Saturday, December 10, 2011

தொடர்ந்து 9 மணி நேரம் மியூசிக் கேட்க ஓர் புதிய மொபைல்!

அடுத்து அடுத்து பல மொபைல்களை வெளியிட்டு கொண்டிருக்கிறது ஃப்ளை மொபைல் நிறுவனம். குறைந்த விலையில், அதிக வசதிகளுடன் மொபைல்களை வழங்குவதால் ப்ளை மொபைல்களுக்கு மார்க்கெட்டில் தனி இடம் கிடைத்துள்ளது.

தனது மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ளவும், இசை விரும்பிகளின் தாகத்தை போக்கும் வகையிலும் இ-200 என்ற புதிய டியூவல் சிம் கார்டு பொருத்தும் வசதிகொண்ட மொபைலை இந்திய சந்தையில் கூடிய விரைவில் கொடுக்க இருக்கிறது ஃப்ளை நிறுவனம்.
2.8 இஞ்ச் திரை கொண்ட இந்த மொபைல், 240 x 320 திரை துல்லியத்தை கொடுக்கும். இதன் விஜிஏ கேமரா அதிகபட்சம் 640 x 480 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும். இதன் மெமரி ஸ்லாட் மூலம் எக்ஸ்டர்னல் மெமரியை 8ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம்.
இந்த மொபைலில் சோஷியல் நெட்வொர்கிங் வசதியையும் பெற்று பயனடையலாம். அதற்காக இதில் ஜிபிஆர்எஸ் தொழிவ் நுட்பமும் உள்ளது. இதன் 1,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் 3 மணி நேரம் டாக் டைம் மற்றும் 200 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெறலாம். மேலும், இந்த மொபைலில் 9 மணி நேரம் தொடர்ந்து மியூசிக் கேட்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதனால், இந்த மொபைல் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்த புதிய ப்ளை மொபைல் வெறும் 92 கிராம் எடையை கொண்டதாக இருக்கிறது என்பது கூடுதல் விசேஷம்.

No comments:

Post a Comment