முதல்-அமைச்சர் கருணாநிதியை நடிகர் வடிவேலு இன்று சந்தித்து பேசினார். கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் இன்று காலை 9.50 மணி முதல் 10.50 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மத்திய மந்திரி மு.க.அழகி உடன் இருந்தார். பின்னர் வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு தனியார் தொலைக் காட்சி ஓட்டுப்பதிவுக்கு பிறகு நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று இப்போது கூறி இருக்கிறது. அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் கலைஞரை சந்தித்தேன். அவரும் மகிழ்ச்சி அடைந்தார். நான் பிரசாரம் செய்தபோது பொதுமக்கள் திரண்டு வந்தனர். பெண்கள் குழந்தைகளுடன் வந்து எனது பேச்சை கேட்டார்கள். மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு 108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீட்டு திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் சென்று சேர்ந்து இருக்கிறது. நான் பிரசாரம் செய்த போது மக்களிடம் இருந்த எழுச்சியில் இது தெரிந்தது. எனவே, தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இதை யாரும் தடுக்க முடியாது.
கேள்வி: எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும்?
பதில்: தொலைக்காட்சி கருத்துக்கணிப்பின்படி, 130 இடங்களில் மட்டுமல்ல, 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.
1971-ல் தி.மு.க. ஆட்சிக்கு வராது என்றார்கள். ஆனால் 184 இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அது போல இப்போதும் அதிக இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இந்த ஆட்சி மூலம் பயன் அடைந்த ஏழை எளிய மக்களால் மிகப் பெரிய மகிழ்ச்சி கிடைக்கும்.
கேள்வி: விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ராணா படத்தில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?
பதில்: “ராணா”படம் “கானா” படம் எதில் இருந்து நீக்கினாலும் நான் கவலைப்படவில்லை. மே 13-ந் தேதி மக்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியும். அதன் பிறகு எல்லாம் மாறும்.
கேள்வி: அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்ததுதான் அதற்கு பின்னடைவு என்று கூறுகின்றீர்களா?
பதில்: பொறுத்து இருந்து பாருங்கள். கலைஞரிடம் தோற்பதற்கு காத்திருப்பவர்கள் எத்தனை பேர் என்பது அப்போது தெரியும்.
No comments:
Post a Comment