Monday, December 26, 2011

வீடியோ உண்மை... வெளியிடுவாரா நித்தி?!

நித்தியானந்தா... எதையாவது சொல்லி செய்திகளில் இடம் பிடித்து விடுகிறார்! அப்படித்தான் இதுவும்... கடந்த செவ்வாய் கிழமை அன்று தனது 35-வது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடி திருவண்ணாமலையை திணற டிக்க வைத்துவிட்டார், நித்தியானந்தா!

அதிகாலை 4.15 மணிக்கு அண்ணாமலை யார் கோயிலுக்கு வந்தவர், கிளி கோபுரத் தின் உட்புறத்தில் கோ மாதா பூஜை செய் தார். தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அருணகிரிநாதர் சமாதியில் சிறப்பு ஆராதனை என பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அர்ச்சகர்கள் நீட்டியத் தட்டு களில் எல்லாம் பளீர் பளீரென விழுந்தன 1,000 ரூபாய் நோட்டுகள்.

தொடர்ந்து கோயிலை விட்டு வெளியே வந்தவர், தேரடி வீதியில் பிரத்யேகமாகப் போடப்பட்டு இருந்த மேடையில் அமர்ந்தார். ஆயிரக்கணக்கில் திரண்டு வந்த உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களை, 'அரசியல் தலைவர்’ ரேஞ்சுக்குப் பார்வையால் அளந்து, 'தாரைத் தப்பட்டைகள் கிழியட்டும்’ என்பதுபோல கையை ஆட்டினார். 'சித்தாடைக் கட்டிக் கிட்டு... சிங்காரம் பண்ணிக்கிட்டு... மத்தாப்பு சூரியன்போல நம்ம சாமி வந்தாரே...’ என்று ஒரு ரீ-மிக்ஸ் பாடல் ஸ்பீக்கரைக் கிழிக்க... அதற்கு நடுரோட்டில் 'நச்’சென குத்தாட்டம் போட்டார்கள் நித்தியின் சிஷ்யக் கண்மணி கள். தொடர்ந்து 'சந்திரமுகி’யின் 'ஹேய்... ஹேய்... அண்ணனோட பாட்டு... ஆட்டம் போடடா’வும் ரி-மிக்ஸில் அதகளப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்த இந்த ஆடல், பாடல்களுக்கும் லேசாக உடலை அசைத்து ஆட்டம் போட்டபடியே கைதட்டி ரசித்தார் நித்தி!
அடுத்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி ஏந்தியும் தீச்சட்டி ஏந்தியும் வந்து சுவாமியை புல்லரிக்க வைத்தார்கள். தீவிர பக்தர்கள் சிலர் பக்திப் பரவசத்துடன் உடல் முழுவதும் அலகு குத்திக் கொண்டும் காவடி ஏந்திக் கொண்டும் வர... கண்கள் கலங்க அவர்களை ஆசிர்வதித்தார் நித்தி. காலை 10 மணிக்குத் துவங்கிய பக்தர்களின் ஆட்டம், பாட்டம், முளைப்பாரி ஊர்வலம் மதியம் 2 மணி வரை நீடிக்க... அத்தனை நேரமும் சுதந்திர தின விழா ஊர்வலத்தைப் பார்வையிடும் ஜனாதிபதி போலவே, மேடையில் நின்று ரசித்தார் நித்தி. கூடவே, பொத்துப்பொத்தென்று காலில் விழுந்த பக்தர்களுக்கு ஆசியோடு சேர்த்து எலுமிச்சைப் பழமும் கொடுத்தார் சாமியார். வெறி கொண்ட பக்தர்கள் சிலர் காலைப் பிடித்துக் கொண்டு எழாமல் கதற... அவர்களுக்கு ஆப்பிள் பழம் கொடுக்க வேண்டியதாயிற்று நித்திக்கு!
ஆனால், இந்த ஆட்டம், பாட்டத்தில் நொந்து நூலாகிப் போனது என்னவோ கோயிலுக்கு வந்த மக்கள்தான். தேரடி வீதியை போலீஸார் பிளாக் செய்து இருந்ததால், மக்கள் உள்ளேச் செல்ல அனுமதி இல்லை. 'என் வீடு உள்ளே இருக்குங்க’ என்றவர்களைக்கூட 'அப்புறமா வீட்டுக்குப் போ’ என்று திருப்பி அனுப்பியது போலீஸ்! பள்ளி செல்லும் குழந்தைகள் துவங்கி கடை வீதி, அரசு மருத்துவ மனைக்குச் செல்பவர்கள் எல்லாம் இரண்டு கிலோ மீட்டர் சுற்றி அலைக்கலைக்கப்பட்டார்கள்.
ஆசிரமத்தின் முக்கியஸ்தர் ஒருவரிடம் இந்த விழா குறித்துப் பேசினோம். ''சாமிக்கு ஜனவரி 1-ம் தேதிதான் பிறந்த நாள். ஆனா, இன்னைக்கு அவரோட ஜென்ம நட்சத்திரப்படி பிறந்த நாள். இதுக்கு அப்புறம் 2013-ம் வருஷம்தான் இதுமாதிரி சாமியோட ஜென்ம நட்சத்திரத்தில் பிறந்த நாள் வருது. அதுவும் இல்லாம இந்தமுறை சனிப் பெயர்ச்சி பலன்கள் சாமிக்கு சாதகமாக அமைஞ்சு இருக்கு. அதனால சாமி ரொம்பவே உற்சாகமா இருக்கார். ஜனவரி 1-ம் தேதி பெங்களூர் ஆசிரமம் இதைவிட அமர்க்களப்படப் போகுது. விசேஷ விருந்து எல்லாம் இருக்கு. அவசியம் வந்துடுங்க... அன்னைக்கு இந்த உலகத்துக்கு சாமி விசேஷமாக இன்னொரு விஷயத்தையும் அறிவிக்கப் போறார்.
அது, அந்த சி.டி. பத்தின உண்மை விஷயங்கள். அந்த வீடியோ காட்சி எல்லாமே கிராபிக்ஸ் செய்யப்பட்டதுன்னு தன்னோட ஆன்மீக, அறிவியல் சக்தி மூலமா ஆதாரத்தைக் கண்டுபிடிச்சு இருக்கார் சாமி. குறிப்பா, அதை கிராபிக்ஸ் செஞ்சவரே வந்து, அது பொய்ன்னு நிருப்பிப்பார். அன்னைக்கு இந்த உலகம் எங்களை நம்பும்!'' என்றார் உணர்ச்சிவசப்பட்டவராக!

No comments:

Post a Comment