Friday, December 23, 2011

சசி விரட்டப்பட்டதற்கு மோடி தந்த அட்வைஸ் காரணமா?!

ஜெயலலிதா, சசிகலா மோதலின் பின்னணியில் இதோ இன்னொரு காரணமாகச் சொல்லப்படுவது, ஜெயலலிதாவுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கொடுத்த அறிவுரை தான் என்றும் செய்திகள் பரவியுள்ளன.



ஜெயலலிதா, சசிகலா பிரிவுக்கு பல காரணங்கள் புற்றீசல் போல கிளம்பி வந்து கொண்டே இருக்கின்றன. இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு பரபரப்பான சம்பவம் நடந்ததே இல்லை என்பது போல மாறி விட்டது இந்த இருபெரும் பெண்மணிகளின் பிரிவு.



பெரும் ஆதரவுடன் ஆட்சியில் இருந்தாலும் முதல்வர் ஜெயலலிதா. கிட்டத்தட்ட ஒரு பொம்மை முதல்வர் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டதை அவருக்கு சரியாக எடுத்துக் காட்ட பலரும் முயன்றனர். இருப்பினும் ஜெயலலிதாவை நெருங்கவே முடியாத நிலையால் அவர்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.



இந்த நிலையில்தான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நேரடியாக ஜெயலலிதாவிடம் பேசி அவர் தற்போது உள்ள நிலையை எடுத்துக் கூறியுள்ளார் என்கிறார்கள்.



ஜெயலலிதாவுக்கும், மோடிக்கும் நல்லுறவு நீண்ட காலமாக நிலவுகிறது. அத்வானியிடம் கூட ஜெயலலிதா கோபித்துக் கொள்வார். ஆனால் மோடியிடம் அவர் ஒருபோதும் கோபித்துக் கொண்டதில்லை. காரணம், மோடி மீது அவருக்கு அவ்வளவு மரியாதை.



சில வாரங்களுக்கு முன் ஜெயலலிதா கோரியதன்பேரில் குஜராத்திலிருந்து ஒரு நர்ஸ் கம் டயடீசியன் போயஸ் தோட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். இவரை அனுப்பி வைத்தது மோடிதான் என்கிறார்கள். இவர் வந்த பிறகு, தனது உடல் நலனைக் கவனிப்பது, அவருக்குத் தேவையானதை செய்வது ஆகிய அனைத்துப் பணிகளையும் இவர் வசம் ஒப்படைத்து விட்டாராம் ஜெயலலிதா.



இந்த நர்ஸ் வந்து சேர்ந்தது சசிகலா தரப்பினருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாம். இது உடனடியாக மோடி காதுக்குப் போய் விட்டது. அடுத்த நிமிடமே மோடி ஜெயலலிதாவைப் போனில் பிடித்து கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ஜெயலலிதா, இதுகுறித்து வீட்டில் விசாரித்துள்ளார். அதன் பிறகும் கூட மிரட்டல் நிற்கவில்லையாம்.



இதுகுறித்து பின்னர் ஜெயலலிதாவிடம் பேசிய அந்த நர்ஸ், உங்களுக்கு தரப்படும் மருந்துகள் ஓ.கே, ஆனால் உணவுகள் சரியல்ல என்று கூறியுள்ளார். இதை நான் சரி செய்ய முயன்றதால் மிரட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார்.



இந் நிலையில் ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்ட மோடி அவரிடம், உங்களுக்கு மக்கள் கொடுத்துள்ள ஆதரவை நீங்கள் வீணடித்து வருகிறீர்கள். ஆட்சியில் முழுமையாக ஈடுபட முடியாத நிலையில் உள்ளீர்கள். முதலில் சசிகலாவையும், அவரைச் சார்ந்தவர்களையும் வெளியேற்றுங்கள்.



உங்களது மாநிலத்தை முழுமையாக புதுப்பித்துக் கட்டமையுங்கள். குஜராத்தைப் போல தமிழகத்தையும் உருவாக்குங்கள். ஆட்சி நடைமுறைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வாருங்கள். தொழில் முதலீடுகளுக்கு சாதகமானதாக தமிழகத்தை மாற்றுங்கள். அதிகாரவர்க்கத்தால் நடைபெறும் தாமதங்களை முழுமையாக தவிர்க்கும் வகையில் உங்களது கையில் அத்தனை அதிகாரங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நீண்ட அறிவுரை கூறியுள்ளார்.



இதைக் கேட்ட பிறகுதான் சசிகலா குடும்பத்தாரை ஒதுக்கி வைக்க ஜெயலலிதா முடிவெடுத்ததாக சொல்கிறார்கள்.



அதேபோல இன்னொரு விஷயமும் வெளியாகியுள்ளது. அதாவது சில நாட்களுக்கு முன்பு குஜராத்திலிருந்து ஒரு நர்ஸ் போயஸ் தோட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். இவரை அனுப்பி வைத்ததே மோடிதான் என்கிறார்கள். இவர் வந்த பிறகு, தனது உடல் நலனைக் கவனிப்பது, அவருக்குத் தேவையானதை செய்வது ஆகிய அனைத்துப் பணிகளையும் இவர் வசம் ஒப்படைத்து விட்டாராம் ஜெயலலிதா. மோடியின் ஆலோசனைப்படிதான் இந்த நர்ஸ் ஜெயலலிதா வீட்டுக்கு வந்துள்ளாராம்.



சாப்பாடு விஷயம் முதல் அத்தனை அன்றாடத் தேவைகளுக்கும் இப்போது ஜெயலலிதாவுடன் இருப்பது இவர்தானாம்.



இந்த நர்ஸ் வந்து சேர்ந்தது வீட்டில் உள்ள சசிகலாவுக்கோ அல்லது வேறு யாருக்கோ பிடிக்கவில்லை போல திட்டி விட்டனராம். இது உடனடியாக மோடி காதுக்குப் போய் விட்டது. அடுத்த நிமிடமே மோடி ஜெயலலிதாவைப் போனில் பிடித்து கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ஜெயலலிதா, இதுகுறித்து வீட்டில் விசாரித்துள்ளார். அதன் பிறகும் கூட மிரட்டல் நிற்கவில்லையாம்.



இதுகுறித்து பின்னர் ஜெயலலிதாவிடம் பேசிய அந்த நர்ஸ், உங்களுக்கு தரப்படும் மருந்துகளுக்கு நேர்மாறான உணவு வகைகளை உங்களுக்குக் கொடுத்து வருகிறார்கள் என்று கூறவே ஜெயலலிதா ஷாக் ஆகி விட்டாராம். அதன் பிறகுதான் சுதாரித்த ஜெயலலிதா சசி உள்ளிட்டோரை கண்காணிக்க ஆரம்பித்து தற்போது கையும் களவுமாக பிடித்து வெளியேற்றியுள்ளார்.



சசியின் ஆட்சியிலிருந்து ஜெயலலிதா மீண்டு விட்டார். னிமேலாவது 'ஒரிஜினல்' ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழக மக்கள் காண்பார்களா? காத்திருப்போம்...!

No comments:

Post a Comment