Friday, September 30, 2011

சன் குழுமத்திலிருந்து விலகினார் சக்சேனா!!


சென்னை:
சன் பிக்சர்ஸ் மற்றும் சன் குழுமத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டதாக தனது வழக்கறிஞர் மூலம் ஹன்ஸ்ராஜ் சக்சேனா அறிவித்துள்ளார்.

சன் குழுமத்தில் மிகவும் பலம் வாய்ந்த மனிதராக உலா வந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. சன் டிவி தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்திலிருந்து கலாநிதி மாறனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் சக்ஸேனா. சன் குழுமம், தனியாக சன் பிக்சர்ஸ் என்ற திரைப்பட வர்த்தகப் பிரிவை தொடங்கியபோது, அதன் தலைமைப் பொறுப்பேற்றார். சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தார் சக்சேனா.

ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்பட பலர் தொடர்ந்த பல்வேறு மோசடி, மிரட்டல் வழக்குகளில் சக்சேனாவைக் கைது செய்தது அதிமுக அரசு.

கடந்த மூன்று மாத காலமாக ஏராளமான வழக்குகளில் அடுத்தடுத்து கைதாகி, நீதிமன்ற காவல், போலீஸ் காவல் என தொடர் சிறைவாசம் அனுபவித்து வந்தார் சக்சேனா. போலீசார் தன்னையும் தன் உதவியாளர் அய்யப்பனையும் அடித்து கொடுமைப்படுத்துவதாக நீதிமன்ற வளாகத்தில் அழுதார்.

இந்த நிலையில், அனைத்து வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் பெற்று இப்போது வெளியில் வந்துள்ளார். இனி அவர் சன் குழுமத்தில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் நீடித்திருக்குமா என்றும் கேள்வி எழுப்பினர்.

சன் பிக்சர்ஸ் ஏற்கெனவே சக்சேனாவின் இடத்தில் தற்காலிகமாக செம்பியன் என்பவரை சிஇஓவாக நியமித்தது. அதன் பிறகுதான் மங்காத்தா படத்தை வெளியிட்டு வசூலை அள்ளியது. தொடர்ந்து வெடி, நண்பன், ஏழாம் அறிவு என மெகா பட்ஜெட் படங்களை கைவசம் வைத்துள்ளது.

ஆனால் சக்ஸேனாவின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் சன் குழும தலைவர் கலாநிதி மாறனைத் தொடர்பு கொண்ட சக்சேனா, தன் மீதுள்ள வழக்குகளால் நிறுவனத்துக்கு தேவையற்ற கெட்ட பெயர் வரக்கூடாது என்பதால், சன் குழுமத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்வதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தையும் அவர் கலாநிதி மாறனுக்கு அனுப்பி வைத்தார். அக்கடிதத்தை கலாநிதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இத்தகவல்களை சக்சேனாவின் வழக்கறிஞர் இன்று தெரிவித்தார்.

மொபைலில் தமிழ்த் தளங்களை வாசிக்க எளிய வழி!


மொபைல் சந்தையில் புதிய புதிய தொழில் நுட்பங்கள் வந்து கொண்டிருந்தாலும் அவை ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது.இப்போதும் கூட நம்மால் மொபைலில் தமிழ் இணைய தளங்களை வாசிக்க முடிவதில்லை.மொபைலில் முன்னிருப்பாக (default) கொடுக்கப்பட்டிருக்கும் ப்ரௌசர்களில் தான் இது பெரும் பிரச்சனையாக உள்ளது.

அதற்கு தீர்வாக அமைவது தான் opera mini browser

இந்த அப்ளிகேஷனில் ஒரே ஒரு மாறுதலை செய்வதன் மூலம் நாம் நமது மொபைலில் தமிழ் இணையதளங்களை அழகான தமிழில் வாசிக்க முடியும்.

முதலில் உங்கள் மொபைல் ப்ரௌசரில் http://www. opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்யவும்.

operamini – ஐ தரவிறக்க செய்ய இங்கே அழுத்தவும். இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த பிறகு…

1. opera mini browser – ஐ ஓபன் செய்யவும்

2. அட்ரஸ் பாரில் opera:config என்று மட்டும் டைப் செய்து ஓ.கே கொடுக்கவும். (http://www என்று டிஃபால்ட்டாக தெரியும் எழுத்துக்களை நீக்கி விட வேண்டும்)

3. வரும் “பவர் யூஸர் செட்டிங்ஸ்” power-user setting பக்கத்தில் use bitmap fonts for complex scripts என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். (படத்தை பார்க்கவும்!)

4. பிறகு opera mini – ஐ யை restart செய்யவும். இனி எல்லா தமிழ் இணையதளங்களையும் நீங்கள் உங்கள் மொபைலில் வாசிக்கலாம்.

இப்போதைக்கு மொபைலில் இப்படித்தான் நாம் தமிழ் இணையதளங்களை வாசிக்க முடியும். மேலும் operamini பிரௌசர் பெரும்பாலான மொபைல்களுக்கு சப்போர்ட் செய்வதால் இது சாத்தியமாகிறது

பின்குறிப்பு : ஆப்பிள் ஐ-போனில் முன்னிருப்பாக (default) உள்ள ப்ரௌசரில் தமிழ்தளங்களை அழகாக வாசிக்க முடியும்,மேலும் தமிழில் எஸ்.எம்.எஸ் கூட அனுப்ப முடியும்.அதற்கு

அப்-ஸ்டோரில் உள்ள இலவச தமிழ் எஸ்.எம்.எஸ் அப்ளிகேஷனை நீங்கள் தரவிறக்கம் செய்தால் போதும்.

கூகுளின் ஆன்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் விரைவில் தமிழ்மொழி சப்போர்ட் செய்யக் கூடிய வகையில் வேலைகள் நடைபெற்று வருகிறது. வெகுவிரைவில் அதன் அப்டேட் வெர்ஷன்களில் இந்த வசதியை நாம் பெறலாம். சமீபகாலமாக மொபைல் பாவனையாளர் களிடையே பிரபலமாகி வரும் ஆன்ட்ராய்டு ஆபரேட்டிங்கில் தமிழ் மொழியை வாசிக்க வசதி வருவதன் மூலம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நல்ல நிலை உருவாகலாம்.

நோக்கியா(Nokia)

இங்கு காணப்படும் எண்களிணை கைபேசி யில் பயன் படுத்துவதின் மூலம் மறைந்துள்ள கூடுதல் வசதிகளை பெறமுடியும் .


*#06#
உங்கள் கைபேசியின் IEMI எண்ணை அறிய
*#0000#
உங்கள் கைபேசியின் Firmware Version ஐ அறிய
*#7780#
உங்கள் கைபேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுவர (Factory Settings)
*#7370#
உங்கள் தகவல்களை அழித்து கைபேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுவர
*#2820#
Bluetooth முகவரியை அறிய (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்)
*#62209526#
WiFi MAC முகவரியை அறிய (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்)
*#92702689#
Warrenty, Counter,Life Time தகவல்களை பெற
*3370#
EFR ஐ ஆக்டிவேட் செய்ய (இதன் மூலம் தரமான அலையை பெற முடியும். பேட்டரி சீக்கிரமாக சக்தியை இழக்கும்).
*3370#
EFR ஐ டீஆக்டிவேட் செய்ய (இதன் மூலம் சாதரண அலையை பெற முடியும். பேட்டரி எப்போதும் போல் செயல்படும்).

Thursday, September 29, 2011

நளினி தொடர்: பாகம் -2 விடியாத இரவு...

ஊரெல்லாம் இருட்டு. சென்னையில் பிரதான ஏரியாவான ஆர்.ஏ. புரத்தின் க்ரீன்வேஸ் சாலையும் இருட்டாகத்தான் இருந்தது. என் கண்கள் தூக்கத்தைத் தேடினாலும், பக்கத்து அறையில் என் கணவர் மீது என்னவெல்லாம் சித்ரவதைகள் அரங்கேற்றப்படுகின்றனவோ என்ற பயம், தூக்கத்தை மறுத்தது. எரிச்சலில் தவித்த என் கண்களுக்கு, அந்த அறையின் பளீர் வெளிச்சம் அலர்ஜியைக் கொடுத்திருக்க வேண்டும். வாழ்க்கையின் எந்த இடத்தில் இருக்கிறோம், எதிர்காலம் என்ன என்றே புரியாத கேள்விகளில் புரண்டு கொண்டிருந்த என்னை பூட்ஸ் கால்களின் சத்தம் எழுப்பியது.



திரும்பிப் பார்த்தேன். குண்டு முகமுடைய அந்த போலீஸ் உயரதிகாரி, கண்களில் கொடூரம் கொப்பளிக்க என்னை நோக்கி வந்தார். அவரைப் பார்த்து எழுந்து நின்றேன். அவரது கைகளோ நேராக என் கழுத்துக்கு நீண்டது. என் கழுத்தில் கிடந்த தாலியை கெட்டியாகப் பிடித்தது. என் உடல் கூசியது. என்னையும் மீறிய என் உடல் நடுக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. உடம்பெல்லாம் தொப்பலாக நனைந்திருந்தது. அவரின் கைகளின் பலத்துக்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை. நொடியில் என் தாலியை பிடுங்கி எறிந்தார். என் இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று மோதவைத்து வளையல்களை உடைத்தார்.


nalini-story-2
அடுத்து அவரின் பார்வை என் கால்களுக்குச் சென்றது. மெட்டியையும், கொலுசையும் கழற்றி வீசினார். ஒரு விதவையாகவே அங்கே நான் உருவாக்கப்பட்டேன். அதைப் பார்த்து ரசித்து கை தட்டினார். அடுத்த நொடியில் நான்கைந்து காவலர்கள் வந்து அவர் பின்னால் நின்றார்கள். ‘ம்.. ஆரம்பிங்க’ என்று அந்த அதிகாரி இசைவு கொடுக்க, அந்த காவலர்கள் கோரஸாக என்னை திட்டத் துவங்கினார்கள். சொல்லப் போனால், அவர்கள் பிரயோகித்த அசிங்க வார்த்தைகள் என்னை அன்றைக்கே கொன்றுவிட்டது.



