துக்கு இத்தனை வருட சிறைவாசமே பெரிய கொடுமை. ஒப்புதல் வாக்குமூலத்தில் நாங்களே பல விஷயங்களை ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களே தயாரித்து எங்களை அதில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அதற்காக அவர்கள் செய்த சித்ரவதைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மரணக் கொட்டடியின் நெருக்கடிகள் எங்களுக்குப் பழகிப்போனாலும், என்றைக்காவது ஒருநாள் வெளியே வருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. உறவுகளின் உணர்வுகளால் அந்த நம்பிக்கைப் பலப்படுகிறது. ஒரே வார்த்தையில் எங்களின் உணர்வைச் சொல்வதானால்.... நன்றி!''

அடுத்து ம.தி.சாந்தன்...

''ராஜீவ் கொலை விசாரணையில் நிறைய குளறு​படிகள் நடந்ததாகச் சொல்கிறார்களே...?''

''கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம். இந்த வேதனையைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும்.

கொழும்பு வழியாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்பதாலேயே நான் இந்தியாவுக்கு வந்தேன். இலங்கை அரசு தந்த உண்மையான பாஸ்போர்ட்டுடன் வந்தேன். அதை சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளது. ராஜீவ் போன்ற பெரிய தலைவரைக் கொல்ல வருபவன் தன்னைப் பற்றிய தகவலைச் சொல்லும் உண்மையான பாஸ்போர்ட்டுடன் வருவானா?

நான் சுமக்கும் மரண தண்டனைக்குப் பெயர் குழப்பமும் ஒரு காரணம். இந்த வழக்கில் கைதாகி விடுதலையான இரும்பொறை என்பவரை நான் ராஜீவ் இறப்பதற்கு முன்னர் சந்தித்ததாகவும், 15 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும், 'முக்கியமான ஒரு நபரைக் கொல்லப் போகிறோம்’ என்று சொன்னதாகவும் மரண தண்டனையை உறுதி செய்தபோது மாண்புமிகு நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் கூறுகிறார். ஆனால், மாண்புமிகு நீதிபதி வாத்வா அவர்கள் அது இறந்துபோன எதிரி திருச்சி சாந்தன் என்கிறார். இன்னொருவர் சொன்னதை நான் சொன்னதாகச் சொல்லி என்னைத் தூக்கில் நிறுத்தப் போகிறார்கள்.

'நானும் சிவராசனும் நளினியை மிரட்டி இந்த​சதிக்கு உடன்பட வைத்தோம்’ என்று நீதிபதி தாமஸ் சொல்கிறார். ஆனால், நீதிபதி வாத்வா, 'ராஜீவ் இறந்த அடுத்த நாள்தான் நளினியை சாந்தன் அறிவார்’ என்கிறார்.

நான் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவில் முக்கியமான ஆள் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக நீதிபதி தாமஸ் தீர்ப்பில் சொல்கிறார். இவை எதற்கும் ஆதாரம் இல்லை. விடுதலையான இரும்பொறையுடன் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றோ, நளினியை மிரட்டினேன் என்றோ சி.பி.ஐ.கூடச் சொல்லவில்லை. ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவரிடம் கூறி அவரது பதிலை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் என் விஷயத்தில் இது செய்யப்படவில்லையே.. எப்படி?

சிவராசனின் பணத்தை முதலில் காந்தன் என்பவர் கையாண்டார். அவரிடம் இருந்து நான் அந்தப் பொறுப்பினை எடுத்துக்கொண்டதாக நீதிபதி வாத்வா அவர்கள் தீர்ப்பில் கூறுகிறார். சிவராசனின் பணத்தை நான் பாதுகாத்து கொடுத்ததாகவோ கையாண்டதாகவோ விசாரணை நீதிமன்றம் என்னிடம் கேட்டுப் பதிவு செய்யவில்லை. இப்படி எல்லாம் குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகளே எங்களுக்கான முடிவுப் படிகளாக மாறிவிட்டன!''

''கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரிந்த உடன் என்ன நினைத்தீர்கள்?''

''என் தந்தை ஆறுமுகம் தில்லையம்பலம் அவர்களின் நினைவு வந்தது. அவருக்கு இப்போது 70 வயது. இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதற்கு முன்னர் அங்கு விவசாயம் செய்துகொண்டு இருந்தார். அவர் எப்படி இருக்கிறார் என்கிற கவலை என்னைப் பெரிதாக வருத்துகிறது. பெற்ற தகப்பன் இருக்கிறாரா இல்லையா என்பதை நினைத்து அழுவதா? நான் இருப்பேனா மாட்டேனா என்பதை நினைத்து அழுவதா? இந்த அப்பனும் மகனும் விதியெனும் கையில் சிக்கிய விளையாட்டுப் பொம்மைகளாய் அல்லாடுகிறோம்!''

நன்றி : விகடன்


* 30 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து 2013-க்குள் நீக்கும் HSBC


லாபம் பார்க்க போராடும் நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க சர்வதேச வங்கியான HSBC முடிவு செய்துள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் HSBC. வங்கியின் புதிய தலைவராக ஸ்டூவர்ட் கலிவர் பொறுப்பேற்றுள்ளார். இந்த வங்கியில் உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். அதிலும் ஆசியாவில் தான் அதிகமானோர் பணி புரிகின்றனர்.

ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 11.5 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த வங்கிப் பங்குகளின் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வரிக்கு முந்தைய லாபம் 11.1 பில்லியனாக இருந்தது.

லத்தீன் அமெரிக்கா, அமெரி்க்கா, இஙகிலாந்து, பிரான்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வங்கியை மறுசீரமைக்கவுள்ளதால் 5 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கியதாக வங்கி அறிவித்துள்ளது. வரும் 2013-ம் ஆண்டிற்குள் மேலும் 25, 000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.

இது குறித்து வங்கியின் தலைவர் ஸ்டூவர்ட் கூறியதாவது,

பணி நீக்கம் தொடரும். தற்போதில் இருந்து வரும் 2013-ம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 25 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றார்.

மொத்தமுள்ள ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பணி நீக்கம் செய்யப்படவிருக்கின்றனர். ஆசியாவில் அதிக கவனம் செலுத்துவதற்காகத் தான் இந்தி ஆட்குறைப்பு என்று கூறப்படுகின்றது.

உலகெல்லாம் வங்கி அமைக்கும் திட்டத்தை HSBC கைவிட்டுள்ளது.

'சிலிக்கான் கிங்'' பதவி விலகல்

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து புதன்கிழமை விலகினார் 'சிலிக்கான் கிங்' என வர்ணிக்கப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ்.

உலகின் மிக சக்திவாய்ந்த நிறுவனமாக ஆப்பிளை மாற்றிய ஸ்டீவ் ஜாப்ஸ் பதவி விலகியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் கணையப் புற்றுநோய் காரணமாக அவர் இந்த கடினமான முடிவை மேற்கொண்டுள்ளதாக உள்வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு அமெரிக்க தம்பதியின் வளர்ப்பு மகன் ஸ்டீவ் ஜாப்ஸ். புத்த மதத்தைச் சேர்ந்தவர். கல்லூரிப் படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத அவர், எழுபதுகளின் பிற்பகுதியில் தனது நண்பர் ஸ்டீவ் வோஸ்னியாக்குடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

இவரது நிறுவனம் தயாரித்த ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. ஆனால் ஆப்பிள் 2, கம்ப்யூட்டர் உலகில் இவரது நிறுவனத்துக்கான இடத்தை உறுதி செய்தது. 1980-ல் ஆப்பிளை பொது நிறுவனமாக மாற்றி பங்கு வெளியிட்டார். அது அவரை பெரும் கோடீஸ்வரர் ஆக்கியது.

1985-ல் தான் ஆரம்பித்த நிறுவனத்திலிருந்தே விலகிக் கொண்டார் ஸ்டீவ். எல்லா பங்குகளையும் விற்ற அவர், ஆப்பிள் பங்குகளை மட்டும் வைத்துக் கொண்டார். வெளியில் போய் நெக்ஸ்ட் என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் பின்னர் ஆப்பிளுடன் இணைந்தபோது, ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிளுக்கு வந்தார், இடைக்கால தலைமை செயல் அலுவலராக.

பின்னர் 2000-ல் அவரே முழுமையான CEO என அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு ஸ்டீவ் ஜாப்ஸ் தொட்டதெல்லாம் தங்கம்தான். ஐபோன், ஐபேட், புதுப்புது மேக் கம்ப்யூட்டர்கள் என தொழில்நுட்பத் துறையில், எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது ஆப்பிள் நிறுவனம்.

பாரக் ஒபாமாவுடன் அமர்ந்து விருந்து சாப்பிடும் அளவுக்கு பெரும் விஐபியாகிவிட்டார் ஸ்டீவ்.

14 ஆண்டுகள் அவரது தலைமையில் ஆப்பிள் சாதித்தவை பிரமிக்கத்தக்க வெற்றிகள் என தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அடுத்து ஆப்பிள் புதிய ஐபோன், அடுத்த தலைமுறைக்கான அட்வான்ஸ்டு ஐ பேட் போன்றவற்றை அறிமுகப்படுத்தவிருக்கும் நிலையில் ஸ்டீவ் விலகியுள்ளார்.

"நான் ஒரு நாள் இந்த நிறுவனத்தில் இல்லாமலே போகலாம். அதற்கான நாள் வரும்போது, நிறுவனம் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்" என்பது ஸ்டீவ் ஜாப்ஸ் அடிக்கடி கூறும் வாசகம். அது இப்போது நிகழ்ந்தே விட்டது.

இப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத் தலைவராகவும், டிம் குக் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுவார்கள் என்றும், ஸ்டீவ் தொடர்ந்து நிறுவனத்துக்கு வழிகாட்டுவார்; முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால், ஆப்பிளின் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் அச்சத்தைப் போக்கியதாகத் தெரியவில்லை. நேற்று ஸ்டீவ் ஜாப்ஸ் தனது விலகலை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் ஆப்பிள் நிறுவனப் பங்குகள் 7 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.

உணவுப் பொருட்களுடன் வானில் வெடித்து, காட்டுக்குள் வீழ்ந்தது!

ரஷ்யா: விண்வெளிக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் (கார்கோ) ராக்கெட் ஒன்று, வானில் வெடித்துச் சிதறியிருக்கின்றது. விண்வெளியில் இயங்கும் ரஷ்ய ஸ்பேஸ் ஸ்டேஷன் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்களுக்காக 3 தொன் உணவுப் பொருட்கள் இந்த ராக்கெட்டில் வைத்து அனுப்பப் பட்டிருந்தது.

வெடித்துச் சிதறியது, செலுத்துவதற்கு ஆட்கள் தேவை இல்லாமல் தானாகவே இயங்கும் சோயுஸ் ரகத்திலான ராக்கெட். இந்த ராக்கெட்டின் மேல் பகுதியில் கன்டெயினர் போல வடிவமைக்கப்பட்ட இணைப்பு ஒன்றுக்குள் உணவுப் பொருட்களை வைத்து, விண்வெளிக்கு அனுப்பியிருந்தார்கள் ரஷ்ய விஞ்ஞானிகள்.

அனுப்பப்பட்ட ராக்கெட், விண்வெளியில் இயங்கும் ரஷ்ய ஸ்பேஸ் ஸ்டேஷன் வரை செல்லும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் 6 பேர் தங்கியுள்ளார்கள். செல்லவேண்டிய இடத்தை அடையுமுன்னரே வெடித்து விட்ட ராக்கெட், சைபீரியக் காட்டுக்குள் சிதறி வீழ்ந்திருக்கிறது!

ராக்கெட் வெடித்துச் சிதறியுள்ளதால், அவர்களுக்கு அனுப்பப்பட்ட 3 டன் உணவுப் பொருட்களும் போய்ச் சேராது. ஆனால், அவர்களிடம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளது என்று அறிவித்திருக்கின்றது ரஷ்யா. (கடந்த மாதம் அமெரிக்க நாசாவால் அனுப்பப்பட்ட மற்றொரு ராக்கெட்டில், இவர்களுக்கு 3 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை அனுப்பி வைத்திருந்தது ரஷ்ய அரசு)

“உணவுக் கையிருப்பு முடியுமுன், மற்றொரு ராக்கெட் மூலமாக உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட ஏற்பாடுகள் செய்யவுள்ளோம்” எனவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து, ரஷ்ய தயாரிப்பான சோயுஸ் ரக ராக்கெட்களின் செயற்பாடு பற்றிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், ரஷ்யா கடந்த மாதம்தான் தமது ஸ்பேஸ் ஷட்டில் புரோகிராமையே நிறுத்திவிட்ட நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. புரோகிராம் நிறுத்தப்பட்டு, அதற்கான பட்ஜெட்டும் நிறுத்தப்பட்டு விட்டதால், இந்த ரக ராக்கெட்களில் திருத்த வேலைகளை ரஷ்யா செய்யப் போவதில்லை.

இந்த ரக ராக்கெட்களில் விண்வெளிக்கு மேலதிக ஆட்களை அனுப்பி வைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. இதே ராக்கெட் மூலம் விண்வெளி செல்ல, செப்டெம்பர் மாதம் அடுத்த செட் 3 பேரும், டிசெம்பர் மாதத்தில் மேலும் 3 பேரும் தயாராக உள்ளனர்.

விண்வெளிக்கு ஆட்களையும், பொருட்களையும் அனுப்பி வைக்க, ரஷ்யா உபயோகிக்கும் ஒரேயொரு ராக்கெட் வகை, இதுதான்!

பிரதமருக்கு சம்மன் : மாஜி அமைச்சர் ராஜா வலியுறுத்தல்

""2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், ஒரு சாட்சியாக கோர்ட்டில் ஆஜராகும்படி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்ப வேண்டும்,'' என சி.பி.ஐ., கோர்ட்டில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் இதுவரை இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு தொடர்பாக கைதானவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வது தொடர்பான விவாதம் தற்போது நடந்து வருகிறது.
நேற்று முன்தினம், கனிமொழி தரப்பில் அவரது வழக்கறிஞர் வாதாடினார். அப்போது, "ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலம் விடுவதில்லை என்று முடிவெடுத்ததில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் பங்குண்டு' என, தெரிவித்தார். இந்நிலையில், இவ்வழக்கில் நேற்று முன்னாள் அமைச்சர் ராஜா சார்பில் வழக்கறிஞர் சுஷில்குமார், நீதிபதி சைனி முன் ஆஜராகி வாதிடுகையில், ""2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக, பிரதமர் மன்மோகன் சிங், அப்போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் மற்றும் தற்போது தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக உள்ள கபில் சிபல் ஆகியோரை, இவ்வழக்கில் சாட்சியாக ஆஜராகும்படி அழைக்க வேண்டும். இதுதொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட வேண்டும்,'' என்றார்.

சி.பி.ஐ.,யிடம் டிராய் விளக்கம்: இதற்கிடையில்,"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலத்தில் விட வேண்டும் என, தொலைத் தொடர்பு துறைக்கு நாங்கள் எவ்வித பரிந்துரையும் செய்யவில்லை' என, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்), சி.பி.ஐ.,யிடம் தெரிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, கடந்த 20ம் தேதி சி.பி.ஐ.,க்கு, டிராய் அமைப்பின் செயலர் ஆர்.கே அர்னால்டு, கடிதம் ஒன்றை எழுனார். அதில் கூறியுள்ளதாவது: கடந்த 2007ம் ஆண்டில், "2ஜி' ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்றோ, 2003 முதல் 2007ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தொலைத்தொடர்புத் துறையில் இணைந்த புதிய நிறுவனங்களுக்கு, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றோ, எந்த பரிந்துரையையும் தொலைத் தொடர்புத்துறைக்கு நாங்கள் செய்யவில்லை. ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதால், அரசுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை துல்லியமாக மதிப்பிடுவது முடியாத காரியம்.
தொலைத் தொடர்பு சேவையையும், ஸ்பெக்ட்ரத்தையும் அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் வழியாக, நாங்கள் கருதியதில்லை. இதனால் தான், ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுமாறோ, கட்டணத்தை உயர்த்தும்படியோ, எவ்வித பரிந்துரையும் செய்யவில்லை. இதனால், அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூற முடியாது. கடந்த 2007ம் ஆண்டில், 6.2 மெகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட, "2ஜி' ஸ்பெக்ட்ரத்திற்கு எவ்வித விலையும் நிர்ணயம் செய்து பரிந்துரைக்கவில்லை. 10 மெகா ஹெர்ட்ஸ்சுக்கு மேல் ஸ்பெக்ட்ரம் பெற்ற நிறுவனங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும்படி கூறினோமே தவிர, வேறு எந்த பரிந்துரையும் செய்யவில்லை.

செப்டம்பர் 15ல் மூன்றாவது குற்றப்பத்திரிகை : "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை, செப்டம்பர் 15ம் தேதி தாக்கல் செய்யப்படும் என, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று சி.பி.ஐ., தெரிவித்தது. இந்த வழக்கில், இதுவரை இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது குற்றப்பத்திரிகையை, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யவதாக ஏற்கனவே சி.பி.ஐ., தெரிவித்திருந்தது. இந்நிலையில், மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு, மேலும் 15 நாட்கள் அவகாசம் அளிக்கும்படி சி.பி.ஐ. தரப்பில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பான மனுவை சி.பி.ஐ., வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் தாக்கல் செய்தார். மேலும், "வழக்கு குறித்த தங்களின் நிலை அறிக்கையை சி.பி.ஐ., வருமானவரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவை, செப்டம்பர் 1ம் தேதி தாக்கல் செய்யும்' என்றும் குறிப்பிட்டார்.
புதுடில்லி: "லோக்பால் மசோதா, நான்கு நாட்களில் வேண்டும் என, ஹசாரே விதித்த நிபந்தனையால், மத்திய அரசு, நேற்று அதிக வேகம் காட்டியது. காலை முதல், மாலை வரை, பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஹசாரே தன் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜன்லோக்பால் மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஊழல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் பலமான லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய வலியுறுத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே, கடந்த ஒன்பது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று முன்தினத்திலிருந்து, இந்த விவகாரத்தில்அதிரடியான திருப்பங்கள் ஏற்பட்டன. மத்திய அரசு, தன் நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, அரசு தரப்பு பிரதிநிதியான பிரணாப் முகர்ஜியுடன், ஹசாரே குழுவினர் சந்தித்து பேசினர். இச்சந்திப்பை தொடர்ந்து, அரசு தரப்பில், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நேற்று காலை, ஹசாரே குழுவினருடன், இரண்டாவது சுற்றுப்பேச்சுவார்த்தை நடந்தது. சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் இல்லத்தில் நடந்த சந்திப்பில், ஹசாரே தரப்பில் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷண், கிரண் பேடி பங்கேற்றனர்.

இச்சந்திப்பின் போது, ஹசாரே குழு வைத்த கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை ஏற்றுக்கொள்ள முன்வந்ததாக தெரிகிறது. இருப்பினும், கீழ்மட்ட அதிகாரிகளையும் லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பது, லோக்பால் மூலம், மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது உட்பட, மூன்று முக்கிய விஷயங்களில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
கூட்டம் முடிந்ததும், நிருபர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், ""லோக்பால் மசோதா தாக்கலாவதற்கு, இன்னும், 20 நாட்களுக்கு மேலாகும். இருப்பினும், இப்போதைக்கு உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவது முக்கியமானது' என்றார்.

இதைத் தொடர்ந்து, மாலையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டது. இதில் பேசிய பிரதமர், ""அரசு தரப்பு மசோதாவையும், ஜன்லோக்பால் மசோதாவையும், பார்லி நிலைக்குழு விரைந்து பரிசீலிக்க கேட்டுக்கொள்வேன். லோக்பால் வரம்பிற்குள் என்னையும் (பிரதமர்) சேர்ப்பதற்கு சம்மதித்தேன். ஆனால், சக அமைச்சர்கள் தான் அதை ஏற்கவில்லை. ஹசாரே குழு தெரிவித்த கோரிக்கைகளை ஏற்றுள்ளோம். இருப்பினும், முழுமையாக ஏற்றுக்கொண்டோம் என்ற அர்த்தமாகாது'' என்றார்.

கைவிட கோரிக்கை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், "அன்னா ஹசாரே உடனடியாக தன் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்; எங்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை ஏற்பார் என நம்புகிறோம்' என, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ., மற்றும் இடதுசாரி கட்சிகள், அரசு மசோதாவை வாபஸ் பெற்று ஒருங்கிணைந்த வலுவான மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என கோரின.

மற்றொரு திருப்பமாக, ராஜ்யசபாவில் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமி வெளியிட்ட அறிவிப்பில், "ஜன்லோக்பால் மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.
ஹசாரே கண்டிப்பு: அரசு தரப்பில் இறங்கிவந்த போதிலும், லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுவதில் ஹசாரே கண்டிப்பாக இருக்கிறார். உண்ணாவிரத மேடையில் இருந்தபடி ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஹசாரே, "என் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. போராட்டத்தை வலுப்படுத்த, இன்னும், ஒன்பது நாட்கள் என்னால் போராட்டத்தை தொடர முடியும். எனக்கு ஒன்றும் ஆகாது. மாரடைப்பால் சாவதை விட, நாட்டுக்காக உயிரை விடுவது சிறந்தது'' என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ""ஜன்லோக்பால் மசோதா, நாளையே(இன்று) பார்லிமென்டில் தாக்கலனால், ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட்டு விடுவார்'' என்றார்.

இறங்குகிறது அரசு: ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட செய்யும் முயற்சியாக, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று இரவு, ஹசாரே குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது, ஹசாரே நிபந்தனைகளுடன் உடனடியாக லோக்பால் மசோதா உருவாக்க கால அவகாசம் தேவை என்ற கருத்து அரசிடம் உள்ளது. அதே சமயம், ஹசாரே உண்ணாவிரதம் முடிவுற்று சுமுக நிலை ஏற்பட்டால் தான், அரசு மீதான மக்கள் கோபம் குறையும் என்ற கருத்து மத்திய அரசிடம் ஏற்பட்டிருக்கிறது.

மாஜி அமைச்சர் கே.என்., நேரு உள்பட 3 பேர் கைது

திருச்சி : தமிழகத்தில் நடந்துள்ள ஏகப்பட்ட நில மோசடி வழக்கில் முன்னாள் ஆட்சியாளர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலை 6 மணியளவில் திருச்சியில் மாஜி போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்., நேரு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் வைக்கப்பட்டுள்ள போலீஸ் ஆயுதபடை திருமண மண்டபத்தில் ஏராளமான ஆதரவாளர்கள் குவிந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


கடந்த ஆட்சி காலத்தில் ஆயிரக்கணக்கான நில மோசடி நடந்திருப்பதாக வந்த புகாரை அடுத்து புதிதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க, அரசு இது தொடர்பான வழக்கை விசாரிக்க தனிப்படை போலீசார் பணிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக மதுரை, சென்னை, ஈரோடு, சேலம், கோவை என பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க., நிர்வாகிகள், மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் , மாஜி எம்.எல்.ஏ.,க்கள் என இது வரை 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் மாஜி போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்., நேரு வீட்டில் இன்று காலையில் அதிரடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். இவரது வீட்டிற்குள் நுழைந்த போலீசார் நேருவை கைது செய்து திருச்சி ஆயுத படை திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இவருடன் மாஜி எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, ஜவுளிக்கடை உரிமையாளர் சுந்தரராஜூலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.


வழக்கின் சாராம்சம் என்ன ? : கடந்த 2009 ல் திருச்சியில் ஒரு தி.மு.க,வின் அறிவாலயம் திறந்து வைக்கப்பட்டது. கலைஞர் அறிவாலயம் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த அறிவாலயத்தை கட்சி தலைவரும், அப்போதைய முதல்வருமா ன கருணாநிதி திறந்து வைத்தார். ஏறக்குறைய சென்னை அறிவாலய மாடலில் இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கென ஒரு ஏக்கர் நிலம் டாக்டர் சீனிவாசன் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டது. திருச்சியில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள இந்த நிலம் பல கோடி மதிப்பு பெறும். ஆனால் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டதாகவும், தன்னை மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து போட வைத்ததாகவும், சீனிவாசன் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பான விசாரணை நடத்திய போலீஸ் கே.என்., நேரு மாஜி எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, லால்குடி எம்.எல்.ஏ., சௌந்திரராஜன், ராமாநுஜம் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் கே.என்., நேரு, உள்பட 3 பேரை கைது செய்திருக்கின்றனர். இன்னும் தலைமறைவாக உள்ள தி.மு.க.,வினரை தேடி வருகின்றனர்.


பொய் வழக்கை சட்டப்படி சந்திப்போம் : கைது செய்யப்பட்டு அழைத்து சென்ற போது நிருபர்களிடம் பேசிய நேரு; நாங்கள் யாரையும் அடித்து, மிரட்டி வலுக்கட்டாயமாக நிலத்தை வாங்கவில்லை. எந்த தவறும் செய்யவில்லை. இது பொய் வழக்கு, சட்டப்படி சந்திப்போம் என்றார்.


கடலூர் சிறையில் அடைப்பு : வழக்கில் கைது செய்யப்பட்ட விவரத்தை பதிவு செய்யும்போது நேருவின் உடல் அங்க அடையாளம் குறிக்கப்பட்டது. இவர் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 4 ல் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட் புஷ்பராணி வரும் செப் 8 ம்தேதி வரை ரிமாண்‌ட் செய்து உத்தரவு பிறப்பித்தார். முதலில் திருச்சி சிறைக்கு‌ கொண்டு செல்லப்பட்டு பின்னர் கடலூர் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.


கோவை மாநகர் செயலர் கைது : கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., செயலர் வீரகோபாலும் ஒரு நில மோசடி வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார்.



வீரகோபால் என்ன குற்றம் செய்தார்? : கோவையை சேர்ந்தவர் பெரியசாமிகவுண்டர் மகன் ரத்தினம். இவருக்கு விலாங்குறிச்சி டைல்பார்க் அருகே இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் உரிமையாளர்கள் சிலருக்கு சேர வேண்டிய பங்கை ‌ஒழுங்காக கொடுக்க விடாமல் சதித்திட்டம் போட்டு வாங்கி விற்றுள்ளனர். மேலும் கொலை மிரட்டலும் விட்டிருக்கின்றனர். இது தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரகோபால், சாந்தலிங்கம் ஆகிய இருவரை கைது செய்திருக்கின்றனர். இருவரும் ஜே.எம்.,2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர். இவரை பார்க்க வந்த முன்னாள் எம்.பி., ராமநாதன், துணைமேயர் கார்த்திக் மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோருக்கு நாற்காலிகள் கொடுத்து போலீசார் ராஜ மரியாதை அளித்தனர்.

