Friday, December 23, 2011

நரேந்திர மோடியை கொலை செய்ய வந்த ஐ.எஸ்.ஐ பெண் உளவாளி தற்கொலை.

டெல்லி ரெயில் நிலையத்தில் கடந்த வாரம் சூபியா கன்வால் (வயது 38) என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவருடன் இம்ரான் என்பவரும் பிடிபட்டார். விசாரணையில் சூபியா, பாகிஸ்தானில் கராச்சி அருகே உள்ள ஷரீபாபாத் எனும் ஊரைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. அவருடன் பிடிபட்ட இம்ரானை அவர் தன் கணவர் என்று கூறினார்.



திருமணத்துக்கான சான்றிதழையும் அவர் போலீசாரிடம் காட்டினார். ஆனால் இம்ரான் குஜராத் மாநிலம் ஆமதா பாத்தைச் சேர்ந்தவர். துணி வியாபாரம் செய்வதற்காக 1988-ம் ஆண்டு கராச்சி சென்றவர் அங்கேயே தங்கி விட்டார். துணி வியாபாரத்தில் கடும் இழப்பை சந்தித்த அவர் செல்வ செழிப்புடன் சூபியாவுடன் திரும்பி வந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து இம்ரான், சூபியா இருவரும் உளவுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய தீவிர விசாரணை மூலம் சூபியா, இம்ரான் இருவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. இம்ரானின் ஏழ்மையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அவருக்கு சூபியாவை திருமணம் செய்து வைத்துள்ளது.

பிறகு அவர்கள் இரு வருக்கும் பல்வேறு பயிற்சிகள் கொடுத்து நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வைத்தது. டெல்லி வந்து தங்கி இருந்து ஏராளமான தகவல்களை சேகரித்த சூபியா, இம்ரான் இருவரும் அடுத்தக் கட்டமாக ஆக்ரா செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆக்ராவில் ஐ.எஸ்.ஐ. முக்கிய உளவாளி ஒருவரை சந்தித்து உதவிகள் பெற திட்டமிட்டிருந்தனர்.

அதற்கு முன்னதாக அவர்கள் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். இதற்கிடையே உளவுப் பிரிவினர் சூபியாவை தனிமையில் வைத்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது சூபியா உளவாளி மட்டுமல்ல, தற்கொலை படை பிரிவைச் சேர்ந்தவள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்தது. வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியையும் அவள் பெற்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை தற்கொலை தாக்குதல் மூலம் படுகொலை செய்ய அவளுக்கு ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு உத்தரவிட்டிருந்தது. அதற்கான தாக்குதல் திட்டங்களையும் பாகிஸ்தான் உளவு அமைப்பினர் வடிவமைத்து கொடுத்திருந்தனர். நரேந்திர மோடி பயண விவரங்களை அறிந்து, அதற்கு ஏற்ப சூபியா, தன் தற்கொலைக்கு தாக்குதலுக்கு இறுதி வடிவம் கொடுத்திருந்தார்.

எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் வகையில் அவர் தயார் நிலையில் இருந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் சிக்கியதால் மிகப் பெரிய நாசவேலை சதி முறியடிக்கப்பட்டுள்ளது. சூபியா போல மேலும் சில பெண்கள் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலுக்காக இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அது பற்றிய எந்த தகவல்களையும் சூபியா தெரிவிக்க மறுத்து வருகிறாள். எனவே சூபியாவை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment