Friday, February 17, 2012

சென்னை ரைனோஸின் வெற்றியில் சில உணர்ச்சிக் காட்சிகள்.

வெற்றிக்காக கடைசிப் பந்தில் 4 ரன் அடிக்கலாம்; 6 ரன் அடிக்கலாம்; கடினமில்லை! ஆனால் ஒரு ரன் கூட கொடுக்காமல் கடைசி பந்தை வீசி கோப்பையை வெல் வதென்றால் அது ஒரு சாதனை முயற்சிதான்! அதைச் செய்து முடித்து சி.சி.எல். போட்டியில் கோப்பையை வென்றது சென்னை ரைனோஸ்... சென்னையில் நடந்த செமி பைனலிலும் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஃபைனலி லும் காணக் கிடைக்காத சில காட்சிகள் - உணர்ச்சிகள்...

சரத்குமார், ராதிகா இருவரும் கேப்டன் விஷாலோடு அவ்வப்போது டிஸ்கஷனில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தனர். ராதிகா ரைனோஸ் வீரர்களுக்கு குளுக்கோஸ் வாட்டர் கொடுத்து உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

விஷ்ணு சிக்ஸர் அடித்தபோது சோனியா அகர்வால் துள்ளிக் குதித்து வீடியோ கேமராக்களுக்கு வேலை கொடுத்தார்.

சென்னை ரைனோஸ் பயிற்சியாளர் ஜான்டிரோட்ஸ் இருக்கும் இடம் தேடிச் சென்று ப்ரியாமணி பேசிக்கொண்டிருந்தது கிரிக்கெட்டில் அவரின் ஆர்வத் தைக் காட்டியது.

தெலுங்கு வாரியர்ஸ் அணியை உற்சாகப்படுத்த அம்பரீஷ் தலைமையில் தெலுங்குப் பட உலகமே திரண்டு வந்திருந்தது. வெங்கடேஷ், லட்சுமிராய், பிரியாமணி, ஷார்மி என்று முன்னணி நட்சத்திரங்கள் கூடிநின்று உற்சாகக் குரல் எழுப்பினர்.



சென்னை ரைனோஸ் வீரர்களுக்கு விஜய் மட்டுமே மகனோடு வந்து நின்று கொண்டிருந்தார். கோடம்பாக்கத்திலுள்ள மற்ற நடிகர் நடிகைகள் ஏனோ சி.சி.எல். போட்டியில் பெரிதாக ஆர்வம் காட்டாதது வருத்தத்திற்குரியது.

பரத்திற்கு கடந்த போட்டியில் அடிபட்டு பெவிலியனுக்குத் திரும்பினார். சேப்பாக்க போட்டியில் விஷ்ணு அடிபட்டுத் திரும்பியது ரைனோஸ் வீரர்களுக்கு பெரிய ஷாக்.

புதுமணப் பெண் ஜெனிலியா கணவரோடு வந்திருந்தது ரசிகர்களிடம் மட்டுமின்றி சக நட்சத்திரங்களையும் உற்சாக அலைகளை உருவாக்கியது!

‘‘செமி ஃபைனலுக்குக் கூட போகாது நம் அணி என்றுதான் எல்லாரும் நினைச்சாங்க. ஆனால் வெற்றிக் கோப்பையை வாங்கிட்டோம். இதுக்கு முக்கியமான காரணம், கேப்டன் விஷால், விஷ்ணு ரெண்டு பேர்தான். 3 மாதமாக எங்கள் எல்லாரையும் ஒற்றுமையாக வெச்சு ஒரு நல்ல டீம் உருவாக காரணமாக இ ருந்தார் விஷால். விஷ்ணு நல்லா ஆடிக்கிட்டிருந்தபோது கையில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு போச்சு அவருக்கு. இவங்க ரெண்டு பேரின் உழைப்பையும் வீணாக்கிடக்கூடாதுன்னு தான் நானும் ப்ரிதிவியும் பேசி வெச்சுகிட்டு விளையாடினோம். அதேபோல ஜீவா ரெண்டு மாதமாக ஷூட்டிங் போய்க்கிட்டே சரியான நேரத் துக்கு பயிற்சிக்கு வந்து நிற்பார். இதெல்லாம் இந்த வெற்றிக்குக் காரணம்’’ என்று நெகிழ்ந்தார் விக்ராந்த். இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன்..

No comments:

Post a Comment