Thursday, August 2, 2012

'ஆளும் கட்சிப் பிரமுகர் என்னைச் சிக்க வைத்துவிட்டார்!''சரணடைந்த தளி எம்.எம்.ஏ


லைமறைவாய் இருந்த தளி எம்.எல்.ஏ. தானே வந்துவிட்டார்! கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் பழனியின் கொலை விவகாரத்தில் கண்ணாமூச்சு ஆடிய முக்கியக் குற்றவாளிகள், நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருக்கிறார்கள். 
ஜூலை 5-ம் தேதி, கெலமங்கலத்தில் இருக்கும் தனது தோட்டத்தில் அதிகாலை நேரத்தில் விவசாய வேலைகளைச் செய்யப்போன  பழனி, துப்பாக்கியால் சுடப்பட்டும், கொடூரமாகக் கழுத்து அறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையைப் பார்த்த நேரடி சாட்சியான அவருடைய மகன் வாஞ்சிநாதனையும் கொல்லப் பார்க்கிறார்கள் என்று அடுத்த பரபரப்பும் கிளம்பியது.

பழனி கொலைக்கு, தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-வான ராமச்சந்திரனுடன் ஏற்பட்ட அரசியல் முன்விரோதமே காரணம் என்று சொல்லப்பட்டது. ஆகவே, கொலை வழக்கில் ராமச்சந்திரன் பிரதானக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். மொத்தம் 22 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்தக் கொலை தொடர்பாக சிலர் நீதிமன்றத்தில் சரண் அடைய, சிலர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், எம்.எல்.ஏ. ராமச் சந்திரன் உள்ளிட்ட முக்கியக் குற்றவாளிகள் தலைமறைவாகவே இருந்தனர். அவர்களைப் பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந் தன. போலீஸாரால் நெருங்கவே முடியவில்லை. இதற்கிடையில், எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். அது, கடந்தவாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான், எம்.எல்.ஏ. ராமச் சந்திரன், அவரது மாமனார் லகுமையா, அண்ணன் வரதராஜன் மற்றும் அவருடைய கட்சியைச் சேர்ந்த கேசவமூர்த்தி மற்றும் சித்தராஜ் ஆகிய ஐவரும் கடந்த 30-ம் தேதி, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி விஜயா உத்தரவிட, வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் ராமச்சந்திரனிடம் பேசினோம். ''அந்தக் கொலைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக தொடரப்பட்ட வழக்கு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகாரத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகரின் நிர்ப்பந்தம் காரணமாகவே காவல்துறையினர் என் மீது வழக்குத் தொடுத்து இருக்கிறார்கள்'' என்றவரிடம், ''உங்களுக்கும் பழனிக்கும் தனிப்பட்ட விரோதம் இருந்ததாகச் சொல்கிறார்களே?'' என்றோம். ''அவருக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட பிரச்னையோ, விரோதமோ இல்லை. இது முழுக்க முழுக்க பொய் வழக்கு. இந்தச் சம்பவத்தில் யார் உண்மையான குற்றவாளி என்பதைக் கண்டுபிடித்து அவர்களைத் தண்டிக்க வேண்டும்'' என்றார் அழுத்தமாக!

No comments:

Post a Comment