நன்றி தெரிவிக்கும் நாள்
நவம்பர் கடைசி வியாழக்கிழமை
ஒரு நாடே விடுமுறையைக் கொண்டாட கிளம்பினால், எப்படி இருக்கும்?
அமெரிக்காவில் நவம்பர் கடைசி வியாழக் கிழமையை 'நன்றி தெரிவிக்கும் தினம் (Thanks Giving Day, November Last Thursday) ஆக கொண்டாடுவார்கள். அன்று அரசு விடுமுறை. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வேலை நாள்.
அதற்கடுத்த மூன்று நாட்கள் அமெரிக்காவில் விடுமுறை தினங்கள். இதனால் யாரும் வெள்ளிக் கிழமை வேலைக்குப் போவது இல்லை.
காரணம், அன்று பெரிய ஷாப்பிங் மால்களில் எலெக்ட்ரானிக் பொருட்கள், உடைகள், பொம்மைகள் எல்லாமே குறைந்த விலையில் கிடைக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். இந்தத் தினத்தை அமெரிக்கர்கள் செல்லமாக 'கறுப்பு வெள்ளி' என்று அழைக்கிறார்கள்.
எப்படி வந்தது இந்தப் பெயர்..?
கடந்த 1869 ஆம் ஆண்டு அமெரிக்க பங்குச் சந்தையில் (ஸ்டாக் மார்க்கெட்) நிதிநெருக்கடி அதிகமானது. அப்போது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அந்த நாளை 'கறுப்பு வெள்ளி' என்று குறிப்பிட்டது. 4 நாட்கள் தொடர்சியாக விடுமுறை வந்ததால், அந்தச் சமயத்தில் பல அமெரிக்கர்கள் பொருட்களை வாங்க ஆரம்பித்தார்கள். நிறுவனங் களும் தள்ளுபடி செய்து மலிவு விலையில் வழங்கின.
திருடர்கள் சும்மா இருப்பார்களா? பொருட்களை வாங்க வருபவர்களை குறி வைத்துக் கொள்ளை அடித்தார்கள். அதனால், ஃபிலடெல்ஃபியா காவல் துறையினர் அந்த நாளைக் கறுப்பு வெள்ளி என்று அழைத்தனர். அந்தப் பெயர் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டது. இப்போது திருட்டு, சாலை விபத்து போன்றவற்றை தடுப்பதற்காக, அமெரிக்க போலீஸ் 'கறுப்பு வெள்ளி'யில் இன்டர்நெட் மூலம் பொருட்களை வாங்க அறிவுறுத்தியது.
இப்போது சுமார் 80 சதவிகிதம் பேர் ஆன்லைன் (இன்டர்நெட்) மூலம் ஷாப்பிங் செய்கிறார்கள். இந்த விற்பனை திங்கட்கிழமை வரை சூடு பிடிக்க ஆரம்பித்திருப்பதால் 'ப்ளாக் ஃப்ரைடே டு சைபர் மண்டே' என்று புதியப் பெயர்!
No comments:
Post a Comment