வாங்கருவா போல மீச வச்சு’ என்று பாரதியைப் பாடுவார்கள். இவரும் பாரதியைப்போல மீசை வைத்திருப்பவர்தான். ஆனால், பாரதியாக அல்ல; சாரதியாக தன் வாழ்க்கையைத் துவங்கியவர். லாரி ஓட்டத் தொடங்கி, பின்னர் லாரி புரோக்கராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். இவருடன் லாரி புரோக்கராக இருந்தவர்கள் இப்போது பஸ் புரோக்கராகத்தான் புரமோஜன் பெற்றுள்ளனர்.
நன்றி குமுதம் ரிப்போர்டர் |
Wednesday, August 31, 2011
சொல்வதெல்லாம் உண்மை பாகம் 14
மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய தீர்மானம்
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (30.8.2011) சட்டமன்றப் பேரவையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானத்தினை முன்மொழிந்து
ஆற்றிய உரை
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72-ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மேதகு குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்தப் பிரச்சனையில், தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்தும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் ஓர் அறிக்கையினை இந்த மாமன்றத்தில் நேற்று நான் அளித்தேன்.
அந்த அறிக்கையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை முதலமைச்சராகிய நானோ, தமிழ்நாடு அரசோ, மாநில ஆளுநரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாது என்பதை தெளிவுபட நான் கூறியிருந்தேன்.
மத்திய அரசு இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக்கூறு 257(1)-ன் படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 72-ன்படி, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்சனையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 161-ன் படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் உத்தரவிட்டதை சுட்டிக் காட்டினேன்.
இந்தச் சூழ்நிலையில், மேற்படி மூவருக்கும் தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட்டு விடும் என்று தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன. எனக்கும் இது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன.
எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.
தீர்மானம்
""தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது."
முடிவுரை:
தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன்.“
Friday, August 26, 2011
சொல்வதெல்லாம் உண்மை பாகம் 13
தனக்கு சோறு கிடைக்குமா என்று பஞ்சம் பிழைக்க வந்த இவர் இன்று பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவிட்டார். பஞ்சத்துப் பொட்டு இல்லை. பரம்பரைப் பொட்டு என்று கட்சித் தலைமையால் அங்கீகரிக்கப்பட்டவரால் அடையாளங் காட்டப்பட்டவர் இவர். எட்டாவதைக்கூட எட்டிப் பிடிக்காத படிப்பு. ஆனால், டபுள் எம்.ஏ., வாங்கியவர்கள் எல்லாம் தொழிலில் இவருக்குப் பின்னால்தான் நிற்க வேண்டும். அந்தத் தொழிலையும் அழகாக செய்தவர். வெற்றியால் புகழ்பெற்றவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் இவரோ நெற்றியால் புகழ்பெற்றவர்.
நன்றி குமுதம் ரிப்போர்டர் |
சொல்வதெல்லாம் உண்மை பாகம் 12
சாதாரணமாக வாழ்க்கையைத் துவங்கும் பலரில் சிலர் மட்டுமே உழைத்து சம்பாதித்து உயர்கின்றனர். சிலரோ மற்றவர்களைச் சுரண்டி வளர்ச்சியடைகின்றனர். இவர் உழைத்ததும் இல்லை, சுரண்டியதுமில்லை. மற்றவர்களை சுரண்ட வைத்து வளர்ந்தவர். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த இவரின் இன்றைய சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். சிக்கிம், பூட்டான், மேகாலயா என இவரின் பிடியில் சிக்கித் தவிக்காத குடும்பங்கள் இல்லை.
நன்றி குமுதம் ரிப்போர்டர் |
Thursday, August 25, 2011
'நானே தூக்கில் ஏறும் கடைசி ஆளாக இருக்கட்டும்!''

ஈழப் படுகொலைகள் உண்டாக்கிய துயரமே தமிழக மனங்களில் ரணமாக வடியும் நிலையில், தூக்குக் கயிறு வடிவில் மீண்டும் துரத்தத் தொடங்கி இருக்கிறது துயரம். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் மரணத்தின் நிழலில் நிற்கிறார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தளர்த்தக்கோரி இவர்கள் அனுப்பிய கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூவரையும் காப்பாற்றக் கோரி கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழகம் முழுக்க உணர்வும் உருக்கமுமான போராட்டங்கள் நடக்கின்றன. மரணத்தின் துரத்தலில் வாடும் அந்த மூவரின் மனப் போராட்டங்களையும் அறிய முடிவெடுத்தோம். வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம். அதன் தொகுப்பு இங்கே...
முதலில் பேரறிவாளன்...
''எந்த நேரத்திலும் தூக்கு அறிவிப்பு வரலாம் என்கிற நிலையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?''
'முதலில் எங்களுக்காகப் போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மரணத்தின் நிழலில்தான் நிற்கிறோம். கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் மரண நிழல் எங்களைப் பெரிதாக சூழ்ந்திருக்கிறது. மக்களின் ஒருமித்த கைகோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது. 19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்!''

''அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனைவரும் எங்களுக்காகப் போராடுவது எங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது. இன உணர்வு மட்டும் அல்லாது, மனிதநேயமும் ஒருசேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது. பொதுமக்களும் அனைத்துத் தலைவர்களும் ஒரே அணியில் நின்று தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் எங்களின் விடிவுக்கு வழி செய்வார். அவருடைய குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத்தெரியும்!''
''தமிழக முதல்வரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?''
''மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அம்மா, மரணம் கோரப்பசியோடு துரத்தும் இந்த நேரத்தில் மட்டும் அல்ல... 20.07.07 அன்றே உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். 'வழக்கில் சிக்குபவர்களுக்கு வசதி இல்லை என்றால், அவர்களின் தரப்பு நியாயம் அம்பலம் ஏறாமல் போய்விடும். அத்தகைய குறைபாடு கொண்ட கட்டமைப்புதான் இன்றைக்கு நிலவுகிறது. என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் இத்தனை நாள் மரணத்தின் மடியில் படுத்துக் கிடப்பவனாகக் கேட்கிறேன்... தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்!’ என அந்தக் கடிதத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன். பிறருக்கு முன்னுதாரணமான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருகிற சக்தி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது.மனசாட்சியின் கண்ணீர்க்குரலாகச் சொல்கிறேன்... எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை. சித்திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும் அம்மா!''
''கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா?''
''99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் என்னைப் பார்க்க வந்தார். 'வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டார். 'தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன்’ எனச் சொன்னேன். காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் ஒவ்வொரு நிமிஷமும் எத்தகையக் கொடூரமானது என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான். வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க இப்போது ஆசையாக இருக்கிறது. சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது. எங்களுக்காகப் போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்பத் தோன்றுகிறது. ஆனால், ஏற்கெனவே பரப்பிய பழிகள் போதாது என 'சாத்தானின் படைகள்’ என்கிற புத்தகத்தை நான் அச்சடித்ததாக சிலர் இப்போது கிளப்பிவிடுகிறார்கள். அந்தப் புத்தகத்தை யார் உருவாக்கியது என்பது சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் என்னை இட்டுக்கட்டுவது ஏன்? ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒருவேளை மரணம் எங்களை வென்றுவிட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது... தூக்குக்குப் பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்!''
அடுத்து முருகன்...
''தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?''
''மரணத்தைவிட மரணத்தின் நாளுக்காகக் காத்திருப்பது கொடுமையானது. அதை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் இந்த சூழலில், மக்களின் ஆதரவுதான் எங்களை நம்பிக்கையோடு நிமிர வைக்கிறது! தனித்தனியான போராட்டங்களை முன்னெடுக்காமல், எங்களுக்காக எல்லோரும் ஒருமித்து நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. இதர மாநிலங்களில் தண்ணீர் பிரச்னைக்குகூட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகத் திரளுகின்றன. எங்களின் கண்ணீர் பிரச்னைக்கும் அதேபோல் அனைத்துக் கட்சிகளும் திரண்டு, முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். மூன்று உயிர்களுக்காக மொத்த தமிழகமும் கைகோத்து நின்றதை காலக் கல்வெட்டு தமிழனின் உயர்ந்த உணர்வாகப் பதிவு செய்ய வேண்டும்!''
''தமிழக மக்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?''
''எங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மரணத்துக்குப் பயந்து இந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை. எங்களின் கவனத்துக்குத் தெரியாமல் நடந்த சம்பவத்துக்கு இத்தனை வருட சிறைவாசமே பெரிய கொடுமை. ஒப்புதல் வாக்குமூலத்தில் நாங்களே பல விஷயங்களை ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களே தயாரித்து எங்களை அதில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அதற்காக அவர்கள் செய்த சித்ரவதைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மரணக் கொட்டடியின் நெருக்கடிகள் எங்களுக்குப் பழகிப்போனாலும், என்றைக்காவது ஒருநாள் வெளியே வருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. உறவுகளின் உணர்வுகளால் அந்த நம்பிக்கைப் பலப்படுகிறது. ஒரே வார்த்தையில் எங்களின் உணர்வைச் சொல்வதானால்.... நன்றி!''
அடுத்து ம.தி.சாந்தன்...
''ராஜீவ் கொலை விசாரணையில் நிறைய குளறுபடிகள் நடந்ததாகச் சொல்கிறார்களே...?''
''கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம். இந்த வேதனையைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும்.
கொழும்பு வழியாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்பதாலேயே நான் இந்தியாவுக்கு வந்தேன். இலங்கை அரசு தந்த உண்மையான பாஸ்போர்ட்டுடன் வந்தேன். அதை சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளது. ராஜீவ் போன்ற பெரிய தலைவரைக் கொல்ல வருபவன் தன்னைப் பற்றிய தகவலைச் சொல்லும் உண்மையான பாஸ்போர்ட்டுடன் வருவானா?
நான் சுமக்கும் மரண தண்டனைக்குப் பெயர் குழப்பமும் ஒரு காரணம். இந்த வழக்கில் கைதாகி விடுதலையான இரும்பொறை என்பவரை நான் ராஜீவ் இறப்பதற்கு முன்னர் சந்தித்ததாகவும், 15 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும், 'முக்கியமான ஒரு நபரைக் கொல்லப் போகிறோம்’ என்று சொன்னதாகவும் மரண தண்டனையை உறுதி செய்தபோது மாண்புமிகு நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் கூறுகிறார். ஆனால், மாண்புமிகு நீதிபதி வாத்வா அவர்கள் அது இறந்துபோன எதிரி திருச்சி சாந்தன் என்கிறார். இன்னொருவர் சொன்னதை நான் சொன்னதாகச் சொல்லி என்னைத் தூக்கில் நிறுத்தப் போகிறார்கள்.
'நானும் சிவராசனும் நளினியை மிரட்டி இந்தசதிக்கு உடன்பட வைத்தோம்’ என்று நீதிபதி தாமஸ் சொல்கிறார். ஆனால், நீதிபதி வாத்வா, 'ராஜீவ் இறந்த அடுத்த நாள்தான் நளினியை சாந்தன் அறிவார்’ என்கிறார்.
நான் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவில் முக்கியமான ஆள் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக நீதிபதி தாமஸ் தீர்ப்பில் சொல்கிறார். இவை எதற்கும் ஆதாரம் இல்லை. விடுதலையான இரும்பொறையுடன் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றோ, நளினியை மிரட்டினேன் என்றோ சி.பி.ஐ.கூடச் சொல்லவில்லை. ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவரிடம் கூறி அவரது பதிலை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் என் விஷயத்தில் இது செய்யப்படவில்லையே.. எப்படி?
சிவராசனின் பணத்தை முதலில் காந்தன் என்பவர் கையாண்டார். அவரிடம் இருந்து நான் அந்தப் பொறுப்பினை எடுத்துக்கொண்டதாக நீதிபதி வாத்வா அவர்கள் தீர்ப்பில் கூறுகிறார். சிவராசனின் பணத்தை நான் பாதுகாத்து கொடுத்ததாகவோ கையாண்டதாகவோ விசாரணை நீதிமன்றம் என்னிடம் கேட்டுப் பதிவு செய்யவில்லை. இப்படி எல்லாம் குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகளே எங்களுக்கான முடிவுப் படிகளாக மாறிவிட்டன!''
''கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரிந்த உடன் என்ன நினைத்தீர்கள்?''
''என் தந்தை ஆறுமுகம் தில்லையம்பலம் அவர்களின் நினைவு வந்தது. அவருக்கு இப்போது 70 வயது. இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதற்கு முன்னர் அங்கு விவசாயம் செய்துகொண்டு இருந்தார். அவர் எப்படி இருக்கிறார் என்கிற கவலை என்னைப் பெரிதாக வருத்துகிறது. பெற்ற தகப்பன் இருக்கிறாரா இல்லையா என்பதை நினைத்து அழுவதா? நான் இருப்பேனா மாட்டேனா என்பதை நினைத்து அழுவதா? இந்த அப்பனும் மகனும் விதியெனும் கையில் சிக்கிய விளையாட்டுப் பொம்மைகளாய் அல்லாடுகிறோம்!''
