Tuesday, December 27, 2011

பிரதமரின் தமிழக வருகை ஒரு மோசடி!

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் நாளை இரவு சென்னை வருகிறார். திங்கட்கிழமை காலை சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடக்க இருக்கும் கணித மேதை ராமனுஜத்தின் 125-வது பிறந்த தின விழாவில் பங்கேற்கிறார்.


அந்த விழா முடிந்த பிறகு திருச்சி செல்கிறார். திருச்சியிலிருந்து ஹெலிகாஃப்டர் மூலம் காரைக்குடி செல்கிறார். அங்கு, அழகப்பா பல்கலைக்கழகத்தில் கணித மேதை ராமானுஜம் உயர் கணித மையம் கட்டடத்தை திறந்து வைக்கிறார்.

பின்னர், அங்கிருந்து ஹெலிகாஃப்டர் மூலம் திருச்சி வந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இந்தத் தமிழக பயணமே கிட்டத்தட்ட இல்லை இல்லை ஒட்டுமொத்த மோசடி பயணம். இந்த இரண்டு அரசு விழாக்களுக்கு இடையே இன்னும் இரண்டு தனியார் விழாக்கள் நடக்கிறது. அதற்குதான், இரண்டு அரசு விழாக்களையே ஏற்பாடு செய்திருக்கிறார் ‘சிவகங்கை சின்னபையன்’

காரைக்குடி செல்லும் பிரதமர் அழகப்பா பல்கலைக்கழக நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரைக்குடியில் கட்டப்பட்டிருக்கும் அப்பல்லோ மருத்துவமனை, வாசன் மருத்துவமனை ஆகிய இரண்டையும் திறந்து வைக்கிறார். ஏற்கனவே, திறந்து வைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இரு மருத்துவமனைகளை மீண்டும் திறப்பதற்கு வருகை தந்திருப்பது ஒரு மோசடி தானே.

எப்படி இந்த மோசடி நடக்கிறது. இந்த மருத்துவமனை அமைந்திருக்கும் இடங்கள் அனைத்தும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் சகோதரிக்கு சொந்தமானது. கிட்டத்தட்ட 80 ஏக்கர் நிலத்தை, வங்கியில் கடன் பெற்று திவால் ஆனவர் என்று சொல்லப்பட்ட நபரிடமிருந்து சிதம்பரத்தின் சகோதரியும், சகோதரியின் மகனும் வாங்கியிருக்கிறார்கள். அதை விசாரித்தால், பல விவகாரங்கள் அம்பலத்துக்கு வரும்.

இந்த நிலத்தில்தான் 9 ஏக்கர் நிலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு தரப்பட்டிருக்கிறது. ஒரு ஒன்றரை ஏக்கர் நிலம் வாசன் கண் manmhogan_singh_1aaமருத்துவமனைக்கு தரப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு மருத்துமனைகளும் சிதம்பரத்தின் குடும்பத்திற்காக கட்டப்பட்டவை என்று சிவகங்கை முழுவதுமே பேசப்படுகிறது.

சிதம்பரத்தின் மருமகள் டாக்டர் ஸ்ரீநிதிக்காக அப்பல்லோ குழுமம் காரைக்குடியில் அப்பல்லோ மருத்துவமனையின் கிளையை கட்டிக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மளமளவென உருவாகி வரும் வாசன் கண் மருத்துவமனையின் குழுமத்தையே கார்த்திக் சிதம்பரம் தான் நடத்துகிறார் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

ஆக, இந்த இரு மருத்துவ மனைகளைத் திறப்பதற்காகவே பிரதமர் மன்மோகன்சிங்கை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அழைத்துவந்திருக்கிறார். காரணம், மத்திய அமைச்சரவையிலிருக்கும் ப.சிதம்பரம் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பாரா இல்லையா என்ற கேள்வி நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தனது இமேஜை நிலை நிறுத்திக் கொள்ள இப்படியொரு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைத்து வருகிறார் என்று காங்கிரஸ்காரர்களே குற்றம் சாட்டுகிறார்கள்.

karthik-chidambaram-020ஏன் பிரதமரை அழைத்து தாஜா செய்கிறார் என்றால், காங்கிரஸில் நடக்கும் உள்குத்து மோதலில் ப.சிதம்பரத்தை காலி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். ப.சி.க்கு யாருமே ஆதரவு அளிக்க வரமாட்டார்கள். தனக்காக சோனியாவிடம் பேசக்கூடியவர் மன்மோகன் சிங் மட்டுமே, என்பதால், அவரை தாஜா செய்துக் கொண்டிருக்கிறார் ப.சி. என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

இந்த மருத்துவமனைகள் திறப்பு விழாவிற்காகவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதமேதை ராமானுஜர் பிறந்ததின விழாவை ஏற்பாடி செய்யப்பட்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வரும் நீரை சிதம்பரம் எம்.பி.யாக இருக்கும் சிவகங்கை மாவட்டமே நம்பியிருக்கிறது. அந்த மாவட்ட மக்களுக்காக மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் மேலும் ஐந்து மாவட்ட மக்கள் நம்பியிருக்கும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக தான் பேசிய பேச்சை வாபஸ் வாங்கினாரே ப.சிதம்பரம். அவரை சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மன்னிப்பார்களா? அல்லது மற்ற மாவட்ட மக்கள் தான் மன்னிக்க முடியுமா?

ஐந்து மாவட்ட பிரச்னை என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், முல்லைப் பெரியாறுsrinidhi_karthicஅணை விவகாரம் தமிழ்நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை இரு மாநில மக்களையும் புரட்டிபோட்டு கொண்டிருக்கும் வேளையில் இதற்கு தீர்வு காண முடியாத மத்திய அரசும், மத்திய அரசிற்கு தலைமை தாங்கி ஆட்சி நடத்தும் பிரதமர் மன்மோகன் சிங்கும் மத்திய அரசின் பொறுப்பிலிருந்து விலகி விடலாம்.

அப்படி மத்திய அரசு கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தினால், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் பா.சிதம்பரம் மீண்டும் போட்டியிட்டால் இந்தியாவிலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றவர் சிதம்பரம் தவிர வேறு யாரும் இல்லை.

No comments:

Post a Comment