Friday, September 9, 2011

எம் ஜி ஆரை எம் ஆர் ராதா சுட்டதன் பின்னணி என்ன?

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataM/mgr/images/restricted/06-11-2008/malayalam_actor_mgr_20.jpg



1. எம்.சிவகுமார், வேதாரண்யம்.

இந்த அரசின் 100 நாள் சாதனையாக எதை நினைக்கிறீர்கள்?

'ஜெயலலிதாவிடம் கொஞ்சம் மாறுதல் தெரிகிறது’ என்று பொதுமக்களிடம் நல்ல பெயர் வாங்க ஆரம்பித்திருப்பதே பெரிய சாதனை!


2. வசந்த முருகன், மன்னார்குடி.

எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்டதற்கு உண்மை​யான காரணம் என்ன?


அது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!
ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்த எம்.ஆர்.ராதா மலேசியாவில் பேசிய பேச்சைக் கேளுங்கள்...


'எம்.ஜி.ராமச்சந்திரனும் நானும் நண்பர்கள். அம்பது வருஷமா சிநேகிதம். ரெண்டு பேரும் தமாஷா சுட்டுக்கிட்டோம். ஏன் சுட்டுக்கக் கூடாதா? பொண்டாட்டியும் புருஷனும் அடிச்சுக்கலையா? அப்பனும் மவனும் வெட்டிக்கலையா? அதே மாதிரி ரெண்டு நண்பர்கள் அடிச்சிக்கிட்டோம். அவ்வளவுதான். கையில் கம்பிருந்தா கம்பை எடுத்து அடிச்சிக்குவோம். கத்தி இருந்தா, கத்தி எடுத்து அடிச்சிக்குவோம். ரிவால்வர் இருந்துச்சு... அந்த நேரத்துல. எடுத்து அடிச்சிக்கிட்டோம். அடிச்சதும் 'டப்பு... டப்பு’ன்னது. நிறுத்திப்புட்டோம்.

அதுல என்ன ஒருத்தரை ஒருத்தர் கொன்னு போடணும்னா சுட்டுக்கிட்டோம்? ரிவால்வரில் எட்டு தோட்டா இருக்கு. அப்படி விரோதமா இருந்தா, எட்டு தோட்டாவையும் பயன்படுத்தி இருப்போம். ஒரு தோட்டாதான் ஆச்சு. வெடிக்குதா வெடிக்கலையானு பார்த்தோம். அது வெடிச்சிருச்சு. இதெல்லாம் புரியாம ரொம்பப் பேர் தவறாப் பேசுறாங்க!’



http://cdn4.supergoodmovies.com/FilesFour/mgr-s-assistant-muthu-passes-away-418a725d.jpg
3. பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

அடையாள உண்ணாவிரதம், ஒரு நாள் உண்ணாவிரதம், காலவரையற்ற உண்ணாவிரதம், சாகும் வரை உண்ணாவிரதம்.... என்ன வேறுபாடு?

முன்னது இரண்டும் கட்சிகள் நடத்துவது. மூன்றாவது, போராட்டக்காரர்கள் நடத்துவது. சாகும் வரை உண்ணாவிரதம் மட்டுமே தியாகிகள் நடத்துவது!
முன்னது இரண்டும் ஒப்புக்காக நடத்தப்படுவது. நிர்ப்பந்தமும் நெருக்கடியும் காலவரையற்ற உண்ணா​​விரதத்துக்குக் காரணமாக இருக்கிறது. எதைப் பற்றிய கவலையும் இல்லாமல், நோக்கம் நிறைவேறினால் மட்டுமே போதும் என்ற ஒரே இலக்கோடு நடத்தப்படுவைதான் தியாக நெருப்பில் நடப்பவை!



4. மகேந்திரன், செய்யாறு.

அறிவை விருத்தி செய்ய என்ன செய்ய வேண்டும்?

'அதிகம் உற்று நோக்க வேண்டும். கொஞ்சமாவது துன்பப்பட வேண்டும். ஏராளமாக வாசிக்க வேண்டும்’ - என்று கெதே சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.
'கண்டதும் கற்றால் பண்டிதன் ஆவான்’ என்கிறதே நம்முடைய பழந்தமிழர் மொழி!



http://www.mgrhome.org/Pictures/AAA.jpg
5. அய்யாறு வாசுதேவன், சென்னை-14.

மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டால் சமூகத்தில் கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கும், கொலைபற்றிய பீதியிலேயே மக்கள் வாழ வேண்டி இருக்கும் என்கிறார்​களே?

அப்படியா?
மரண தண்டனை இப்போது நடைமுறையில்தானே இருக்கிறது. அதனால், நாட்டில் கொலையே நடக்கவில்லையா? கொலை, கொள்ளை பீதி இல்லாமல்தான் வாழ்கிறீர்களா? தண்டனைகளைக் கடுமைப்படுத்துவதால் மட்டுமே குற்றங்கள் குறைந்துவிடாது. குற்றவாளிகள் - காவல் துறை - ஆட்சியாளர்கள் - அதிகார வர்க்கம் இவற்றுக்குள் இருக்கும் நட்புறவுச் சங்கிலியை அறுப்பதன் மூலம்தான் குற்றங்​களைக் குறைக்க முடியும்!


6. ஆர்.அஜிதா, கம்பம்.

'அ.தி.மு.க. அரசுபற்றி இப்போது கருத்துச் சொல்ல மாட்டேன். ஆறு மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்’ என்று சொல்கிறாரே எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த்?

இதெல்லாம் நொண்டிச் சாக்கு!
அதுவரைக்கும் ஜெயலலிதா என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்வாரா விஜயகாந்த்?

தி.மு.க-வினர் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தபோது, பெருந்தலைவர் காமராஜர், 'அவர்கள் இப்போதுதான் அதிகாரத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆட்சி என்றால் என்ன, எந்த ஃபைல் எங்கே இருக்கிறது, அதை எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கு ஆறு மாதங்களாவது அவகாசம் தர வேண்டும். அதுவரை விமர்சிக்க மாட்டேன்’ என்று பெருந்தன்மையாகச் சொன்னார்.

அது புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களுக்குத்தான் பொருந்துமே தவிர... மூன்றாவது முறையாக முதல்வராகும் ஜெயலலிதாவுக்குப் பொருந்தாது.
அதைவிட முக்கியமாக, முதல் தடவை எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு வருபவர் ஆறு மாதங்களுக்கு சட்டமன்றத்துக்கு வரத் தேவை இல்லை என்று பெருந்தலைவர் காமராஜர் ஏதாவது சொல்லி வைத்தாரா என்று பழைய பேப்பரைப் பார்க்க வேண்டும்!


http://blog.tamilmp3songslyrics.com/image.axd?picture=2010%2F3%2Fmgr_latha.jpg
7. நா.மைதிலி, சென்னை-45.

தற்போதைய தலைமைச் செயலகம் இடப்பற்றாக்குறையாக இருப்பதால்தானே இப்போதுள்ள அரசு முந்தைய ஆட்சிக் காலத்திலும் புதிய கட்டடம் கட்டலாம் எனத் திட்டமிட்டது. கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை அரசு அலுவலகங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டு... மத்திய சிறை இருந்த இடத்தில் மருத்துவமனையை விரிவாக்கம் செய்துகொள்ளலாமே?


நல்ல யோசனைதான்! அதைச் செய்யவிடாமல் தடுக்கும் 'ஈகோ’வை எங்கே கொண்டு​போய்​வைப்பது?

8. முருகேசன், திருவள்ளூர்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தண்டனையைக் குறைக்கச் சொல்லி அறிக்கைவிடுத்த கருணாநிதி, 'இது கடிதம் அல்ல. கருணை மனு’ என்கிறாரே?


அவர் முதலமைச்சராக இருந்தபோது, இதே மூவரும் அனுப்பிய கருணை மனுவை வெறும் கடிதமாகத்​தான் பார்த்தார். இன்று இவரது கடிதத்​
தை கருணை மனுவாகப் பார்க்க வேண்டும் என்கிறார்.
வெறும் வார்த்தை ஜாலங்களில் ஓடுகிறது காலம்!


நன்றி - ஜூ வி

No comments:

Post a Comment