வார்த்தைகளால் கொல்லப்பட்டு ஒரு நடைபிணமாக நின்றேன். மீசையில்லாத அமுல்பேபி நடிகர் பெயர்கொண்ட ஆய்வாளர் என் பக்கத்தில் வந்தார். என் கண்களை நேராகப் பார்த்தவர், ‘கொலைகாரி, நடுத்தெருவில் உன்னை அம்மணமாக ஓடவிட்டு, கல்லால் அடிச்சுக் கொன்னாலும் என் ஆத்திரம் தீராது. உன்னை........................தால்தான் என் வெறி அடங்கும்...” என்று அவரது கைகளால் அசிங்க சைகைகளைக் காட்டினார். நான், கண்களை மூடிக்கொண்டேன். இதைப் பார்த்துவிட்டு, பலம் கொண்ட மட்டும் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அன்றைய முழு இரவும், எனக்கு காதுகள் கேட்கவில்லை. இங்கே இன்னொரு விஷயத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு ஆசை. இந்தத் தொடரில் நான் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை. எனக்கு நடந்த அவலங்கள், மனித உரிமை மீறல்கள் வெளி உலகுக்கு தெரிய வேண்டும் என்பது மட்டும்தான் என் நோக்கம்.

மறுநாள், ஆயுதம் தாங்கிய போலீசார் எங்களை ரவுண்டப் செய்து நின்றார்கள். என்னையும், என் கணவரையும் வேனில் ஏற்றினார்கள். எங்கே கொண்டு போகிறார்கள் என்பதுகூட எங்களுக்குத் தெரியாது. செங்கல்பட்டில், ஒரு நீதிமன்றத்தில் வண்டியை நிறுத்தியபோதுதான், நாங்கள் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். நீதிமன்ற வளாகத்தில் வைத்தே, ‘நீதிபதிகிட்ட நேத்து ராத்திரி நடந்ததைச் சொல்ல மாட்டீங்கன்னு தெரியும். சொன்னா... உங்க உசுருக்கு உத்தரவாதம் கிடையாது’ என்று எப்போதோ பார்த்த சினிமா வசனத்தை உச்சரித்து மிரட்டினார்கள். நீதிபதி முன்பு நிறுத்தியபோதுகூட என் பக்கத்தில் நின்ற போலீஸார், உசுருக்கு உத்தரவாதம் இருக்காது என்று மீண்டும் மீண்டும் சொன்னார்கள். நீதிபதி, எங்களை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை.



எங்கிருந்து எனக்குள் அப்படி ஒரு ஆவேசம் தோன்றியதோ தெரியாது. ‘‘அய்யா நாங்க எந்தக் குற்றமும் செய்யல. தயவுசெஞ்சு எங்களுக்கு அரசாங்க செலவுல வக்கீல் வெச்சுக் கொடுங்க’’ என்று நீதிபதியிடம் வேண்டினேன். நீதிபதி, தலையை நிமிராமலேயே, “அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்” என்றார். அவர் சொல்லி முடிப்பதற்குள், அருகில் இருந்த அறைக்குள் எங்களை வேகவேகமாக இழுத்துச் சென்றுவிட்டார்கள்.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக, ஏதேதோ வாதங்களை எங்களுக்கு எதிராக அரசுத் தரப்பு வக்கீல் அடுக்கினார். எதுவுமே சரியாக கேட்கவில்லை, புரியவும் இல்லை. பின்பு, மீண்டும் நீதிபதி முன்பாக நிறுத்தி, ஒரு வினாடிகூட தாமதிக்காமல் எங்களை வண்டியில் ஏற்றினார்கள். “உனக்கு வக்கீல் வேணுமா? நாங்க வச்சுக் கொடுக்கிறோம்’’ என்று கருவியவாறே வண்டியில் வைத்தே என்னை அடிக்க ஆரம்பித்தார்கள். ஏற்கெனவே நொந்து போயிருந்த என் உடம்புக்கு அது வலிக்கவில்லை. நான், வக்கீல் வேண்டும் என்று கேட்ட விவகாரம், மறுநாள் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது. எங்களை போலீஸ் காவலில் அனுப்பும் ரிமாண்ட் ரிப்போர்ட்டிலும் இந்த விபரங்கள் நீதிபதியால் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், என்ன பதிவு செய்து என்ன? வக்கீல் வைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொடக்கம் முதலே என்னை இவ்வழக்கில் அப்ரூவராக மாற்றி, என்னை என் கணவரிடமிருந்து பிரித்து, இலங்கைத் தமிழரான அவரை முதல் குற்றவாளியாக்க வேண்டும் என்பதே சிறப்புப் புலனாய்வுக் குழுவின்(எஸ்.ஐ.டி.) திட்டமாக இருந்தது. என்னை மட்டும் வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும், சித்ரவதைகளை நிறுத்திவிடுவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறுவது, கணவன், மனைவி இடையே வெறுப்பை உண்டாக்குவது, மிரட்டுவது, சித்ரவதை செய்வது என எஸ்.ஐ.டி கையாளாத தந்திரங்களே இல்லை.

என் கணவரை நான் வெறுக்கவேண்டும் என்பதற்காக, என்னென்ன பொய்களைச் சொல்ல முடியுமோ, அத்தனை பொய்களையும் என்னிடம் சொன்னார்கள். இதேபோல், கர்ப்பிணியான என்னைப் பற்றி, எனது கணவரிடம் பல்வேறு பொய்களைக் கூறி, என் கணவரும் என்னை வெறுக்கும்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

இந்த முயற்சிக்கு, என் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்த எங்கள் வாரிசு தடையாக இருக்கும் என்று எஸ்.ஐ.டி.யினர் கருதினர். நான் உட்கார்ந்து கொண்டிருக்கும் போதெல்லாம் ஷூ காலை வேகமாக என் வயிற்றுக்கு நேராக கொண்டு வந்து, ‘‘குழந்தையை காலால் மிதிச்சே கொன்னுடுவோம்’’ என்று ஒருவர் மாற்றி ஒருவர் மிரட்டுவார்கள். நான், ஒவ்வொரு நொடியும் என் குழைந்தையை கொன்றுவிடுவார்களோ என்ற பயத்திலேயே இருப்பேன்.



இந்த வழக்கில் எங்கள் அனைவரின் ஒப்புதல் வாக்குமூலங்களையும் ஒரே ஒரு அதிகாரிதான் வரிசையாகப் பதிவு செய்தார். மல்லிகையில் நான் பார்த்த அதிகாரிகளில் இந்த அதிகாரி மீது மட்டும் ஏனோ ஒரு மரியாதை வந்தது. ஆனால் அடுத்த நாள் ‘மரியாதைக்குரியவன் நான் அல்ல’ என்பதை அந்த அதிகாரியும் காட்டிவிட்டார். அந்த அதிகாரியும் மற்ற சில அதிகாரிகளும், தொடர்ந்து 20 நாட்கள் என்னை தூங்கவிடாமல் பார்த்துக்கொண்டனர். இருபது நாட்களும் அவர்களுக்கு அதுதான் டியூட்டியாக இருந்தது. தினமும் இரவு 10 மணியானால் போதும். ஒரு பெண் போலீஸ் என்னை அழைத்துச் சென்று, அன்று எந்த அதிகாரி பணியில் இருக்கிறாரோ, அவருடைய அறைக்குள் என்னை விட்டுவிடுவார். கதவு வெளியிலிருந்து சாத்தப்படும்.



இதெல்லாம், என்னை எந்த நேரம் யார் பலாத்காரம் செய்வார்களோ? என்ற பயத்தை என்னுள் ஏற்படுத்தும் தந்திரம் என்பது பின்னாளில் எனக்குத் தெரிய வந்தது.



அறையில் நுழைந்ததும் அந்த அதிகாரி, “ஏண்டி, தே.....! நீயும், உன் குழந்தையும் உயிரோடு இருக்கணும்னா, ஒழுங்கா எல்லா உண்மையையும் சொல்லிடு. இல்லைன்னா இங்கிருந்து உயிரோட போக முடியாது’’ என்று ஆபாச வார்த்தைகளால் திட்டுவார். நான், எனக்குத் தெரிந்த உண்மைகளை ஒன்றுவிடாமல் சொல்ல ஆரம்பிப்பேன்.

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவர் கண்களை மூடி, தூங்குவதுபோல் நடிப்பார். அவர் தூங்கிவிட்டார் என நினைத்து, நான் சொல்வதை நிறுத்தினால், ‘யார ஏமாத்தப் பார்க்கற...’ என்று மீண்டும் ஆபாச வார்த்தைகளால் திட்டி அடிக்கவும் செய்வார். நான் திரும்பவும் சொல்ல ஆரம்பிப்பேன். அப்போது மீண்டும் அவர் கண்களை மூடுவார். நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். ஆனால் அவரோ...

-இரவுகள் நீளும்

நன்றி மீடியா வாய்ஸ் வார இதழ்


கருணாநிதி வலையில் வீழ்ந்த ஜெயலலிதா!


