Wednesday, October 17, 2012

அத்வானியே சொல்லிட்டார்... அம்மாதான் பிரதமர்! ஈரோடு முழக்கம்


நாடாளுமன்றத் தேர்தலுக்கு சுறுசுறுப்பாகத் தயாராகி வருகிறது அ.தி.மு.க. 'நாற்பதும் நமதே... நாடாளுமன்றமும் நமதே!’ என்பதுதான் அவர்களின் வியூக மந்திரம். 
மாவட்டம்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்திவரும் அ.தி.மு.க-வினர் கடந்த வியாழக்கிழமை ஈரோட்டில் மையம் கொண்டனர். மாவட்டத்தின் முக்கியப் புள்ளிகளான வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாஜலமும் செங்கோட்டையனும் தவிர, அத்தனை பிர முகர்களும் ஆஜர். ஈரோ ட்டில் கே.வி.ராமலிங் கத்துக்குத்தான் முக்கியத்துவம் கிடைக்கும் என் பதால்தான், அவர்கள் இருவரும் வரவில்லை என் றும் பேச்சு.
முதலில் பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கமணி, ''அம்மா கண் அசைவின்படிதான் இந்திய அரசு அமையும். அம்மா நமக்காக இதுவரை உழைத்தார். இனி, அவரைப் பிரதமர் ஆக்குவதற்காக நாம் உழைக்க வேண்டும்'' என்றார்.
'கே.வி.ஆர். வாழ்க’ என்ற பலத்த வாழ்த்துக் கோஷங்களுடன் பேச வந்தார் பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம். ''கருணாநிதி மத்திய அரசில் இருந்துகொண்டு தமிழக அரசுக்குப் பல இடைஞ்சல்களைத் தருகிறார். அதனால், தி.மு.க-வை இந்தத் தேர்தலோடு முழுதாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும்'' என்று கருணாநிதியை ஒரு பிடிபிடித்துவிட்டு அமர்ந் தார்.
வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தி லிங்கம், ''69 சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்த பெருமை அம்மாவையே சேரும். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். கண்ட கன வை நிறைவேற்றுகிறார் அம்மா. இன்றோ, நாளையோகூட நாடாளுமன்றத் தேர்தல் வர லாம். அம்மா எப்படி பிரதமர் ஆவார் என்று நினைக்கலாம். அத்வானியே சொல்லி விட்டார். காங்கிரஸ், பி.ஜே.பி. அல்லாத ஒரு மாநிலக் கட்சித் தலைவர்தான் பிரதமர் ஆவார் என்று. இப்போது இருக்கும் மாநிலக் கட்சிகளில் மிகவும் தைரியமான தலைவர் அம்மா மட்டும்தான்... அதனால் அவர்தான் பிரதமர்'' என்றார்.
அடுத்துப் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி, ''54 வாக்குறுதிகள் அளித்து ஓட்டுக் கேட்டார் அம்மா. வெற்றி பெற்று அனைத் தையும் நிறைவேற்றி விட்டார். நம்மை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-காரர்களின் மனைவிகள் இப்போது ரேஷன் கடைக்குச் சென்று அம்மா போடும் அரிசியைத்தான் வாங்குகிறார்கள். இதுதான் சாதனை. இதுவரை நடந்த எம்.பி. தேர்தல் வேறு; இப்போது வரும் தேர்தல் வேறு. மன் மோகன் சிங்கால் காங்கிரஸின் மரியாதை போய்விட்டது. காங்கிரஸுடன் கூட்டணி சேர எந்தக்கட்சியும் தயாராக இல்லை. தி.மு.க-வும் எப்போது வெளியே வரலாம் என்று நினைக்கிறது. பி.ஜே.பி. மதவாத சக்தி. மாயாவதி, முலாயம் சிங் ஆகியோருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. இந்தியாவை வழிநடத்துவதற்குத் தகுதியுள்ள தலைவர் அம்மா மட்டும்தான். மாநிலக் கட்சியைச் சேர்ந்தவர்தான் பிரதமர் ஆவார் என்று அத்வானி கூறியது அம்மாவைப் பார்த்துத்தான். அதனால், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஈரோடு வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்'' என்று கூறியவுடன், அமைச்சர் ராமலிங்கம் சிக்னல் காண்பித்து ஏதோ சொல்ல, ''புதிய இளைஞர்கள் 60,000 பேரைச் சேர்த்து 2,60,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்'' என்றார்.
அடுத்துப் பேசிய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ''தற்காலிகமாக நிலவும் மின்வெட்டு எப்போது தீரும் என்று நீங்கள் கேட்காமலே உங்கள் ஏக்கம் புரிகிறது. மின்வெட்டுக்குக் காரணம் கடந்த தி.மு.க. ஆட்சிதான். ஈரோடு மண்... ராசியான மண். இங்கு நான் வந்தவுடன் தகவல் கிடைத்தது. மேட் டூரில் 600 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய புதிய அனல் மின் நிலையம் உற்பத்தியைத் தொடங்கி விட்டது. அதனால், ஜூன் மாதத்துக்குள் மின்வெட்டு முழுமையாகத் தீரும்'' என்றார் நம்பிக்கையுடன்.
இறுதியாகப் பேசிய நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ''மற்ற மாநிலங்கள் பின்பற்றக் கூடிய முன்னோடி ஆட் சியை அம்மா நடத்துகிறார். கடந்த தேர் தலில் கருணா நிதியை அம்மா அடித்து நொறுக்கினார். இப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை மாநாடு நடத்தும் கருணாநிதி இனப் படு கொலை நடந்தபோது என்ன செய்தார்? கருணாநிதி கறுப்புச்சட்டை போட்டாலும் சரி, சிவப்புச் சட்டை, பச்சைச் சட்டை என்று எதைப் போட்டாலும் சரி... சட்டை இல்லாமல் ஓடினாலும் சரி.. மக்கள் யாரும் அவரைக் கண்டுகொள்ள மாட்டார்கள். மத்திய அரசில் இருந்துகொண்டு கருணாநிதி தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்னைகளில் எதையாவது தீர்த்து வைத்தாரா? காவிரிப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடித் தண்ணீர் பெற்றுத் தந்தவர் அம்மாதான். எஸ்.எம்.கிருஷ்ணா, காவிரித் தண்ணீரை தமிழகத் துக்குத் தரக்கூடாது என்று கடிதம் எழுதுகிறார். அதை, மத்திய அரசில் அங்கம் வகிக் கும் கருணாநிதி வேடிக்கை பார்க் கிறார்'' என்றார்.
அம்மாவைப் பிரதமர் நாற்காலியில் அமர்த்தி அழகு பார்க்கும் அவசரத்திலோ என்னமோ, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தைப் பற்றி யாரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஒருவேளை, தேசிய நீரோட்டம் பற்றிப் பேசும்போது லோக்கல் தலைவரைப் பற்றி ஏன் பேசவேண்டும் என்று புறக்கணித்து விட்டார்களோ?

No comments:

Post a Comment