சூரிய குடும்பத்தில் பூமியை போல செவ்வாயும் ஒரு கோள். சூரியனில் இருந்து புதன், வெள்ளி ஆகிய கோள்களை அடுத்து 3வதாக பூமி உள்ளது. இதற்கு அடுத்து செவ்வாய் உள்ளது. சூரிய குடும்பத்தில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கான காரணிகள் உள்ளன. பூமியும், செவ்வாயும் சில பண்புகளை ஒத்துள்ளன. இதன் காரணமாக செவ்வாயிலும் உயிரினங்கள் வாழ முடியுமா என்பதை ஆராய்வதற்காக, "மங்கள்யான்' விண்கலத்தை இஸ்ரோ செலுத்தியது.
பார்த்தேன்... எடுத்தேன்... மீத்தேன்...:
மங்கள்யான் விண்கலத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருப்பதை கண்டறிவது. ஏனெனில் கரியமில வாயு சேர்ந்த மீத்தேன் இருப்பின், அது உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரம். உயிரினங்கள் என்பது மனிதன், விலங்குகள் மட்டுமல்ல, நுண்ணியிரிகளாகக் கூட இருக்கலாம். மீத்தேன் வாயுவின் வேதியியல் வாய்ப்பாடு சி.எச்4 (ஒரு கார்பன், 4 ஹைட்ரஜன் சேர்ந்தது). ஒரு மீத்தேன் மூலக்கூறு, 25 கார்பன்-டை-ஆக்சைடின் மூலக்கூறுகளுக்கு சமம். இது ஒரு நிறமற்ற எரிவாயு. எரியும் தன்மை கொண்டது. இரவு நேரங்களில் சதுப்பு நிலங்களில் மீத்தேன் வெளிப்படுவதால் தீடிரென தீ பந்தம் எரிவது போல தோன்றும். இதைத் தான், கிராமங்களில் "கொள்ளிவாய் பிசாசு' எனக் கூறி பீதியை கிளப்புவர். மீத்தேன், சமையல் எரிவாயுவில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிற்சாலைகளில் வெப்பப்படுத்துவதற்கு, பிளாஸ்டிக், குளிர்பதன பெட்டி தயாரிப்பதற்கு, கட்டுமானப் பணி என பலவற்றுக்கு மீத்தேன் வாயு பயன்படுகிறது.
மங்கள்யான் விவரம்:
ஏவப்பட்ட ராக்கெட் பெயர்: பி.எஸ்.எல்.வி.,-எக்ஸ்.எல்., சி 25
மதிப்பு: 450 கோடி ரூபாய்
ராக்கெட் எடை: 1,350 கிலோ
திட எரிபொருள்: 500 கிலோ
ராக்கெட் அடுக்கு: ஐந்து
ஏவப்பட்ட போது ராக்கெட் சாய்வு: 17.864 டிகிரி
உயரம்: 1.5 மீட்டர்
முழுவதும் சூரிய சக்தியில் செயல்படக்கூடிய, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐந்து உபகரணங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. அவை:
* லைமன் ஆல்பா போட்டோமீட்டர்
* மார்ஸ் மீத்தேன் சென்சார்
* மார்ஸ் கலர் கேமரா
* தெர்மல் இன்பிராரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர்
* மார்ஸ் எக்ஜாஸ்பிரிக் நியூட்ரல் காம்போசிஷன் அனலைசர்
பெங்களூரு இஸ்ரோவில், 'திக் திக்' நிமிடங்கள்:
செவ்வாய் கிரகத்தை நோக்கி, 10 மாதங்களுக்கு முன் செலுத்தப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள், அந்த கிரகத்தின் சுற்றுவட்டப் பாதை அருகில் செல்வதற்கான உத்தரவுகள், விண்கலத்தின் உள்ளேயே ஏற்றப்பட்டிருந்தது. அந்த உத்தரவுகளின் படி அந்த செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் கொண்டு செல்லுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.இதற்காக, அந்த செயற்கைக்கோளின் வேகம், வினாடிக்கு, 22.1 கி.மீ.,யிலிருந்து, 4.4 கி.மீ.,யாக குறைக்கப்பட்டது. அவ்வாறு செய்ததால் தான், செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை, மங்கள்யான் விண்கலத்தை பிடித்துக் கொண்டது. செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை அடைவதற்காக, 300 நாட்களாக பயணம் மேற்கொண்ட மங்கள்யான், கடந்த திங்கள்கிழமை, செவ்வாய் கிரகத்தின் அருகே சென்றது. அங்கிருந்து அந்த செயற்கைக்கோள் அனுப்பிய சிக்னல்கள், பூமியை அடைய, 12 நிமிடம், 29 வினாடிகள் ஆனது.பூமியிலிருந்து அனுப்பப்பட்ட மங்கள்யான், சரியான வெற்றிப் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்பதை, அந்த செயற்கைக்கோளுக்குள், 300 நாட்களாக துாங்கிக் கொண்டிருந்த இன்ஜின்களுக்கு, நேற்று காலை, 7:17க்கு எரியூட்டப்பட்டதை அடுத்து உறுதியானது.தொடர்ந்து, 24 நிமிடங்கள் அந்த இன்ஜின்கள் எரியூட்டப்பட்டன. அந்த இன்ஜின்கள் எரியூட்டப்படும்போது, சிறு தவறு நேர்ந்தால் கூட, இந்த திட்டமே முழுமையாக தோல்வி அடையும் என்ற நிலையில், தரையிலிருந்து அனுப்பப்பட்ட உத்தரவு, நான்கு நிமிடங்களுக்குள் செயல்படுத்தப்பட்டு, இன்ஜின் எரியூட்டப்பட வேண்டும். ஆனால், கடைசி மூன்று நிமிடங்கள் வரை அந்த இன்ஜினுக்கு உயிர் கிடைக்காததால், பூமியில் இருந்த விஞ்ஞானிகள் பரபரப்பு அடைந்தனர்.'ஓராண்டு முயற்சி வீணாகிப் போகுமோ...' என, அவர்கள் அதிர்ச்சி அடைந்த சமயத்தில், இன்ஜின் எரியூட்டுதல் துவங்கியது. மங்கள்யானுக்கு கூடுதல் உத்வேகம் கிடைத்து, நேற்று காலை, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது மங்கள்யான்.மங்கள்யான், செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் இன்னும் ஆறு மாதங்களுக்கு சுற்றி வந்து, தகவல் தொகுப்புகளை பூமிக்கு அனுப்பும்.
சிக்கனமாய் செவ்வாய் பயணம்:
சமீபத்தில் உலக நாடுகள் செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலங்களுடன், ஒப்பிடுகையில் இந்தியாவின் "மங்கள்யான்' விண்கலம் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாவேன் விண்கலம் - அமெரிக்கா
ஏவப்பட்டது: 2013 நவ., 18
செவ்வாய் சுற்றுப்பாதை: 2014 செப்., 21
செலவு : 4,080 கோடி
மார்ஸ் எக்ஸ்பிரஸ் - ஐரோப்பிய விண்வெளி மையம்
ஏவப்பட்டது: 2003 ஜூன் 2
செவ்வாய் சுற்றுப்பாதை: 2003 டிச.,
செலவு: 2,352 கோடி
நோஷோமி - ஜப்பான்
ஏவப்பட்டது: 1998 ஜூலை 3
செவ்வாய் சுற்றுப்பாதையில் தோல்வி - 2003 டிச., 9
செலவு: 1,151 கோடி
யிங்கியூ-1 - சீனா
ஏவப்பட்டது: 2011 நவ., 8
பூமி சுற்றுப்பாதையை விட்டு வெளியேறும்போது தோல்வி
செலவு: 713 கோடி
மங்கள்யான் - இந்தியா
ஏவப்பட்டது: 2013 நவ., 5
செவ்வாய் சுற்றுப்பாதை: 2014 செப்., 24
செலவு: 450 கோடி
மாவேன் விண்கலம் - அமெரிக்கா
ஏவப்பட்டது: 2013 நவ., 18
செவ்வாய் சுற்றுப்பாதை: 2014 செப்., 21
செலவு : 4,080 கோடி
மார்ஸ் எக்ஸ்பிரஸ் - ஐரோப்பிய விண்வெளி மையம்
ஏவப்பட்டது: 2003 ஜூன் 2
செவ்வாய் சுற்றுப்பாதை: 2003 டிச.,
செலவு: 2,352 கோடி
நோஷோமி - ஜப்பான்
ஏவப்பட்டது: 1998 ஜூலை 3
செவ்வாய் சுற்றுப்பாதையில் தோல்வி - 2003 டிச., 9
செலவு: 1,151 கோடி
யிங்கியூ-1 - சீனா
ஏவப்பட்டது: 2011 நவ., 8
பூமி சுற்றுப்பாதையை விட்டு வெளியேறும்போது தோல்வி
செலவு: 713 கோடி
மங்கள்யான் - இந்தியா
ஏவப்பட்டது: 2013 நவ., 5
செவ்வாய் சுற்றுப்பாதை: 2014 செப்., 24
செலவு: 450 கோடி
ஆட்டோ கட்டணத்தை விட குறைவு:
மங்கள்யான் செயற்கைக் கோளை தயாரித்தது முதல் ஏவியது வரை ஆன செலவு 454 கோடி ரூபாய். மங்கள்யான் பயணம் செய்த தூரம் 68 கோடி கி.மீ., அதாவது, மங்கள்யான் ஒரு கி.மீ., தூரம் பயணம் செய்ய ஆன செலவு சராசரியாக 6.70 ரூபாய் மட்டுமே. இது ஆட்டோ கட்டணத்தைவிட குறைவு. அவ்வளவு சிக்கனமாக நமது விஞ்ஞானிகள் இதை சாதித்துக் காட்டி உள்ளனர்.
No comments:
Post a Comment