உலகின் முதல் 1 டிரில்லியன் டாலர் நிறுவனமாக ஆப்பிள் உருவெடுக்க உள்ளது.
உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. நவீன காலத்திற்கு ஏற்றவாறு புதுப்புது தொழில்நுட்பங்களை புகுத்தி வரும் ஆப்பிள் நிறுவனத்திற்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் இறுதியில் அந்த நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 633.38 டாலர் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.
இது இன்னும் 12 மாத காலத்தில் மேலும் அதிகரிக்க கூடும் என்றும், அப்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்குகள் விலை நான்கு இலக்கு எண், அதாவது 1000 டாலருக்கு விற்கப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் 2014ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1 டிரில்லியன் டாலராக உயரும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் உலகில், 1 டிரில்லியன் டாலரை எட்டும் முதல் நிறுவனமாக ஆப்பிள் உருவெடுக்க இருக்கிறது.
No comments:
Post a Comment