நன்றி : விகடன்
* 30 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து 2013-க்குள் நீக்கும் HSBC
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் HSBC. வங்கியின் புதிய தலைவராக ஸ்டூவர்ட் கலிவர் பொறுப்பேற்றுள்ளார். இந்த வங்கியில் உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். அதிலும் ஆசியாவில் தான் அதிகமானோர் பணி புரிகின்றனர்.
ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 11.5 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த வங்கிப் பங்குகளின் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வரிக்கு முந்தைய லாபம் 11.1 பில்லியனாக இருந்தது.
லத்தீன் அமெரிக்கா, அமெரி்க்கா, இஙகிலாந்து, பிரான்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வங்கியை மறுசீரமைக்கவுள்ளதால் 5 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கியதாக வங்கி அறிவித்துள்ளது. வரும் 2013-ம் ஆண்டிற்குள் மேலும் 25, 000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.
இது குறித்து வங்கியின் தலைவர் ஸ்டூவர்ட் கூறியதாவது,
பணி நீக்கம் தொடரும். தற்போதில் இருந்து வரும் 2013-ம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 25 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றார்.
மொத்தமுள்ள ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பணி நீக்கம் செய்யப்படவிருக்கின்றனர். ஆசியாவில் அதிக கவனம் செலுத்துவதற்காகத் தான் இந்தி ஆட்குறைப்பு என்று கூறப்படுகின்றது.
உலகெல்லாம் வங்கி அமைக்கும் திட்டத்தை HSBC கைவிட்டுள்ளது.
'சிலிக்கான் கிங்'' பதவி விலகல்
உலகின் மிக சக்திவாய்ந்த நிறுவனமாக ஆப்பிளை மாற்றிய ஸ்டீவ் ஜாப்ஸ் பதவி விலகியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் கணையப் புற்றுநோய் காரணமாக அவர் இந்த கடினமான முடிவை மேற்கொண்டுள்ளதாக உள்வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு அமெரிக்க தம்பதியின் வளர்ப்பு மகன் ஸ்டீவ் ஜாப்ஸ். புத்த மதத்தைச் சேர்ந்தவர். கல்லூரிப் படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத அவர், எழுபதுகளின் பிற்பகுதியில் தனது நண்பர் ஸ்டீவ் வோஸ்னியாக்குடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
இவரது நிறுவனம் தயாரித்த ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. ஆனால் ஆப்பிள் 2, கம்ப்யூட்டர் உலகில் இவரது நிறுவனத்துக்கான இடத்தை உறுதி செய்தது. 1980-ல் ஆப்பிளை பொது நிறுவனமாக மாற்றி பங்கு வெளியிட்டார். அது அவரை பெரும் கோடீஸ்வரர் ஆக்கியது.
1985-ல் தான் ஆரம்பித்த நிறுவனத்திலிருந்தே விலகிக் கொண்டார் ஸ்டீவ். எல்லா பங்குகளையும் விற்ற அவர், ஆப்பிள் பங்குகளை மட்டும் வைத்துக் கொண்டார். வெளியில் போய் நெக்ஸ்ட் என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் பின்னர் ஆப்பிளுடன் இணைந்தபோது, ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிளுக்கு வந்தார், இடைக்கால தலைமை செயல் அலுவலராக.
பின்னர் 2000-ல் அவரே முழுமையான CEO என அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு ஸ்டீவ் ஜாப்ஸ் தொட்டதெல்லாம் தங்கம்தான். ஐபோன், ஐபேட், புதுப்புது மேக் கம்ப்யூட்டர்கள் என தொழில்நுட்பத் துறையில், எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது ஆப்பிள் நிறுவனம்.
பாரக் ஒபாமாவுடன் அமர்ந்து விருந்து சாப்பிடும் அளவுக்கு பெரும் விஐபியாகிவிட்டார் ஸ்டீவ்.
14 ஆண்டுகள் அவரது தலைமையில் ஆப்பிள் சாதித்தவை பிரமிக்கத்தக்க வெற்றிகள் என தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அடுத்து ஆப்பிள் புதிய ஐபோன், அடுத்த தலைமுறைக்கான அட்வான்ஸ்டு ஐ பேட் போன்றவற்றை அறிமுகப்படுத்தவிருக்கும் நிலையில் ஸ்டீவ் விலகியுள்ளார்.
"நான் ஒரு நாள் இந்த நிறுவனத்தில் இல்லாமலே போகலாம். அதற்கான நாள் வரும்போது, நிறுவனம் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்" என்பது ஸ்டீவ் ஜாப்ஸ் அடிக்கடி கூறும் வாசகம். அது இப்போது நிகழ்ந்தே விட்டது.
