Wednesday, May 4, 2011

14 கோடியில் இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர்

இஸ்ரோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் எஸ்.சதீஷ் செய்தியாளர்களிடம், ’’திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் `சகா-220` என்ற இந்தியாவின் அதிவேக சூப்பர் கம்ப்ïட்டர் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதன் வேகம் 220 டெராபுளோப் (கம்ப்யூட்டரின் வேகத்தை குறிக்கும் அளவு) ஆகும்.

வணிக ரீதியாக கிடைக்கும் மென்பொருள் மற்றும் வன்பொருள்களை கொண்டும், மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் வடிவமைப்புகளை பயன்படுத்தியும் ரூ.14 கோடியில் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கம்ப்யூட்டர் மூலம் குறைந்த நேரத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான கணக்குகளை போட்டுவிட முடியும். இஸ்ரோ நிறுவனம் அடுத்து பயன்படுத்த உள்ள மார்க்-111 ஏவுவாகனத்தின் பரிசோதனைக்கும் அதன் பல்வேறு தரமதிப்பீட்டிற்கும் இந்த சூப்பர் கம்ப்ïட்டர் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

இஸ்ரோ நிறுவனம் தற்போது 70 டெராபுளோப் திறன் கொண்ட கம்ப்யூட்டரை பயன்படுத்தி உள்ளது. தற்போது வடிவமைக்கப்பட்டு உள்ள சூப்பர் கம்பயூட்டர் சூற்றுப்புற சூழலுக்கு ஏற்றதாகவும், குறைந்த மின்சக்தியை பயன்படுத்துவதாகவும் இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment