அரசு மானியம் பெறுகிறவர்களில் பலருக்கு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு இல்லை. இதனால் அந்த மானியம் மக்களுக்குப் போய்ச் சேராமலே இருக்கிறது. எனவே, 7.5 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்துத் தரும் ஜன் தன் யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்தத் திட்டத்தால் என்ன பயன்?
பிரதமர் துவக்கி வைத்த அனைவருக் கும் நிதிச் சேவை திட்டத்தின் கீழ் இதுவரை வங்கிக் கணக்கு இல்லாத வர்கள் வங்கிக் கணக்கை ஆரம்பிக்க முடியும். இதில் ரூபே டெபிட் கார்டு இலவசமாக வழங்கப்படும். இதனுடன் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள விபத்து காப்பீடும் இலவசமாகக் கிடைக்கும். மேலும், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ் வழங்கப்படுகிறது. சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர் மரணம் அடைந்தால் இந்தத் தொகை கிடைக்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்குபவர்களுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை எதுவும் கிடையாது. அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். அதற்குமேல் இருப்பு வைத்தால், அந்த நபரின் வங்கிக் கணக்கு வழக்கமான வங்கிக் கணக்காக மாறிவிடும்.
அனைவருக்கும் வங்கிச் சேவை திட்டத்தின் கீழ் கணக்கு துவங்குபவர் களுக்கு கேஒய்சி (உங்கள் வாடிக்கை யாளர்களை புரிந்து கொள்ளுங்கள்) விதிமுறைகள் எளிமைப்படுத்தப் பட்டுள்ளன. அதாவது, ஆதார் அட்டை மட்டும் இருந்தாலே கணக்கு துவங்க முடியும். அதேபோல வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ரேஷன் கார்டு, கிராம நிர்வாக அதிகாரி யிடம் வாங்கிய சான்று என எதாவது ஒரு சான்று தந்து வங்கிக் கணக்கு துவங்க முடியும்.இந்தக் கணக்கில் ஃபிளெக்ஸி ஆர்டி துவங்கலாம். வைப்பு நிதி, பண பரிமாற்றம் ஆகியவற்றை செய்துகொள்ள முடியும். ஆனால், ஒரு நாளைக்கு அதிக பட்சம் ரூ.10 ஆயிரத்துக்கு மட்டும்தான் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்தச் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வங்கிக் கணக்கில் அவர்கள் செய்யும் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் ரூ.5 ஆயிரம் வரை ஓவர் டிராப்ட்-ஆக (ஓ.டி) கடன் பெற முடியும்.
ஏற்கெனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க முடியாது. ஆனால், வேலை காரணமாக இடம் மாறும்போது, அங்குள்ள சேமிப்புக் கணக்கு இருந்தால், அதை இந்த ஊருக்கு மாற்றிக்கொள்ள லாம். அது முடியவில்லையெனில், தற்போது வசிக்கும் முகவரியை அடிப்படையாக வைத்து, இந்தக் கணக்கைத் துவங்கலாம். ஆனால், இப்போது இருக்கும் ஊரில் சேமிப்புக் கணக்கு இருக்கக்கூடாது
No comments:
Post a Comment