Wednesday, February 1, 2012

உங்க பாக்கெட்டிலும் கள்ள நோட்டு! -உஷார் ரிப்போர்ட்!

கட்டுமானத் தொழில் செய்யவும், ஹோட்டலில் பணி புரியவும், சாலையோரங்களில் பானிபூரி, பேல்பூரி விற்கவும் என்று நாளுக்கு நாள் அதிக எண்ணிக்கையில் தமிழகத்திற்குள் ஊடுருவி வருகின்றது வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெருங்கும்பல். இப்போது கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்காக ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து ஒரு புதிய கும்பல் விஷக்கிருமிகளாக தமிழ்நாட்டில் பரவிக்கொண்டிருக்கிறது என்பதுதான் சமீபத்திய அதிர்ச்சி!





ஒவ்வொரு பேருந்திலும், ஒவ்வொரு ரயில்பெட்டியிலும் சத்தமாக இந்தியில் பேசிக்கொண்டே வட மாநில இளைஞர்கள் பயணம் செய்கின்ற காட்சிகள் இப்போது தமிழகத்தில்... அதுவும் குறிப்பாக சென்னையில் மிக சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது.


தமிழகத்தில் தமிழர்களே கூட அவ்வளவு சத்தமாகப் பேசிக்கொண்டு பயணிப்பது இல்லை. இந்நிலையில் வட இந்தியர்கள் மூலம் பரவும் கள்ள நோட்டு அபாயம் என்பது, இந்தியாவின் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சர்வதேச பயங்கரவாத கும்பல் இச்சதி வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.


சமீபத்தில் நேபாளத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ""இந்திய பொருளாதாரத்தை சீர்குலைய வைக்க, கள்ள நோட்டுகள் நேபாளம் வழியாகத்தான் இந்தியாவுக்கு வருகின்றன. அதை நேபாளம் கட்டுப்படுத்த வேண்டும்'' என்று பேசியுள்ளார்.


தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கள்ளநோட்டு சதி, தேசிய புலனாய்வு முக மையான என்.ஐ.ஏ.வின் கவனத் திற்கு கொண்டுவரப்பட் டுள்ளது. இந்தச் சூழலில்தான் புதுவையிலும், தமிழகத்திலும் கள்ள நோட்டு ஆசாமிகள் பிடிபட்டுள்ளனர்.


புதுச்சேரியில் முதல் கள்ள நோட்டு குற்றவாளி முகமது இஸ்மாயில் ஷேக் எப்படி சிக்கினாôன்?


புதுவை நுழைவாயிலில் கோரிமேடு ஜிப்மர் மருத்துவ மனை எதிரே பழக்கடை வைத்திருக்கும் ஜெயக்குமா ரிடம் விசாரித்தோம்...


""எழுபது ரூபாய்க்கு பழம் வாங்கிட்டு அந்த ஆளு ஆயிரம் ரூபா நோட்டை கொடுத்தாரு. என்கிட்ட சில்லறை இல்லைன்னு என் அக்கா மகன் சதீஷ்கிட்ட கொடுத்து சில்லறை மாத்திட்டு வரச்சொன்னேன். அவன்தான் நோட்டைப் பாத்து சந்தேகப் பட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தான். அது தெரிஞ்சு இஸ்மாயில் ஷேக் ஓடப்பார்த் தான். சதீஷும், ஆட்டோ டிரைவர் சாமிநாதனும்தான் "திருடன்... திருடன்...'னு கத்திக் கிட்டே ஓடிப்போய் புடிச்சாங்க. அப்புறம் போலீஸ்ல ஒப்படைச்சோம்'' என்றார் ஒரு கள்ள நோட்டுக் கும்பலைப் பிடித்துக் கொடுத்த பெருமிதத்துடன்.


இஸ்மாயில் ஷேக்கை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் எஸ்.எஸ்.பி. சந்திரன் மற்றும் மணிகண்டன் ஆகியோரிடம் பேசியபோது...