Saturday, August 20, 2011

சொல்வதெல்லாம் உண்மை பாகம் 11

இவர் ஒரு முரட்டு பக்தர் அல்ல. வரட்டு பக்தர். தலைமைக்கே அடிக்கடி தண்ணி காட்டுபவர். இவரைக் கட்டுப்படுத்த தலைமையே பலமுறை திணறியிருக்கிறது. மேடைப் பேச்சானாலும், சட்டமன்றமானாலும் இவரின் நையாண்டிப் பேச்சுக்கு அளவே இருக்காது. தனது வாழ்நாளில் பாதிக்குமேல் சட்டசபையில் கழித்துவிட்ட இவருக்கு அங்கே தனி வரலாறு இருக்கிறது. எனவே, பலமுறை அவை மீறல்களுக்கு ஆளானவர். முருகனைப் போல் ஆண்டியாக அரசியல் மலையில் ஏறியவர். பின்னாளில் வேட்டி கட்டிய வெள்ளைக்கார துரைகணக்காய் வளம் தேடிக்கொண்டவர். நீர், நிலம், ஆறு, மணல், மலை என இயற்கைகளின் இறக்கைகளில் அமர்ந்து இன்று இமயம் தொட வளர்ந்தவர்.
06
கட்சியை வளர்க்க இவரும், இவரை வளர்க்க கட்சியும் பரஸ்பரம் பயன்படுத்தப்பட்டனர். உட்கட்சியிலும் சரி, எதிர்க்கட்சியிலும் சரி அவ்வப்போது அதிரடி பட்டாசுகளைக் கொளுத்திப் போட்டுவிட்டு அமைதியாக இருப்பது இவரது ஸ்பெஷாலிட்டி.

எந்த இடமானாலும் ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு நிமிடம் தூங்கிவிடுவார். ஆட்சி மாற்றத்திற்குப் பின் அமைதியாக வந்து போய்க்கொண்டிருக்கும் அவரின் மனசாட்சியை பேசும்படி கேட்டோம். இதோ அவரின் வாக்குமூலம்.

‘‘சினிமாவில் நடிக்க வேண்டுமென சீரியஸாக திட்டமிட்டிருந்த நேரத்தில் அரசியல் களம் என்னை ஆரத் தழுவிக்கொண்டது. நாடக மேடைகளில் நான் நீட்டி முழக்கிய வசனங்கள் அரசியலுக்குக் கைகொடுக்கும் என அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். காதல், வீரம் என கலந்து நடித்த படங்களிலெல்லாம் காதல் காட்சிகளே என்னைக் கவர்ந்திழுக்கும். கதாநாயகியின் சேலையை வில்லன் உருவும் காட்சிகளை சிரித்தபடி நான் ரசித்தபோது, அரசியலுக்கும் அது பயன்படும் என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது.

எம்.ஜி.ஆரால் சினிமா ஆசையை வளர்த்துக்கொண்ட என்னை அரசியல் பக்கம் அனுப்பி வைத்ததும் அவர்தான். என் சினிமா எண்ணத்தை அவரிடம் சொன்னபோது அரசியல் நடிப்பே என்னுள் அதிகமாக இருப்பதாக அளவுகோல் வைத்தது அவர்தான். இந்த மேடையிலும் ஏறக்குறைய நாற்பது வருடங்களைக் கடந்து வந்துவிட்டேன். எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள். ஏற்றங்களின் போதெல்லாம் நான் இறுமாப்புக் கொண்டாலும் தாழ்வுகளின்போது நான் துவண்டுபோனதில்லை. அடுத்த வாய்ப்புக்காக ஆயத்தப்படுத்திக்கொள்வேன். வாய்ப்புகளே என்னை வளர வைத்துள்ளன.

நாடு சுதந்திரம் பெற்றபிறகும் சில குடும்பங்கள் சுதந்திரம் பெறாமல் கொத்தடிமைகளாய் இருப்பார்கள். அந்த கூலி வேலை செய்யும் குடும்பம் தங்கள் முதலாளியின் குடும்பத்தை ‘ஆண்ட வீடு’ என்று அழைப்பார்கள். தொழிலாளியின் குடும்பத்தை ஆண்டதாலோ அல்லது அண்டிப் பிழைத்ததாலோ அப்படி அழைப்பார்கள். நாங்களும் ஒரு குடும்பத்தை அண்டிப் பிழைத்தோம். ஈச்சம் ஓலை முதலியார் குடும்பம்தான் எங்களின் ‘ஆண்ட வீடாக’ இருந்தது. என் சகோதரி, சகோதரர்கள், தாய், தந்தை என ஆறு பேரும் அந்த வீட்டில் தஞ்சமடைந்தே வாழ்ந்து வந்தோம். என் தந்தை, முதலியாரின் வயல்களில் ஏரோட்ட வேண்டும். அவருக்கு மாதம் 25 ரூபாய் சம்பளம். மற்றவர்கள் வயல் மற்றும் வீட்டு, மாட்டு வேலைகளை கவனிக்க வேண்டும். ஆனாலும், நான் மட்டும் படிப்பைத் தொடர்ந்தேன். எட்டாம் வகுப்புவரை பக்கத்தில் இருந்த பள்ளியில் படித்துவிட்டு எஸ்.எஸ்.எல்.சி. படிப்புக்கு ரயில் ஏறிச் சென்றேன். தினமும் காலையும், மாலையும் திருட்டு ரயில்தான். இதை நானே மேடைகளில் சொல்லிப் பெருமைப்படுவேன். அப்போதெல்லாம் நான் சட்டத்தை மதிக்காததால்தானோ என்னவோ பின்னாளில் சட்டமும், பொதுப்பணியும் என் சகாக்களாகிப்போனது.

பள்ளியிலிருந்து சென்னையில் கல்லூரியில் சேர்ந்தேன். எங்கள் ஊருக்கு ஒருமுறை வந்து போகவே ஒன்பது ரூபாய் தேவை. பணம் இல்லாததால் நான் பல நாட்கள் விடுதியில் தங்கினேன்.

விடுதிக்கும் மாதம் தொண்ணூறு ரூபாய் கட்டணம். ஆரம்பத்தில் எல்லாவற்றையுமே எங்கள் முதலாளி குடும்பம் கவனித்துக்கொண்டது. அந்த நாட்களில்தான் ஈரோட்டிலிருந்து காஞ்சிபுரம் பிரிந்து வந்தது. அந்த கரை வேட்டிகளின் கச்சேரி எனக்கு பிடித்துப் போனதால் அவர்களின் கூட்டங்களில் நான் அவ்வப்போது தலைகாட்டுவேன். படிப்படியாக ஏறி மைக்கைப் பிடித்தேன். என் மேடைப் பேச்சு என்னை அரசியல் வட்டாரத்தில் அறிமுகம் செய்தது. அந்த நேரத்தில்தான் சட்டக் கல்லூரியில் தேர்தல் வந்தது. மாணவத் தலைவருக்குப் போட்டியிட்டேன். செலவழிக்க கையில் பத்துப் பைசாகூட இல்லை. ஆனாலும், தைரியமாக தேர்தலில் நின்றேன். எங்கள் குடும்பத்தை வாழவைத்த முதலியார் குடும்பத்தில் அந்த அம்மாதான் தனது ஒட்டியாணத்தை எடுத்துக் கொடுத்தார். அந்தப் பணத்தில்தான் என்னால் வெற்றி பெறமுடிந்தது. அதாவது, கையில் காசில்லாமல் தேர்தலை சந்திப்பதெப்படி? அடுத்தவர் பணத்தில் வெற்றி பெறுவதெப்படி? போன்ற வித்தைகளை அப்போதே நான் கற்றுக்கொண்டேன்.

அந்த வெற்றி விழாவிற்கு வந்த எங்கள் தலைமையும், புரட்சித் தலைமையும் என் பேச்சைக் கேட்டார்கள். மேடையிலிருந்து இறங்கிய புரட்சி, ‘எந்த உதவிகள் வேண்டுமானாலும் வா’ என்று கூறிவிட்டுப் போக, அடுத்த வாரமே அவரை சந்திக்க நான் வரிசையில் நின்றேன். என்னை வரவேற்று ‘என்ன வேண்டும்?’ என்று அவர் கேட்டதற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கேட்டேன். ‘நீ அரசியல் மேடையிலேயே அழகாக நடிக்கிறாய்’ என்று கூறி அனுப்பியதோடு என் எஞ்சிய படிப்புச் செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார். பிற்காலத்தில் நான் அவரை எதிர்த்து நீண்ட அரசியல் பயணம் செய்ய நேர்ந்தது. ஆனாலும், அவர் மீதான பாசம் மட்டும் என் நெஞ்சில் அப்படியே இருந்தது. அதேபோல் என் திருமணமும் தலைமையின் முன்னிலையில் புரட்சியின் ஆசியுடன்தான் நடைபெற்றது.

கட்சியின் அன்றைய தலைமை மறைந்து இன்றைய தலைமை தலைமையேற்றது. புதிய அமைப்பு, புதிய தேர்தல், புதிய வேட்பாளராக நான், தேர்தல் களத்தில் வெற்றியைப் பறித்தேன். அன்றுமுதல் நான் சந்தித்த பத்துக்கும் மேற்பட்ட தேர்தல்களில் எட்டில் வெற்றியை எட்டிப் பிடித்தேன். அதில் மூன்றுமுறை சுழல்விளக்கு எனக்கு சல்யூட் அடித்தது. அந்தக் காலம் எல்லாமே பொற்காலம்தான். நான் நினைத்ததெல்லாம் நடந்தது. அண்ணன், தம்பி என அனைவரையும் வளர்த்துவிட்டேன். என்னுடன் இருந்தவர்கள் அனைவருமே கோடிகளில் புரண்டார்கள்.

எங்கள் பகுதியில் எதிர்க்கட்சியின் முன்னாள் சுழல் விளக்கின் கல்லூரி ஒன்றிருக்கிறது. அதற்கு சமமாக கல்லூரி கட்ட நினைத்தேன். என் வாரிசின் பார்ட்னரான கழுகு கட்டடக்காரர் ஒருவரின் உதவியுடன் போடாத சாலை, கட்டாத கட்டடம் என்று பில் போட்டு வாங்கியதுடன், கமிஷன் தொகைகளை சேர்த்து சுமார் முப்பத்தைந்து கோடியில் ஒரு கல்லூரி கட்டினேன். உலக ரட்சகனுக்கு டில்லியில் பதவி, மத்தியில் சுழல் விளக்கு என உறுதி செய்து அதன் பிரதிபலனாக அந்தக் கல்லூரியின் உள்கட்டமைப்பை அழகுபடுத்தினேன். ஆனாலும், எதிர்க்கட்சியின் கல்லூரியை என்னால் எட்டிப் பிடிக்க முடியவில்லை. அந்தக் கல்லூரி வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த கடத்தல் மணலே விண்ணைத் தொடும் அளவுக்கு விரிந்து கிடந்தது. அதன் புகைப்படங்கள்கூட எங்கள் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதேபோல் என் உடன்பிறப்பு ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீர் எடுத்து விற்பனை செய்தார். அந்த நிலம் தனக்குச் சொந்தமானது என்றும், அங்கு ஆழ்துளை அமைக்கப்பட்டதை எதிர்த்தும் வழக்குப் போட்டார் ஒரு ஏழை. ஒருநாள் மர்மமாக அந்த ஏழை இறந்து போக, அந்த ஏரியாவே கப்சிப். அதேபோல் என் சமபந்தி பெங்களூர்காரர் என்பதால் கர்நாடகாவை என் வியாபார ஸ்தலமாக்கிக் கொண்டேன்.

ஆரம்பத்தில் என் தலைமையின் இரு வாசல்களிலும் நான் காவலுக்கு நின்றேன். பின்னர் பால், வேல் அதைப் பகிர்ந்துகொள்ளவே நான் அங்கிருந்து விலகிவிட்டேன். அதேபோல் தலைமை தன் வாரிசை வளர்த்ததை ஆரம்பத்தில் எதிர்த்தவர்களில் நானும் ஒருவன். பின்னர் அதை மாற்றிக்கொண்டு ‘வாரிசு வாழ்க’ என குரல் கொடுத்ததும் நான்தான்.

அதேபோல் யார் முன்னிலையிலும், எந்த சூழ்நிலையிலும் தலைமையை விமர்சித்துப் பேசுவது எனக்கு ரொம்ப பிடித்தமான விஷயம்.

ஒருமுறை தலைமையின் பாராட்டு விழாவுக்கு சினிமாக்காரர்கள் என்னிடம் சீட்டு எடுத்துக்கொண்டு வந்தார்கள். இரண்டு நாட்கள் அவர்களை அலைக்கழித்து பின்னர் எதுவும் தரமுடியாதென்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அண்ணே தலைமைக்காகத்தான்...’ என்று இழுக்க நானோ ‘யோவ்... அந்த தலைமைகிட்டயே போய்ச் சொல்லு. நான் பத்துப் பைசா தரமாட்டேன். நானே வசூல் பார்ட்டி. எங்கிட்டயே வசூலுக்கு வர்றீங்களா. நான் இவரப் பாத்து கட்சிக்கு வரல... அண்ணனைப் பார்த்து அரசியலுக்கு வந்தவன்’னு எகிறி குதிக்க ஆடிப்போனது சினிமா கும்பல். கிரிஏல மலையில் ஒரு பகுதியை வளைத்துக்கொண்டே போக தலைமைக்கு அந்த தகவல் அனுப்பப்பட்டது. கோபத்தோடு ஸ்பாட்டுக்கு வந்த தலைமை, அந்த இடங்களை அப்படியே எழுதி வாங்கிக்கொண்டு புறப்பட்டது.

அதேபோல் பட்டுக் கம்பெனியொன்றை எங்கள் குடும்பம் கபளீகரம் செய்த செய்தி எங்கள் தலைமைக்குத் தெரிய, அதை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டது. சிலர் திரும்பக் கொடுத்தபிறகும் என் உடன்பிறப்பு பத்து கிரவுண்டை கொடுக்காமலேயே வைத்துக்கொண்டார். அதன் மதிப்பு இன்று சுமார் ஐம்பது கோடியாகும். அதேபோல் என் சென்னை வீட்டின் அருகில் வீடு வாங்கிய ஒருவரை செயலில் சிட்டு மூலம் மிரட்டிப் பார்த்தேன். அதுவும் புகாராக தலைமைக்குப் போய்விட்டது. இப்படி என்னைப் பற்றி தலைமைக்குப் புகார் போனதெலலாம் சமாளித்துத் தந்தது நாதன்தான்.

இந்த தொடர் புகார்களால் நான் செய்துவந்த பொதுப்பணியை தலைமை
நிறுத்தச் சொன்னது. தலைமை அலுவலகப் பணிகள் நடந்துக்கொண்டிருந்த நேரம் அது. அதில் ஒரு பட்ஜெட்டைப் போட நான் கணக்குப் போட அதற்கு தடை போட்டுவிட்டது தலைமை. அதைத் தொடர்ந்து தலைமைக்கும் எனக்கும் தொடர்ந்து சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள். கோபத்துடன் விமானமேறிவிட்டேன். நேரடியாக தலைமையே சமாதானம் செய்ய அமைதியடைந்து திரும்பினேன். மேடைகளில் அமர்ந்திருந்தாலும் சரி, மன்றத்தில் அமர்ந்திருந்தாலும் சரி கொஞ்ச நேரம் இடைவெளி கிடைத்ததும் ஒரு குட்டித் தூக்கம் போட்டுக் கொள்வேன்.

அதேபோல் பெயரில் குடிகொண்ட ஒரு ஊராட்சித் தலைமையின் பின்பக்கக் கதவு எனக்கு பழக்கமான ஒன்று. பட்டுகிராமம் அருகில் உள்ள அணை அருகே ஒரு விருந்தினர் மாளிகை. அங்கு நான் பலமுறை விருந்தினர்களுடன் சென்று சாப்பிட்டிருக்கிறேன். ஆரம்பத்திலிருந்தே எனது சினிமா ஆர்வம், விருந்தினர்களை தேர்ந்தெடுப்பதிலும் வந்து தலைகாட்டிவிட்டுப் போகும்.

எந்த மேடையானாலும் அதை நான் என் வசப்படுத்திவிடுவேன். பார்வையாளர் கவனத்தைத் திருப்ப ஒரு உத்தியைக் கையாளுவேன். அதாவது, நான் இறந்துவிட்டால் என்னை எரித்து என் அஸ்தியை தொகுதி முழுவதும் தெளித்துவிடும்படி கூற, எதிரில் இருப்பவர்கள் கலங்கிப் போவார்கள். ஆனால், நானோ அஸ்தி என்பதை அழுத்தமாக இரண்டுமுறை உச்சரிப்பேன். காரணம், கட்சிக்காரர்களின் காதில் அது ஆஸ்தி என்று விழுந்துவிட்டால் என் சொத்தை எடுத்து கரைத்து விடுவார்களோ என்ற அச்சம்தான். அதேபோல் சாதாரணமாக கட்சிக் காரர்கள் தலைமையையோ, வாரிசுகளையோ வீட்டுக்கு வரவழைத்து விருந்து வைப்பதை பெருமையாக நினைப்பார்கள். ஆனால், நானோ இதுவரை தலைமையையும் சரி, யாரையும் சரி வீட்டிற்கெல்லாம் அழைத்ததே இல்லை. அதற்கு சில பல காரணங்கள்.

அதேபோல் கடவுள் மறுப்பாளனாக அனைவராலும் அறியப்பட்ட எனது சொந்த ஊரில் உள்ள அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் கிடாவெட்டி திருவிழா எடுப்பது நான்தான் என்பது பலருக்குத் தெரியாது.

எந்தச் சூழ்நிலையையும் எனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது எனக்கு கைவந்த கலை. ஆனால், இன்றைய சூழ்நிலை எனக்கு எதிராக பயன்பட்டு விடுமோ என்ற அச்சம் என்னை நெருடிக்கொண்டிருக்கிறது.

இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சுமார் பத்து வருடங்களாக தொகுதியில் கட்சிக்காரர்களிடம் கூறி வரும் நான், உங்களிடமும் அதையே கூறி விடைபெற்றுக்கொள்கிறேன்’’

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

அதிகாரிகளை மிரட்டிய ஜாபர் சேட்

ஜாபர் சேட் மீது வழக்குப்பதிவு, அவரது வீடுகளில் ரெய்டு, சஸ்பெண்ட்’ என்று பரபரப்பாக இருந்த வழக்குகள்,கடந்த ஒரு மாதமாக சத்தமில்லாமல் இருக்கிறது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸாரை விசாரணையின்போது ஜாபர் சேட் மிரட்டியதாக குபீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
01
கடந்த தி.மு.க.ஆட்சியில், ஆட்சியாளர்கள் மீது எழுந்த விமர்சனத்தைவிட, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ஜாபர் சேட் மீது எழுந்த விமர்சனங்கள்தான் அதிகம்.

தொலைபேசி ஒட்டுக்கேட்பின் மூலம் அனைத்துக் கட்சிகளின் கோபத்துக்கு ஆளாகி, எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டு, தி.மு.க. தலைமைக்கு ‘சுடச்சுட’ செய்திகளைக் கொடுத்துக் குளிர்வித்தவர் ஜாபர் சேட்.

அதோடு நிறுத்திக் கொண்டாரா? அ.தி.மு.க.. எம்.எல்.ஏ.க்களை இழுத்து வந்து தி.மு.க.வில் சேர்த்த பெருமையும் இவரையே சாரும். இதனால், இவர் மீது அ.தி.மு.க. தலைமைக்கு கூடுதலாகவே கோபம் இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

தனது அதிகாரத்தை தமிழகத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய தி.மு.க.வினரைக் காப்பாற்ற டெல்லி வரை இறங்கி வேலை பார்த்தார்.டெல்லியில் ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைத்துவிடுவதாகச் சொல்லி, ஆதிஷ் அகர்வாலா என்ற வழக்கறிஞரைக் கொண்டு வந்தார்.

அவருக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவியையும் கடந்த மார்ச் மாதம் வாங்கிக் கொடுத்தார். ஜாபர் சேட்டின் நடவடிக்கையைப் பார்த்து தி.மு.க. வழக்கறிஞர்களே மூர்ச்சையானார்கள்.

இரவும், பகலும் பாராமல் ஆளும்கட்சிக்காக உழைத்த ஜாபர் சேட்டுக்கு பலன் கிடைக்காமலா இருந்திருக்கும்? இதற்குப் பரிகாரமாக ஜாபர் சேட் மனைவிக்கு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டில் மனை கிடைத்தது.

ஆட்சி மாற்றத்துக்குப் பின் இதற்கான ஆதாரங்களுடன் ஜாபர் சேட் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் வீட்டில் ரெய்டும் நடத்தினார்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸார். அப்போது, ஜாபர் சேட் வீட்டில் முக்கிய பிரமுகர்களின் உரையாடல் அடங்கிய சி.டி.க்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இவ்வளவு நடந்த பிறகு ஜாபர் சேட் பயந்து போயிருப்பார் என்று நினைத்தால் அது தவறு. அதற்குப் பிறகும் பழைய நினைப்பில் தனது அதிகார தோரணையை அவிழ்த்துவிட ஆரம்பித்திருக்கிறார் ஜாபர் சேட். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரை ஜாபர் சேட் மிரட்டுகிறார் என்ற புதிய குற்றச்சாட்டும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

‘ஜாபர் சேட் விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?’ என்று லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்களில் விசாரித்தோம்.

‘‘முக்கிய பிரமுகர்களின் உரையாடல் அடங்கிய சி.டி.க்கள் கைப்பற்றப்பட்டு,அவை உயர் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. ஜாபர் சேட் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய பிறகு, அவர் விசாரிக்கப்பட்டார். இரண்டு மணி நேரம் நடந்த விசாரணையின் போது, எவ்வித ஒத்துழைப்பையும் கொடுக்க மறுத்த ஜாபர் சேட், எல்லா கேள்விகளுக்கும் அலட்டிக் கொள்ளாமல் ஏடாகூடமாகப் பதில் அளித்தார்.

“வீட்டு வசதி வாரிய முறைகேடுகள் தொடர்பாகத்தானே எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தீர்கள்? அதை விட்டுவிட்டு சி.டி.க்கள் குறித்து எப்படி விசாரிப்பீர்கள்? எஃப்.ஐ.ஆர். போட்ட வழக்கைத் தவிர வேறு எதையும் பற்றி விசாரித்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பேன்’’ என்று அதிகாரத் தோரணையில் குரலை உயர்த்தி இருக்கிறார் ஜாபர் சேட்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளும், கைப்பற்றப்பட்ட சி.டி.க்களை என்ன செய்வது என்று தெரியாமல், வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்து வருகின்றனர். ஜாபர் சேட்டும், தன் சார்பில் ஆஜராக நல்ல வழக்கறிஞரைத் தேடி வருகிறார்.

தனக்காக ஆஜராகும் வழக்கறிஞர் எந்தக் கட்சியையும் சாராமல் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். இதற்காக, டெல்லியில் இருக்கும் சில சீனியர் வழக்கறிஞர்களை நாடி இருப்பதால், லஞ்ச ஒழிப்புத்துறையின் மீது வழக்குப் போட ஆலோசித்து வருகிறார் என்றே தோன்றுகிறது.

தன் மீது கிரிமினல் வழக்குப் போட்டதே செல்லாது என்று அவர் முதலில் வழக்குப் போடுவார் என்று ஜாபர் தரப்பில் சொல்லப்படுகிறது. ஐ.பி.எஸ். அதிகாரி என்ற முறையில் தன் மீது துறை ரீதியான விசாரணை நடத்திய பிறகே, எந்த ஒரு வழக்கும் பதிவு செய்திருக்க வேண்டும் என்று கூறி அவர் வழக்குப் போட முயற்சித்து வருகிறார்’’ என்றனர் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

இந்நிலையில், ‘ஒரு வழக்குக்கு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விட்டு வேறு வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பது தவறு’ என்று ஜாபர் சேட் கூறுவது பற்றி வழக்கறிஞர் வட்டாரங்களில் விசாரித்தோம்.

‘‘இந்தக் கூற்று முற்றிலும் தவறு. எந்த ஒரு வழக்கு தொடர்பாகவும், போலீஸார் சோதனை நடத்தும்போது, புதிய ஆதாரங்கள் கிடைத்தால் அதை அடிப்படையாக வைத்து புதிய வழக்குத் தொடரலாம். அதுமட்டுமின்றி, அந்த ஆதாரங்களை வழக்கை விசாரிக்கும் உரிய அமைப்பிடம் ஒப்படைப்பதற்கும் போலீஸாருக்கு அதிகாரம் உள்ளது.

உதாரணமாக, சோதனை நடத்தும் போது ஒருவர் வீட்டில், அளவுக்கு அதிகமாக வெளிநாட்டு கரன்சி இருந்தாலோ அல்லது போதைப் பொருள் இருந்தாலோ அது தொடர்பாக விசாரிக்க, அந்த ஆதாரங்களை அமலாக்கப் பிரிவுக்கும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கும் அனுப்பி வைக்க போலீஸாருக்கு அதிகாரம் உள்ளது. ஒரு வழக்கு இருக்கும் போது, மற்றொரு வழக்குப் போடலாமா என்ற கேள்விக்கே இடமில்லை’’ என்றனர் திட்டவட்டமாக.

எது எப்படியோ, ஜாபர் சேட் வீட்டில் சோதனை நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அதன்பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணையில் வேகம் குறைந்துவிட்டது. இதற்கு ஜாபர் சேட்டின் மிரட்டல்தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது நெருக்கடியா? என்பது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மட்டுமே தெரிந்த ‘சிதம்பர’ ரகசியம்.

ஷகில் சிக்குவாரா?

ஐ.பி.எஸ். அதிகாரிகள் மனைவிகள் சங்கச் செயலாளராக ஷாபர் சேட்டின் மனைவி இருக்கிறார். அவர் சென்னை மாநகர கூடுதல் கமிஜனராக இருந்த ஜகில் அக்தரின் மனைவியோடு சேர்ந்து தனியாக பிஸினெஸ் செய்து வருகிறாராம். அரசு அதிகாரியின் மனைவி பிசினெஸ் செய்தால் அரசுக்கு அதனை தெரியப்படுத்த வேண்டும் என்பது விதி. தனது மனைவி பிசினெஸ் செய்வதை ஷாபர் அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளார். ஆனால், ஜகில் அக்தர் சொல்லவில்லை என்கிறார்கள். இதன் அடிப்படையில் அவர் மீது வழக்குத் தொடர முடியுமாம். இவர், டெல்லியில் மத்திய அமைச்சரிடம் ஓ.எஸ்.டி.யாக இருந்தபோது சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்