Friday, December 23, 2011

ராசா தொடர்பாக விசாரணை: மடக்க முயன்று திணறினார் ராம் ஜெத்மலானி!

கோர்ட்டில் தில்லாகவும், சாதுர்யமாகவும் சாட்சி சொல்லி அசத்தியிருக்கிறார் 2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கின் நட்சத்திர சாட்சி ஆசீர்வாதம் ஆச்சாரி. நேற்று (செவ்வாய்க்கிழமை) சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் சீனியர் லாயர் ராம் ஜெத்மலானியின் திணறவைக்கும் கேள்விகளுக்கு ஆச்சாரி பதிலளித்த விதம், கோர்ட்டில் இருந்தவர்களை மூக்கின்மேல் விரலை வைத்து ஆச்சரியப்பட வைத்தது.

வல்லவன் இருந்தால், வல்லவனுக்கு வல்லவனும் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டதுபோல ராம் ஜெத்மலானி, தனது 2 மணிநேர குறுக்கு விசாரணை முடிந்தபின் ஆச்சாரியைப் பார்த்து சிரித்தபடி அங்கிருந்து வெளியேறினார்.ஆ.ராசாவின் முன்னாள் கூடுதல் தனிச் செயலரும், தொலைத் தொடர்பு அமைச்சு அதிகாரியுமான, ஆசிர்வாதம் ஆச்சாரியை, ராம் ஜெத்மலானி குறுக்கு விசாரணை செய்யப்போகின்றார் என்பது உறுதியானதும், ஆச்சாரி திணறப் போகின்றார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ராம் ஜெத்மலானி விசாரணை செய்யும் ஸ்டைல் அப்படியானது.

வெவ்வேறு டாபிக்குகளுக்கு அடிக்கடி மாறிக் கேள்வி கேட்டு, மெயின் பாயிண்டுக்கு தனக்கு தேவையான திசையில் கொண்டுவருவதில் அவர் கில்லாடி.நேற்று முன்தினம் நடைபெற்ற குறுக்கு விசாரணையில் இதே ராம் ஜெத்மலானி, ஊழலுக்கு எதிரானவர் என்று ஆச்சாரிக்கு உள்ள பெயர் தொடர்பாக சிலாகித்து இருந்தார். ஆனாலும், நேற்றைய குறுக்கு விசாரணையின்போது, ஆச்சாரியும் தனது பதவியைப் பயன்படுத்தி ஆதாயம் அடைந்தார் என்ற ரூட்டில் வழக்கை திருப்ப முயன்றார்.ஒரு கட்டத்தில் ஆச்சாரி பயன்படுத்தும் விலையுயர்ந்த செல்போன் தொடர்பாககூட ராம் ஜெத்மலானி கேள்விகளை வீசினார். “நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிச்சயமாக இரண்டு லட்சத்தில் இருந்து நாலரை லட்சம் ரூபா விலை இருக்கும். அதை உங்களது அரசு ஊதியத்தில் வாங்கினீர்களா?” என்று திடீரென கேள்வி ஒன்றை வீசியிருந்தார்.அதற்கும் ஆச்சாரி அசரவில்லை. “இது எனது மனைவிக்கு அவரது சகோதரரால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட போன். மனைவியின் சகோதரர் லண்டனில் வசிக்கிறார்” என்றார் உடனடியாக.

“அமைச்சர் ராசாவுக்கு இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக இப்போது சொல்கிறீர்கள். இது உங்களுக்கு முன்பே தெரியும் என்றும் சொல்கிறீர்கள். அப்புறம் எதற்காக அவரது உதவியாளராக நீண்ட காலம் பணியில் இருந்தீர்கள்” என்று ஜெத்மலானி கிடுக்கிப்பிடி போட, அதையும் திறமையாக எதிர்கொண்டார் ஆச்சாரி.“ராசாவிடம் என்னை அவரது உதவியாளர் பணியில் இருந்து விடுவிக்குமாறு நிறைய தடவைகள் கோரினேன். நான் மீண்டும் எனது ஒரிஜினல் துறையான ரயில்வே அமைச்சுக்கே செல்ல விரும்பினேன். ஆனால், ராசாதான் என்னை பணியில் இருந்து விடுவிக்க மறுத்து விட்டார். இதை நீங்கள் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.

ராம் ஜெத்மலானி மற்றொரு அதிரடி கேள்வியாக, “2007-ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துக்குப் பின்னர் நீங்கள் ஆ.ராசாவை உளவு பார்த்தீர்கள். இல்லையா?” என்று திடீரென கேட்டார்.அதற்கு ஆச்சாரி, “ஆ.ராசாவின் அமைச்சுக்கு 3 அலுவலகங்கள் உள்ளன. சஞ்சார் பவன், எலக்ரோனிக்ஸ் நிகேதன், டக் பவன். நீங்கள் சொல்லும் 2007 செப்டெம்பரில் ஆ.ராசா எலக்ரோனிக்ஸ் நிகேதன் அலுவலகத்தில் இருந்து, சஞ்சார் பவன் அலுவலகத்துக்கு நிரந்தரமாகவே சென்றுவிட்டார். அந்த அலுவலகத்திலேயே நான் கிடையாது. அப்பறம் எப்படி உளவு பார்ப்பது?” என்று திருப்பிக் கேட்டார்!

ராசாவுக்கு ஆச்சாரியால்தான் கண்டம் இருக்கிறது போலிருக்கே!

No comments:

Post a Comment