Wednesday, April 4, 2012

நடிகை எம்.சரோஜா மரணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகை எம்.சரோஜா மரணம்

4/3/2012

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டணால் கே.ஏ.தங்கவேலு, கடந்த 94ம் ஆண்டு காலமா னார். அவருடைய மனைவி நடிகை எம்.சரோஜா (79). பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக, சகோதரியாக நடித்து மறைந்த எம்.லட்சுமி பிரபாவின் தங்கை இவர். சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த எம்.சரோஜா, நேற்று மாலை 4.30 மணியளவில், சென்னை தியாகராய நகர் மாசிலாமணி தெருவிலுள்ள வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அவருக்கு சுமதி என்ற மகள் இருக்கிறார். தன் 14வது வயதில் நடிக்க வந்தவர், எம்.சரோ ஜா. இயக்குனர் கே.சுப்பிரமணியம் இவரை சினிமாவில் அறிமுகம் செய்தார். ‘சர்வாதிகாரி’ படத்தில் எம்.ஜி .ஆரின் முறைப்பெண்ணாக நடித்துள்ள எம்.சரோஜா, பிறகு ‘மருதநாட்டு வீரன்’, ‘பூலோக ரம்பை’, ‘அரசிளங்குமரி’, ‘வண்ணக்கிளி’ உட்பட தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக் கிறார். தமிழக அரசு இவரது கலையுலக சேவையைப் பாராட்டி, கலைமாமணி விருது கொடுத்துள்ளது. எம்.சரோஜாவின் உடலுக்கு தமிழ்த் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி னர். இவரது உடல் இன்று பிற்பகல் கண்ணம்மாபே ட்டை சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment