தேர்தல் பிரசாரத்தின்போது சக கலைஞர் என்றுகூட பாராமல் சகட்டு மேனிக்கு திட்டித்தீர்த்த வைகைப் புயலுக்கு இப்போது நேரம் சரியில்லை போல இருக்கிறது. அடுத்தடுத்து வாய்ப்புகளை பறிகொடுக்க ஆரம்பித்திருக்கிறார். சூப்பர் நடிகர் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் வைகைப்புயல்தான் காமெடி என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அதிரடியான முடிவினை எடுத்திருக்கிறாராம் சூப்பர். தேர்தல் நேரத்தில் புயலின் அணுகுமுறையில் பெரும் அதிருப்தியுள்ள சூப்பர் நடிகர், என் படத்தில் அவர் வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
வடிவேலு இல்லையென்றால் அந்த வாய்ப்பு ஆபாச காமெடியனுக்குத்தான் போகும் என்று பட யூனிட்டை சேர்ந்தவர்கள் நினைத்திருந்த நிலையில், சூப்பரின் சாய்ஸ் கஞ்சா காமெடியன்தானாம். குழந்தை பிறந்த நேரம்; கஞ்சாவின் தொழில் ஸ்தானத்தில் கரன்ஸி மழை அடிக்க ஆரம்பித்திருக்கிறது.
No comments:
Post a Comment