Saturday, December 31, 2011

ராவண லீலைகள்! -ஜெ. -சசி பிளவு பின்னணி!

கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, கண்ணீர் வடித்தபடியே இருக்கிறார். அவரை சாப்பிட வைக்கக்கூட குடும்பத்தினர் போராட வேண்டியிருக்கிறது. அடிக்கடி ‘"என்னை இப்படி நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்திட்டாங்களே...
அந்த ராவணன் இவ்வளவு வில்லங்க வேலைகள் பார்த்திருக்கான்னு தெரியாமப் போயிடுச்சே' என கதறி அழுதுகொண்டிருக்கிறார். சசியின் கணவரான நடராஜனும் "அந்த ராவணன் பய லாலதான் இவ்வளவும்' என வேதனையோடு புலம்பிக் கொண்டிருக்கிறார். சசிகலாவின் ஒட்டுமொத்த உறவினர் களும் "எங்க குடும்பத்துக்கே அவமானத்தைத் தேடிக் கொடுத்துட்டான் அந்தப் பாவி' என ராவணனை நோக்கித்தான் கையைக் காட்டுகிறார்கள். இதேபோல் பாதிக்கப்பட்ட ர.ர.க்களும் ராவணனின் லீலைகளை கார்டனுக்கு புகார்களாக குவித்தபடியே இருக்கின்றனர்.

இப்படி இலைத் தரப்பின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்திருக்கும் அந்த ராவணன் யார்? அவர் செய்த லீலைகள்தான் என்ன?


ராவணனின் ஜாதகம் :


சசிகலாவின் சித்தப்பா கருணாகரனின் சொந்த மருமகன்தான் ராவணன். கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் படித்த வர். பரமத்தி வேலூரில் வசித்து வந்த இவரிடம், கொங்கு மண்டலத்தில் இருக்கும் சொத்துக்களையும் முதலீடுகளையும் செங்கோட் டையனுடன் சேர்ந்து கவ னித்துக்கொள்ளும் பொறுப் பை ஒப்படைத்தார் சசி. இதனால் கோவைக்கு இடம் பெயர்ந்த ராவணன், அங்கு சுங்கம் ஏரியாவில் ஒரு எண்ணெய் கம் பெனியை நிறுவிக் கொண்டார். 2001-ல் மெல்ல மெல்ல சசி மூலம் கார்டனுக்குள் நுழையும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்க... அப்போதே தொடங்கிவிட்டது இவரது ராஜாங்கம்.


கார்டனின் மேஸ்த்திரி :


கார்டனின் வலது கையாக தன்னை ராவணன் காட்டிக்கொண்டதால் கட்சிப் பிரமுகர்கள் சீட்டுக்கும் பதவிகளுக்கும் இவரை மொய்த்தனர். சசி மூலம் காய் நகர்த்தி இவர் அதையெல்லாம் செய்துகொடுக்க ஆரம்பித்ததால் இவரது இமேஜ் ர.ர.க்கள் மத்தியில் கிடுகிடுவென உயர்ந்தது. கார்டனிடம் ஏகத்துக்கும் பவ்வியம் காட்டி தீவிர விசுவாசிபோல் நடந்ததால்... கார்டனும் இவர் மீது நம்பிக்கை வைத்து கோவை, ஈரோடு, கரூர், சேலம், கிருஷ்ண கிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சி போன்ற மாவட்டங்களில் கட்சியை மேற்பார்வை பார்க்கும் மேஸ்த்திரி வேலை யைக் கொடுத்தது. இதேபோல் திருச்சி பெல்ட்டை சசியின் உறவினரான என் ஜினியர் கலியபெரு மாள் கவனிக்க, முக்குலத்தோர் பெல்ட்டான மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களை எம்.என்.னின் தம்பி ராமச்சந்திரன் பார்த்து வந்தார். இவருக்கு இடையில் உடல்நலம் சரியில்லாமல் போனதால் ராமச்சந்திரன் கவனித்த பகுதிகளுக்கும் மேஸ்த்திரியானார் ராவணன். இப்படி கிடைத்த மேஸ்த்திரி பதவியின் மூலம் கட்சிக்குள் நினைத்ததை யெல்லாம் செய்தார். மா.செ. பதவி முதல் மந்திரி பதவிவரை உள்ளாட்சி சீட்டுகள் முதல் எம்.எல்.ஏ., எம்.பி., சீட்டுகள்வரை கரன்ஸியைக் காலடியில் கொட்டுபவர்களுக்கு வாங்கிக் கொடுக்கத் தொடங்கினார். கோடிகள் குவிந்தன. கார்டனின் கண்களை மறைத்துவிட்டு திரை மறைவுத் திருப்பணிகளையும் மேற்கொள்ள ஆரம்பித்தார்.

ராவணனுக்கு சசி உறவினரான தேச பந்துவும் புதுவைக்காரரான மிடாஸ் மோகனும் உதவியாளர்கள் போல் செயல்பட்டு, சகல வித்தைகளையும் அரங்கேற்றத் தொடங்கினர்.


சீனியர் அனுபவம் :


தேர்தலுக்கு முன்பு பொள்ளாச்சி ஜெயராமன் மூலம் கார்டன் எதிர்பார்த்த 10 பெரிய எழுத்துத் தொகை வந்து சேரவில்லை. இது குறித்து கார்டன் கேட்க... செங்கோட்டையன் கையாடிவிட்டார் என பொள்ளாச்சி புகார் வாசித்தார். இது குறித்து ராவணனை விசாரிக்கச் சொன்னது கார்டன். கோவை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வைத்து விசாரணை நடந்தது. இதில் செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், தேசபந்து போன்றோர் அங்கே இருந்தனர். "எனக்கும் அந்தத் தொகைக்கும் சம்பந்தமில்லை' என செங்கோட்டையன் சொல்ல, பொள்ளாச்சி யோ "நீதான்யா லவட் டிக்கிட்ட' என்றார். வார்த்தைகள் தடிக்க, ஒரு கட்டத்தில் ரக ளையாகி விட்டது. இப்படி ஒரு மோச மான அனுபவத்தை சந்தித்திராத செங் கோட்டையன் அதிர்ந்து போய்விட் டார் .


கார்டனின் ரியாக்ஷன் :


செங்கோட்டையன் நேராக கார்டனுக்குப் போய் ஜெ.விடம் நடந்ததைச் சொல்லி கண்ணீருடன் முறை யிட்டார். கூடவே பொள்ளாச்சி மீது இருக்கும் புகார்களையும் பட்டியலிட்டதோடு அவர் கொங்குமண்டலத்தில் கவுண்டர் சமூகத்துக்கு எதிராக நடப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் பொள்ளாச்சிக்கு சீட் கொடுப்பதில்லை என அப்போதே தீர்மானித்துவிட்டார் ஜெ. அதேசமயம் ராவணன் குறித்து ஏகப்பட்ட புகார்களை அடுக்கியும் ஜெ.’ அதைக் கண்டு கொள்ளவில்லை. செங்ஸால் பொள்ளாச்சிக்கு ஜெ. சீட் கொடுக்காததை ஜீரணிக்க முடியாத ராவணன், பதிலுக்கு செங்கோட்டையனுக்கு பவர்புல் பதவி கிடைக்காதபடி சசி மூலம் பார்த்துக் கொண்டார். அதனால்தான் செங்கோட்டையனுக்கு விவசாயத்துறை ஒதுக்கப்பட்டு பின்னர் பவரே இல்லாத தகவல் -தொழில் நுட்பத்துறைக்கு அவர் தூக்கியடிக்கப்பட்டார்.

அதே சமயம் செங்கோட்டையனை நோகடிக்க, அவரது சிஷ்யர்கள் போல் இருந்து வந்த செந்தில்பாலாஜி, தங்கமணி, கே.வி. ராமலிங்கம் போன்றவர்களுக்கு பவர் ஃபுல் பதவிகளை வாங்கிக்கொடுத்து அவர்களை தனது ஆளாக்கிக்கொண்டார் ராவணன்.

பதவிக்கு வேட்டு :

பிடிக்காதவர்களின் பதவியைக் காலிபண்ணு வதில் கில்லாடிப் பேர்வழி ராவணன். இப்போது மாஜியாகிவிட்ட எஸ்.பி.சண்முகநாதனிடம் தேர்தலுக்கு முன்பே டீலிங் பேசினார் ராவணன். அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தால் தூத்துக் குடியில் இருக்கும் பலகோடி மதிப்பிலான இடத்தை தனக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பது டீலிங்கின் சாரம். அப்போதைக்கு தலையாட்டிய சண்முகநாதன், அமைச்சரானதும் ஜவ்வடிக்க ஆரம்பித்தார். பலமுறை அவரை மிரட்டிப்பார்த்த ராவணன், சண்முகநாதன் மீதான புகார்களை சசி மூலம் ஜெ.’வின் பார்வைக்குக் கொண்டுபோய் அவர் பதவியைக் காலி பண்ணிவிட்டார். இதேபோல் தற்போது மந்திரியாகவும் மா.செ.வாகவும் இருப்பவரிடம், தன்னைக் கணிசமாக கவனிக்கும்படி கேட்டுக்கொண்டே இருந்தார் ராவணன்.

மந்திரியோ "வருவாயே இல்லாத துறை யாச்சே' என்றபடி ஆரம்பத்தில் அசைந்து கொடுக்கவில்லை. மந்திரிசபை மாற்றம் குறித்த பட்டியலில் அவர் பெயரையும் கொண்டு போய்விட்டார் ராவணன். இதையறிந்து அரண்டுபோன மந்திரி அங்கே இங்கே எனத் தேற்றி 2 பெரிய எழுத்துத்தொகையை ராவண னுக்குக் கப்பம்கட்டி பதவியைக் காப் பாற்றிக்கொண்டார்.


இவர் வந்த கதை :


தனக்கு மந்திரி பதவி கிடைக்காத ஆதங்கத்தில் இருந்த வளர்மதி யார் யாரையோ தூதுவிட்டுப் பார்த்தார். ஜெ. கண்டுகொள்ளவே இல்லை. ராவண னை பிடித்தால்தான் கதையாகும் என ரூட்போட ஆரம்பித்தார். மிடாஸ் மோகனின் உதவி யாளரான மிடாஸ் பாஸ் கரனின் கோடம்பாக்கம் விஜயராகவபுரம் வீட்டுக்கு நான்குமுறை படையெடுத் தார். இந்த மிடாஸ் பாஸ் கரன் மட்டுமே 65 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்திருக்கிறார் என்கிறது அவரது நட்பு வட்டாரம். இந்த பாஸ்கரன், கார்டனின் அதிரடி நடவடிக்கைக்கு ரெண்டுநாள் முன்னதாகக் கூட சென்னை தி.நகரில் லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷனின் நவீன பிளாட் ஒன்றை வாங்கி குடிபுகு விழாவை தடபுடலாக நடத்தியிருக்கிறார். இந்த பாஸ்கரன் வீட்டில் வளர்மதி கிடையாய்க் கிடந்து அவர் மூலம் மிடாஸ் மோகனை சந்தித்தார். மிடாஸ் மோகன் மூலம் ராவணனை பார்த்தார். இதன்பிறகே கார்டன், மந்திரிசபையின் கதவை வளர்மதிக்குத் திறந்தது. சசி குரூப் வெளியேற்றப்பட்ட பின் கார்டனில் நடந்த விசாரணையின்போது வளர்மதியிடம் "உன் கார்மீது ரெட் லைட்டை எரிய வைக்க எவ்வளவு செலவு செஞ்சே?'’ என எச்சரிக்கும் தொனியில் அதட்டி யிருக்கிறார் ஜெ.


மஞ்சத்தின் மகிமை :


எம்.ஜி.ஆருக்கு ஜோடி போட்ட நாயகி ஒருவரின் பெயரைக்கொண்ட பெண்மணி அவர். ராவணனின் பவருக்கு அடிமையாகிவிட்டார். ராவணனின் ஈரப் பார்வையால் அவர் 24-வது வய திலேயே பஞ்சாயத்துத் துணைத் தலைவியானார். இப்போதும் உள்ளாட்சிப் பொறுப்பில்தான் இருக்கிறார். இவரை நகைகள் பூட்டி அழகு பார்த்ததோடு நிறைய சொத்து பத்துக்களையும் வாங்கிக்கொடுத்திருக்கிறார் ராவணன். அவர் மஞ்சத்தில் வைத்து அறிமுகப்படுத்திய மகிழ்ச்சியான நபருக்கு அம்மணியால் அமைச்சர் யோகம் அடித்துவிட்டது. இந்த அம்மணிக்கு ஒரு கல் யாணமும் இடையில் நடந்துவிட்டது. ராவணனை சந்திக்கும் நுழைவு வாயில்களில் இவரும் ஒருவராய் இருந்தார். இதேபோல் ஜெ.’ தங்குவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க அடிக்கடி கொட நாட்டுக்குப் போகும் ராவணனின் பல வீனத்தைத் தெரிந்துகொண்டார் ஒரு புத்திசாலி. ராவணனை சகல வழிகளிலும் குளிப்பாட்டியதன் பலனாய் அவருக்கும் சைரன் கார் யோகம் அடித்துவிட்டது. இதேபோல் கொங்குமண்டலத்தில் வெறும் ஒ.செ.வாக இருந்த ஒருவர், கட்சியில் கிடுகிடு வளர்ச்சி வேண்டி, ராவணனே சரணம்.. என அடைக்கல மானார். கூடவே தனது பண்ணைவீட்டுக்கு அவரை அடிக்கடி வரவழைத்து சகலவகையிலும் விருந்தோம்பி உபசரித்தார். அவரும் இப்போது மந்திரி.


காண்ட்ராக்ட் கொள்ளை :


பொதுப்பணித் துறை உள்ளிட்ட அரசுத் துறை காண்ட்ராக்ட்களில் 3 பர்சண்ட் வரை கமிஷன் வைத்து அதில் இரண்டு பர்சண்ட்டை கட்சிக்கும் மீதத்தை மந்திரி உள்ளிட்ட ர.ர.க்கள் பகிர்ந்து கொள்ளலாம் என்பதே இப்போதைய கார்டனின் வாய்மொழி உத்தரவு. இதை மீறி வழக்கமான 3 பர்சண்ட்டுக்கு மேல் தனக்குத் தனியாக 4 பர்சண்ட் கொடுக்கவேண்டும் என மந்திரிகளை மிரட்டி கல்லாகட்டினார் ராவணன் என கார்டனுக்கு புகார்கள் போகின்றன.

தற்போதைய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிகளில் இருந்து விடப்படும் டெண்டர்கள் ஜனவரி பிப்ரவரி யில்தான் நடைமுறைக்கு வரும். எனினும் அப்போதே அவைகளுக் கான கமிஷனையும் வசூலித்து வந்திருக்கிறார். லாட்டரி மார்ட் டினை காப்பாற்றுவதாகச் சொல்லி பெரிய எழுத்துத் தொகைகளை ராவணன் வாங்கியும் ஜெ.’ மார்ட்டினைக் கைவிட்டுவிட்டார். மணல் ஆறுமுகசாமியிடமும் பலமுறை டீல் செய்து பலமாக ராவணன் பலன் பார்த்ததும் கார்ட னுக்குத் தெரியவர, ஆறுமுகசாமியிடம் கார்டன் விசாரித்திருக்கிறது.