வென்றாலும் வீழ்ந்தாலும் அரசியல் தன்னைச் சுற்றியே சுழல வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் கருணாநிதி. அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளை மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தொடங்குவதற்கு முன்பே, ''இந்தத் தேர்தலில் தி.மு.க. தனித்துப் போட்டி!'' என்று கருணாநிதி அறிவித்தார். கடந்த 40 ஆண்டுகளாக சவாரி பாலிடிக்ஸ் செய்துவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு, இதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. கருணாநிதியின் அறிவிப்புக்குக் கருத்து சொல்லாத தங்கபாலு, ''காங்கிரஸும் தனித்துப் போட்டி!'' என்று காமெடி பண்ணினார். ''இத... இதத்தான் எதிர்பார்த்தேன்' என்றார் இளங்கோவன். தீராத தலைவலியில் சிக்கி இருக்கும் சிதம்பரத்துக்கு இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட நேரம் இல்லை. ஜி.கே.வாசன் இப்போது கப்பலைப்பற்றி மட்டுமே பேசுகிறார். கட்சிபற்றிப் பேசுவது இல்லை. தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்கும் ஃபெவிக்கால் வைத்து ஒட்டும் காரியத்தை எப்போதும் பார்க்கும் காங்கிரஸ் பத்திரிகையான 'தேசிய முரசு’கூட, 'இது தி.மு.க-வுக் கும் நல்லது... காங்கிரஸுக்கும் நல்லது’ என்றது. தன்னைச் சமாதானப்படுத்த டெல்லியில் இருந்து யாராவது வருவார்கள் என்று கருணாநிதி காத்திருந்தார்; ஏமாந்தார். மக்களவைத் தேர்தலைத் தவிர, வேறு எதிலும் அக்கறை காட்டாத காங்கிரஸ் மேலிடத்துக்கு, தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கப்போகும் விஷயம் தெரியுமா என்றே தெரியவில்லை!


கருணாநிதியின் அறிவிப்பு தொல்.திருமாவளவனுக்கு மட்டும்தான் பெரும் தொல்லையாகப் போனது. ''காங்கிரஸைப் பழிவாங்குவதாக நினைத்து சிறுத்தைகளையும் ஒதுக்கிவிட்டார்!'' என்று அவரால் ஒப்பாரிவைக்கவே முடிந்தது. ஈழத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதிக்காக எல்லா வலிகளையும் தாங்கிய திருமாவை உதாசீனப்படுத்தியது, கருணாநிதியின் அரசியல் தீண்டாமையாகவே கணிக்க வேண்டியுள்ளது. அன்றைய முகமூடிக்கு திருமா தேவைப்பட்டார். இன்று வேண்டாம் என்று கருணாநிதி நினைக்கிறார்.

இந்த அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், சிறுத்தைகள் மூன்றுமே தேர்தலை தனித் தனியாகச் சந்திக்கின்றன!

அடுத்து அ.தி.மு.க!

சட்டமன்றத் தேர்தல் வெற்றிச் செய்தி வர வர... பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, ''இது தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த வெற்றி'' என்றார். மறு நாள் எம்.ஜி.ஆர். சிலைக்கு வெயிலில் மாலை அணிவித்து வணங்க வந்தபோது, ''இது அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த வெற்றி'' என்றார். தே.மு.தி.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சரத்குமார், டாக்டர் கிருஷ்ணசாமி என்று வலுவான கூட்டணி அமைத்து வென்றவர் மன நிலையில் அன்றே மாற்றம் தெரிந்தது. விஜயகாந்த்தை இந்தக் கூட்டணிக்குள் கொண்டுவர எத்தகைய திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளும் கெஞ்சல்களும் அ.தி.மு.க. தரப்பால் மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிந்தவராகவே இருந்தாலும், வெற்றியை விஜயகாந்த்துடன் பங்கிட்டுக்கொள்ள ஜெயலலிதா தயாராக இல்லை என்று அப்போதே வெளிச்சத்துக்கு வந்தது!


இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸ் பக்கமாக அடித்த டார்ச்சை கருணாநிதி கட் செய்தது... ஜெயலலிதா சிந்தனையில் புது வெளிச்சம் பாய்ச்சியது. 'தோற்ற கருணாநிதியே தனியாக நிற்கும்போது, ஜெயித்த நமக்கு என்னவாம்?’ என்று ஜெயலலிதா நினைத்தார். சட்டமன்றத் தேர்தலில் தோற்ற கருணாநிதி, உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டால், பெரிய பிரச்னை எதுவும் இல்லை. சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு இதில் சிறு சறுக்கல் ஏற்பட்டாலும் பெரும் சங்கடம் ஏற்படும் என்பதை அவரிடம் சொல்வதற்கு எவரும் இல்லை!

தே.மு.தி.க-வுக்கு அ.தி.மு.க-விடம் இருந்து அழைப்பே இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும்தான் பழகிய பாசத்துக்காக சீனியர் அமைச்சர்களிடம் பேசிப் பார்த்தார். ''அம்மா சொன்னதும் முதல் போன் உங்களுக்குத்தான் வரும்'' என்றார்கள் அமைச்சர் கள். ஜெ. சொல்லவும் இல்லை... போன் வரவும் இல்லை. கம்யூனிஸ்ட்டுகளுக்கு மட்டும்தான், நிறைவேறாத கோரிக்கை என்று தெரிந்தும் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் இயல்பு உண்டு. மேயர் வேட்பாளர் 10 பேரை ஜெயலலிதா அறிவித்த பிறகும் நம்பிக்கையோடு பேச வந்தார்கள். 'இன்னுமா வருகிறீர்கள்?’ என்று நகராட்சிப் பட்டியலை விட்டார் ஜெ. 'இது சரியல்லவே’ என்று உடன்பாடான விமர்சனத்தையே மார்க்சிஸ்ட் விட்டது. 'இன்னுமா நம்புகிறீர்கள்?’ என்று ஊராட்சித் தலைவர் பட்டியலை விட்டார் ஜெ. மார்க்சிஸ்ட்டுகளுக்கு லேசாக ரோஷம் வந்தது. ஆனாலும், தா.பாண்டியனின் பக்தி தொடர்ந்தது. 'அவசரப்பட வேண்டாம்’ என்று மார்க்சிஸ்ட்டுகளுக்கு அறிவுரை சொன்னார். பெரிய வேட்டிகளே பறந்தபோது, சரத்குமார், டாக்டர் கிருஷ்ணசாமியால் என்ன செய்ய முடியும்? வேறு வழி இல்லாமல் தே.மு.தி.க. பட்டியலை வெளியிட்டது. மார்க்சிஸ்ட் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. கடந்த தேர்தலில் 'வைகோ வேண்டாம்’ என்று முதலியே முடிவு எடுத்துக் காலம் கடத்தியது போல, இந்த முறை விஜயகாந்த், கம்யூனிஸ்ட்டுகள் விஷயத்தில் ஜெயலலிதா நடந்துகொண்டார். இது நல்ல அரசியலும் அல்ல... கூட்டணி தர்மமும் அல்ல. சக அரசியல் சக்திகளை வெறும் கறிவேப்பிலையாகக் கருதும் எண்ணம், எதிர்பாராத நேரத்தில் சறுக்கலையே கொடுக்கும். நல்லதையும் அல்லதையும் சொல்ல நண்பன் இல்லாதது சொந்த வாழ்க்கைக்கு மட்டும் அல்ல; பொது வாழ்க்கைக்கும் இழப்பாகவே ஜெயலலிதாவுக்கு இருக்கப்போகிறது!

இதை ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தலில் உணர்வாரோ, இல்லையோ திருச்சி மேற்கு இடைத்தேர்தல் உணர்த்தும்!

'தி.மு.க, அ.தி.மு.க. இரண்டுடனும் கூட்டணி இல்லை’ என்று அறிவித்த வைகோ, எல்லா இடங்களுக்கும் வேட் பாளர் அறிவித்தார். பாரதிய ஜனதா எப்போதும் தனியாகவே இருக்கும். இப்போதும் அப்படியே. திருமாவளவனுடன் கூட்டணி போடலாம் என்று நினைத்த டாக்டர் ராமதாஸ், அதையும் செய்யாமல் தனியே நிற்கிறார். இப்படி எல்லோருமே தனியாக நிற்கிறார்கள்.தமிழ் மக்கள் பார்ப்பது வித்தியாசமான காட்சி. எல்லாக் கட்சிகளும் இப்படி தனித்து எப்போதும் நின்றது இல்லை. ''தனித்துப் போட்டியிடும் தைரியம் எனக்கு மட்டும்தான் உண்டு'' என்ற விஜயகாந்த், ஜெயலலிதாவுடன் சேர்ந்தார். ''எல்லோரும் தனித்து நின்றால் நானும் தயார்'' என்ற டாக்டர் ராமதாஸ் எல்லாக் கூட்டணியிலும் இருந்துவிட்டார். ஆனால், அப்படிப்பட்ட எந்தத் திட்டமிடல்களும் இல்லாமலேயே கட்சிகள் பிரிந்துவிட்டன. முதன்முதலாக தமிழ்நாட்டில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு என்பதைத் தெரிந்துகொள்ளப்போகிறோம். மொத்த வாக்காளர்களைக் கட்சிரீதியாகக் கணக்கிடப்போகிறோம்.

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல்தான் முன்னோட்டம். ஒவ்வொரு கட்சியும் தங்கள் பலத்தைக் காட்டி, அந்தத் தேர்தலில் கூட்டணி அமைக்க இதுவே அடித்தளம் அமைக்கப்போகிறது என்ற அடிப்படையில் பார்த்தால், கருணாநிதி நாட்டுக்கு நல்லதே செய்திருக்கிறார்!
விகடன்

கரெக்ட் ரேட்டில் கட்டலாம் வீடு! - விரயம் தவிர்க்க விவரமான பட்ஜெட்...


டுத்தர மக்களின் வாழ்நாள் கனவு சொந்தமாக ஒரு வீடு கட்டுவது. இந்த கனவை நனவாக்குவதில் சிக்கலாக இருப்பது இரண்டு விஷயங்கள்தான். சிக்கல் நம்பர் ஒன், எகிறிக் கிடக்கும் ரியல் எஸ்டேட் விலை. குறைந்தபட்சம் ஆறேழு வருடங்களுக்கு முன்பு நிலம் வாங்கியிருந்தீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்தான். நீங்கள் வாங்கிய நிலத்தின் மதிப்பு இன்றைக்கு பல மடங்கு பெருகி இருப்பதைப் பார்த்து நீங்களே உங்களை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், அன்றைக்கு வாங்கத் தவறியவர்கள் இன்று வாங்க நினைத்தால் அதைவிட பல மடங்கு பணம் கையில் இருக்க வேண்டும்.

சிக்கல் நம்பர் டூ, மணல், ஜல்லி, சிமென்ட் போன்ற கட்டடம் கட்டத் தேவையான பொருட்களின் விலை வானத்துக்கும் பூமிக்கும் தாவிக் கொண்டிருப்பது. மணல் விலை ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. சென்னையில் இருக்கும் விலை வேறு; நெல்லையில் இருக்கும் விலை வேறு. செங்கல்லின் கதையும் அதேதான். இவை தவிர, கட்டடம் கட்டுபவர்களுக்கான கூலியும் பாரதூரமாக மாறுகிறது. இப்படி சந்துக்குச் சந்து கட்டடம் கட்டுவது தொடர்பான அத்தனை விஷயங்களும் வெவ்வேறாக இருக்க, புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் ஏகத்துக்கும் குழம்பித்தான் போவார்கள்.

''என் பக்கத்து வீட்டுக்காரர் கட்டுற அதே அளவுக்குத்தான் நானும் வீடு கட்டுறேன். ஆனா, என்னைவிட கம்மியாத்தான் அவரு செலவு பண்றாரு. நான்தான் ஏமாந்துட்டேன்'' என்று புலம்புவர்கள் ஒருபக்கம்...

''எட்டு லட்ச ரூபாய்க்குள்ள வீடு கட்டி முடிச்சுடலாம்னு நெனைச்சு ஆரம்பிச்சேன்... இன்னைக்கு பன்னிரண்டு லட்சத்தைத் தாண்டிடுச்சு'' என்று புலம்புவர்கள் இன்னொரு பக்கம்... ஆக மொத்தத்தில், இன்றைக்கு கரெக்ட்-ஆன செலவில் வீடு கட்டுவது எப்படி என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. உள்ளபடி ஆயிரம் சதுர அடி வீடு கட்ட எவ்வளவு பணம் செலவாகும்? கான்ட்ராக்ட் முறையில் வீடு கட்டப் போவதாக இருந்தால் எவ்வளவு தரலாம்? ஃபிளாட்-ஆக இருக்கும் பட்சத்தில் எவ்வளவு விலை கொடுத்து வாங்கலாம்? என்பதை யாராவது எடுத்துச் சொன்னால் கோடி புண்ணியமாகப் போகும் என்கிறீர்களா?

இதோ உங்களுக்காகவே சரியான செலவில் வீடு கட்ட சூப்பர் மாடல் பட்ஜெட்... ஒவ்வொரு இடத்தைப் பொறுத்து ஒவ்வொரு விலை இருந்தாலும் இந்த பட்ஜெட்டை வைத்துக்கொண்டு ஓரளவு சரியான விலைதான் நாம் கொடுக்கிறோமா என்பதை செக் செய்து கொள்ளலாம்.

வீடோ, ஃபிளாட்டோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், பில்டர் அல்லது புரமோட்டர்கள் பல்வேறு டெக்னிக்கல் வார்த்தைகளைச் சொல்லி நம்மை குழப்ப வாய்ப்பிருப்பதால், முதலில் சில விஷயங்கள் பற்றி நமக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வோம்.

கார்பெட் ஏரியா

நான்கு சுவர்களுக்கு இடைப்பட்ட அளவு. அதாவது, வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக்குள் கார்பெட் விரித்தால் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்ளுமோ அந்த அளவுதான் கார்பெட் ஏரியா.

பிளின்த் ஏரியா

கார்பெட் ஏரியாவுடன் சுவர்களின் தடிமன் சேர்ந்தது.

சூப்பர் பில்ட் அப் ஏரியா

பிளின்த் ஏரியா அளவில் 15% முதல் 20% அதிகரிப்பது சூப்பர் பில்ட் அப் ஏரியா. இந்த பரப்புக்குதான் விலை சொல்வார்கள். பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதை, மாடிப் படிக்கட்டு, லிஃப்ட் அறை, மோட்டார் அறை, உடற்பயிற்சி கூடம் போன்றவற்றின் அளவுகள் பிளின்த் ஏரியாவுடன் சேர்க்கப்பட்டு, சூப்பர் பில்ட்அப் ஏரியா கணக்கிடப்படும்.

யூ.டி.எஸ்.

அடுக்குமாடிக் குடியிருப்பின் சதுர அடி விகிதாசாரத்துக்கு ஏற்ப, அந்த மனையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதுர அடி மனை சொந்தம் என்பதை குறிப்பது. 'பிரிக்கப்படாத மனைப் பரப்பு’ (Undivided Share) என்று கிரய பத்திரத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கும். (யூ.டி.எஸ். எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை பெட்டிச் செய்தியில் பார்க்க!)

மேற்சொன்ன இந்த நான்கு விஷயங்களையும் நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால், உங்களுக்குத் தேவையான அல்லது உங்களுக்கு கிடைக்கப் போகும் கட்டடத்தின் அளவு தெரிந்துவிடும். இனி, இந்த கட்டடம் கட்ட என்னென்ன பொருட்கள் தேவைப்படும்? அதன் விலை என்ன? என்பதைப் பார்ப்போம்...




என்ன செலவாகும்?

ஆயிரம் சதுர அடி பிளின்த் ஏரியா கட்டடம் கட்ட சுமார் 15 லட்ச ரூபாய் செலவாகும். (ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு செலவாகும் என்பது மேலே தனியாகக் கொடுக்கப் பட்டுள்ளது.)

சொல்லப்பட்ட கணக்கி லிருந்து விலைவாசி உயர்வைப் பொறுத்து மணல், செங்கல், சிமென்ட், கம்பி மற்றும் இதர பொருட்களின் விலை 2% முதல் 3% வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த கணக்குபடி ஒரு சதுர அடி கட்ட சுமார் 1,500 ரூபாய் ஆகிறது. இது பில்டர்கள் கட்டுவதற்கான செலவு. நீங்களே முன்நின்று கட்டும்போது 1,400 ரூபாயிலிருந்து 1,350 ரூபாய் வரை குறைய வாய்ப்பிருக்கிறது. முதல் தரமான பொருட்களை வாங்குவதாக நினைத்தே இந்த கணக்கு போடப்பட்டுள்ளது. சென்னையைவிட மதுரை, சேலம், திருநெல்வேலியில் மணல், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை குறைவு என்பதால், செலவு இன்னும்கூட குறைய வாய்ப்பிருக்கிறது.

நாம் வாங்கும் ஒரு பிளாட்டின் விலை ஓரளவு நியாயமானதாக இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது என்ற விஷயத்துக்கு இப்போது வருவோம்... உதாரணமாக நீங்கள் சென்னை தாம்பரத்திற்கு அருகில் ஒரு ஃபிளாட்டை வாங்குவதாக முடிவு செய்கிறீர்கள். அந்த ஃபிளாட்டின் விலை ஒரு சதுர அடி சுமார் 3,000 ரூபாய் என்று பில்டர் சொல்கிறார்... நீங்கள் வாங்கப்போகிற ஃபிளாட்டின் சூப்பர் பில்ட் அப் ஏரியா 952 ச.அடி. என்றும் உங்களுடைய யூ.டி.எஸ். 555 ச.அடி. என்றும் அவர் சொல்கிறார்.

ஆனால், நம் கணக்குப்படி எவ்வளவு செலவு ஆகும் ஃபிளாட்டின் விலை எவ்வளவு வரும் என்று பார்க்கலாம்...

அங்கு மனை விலை ஒரு சதுர அடி 1,400 ரூபாய் என்று விசாரித்தபோது நமக்குத் தெரிய வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்... அடுத்து கட்டுமானச் செலவு எவ்வளவு ஆகும் என்று பார்க்கலாம்... நாம் முன்பு கணக்கிட்டபடி ஒரு சதுர அடி 1,400 ரூபாய் எனும்பட்சத்தில் 952 ச.அடிக்கான கட்டுமானச் செலவு 13,32,800 ரூபாய் வரும். அதேபோல் 555 சதுர அடி மனைக்கான விலை (சதுர அடி விலை 1,400 ரூபாய்) 7,77,000 ரூபாய் ஆகும். ஆக, மொத்தம் 21,09,800 ரூபாய் ஆகும்.

