Friday, December 23, 2011

கலைஞர் ஒரு தமிழின துரோகி”- இப்படி சொல்வது யார்?

கலைஞர் ஒரு தமிழின துரோகி என்று செப்பியிருப்பது பரிதி இளம் வழுதி. யார் இவர்?

தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர்.
முன்னாள் செய்தித்துறை அமைச்சர்.
முன்னாள் துணை சபாநாயகர்.
அவர் தான் ஜூனியர் விகடன் இதழுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில்தான் கலைஞரை தமிழின துரோகி என்று மறைமுகமாக தாக்கியிருக்கிறார்.

பரிதி இளம்வழுதி மழைக்காகக் கூட கல்லூரிப் பக்கம் ஒதுங்காதவர். பத்தாம் வகுப்புக்குமேல் பள்ளிக்கூடத்திற்கு செல்லாதவர். மிசா கைதியாய் இளம்வயதில் சிறை சென்று கானா பாட்டுக்களை அரங்கேற்றம் செய்து இளைஞர் அணியில் தொடங்கி துணைப்பொதுச் செயலாளர் வரை வந்தவர்.

இந்தப் பரிதிதான் இத்தனை ஆண்டுகளாக “கண்டுபிடிக்காத” ஒரு உண்மையை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் வேடிக்கைப் பார்க்கும் மத்திய அரசாங்கத்தை தி.மு.க. ஆதரிப்பது தமிழின துரோகமல்லவா என்கிறார் பரிதி இளம்வழுதி. தி.மு.க.வை பார்த்து தமிழின துரோகம் என்றால், அது கருணாநிதியை பார்த்து தமிழின துரோகி என்று சொல்வது போலத்தானே.

கருணாநிதியின் இத்தகைய செயல்பாடுகளுக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் என்று நிருபர் கேட்டதற்கு ”தன் குடும்ப நலனைத் தவிர மற்ற சிந்தனைகள் எதுவுமில்லாதது தான் ஒரே காரணம்” என்றும் சொல்லியிருக்கிறார் பரிதி இளம்வழுதி.

சிறு வயது தொட்டே தி.மு.க.வின் உள்ளே- வெளியே அரசியல்களை நீக்கமற கற்றுணர்ந்தவர் பரிதி. எட்டாவது முறை எழும்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதிதான். 96-2001 தி.மு.க. ஆட்சிகாலத்தில் துணை சபாநாயகராக பதவி கொடுத்ததும் தி.மு.க. தான். 2006-2011 வளம் கொழிக்கும் சி.எம்.டி.எ. துறையையும், செய்தித் துறையும் பரிதிக்கு கொடுத்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி தான்.

அப்பொழுதெல்லாம் தெரியாத ஓர் உண்மை இப்போது பரிதிக்கு தெரிந்திருக்கிறது. ஆட்சியில் அதிகாரத்தில் கட்சிப் பொறுப்பில்parithi_113aஇருந்தபோதெல்லாம் பரிதி இளம்வழுதிக்கு ஞானோதயம் ஏன்வரவில்லை?

தி.மு.க. இப்பொழுது ஆட்சியில் இல்லை. கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் என்ற பதவியும் போய்விட்டது. ஆக எம்.எல்.ஏ. என்ற அந்தஸ்த்தும் இல்லை. கட்சிப் பொறுப்பும் இல்லை. இந்த நிலையில்தான் கருணாநிதியின் தமிழின துரோகமும், தன் குடும்பத்தை பற்றியே மட்டும் சிந்திப்பார் என்றெல்லாம் பரிதிக்கு தெரிந்திருக்கிறது.

பரிதியை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

அவர் எப்படிப்பட்ட பாவி என்றால் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியிலேயே தானொரு பாவி என்று அப்பாவித்தனமாக ஒப்பாரி வைத்துள்ளார்.

அந்தப் பேட்டியில் “முள்ளி வாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட வேதனையான தருணத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டினார் கலைஞர். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்யத் தயார் என்று வீரமாக அறிவித்தார். ஆனால், இரண்டு வாரங்களில் நைசாக பின் வாங்கிவிட்டார்.

அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி இதை விவாதிக்க வேண்டுமென்று பழநெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்தபோது சட்டமன்ற கட்சிகளின் சுருக்கமாக கூட்டி முடித்துக் கொண்டார்.

மன்மோகன் சிங்கை ஆதரித்து பேசுவது தமிழின துரோகம்” என்று ஓர் உயரிய உண்மையை எடுத்துச் சொல்லியிருக்கிறார் பரிதி.



முள்ளிவாய்காலில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டபோது இவரும்தானே வளம் கொழிக்கும் பதவியில் வலம் வந்து கொண்டிருந்தார். இந்த உணர்வு அன்றே இருந்திருந்தால் மந்திரி பதவியை ராஜினாமா செய்திருக்கலாமே. கருணாநிதியை அன்றே கண்டித்திருக்கலாமே.

அப்படி கண்டிதிருந்தால், இன்று கேரளாவில் கோடிக்கணக்கான சொத்துக்கள் தனது தம்பி பெயரில் இருந்திருக்குமா?

மகனுக்கு திருமணமாகி பேரப்பிள்ளை மார் மீது எட்டி உதைக்க வேண்டி நேரத்தில், சாந்தோமில் குவா, குவா சத்தம் கேட்க வைத்திருக்க முடியுமா. அதை தெரிந்தும் கருணாநிதியும் கண்டிக்காமல் இருந்தாரே. அது நியாயமா?

இன்னும் எத்தனையோ நியாயங்கள் கேட்கப்படாமல் மறைக்கப்பட்டிருக்கின்றன.

ஆக, பதவி போன பிறகு, கட்சிப் பொறுப்பு பரிக்கப்பட்ட பிறகு கர்ஜிப்பதுபோல் நடிப்பது எதற்காக?

parithi-112aஅரசியலில் இன்னொரு இடம்தேடி அலைவதற்கான முயற்சிதான் பரிதியின் பேட்டி.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் சோனியாவும், பிரதமரும் வேடிக்கை பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட மத்திய அரசாங்கத்தை தி.மு.க. ஆதரிப்பது தமிழின துரோகமல்லவா. பதவிக்காக மத்திய மந்திரிகளாக நம்மவர்கள் தொடரத்தான் வேண்டுமா? என்னுடைய கேள்வி என்றும் பிதற்றியிருக்கிறார் பரிதி.

பதவியிருந்தால் ஒரு பேச்சு. பதவியில்லாவிட்டால் ஒரு பேச்சு. இதில் பரிதி ஒன்றும் விதிவிலக்கல்ல.

ஆனாலும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னது போல்
“பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது
சிறுத்தையே வெளியே வா - எலியென
உன்னை இகழ்ந்தவர் நடுங்க - புலியென
செயல் செய்யப் புறப்படு வெளியில்”
என்று சொல்லி இன்னும் பல உண்மைகளை புலிபோல(!?) கர்ஜிக்கும்படி பரிதியைக் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment