Wednesday, October 3, 2012

நித்தி மேல் தப்பு இல்லைன்னா, எதுக்கு டெஸ்ட்டுக்குப் பயந்து ஓடி ஒளியணும்? ஆர்த்தி ராவ்


மீண்டும் அரங்கத்துக்கு வந்து விட்டார் ஆர்த்தி ராவ்! 
'நித்தியானந்தா தரப்பினர் ஆட்களை அனுப்பி என்னைக் கொலை செய்யப் பார்க்கிறார்கள்’ என்ற ஒரு பகீர் புகாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் கொடுத்திருக்கிறார் ஆர்த்தி ராவ். ரஞ்சிதா தொடர்ந்திருக்கும் வழக்கில் ஆஜ ராவதற்காக பெங்களூரு ராம் நகர் நீதிமன்றம் செல்வதற்காகப் புறப்பட்டுக்கொண்டிருந்த ஆர்த்தி ராவைச் சந்தித்துப் பேசினோம்.
''நித்தியானந்தா மீது என்று நான் புகார் கொடுத் தேனோ, அன்றுமுதல் நான் உயிர் பயத்தில்​தான் நடமாடி வருகிறேன். இன்றுவரை நிம்மதி இல்லை. எங்க அப்பாவின் காரை, எங்க வீட்டு பார்க்கிங்கில் நிறுத்தி வெச்சிருந்தோம். ரெண்டு நாளைக்கு முன்னால் ஒரு ஆள் எங்க காருக்குப் பக்கத்துல வந்து நின்னு ஏதோ பண்ணிட்டு இருந்தார். எங்க அம்மா போய், 'யாருங்க நீங்க..? எதுக்கு இங்க நின்னுட்டு இருக்கீங்க?’னு கேட்டாங்க. அதுக்கு அந்த ஆள், 'ஒருத்தரைப் பார்க்க வந்தேன். வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்’னு சொல்லிட்டே ஏதோ செல்போன்ல பேசியபடியே போயிட்டாரு. அதேநாள் ராத்திரி எட்டு மணி இருக்கும். எங்க வீட்டு காலிங்பெல் அடிச்சது. அம்மாதான் கதவைத் திறந்தாங்க. வெளியில நின் னுட்டு இருந்த ஆள், 'செந்தில் இருக்காரா?’னு கேட் டாரு. 'அப்படி யாரும் இங்க இல்லையே’ன்னு அம்மா சொன்னதும், 'இந்த அட்ரஸ்தான் கொடுத்தாங்க’ன்னு சொல்லிட்டுத் திரும்பிப் போயிட்டாரு. அடுத்த அரை மணி நேரத்துல மறுபடியும் காலிங் பெல் அடிச்சுது. கதவைத் திறந்ததும், வெளியில நின்னுட்டு இருந்த ஆள், 'சுஜாதா இருக்காங்களா?’னு கேட்டிருக்கார். 'அப்படி யாரும் கிடையாதுங்க’னு எங்கம்மா சொன்னதும், 'உள்ளேதான் இருப்பாங்க. வரச்சொல்லுங்க’னு சொல்லிட்டு வீட்டை எட்டிப் பார்த்திருக்காரு. 'அப்படி யாரும் கிடையாது’னு சொல்லி அம்மா கதவைச் சாத் திட்டாங்க. ஒரே நாள்ல மூணு சம்பவங்கள். இதை எல்லாம் செய்வது நித்தியானந்தா ஆட்கள்தான்னு நான் சந்தேகப்படுறேன். அதனாலதான் புகார் கொடுத்தேன்'' என்று பயம் விலகாதவராகச் சொன்னார்.
''உங்களுக்கு ஹெர்பியஸ் -2 என்ற தொற்று வியாதி இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை எடுப்பதற்​காகத்தான் நீங்க ஆசிரமத்துக்கு வந்ததாகவும் நித்தியானந்தா சொல்லி இருக்கிறாரே?''
''அந்த ஆள் வாயைத் திறந்தாலே பொய்தான் வரும். எனக்கு அப்படி எந்த வியாதியும் கிடை​யாது. ஆன்மிக ஈடுபாடு ஏற்பட்டுத்தான் நான் ஆசிரமத்துக்குப் போனேன். அந்த ஆளு மேல் போட்டிருக்கும் வழக்கைத் திசைதிருப்பி என்னை அசிங்கப்படுத்தணும். அதுக்காக எந்த லெவலுக்கும் போறதுக்கும், அந்த ஆள் துணிஞ்சிட்டார். மெடிக்கல் டெஸ்ட்டுக்கு வர்றதுக்கு நான் தயாரா இருக்கேன். ஆனா அந்த ஆள் இதுவரை ஒரு டெஸ்ட்டுக்கு வந்திருப்பாரா? அவர் மேல் தப்பு இல்லைன்னா, எதுக்கு டெஸ்ட்டுக்குப் பயந்து ஓடி ஒளியணும்? நித்தியானந்தா செய்த அயோக்கியத்தனங்களைப்பத்தி நான் எதுவும் பேசக்கூடாதுங்கிறதுக்குத்தான் என் மேல் இவ்வளவு பழியையும் போட்டுட்டு இருக்கார். ஒரு தடவை நான் பேட்டி கொடுத்ததுக்கே கோர்ட்டுக்குப் போய் தடை கேட்டார். அந்த அளவுக்கு அவருக்குப் பயம்!
தெளிவா ஒரு விஷயத்தைச் சொல்லிடுறேன். அந்த வீடியோ உண்மை. வீடியோவில் இருப்பது நித்தியானந்தா என்பதும் உண்மை. இதை எங்கே வேணும்னாலும் வந்து சொல்ல நான் தயாரா இருக்கேன்.''
''நித்தியானந்தா தப்பு பண்றார்னு உங்களுக்கு உணர்த்திய சம்பவம் எது?''
'' 2009-ம் வருஷம் நித்தியானந்தா ரூம்ல கேமராவை வெச்சு, அதில் பதிவான காட்சிகளைப் பார்த்த பிறகுதான் அவர் பண்ற தவறுகளை உணர ஆரம்பிச்சேன். அதுவரை எல்லோரையும் போல நானும், அவர் கடவுள் என்ற மனநிலையில்தான் இருந்தேன். இன்னும் அந்த ஆள்கூட இருக்கிறவங்களும், அவர் கடவுள்ங்கிற நம்பிக்கையில்தான் இருக்காங்க. நான் உணர்ந்த மாதிரி எல்லோரும் ஒரு நாள் உண்மை என்னன்னு உணர்வாங்க!'' என்று ஆவேசமாக பெங்களூரு புறப்பட்டார் ஆர்த்தி ராவ்.
இதுவரை நித்தியானந்தா விஷயத்தில் அமைதியாக இருந்த தமிழகப் போலீஸ், முதன்முறையாக இந்தப் புகாரை வழக்காகப் பதிவு செய்து செக் வைத்து விட்டது!

No comments:

Post a Comment