இந்த கணக்கின்படி பார்த்தால் ஒரு ச.அடிக்கான விலை சுமார் 2,220 ரூபாய் வருகிறது. இதற்கு மேல் பில்டர் சொல்லும் விலை அவரது லாபமாகும். ஒருவேளை அவர் 20% லாபம் வைத்தால் சதுர அடி 2,660 ரூபாய் என்று வைத்து விற்பார். ஒருவேளை அவர் பத்திரிகை மற்றும் டி.வி-களுக்கு விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்து, மேலும் புராஜெக்ட்டுக்கு கடனும் வாங்கி இருந்தால், கடனுக்கான வட்டி என எல்லாவற்றையும் சேர்ப்பார். அந்த வகையில் அவர் சுமார் 2,900-3,000 ரூபாய் வரை சொல்ல வாய்ப்பிருக்கிறது.



கவனிக்க வேண்டியவை..!

கட்டிய வீட்டை வாங்கும்போது!

* தனி வீடுகளைப் பொறுத்தவரையில் பிளின்த் ஏரியா 1,000 சதுர அடி என்றால் கார்பெட் ஏரியா 750-800 சதுர அடி வரை இருக்கும். ஃபிளாட் என்று வரும்போது, 600-650 சதுர அடிதான் இருக்கும். பொது இடங்கள், பார்க்கிங் என பொதுவான வசதிகள் அதிகமாக அதிகமாக, கார்பெட் ஏரியா என்பது குறைந்து கொண்டே வரும்.

* எப்போது ஃபிளாட் வாங்கினாலும் கார்பெட் ஏரியாவை அளந்து உறுதி செய்யுங்கள். கட்டி முடித்த ஃபிளாட் என்றால் சுவர்களுக்கு இடையிலான தரையின் அளவை துல்லியமாகக் கணக்கிடுங்கள். பில்டர் சொல்லும் பிளின்த் ஏரியாவிலிருந்து சூப்பர் பில்ட் அப் ஏரியா 15 முதல் 20 சதவிகிதம் அதிகமாக இருந்தால் அந்த பில்டர் நியாயமானவர். அதற்கு மேல் இருந்தால் எதற்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கேளுங்கள்.

ஏனென்றால், நீங்கள் விற்கும்போது இந்தப் பிரச்னை எழும். மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள், நீச்சல் குளம், தோட்டம், வாக்கிங் செல்லும் நடைபாதை போன்றவை விடப்பட்டிருக்கும் புராஜெக்ட்களில் பிளின்த் ஏரியா, சூப்பர் பில்ட் அப் ஏரியா 30-35 சதவிகிதமாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

* அடுக்குமாடி குடியிருப்பு களில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அப்ரூவல் பிளான்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்ப்பது அவசியம். வீட்டுக் கடன் வாங்காத பட்சத்தில் முறைப்படி அப்ரூவல் வாங்காமல் கட்டப்பட்ட வீடுகளை குறைந்த விலைக்கு தள்ளிவிடுவது நடக்கிறது. இதுபோன்ற வீடுகளை வாங்கினால் பிற்காலத்தில் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது. அவசரத்துக்கு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது.

* காமன் ஏரியா அனைவரும் பயன்படுத்தும்படி இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். சில பில்டர்கள்/புரமோட்டர்கள், காமன் ஏரியா என்று ஒரு பகுதியைக் காட்டி விட்டு, அதில் அறை அல்லது கடை கட்டி விற்று விடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

* சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, கார் நிறுத்தும் இடம் சூப்பர் பில்ட் அப் ஏரியாவில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கார் நிறுத்தும் இடத்துக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை. திறந்தவெளி கார் நிறுத்தும் வசதி என்கிறபோது நயா பைசா கூட கொடுக்கத் தேவையில்லை.

* தனி வீடு என்கிறபோது அஸ்திவாரம் எத்தனை அடி என்பதை கவனியுங்கள். குறைந்தது நான்கு அடி போடுவது கட்டடத்துக்கு நல்லது. சில பில்டர்கள் இரண்டு அடிதான் தோண்டுவார்கள் என்பதால் உஷாராக இருப்பது நல்லது. இதேபோல், வீட்டில் அறையின் உயரம் குறைந்தது 10 அடி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சில பில்டர்கள் ச.அடி விலையைக் குறைத்துச் சொல்லிவிட்டு, வீட்டின் உயரத்தை 9.5 அடி அல்லது 9 அடியாக குறைக்கவும் வாய்ப்புண்டு!

* வீட்டைச் சுற்றி குறைந்தது 5 அடி விட்டிருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். பல பில்டர்கள் 2 அடிதான் விடுகிறார்கள். இது பிற்காலத்தில் பிரச்னை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.


சொந்தமாக வீடு கட்டும்போது..!

* செப்டிக் டேங், மாடிப் படி, தண்ணீர் தொட்டி, போர்ட்டிகோ, சுற்றுச்சுவர் கணக்கை எல்லாம் மொத்த சதுர அடி கணக்கில் சேர்க்க விடாதீர்கள். உதாரணத்துக்கு சுற்றுச் சுவர் கட்ட ஒரு சதுர அடிக்கு 200 ரூபாய்தான். அந்த வகையில் மேற்கண்ட செலவுகளை தனியாக கணக்கிட்டால் மொத்த செலவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

* கீழ்தளத்தை விட மேல்தளம் கட்டும்போது செலவு 10-15% குறையும். கணக்குபடி இன்னும் அதிகமாககூட குறைய வேண்டும். ஆனால், பொருட்களை மேல் தளத்துக்கு எடுத்துச் செல்ல கூடுதல் கூலி கொடுக்க வேண்டியிருக்கும்.


விகடன்

Wednesday, September 28, 2011

முரண் படம் ஃபாரீன் பட ரீமேக் அல்ல - சேரன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZgQd81r82kz59C7FsKEymSeNyGfXSA9NirRcWM4uAVyubvJUaRUvCAPIPltSj-uQIz7LjAzkQ-2XKGHxQElBrdzeuNrWG9eISA-NJyIF06AjtTYRJQHmADIzi5iz-u1ARzo-5ugyrWR4/s1600/muran_movie_wallpapers_posters_01.jpg

தியேட்டருக்குப் போகாதீங்க!

சேரனின் புது ரூட்!

சேரனுடன் ஒரு சந்திப்பு...

'1. ' 'முரண்’ என்ன மாதிரியான படம்?''

''இந்தப் படம் ஒரு கதையா ரசிகர்களுக்கு புது அனுபவத்தைத் தரும். 'அடுத்து இப்படித்தான் போகும்’ என்ற ரசிகனின் யூகத்துக்கு எதிர் திசையிலேயே படம் பயணிக்கும். பல இடங்களுக்குப் பயணம் போகிறோம். அப்போது யாரோ ஒருவரைச் சந்திக்கிறோம். சில சந்திப்புகள் உறவாக, நட்பாக, காதலாக மாறுகிறது. சில சந்திப்புகள் பிரச்னைகளாகவும் மாறும். தெளிவான ஒரு மனிதனும் புதிரான ஒரு மனிதனும் சந்திக்கும்போது நடக்கும் விஷயங்களும் அதற்குப் பிறகான நிகழ்வுகளும்தான் முரண்!''

http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-movies/muran/muran_movie_new_stills_3080.jpg


2. ''படத்தில் என்ன ஸ்பெஷல்?''

''முதலில் பிரசன்னா. அர்ஜுன் என்ற அவர் கேரக்டர் ஒரு புதிர். ஆனால், நந்தா என்ற என் கதாபாத்திரமோ, எதையும் அழகாக முடிவு எடுத்து நிதானமாகப் போகக் கூடிய தெளிவான ஆள். உண்மை யைச் சொல்ல வேண்டும் என்றால், இருவருமே அழகாகப் பொருந்தி இருப்பதாகச் சொல்கிறார் கள். படத்துக்குச் சில பெரிய கேமராமேன்களின் பெயர் களைச் சொன்னேன். 'இல்ல சார், என்னைப் புரிஞ்சிக்கிட்டு தயக்கம் இல்லாமல் வொர்க் பண்றவரா இருந்தா நல்லா இருக்கும்’ என்ற இயக்குநர் ராஜன் மாதவ், பத்மேஷ் என்பவரை ரெகமெண்ட் பண்ணினார். அதேபோல் இசையமைப்பாளராக சாஜன் மாதவைச் சொன்னார். அவர், இயக்குநரின் சகோதரர்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1gQUT9z7ufosfLX-UIjUYMQDS93grYXv4RkGKzFmiCRqS1J-BHwGd8m8-UjSvb8xG937TksF-9TaGYEvXYt1AZk5bnyR0tqxQnJsmVtWFqzpZNEyI7CC2Q1pJ2kHQXBpQtPLcebdltCt_/s1600/Muran+Press+Meet+Photos+Stills+Gallery+Cheran+in+Muran+Media+Meet+Pics+%252810%2529.jpg

இருவரும் ரவீந்தரன் மாஸ்டரின் மகன் கள். அவர் மலையாளப் படங்களின் இசையமைப்பாளர். நான் முன்னேறணும் என மனதளவில் என் அண்ணன்தான் நினைப்பான். என் இயக்குநரின் அந்த எண்ணம் எனக்குப் பிடிச்சிருந்தது. கதை முதல் 20 நிமிடங்கள் ஹைவேயிலேயே நடக்கும்.

இரண்டே இரண்டு கேரக்டர் கள்தான். 20 நிமிடங்கள் பயணத்தி லேயே கதை சொல்வது கடினம். அங்கு தான் எங்கள் இருவரின் கதாபாத்திரங்கள் விவரிக்கப்படும். காண்பித்த ஷாட்டையே திரும்பக் காட்டக் கூடாது, எடுத்த இடத்திலேயே திரும்ப எடுக்கக் கூடாது எனப் பெரிய சவால். அந்தக் காட்சிகளை இப்போது பார்க்கும்போது மனதுக்கு நிறைவாக இருக்கிறது!''

http://www.kollywoodimages.com/wp-content/uploads/2011/09/muran-press-meet-08.jpg

'3' 'முரண்’ ஆங்கிலப் படம் ஒன்றின் தழுவல் என்கிறார் களே?''


''தழுவல் இல்லை. எப்போதோ பார்த்த ஒரு படத்தின் இன்ஸ்பிரேஷன் என ராஜன் என்னிடம் முதலிலேயே சொன்னார்.

” அந்தப்பொண்ணை கையைப்பிடிச்சு இழுத்தியா?”

”அப்டி சொல்ல முடியாது, இங்கே வான்னு கூப்பிட்டப்ப லேசா கை பட்டிருக்கலாம்.”



ஆனால், அந்த விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு முழுக்க முழுக்க தமிழ்ச் சூழலுக்குத் தகுந்த மாதிரி திரைக் கதை அமைத்திருக்கிறார். இன்ஸ்பிரேஷன் தவறு கிடையாது. எல்லோருக்கும் வருவதுதானே?''

http://tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Movies-Gallery/Muran-Movie-Stills/Muran-Movie-Stills-0002.jpg




4. ''எந்த விஷயமாக இருந்தாலும் தயங்காமல் கருத்து சொல்பவர் நீங்கள். தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?''

''தொலைக்காட்சி சேனல்களை அரசு கேபிள் டி.வி-யின் மூலம் குறைந்த வாடகையில் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டுசெல்லும் முனைப்பு முதல் சாதனை. அதைச் செயல்படுத்து வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். அரசால் அவை களையப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த கேபிள் டி.வி. திட்டத்தின் மூலம் அரசு சிறு தயாரிப்பாளர்களின் பிரச்னையையும் தீர்க்க முடியும். எல்லாத் திரைப்படங்களும் லாபம் ஈட்டச் செய்து நஷ்டத்தில் இருந்து அவர்களைக் காக்க முடியும். அதற்கு என்னிடம் சில திட்டங்கள் இருக்கின்றன. இன்று மக்கள் அனைவரும் படம் பார்க்கிறார்கள். ஆனால், அதற்கான பணம் உரிய தயாரிப்பாளர்களிடம் போய்ச் சேர்வது இல்லை. யாரோ எங்கேயோ தொடர்ந்து திருடியபடி இருக்கிறார்கள். குடும்பத்தினர் புதுப் படங்களைப் பார்க்க திரையரங்கம் செல்ல வேண்டியது இல்லை. ஒரு படத்துக்கு 25 ரூபாய் கொடுத்தால் போதும். அந்தப் பணம் தயாரிப்பாளர்களுக்கு கேபிள் டி.வி. மூலமாக வர வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அரசுக்கும் வருமானம் வரும். முதல்வர் அவர்கள் மனதுவைத்தால் அவரிடம் இதுபற்றி விளக்கத் தயாராக இருக்கிறேன்!''


நன்றி விகடன்

விஜயகாந்த்தை வளர்த்துவிட்டது என் தப்பு - ஜெ ஆவேசம





http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/news_88483393193.jpg
மிஸ்டர் கழுகு: ''விஜயகாந்த்தை வளர்த்துவிட்டது தப்பு!''

கார்டனில் கர்ஜித்த ஜெ.!
ச்சி வெயில் உலுப்பி எடுப்பதை கழுகார் முகத்தில் பார்க்க முடிந்தது. வந்ததும், ஐஸ் வாட்டரை அருந்துவதற்குப் பதிலாக தலையில் தெளித்துக்கொண்டார். சூட்டைக் குறைக்கும் ஐடியா!

''கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் ஜெய லலிதா கை கழுவுவதைத்தான் தண்ணீர் தெளித்து சிம்பாலிக்காகக் சொல்கிறீரோ?'' என்றோம். அவர், மெள்ளச் சிரித்தபடி,

''அ.தி.மு.க. அணியில் நடப்பதைச் சொல்வதற்கு முன்னால் ஒரு சுவாரஸ்யம்... அதைக் கேட்டுவிடும்!'' என்று பீடிகை போட் டார்!

''தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் விஜயகாந்த் மனம் திறந்து பேசியதை உமது நிருபர் விலாவாரியாக எழுதி இருந்தார். இது கட்சிக்குள் பலத்த சலசலப்பைக் கிளப்பியது. இதையடுத்து, கடந்த 20-ம் தேதி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார் விஜயகாந்த். 'கூட்டம் நடக்குறது வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது. யாரும் காரில் வர வேண்டாம். ஆட்டோவில் வாங்க. வரும் எல்லாரும் கூட்டமா வராதீங்க... தனித்தனியா வந்துடுங்க. வெளியில் யாரும் நின்னும் பேசாதீங்க!’ என்று மாவட்டச் செயலாளர்களுக்குச் சொல்லப்பட்டு இருந்ததாம்.

கூட்டத்தில் விஜய்காந்த் பேசும்போது, 'உங்களை காரில் வர வேண்டாம். கூட்டமா நிற்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லி இருப்பாங்க. எல்லாம் காரணமாகத்தான் சொன்னோம். நம்ம கட்சி ஆபீஸ்ல ஒரு குண்டு ஊசி கீழே விழுந்தாக்கூட, அதைப் பத்திரிகைக்காரங்களுக்கு யாராவதுசொல்றீங்க.

நமக்குள் நாம் என்ன வேணும்னாலும் பேசிக்கலாம். அதை சிலர் பத்திரிகைகளுக்கு சொல்லிட்டா, அவங்களும் பரபரப்பா செய்தி வெளியிடுறாங்க. ரகசியக் கூட்டம்னு நடத்திட்டு அதை வெளியில் சொல்றது எப்படி தர்மமாக இருக்கும்?

நீங்க இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா நிர்வாகிகள் கூட்டம் நடத்துறதையே நான் தவிர்க்க வேண்டி இருக்கும். உள்ளாட்சி தேர்தலில் எதுவும் நடக்கலாம். எதைப்பத்தியும் நீங்க கவலைப்பட வேண்டாம். எல்லோரும் உற்சாகமா வேலைகளைப் பாருங்க. கோவை மாநாட்டில் எல்லா விஷயங்களையும் முடிவு பண்ணிக்கலாம். நான் இப்படி எல்லாம் பேசினேன் என்று அதையும் போய் பத்திரிகைகாரங்ககிட்ட சொல்லிடாதீங்க!’ என்று கர்ஜித்து முடித்தாராம்.''

''அதையும் சொல்லீட்டாங்களா?'' என்று நாம் கேட்டதும்... சிரிப்பைச் சிந்தியபடி தொடர்ந்தார் கழுகார்.


''உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி விஷயத்தில் என்ன நடக்கிறது என்கிற கதைக்கு அடுத்து வருகிறேன். விஜயகாந்த் மீது அளவில்லாத கோபத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. அதைவிட அவரை தே.மு.தி.க-வுடன் கூட்டணி வைத்துத்தான் ஆக வேண்டும் என்று சொன்னவர்கள் மீதும் ஆத்திரத்தைக் கொட்டுகிறார். 'அவருக்கு அவ்வளவு செல்வாக்கு... இவ்வளவு செல்வாக்குனு சொல்லி என்ன ஏமாத்திட்டீங்க... அவரைத் தேவை இல்லாம நாமதான் வளர்த்துவிட்டுட்டோம். அப்பவே அவரைக் கூட்டணியில் வெச்சிருக்கக் கூடாது’ என்றாராம் ஜெயலலிதா.

'என்னை அவமானப்படுத்துற மாதிரி பேசினார்னு தெரிஞ்சே கூட்டணி வைக்கக் காரணம், கருணாநிதிக்கு எதிரான ஓட்டு சிதறிடக் கூடாதுங்கற ஒரே நோக்கம்தான். ஆனால், ஜெயிச்சு வந்ததும் நம்மை அவர் மதிக்கவே இல்லை. அத்தோட அவமானப்படுத்துற மாதிரி நடந்துக்கிறார்!’ என்றாராம் ஜெயலலிதா.

இந்தக் கோபமே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மொத்தமாக ரியாக்ஷன் காட்டுகிறது!''


''என்னதான் பிரச்னை?''

''உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது கணிச மான இடங்களை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஏகத்துக்கும் அடக்கி வாசித்தது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற விஷயங்களில்கூட சட்டசபையில் பெரிய அளவில் கோபத்தைக் காட்டவில்லை. ஆனால், நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. உள்ளாட்சித் தேர்தலில் நடக்கும் ஒவ்வொரு 'மூவ்’வும் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படிதான் நடக்கிறது.

அதற்காக தொகுதி பங்கீட்டை முடிவு செய்வதற்காக ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்தார் ஜெயலலிதா. பேருக்குதான் அது குழு. அந்த குழு மூலமாக, கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்குத் தேவையான தொகுதிகளின் பட்டியலை தயார் செய்து காத்திருந்தார்கள்.


http://www.tribuneindia.com/2008/20080225/nat3.jpg


குழு மூலம் பட்டியலைக் கேட்டு ஜெயலலிதா வாங்கிப் பார்ப்பார்... என்று இலவு காத்த கிளியைப்போல கூட்டணிக் கட்சிகள் காத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான், அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்துகொண்டு இருந்தார் ஜெயலலிதா. சட்டசபைத் தேர்தலில்கூட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளைத் தவிர்த்துதான் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்போதோ மொத்தத் இடங்களையும் வெளியிட்டு கூட்டணிக் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டார்.''