இப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத் தலைவராகவும், டிம் குக் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுவார்கள் என்றும், ஸ்டீவ் தொடர்ந்து நிறுவனத்துக்கு வழிகாட்டுவார்; முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால், ஆப்பிளின் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் அச்சத்தைப் போக்கியதாகத் தெரியவில்லை. நேற்று ஸ்டீவ் ஜாப்ஸ் தனது விலகலை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் ஆப்பிள் நிறுவனப் பங்குகள் 7 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.
உணவுப் பொருட்களுடன் வானில் வெடித்து, காட்டுக்குள் வீழ்ந்தது!
வெடித்துச் சிதறியது, செலுத்துவதற்கு ஆட்கள் தேவை இல்லாமல் தானாகவே இயங்கும் சோயுஸ் ரகத்திலான ராக்கெட். இந்த ராக்கெட்டின் மேல் பகுதியில் கன்டெயினர் போல வடிவமைக்கப்பட்ட இணைப்பு ஒன்றுக்குள் உணவுப் பொருட்களை வைத்து, விண்வெளிக்கு அனுப்பியிருந்தார்கள் ரஷ்ய விஞ்ஞானிகள்.
அனுப்பப்பட்ட ராக்கெட், விண்வெளியில் இயங்கும் ரஷ்ய ஸ்பேஸ் ஸ்டேஷன் வரை செல்லும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் 6 பேர் தங்கியுள்ளார்கள். செல்லவேண்டிய இடத்தை அடையுமுன்னரே வெடித்து விட்ட ராக்கெட், சைபீரியக் காட்டுக்குள் சிதறி வீழ்ந்திருக்கிறது!
ராக்கெட் வெடித்துச் சிதறியுள்ளதால், அவர்களுக்கு அனுப்பப்பட்ட 3 டன் உணவுப் பொருட்களும் போய்ச் சேராது. ஆனால், அவர்களிடம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளது என்று அறிவித்திருக்கின்றது ரஷ்யா. (கடந்த மாதம் அமெரிக்க நாசாவால் அனுப்பப்பட்ட மற்றொரு ராக்கெட்டில், இவர்களுக்கு 3 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை அனுப்பி வைத்திருந்தது ரஷ்ய அரசு)
“உணவுக் கையிருப்பு முடியுமுன், மற்றொரு ராக்கெட் மூலமாக உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட ஏற்பாடுகள் செய்யவுள்ளோம்” எனவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து, ரஷ்ய தயாரிப்பான சோயுஸ் ரக ராக்கெட்களின் செயற்பாடு பற்றிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், ரஷ்யா கடந்த மாதம்தான் தமது ஸ்பேஸ் ஷட்டில் புரோகிராமையே நிறுத்திவிட்ட நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. புரோகிராம் நிறுத்தப்பட்டு, அதற்கான பட்ஜெட்டும் நிறுத்தப்பட்டு விட்டதால், இந்த ரக ராக்கெட்களில் திருத்த வேலைகளை ரஷ்யா செய்யப் போவதில்லை.
இந்த ரக ராக்கெட்களில் விண்வெளிக்கு மேலதிக ஆட்களை அனுப்பி வைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. இதே ராக்கெட் மூலம் விண்வெளி செல்ல, செப்டெம்பர் மாதம் அடுத்த செட் 3 பேரும், டிசெம்பர் மாதத்தில் மேலும் 3 பேரும் தயாராக உள்ளனர்.
விண்வெளிக்கு ஆட்களையும், பொருட்களையும் அனுப்பி வைக்க, ரஷ்யா உபயோகிக்கும் ஒரேயொரு ராக்கெட் வகை, இதுதான்!
பிரதமருக்கு சம்மன் : மாஜி அமைச்சர் ராஜா வலியுறுத்தல்
"2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் இதுவரை இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு தொடர்பாக கைதானவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வது தொடர்பான விவாதம் தற்போது நடந்து வருகிறது.
நேற்று முன்தினம், கனிமொழி தரப்பில் அவரது வழக்கறிஞர் வாதாடினார். அப்போது, "ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலம் விடுவதில்லை என்று முடிவெடுத்ததில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் பங்குண்டு' என, தெரிவித்தார். இந்நிலையில், இவ்வழக்கில் நேற்று முன்னாள் அமைச்சர் ராஜா சார்பில் வழக்கறிஞர் சுஷில்குமார், நீதிபதி சைனி முன் ஆஜராகி வாதிடுகையில், ""2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக, பிரதமர் மன்மோகன் சிங், அப்போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் மற்றும் தற்போது தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக உள்ள கபில் சிபல் ஆகியோரை, இவ்வழக்கில் சாட்சியாக ஆஜராகும்படி அழைக்க வேண்டும். இதுதொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட வேண்டும்,'' என்றார்.
சி.பி.ஐ.,யிடம் டிராய் விளக்கம்: இதற்கிடையில்,"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலத்தில் விட வேண்டும் என, தொலைத் தொடர்பு துறைக்கு நாங்கள் எவ்வித பரிந்துரையும் செய்யவில்லை' என, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்), சி.பி.ஐ.,யிடம் தெரிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, கடந்த 20ம் தேதி சி.பி.ஐ.,க்கு, டிராய் அமைப்பின் செயலர் ஆர்.கே அர்னால்டு, கடிதம் ஒன்றை எழுனார். அதில் கூறியுள்ளதாவது: கடந்த 2007ம் ஆண்டில், "2ஜி' ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்றோ, 2003 முதல் 2007ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தொலைத்தொடர்புத் துறையில் இணைந்த புதிய நிறுவனங்களுக்கு, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றோ, எந்த பரிந்துரையையும் தொலைத் தொடர்புத்துறைக்கு நாங்கள் செய்யவில்லை. ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதால், அரசுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை துல்லியமாக மதிப்பிடுவது முடியாத காரியம்.
தொலைத் தொடர்பு சேவையையும், ஸ்பெக்ட்ரத்தையும் அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் வழியாக, நாங்கள் கருதியதில்லை. இதனால் தான், ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுமாறோ, கட்டணத்தை உயர்த்தும்படியோ, எவ்வித பரிந்துரையும் செய்யவில்லை. இதனால், அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூற முடியாது. கடந்த 2007ம் ஆண்டில், 6.2 மெகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட, "2ஜி' ஸ்பெக்ட்ரத்திற்கு எவ்வித விலையும் நிர்ணயம் செய்து பரிந்துரைக்கவில்லை. 10 மெகா ஹெர்ட்ஸ்சுக்கு மேல் ஸ்பெக்ட்ரம் பெற்ற நிறுவனங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும்படி கூறினோமே தவிர, வேறு எந்த பரிந்துரையும் செய்யவில்லை.
செப்டம்பர் 15ல் மூன்றாவது குற்றப்பத்திரிகை : "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை, செப்டம்பர் 15ம் தேதி தாக்கல் செய்யப்படும் என, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று சி.பி.ஐ., தெரிவித்தது. இந்த வழக்கில், இதுவரை இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது குற்றப்பத்திரிகையை, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யவதாக ஏற்கனவே சி.பி.ஐ., தெரிவித்திருந்தது. இந்நிலையில், மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு, மேலும் 15 நாட்கள் அவகாசம் அளிக்கும்படி சி.பி.ஐ. தரப்பில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பான மனுவை சி.பி.ஐ., வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் தாக்கல் செய்தார். மேலும், "வழக்கு குறித்த தங்களின் நிலை அறிக்கையை சி.பி.ஐ., வருமானவரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவை, செப்டம்பர் 1ம் தேதி தாக்கல் செய்யும்' என்றும் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின் போது, ஹசாரே குழு வைத்த கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை ஏற்றுக்கொள்ள முன்வந்ததாக தெரிகிறது. இருப்பினும், கீழ்மட்ட அதிகாரிகளையும் லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பது, லோக்பால் மூலம், மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது உட்பட, மூன்று முக்கிய விஷயங்களில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
கூட்டம் முடிந்ததும், நிருபர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், ""லோக்பால் மசோதா தாக்கலாவதற்கு, இன்னும், 20 நாட்களுக்கு மேலாகும். இருப்பினும், இப்போதைக்கு உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவது முக்கியமானது' என்றார்.
இதைத் தொடர்ந்து, மாலையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டது. இதில் பேசிய பிரதமர், ""அரசு தரப்பு மசோதாவையும், ஜன்லோக்பால் மசோதாவையும், பார்லி நிலைக்குழு விரைந்து பரிசீலிக்க கேட்டுக்கொள்வேன். லோக்பால் வரம்பிற்குள் என்னையும் (பிரதமர்) சேர்ப்பதற்கு சம்மதித்தேன். ஆனால், சக அமைச்சர்கள் தான் அதை ஏற்கவில்லை. ஹசாரே குழு தெரிவித்த கோரிக்கைகளை ஏற்றுள்ளோம். இருப்பினும், முழுமையாக ஏற்றுக்கொண்டோம் என்ற அர்த்தமாகாது'' என்றார்.
