Saturday, June 18, 2011

ஜெ..பிரதமரிடம் கொடுத்த சீக்ரெட் ஃபைல்

பிரதமரை சந்தித்த ஜெயலலிதா ,தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை பட்டியல் 30 பக்கங்களில் பெருவாரியான கோரிக்கைகளை முன் வைத்தார்.ஒரு லட்சம் கோடி வரை கேட்கிறார்.20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.தனது அறிக்கையில் இருந்த விசயங்களை பிரதமரின் பார்வைக்கு கொடுத்துவிட்டு,மிக மிக முக்கியமான ஒரு சமாச்சாரத்தை எடுத்துவைத்ததாகத் டெல்லி தகவல்கள் சொல்கின்றன...



அது என்ன..?

மத்திய அமைச்சராக இருக்கும் மு.க அழகிரையை பற்றியதாம் அது.அழகிரி தொடர்பான சில ஆவணங்களை ஜெயலலிதா டெல்லி வரும்போது எடுத்து வந்து இருந்தார் என்றும்,அவை சில பல வழக்குகள் சம்பந்தமானவை என்கிறார்கள்.

அழகிரி மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டிய நெருக்கடியில் நான் இருக்கிறேன்.அதற்கு பல சாட்சிகள் இருக்கின்றன.அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் உங்களது அமைச்சரவையில் வைத்து இருக்கிறீர்கள்.அழகிரி மீது நான் நடவடிக்கை எடுக்கும் முன்,உங்களுக்கு தகவல் தர வேண்டும் என்பதற்காக சொல்கிறேன் என்று பிரதமருக்கு ஜெ..விளக்கி சொல்லி விட்டு,நீங்களாகவே அவரை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கினால் நல்லது’’என்பது ஜெ..வின் யோசனை..இதைக்கண்டு பிரதமர் ’’ஷாக்’’ஆனாராம்.





No comments:

Post a Comment