''தே.மு.தி.க.வின் நிலைமை?''

''மூன்று மேயர்கள், 30 நகராட்சித் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட நினைத்தது தே.மு.தி.க. ஆனால், மேயர் பதவிகளை தர முடியாது என்று முதலிலேயே கைவிரித்துவிட்டதாம் அ.தி.மு.க. துணை மேயர் பதவிகள் மற்றும் சில நகராட்சித் தலைவர் பதவிகளை வேண்டுமானால் விட்டுக்கொடுப்பதாக சொன்னதாம். இதெல்லாம் அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரையில் அதிகாரப் பூர்வமான பேச்சுவார்த்தை தே.மு.தி.க-வுடன் நடத்தவில்லை.

பேருக்கு தொகுதி பங்கீட்டுக் குழுவை நியமித்து, பட்டியல்களை எல்லாம் வெளியிட்டு, தேர்தல் தேதியும் அறிவிக்க வைத்து சரியாக காய்களை நகர்த்தி, கடைசி நேரத்தில் கழுத்தை அறுத்துவிட்டார்கள் என்றே நினைக்கிறது தே.மு.தி.க.''


''கம்யூனிஸ்ட்களுக்கு?''

''கம்யூனிஸ்ட்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதிலும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லையாம். திருவொற்றியூர், சிதம்பரம், கோவில்பட்டி ஆகிய நகராட்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசம் இருக்கிறது. அதை வாங்கினாலே போதும் என்று போராடுகிறார்கள். இதே நிலைதான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும். இவர்கள் கதியே இப்படி என்றால்... டாக்டர் கிருஷ்ணசாமி, நடிகர் சரத்குமார் பற்றிச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை அல்லவா!'' என்று சொல்லி மீண்டும் சிரித்தார் கழுகார்!


''கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஷாக்கானதைத் தானே உம்மிடம் சொன்னேன். இப்போது அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியைக் கேளும்!''


''சொல்லும்!''

''போயஸ் கார்டனில் இருந்து ரிலீஸ் ஆன வேட்பாளர் பட்டியலைப் பார்த்து, அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களே அரண்டுபோனார்கள். காரணம், கட்சியின் மா.செ-க்களுக்கும் ஜெ. செக் வைத்திருப்பதுதான். 'நகராட்சித் தொடங்கி ஒன்றிய கவுன்சிலர்கள் வரையிலான பதவிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்துகொடுக்கும்படி கார்டனில் இருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு போடப்பட்டது.

சாதி, செல்வாக்கு உள்ளிட்ட சகல விவரங்களையும் கணக்கிட்டு, தர வாரியான மூன்று நபர்களை வரிசைப்படி ஒவ்வொரு பதவிக்கும் தேர்வு செய்து கொடுக்கும்படி கார்டன் தரப்பு சொல்லி இருந்தது. அதற்கேற்றபடி, தங்களது விசுவாசிகளை முதல் இரண்டு இடங்களிலும், ஆகாத ஆட்களை மூன்றாம் இடத்திலும் குறிப்பிட்டு பட்டியல் அனுப்பினார்கள் மாவட்டச் செயலாளர்கள்.


இந்த விஷயம் அம்மாவுக்கு எப்படித் தெரிந்ததோ... மாவட்டச் செய லாளர்கள் கொடுத்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தவர்களின் பெயர்களை மட்டுமே அவர் டிக் செய்ய, மாவட்டச் செயலாளர்கள் மிரண்டுவிட்டனர். அறிவிப்பு வந்த பிறகு ஆட்களை மாற்றச் சொல்லியும் அம்மாவிடம் பேச முடியாது. அதனால், அம்மாவின் டிக் பட்டியலில் உள்ளவர்கள் தங்களுக்கு ஆகாதவர்களாக இருந் தாலும், அவர்களின் வெற்றிக்காக மா.செ-க்கள் போராட வேண்டிய இக்கட்டு உருவாகிவிட்டது!’ எனச் சொல்லும் சீனியர் நிர்வாகிகள், ஜெயலலிதா இப்படி செய்ததற்கான பின்னணிகளையும் விளக்கினார்கள்...''


''அது என்ன?''

''சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் உள்ளாட்சித் தேர்தலில் தீவிரமாக இருக்கும் என்பதை ஜெயலலிதா தெளிவாக அறிந்து வைத்திருந்தார். சசிகலாவின் உறவினர்கள் கைகாட்டும் ஆட்களுக்குத்தான் மாவட்டச் செயலாளர்கள் முதல் இடம் கொடுத்து இருப்பார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அதனால்தான், மூன்றாவது இடத்தில் இருந்த ஆட்களைத் தேர்வு செய்து மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டும் அல்லாது, சசிகலா வகையறாக்களுக்கும் அம்மா செக் வைத்தார் என்கிறார்கள்.

கார்டனில் இருந்து வெளியான பட்டியலில் இப்போது ஒரு சில இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்கள் மாற்றப்படுகின்றனர். அம்மாவிடம் வேறு விதமான காரணங்களைச் சொல்லி, மாற்றப்படும் பட்டியலில் உள்ள பலருமே சசிகலா உறவினர்கள்தானாம்!''


''தி.மு.க. விஷயத்துக்கு வாரும்!''

''கனிமொழி ஜாமீன்தானே இப்போதைய தி.மு.க. விஷயம்... கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்ததும், அதிக நம்பிக்கையுடன் இருந்தார்கள். இரண்டொரு நாளில் ஜாமீன் கிடைத்துவிடும் என்பதுதான் அவர்களது நினைப்பு. ஆனால், நீதிபதி சைனி, 'இந்த மனுவைப் படிக்க எனக்கு அவகாசம் தேவை. அக்டோபர் 1-ம் தேதி பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டு எழுந்து சேம்பருக்குள் சென்றதும், நீதிமன்றத்தில் உட்கார்ந்திருந்த ராஜாத்தி அம்மாள் கலங்கிவிட்டாராம்.

அவரை ஆசுவாசப்படுத்த கனிமொழியால் முடியவில்லையாம். 'நீ சென்னைக்குப் போம்மா... நான் பார்த்துக்கிறேன்’ என்று மகள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும், தாய்க்கு தாளவில்லையாம். நீதிமன்ற வளாகத்துக்குள் இருக்கும் சிறு செல்லில் வைத்திருந்துவிட்டு... திகார் செல்ல வாகனம் தயாரானதும்தான் கனிமொழியை அழைத்துச் செல்வார்கள். அந்த செல்லுக்குள் உள்ளே நுழையும் வரை கனிமொழியும் தைரியமாகத்தான் இருந்துள்ளார். ஆனால், உள்ளே நடந்து போனவர் தலையைத் திருப்பி ராஜாத்தியைப் பார்த்ததும் கண்கலங்கிவிட்டாராம்.''


''வருத்தம் இருக்கத்தானே செய்யும்!''


''கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவர் குறித்தும் கவலைப்பட்டு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை தி.மு.க-விலும், டெல்லியிலும் பலத்த சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. 'ஆ.ராசா உள்ளிட்டவர்களுக்கு ஏதோ ஒரு சம்பந்தம் இருந்தாலும் கனிமொழி, சரத்குமாருக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லையே?’ என்று கருணாநிதி அந்த அறிக்கையில் சொல்லி இருந்தார்.

'ஆ.ராசாவை கருணாநிதி கழற்றிவிடுகிறாரா?’ என்று சிலர் கேட்க ஆரம்பித்துள்ளனர். கருணாநிதியின் இந்த அறிக்கையையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சோனியா கவனத்துக்கு டி.ஆர்.பாலு கொண்டுசென்றதாகவும் சொல்கிறார்கள். சோனியா ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று கருணாநிதி நினைக்கிறார். இதற்கிடையே, ஆ.ராசா மீது கருணாநிதிக்கே சில வருத்தங்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்!''


''அது என்ன?''

''செப்டம்பர் 15-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்வதாக நீதிபதி சைனி சொல்லி இருந்தார். அதற்கு மறுநாள் கனிமொழி ஜாமீன் மனுத் தாக்கல் செய்ய தயாராகிக்கொண்டு இருந்தார். ஆனால், அன்று குற்றச்சாட்டு பதிவு செய்யவிடாமல் டிராய் அறிக்கையை முன்வைத்து ஆ.ராசா பேச ஆரம்பிக்க... அதையே மற்றவர்களும் எடுக்க, விவகாரம் நீண்டுகொண்டே போய் அக்டோபரைத் தொட்டுவிட்டது.

செப்டம்பர் 30-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்ய இருப்பதாக நீதிபதி சொல்லி இருக்கிறார். எனவே கனிமொழி, சரத்குமாருக்கு ஜாமீன் கிடைப்பது வரைக்கும் ஆ.ராசா அமைதியாக இருக்க வேண்டும் என்று கருணாநிதி சொல்லி அனுப்பி உள்ளாராம்!'' என்ற கழுகார் சிறிது இடைவெளிவிட்டு பேசினார்...


''செப்டம்பர் 15-ம் தேதி அன்று, நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.பி.ஆர்.சௌந்திரபாண்டியனாருக்கு பிறந்தநாள் விழா. சென்னை பாண்டிபஜாரில் உள்ள அவரது சிலைக்கு முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜாத்தி அம்மாள் தவறாமல் வருகை தந்தார். ஆனால், இந்தமுறை ஆப்சென்ட். 'நான் வரலை!’ என்று சொல்லிவிட்டாராம். அவர் டெல்லியிலேயே தங்கி இருப்பது கருணாநிதியை இன்னும் வருத்தமடைய வைத்துள்ளது.


கலைஞர் டி.வி-யின் மேலாளர்கள் மூவர், சமீபத்தில் டெல்லிக்குப்போய் இருந்தார்களாம். திகார் ஜெயிலுக்குப்போய் கனிமொழியைச் சந்தித்துப் பேசினார்களாம். சரத்குமார்தான் டல்லாக காணப்பட்டாராம். கனிமொழி உற்சாகமாய் பேசினாராம். 'இந்த மாத இறுதிக்குள் நான் பெயிலில் வெளியே வந்துவிடுவேன்... அப்பாகிட்ட சொல்லுங்க.' என்று தகவல் சொல்லி அனுப்பினாராம். இது ஒன்றுதான் கருணாநிதிக்கு ஆறுதலான விஷயம்!'' என்று கிளம்பத் தயாரான கழுகார்


''சாதித் தலைவர் ஒருவரை போலீஸ் அதிகாரி சந்தித்ததாக ஒரு செய்தியை உமக்குச் சொல்லி இருந்தேன். அந்த இடத்தில் அப்படி ஒரு சந்திப்பு நடக்கவில்லை என்றும் பரமக்குடி விவகாரத்துக்கும் அந்த அதிகாரிக்கும் அப்படி எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சிலர் அடித்துச் சொல்கிறார்கள்!'' என்றார்.

அவரிடம், ''உள்ளாட்சித் தேர்தல் தேதியைப் பார்த்தோம். அக்டோபர் 17, 19... என்று சோ.அய்யர் அறிவித்திருக்கிறார். ஜெயலலிதா பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகும் அக்டோபர் 20-க்கு முன்னதாக தேர்தல் நடந்துவிடும் என்று சொன்னீர். அது மாதிரியே நடந்துள்ளதே!'' என்றோம்.

அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டவராக வானத்தில் மிதந்தபடி வணக்கம் வைத்தார் கழுகார்!


1. நரேந்திர மோடியைப் பாராட்டுவதைப் பார்த்தால்... தமிழகத்தை குஜராத் போல வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்துவிடுவாரா ஜெயலலிதா?
தமிழகத்தில் தொழில் தொடங்க வந்த இரண்டு முக்கிய மோட்டார் நிறுவனங்கள் குஜராத்துக்கு தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டதற்கு உண்மை யான காரணம் என்ன? இந்த நிலை தொடர்ந்தால் தமிழகம் எப்படி முன்னேற்றத்தில் குஜராத் ஆகும்?

2.பரஞ்சோதி - கே.என்.நேரு?


ஒருவர் மீது பாலியல் புகார்!
இன்னொவருவர் மீது கிரிமினல் புகார்!
சபாஷ்... சரியான போட்டி!

3.அரக்கோணம் ரயில் விபத்துக்கு உண்மையான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் ஏன் இத்தனை குழப்பங்கள்?
சென்னை சென்ட்ரலில் இருந்து ஒரு ரயிலைக் கடத்திச் சென்று விபத்துக்குள்ளாக்கியவன் யார் என்று இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லையே! ஒரு அரசாங்கத்துக்குப் பல்லாயிரம் கோடிப் பணத்தை ஆண்டுதோறும் சம்பாதித்துக் கொடுக்கும் ஒரு துறை எப்படி பொறுப்பில்லாமல் இயங்குகிறது பார்த்தீர்களா?

4. 'பெட்ரோல் விலை உயர்வை நாங்கள் ஏற்கவில்லை’ என்கிறாரே தங்கபாலு?

தமிழகத்தில் இருக்கும் 'துணிச்சலான அரசியல்வாதி' என்று தங்கபாலுவை நான் சும்மா சொல்லவில்லை என்பது இப்போதாவது தெரிகிறதா?

5. மதச்சார்பின்மையைப் பற்றிப் பேச நரேந்திர மோடிக்கு அருகதை உண்டா?

கடந்த காலத் தவறுகளில் இருந்து மோடி பாடம் கற்கக் கூடாதா? பிராயச் சித்தம் தேடுவதற்கு எல்லா மனிதர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர் திருந்தி விடக் கூடாது என்று சிலர் நினைப்பதுதான் ஏன் என்று புரியவில்லை!

6.உண்மையான இந்தியர்கள், தூக்குத் தண்டனையை ஆதரிக்கவே செய்வார்கள் என்கிறேன் நான்...?


தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கால்கோள் நாட்டியவர்களில் இவரும் ஒருவர். சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட அவர் சிறையில் இருந்தபடி தனது அனுபவங்களை எழுதினார். 'சிறையில் தவம்’ என்ற தலைப்பில் அது புத்தகமாக வந்தது. அந்த டைரியில் 21.2.1922-ம் நாளைப் பற்றி அவர் எழுகிறார்..


'அப்பாத்துரை என்ற சமையல்காரரை தூக்கிலிடப் போகிறார்கள். இன்று நான் அதிகாலையில் எழுந்துவிட்டேன். அன்று தூக்கிலிடப்பட இருந்த மனிதனின் நினைவு என்னை முன்னதாக எழுப்பி இருக்க வேண்டும். என் படுக்கையில் உட்கார்ந்தவாறே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அந்த நிமிஷங்கள் ஒரு யுகம் போலத் தோன்றின.

அவர்கள், துரதிர்ஷ்டம் பிடித்த அப்பாத்துரையை கைவிலங்கிட்டு அழைத்து வந்தனர். காலடி ஓசையில் இருந்து அவர்கள் வந்ததை உணர்ந்தேன். சில நிமிஷங்களில் தலைமை வார்டர் என் அறையைத் தாண்டிச் சென்றார். அதிலிருந்து அப்பாத்துரையின் வாழ்வு முடிந்தது என்று தெரிந்து கொண்டேன். கடவுள் கொடுத்ததை மனிதன் பகிரங்கமாகப் பறித்துக் கொண்டான். அதைச் சட்டப்படி நியாயம் என்றும் எண்ணிக் கொண்டான்!’


- இப்படி எழுதி இருப்பவர் மூதறிஞர் ராஜாஜி.


7. யாரையும் கேட்காமல் பட்டியல் வெளியிட்டு விட்டாரே ஜெ.?

யாரைக் கேட்க வேண்டும்_ இது ஜெ. வாய் திறந்து சொல்லாத பதில்!


ஒரு உண்மை மட்டும் புரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் கூட்டணிகளுடன் பேசுவதற்கு முன்னதாக ஒரு பட்டியல் வெளியாகிவிட்டது. 'அம்மாவுக்குத் தெரியாது’ என்று அப்போது சிலர் சொன்னார்கள். இன்று நடப்பதைப் பார்த்தால், அதுவும் 'அம்மாவுக்குத் தெரிந்து நடந்ததுதான்’ என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே தனித்து நிற்கலாம் என்ற ஐடியா அவருக்கு இருந்திருப்பதும் தெரிகிறது.





8.அடுத்த மாதம் திருமணம் ஆகப் போகும் எனக்கு உங்களது அறிவுரை?

கேள்வி கழுகாருக்குதானே.! புதுமணத்தம்பதிக்கு புத்திமதி சொல்லாதே என்கிறது சாஸ்திரம். ஆனால், வி.ஸ.காண்டேகர் தனது கதை ஒன்றில் சொன்ன வாசகம் கவனத்துக்கு வருகிறது.

'திருமணம் என்பது ஒரு போர். என்னதான் லாகவமாகச் செயல்பட்டாலும் சேதாரம் இருக்கத் தான் செய்யும்’.

9 முதல் நாள் அணு உலைக்கு ஆதரவு... மறுநாள் எதிர்ப்பு.. என்ன ஆச்சு ஜெயலலிதாவுக்கு?


பேரறிவாளன், சாந்தன், முருகன் விவகாரத்திலும் இப்படித்தான் நடந்து கொண்டார். இனிமேல் ஜெயலலிதா எந்தப் பிரச்னை தொடர்பாகவும் முதல் நாள் எழுதும் அறிக்கையை ரிலீஸ் பண்ணாமல் இருந்து... மறுநாள் யோசித்த பிறகு வெளியே விட்டால் நல்லது!

10. ரயில் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் அடைந்தால் முன்பெல்லாம் ரயில்வே மந்திரி பதவி விலகுவார். ஆனால், தற்போதைய மந்திரி, ஆறுதல் மட்டும் கூறிவிட்டு கடமையை முடித்துக் கொள்கிறாரே?


ஆறுதலாவது சொல்ல வருகிறாரே! ஆறு மாதங்களுக்கு முன்னால் பீகாரில் ஒரு விபத்து ஏற்பட்டபோது மத்திய மந்திரி போகவே இல்லை. முன்பெல்லாம் எப்பவாவது விபத்து நடக்கும். அது பெரிய விஷயமாகி பதவி விலகுவார். இப்போது மாதம் தோறும் இந்தியாவில் எந்தப் பகுதியிலாவது நடக்கிறது விபத்து. பதவி விலக ஆரம்பித்தால் விலகிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!

11. வைகோ இன்னும் எவ்வளவு காலம்தான் மைக் பிடித்துக் கொண்டே இருக்கப் போகிறார்?


மைக் இருக்கும் வரை..
நன்றி - ஜூ வி