கைவிட கோரிக்கை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், "அன்னா ஹசாரே உடனடியாக தன் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்; எங்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை ஏற்பார் என நம்புகிறோம்' என, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ., மற்றும் இடதுசாரி கட்சிகள், அரசு மசோதாவை வாபஸ் பெற்று ஒருங்கிணைந்த வலுவான மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என கோரின.
மற்றொரு திருப்பமாக, ராஜ்யசபாவில் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமி வெளியிட்ட அறிவிப்பில், "ஜன்லோக்பால் மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.
ஹசாரே கண்டிப்பு: அரசு தரப்பில் இறங்கிவந்த போதிலும், லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுவதில் ஹசாரே கண்டிப்பாக இருக்கிறார். உண்ணாவிரத மேடையில் இருந்தபடி ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஹசாரே, "என் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. போராட்டத்தை வலுப்படுத்த, இன்னும், ஒன்பது நாட்கள் என்னால் போராட்டத்தை தொடர முடியும். எனக்கு ஒன்றும் ஆகாது. மாரடைப்பால் சாவதை விட, நாட்டுக்காக உயிரை விடுவது சிறந்தது'' என்றார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ""ஜன்லோக்பால் மசோதா, நாளையே(இன்று) பார்லிமென்டில் தாக்கலனால், ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட்டு விடுவார்'' என்றார்.
இறங்குகிறது அரசு: ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட செய்யும் முயற்சியாக, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று இரவு, ஹசாரே குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது, ஹசாரே நிபந்தனைகளுடன் உடனடியாக லோக்பால் மசோதா உருவாக்க கால அவகாசம் தேவை என்ற கருத்து அரசிடம் உள்ளது. அதே சமயம், ஹசாரே உண்ணாவிரதம் முடிவுற்று சுமுக நிலை ஏற்பட்டால் தான், அரசு மீதான மக்கள் கோபம் குறையும் என்ற கருத்து மத்திய அரசிடம் ஏற்பட்டிருக்கிறது.
மாஜி அமைச்சர் கே.என்., நேரு உள்பட 3 பேர் கைது
திருச்சி : தமிழகத்தில் நடந்துள்ள ஏகப்பட்ட நில மோசடி வழக்கில் முன்னாள் ஆட்சியாளர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலை 6 மணியளவில் திருச்சியில் மாஜி போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்., நேரு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் வைக்கப்பட்டுள்ள போலீஸ் ஆயுதபடை திருமண மண்டபத்தில் ஏராளமான ஆதரவாளர்கள் குவிந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஆட்சி காலத்தில் ஆயிரக்கணக்கான நில மோசடி நடந்திருப்பதாக வந்த புகாரை அடுத்து புதிதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க, அரசு இது தொடர்பான வழக்கை விசாரிக்க தனிப்படை போலீசார் பணிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக மதுரை, சென்னை, ஈரோடு, சேலம், கோவை என பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க., நிர்வாகிகள், மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் , மாஜி எம்.எல்.ஏ.,க்கள் என இது வரை 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாஜி போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்., நேரு வீட்டில் இன்று காலையில் அதிரடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். இவரது வீட்டிற்குள் நுழைந்த போலீசார் நேருவை கைது செய்து திருச்சி ஆயுத படை திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இவருடன் மாஜி எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, ஜவுளிக்கடை உரிமையாளர் சுந்தரராஜூலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
வழக்கின் சாராம்சம் என்ன ? : கடந்த 2009 ல் திருச்சியில் ஒரு தி.மு.க,வின் அறிவாலயம் திறந்து வைக்கப்பட்டது. கலைஞர் அறிவாலயம் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த அறிவாலயத்தை கட்சி தலைவரும், அப்போதைய முதல்வருமா ன கருணாநிதி திறந்து வைத்தார். ஏறக்குறைய சென்னை அறிவாலய மாடலில் இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கென ஒரு ஏக்கர் நிலம் டாக்டர் சீனிவாசன் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டது. திருச்சியில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள இந்த நிலம் பல கோடி மதிப்பு பெறும். ஆனால் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டதாகவும், தன்னை மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து போட வைத்ததாகவும், சீனிவாசன் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பான விசாரணை நடத்திய போலீஸ் கே.என்., நேரு மாஜி எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, லால்குடி எம்.எல்.ஏ., சௌந்திரராஜன், ராமாநுஜம் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் கே.என்., நேரு, உள்பட 3 பேரை கைது செய்திருக்கின்றனர். இன்னும் தலைமறைவாக உள்ள தி.மு.க.,வினரை தேடி வருகின்றனர்.
பொய் வழக்கை சட்டப்படி சந்திப்போம் : கைது செய்யப்பட்டு அழைத்து சென்ற போது நிருபர்களிடம் பேசிய நேரு; நாங்கள் யாரையும் அடித்து, மிரட்டி வலுக்கட்டாயமாக நிலத்தை வாங்கவில்லை. எந்த தவறும் செய்யவில்லை. இது பொய் வழக்கு, சட்டப்படி சந்திப்போம் என்றார்.
கடலூர் சிறையில் அடைப்பு : வழக்கில் கைது செய்யப்பட்ட விவரத்தை பதிவு செய்யும்போது நேருவின் உடல் அங்க அடையாளம் குறிக்கப்பட்டது. இவர் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 4 ல் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட் புஷ்பராணி வரும் செப் 8 ம்தேதி வரை ரிமாண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார். முதலில் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கடலூர் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.
கோவை மாநகர் செயலர் கைது : கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., செயலர் வீரகோபாலும் ஒரு நில மோசடி வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார்.
வீரகோபால் என்ன குற்றம் செய்தார்? : கோவையை சேர்ந்தவர் பெரியசாமிகவுண்டர் மகன் ரத்தினம். இவருக்கு விலாங்குறிச்சி டைல்பார்க் அருகே இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் உரிமையாளர்கள் சிலருக்கு சேர வேண்டிய பங்கை ஒழுங்காக கொடுக்க விடாமல் சதித்திட்டம் போட்டு வாங்கி விற்றுள்ளனர். மேலும் கொலை மிரட்டலும் விட்டிருக்கின்றனர். இது தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரகோபால், சாந்தலிங்கம் ஆகிய இருவரை கைது செய்திருக்கின்றனர். இருவரும் ஜே.எம்.,2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர். இவரை பார்க்க வந்த முன்னாள் எம்.பி., ராமநாதன், துணைமேயர் கார்த்திக் மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோருக்கு நாற்காலிகள் கொடுத்து போலீசார் ராஜ மரியாதை அளித்தனர்.
Saturday, August 20, 2011
சொல்வதெல்லாம் உண்மை பாகம் 11
இவர் ஒரு முரட்டு பக்தர் அல்ல. வரட்டு பக்தர். தலைமைக்கே அடிக்கடி தண்ணி காட்டுபவர். இவரைக் கட்டுப்படுத்த தலைமையே பலமுறை திணறியிருக்கிறது. மேடைப் பேச்சானாலும், சட்டமன்றமானாலும் இவரின் நையாண்டிப் பேச்சுக்கு அளவே இருக்காது. தனது வாழ்நாளில் பாதிக்குமேல் சட்டசபையில் கழித்துவிட்ட இவருக்கு அங்கே தனி வரலாறு இருக்கிறது. எனவே, பலமுறை அவை மீறல்களுக்கு ஆளானவர். முருகனைப் போல் ஆண்டியாக அரசியல் மலையில் ஏறியவர். பின்னாளில் வேட்டி கட்டிய வெள்ளைக்கார துரைகணக்காய் வளம் தேடிக்கொண்டவர். நீர், நிலம், ஆறு, மணல், மலை என இயற்கைகளின் இறக்கைகளில் அமர்ந்து இன்று இமயம் தொட வளர்ந்தவர்.
நன்றி குமுதம் ரிப்போர்ட்டர் |
அதிகாரிகளை மிரட்டிய ஜாபர் சேட்
ஜாபர் சேட் மீது வழக்குப்பதிவு, அவரது வீடுகளில் ரெய்டு, சஸ்பெண்ட்’ என்று பரபரப்பாக இருந்த வழக்குகள்,கடந்த ஒரு மாதமாக சத்தமில்லாமல் இருக்கிறது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸாரை விசாரணையின்போது ஜாபர் சேட் மிரட்டியதாக குபீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஷகில் சிக்குவாரா?
நன்றி குமுதம் ரிப்போர்ட்டர் |