Thursday, December 15, 2011

கல்யாண வீடுகளில் வக்கிர களவாணிகள்!

வேலூர் மாவட்டம், வாலாஜாவைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒரு நண்பர் நம்மிடம், ""சார்... ஆறு மாதத்துக்கு முன்னாடி, எனது உறவினரின் மகனுக்கு பெங்களூரில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை சாப்ட்வேர் இன்ஜினியர் என்பதால் ஹைடெக் யுவன், யுவதியர் களின் கூட்டம் அலங்கார ஆடைகளில் கலக்கியது. ஏராளமான மொபைல் கேமராக்கள் திருமணத்தை பதிவு செய்தன. கோலாகலமாக திருமணம் முடிந்து திரும்பினோம்.


சமீபத்தில் ராணிப் பேட்டையில் உள்ள ஒரு இண்டர்நெட் சென்ட ருக்கு டிகிரி ரிசல்ட் பார்ப்பதற்காக சென் றேன். அப்போது, ஒரு வெப்சைட்டில், உறவினர் மகனின் திருமண போட் டோக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். காரணம், போட்டோ வுக்காக போஸ் கொ டுத்து எடுக்கப்பட்ட படங்கள் அல்ல அவை. சாதாரணமாக உடை யை சரிசெய்யும் போதும், குனியும்போதும், உட் காரும்போதும் பெண் களின் கவர்ச்சியான பாகங்களைக் குறி வைத்து எடுக்கப்பட்ட படங்களாக அவை இருந்தன. இன்னும் ஒரு அதிர்ச்சி என்னவென் றால் அந்த வெப்சைட் பலான அடல்ட்ஸ் ஒன்லி சைட் படங்களை அதில் உலவ விட்டதோடு, கல்யாணப் பெண், அவ ரது தோழிகள் மற்றும் திருமணமான பெண் களின் பின்பக்கம், முன் பக்கம், இடுப்பு, மார்பு கள் போன்ற பகுதி களின் கீழே மோச மான வர்ணனைகளை யும், விமர்சனங்களை யும் போட்டிருந்தார் கள். அதுவும் குவாலிட்டியான ரெஸலூச னில் பளிச்சென்று அப்லோடு செய்திருந் தனர்.

இதையெல்லாம் பார்த்தால், இனி கல்யாணத்துக்கு வருவோரை கேமரா கொண்டு வரக்கூடாது என்று தடுக்க வேண்டிய சூழல்தான் உருவாகும்!'' என்று வேதனையோடு கூறிய அவர், அந்த வெப்சைட்டை நமக்கு ஓபன் செய்து காண்பித்தார்.

அதில், திருமண விழாக்களில் எடுத்த படங்கள் மட்டுமல்ல, சுற்றுலா மையங்களில், பார்க்குகளில், பீச் மற்றும் நீச்சல் குளங்களில் இளம்பெண்களும், குடும்பப் பெண்களும் "சுதந்திரமாக' இருக்கும் படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சில வகைப் படங்கள் வரம்பு மீறியும் இருந்தன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தனியார் நிறுவன ஊழியர் இளம்பெண் பாரதி பாண்டியன் நம்மிடம், ""முன் பெல்லாம், அம்யூஸ்மெண்ட் பார்க், டிஸ்கோ கிளப், ஹோட்டல் போன்ற இடங்கள்லதான் இந்த மாதிரி வக்கிர ஆசாமிகள் மொபைல் கேமராவோட திரிவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்படி கல்யாண விழாக்கள்லயும் இந்த கவர்ச்சித் திருட்டு ஆசாமிகள் ஊடுருவி இருப்பது வேதனை யான விஷயம். இப்படி படங்களை எடுத்து வெளியிடறதால சம்பந்தப் பட்டவங்க மனசு எவ்வளவு பாடுபடும்னு இந்த பொறுக்கிங்க யோசிக்கிறதே இல்ல... இனிமே எந்த சுப நிகழ்ச்சி நடந் தாலும், யாராவது ரொம்ப நேரம் செல்போன்லயோ, டிஜிட்டல் கேமராவி லேயோ படம் பிடிக் கிறத பார்த்தா உடனே அதை வாங்கி சோதனை பண்ணணும், இல்லன்னா இவங்க நமக்குத் தெரியாம லேயே நம் மள களவாடிருவாங்க!'' என்றார்.

இதுபற்றி, நமக்கு நன்கு அறிமுகமான ஒரு வெப்சைட் டிசை னரிடம் கேட்டபோது, ""இந்தியாவுல நெட்ல அதிகமான பேர் சர்ச் பண்றது முதல்ல கேரளப் பெண்களை, அடுத்து ராஜஸ்தான் பெண்களை. காரணம், அவங்க அழகா, தாராளமா இருப் பாங்கன்னு நம்பிக்கை. அடுத்து மும்பை, பெங்களூர் பெண்களின் படங்களும் அதிகமா தேடப்படுது. சில சைட்ல, நீங்க செக்ஸியா போட்டோ அனுப்பினா, நாங்களும் பதிலுக்கு வேறு மாதிரி செக்ஸியான படங்களை அனுப்பி வைப்போம்னு விளம்பரம் செய்றாங்க. சில தளங்கள் இதுமாதிரி படங்கள் எடுத்துத் தந்தா பணமும் தருது... மோகம் மற்றும் பண ஆசை காட்டி இதுபோன்ற வக்கிரமான இளைஞர்களை அதிகமாக்குறாங்க... மார்வாடி சமூக திருமணத்துல பொண்ணும், மாப்பிள்ளையும் ஒரு ரூம்ல முத்தம் கொடுத்துக்குவாங்க... அதை படம் எடுக்க போட்டோகிராபரை மட்டும் அனுமதிப்பாங்க. இதுபோன்ற திருமணங்களுக்கு வரும் போட்டோகிராபர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். இல்லன்னா அவங்க மூலமா கூட படங்கள் நெட்டுக்குப் போக வாய்ப்பிருக்கு'' என்றார்.

பல மாநில விருதுகளைப் பெற்ற பிரபல போட்டோகிராபர் எம்.ஆர்.விவேகானந்தன் நம்மிடம், ""தொழில்முறை போட்டோகிராபர்கள் இதுபோன்ற தவறான காரியங்கள்ல ஈடுபடமாட் டாங்க. ஒரு சைட்டில் உள்ள படங்களை சிலர் காப்பி செய்து வேறு பல சைட்டுகளுக்கு பரப்புவதும் நடக்கிறது. யாரோ சிலர் தவறான நோக்கத்தோடு படம் எடுத்திருக்கலாம்.

தனி மனித உரிமையில் தலையிடுவது தவறு தான். இதற்கு சட்டத்தில் கடுமையான தண்டனை யும் உள்ளது. சைபர் கிரைம் சட்டத்தின்படி ஆபாசப் படங்களைப் பரப்பிவிடும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படும்போதுதான், தவறு செய்யும் மற்றவர்களும் திருந்துவார்கள். அதுவரை இப்படி நமது உடல் நமக்குத் தெரியாமலே காட்சிக்குப் போய்க் கொண்டுதான் இருக்கும்...'' என்றார்.

ஊர்ப்பக்கம் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என் பார்கள். இனி இந்த மொபைல் கேமராவின் கண்களிடமும் நாம் எங்கேயும் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போலிருக்கிறது.

No comments:

Post a Comment