Saturday, September 17, 2011

சொல்வதெல்லாம் உண்மை பாகம் 16

வாசகர்கள் மன்னிக்கவேண்டும். நான் என் பேரையும் சொல்லமுடியாது. நான் கிளினிக் வைத்திருந்த ஊரையும் சொல்லமுடியாது. காரணம் அந்த ஊரில் என் பேரும், என் பேரில் அந்த ஊரும் பிணைந்து கிடக்கிறது. எனக்கும், அரசியலுக்கும் ஆரம்பத்தில் எந்தத் தொடர்பும் இல்லை. எனது குடும்பமும் அரசியலுக்கு அப்பாற்பட்டதுதான். ஆனாலும் விதி என்னை அரசியல் ஆற்றில் இழுத்துக்கொண்டு விட்டது. அதிலும் ஆட்சியாளரின் நிழலாகவே என்னை அமர வைத்துவிட்டது.
06
இதற்கு என்ன தகுதி என்றால் சிறப்பாக எதுவுமில்லை என்பதுதான் பதில். நாட்டை ஆண்ட முக்கிய நபரின் வீடு இருந்த என் பெயர்புரத்தில்தான் நான் கிளினிக் வை த்திருந்தேன். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு பிரச்னை மூலம் அவரைச் சந்தித்து மருத்துவ உதவியும், அறிவுரையும் வழங்கவேண்டிய வாய்ப்பு எனக்கு ஏற்ப ட்டது. அந்த வாய்ப்பை அப்படியே பயன்படுத்திக்கொண்டேன். பாறாங்கல்லில் போடப்பட்ட பைல் ஃபவுன்டேஷனாக அந்த முக்கியப் புள்ளியை நான் பிடித் துக்கொண்டேன். அதன்பிறகு அவ்வப்போது வைத்தியத்திற்காக என்னை அழைத்தவர்கள், அவரின் உடல்நிலை கருதி என்னை தொடர்ந்து அருகில் இருக்கும்படி கூறிவிடவே, அதுவே எனக்கு முழுநேர வேலையாகிவிட்டது. ஒருவருக்கு அருகிலிருந்து மருத்துவம் செய்வது தொழில் தர்மப்படி மிகவும் நல்ல விஷயம்தான். ஆனால், அவரை முழுமையாக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது கெட்ட விஷயம். நான் கெட்ட விஷயத்தைத்தான் அதிகமாக செய்தேன். காரணம், நான் என் மருத் துவத் தொழிலில் சிறப்பாக எதையும் படித்துவிடவில்லை. பயிற்சியிலும் பெரிய அளவில் பெயர் எடுத்துவிடவில்லை. எனவே எனக்கு தொழில்ரீதியான வருமானம் என்பது அவ்வளவாக இல்லை. அதே நேரத்தில் எனக்கு தொழில்ரீதியாக ஏற்பட்டுவந்த முக்கிய புள்ளியின் தொடர்பை வருமானமாக்கிக்கொண்டேன்.

பல நேரங்களில் அவரின் உறவினர்கள்கூட என்னிடம் அனுமதி பெற்றபிறகே அவரைச் சந்திக்கின்ற சூழ்நிலை உருவாகிவிடும். அவரின் உடல்நிலை அப்படி இருக்கும். இதையெல்லாம் என் மருத்துவத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாக நான் நினைத்துக்கொண்டு அதை அதிகாரமாக மாற்றிக்கொண்டேன். ஏற்கெனவே நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவரைச் சந்தித்தபிறகே என் வாழ்க்கை வளர்ச்சியடையத் தொடங்கியது. பெரியவரைச் சந்திக்க வருபவர்களைப் போல உணர்வாலும், செயலாலும் நானும் ஒரு அரசியல்வாதியாகவே உருமாறத் தொடங்கினேன். அவர்கள் வெள்ளைச் சட்டையில் இருப்பார்கள். நானும் வெள்ளைக்கோட்டைப் போட்டுக்கொண்டிருப்பேன். அவர்கள் கழுத்தில் துண்டு இருக்கும். என் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் இருக்கும். வித்தியாசம் இவ்வளவுதான்.

இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி நான் அடைந்த பயன்களுக்கு அளவே இல்லை. நந்தனத்திற்கு அருகில் இருந்த கோபுரப் பகுதியில் எனக்காக இடத்தை வாங்கி, வீட் டையும் கட்டிக் கொடுத்தார். இங்கு ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். ‘கிரி’ திரைப்படத்தில் வடிவேலு அர்ஜுனிடம் ‘‘எங்கக்கா சூப்பர் ஃபிகரு’’ என்று கூற ‘‘அக்காவ சூப்பர் ஃபிகருன்னு சொன்ன முதல் ஆள் நீதாண்டா’’ என்று கூறி காறித் துப்புவார். அப்படி யாரும் என்மீது எச்சில் துப்பிவிடாதீர்கள். என் துணை மிக வும் அழகாக இருப்பார். சினிமா நடிகைகளும் தோற்கும் அழகும், வாளிப்பும் உடையவர். மேக்கப் இல்லாமல் வெளியில் வரமாட்டார். என்மீது பார்வையைப் பதித்த அரசியல் புள்ளிகள் என் துணைவியின் பக்கமும் திருப்பிவிட்டனர். இதனால் வீட்டில் பெருங்குழப்பம் ஏற்பட்டது. வேறு வழியின்றி ஒருகட்டத்தில் நாங்கள் பிரிந்துவி ட்டோம். கொஞ்ச நாட்களில் நானும் மறுமணம் செய்துகொள்ள, அவரும் வேறொரு துணையின் கரம் பிடித்துக்கொண்டார்.

அரசியல் வட்டாரத்திலும் சரி, டாக்டர்கள் வட்டாரத்திலும் சரி சபலப் பேர்வழி என்றே என்னைக் குறிப்பிடுவார்கள். என் பெயரின் புரத்தில் நான் வைத்திருந்த கிளினிக்கில் பெருக்குவதற்கு வந்த பெண்கள் முதல், சுத்தம் செய்ய வந்த ஆயா வரை ஒருவரையும் நான் விட்டு வைத்ததில்லை. நான் பெரிய வைத்தியன் இல்லை என்பதால் என் னைத் தேடிவரும் நோயாளிகள் குறைவுதான். அப்படி எப்போதாவது வரும் நோயாளிகளிலும் பெண்கள் யாராவது வந்துவிட்டால் முதலில் என் பார்வை ஊசிகளால் அவர்களைப் பதம் பார்த்துவிடுவேன். அவர்களுக்கு கால் விரலில் பட்ட காயத்திற்காக என்னிடம் வந்தாலும் என் கை விரல்கள் அவர்களின் முந்தானைப் பக்கம் நோக்கியே முன்னேறும். அவர்களின் நாடித்துடிப்பை பரிசோதிக்கும்போது என் நாடித்துடிப்பே அதிகரித்துவிடும். மூச்சை இழுத்து அவர்களை விடச் சொல்லும்போது எனக்கே அதிகமாக மூச்சிரைக்கும். என் வைத்திய வேலைகளில் பலரை நான் கரெக்ட் செய்ததுண்டு. சிலரிடம் அசிங்கப்பட்டதுமுண்டு. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடுவேன்.

அந்த முக்கிய இடத்தில் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட நட்சத்திரப் பெயர் பாடும் மல்லிகை. அவர் என்னிடமும் சகஜமாக இருப்பார். ஒருமுறை அவரிடம் என் சபலப்புத்தி வெளிப்பட்டுவிட ‘பளார்’ என்று கன்னத்தைச் சுட்டுக்கொண்டேன்.

எனது இந்த போக்கிரித்தனத்தால் தொழிலில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை. கிளினிக்கை பராமரிக்கவும் ஆட்கள் வர அச்சப்பட்டார்கள். எனவே அதை மு ழுவதுமாக மூடவேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. பின்னர் முழுநேர வியாபாரியாக அரசியலில் களம் இறங்கினேன்.

ஒவ்வொரு பகுதியிலும் எனக்கு வேண்டியவர்கள் மூலம் வேலைகளை எடுத்து அதை முடித்துக் கொடுத்தேன். இதற்காக புரோக்கர்கள் போல சுமார் ஏழெட்டுப் பேர் எனக்காக செயல்பட்டு வந்தார்கள். வந்த வருமானத்தில் ஒரு பகுதியை இந்த ஏஜெண்ட்டுகளுக்காக ஒதுக்கிக் கொடுத்தேன். அதில் திண்டுக்கல், நதியூரில் உள்ள தொலைக்காட்சி கேசமுருகன் மற்றும் அவரின் வாரிசுதான் தலைமை ஏஜெண்ட்டுகள்.

நான் எந்த வேலையைக் கொண்டு வந்தாலும் முடித்துக்கொடுக்கும்படி பெரியவரே உத்தரவிட்டிருந்ததால் என் காரியங்கள் எல்லாம் கஷ்டப்படாமல் நடந்து முடிந்தது. அதே நேரத்தில் சில நில விவகாரங்களும் என்மீது விழுந்திருக்கின்றன. அதாவது தென்சென்னையில் கடற்கரை நகரில் எனக்கு அரசு அலாட்மெண்டில் கிடைத்த ஒரு இடம். அதை முதலில் ஒருவருக்கு அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு, அக்ரிமெண்ட் போட்டு, அடுத்து ஒருவருக்கு விற்க முடிவு செய்து, பணம் வாங்கிக்கொண்டு, அதன்பிறகு அதிக விலைக்கு வேறொருவருக்கு விற்றுவிட்டேன். இதனால், அந்த லேண்ட் செட்டில்மெண்டில் ஏற்பட்ட சிக்கல் இன்னமும் முடிந்தபாடில்லை. அதேபோல் நொளம்பூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் இரண்டு அலாட்மெண்டுகளை வாங்கி வைத்திருக்கிறேன்.

இது அரசாங்கத்திலிருந்து கிடைத்தவை என்றாலும் நான் சேர்த்திருக்கும் சொத்திற்கு கணக்கே இல்லை. அண்மையில் நடந்த எனது வாரிசின் திருமணத்தை பிரமாண் டமாக நடத்தியதுடன், பாதிக்கும் மேற்பட்ட சொத்துக்களை அவரின் பெயரிலேயே எழுதி வைத்துவிட்டேன்.

கடந்த ஆட்சியில் நடந்த நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு விவகாரங்களில் அரசியல் புள்ளிகள் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தாலும் எனக்கு அந்தக் கவலையெல்லாம் இல்லை. காரணம் நான் அவ்வளவாக வெளிச்சத்தில் வந்ததில்லை. என் பெயர் அவ்வளவாக அடிபட்டதுமில்லை. இருந்தாலும் இரண்டொரு நிலப் பஞ்சாயத்துகள் இன்னும் முடியாமல் இருப்பதால் ஏதாவது சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறேன்.

ஆனாலும் பள்ளித் தோழர்களுக்காகவும், கல்லூரி நண்பர்களின் ஆதாயத்துக்காகவும் எத்தனையோ அப்பாவிகளை அல்லாட வைத்திருக்கும் எனக்கு ஆண்டவன் எந்த வழியில் கூலி கொடுப்பான் என்பதுதான் தெரியவில்லை.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

No comments:

Post a Comment