போர்க் குற்றவாளி இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததால், மட்டக்களப்பு நகரில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலையை சேதமாக்கியுள்ளனர் சிங்கள இனவாதிகள். கூடவே சாரணர் இயக்கம் கண்ட பேடன் பாவெல், விபுலானந்த அடிகள் ஆகியோரது சிலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
60 ஆண்டுகளாக மட்டக்களப்பில் இருந்தது காந்தியடிகளின் சிலை. இந்த அறுபது ஆண்டுகளில் கிட்டத்தட்ட பாதி வருடங்கள் புலிகளின் ஆளுமை. இந்தியா அவர்களுக்கு சாதகமாக இல்லாத நிலையிலும் மகாத்மாவை அவர்கள் மதிக்கத் தவறியதில்லை!
மகாத்மாவின் சிலை உடைப்புக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சிலை உடைக்கப்பட்ட அடுத்த நாள் இந்தியா இப்படி அறிவித்திருந்தது: “போர்க்குற்ற தீர்மான விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகளுடன் பேசி, அவற்றை தம் பக்கம் திருப்பும் முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளும்!”
No comments:
Post a Comment