இதேபோல் செங்கோட்டையனும் ஓ.பி. எஸ்.சும் ராவணன் குறித்து பல தகவல்களை கொட்டி ஜெ.’வையே திகைக்க வைத்திருக்கிறார்கள்.


பதவி போதை :


கார்டனை கோபத்தின் உச்சிக்குப் போகச் செய்த ஒரு தகவலும் நம் காதுக்கு வந்தது. உற்சாக நேரங்களில் தன்னை மறந்தபடி பேசும் ராவணன் ‘"இப்ப நான் சீட்டு வாங்கிக்கொடுத்து ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்ல 45 பேர் எப்பக் கூப்பிட்டாலும் என் பின்னால் வர ரெடியா இருக்காங்க. எனக்கே இப்படின்னா எங்க குடும்பத்தினரின் பின்னால் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருப்பாங்கன்னு கணக்குப் போட்டுக்கங்க'ன்னு’ பலமுறை பேசியிருக்கிறார். ஏதோ திட்டத்தோடு தனது ஆதரவாளர்களுக்கு அதிக சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட கார்டன், இனியும் விட்டுவைக்கக் கூடாது என்று சரசரவென களையெடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது.


குவித்த சொத்துக்கள் :


சென்னையில் மட்டும் ராவணன் சில நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புகொண்ட இடங்களை வாங்கிப் போட்டிருக்கிறார் என்கிறார்கள். பிரச்சினையுள்ள சொத்துக் களையும் போலீஸ் டீமை கையில் வைத்துக் கொண்டு அடிமாட்டுவிலைக்கு வாங்கிவிடுவார்’ என்கிறார்கள். இதனால் பத்திரப்பதிவு அலு வலகங்களில் சசி உறவினர்கள் வாங்கியுள்ள சொத்துக்களின் கணக்குகளை எடுக்கும் பணி ஒருவாரமாக தீவிரமாகியுள்ளது.


சொத்துக்களை கைப்பற்றச் சொல்லும் மாஜி:


மாஜி அ.தி.மு.க. மந்திரியும் தற்போது தி.மு.க.வில் செயல்பட்டு வருபவருமான சத்தியமூர்த்தி நம்மைத் தொடர்பு கொண்டு ""மன்னார்குடி கும்பலை கார்டனை விட்டும் கட்சியை விட்டும் நீக்கினால் மட்டும் போதாது. அடுத்தகட்ட நட வடிக்கையையும் எடுக்கவேண்டும். ஒரு காலத்தில் சசி கும்பலை அருகில் இருந்து பார்த்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்... 89-ல் இருந்து அத்தனை தேர்தல் களிலும் அவர்கள் சீட்டுக்காக கட்சிக்காரர்களிடம் பணம் பறிக்க ஆரம்பித்தார்கள். இன்றைக்கு சசி குடும்பத்திடம் இருக்கும் சொத்துக்களின் மதிப்பு எத்தனை ஆயிரம் கோடி என்பதை கணிக்க முடியாது.

இவர்களால்தான் தனக்கும் கட்சிக்கும் கெட்டபெயர் என்று ஜெயலலிதா நினைத்தால், சசி தரப்பின் அத்தனை சொத்துக்களையும் கைப்பற்றி அரசுப் பணத்தை அரசிடமும், கட்சியினரிடம் பறித்த பணத்தை கட்சிக் காரர்களிடமும் ஒப்படைக்கவேண்டும். இல் லையேல் தனது பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப ஜெ.’போடும் நாடகம் என்று மக்கள் நினைப்பார்கள். என்னைப் போல் அ.தி.மு.க.வை விட்டு வெளியேறியவர்களும் அ.தி.மு.க.விலேயே இருக்கும் பிரமுகர்களும் சசி கும்பலிடம் எவ்வளவு ரூபாயை இழந்தோம் என்று பட்டியல் போட்டு விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். இது உறுதி'' என்றார் அதிரடியாய்.

No comments:

Post a Comment