""விசாரணையில ஜார்கண்ட் மாநிலத்திலேருந்து நாங்க ஆறுபேர் வந்ததா சொன்னான். அவன் கூட்டாளி ஜமேதர் ஷேக் தான் கள்ள நோட்டுக்களை விநியோகம் செய்ததா சொன்னான். ஜனவரி 14-ந் தேதி கள்ள நோட்டைக் கொடுத்து ரயில் டிக்கெட் எடுத்துக்கிட்டு இந்தக் கும்பல் தமிழ்நாட்டுக்குள்ள வந்திருக்கு. அந்த இஸ்மாயில் ஷேக் சட்டையிலயும், ஜட்டிக்குள்ளயும் 55,000 ரூபாய் அளவுக்கு கள்ள நோட்டுக்கள் வெச்சிருந்தான்.


அவன் கூடவந்த கூட்டாளிங்க ஜமேதார் ஷேக், ஷபீக், அப்துல் கரீம், மிட்டு ஷேக் ஆகியோர் தலைமறைவா இருக்கா னுங்க. மூன்றுவிதமா குழு அமைச்சு வலை வீசி தேடிக்கிட்டிருக் கோம். இஸ்மாயில் ஷேக்கோட மொபைல் போன்ல இருக்கிற நம்பர்களை வெச்சுப் பார்க்கும்போது இது ஒரு பெரிய நெட் ஒர்க் மாதிரி தெரியுது. அவன்கிட்ட ஒரு போலி வாக்காளர் அட்டை இருந்தது. அதுல சென்னை, சிட்லபாக்கம், பாரதி நகர்னு முகவரி இருந்தது. அந்த முகவரியை சிட்லபாக்கம் போலீஸாருக்குக் கொடுத்து உஷார்படுத்தினோம். அதை வெச்சுத்தான் சிட்லபாக்கம் இன்ஸ்பெக்டர் கர்ணனும், சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கோதண்டராமனும், இக்பால் ஷேக்கோட நெருங்கிய கூட்டாளி யான இஸ்ரா உல் ஷேக்கையும் சைதாப்பேட்டையில இருந்த ராகுல் முகமதுவையும் உடனடியாக கைது செய்தனர். பல கந்துவட்டிக் காரர்களும் முக்கிய வி.ஐ.பி.க்களும் இதில் சிக்குவார்கள்'' என்றனர்.


சிதம்பரம், பாபநாசம் போன்ற ஊர்களில், டாஸ்மாக் வருமானத்தை பேங்க்கில் போடச் சென்றபோது அதில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கள்ளநோட்டுக் கும்பல் எல்லா ஊர்களுக்கும் கட்டிடத் தொழிலாளிகள் போன்ற தோற்றத்தில் சென்றுள்ளார்களா? என்று சகல கோணங்களிலும் காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. முக்கியமாக மூன்று அடையாளங்கள் கள்ளநோட்டில் இருக்காது.


ஒன்று, ரூபாய் நோட்டின் இடது ஓரத்தில் பூவிதழ் போன்று சிறு வட்டம் இருக்கும். இது ரூபாயின் இரு பக்கங்களிலும் இருவித வண்ணத்தைக் காட்டும். இதை ரிசர்வ் வங்கியினர் நிறம் மாறும் மை என்று குறிப்பிடுவார்கள். இரண்டாவது, நோட்டின் குறுக்கே இருவித வண்ணங்களில் மறைந்து மறைந்து காணப்படும் பாதுகாப்பு இழை. மூன்றாவது நீர்க்குறியீடு. மகாத்மா காந்தியின் அருகே நீரெழுத்தில் ரூபாயின் மதிப்பு இருக்கும். இந்த மூன்றையும் கவனித்துப் பார்த்து ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய்களை வாங்கும்படி பொதுமக்களையும், வியாபாரிகளையும் காவல்துறை எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment