Wednesday, May 4, 2011

அருணாச்சல முதல் மந்திரி டோர்ஜி காண்டு உடல் மீட்பு

அருணாசலபிரதேச முதல்-மந்திரி டோர்ஜி காண்டு கடந்த 30-ந்தேதி தவாங் நகரில் இருந்து இடா நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். புறப்பட்ட 20 நிமிடங்களில் அந்த ஹெலிகாப்டர் தரை கட்டுப்பாட்டுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் மாயமாகி 5 நாட்கள் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

விமானப்படை ஹெலிகாப்டர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் கூட்டாக சேர்ந்து மலைப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். மலைப் பகுதியில் எங்காவது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி கிடக்கிறதா என்றும் தேடி வந்தனர். மோசமான வானிலை, பனிப்பொழிவு காரணமாக தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனால் பகலில் மட்டும் தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் டோர்ஜி காண்டு உள்ளிட்ட 4 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டரின் உதிரிபாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அவர் இறந்திருக்கக்கூடும் என்ற நிலையில் அவரது உடலை தேடும் பணியில் ராணுவம் முழுவீச்சில் தேடி வந்தது.

இதையடுத்து 5வது நாளான இன்று அவருடைய உடல் லோக்தால் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது உடல் மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டது.

No comments:

Post a Comment