Saturday, December 17, 2011

துபாய் ஏர்போர்ட்டில், இந்திய ரியல் எஸ்டேட் விற்பனை

துபாய் ஏர்போர்ட்டில் நடைபெறும் எக்ஸ்போ பொருட்காட்சியில், இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகம் ஓகோ என்று நடப்பதாக தெரியவருகின்றது. இந்திய ரூபாவின் மதிப்பு அமெரிக்க டாலர் மற்றும் திராம் நாணயங்களுக்கு எதிராக மிக மோசமான சரிவை எட்டியுள்ளதே விற்பனை சூடு பிடிப்பதன் காரணம். அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 52.84 இந்திய ருபா என்ற அளவில் மிக மோசமான சரிவை இந்த வாரம் சந்தித்தது.


அதை சுடச்சுட பயன்படுத்திக் கொள்கின்றன இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். அவர்களது இலக்கு வெளிநாடுகளில் தொழில்புரியும் இந்தியர்கள்!துபாய் ஏர்போர்ட்டில் இன்று ஆரம்பித்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்திய ரியல்


துபாய் ஏர்போர்ட் எக்ஸ்போ பொருட்காட்சி
எஸ்டேட் ஷோவில், சுமார் 300 ரியல் எஸ்டேட் ப்ராஜெக்டுகள் (வீடு, வீட்டுமனை, வேளாண் நிலம்) கடைபரப்பப்பட்டுள்ளன. இந்திய ரியல் எஸ்டேட் விலைகள் இந்திய ரூபாவில் கணிக்கப்படுகின்றன. இந்திய ரூபாவின் வீழ்ச்சியுடன் அவை, டாலர் அல்லது திராமில் முன்பைவிட குறைந்த விலையில் லிஸ்ட் பண்ணப் பட்டுள்ளதே, விற்பனை ஓகோ என்று நடப்பதன் காரணம்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் நிலம் மற்றும் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பவர்கள், அரபு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள். இவர்களுக்கு அடுத்தபடியாகவே அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை உள்ளது.துபாய் ஏர்போர்ட் ரியல் எஸ்டேட் ஷோவில் கலந்துகொள்ளும் நிறுவனங்களில் ஒன்றான இரியோவின் துணைத் தலைவர் பங்கஜ் பால், “அரபு நாடுகளில் உள்ள NRI (Non-Resident Indian) மார்க்கெட்தான், உலகின் எந்தப் பகுதியிலுமுள்ள NRI மார்க்கெட்களையும்விட பிசியானதும், லாபகரமானதும்” என்கிறார்.

இதற்குக் காரணம், அமெரிக்கா அல்லது பிரிட்டனில் குடியேறும் இந்தியர்களில் பெரிய சதவீதத்தினர் அங்கேயே செட்டிலாகி விடுகிறார்கள். அவர்களில் பலர் விடுமுறைக்காகவே இந்தியா வருகின்றனர். ஆனால், அரபு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களில் பெரிய சதவீதமானோர் தமது கன்ட்ராக்ட் முடிந்ததும் இந்தியா திரும்புகின்றனர்.இந்த வாரம் இந்திய ரூபா வீழ்ச்சியடைந்ததை அடுத்து, நாம் விற்பனைக்காக லிஸ்ட் பண்ணியுள்ள இந்திய நிலம் மற்றும் வீடுகளை, வெளிநாட்டு பணத்தில் முன்பைவிட 15-20 சதவீதம் குறைந்த விலையில் வாங்கக்கூடியதாக உள்ளது. அதுதான் வியாபாரம் இப்படி கொடிகட்டிப் பறக்கிறது.

கடந்த 6 மாதங்களில் இந்திய ரூபா 17% பெறுமதி சரிந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ள ஆசிய நாணயம், இந்திய ரூபாதான்!

No comments:

Post a Comment