Friday, September 9, 2011

ஜெவைக்கண்டு விஜயகாந்த் பம்முவது ஏன்? விம்முவது ஜூ வி கட்டுரை


விஜயகாந்த்தை கழற்றிவிட நினைக்கிறாரா ஜெ.?

கூட்டணியை உலுக்கும் உள்ளாட்சி நிலவரம்!
ழுகார் நம்முன் ஆஜராகி செய்திச் சிட்டையைப் பிரிப்பதற்கு முன்னதாக, நாம் முந்திக்கொண்டோம்.

'
''புதிய கவர்னர் ரோசய்யாவை, கருணாநிதி திடீரென்று சந்தித்தாரே! ஏதாவது விஷேசம் உண்டா?''

''ரோசய்யாவுக்கும் கருணாநிதிக்கும் சொல்லிக்கொள்வது மாதிரி நட்பெல்லாம் இல்லை. 'நாங்கள் நெடுநாளைய நண்பர்கள்’ என்று கருணாநிதி சொல்லிக்கொள்கிறார். போகட்டும்... மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கருணாநிதி சொன்னாலும், 'கவர்னரை தன் வசம் வைத்துக்கொள்வது நல்லது’ என்று கருணாநிதி நினைத்து, நடந்த காரியபூர்வமான சந்திப்புதான் இது என்கிறார்கள் தி.மு.க-வில்.



அன்பழகன், துரைமுருகன் ஆகியோருடன்தான் ரோசய்யாவை சந்தித்தார் கருணாநிதி. தான் எழுதிய புத்தகங்களை அவருக்குக் கொடுத்தார். பிறகு துரைமுருகனை வெளியே அனுப்பிவிட்டு இரண்டு நிமிஷம் ரோசய் யாவிடம் தனிமையில் பேசினாராம் கருணாநிதி.''


''அது என்னவாம்?''

''ஜெயலலிதாவின் சில செயல்பாடுகளைச் சொல்லி, கருணாநிதி வருந்தினாராம். 'நில மோசடின்னு சொல்லி கட்சிக்காரங்களைக் கைது செய்றாங்க. எல்லாரையும் குண்டாஸ்ல போடு றாங்க. என் குடும்பத்தையே பழிவாங்கணும்னு நினைக்கிறாங்க. சமச்சீர்க் கல்வி விஷயத்தில் தப்பான முடிவெடுத்து, உச்ச நீதிமன்றம் கண்டிச்ச பிறகு பின்வாங்கிட்டாங்க’ என்று கடகடவென கருணாநிதி கலங்கிவிட்டதாக தி.மு.க. வட்டாரம் சொல்கிறது.


முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் ரோசய்யா கேட்டுக்கொண்டாராம்.


அடுத்து, சொற்ப நிமிடங்களிலேயே வெளியே வந்துவிட்டார் கருணாநிதி!''


''இதுபற்றி என்ன நினைக்கிறாராம் ரோசய்யா!''

''இதெல்லாம் நமக்குத் தேவை இல்லாத விஷயம் என்று நினைப்பார்!

சென்னைக்கு வருவதற்கு முந்தைய நாள், ஆந்திரப் பத்திரிகையாளர் ஒருவர் ரோசய்யாவை சந்தித்துள்ளார். அப்போது, 'நான் அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்வேன். அந்த மாநில அரசுக்கு உதவியாக இருப்பேன். நான் அரசியல்வாதி மாதிரி கருத்துச் சொல்லமாட்டேன். பப்ளிக் ஸ்பீக்கராக இருக்க மாட்டேன்’ என்று சொன்னாராம். இதை வைத்துப்பார்த்தால் ரோசய்யா... அடங்கிய சமர்த்தராகவே காலத்தை ஓட்டிவிடுவார் என்று நினைக்கிறேன். ஆனால், காங்கிரஸ் மேலிடம் என்ன நினைக்கிறதோ...''




''பர்னாலா உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டாரா?''

''புதிய கவர்னர் வரும்போது முந்தைய கவர்னர் இருப்பது மரபு அல்லவாம்! எனவே, ரோசய்யா மாலையில் பதவி ஏற்கும் அன்று காலையில் பர்னாலா, அவரது மனைவி மற்றும் ஒரே ஒரு பாதுகாவலர் - ஆகிய மூவரும் ராஜ்பவனில் இருந்து பறந்துவிட்டனர். மகன்கள் நான்கைந்து நாட்களுக்கு முன்னதாகவே பொருட்களுடன் போய்விட்டனர். படாடோபமாக வழியனுப்பு விழாக்கள் நடக்காததில் பர்னாலா வருத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். ஜெயலலிதாவுக்கும், இவருக்கும் நட்பு சரியாக இல்லை என்பதும் விழா நடக்காததற்குக் காரணமாக இருக்கலாம். 'ஒட்டி உறவாடிய தி.மு.க-வாவது சிறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கலாம்’ என்று பர்னாலா வருந்தியதாக வும் சொல்கிறார்கள்.''


''விழா கொண்டாடும் நிலைமையிலா இருக்கிறது தி.மு.க.?''

''அதனால்தான் சண்டிகர் போய் இறங்கிய மறுநாளே அங்கு உள்ள நிருபர்களை அழைத்து பார்ட்டி கொடுத்து பேசினாராம் பர்னாலா. அடுத்து வரப்போகும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களுள் ஒருவராக பர்னாலா இருக்கப் போகிறாராம். பிரகாஷ் சிங் பாதல் - காங்கிரஸ் ஒரு கூட்டணி அமைக்க, அதற்கு எதிராக பர்னாலா ஒரு கூட்டணியைத் தயார் செய்யத் தொடங்கிவிட்டார். முதல்வர் பாதல், அவரது மகனும் துணை முதல்வருமான சுக்பிர்சிங் பாதல் இருவரும்தான் இனி அவரது இலக்கு! 'இவ்வளவு ஆக்ரோஷமான மனிதர் இங்கே நடந்த பல விஷயங்களைக் கண்டும் காணாமல் மௌனியாக இருந்தது ஏன்?’ என்பதுதான் பலரது கேள்வி. கருணாநிதியுடனான நட்பு என்கிறார்கள் சிலர். பர்னாலாவின் மகனைச் சிலர் காரணம் சொல்கிறார்கள். மொத்தத்தில் பர்னாலா, வெறும் தலையாட்டி பொம்மையாகவே கடந்த ஐந்து ஆண்டுகளைக் கழித்துவிட்டுப் போய்விட்டார்!''

''திடீரென ஸ்டாலின் லண்டன் கிளம்பிவிட்டாரே?''

''மருத்துவ சிகிச்சைக்காக ஆண்டுக்கு ஒரு முறை லண்டன் சென்று வருவதைத் தனது வழக்கமாக வைத்துள்ளார் ஸ்டாலின். லண்டன் செல்வதற்கு முன்னதாக, இங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று செக்-அப் செய்ததாகவும் சொல்கிறார்கள். எனவே, அவர் லண்டன் செல்வதில் ரகசியம் எதுவும் இல்லை! ஆனால், அதற்காக அவர் தேர்ந்தெடுத்த தேதிதான் தி.மு.க-வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது!''


''என்ன?''

''சட்டமன்றத்துக்குள் போவதா வேண்டாமா என்று கட்சிக்குள் பெரும் பிரச்னை நடப்பது அனை வருக்கும் தெரியும். முதலில் போக மாட்டேன் என்றார்கள். ஒரு நாள் போனார்கள். மறுபடியும் பாய்காட் பண்ணினார்கள். மீண்டும் 5-ம் தேதி போகப் போவதாக ஸ்டாலின்தான் அறிவித்தார். சட்டமன்ற தி.மு.க. குழுத் தலைவர் அவர்தானே! அன்றைய தினம் அவர் இல்லாமல் லண்டன் போனது சரியா என்பதுதான் சில தி.மு.க. பிரமுகர்களின் கேள்வி!

'5-ம் தேதி, தான் லண்டனில் இருப்போம் என்பது முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது, அந்த நாளை ஏன் சொல்ல வேண்டும்?’ என்று சிலர் புலம்புகிறார்கள். '

தளபதி இருந்து எங்களை சபைக்கு அழைத்துச் சென்றால்தானே உற்சாகமாக இருக்கும்? சபைக்குள் என்ன முடிவு எடுப்பது என்பதையும் அவர் இருந்தால்தான் உடனடியாகச் சொல்லவும் முடியும்?’ என்பது இவர்களது கருத்து. மேலும், சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள கருணாநிதி விரும்புகிறார். ஆனால், அவரது வீல்சேருக்கு வழி இல்லாததால் அவரும் சைலன்ட் டாக இருக்க வேண்டிய நெருக்கடி. மொத்தத்தில் சபைக்கும் தி.மு.க-வுக்கும் ஒட்டவில்லை!''

''சேலம் தி.மு.க. பொதுக் கூட்டத்திலும் ஏதோ கசகசப்பாமே?''

''இத்தனை ஆண்டுகால தி.மு.க. வரலாற்றில் வீரபாண்டி ஆறுமுகம் இல்லாமல் ஒரு பிரமாண்டமான பொதுக் கூட்டத்தை அவரது எதிரிகள் சேர்ந்து நடத்திக் காட்டிவிட்டார்கள். பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன்தான் இதற்கு ஏற்பாடு. ஸ்டாலினின் முழு ஆசியுடன் நடந்த இந்தக் கூட்டத்துக்காக சேலம் போஸ் மைதானத்தில் எக்கச்சக்கமான கூட்டமாம்!

இதற்கான ஆலோசனை நடந்தபோதே வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவு ஆட்கள் கடும் எதிர்ப்பு கிளப்பினார்களாம். 'அண்ணன், அடுத்த வாரம் ஜாமீனில் வெளியே வரப் போகிறார். அவர் வந்ததும் நடத்தலாம்’ என்று வெளிப்படையாகவே சொல்ல... எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் கலைக்கப்பட்டது. சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் கலையமுதன், சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து, 'தளபதி கலந்துகிடுற தேதியை மாத்தணும்’ என்று சொல்லி...

வீரபாண்டி ஆறுமுகம் இல்லாத காரணத்தையும் அவர் சொன்னாராம். கடுப்பான கருணாநிதி, 'வீரபாண்டியார் இல்லேன்னா கூட்டமே நடத்தக் கூடாதா? நானே இல்லேன்னாக்கூட கட்சி இருக்கும். கூட்டம் நடக்கும்’ என்றாராம் கருணாநிதி. கலையமுதன் ஓடி வந்துவிட்டார். இதைத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக வீரபாண்டி ஆறுமுகத்தின் எதிர் கோஷ்டி பார்க்கிறது. 'மாவட்டக் கழகத்துக்குள் குழப்பம் ஏற்படுத்தும் இதுபோன்ற காரியங்களுக்கு தளபதி உதவி செய்வது சரியா?’ எனச் சிலர் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்! அதேபோல்...''

''மாநிலம் முழுவதும் தி.மு.க. பிரமுகர்கள் பல மாவட்டங்களில் கைதாகி வருகிறார்கள். எங்குமே நடக்காத காரியம், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் நடந்தது. 'பொன்முடியை விடுதலை செய்’ என்று ஆங்காங்கே தி.மு.க-வினர் மறியல் செய்து கைதாவதுதான் அது. கனிமொழி முதல் எத்தனையோ பேர் கைதான போதெல்லாம் இதுபோல் மறியல் நடத்தாத உடன்பிறப்புகள், பொன்முடிக்காக மட்டும் நடத்துவது சரியா?’ என சிலர் கேட்க ஆரம்பித்த நிலையில்... 'விழுப்புரத்தில் நடந்தது மாதிரி எல்லா ஊர்லயும் நடக்கட்டும்’ என்று தூண்டி விடும் காரியத்தையும் ஸ்டாலின் செய்கிறாராம். '


மாநிலத் தலைமையின் அனுமதி இல்லாமல் ஆங்காங்கே ஆர்ப் பாட்டம் நடத்துவது தவறு என்று கண்டிக்காமல் தளபதியே இப்படிச் சொல்வது சரியா?’ என்றும் இவர்கள் கேட்கிறார்கள். மொத்தத்தில் கட்சி கலகலத்துக்கொண்டு இருப்பது தெரிகிறது!''


''உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் விஜயகாந்த் இருப்பாரா?''

No comments:

Post a Comment