Tuesday, May 17, 2011

பாகிஸ்தானில் அத்துமீறி நுழைந்த நேட்டோ படை; ஹெலிகாப்டர் தாக்குதல் ; பாக்., அதிர்ச்சி

வர்ஜிஸ்தான்: பாகிஸ்தான் ராணுவ செக்போஸ்ட் மீது நேட்டோ படையினர் அத்துமீறி நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். பாக்., வீரர்கள் மிஷின்கன் மூலம் எதிர்தாக்குதல் நடத்தியதில் எவ்வித சேதமும் இல்லாமல் தப்பியது.பாக்., வீரர்கள் 2 பேர் மட்டுமே காயமுற்றனர். இது குறித்து நேட்டோ படையினர் எவ்வித கருத்தும் தெரிவிக்க மறுத்து விட்டது.

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த ஒசாமாவை கடந்த 2 ம் தேதி அமெரிக்க உறவுத்துறையினர் அதிரடி தாக்குதல் நடத்தி கொன்றனர். இதனையடுத்து அமெரிக்கா- பாக்., உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது என்றாலும் இரு தரப்பினரும் வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை. பாக்., ஐ.எஸ்.ஐ., ஒசாமாவுக்கு <உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு அமெரிக்காவிடம் பாக்., தனது விளக்கத்தை கொடுத்துள்ளது.


இந்நிலையில் ஆப்கனில் முகாமிட்டுள்ள நேட்டோ படையை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் பாக்., எல்லைக்குள் நுழைந்தது . வடக்கு வர்ஜிஸ்தான் மலைப்பகுதியில் உள்ள டாட்டா கேல் பகுதியில் உள்ள பாகிஸ்தான் செக் போஸ்ட் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலாக பாக்., வீரர்கள் சுட்டனர். ஆனால் ஹெலிகாப்டர் தப்பித்து பறந்து சென்று விட்டது. பாக்., வீரர்கள் 2 பேர் காயமுற்றனர். இந்த சம்பவம் குறித்து பாக்., உளவுத்துறை அதிகாரிகள், அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment